Jump to content

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1601
  • Joined

  • Last visited

  • Days Won

    24

Everything posted by ரசோதரன்

  1. இன்னும் ஒரு 12 மணி நேரத்தில் எல்லாவற்றையும் எண்ணி முடித்து அறிவித்தும் விடுவார்கள். உண்மையில் 12 மணி நேரம் தேவையில்லை, ஏனென்றால் கலிஃபோர்னியாவை எண்ணினால் என்ன, எண்ணாவிட்டால் என்ன........... யார் வென்று வந்தாலும், நாளைக்கு அதே பொழுது தான் எங்கும் விடியப் போகின்றது என்பது தான் நிஜம்......... பங்குச் சந்தை கீழே போய் மேலே வரும். பங்காளிச் சண்டைகள் இவர்கள் இருவரால் ஓயாது. அவைகளாக நின்றால் தான் உண்டு............ 🤣.......... அவருக்கு அவ்வளவு வயசில்ல.................
  2. 🤣............... குடும்பஸ்தர் ஆனாலே இப்படியான ஒரு சிக்கல் இருக்கின்றது போல........... முந்தி என்னத்தை மிக நல்லாகச் செய்தோமோ, அதை இப்ப செய்ய முடியாது & செய்யக் கூடாது. முந்தி நல்லாகச் செய்த அந்த விசயத்தை ரசித்து, பிடித்து தான் மனையாள் மனைக்கு வந்திருப்பார்........... ஆனால் பின்னரும் அதையே செய்து கொண்டு இருக்கக்கூடாது...................🙄. (இதே அர்த்தத்தில் அராத்து வேறொரு இடத்தில் இப்படி எழுதியிருந்தார் ...............)
  3. தேடிப் பார்த்ததில், அப்பா ஒரு நாயர் என்றும், அம்மா ஒரு பிராமணர் என்றும் இருக்கின்றது, கோஷான். அப்புறம் நாயருக்கும், நாடாருக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குதா என்று தேடியதில்........ அப்படி ஒன்றும் இல்லை என்பதுடன், நாயர்கள் நாடார்களை விட அடுக்கில் சில படிகள் மேலே என்ற அற்புதமான தகவல்களும் அங்கங்கே கொட்டிக் கிடக்கின்றது. பூமி முழுவதும் அடிவரை எரிந்து, மீண்டும் உயிர்கள் தோன்றினாலும், இந்திய நிலத்தில் இது எங்கேயாவது அழியாமல் ஒட்டியே இருக்கும் போல..............
  4. அப்படி எல்லாம் அவர் நினைத்தபடி அவர் ஓய்வை அறிவிக்க நாங்கள் விடமாட்டோம்............. இவர் ஓய்விற்கு போய் விட்டால், மற்ற அணிகள் சிரமப்படுமே............🤣. ரோகித்தை தீக்குளிக்க வைத்தாவது கோலியை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும்............. கோலியை தீக்குளிக்க வைத்து ரோகித்தை விளையாட வைத்தாலும் பரவாயில்லை தான்.........😜.
  5. எல்லா கட்சிகளின் ஐடி விங்குகளும் இப்பொழுது சாக்கடைக்குள் மூக்கை மூடி இறங்கி துழாவித் தேடிக் கொண்டிருப்பார்கள். விஜய் களத்தில் புதுசு தானே............... இவருடையது நிறையவே சாக்கடைக்குள் கிடைக்கும்......... ஆந்திராவில் சிரஞ்சீவி 'அய்யோ...........சாமீ..............' என்று அரசியலை விட்டுவிட்டு ஓடியது இதனால் தான்............ தமிழ்நாட்டில் எம்ஜிஆர், விஜய் உட்பட இதுவரை 13 நடிகர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்திருப்பதாக ஒரு தகவலில் இருந்தது. ஆனால் எவரும் இந்த சாக்கடை சலசலப்புகளுக்கு பயந்து ஓடவில்லை, தேர்தலில் தோற்றுத்தான் ஒதுங்கினார்கள்...........
