Everything posted by தமிழ் சிறி
-
பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்
எதிர்த்து வாக்களித்த அந்த இருவரும் யார், எந்தக் கட்சி என அறிய ஆவலாக உள்ளது.
-
டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி
படத்தில் எல்லோரும் சந்தோசமாக சிரித்துக் கொண்டு நிற்கிறார்கள். அழுகிற மாதிரி நின்றால்தானே… IMF இன்னும் நிறைய காசு கொடுப்பார்கள். ஒருவரும்… இந்த “ரெக்னிக்கை” முன்பே சொல்லிக் கொடுக்கவில்லையா.
-
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி
ட்றம்ப் ஐயா… சுத்துமாத்து சுமந்திரனிடம் ரியூசன் எடுப்பது நாலது. 😂
-
'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன?
காங்கிரசுக்கு…. வாக்கு வங்கி இப்பவும் உள்ளதா. இளைய தலைமுறை… காங்கிரசை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஈழத்து மருமகன்…. தளபதி விஜைக்கு, ஏழரைச் சனி... காங்கிரஸ் ரூபத்தில், பிடிக்க போகுது. 🤣
-
'இஸ்லாமிய நேட்டோ': அரபு - முஸ்லிம் நாடுகள் ராணுவ கூட்டணி குறித்து மீண்டும் விவாதம் ஏன்?
இஸ்லாமிய நேட்டோ அமைந்தாலும்… ஆயுதம் வாங்க… வெள்ளைக்காரன், சீனன், ரஷ்யனைத்தான் நம்பி இருக்க வேண்டும். 🥷 🧌 அவங்கள்… முட்டாள் சோனிகளை வைத்தே, கல்லாப் பெட்டியை நிரப்பி விடுவார்கள். 😂 🤣
-
'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன?
கருணாநிதி குடும்பம்…. மனைவி, துணைவி, காதலி, சின்னவீடு… என்று மிகப் பிரமாண்டமானது. 😎 அதில் பங்கு கேட்டால்…. தீம்காவிற்கு கெட்ட கோள்வம் வரும். 😂 காங்கிரஸ்…. இருக்கிறதை வைத்து சுய இன்பம் காண வேண்டியதுதான். 🤣
-
இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வையிழப்பு ; கண்டுகொள்ளாத சிறை நிர்வாகம் - பாக். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
அரசியல் ஒரு சாக்கடை. அதுகும்… ஆசிய நாட்டு அரசியல், கள்வர்களின் கூடாரம். 😡
-
அதிகளவு மக்கள் செல்வாக்கு - மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா?
மாகாணசபைத் தேர்தலை நடத்தி… சுத்துமாத்து சுமந்திரன், மீண்டும் தலை குப்புற கவுண்டு, மண் கவ்வுவதை பார்க்க ஆசையாக உள்ளது. ❤️ அதற்காகத்தன்னும் அனுரா மாத்தையா… மா.ச. தேர்தலை நடத்த வேண்டும். 😂
-
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி
இந்தத் தேர்தலில்… ஏதோ ஒரு கட்சி, ஆயிரக்கணக்கில் கள்ள ஓட்டு குத்திக் கொண்டு இருப்பதை…. ஒரு காணொளியில் காட்டினார்கள். ஆசிய நாட்டு தேர்தல்களில்… கள்ள ஓட்டு போடுவது எல்லாம் சாதாரணமப்பா, என்று கடந்து போக வேண்டியதுதான். 😂
-
கருத்து படங்கள்
- தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
#################### ########################## அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது. தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொ*லைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தரணியின் வாகனம் இருக்கும் இடம் குறித்த தகவல்களை வழங்கியதும் இந்தச் சகோதரர்களே எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கொட்டாவையில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்களைக் கைது செய்தனர். நவகமுவவைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலை சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளான தரிந்து மதுசங்க என்ற “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருள் கடத்தலை இலங்கையில் முன்னெடுத்து வருபவர்கள் இவர்களே எனத் தெரியவந்துள்ளது. “சுத்தா ஐயாவின் வேலை ஒன்று உள்ளது, அதைச் செய்ய வேண்டும், 7 நாட்களுக்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுங்கள்” என வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகள் இவர்களிடம் கூறியுள்ளனர். அதன்படி சகோதரர்கள் கொட்டாவையில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். கொட்டிகாவத்தையில் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, சம்பவத்தன்று அக்குரேகொட சுப்பர் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காருக்கு மாற்றியுள்ளனர். இக்கொலைத் திட்டம் குறித்து ஒரு வாரமாக இவர்கள் அறிந்திருந்தனர். சட்டத்தரணி தனது மனைவியை அலுவலகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தினமும் மாலை 4.30 – 5.00 மணியளவில் செல்வதை கண்காணித்துள்ளனர். சம்பவத்தன்று சுப்பர் மார்க்கெட் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணியின் கார் நிறுத்தப்பட்டுள்ள தகவலைத் துப்பாக்கிதாரிகளுக்கு வழங்கியதும் இவர்களே. இக்கொ* லைக்கு உதவியமைக்காகச் சகோதரர்களுக்குப் பணம் வழங்கப்படவில்லை, மாறாக ஐஸ் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே பன்னிப்பிட்டிய ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான ஐஸ் மற்றும் வசதிகளைச் சகோதரர்கள் செய்து கொடுத்துள்ளனர். மற்றையவர் சம்பவத்தன்று வந்துள்ளார். வாடகைக்கு எடுத்த காரை 7 நாட்களின் பின் மீண்டும் ஒப்படைக்கச் சென்ற போதே பொலிஸார் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி (44) மற்றும் அவரது மனைவி டபிள்யூ.