Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வான் புலிகளின் அறிமுகமும், முதலாவது வான் தாக்குதலும்... 26.03.2007. # சுலோகம்: "காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்"' வான்புலிகள் (Tamileelam Air Force - TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு. வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், 'வானோடி' என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். 1985-86 காலப்பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்கள். நவம்பர் 27, 1998 - 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில் பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2000 - 'வான்புலிகள் ஆண்டு' என தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது. கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவு தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2001 ஆம் ஆண்டு அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார். ஜனவரி 26, 2005 - இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை. ஆகஸ்டு 11, 2006 - யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சூலை 24, 2001 - அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 24ம் திகதி 2001 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது. ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தின. ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசி தாக்கின. அக்டோபர் 22, 2007 - எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 26, 2008: திருகோணமலை துறைமுகத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி இரவு 9:05 மணியளவில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் இலங்கைக் கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டு 35 பேர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இத்தாக்குதலில் 10 கடற்படையினர் காயமடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்தது. செப்டம்பர் 9, 2008: வவுனியா சிறப்புப் படைத்தலைமையகத் தாக்குதல் அக்டோபர் 28, 2008: மன்னார் தள்ளாடி படைத்தளம் மீதும் கொழும்பு களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தினர். பெப்ரவரி 20, 2009:கொழும்பு வான் படையினரின் தலைமையகக் கட்டடம் அதற்கு அருகில் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத்தின் மீதும் வான்புலிகளின் கரும்புலிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டு, 47 பேர் காயமடைந்தனர்.
  2. தமிழர் தாயகத்தை விட்டு, இந்திய இராணுவம் வெளியேறிய நாள்: 24.03.1990.
  3. இன்று பிறந்த நாள் கொண்டாடும்... கொழும்பானுக்கு, மனமார்ந்த.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. இன்று பிறந்த நாள் கொண்டாடும்... முனிவர் ஜீக்கு, மனமார்ந்த.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.