  6. 🤣.............. நல்லாவே கண்டுகொள்கின்றார்கள், வசீ................... அரை நிர்வாணமாக போகாவிட்டால்........ 'ஏய்........... இங்க சேட்டு போடக் கூடாது, தெரியாதா............' என்று ஒரு கும்பலே மொய்க்கும்.
  7. பையன் சார், இங்கு சில மாநிலங்களில் மிகச் சிறிய பிரிவு மக்களிடையே தனிநாட்டு கோரிக்கை இருக்கின்றது. கலிஃபோர்னியாவில் இருக்கின்றது, டெக்சாஸில் இருக்கின்றது.............. தங்களை மேட்டுக்குடிகள் என்று நினைப்போர் எல்லா நாடுகளிலும் இருக்கின்றனர் தானே. இலங்கையில் கூட, தமிழர்கள் மத்தியில் கூட, பிரதேசம் - ஊர் - பரம்பரை இப்படி ஏதாவது ஒரு வகையில் தங்களை சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று எண்ணுவோர் இருக்கின்றார்கள். அது போலவே இங்கும். அவர்கள் பிரிந்து போக விரும்புகின்றனர். வேறு சிலருக்கு குடியேறிகள் என்றாலே ஒரு விதத்தில் தீண்டத்தகாதவர்கள் போல, அவர்களும் தனியே போக விரும்புகின்றனர். இப்படி பிரிந்து போக வேண்டும் என்று விரும்புவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனாலும் இவை மொத்தமும் சேர்ந்தாலும், ஒரு நகத்தில் விழுந்த ஒரு சிறு கீறல் அளவில் கூட வருமா என்று தெரியவில்லை. இங்கு மாநிலங்களுக்கு உச்சபட்சமான அதிகாரங்களும், சுதந்திரமும் இருக்கின்றன. அவை எந்த முயற்சிகளும் இன்றி தாராளமாகக் கிடைப்பதால், அவற்றை எவருமே பெரிதாக எடுப்பதில்லை, உணர்வதில்லை. உப்பு இல்லாவிட்டால் தான் உப்பின் அருமை தெரியும் என்று சொல்வார்களே.........
  8. ( அதிமுக + தவெக + பாமக ) எதிர் ( திமுக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் + விசிக) இது நல்ல விறுவிறுப்பான போட்டியாக இருக்கும்.
  9. வரலாற்றில் இருந்த எல்லா வல்லாதிக்கங்களும் போலவே இந்த நாடும், அண்ணை............... காலமாற்றத்தில் இன்றைய உலகில் சில விடயங்களை வெளிப்படையாக செய்ய முடியாது என்பதே உண்மை...............
  10. 'பழையன கழிதலும் புதியன புகுதலும் ...............' என்று பெரியவர் இன்று விஜய்க்கு நூல் விட்டிருக்கின்றார்........... பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தது பாழும் கிணற்றுக்குள்ள விழுந்தது போல ஆகி விட்டது.......... விஜய் தான் ஒரு கயிறை எடுத்து இப்ப உள்ளே எறியவேண்டும்.
  11. வன்னி என்னும் எங்களின் நிலப்பரப்பிற்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக மருத்துவர் ஐயாவின் மக்கள் சிலர் ஏற்கனவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பண்டார வன்னியன் வேற இருந்துவிட்டார்.............. இப்ப மாம்பழமும் உள்ளே வந்ததால், அசைக்க முடியாத வரலாற்று உண்மை என்று கொண்டாடப் போகின்றார்களே...............🤣.