ஏ. நிசன்சலா (42) ஆகியோரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் பிடிகல, கொடமுன குடும்ப மயானத்தில் சட்டத்தரணிகள் மற்றும் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. https://athavannews.com/2026/1465213- அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா! ஈரானுடனான தொடர்புகளுக்காக அமெரிக்காவால் முன்னர் தடை செய்யப்பட்ட மூன்று எண்ணெய்க் கப்பல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்க அதன் கடல்சார் மண்டலத்தில் கண்காணிப்பை இந்தியா முடுக்கிவிட்டதாக ஒரு வட்டாரம் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது. எண்ணெய் சரக்குகளின் தோற்றத்தை மறைக்கும் வகையில், கப்பல் பரிமாற்றங்களுக்கு தனது நீர்நிலைகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதே இந்தியாவின் நோக்கமாகும் என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது. அனுமதிக்கப்பட்ட மூன்று கப்பல்களான ஸ்டெல்லர் ரூபி, அஸ்பால்ட் ஸ்டார் மற்றும் அல் ஜாஃப்சியா ஆகியவை கடலோர மாநிலங்களின் சட்ட அமுலாக்கத்தைத் தவிர்ப்பதற்காக அடிக்கடி தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொண்டன என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. அவற்றின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ஒரு எண்ணெய் கப்பல் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்த பின்னர், மும்பைக்கு மேற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் மூன்று கப்பல்களை வழிமறித்ததாக பெப்ரவரி 6 அன்று எக்ஸில் ஒரு பதிவில் இந்திய அதிகாரிகள் கூறியிருந்தனர். அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டது, ஆனால் கப்பல்கள் மேலதிக விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த வட்டாரம் உறுதிப்படுத்தியது. அமெரிக்க-இந்திய உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தொடர்ந்து இந்த பறிமுதல்களும் கண்காணிப்பும் அதிகரித்துள்ளன. புது டெல்லி ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்த ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் வொஷிங்டன் இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை 50% இலிருந்து 18% ஆகக் குறைப்பதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1465177- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
😂 🤣- இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி!
இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி! இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட உதவித்தொகையாகும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு திரும்பும் விமானக் கட்டணம், உதவித்தொகை, விடுதி தங்குமிடம் மற்றும் வருடாந்திர புத்தக மானியம் வழங்கப்படும். 19-45 வயதுக்குட்பட்ட (01.04.2026 நிலவரப்படி) மற்றும் தொடக்க/இடைநிலை மட்டத்தில் இந்தி படித்த அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் https://www.hcicolombo.gov.in/section/news/ இல் கிடைக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் (இந்திய கலாச்சார மையம்), 16/2, கிரிகோரிஸ் சாலை, கொழும்பு 07 இல் மார்ச் 9, 2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நேர்காணலுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://athavannews.com/2026/1465131- தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
அக்குரேகொட சட்டத்தரணி அவரது மனைவி கொ* லை: இரண்டு சகோதரர்கள் கைது! அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் 20 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இதன்போது, அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 13 ஆம் திகதி தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1465140- தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!
