இன்று தான் இங்கு இணைந்தேன். வணக்கத்தின் பின் எழுதும் முதல் பதிவு இது. பல நன்றிகள்.
பூச்சியமான நேரம்
------------------------------
ஒரே நேரத்திற்கு எழும்பி
காலையில்
ஒரே கடமைகளை முடித்து
ஒரே வழியில்
ஒரே வேலைக்கு போய்
ஒரே வேலையைச் செய்து
ஒரே மனிதர்களுடன் கதைத்து
ஒரே வழியில் திரும்பி வந்து
ஒரே ஓட்டமாக பிள்ளைகளுடன் போய்
இல்லாவிட்டால்
வேறு ஏதோ ஒன்றே ஒன்றைச் செய்து
மீண்டும் ஒரே நேரத்திற்கு சாப்பிட்டு
ஒரே நேரத்திற்கு தூங்கி
கண் முழித்தால்
இன்றும்
நேற்றைய நேரத்தையே
மணிக்கூடு காட்டி நிற்கின்றது.