  12. சர்வதேசத்தை நம்பி ஏமாறுவதற்கென்றே பல தேசங்களும் வரிசையில் நிற்கின்றன போல. நாங்கள் எங்களை சர்வதேசம் காப்பற்றும் என்றிருக்க, அது கைவிட, பலமாகவே ஏமாந்தோம். ஆனாலும் அதன் பின்னரும் இப்பவும் சர்வதேசத்திற்கு குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றோம். உக்ரேன், பாலஸ்தீனம்,........... என்று இந்த வரிசையில் எப்பவும் நாடுகள் நின்றபடியே இருக்கின்றன. அமெரிக்கா என்பது இந்த இரு வேட்பாளர்களை விட அல்ல, எந்த வேட்பாளர்களை விடவும் மிகவும் பெரியது. எவராலும், கமலா ஹாரிஸ் என்றால் என்ன, ட்ரம்ப் என்றால் என்ன, அமெரிக்காவின் நலனுக்கு எதிராக ஒரு துரும்பையேனும் இன்னொரு இடத்திற்கு மாற்றமுடியாது.
  13. 👍................. 'இடியாப்பத்திற்கு மாற்றுக் கருத்து இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம். இடி அமீனுக்கும் மாற்றுக் கருத்தா.........' என்பது போல சு.ப. சோமசுந்தரம் அவர்கள் முன்னர் இங்கு பகிர்ந்திருந்த அவருடைய மகள் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்தது இந்த இடத்தில் ஞாபகம் வருகின்றது ............🫢.
  14. சிறகு --------- ஒட்டி உலர்ந்த தேகம் ஒன்று எப்பவும் அங்கே பாதையில் கழிவுநீர் ஆறு என்று ஓடும் அந்தக் கரையில் சுருண்டு கிடந்தது அது கையை நீட்டவும் இல்லை கண்களை பார்க்கவும் இல்லை புதிதாக வெளியில் வந்தது போல வெட்கம் அதன் உயிரைக் கொன்று அதன் பசியை மூடி வைத்திருந்தது இது செத்து விடுமோ என்று பழிபாவம் அஞ்சும் யாரோ ஒருவர் அதுக்கு தெரியாமல் அங்கே ஒரு தட்டும் அதில் உண்ணும் பொருளும் வைத்தார் வேறு சிலரும் வைக்க வைக்க எழும்பி இருந்து வானம் பார்க்கத் தொடங்கி பின்னர் நடக்கத் தொடங்கி இப்பொழுது அது உலாத்துகின்றது இன்று காலை அது ஒரு பாட்டும் பாடியது இனி ஆகாயமே எல்லை.
  15. நீங்கள் இரண்டு பேர்களும் இப்படி ஒருவரை இன்னொருவர் போட்டுத் தள்ளினால், மற்றவர்களுக்கு சேதாரம் எதுவுமே வராது போல........... நாதக - தவெக இந்த இரண்டையும் தான் சொன்னேன்.............🤣. *********************************** அன்பு அன்ணன் 'தம்பீ.............' என்றான் பாசத்துடன் ஆரம்பத்தில் வரவேற்கின்றேன் என்றும் சொன்னான் தம்பியும் நல்லாத்தான் ஒட்டாக இருந்தான் பின்னர் தம்பி ஒரு நாள் தனியப் போய் ஒரு கண் அங்கே, ஒரு கண் இங்கே என்றான் அண்ணன் சொல் கேளாமல் எல்லார் படங்களையும் வீட்டில் கொழுவினான் அண்ணனுக்கே வந்ததே எப்பவும் வரும் கோபம் இப்பவும் 'முட்டை............ கூமுட்டை.......... அழுகின கூமுட்டை........ அடிபட்டுச் சாகப் போகின்றாய்..............' என்று அண்ணன் அழுகின முட்டை முட்டையாக தம்பி மேல எறிய அண்ணனின் படை வீரர்களும் தம்பி மேல எறிய தம்பியின் படை மட்டும் என்ன இளைத்ததா....... அண்ணனுக்கு பதிலுக்கு சாத்து சாத்து என்று சாத்த............. .................. பழைய பெருச்சாளிகள் மூன்றும் அப்பாடா........... எங்களுக்கு இவங்களால் தொல்லையே இல்லை என்று நிம்மதியாக இருக்கினம்................