சுமந்தரனிடம் பல கேள்வி, 1. கட்சியின் தலைவர் தேர்வில் தோற்ற பின் புதிய தலைவரின் செயற்பாட்டுக்கு ஏன் வழக்கு போட்டு தடுத்தீர்கள் ? 2. நீங்க நல்லாட்சி காலத்தில் இறுதி யுத்த காலம் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பேற்று வழிநடாத்திய மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்தமை ஏன் ? 3. முப்படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமிக்க நீங்கள் சம்மந்தன் ஐயா காலத்தில் அந்த குழுவில் பங்கு பற்றி ஆதரவளித்தது ஏன் ? 4. எத்தனை தடவை அரசுக்கு ஆதரவாக வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்காமல் நழுவி வெளி நடப்பு செய்தீர்கள், முதுகெலும்பு இருந்தால் எதிர்த்து வாக்களித்திருக்கலாம் ஏன் ? 5. பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக ஏன் உங்களால் வாக்களிக்க முடியவில்லை ? 6. இலங்கை சுதந்திர தினத்தை தமிழர் தேசம் கரிநாளாக பிரகடனம் செய்து போராடிய போது அரசுக்கு ஆதரவாக உங்களின் மனைவியோடு ஆதரவாக ஏன் போனீர்கள் ? 7. இறுதி யுத்த வெற்றி விழா இராணுவம் கொண்டாடிய போது பொப்பி மலர் அணிந்து பாராளுமன்றம் சென்று அரசுக்கு இராணுவத்திற்கு ஆதரவளித்தது ஏன் ? 8. இன்று வரை இராணுவத்தின் ஆதரவோடு அவர்களின் பாதுகாப்பை பெற்று திரிவது ஏன் ? 9. கட்சியில் நீங்களும், சம்மந்தன் ஐயாவும் தான் சிங்க கொடியை ஏற்று நடப்பவர்கள் என்று சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது ஏன் ? 10. எமது விடுதலைப் போராட்டத்தையும் தலைமையையும் கடுமையாக பொதுவெளியில் விமர்சித்து அறிக்கை விட்டது ஏன் ? 11. எமது மக்கள் கொத்து கொத்தாக இனவழிப்பு செய்த போது இனப்படுகொலைக்கான சாட்சியம் போதாது, சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என காலத்தை இழுத்தடித்து போர்குற்ற விசாரணை நீத்து போக அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது எங்ஙனம் ? 12. கடந்த ஐனாதிபதித் தேர்தலில் தமிழினத்திற்கு எந்த விமோசனமும் தரமுடியாத சஜித் பிரேமதாசவிடம் கோடி பணம் பெற்று ஆதரவளித்தது ஏன் ? எத்தனை கோடி பணம் பெற்று யார் யாருக்கு பஙாகிடப்பட்டது என்ற விளக்கத்தை சொல்ல முடியுமா ? 13. JVP கட்சி யாழ்ப்பாணத்தில் நடாத்திய மேதின நிகழ் அனுர குமார திசநாயக்காவோடு சிவப்பு சேட் அணிந்து முன் வரிசையில் கலந்து கொண்டது ஏன் ? 14. இராணுவ மயமாக்கலுக்கு எதிராக மக்கள் போராட்டகளத்தில் பங்கெடுக்காமல் போராடிய மக்களை மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் நாடகம் என ஏளனம் செய்தது ஏன் ? 15. கடந்த காலங்களில் ரணிலோடு சேர்ந்து அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு அந்த அரசியல் அமைச்சராக இருந்த விஜயகலா அக்காவோடு விமானப்படையில் கூதூகலமாக பயணித்து இராணுவ அதிகாரிகளோடு உறவாடி ஆதரவளித்து சுகபோகம் அனுபவித்தது எப்படி மீள நினைப்பதில்லையா ? 16. இன்று உங்களுடைய காழ்ப்புணர்சிக்காக கெளரவ சிறீதரன் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டினை விட பன் மடங்கு நீங்களும் உங்கள் தரப்பும் 200% இந்த இனத்திற்கு எதிராகவே செய்தீர்கள் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும், இந்த விஷயங்களுக்காக ஒரு நீதி விசாரணையை ஏன் உங்களால் செய்ய முடியாதுள்ளது ? கூட்ட அறிக்கைகளை உங்களால் வெளிப்படுத்தலாமே ? படங்கள் காட்டி கதை சொல்வதை விட, அவருடன் போட்டி போடும் தரப்பை விடுத்து... நீதி விசாரணை குழுவை அல்லது கட்சியின் பொது சபையை கூட்டி இந்த பிணக்குகள் ஏன் தீர்க்கப்படாமல் நீடித்து செல்கின்றீர்கள் ? Vaishu Pusparaj- கருத்து படங்கள்
- “புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” கையெழுத்து போராட்டம்!
“புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” கையெழுத்து போராட்டம்! ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து ‘புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்’ என்ற தொனிப்பொருளில் இன்றையதினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்றையதினம் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த போராட்டம். இன்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார், ஏனைய மதகுருக்கள் குறித்த சட்டங்களை எதிர்த்து கையொப்பமிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் உடனிருந்தார். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறோம் புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற உறவுகளும் கையொப்பமிடும் வகையில் இணைய வழி மூலமான கையொப்பமிடும் வசதியும் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1465053- 89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து குறித்து “மனிதாபிமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற” தீர்வைக் கோரி முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து நேற்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், இந்த பிரச்சினை “ஆழ்ந்த மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் விவரித்தார். அத்துடன், சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாம்களுக்குள்ளும் வெளியேயும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வசிக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள், மேலும் பலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், 1983 ஆம் ஆண்டு