Everything posted by kandiah Thillaivinayagalingam
-
காற்றாடி
வாழ்த்துக்கள் !
-
இன்னொரு சக்கரவர்த்தி
வாழ்த்துக்கள் !
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
தொடர் நன்றாகத் போகிறது வாழ்த்துக்கள் !
-
"மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்"
"மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" "மனமே கலங்காதே!" "மனமே கலங்காதே உறுதியாக இருந்திடு தினமும் நடப்பதை விழிப்புடன் கவனித்திடு! ஈனப் பிறவிகளென யாரும் இல்லை இனம் சார்ந்த நடவடிக்கைகள் ஒழியட்டும்!" "குணம் நாடிக் குற்றமும் ஆராய்ந்து மணம் வீசும் செயல்கள் தொடரட்டும்! எண்ணம் எல்லாம் மனிதம் வளர்க்க பண்பாடு நிலைத்து மனது மலரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... "இயற்கையின் இன்ப அழகில்" "இயற்கையின் இன்ப அழகில் மலர்ந்தவளே மயக்கத்தின் பிடியில் உலகை மறந்தவளே தயக்கம் கொண்டு வெட்கப் படுபவளே அயலவர் உள்ளங்களில் அன்பு விதைத்தவளே வியக்க வைக்கும் விழிகள் கொண்டவளே பயம் வேண்டாம் மனம் கலங்காதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 15 "மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள நிமித்தங்களின் இரண்டாம் பகுதி" "திண் தேர் நள்ளி கானத்து அண்டர் பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு எழு கலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே." (குறுந்தொகை , 210 ) “பலம் மிகுந்த தேரை உடைய நள்ளியின் காட்டில், இடையர்களின் பல பசுக்கள் கொடுத்த நெய்யுடன், தொண்டி என்னும் ஊரில் விளைந்த வெண்மையான நெல்லின் சூடான சோற்றைக் கலந்து, காக்கைக்கு ஏழு கிண்ணங்களில் கொடுத்தாலும் அது சிறிய கைம்மாறே. ஏனென்றால், என் தோழியின் பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்திற்கு ஒரு நல்ல மாற்றாக, விருந்தாளி வருவான் என்று அறிவித்துக் கரைந்த காக்கைக்கு இந்த உணவாகிய பலி மிகச் சிறிய கைம்மாறே ஆகும்” என்கிறாள் இன்னும் ஒரு சங்கத் தோழி. சங்க பாடல்களான ஐங்குறுநூறு 391, குறுந்தொகை 210 இன் படி காகம் விருந்தினர் வருவதை முன் கூட்டியே சொல்லும் திறன் உடையதாகும். அதாவது ஒருவர் வீட்டில் காகம் கரைந்தால், கட்டாயம் அங்கு விருந்தினர் வருவர் என எதிர் பார்ப்பார். அதாவது காக்கை கரைவதை விருந்தினர் வருவதற்கு நிமித்தமாகக் கொள்ளுவர் என்கிறது. யாழ்ப்பாணத்தை பொறுத்த மட்டில் அங்கு இரு வகையான காகங்கள் உண்டு. ஒன்று சிறியது. இது காலையில் கரைந்ததால் நீங்கள் ஒரு நல்ல செய்தியை எதிர் பார்க்கலாம். அதாவது கடிதமோ விருந்தினரோ வரலாம். அடுத்தது பெரிய காகம். அது சத்தம் போட்டால், அது கேடு, பொல்லாங்கு, நோய் போன்றவற்றை குறிக்கும். ஒரு பயணத்தின் போது ஒரு மயிலை காண்பது நல்ல சகுனம். ஆனால் அதன் கீச்சுக் குரலை கேட்பது வழிப்பறி நடக்கப்போவதை முன் கூட்டியே அறிவிப்பதாக இருக்கும். ஒரு வருத்தக்காரன் இருக்கும் கூடத்திற்கு முன்னால் ஒரு நாய் ஊளையிட்டால், அவரின் மரணத்தை அறிவிப்பதாக இருக்கலாம். ஒரு புது வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டுவதை ஊக்கமூட்டு கிறார்கள். காரணம் அது நல்ல எதிர்கால நிலையை / செல்வ வளத்தை தரும் என்பதால். ஆண் மயில்கள் தோகை விரித்தாடினால் மழை வரும் என்பார்கள். உண்மையில் அது ஏன் ஆடுகிறது? விஞ்ஞானிகளின் ஆய்வு ஒன்றின் படி அது பெண் மயிலை கவருவதற்காகவே என்று கண்டுபிடித்துள்ளார்கள். எப்படியாயினும் பல்லியே பல மூட நம்பிக்கைகளுக்கு தானே காரணமாக உள்ளதாக அது தனக்கு தானே பெருமிதங் கொள்ளத்தக்கதாக உள்ளது. பல்லி சோதிடம் [Gowli Shastra ] என்று ஒரு தனி பிரிவே