  16. 'பத்திற்குள்ள நம்பர் ஒன்று சொல்லு..................' என்று கோலி பாடிப் பாடி விளையாடி இருக்கின்றார் போல........ கோலிபாய் எம்பிபிஎஸ்........... அந்த நாளில், 80, 90 களில், எவ்வளவு மோசமான இந்திய அணிகளை பார்த்திருக்கின்றேன்............. ஆனாலும் இது வேற லெவல் அணி.......... மகா கேவலம்............ வீட்டிலிருக்கும் நால்வருடன் இன்னும் ஒரு எட்டுப் பேரை அக்கம்பக்கத்தில் கூட்டி அள்ளிக் கொண்டு போய் நானும் ஒரு மாட்ச் கேட்கலாம் என்றிருக்கின்றேன்..........
  17. 26 தீர்மானங்களும் தீர்மானங்களாகவே இருப்பது ஆறுதலான ஒரு விடயம். இதில் எதுவுமே போராட்டமாக இல்லாதது தவெக நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் அவரவர் சொந்த வேலையை முடிக்க உதவியாக இருக்கும்.............. இன்று 69வது படத்தின் ஷீட்டிங் ஆரம்பிக்கின்றது.......... மீனவர் பிரச்சனை அவ்வளவு கஷ்டமான ஒரு கேள்வியா........ இவர்கள் எல்லோருமே நூறுக்கு சைபர் வாங்குகின்றார்களே.........
  18. 🤣............... 'என் பாட்டன், முப்பாட்டன், பாண்டியன்............' என்ற இன்னொரு பொறி பறக்கும் பேச்சு முந்தாநாளிலிருந்து ஓடித் திரிகின்றதே............ அது தான் தேசியம் பேசும் சிலர் சொல்லும் அடிப்படை. பரம்பரையை, முன்னோர்களை பின்னோக்கிப் பார்த்து தெரிந்து கொள்வார்கள். 'இங்கு யாரும் வாழலாம்.............ஆனால் ஆளக் கூடாது..........' என்று சீமான் இன்னும் ஒரு படி மேலே கொண்டு போனார். நான் இவற்றுடன் உடன்படுவதில்லை.
  19. உங்களின் பங்காளி சும் வெல்லுவார் என்று தான் என்னுடையதில் இருக்கப் போகின்றது, அண்ணா...........🤣.
  20. தமிழர்கள் திராவிடர்கள் என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையில் சில சிக்கலான வேறுபாடுகளும் இருக்கின்றன. இன்றைய திராவிடம் என்பது மரபு என்றில்லாமல் ஒரு கருத்தியல் ஆகவே இருக்கின்றது. ஆரியத்திற்கு எதிரான ஒரு கருத்தியலே இன்றைய திராவிடம். இந்தக் கருத்தியலை மரபு வழியாக திராவிடர் என்று கருதப்படும் ஏனையோர், தமிழர்கள் தவிர, கவனத்தில் கொள்வதில்லை. தெலுங்கு மக்களோ, கன்னட மக்களோ அல்லது கேரள மக்களோ இந்த வகையில் சிந்திப்பது மிகவும் அரிது. ஆகவே இன்றைய திராவிடத்தின் எல்லை தமிழ்நாடு என்ற அளவிலேயே இருக்கின்றது. அது தமிழ்நாட்டில் வாழும் எல்லா தென்இந்திய மக்களையும் ஒரு அணியில் கொண்டு வரும் ஒரு கருத்தியல். தமிழ்த்தேசியம் மிகவும் இறுக்கமானது. எந்த தேசியமும் இறுக்கமானதே. தமிழ்நாட்டில் இருக்கும் எட்டரைக் கோடி மக்களில் எத்தனை கோடி மக்கள் 'உண்மையான தமிழர்கள்' என்று கணக்கிட்டு, மேற்கொண்டு செல்வது தமிழ்த்தேசியம்.