முதல், அடுத்தடுத்த தமிழக அரசாங்கங்கள், மத்திய அரசின் ஒப்புதலுடன், இலங்கையில் இன மோதலில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு தங்குமிடம், கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளன. இருப்பினும், பலர் குடியுரிமை அல்லது நீண்டகால விசா அந்தஸ்தைப் பெற முடியாமல் தவிக்கின்றனர் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார். அத்துடன், மாநில ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைக் குறிப்பிட்டு, குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதைத் தடைசெய்யும் முந்தைய நிர்வாக வழிமுறைகளை இரத்து செய்யுமாறும், பொருத்தமான இடங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளைத் தள்ளுபடி செய்யுமாறும், விரைவான செயலாக்கத்திற்காக மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்குமாறும், 2025 ஜனவரி 9 ஆம் திகதி வரை தங்கியிருந்த பதிவுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழ் நாட்டினரை “சட்டவிரோத குடியேறிகளாக” கருதக்கூடாது என்பதை முறையாக தெளிவுபடுத்துமாறும் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தினார். இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக “கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும், ஆழமான கலாச்சார உறவுடனும்” வாழ்ந்ததாக ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனிதாபிமான அடிப்படையில் சாதகமான முடிவை எடுக்குமாறும் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டமூலம், 2025 மீதான விவாதங்களின் போது, அகதிகள் பிரச்சினையை திமுக ஒருபோதும் தன்னிடம் எடுத்துச் செல்லவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியபோது, இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. இந்தக் கூற்றை திமுக எம்பி கனிமொழி கருணாநிதி மறுத்தார், அவர் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதங்களின் விவரங்களை மேற்கோள் காட்டினார். இந் நிலையில் அரசியல் ரீதியாக, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரக் கருப்பொருள்களாக ஆளும் திமுக தமிழ் மொழி, அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தி வரும் நேரத்தில் தமிழக முதலமைச்சரின் இந்தக் கடிதம் வந்துள்ளது. இந்தக் கடிதம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை மற்றும் சட்ட தெளிவுக்காக அழுத்தம் கொடுப்பதன் மூலம், திமுக தமிழ் ஆதரவு வாக்காளர்களையும் இலங்கை அகதிகளின் அனுதாபிகளையும் ஒருங்கிணைக்க முயல்கிறது. நீண்ட காலம் தங்கியிருந்த போதிலும், இதுவரை 11 இலங்கை அகதிகளுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மட்டுமே வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார், மீதமுள்ள பத்து பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர், இது அவர்களின் நிலையை முறைப்படுத்துவதில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2026/1465008- ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப்.
பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ; ஒபாமா பதிலடி. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை இனவெறியைத் தூண்டும் வகையில் சித்தரித்த காணொளிவை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிரப்பட்ட அந்த காணொயில், 2020 தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. அதன் இறுதியில், ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவின் முகங்களை குரங்குகளின் உடலுடன் இணைத்து மிகவும் இழிவாகச் சித்தரிக்கும் ஒரு பகுதி இடம்பெற்றிருந்தது. பின்னணியில் ‘The Lion Sleeps Tonight” என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த காணொளிக்கு ஜனநாயகக் கட்சியினர் மட்டுமன்றி, ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.குடியரசுக் கட்சியின் ஒரே கறுப்பின செனட்டரான டிம் ஸ்காட் ‘இந்த வெள்ளை மாளிகையில் இருந்து நான் பார்த்த மிக மோசமான இனவெறிச் செயல் இது’ என சாடினார். முதலில் இதனை சாதாரண ‘மீம்’ ஒன்று என நியாயப்படுத்திய வெள்ளை மாளிகை, பின்னர் எழுந்த எதிர்ப்பால் அந்தப் பதிவை நீக்கியது. இது ஒரு ஊழியரால் தவறுதலாகப் பகிரப்பட்டது என்று விளக்கம் அளித்தது. பிரையன் டெய்லர் கோஹன் என்பவரின் பொட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பராக் ஒபாமா, ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்:’பொது வாழ்வில் இருக்க வேண்டிய வெட்கம் மற்றும் கண்ணியம் தற்போது தொலைந்து போய்விட்டது. சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒருவிதமான ‘கோமாளிக்கூத்து’ நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்க மக்கள் இன்னும் நேர்மை மற்றும் இரக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.’இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் அந்த வீடியோவின் ஆரம்பப் பகுதியை மட்டுமே பார்த்தேன். இறுதியில் இருந்த அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை, ‘ என ட்ரம்ப் பதிலளித்தார்.இந்த விவாதங்களுக்கு மத்தியில், சிக்காகோவில் அமைக்கப்பட்டு வரும் தனது ஜனாதிபதி நூலகம் தொடர்பில் ஒபாமா உற்சாகமாக உரையாற்றினார். இது வரும் ஜூன் 2026-இல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1465046- தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!