உண்டு. அது மட்டும் அல்ல நாட்காட்டிகள், பஞ்சாங்கங்கள் ஆகியவற்றில் பல்லி விழும் பலன் பொதுவாக இருக்கும். பெரும்பாலானோர்களும் அதைத் தவறாது பார்த்து தம் மனதை குழப்புவது இன்னும் நிகழ்கிறது. குறுந்தொகை 218, கொற்றனார், பாலை திணை – தலைவி சொன்னது "விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாங் கைந்நூல் யாவாம் புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம் உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம்மின்று இமைப்புவரை அமையா நம்வயின் மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே." தோழி! அவர் என் உயிருக்கு உயிரானவர். இமைப்பொழுதும் அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்னை நினையாது மறந்து விட்டு இவ்வாறு அவர் சென்றதால், நான் பிளவுகளும் குகைகளும் உடைய தொடர் மலையில் உள்ள சூலிக்கு பலிக்கடன் செய்ய மாட்டேன், என் கையில் காப்பு நூல் கட்ட மாட்டேன், பறவைகளின் நிமித்தங்களைக் கேட்க மாட்டேன், நல்ல சொல்லுக்காக காத்துக்கொண்டு இருக்க மாட்டேன். அவரைப்பற்றி நினைக்கவும் மாட்டேன். என்று தனது வருத்தத்தை தெரிவிக்கிறாள். இது பல சங்க கால மூட நம்பிக்கைகளை கூறிச் செல்கிறது. மேலும் சில நம்பிக்கைகளை சுருக்கமாக கிழே தருகிறேன். "காகம் இடப் பக்கமிருந்து வலப் பக்கம் பறந்து செல்வதைப் பார்த்தால் நல்லது." "வௌவால் வீட்டில் பறந்தால் தீமை வரும்." "பல்லி தலையில் விழுந்தால் மரணம் நிகழும்." "பல்லி உடலில் விழுந்தால் ஆயுள் கூடும்." "பல்லி மேற்குத் திசையிலிருந்து ஒலி எழுப்பினால் நல்லது நடக்கும்." "தவக்கை கத்தினால் மழை வரும்" "கோழி சிறகை விரித்து மண்ணில் பதுங்கினால் மழை வரும்" "தட்டான் [தும்பி / dragonfly?] தாழப் [கிழே] பறந்தால் மழை வரும்" "ஆடு கூடி கூடி அலந்தால் மழை வரும்" நான் எப்பவோ கேட்ட, வாசித்த ஒரு நிகழ்வு இப்ப ஞாபகம் வருகிறது. "ஒரு அரசன் காலையில் தன் மாளிகையிலிருந்து கீழே பார்த்தான். அப்ப ஒரு ஏழை அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்தான். அதன் பிறகு அரசனுக்கு அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள் சரியில்லைமல் போயிற்று. ஏன் என்று யோசித்து பார்த்தான். அப்பொழுது தான் காலையில் முழித்த அந்த ஏழை முகம் ஞாபகம் வந்தது. அது, அந்த சகுனம் சரியில்லை என்ற எண்ணம் தோன்றியது. ஆத்திரம் அடைந்த அரசன், தன் வீரர்களை அழைத்து தான் காலையில் விழித்த அந்த ஏழை எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் என்ற கட்டளையிட்டான். ஏழை அழைத்துவரப்பட்டான். தனது கெட்ட, துக்க நிகழ்வுகளுக்கு காரணமான அந்த ஏழைக்கு மரணதண்டனை விதி்த்தான். ஆனால் அந்த ஏழையோ எந்த கவலையோ, துக்கமோ இன்றி சிரித்தான்!சாவின் விளிம்பில் நிற்பவன் சிரிக்கிறானே என்று குழம்பினான் அரசன். அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டான். அந்த ஏழை மிக அமைதியாக சொன்னான். 'என்னைப் பார்த்த தங்களுக்காவது சிறு சிறு துன்பங்கள் தான் நேர்ந்தது. நான் காலையில் தங்கள் முகத்தில் தான் விழித்தேன். எனக்கோ என் உயிரே போகப் போகிறது. யார் ராசியில்லாதவர் என்று எண்ணிப்பார்த்தேன் அது தான் சிரித்தேன்' என்று கூறினான்." இப்ப சொல்லுங்கள் "எது நல்ல சகுனம் ? எது கெட்ட சகுனம்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 16: "சாவும் பேயும்" தொடரும்
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
எல்லோருக்கும் நன்றி
-
"நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்எல்லோருக்கும் நன்றி
-
"நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்எல்லோருக்கும் நன்றி
