ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை இந்த சங்கை எடுத்திருக்காது விட்டால் வேறொருவர் எடுத்து இருப்பார்கள். தவறானவர்களின் கைகளுக்கு செல்லாமல் எம்மவர்களே எடுத்தது என்று மகிழ்ச்சியடைய வேண்டும்.
சங்கினை திருடி விட்டார்கள் என்று கூக்குரலிடுபவர்கள் அதனை பதிவு செய்து இருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. பொதுக்கட்டமைப்பின் ஊடாக அடுத்த நாடாளுமன்ற தேர்தலையும் சங்கு சின்னத்தின் ஊடாக சந்திக்க வேண்டும் என்றுதான் அனைத்து தமிழர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இதனை நிலாந்தன், கே.ரி.கணேசலிங்கம், செல்வின் போன்றோர்தான் சிதறடித்தனர். சேகரிக்கப்பட்ட நிதிக்கும் கணக்கு - வழக்கு இல்லை.
இன்று செல்வினுக்கு ஜே.வி.பி.யின் அரசங்கத்தால் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: ஈழநாடு நாளேடு)
ஆக, சங்கினை திருடியவர்களோ எடுத்தவர்களோ அவர்களின் செய்கையினை நாம் பாராட்ட வேண்டும். ஏனெனில் இந்த சின்னம் முன்னர் கம்மன்பிலவினதோ அல்லது சம்பிக்கவினதோ (கட்சியோ, சுயேட்சையோ சரியாக தெரியாது.) கட்சிக்கு வழங்கப்பட்ட சின்னம். அப்படியெனில் பொதுக்கட்டமைப்பும் இன்னொரு சின்னத்தை திருடித்தான் பாவித்தது என்று கூறலாம் அல்லவா?