தமிழரசின் அசிங்கமான அரசியல் குழு. இதில் இருப்பதில் இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு யார் யார் என்பதை பார்ப்போம்? 1. சுமந்திரன் -கட்சியில் யுத்தம் முடிவடைந்த பிறகு UNP கட்சியில் இருந்து தேசியபட்டியல் ஊடாக ரணில் உள்ள அனுப்பப்பட்டவர் 2. துரைராசசிங்கம் -1994 ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட MP யாக தெரிவு செய்யப்பட்டு கொழும்பில் இலவசமாக வீடு பெற்று கொண்டவர் .அக்காலத்தில் இயக்கம் ஒரு தேவைக்காக வீட்டை பயண்படுத்த கேட்ட நேரம் தரமுடியாது என்று சொன்னதால் இவரை அன்று அழைத்து அடைத்து வைத்தார்கள். பின்னர் அவருடைய மச்சான் பாதர் இயங்கத்தின் பழைய போராளி என்பதால் அவர் கேட்டு கொண்டதற்கு இணங்க இனிமேல் எந்த தேர்தலும் கேட்க கூடாது என்று விடுவிக்கப்பட்டார். பின்னர் எந்த தேர்தலும் கேட்காத அவரை 2010 ஆண்டு மட்டக்களப்பில் பயங்கரமான சூழ்நிலையில் தேர்தல் கேட்க ஆட்கள் இல்லாத போது துறைராசசிங்கம் ஓம் என்று அரியம் செல்வராஜா ஐயா போன்றவர்கள் கேட்க ஏற்று கொண்டு இறுதி நேரத்தில் உயிருக்கு பயந்து கதவை பூட்டிவிட்டு மனைவியின் சொந்த ஊராண யாழ்ப்பாணம் ஓடி ஓழித்து விட்டார். அதன் பிற்படு தங்கள் உயிரையும் மதிக்காது தமிழரசுக்கட்சிக்காக அரியம், செல்வராஜா.யோகேஸபரன் போன்றவர்கள் தேர்தல் கேட்டு கட்சியை பலப்படுத்த 2012கிழக்கு சுமுகமாக மாகாணசபை தேர்தல் கேட்டு அதில் விவசாய அமைச்சர் ஆனார் அதனுடாக மண்டூரில் தொழில் சாலை அமைத்த நேரம் மண்டூரில் கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு வேலை கொடுக்காது அதனது உறவுகாரர்களுக்கு வந்தாறுமூலையில் கொடுத்தார். பிற்பாடு சுமந்திரனுடன் இணைந்து கட்சி யாப்பையும் மீறி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்பதவியை கட்சியின் செயலாளர் தான் என்பதால் தன்னிச்சையாக சுமந்திரனுடன் இணைந்து கலையரசனுக்கு கொடுத்தார். அதனால் ஏற்பட்ட பிரச்சணையால் தனது செயலாளர் பதவியை துறந்தார் இப்போதும் அரசியல் குழு என்று சொல்லி சுமந்திரனுடன் இணைந்து கட்சியை சீரழிப்பதில் இவர் சிறந்தவர் (நீங்கள் மனதில் கேட்பது புரிகின்றது கொழும்பு வீட்டை சுமந்திரனின் உதவியுடன் 33 கோடிக்கு விற்றவர் 3. கலையரசன் -பலதேர்தல்களில் தோற்றாலும் சுமந்திரன் விசுவாசி அதனால் அவருக்கு மத்திய குழு முடிவின்றி தான்தோன்றி தனமாக கலையரசனுக்கு துறையராச்சிங்கம் கையொப்பத்துடன் MP பதவி கொடுத்தார். 4. சாணக்கியன் -2012 மட்டக்களப்பு களுவாஞ்சி குடியில் இராசமாணிக்கத்தாரின் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டில் இருந்து வந்த இவன் .குருக்கல் மடம் வடிவேல் அண்ணன் களுவாஞ்சிகுடியில் நடத்திவந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை தனதாக்குவதற்காக மகிந்த கம்பனியில் பட்டிருப்பு அமைப்பாளர் ஆனார். அதை எதிர்த்து வடிவேல் அண்ணன் நீதிமன்றம் செல்ல இறுதியில் 30வருடம் நடத்திய வடிவேல் அண்ணனுக்கும் இல்லை இவனுக்கும் இல்லை என்ற நிலையை ஏற்படுதினான் பாவம் அந்த மனிசன் .அதன்பிற்பாடு மகிந்த கம்பனியூடாக 15ஏக்கரில் கொட்டல்,110ஏக்கரில் தென்னம் தோப்பு,களுவாஞ்சிகுடியில் மிகபெரிய ஆடம்பர காரியாலயம், களுவாஞ்சிகுடி பிரதேச்செயலகத்திற்கு முன் மக பெரிய மண்டபம் கட்டுவதற்கு உழைத்து கொண்டார். 2015 மகிந்த கட்சியில் இணைந்து தேர்தல்கேட்டார் அந்த நேரம் தமிழரசுக்கு தேர்தல் காரியாலயம் அமைக்க களுவாஞ்சி குடியில் கடை கொடுத்தமைக்காக அந்த கடையை ஆட்கள் வைத்து உடைத்து எறியூட்டினார். அந்த தேர்தலில் வெறும் 850வாக்குகள் மட்டுமே 2019 தமிழரசு கட்சில் கொஞ்ச பணத்தை சுமோ போன்றவர்களுக்கு கொடுத்து தமிழரசில் இணைந்தார் இப்போ பதவி மோகத்தில் கட்சியை சீரழிக்கின்றார் 5. குகதாசன் -அவருக்கு என்ன நடக்கின்றது என்றே தெரியாது பாவம் அந்த மனிசன் 6. குலநாயகம் 40வருடமாக கட்சியில் என்ன நடக்கின்றது என்று தெரியாத மத்திய குழு நிருவாக செயலாளர் கஞ்சா செழியனின் (கட்சியை நீதிமன்றில் நிறுத்தியவர் மாமா)சுமந்திரன் சொன்னா தலையாட்டித்து வருவேர் 7. CVK சிவஞானம் ஆரம்ப காலத்தில் சுமத்திரனுக்கு எதிராக இந்த பிசாசை சம்மந்தரும் சேனாதியும் தான் கொண்டு