  21. 👍.............. நிச்சயம் சிறி அண்ணா........... இந்த வாரம் அனுப்பிவிடுகின்றேன்...............
  22. தமிழ்நாடு வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டதன் பின்னணியே இது தான் என்றும் சொல்கின்றனர்............ புஸ்ஸிக்குத்தான் வெளிச்சம்..... ஆனாலும் அந்த சாத்திரியார் (கடலூர் சந்திரசேகரர்) தேசியம், திராவிடம் இரண்டுக்கும் அப்பாற்பட்டவர்.... கட்சியின் பெயரிலிருந்து 'க்' குற்று எழுத்தை முதலில் தூக்கியவரும் அவரே என்கின்றனர். கடைசியில் தமிழ் இலக்கணமாவது இவர்களிடமிருந்து தப்பியது.........
  23. 👍............ கூட்டம் சேர்வது உண்மையே, விசில்கள் பறப்பதும் உண்மையே, ஆனால் இவர்களால் ஒரு எல்லையை தாண்ட முடியுமா என்பது தான் பெருத்த சந்தேகமாக உள்ளது. சீமானால் தாண்டவே முடியாது என்ற முடிவிற்கு நான் வந்து பலகாலம் ஆகிவிட்டது. அவருக்கு விசில் அடிப்பவர்கள் பலர் அவருக்கு வாக்குப் போடுவதில்லை. இனி ஒரேயடியாக தேய்வு காலம் தான் அவருக்கு. விஜய்யால் ஒரு மாற்றமும் வராது என்றால், அவரை ஏன் தான் எவரென்றாலும் தேர்ந்தெடுக்க வேண்டும்.......... அதிகாரத்தை மட்டும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதால் என்ன பயன்.... முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போது விஜய் நடந்து கொண்டது ரஜனி செய்வது போலவே உள்ளது. மக்கள் இதை அறிந்தவர்களே, அவர்கள் திமுகவையோ, அல்லது அதிமுகவையோ விலகி, இவரிடம் போகாமல் இருப்பதற்கு இப்படியான விடயங்களே போதும். ட்ரம்ப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. இவருக்கு இங்கு காட்டப்படும் ஆதரவு ஒரு பெரிய அடிப்படைக் கேள்வியையே உண்டாக்கியிருக்கின்றது. மனித பண்பாட்டு வளர்ச்சி என்பது ஒரு நீர்க்குமிழியா.......... அதை மிக இலகுவாக ஒருவரால் ஒரு தேசமெங்கும் உடைத்து விடமுடியுமா.............
  24. 🙄........... நேற்று நியூஸ் 18 தொல்.திருமாவை ஒரு பேட்டி எடுத்திருந்தனர். மிகவும் கண்ணியமாக, நிதானமாக அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருந்தார், உரையாடியிருந்தார். விஜய்யின் பல பாசாங்குகளை சரியான விதத்தில் எடுத்துச் சொல்லியிருந்தார். சீமான் வழமை போலவே கூடி இருப்போர் கைதட்ட வேண்டும் என்று பொரிந்து தள்ளியிருக்கின்றார். சீமானின் ரசிகர்கள் தவிர்த்து, பொதுவானவர்கள் இதைக் கேட்டு முகச்சுழிப்பு ஒன்றையே காட்டுவார்கள். இதையே தான் விஜய்யும் செய்தார். ஒரு சினிமா போல 'ப்ரோ, பாயாசாம் - பாசிசம், ............' என்று கைதட்டல்களுக்காக சாரம், பொருள் எதுவுமின்றி வெறுமனே ஒரு ஃபர்பாமன்ஸ் காட்டி விட்டு போய்விட்டார்............ இப்படியே போனால் இந்த இருவரும் - சீமான மற்றும் விஜய் - தேறப் போவதில்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.