வந்தவர்கள் என்று கூறியவர் பின்னர் தனக்கு பதில் தலைமை என்றவுடன் வாயடைத்தவர் மன்னிக்க வேண்டும் இவர் அந்த காலத்தில் டக்கிலஸ் ஊடாக தன்னுடைய மகளுக்கு வங்கியில் வேலை எடுத்து கொடுத்தவர். இப்போது வரைக்கும் மாகாண சபை அவைத்தலைவராக இருந்தமையால் மாதம் அவருக்கு இரண்டு லட்டத்திற்கு அதிகமாகவும் 6உத்தியோகத்தர்கலாக தன்னுடைய உறவுகளை போட்டு அவர்களுக்கான சம்பளத்தையும் எடுப்பவர்(ஆனால் கட்சிக்கு சாப்பிட்ட கையால காகம் திறத்த மாட்டார் )தற்போது சுமந்திரனின் தலையாட்டி மொம்மை 8. சத்தியலிங்கம் -பெயர்தான் லிங்கம் ஆனால் இது பெரிய அசிங்கம் துரையர் பதவி பறிபோனதும் பதில் நியமனத்தில் வந்து சுமோ சொல்வதை எல்லாம் செய்பவர் வ்வுனியாவில் 4000 வாக்குகலை பெற்ற சத்தியலிங்கத்துக்கு சுமோ டீல் வைத்தார் உனக்கு தேசியபட்டியல் எனக்கு பதில் செயலாளர் என்று அதற்கமைய அடிக்கடி கூட்டத்தை கூட்டுவார் சுகம் இல்லை என்று ஒழித்திடுவார் சுகம் இல்லாதவருக்கு அவரே கையொப்பம் வைத்து தேசியபட்டியல் MP ஆகினார் பின்னர் இரண்டையும் பார்க்க தனக்கு சுகம் இல்லை என்று அடுத்த பதிலை சுமோக்கு கொடுத்தார் . இப்ப எந்த கூட்டத்தையும் தவறவிடமாட்டார் இந்த அரசியல் குழு எப்படி நியாயமான ஜனநாயகமாக முடிவு எடுக்கும் சுமந்திரன் சொல்வதை அப்படியோ நடைமுறை படுத்துவார். இது கட்சி அரசியல் குழு இல்லை. "சுமோ கம்பனி" மக்களே புரிந்து கொள்ளுங்கள். யாழ்ப்பாண புலனாய்வு- தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள் தமிழ் மக்களை எப்படித் திரட்டும்? - நிலாந்தன். -
தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள் தமிழ் மக்களை எப்படித் திரட்டும்? - நிலாந்தன். - “ஐயா சிறீதரன் அவர்களைப் பற்றி நாலு வசனம் நல்லதாக எழுதினால் கட்சித் தீர்மானத்தை மீறியதாக எடுத்து கொள்வீர்களா?உங்களால் ஏன் மக்களின் மனதை வெல்ல முடியவில்லை என்பதை அமைதியாக இருக்க கூடிய நேரங்களில் யோசித்து பார்த்ததுண்டா? உண்மையில் நீங்களும் சிறீதரனும் தலைமை பதவிக்கு சண்டை பிடிக்கவில்லை என்றால் இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்? ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் இருப்பிற்காகவும் பாடுபட வேண்டிய கட்சி ஒன்று தலைமைப் பதவிக்காக நீதிமன்றத்தில் நின்றால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? உங்களின் நாய்ச் சண்டைகளால் தெரு நாய்கள் எல்லாம் வவுனியாவில் வந்து ஊளையிட்டுச் செல்கின்றன. அதைப்பற்றிக் கவனிக்க உங்களுக்கு நேரமில்லை? உங்களின் ஆசிர்வாதம் இல்லாமல் கட்சிக்கெதிரான வழக்கு தக்கல் செய்யப்படவில்லை. நீங்கள் இருவரும் நினைத்தால் அந்த வழக்கை முடிவுறுத்தவும் முடியும். தலைவர் தெரிவு வரும்போது, நான் நீங்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றே நினைத்தேன்.கட்சி உறுப்பினர்கள் சிலருடனும் உங்களுக்குச் சார்பாகவே கதைத்தேன். நீங்கள் பொறுமையாக இருந்திருந்தால் இன்று அடுத்த தலைவர் தெரிவு நடந்திருக்கும்.சில வேளை நீங்கள் முன்கதவால் தலைவராக வந்திருக்க கூடும். நாமும் மகிழ்ந்திருப்போம். ஒர் ஆளுமையான தலைவர் என்று. தலைவர் தெரிவிற்குப் பின்னரான உங்களின் செயற்பாடு மிக அற்பத்தனமானது. உங்கள் மீதான அத்தனை கற்பிதங்களையும் போலியாக்கியுள்ளது.யோசித்துப் பாருங்கள் கட்சியின் தொண்டர்களால் தெரிவு செய்யப்படாத தலைவரும் செயலாளரும் தொண்டர்களின் மன எண்ணத்தை எவ்வாறு பிரதிபலிப்பீர்கள் ? நீங்கள் இருவரும் மக்களைப் பற்றி இன்று நினைக்கவில்லை.உங்கள் தலைமைப் பதவியையும் அதிகாரத்தைப் பற்றியுமே கனவு கான்கின்றீர்கள். சிறீதரன் அவர்களை நீங்கள் எப்படியாவது நீக்குவீர்கள். அவ்வாறு நடந்ததால் அது கட்சிக்குப் பாதிப்பு. ஆனால் அது உங்ளுக்கு இரட்டிப்பு சந்தர்ப்பத்தை தரும். இலகுவாக அடுத்த தடவையாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படலாம் என்ற கணக்கு சரியாக அமையும். இறுதியாகக் கூறுகின்றேன்,தொண்டர்களுக்குத் தலைவரா? தலைவர்களுக்குத் தொண்டரா? என்றால் அதற்கான விடையை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.” இது முகநூலில் காணப்படும் ஒரு பதிவு.இதை எழுதியவர் வன்னிப் பெருநிலத்தில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில் ஆசிரியராக இருப்பவர். தமிழரசுக் கட்சியை எங்கேயும் விட்டுக் கொடாதவர். எனது கட்டுரைகளில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் இருந்தால் அதுதொடர்பாக முகநூலில் பதில் வினையாற்றுவார். ஆனால் அவர்தான் சில நாட்களுக்கு முன் மேற்கண்டவாறு முகநூலில் எழுதியுள்ளார்.அவர் ஏன் அப்படி எழுத வேண்டி வந்தது? கட்சியின் பதில் செயலாளராக உள்ள சுமந்திரன் அண்மையில் விடுத்த ஒரு அறிவிப்புத்தான் காரணம்.கட்சி உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக கதைத்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார். இதை அவர் தெரிந்து செய்கிறாரா? அல்லது தெரியாமல் செய்கின்றாரா? ஏனென்றால் இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவுகள் எங்கே கொண்டு போய்விடும்? இக்கட்டுரையில் கூறப்பட்ட அந்த ஆசிரியர் மிகத் துடிப்பான ஓர் அரசியல் செயற்பாட்டாளர். அவரே மனம் வெறுத்து அவ்வாறு முகநூலில் எழுதும் ஒரு நிலைமை வந்திருப்பது என்பது அவரைப் போன்ற பலர் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட முடிவை எடுக்கக்கூடும் என்பதனை ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.அதாவது கட்சி மேலும் சிதையும் நிலைமைதான் தெரிகிறது. நேற்று கிளிநொச்சியில் நடந்த கூட்டமும் அதைத்தான் காட்டுகிறது. தங்களுக்குள் தாங்களே மோதி கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதனை உணர முடியாத தலைவர்களா இவர்கள்? தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உள் முரண்பாடு பற்றி திரும்பத் திரும்ப எழுதுவது சலிப்பூட்டுவது. ஆனால் அப்படி எழுதுவது தவிர்க்க முடியாததும் கூட. ஏனென்றால் உள்ளதில் பெரிய கட்சி. அந்தக் கட்சியும் சிதைந்தால் அதற்கு மாற்றாக மேல் எழுவதற்கு முன்னணியால் முடியுமா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த 16 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் பெரு வெற்றி பெற முடியவில்லை.அவர்கள்தான் ஒப்பீட்டளவில் தெளிவாக கொள்கைகளை முன் வைக்கிறார்கள். ஆனால் அவர்களால் கடந்த 16 ஆண்டுகளாக தமது கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியவில்லை. கடந்த நாடாளுமன்றத்தில் கிடைத்த தோல்வியும் கட்சியின் தலைவர் கஜேந்திரக்குமாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும் அவர்களை புதிய பாதையில் சிந்திக்க வைத்திருக்கிறது என்று தெரிகிறது. அவர்கள் ஒரு மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பதாகவும் தெரிகிறது. ஆனால் மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பது என்பது என்ன? நடந்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுவது மட்டுமல்ல,அதைவிட ஆழமான பொருளில் கட்சியை கட்டமைப்புரீதியாக மீளக் கட்டியெழுப்புவது. அண்மையில் ஒரு கிறிஸ்தவ மதகுரு இந்தியாவில் இருந்து வந்திருந்தார். இந்தியாவில் மேற்படிப்புக்காகச் சென்றவர்.அவர் அங்கே தமிழகக் கிராமங்களில் கட்சிகளுக்கு உள்ள வட்டச் செயலர் என்ற பதவி நிலையைக் குறித்து உரையாடினார். வட்டச் செயலர் என்ற பதவி தமிழக மக்களைப் பொருத்தவரை தமிழ்ச் சினிமாவில் வடிவேலுவின் நகைச்சுவையோடு சேர்ந்து பிரபல்யமான ஒரு பதவி நிலை. ஆனால் அது ஒரு நகைச்சுவைப் பாத்திரம் அல்ல. கிராம மட்டத்தில்,அடிமட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தும் ஒரு பதவி நிலை. அது ஒரு பொறுப்பு. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுக்கு அவ்வாறு ஆழமான அடிபட்டக் கட்டமைப்புகள் உண்டு.வட்டச் செயலர்கள் கிராம மட்டத்தில் கட்சியைக் கட்டியெழுப்புகிறார்கள். கீழ் மட்டத்தில் மக்களோடு உயிர்த்தொடர்பைப் பேணுகிறார்கள்,வளர்க்கிறார்கள்.தமது நிர்வாகப் பகுதிக்குள் வாழும் மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்கிறார்கள். அவர்கள் அடிமட்ட மக்களை அரசியல்மயப்படுத்துகிறார்களோ இல்லையோ அவர்களை கட்சி மயப்படுத்துகிறார்கள். நமது தமிழ்த் தேசியக் கட்சிகளில் எத்தனை அப்படிப்பட்ட கிராம மட்டக் கட்டமைப்புகளை, பதவி நிலைகளைக் கொண்டிருக்கின்றன? இதற்கு தமிழ்நாட்டு உதாரணம் கூடத் தேவையில்லை. 83 ஜூலைக்கு பின் தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருந்தன? எப்படிப்பட்ட கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தங்களைப் பலப்படுத்திக் கொண்டன? என்பவற்றில் இருந்தாவது குறைந்தபட்சம் கற்றுக் கொண்டிருக்கலாம். தமிழ் இயக்கங்களுக்கு கிராம மட்டத்தில் கிராமப் பொறுப்பாளர்கள் இருந்தார்கள்.அவர்களுக்குப் பொறுப்பாக ஏரியாக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக அரசியல்துறைப் பொறுப்பாளர் இருந்தார். அரசியல் துறைக்கு மட்டுமல்ல படைத்துறை, நிதித்துறை, புலனாய்வுத்துறை முதலான எல்லாக் கட்டமைப்புகளுக்கும் அவ்வாறு கீழே இருந்து மேல் நோக்கிய சீரான கட்டமைப்புகள் இருந்தன.இந்தக் கட்டமைப்புகள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும்.மேலிருந்து கீழ் நோக்கி வழிநடத்தப்படும்.இயக்கங்களின் கட்டமைப்புகள் பெருமளவுக்குப் படைப் பரிமாணத்தை கொண்டுவை என்பதனால் அங்கே உத்தரவுக்குக் கீழ்ப்படியும் ஒரம்சம் இருக்கும்.அதை முழுமையாக ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் நடைமுறைப்படுத்த முடியாது. இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஒரு பொருத்தமான நடைமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.ஆனால் கிராம மட்டக் கட்டமைப்புகளை பலப்படுத்தாமல் கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியாது மட்டுமல்ல தேர்தல் அரங்குகளில் வெற்றிகளை உறுதிப்படுத்தவும் முடியாது. ஜனநாயக அரசியலில் வெற்றி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைதான் எது பெரும்பான்மை என்பதைத் தீர்மானிக்கும். பெரும்பான்மையின் கருத்துத்தான் அந்த மக்கள் கூட்டத்தின் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும். எனவே கட்சி மைய அரசியலுக்கூடாகச் சிந்திக்கும் பொழுது தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம்.அதேசமயம் தேர்தல் மைய அரசியலுக்கு வெளியேயும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு. https://athavannews.com/2026/1464919- கருத்து படங்கள்
- நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை!
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை! நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இதேவேளை நீர்கொழும்பு பொலிஸார் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையை அறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்ற நபர் , சில நாட்கள் காரினை செலுத்திய பின்னர் , அதன் தடம் அறி (GPS) கருவியை செயலிழக்க வைத்துள்ளார். அதனை அடுத்து , வாகனம் வாடகைக்கு கொடுத்தவர் நீர்கொழும்பு பொலிசாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் பிரகாரம் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். அதே நேரம் , காரினை வாடகைக்கு பெற்றவர், யாழ்ப்பாணத்தில் ஒரு நபரிடம் காரினை அடமானமாக வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று சென்றுள்ளார். இந்நிலையில், அடமானம் வைத்த கார் , நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் எனவும் , கார் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதனையும் அறிந்த , காரினை அடமானமாக வைத்து பணம் கொடுத்த நபர் , பொலிஸ் விசாரணைகளுக்கு பயந்து காரினை வீதியில் அநாதரவாக விட்டு தப்பி சென்றுள்ளார். இதேவேளை, காரினை அடமானம் வைத்து பணத்தினை பெற்று சென்ற நபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1464869- உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது.
உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது. பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்த சுமார் 75 கிலோ கிராம் இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்த இக்கோழிகளை விலங்கு உணவிற்காகக் கொண்டு செல்வதாகக் கூறி, அவற்றை மனித நுகர்விற்காக (உணவுக்காக) விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2026/1464896 - தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.