-
"நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே"
"நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே" "நான் வரைந்த முதல் ஓவியம்" "நான் வரைந்த முதல் ஓவியம் நாணம் கொண்ட அவளின் உடல் நாட்டிய தாரகையின் தாமரை முத்திரை நாடித் தேடி கீறிய படம்!" கோடு போட்டு அளந்து பார்த்து ஏடு வாசித்து மனதில் பதித்து நாடு எங்கும் காணாத அழகு ஆடு மகளின் வண்ணக் கோலம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................... "உள்ளமெனும் ஊஞ்சலிலே" "உள்ளமெனும் ஊஞ்சலிலே ஆடும் ஆட்டியே கள்ளமற்ற நெஞ்சைத் தேடும் தேவதையே வெள்ளமாக பாயும் அன்பின் அணங்கே குள்ளப்புத்தி உனக்கு வந்தது எனோ?" "மெல்ல நடந்து விலகிப் போறவளே சொல்ல மறந்த வார்த்தைகள் எதுவோ நல்ல இதயம் கொண்ட கோதையே இல்லம் அமைக்க என்னைத் தழுவாயா?" "காதணி இரண்டும் மின்னி ஒளிர காம விழிகள் வித்தைகள் காட்ட கால்கள் நான்கும் பின்னிப் பிணைய காதல் இணைய தாலாட்ட வருவாயா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கரை கடந்த புயல்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்எல்லோருக்கும் நன்றிகள்
-
"கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்எல்லோருக்கும் நன்றிகள்
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 14 "மிருகங்கள்,பறவைகள் & ஊர்வன உடன் தொடர்புள்ள நிமித்தங்கள்" "நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் நீயும் நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி வடதிசைக்கேகுவீராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு "எங்கோன் மாறன்வழுதி கூடலில் ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக் கண்டனம் எனுமே....." [ சங்க கால சத்திமுற்றப் புலவர்] பனங்கிழங்கை பிளந்தார் போல் அலகு கொண்ட நாரைக் கூட்டங்களே. நாரைக் கூட்டங்களே. நீயும் உன் இல்லாளும் தென் திசையில் விளையாடிக் களைத்து விட்டு வடக்கு திசை வழியே செல்லும் போது 'சத்திமுத்தம்' என்னும் எங்கள் ஊர் குலத்தினில் தங்கி சற்று இளைப்பாறி கொள்ளுங்கள். அந்த சமயம் பொருள் ஈட்டச் சென்ற என் தலைவன் எப்போது வருவான் என மழை பெய்து நனைந்து போன சுவர் இருக்கும் கூரை வீட்டில், தலைவன் வரும் சேதியை பல்லி சகுனம் சொல்கிறதா என வீட்டுச் சுவர் மீது உள்ள பல்லியையே பார்த்திருக்கும் என் மனைவியிடம் சொல்லுங்கள். மன்னனைப் பார்க்க வந்த நேரம் இருண்டு போனதால், இந்த மதுரையம்பதியில் ஓர் மூலையில் உள்ள சத்திரத்தில் ஆடை இல்லாமல் குளிரினால் கை கால்ககளை கட்டிக்கொண்டு பெட்டிக்குள் இருக்கும் ஒரு பாம்பு போல இருக்கின்ற உன் தலைவனை கண்டேன் என்று கூறுவாயா? என்று நாரை விடு தூதாக அமைந்துள்ளது இந்த புலவரின் மேலே கூறிய செய்யுள். இதனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சங்க காலத்திலேயே, பல்லி சகுனம் எவ்வளவு பிரபலமாக இருந்தது என்பது எமக்கு இப்ப தெரிய வருகிறது. மேலும் சகுனம் என இக்காலத்தில் வழங்கும் பொதுச்சொல் சங்ககாலத்தில் புள், நாள், ஓரை, நிமித்தம் போன்ற சொற்களால் உணர்த்தப்பட்டது. பழங்காலத்தில் பெண்கள் வெளியே சென்ற கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று ஏங்கி, பல்லியின் புள் (சகுனம்) பார்த்தபடி நிற்பர். இதை மேலே உள்ள பாடல் புலப்படுத்தியுள்ளது. இலங்கையில் சில இடங்களில், சிறார் பல் விழுந்தால், "பல்லி பல்லி நீ இப்பல்லை எடுத்துக் கொண்டு புதுப்பல்லை எனக்குத்தா" என்று பல்லை கூரை மேல் எறிந்திடுவர். காட்டில் வாழும் ஆண் ஓதி (ஓதி = ஓணான் வகையில் ஒன்றான பச்சோந்தி / chameleon) தன் பெண் ஓதியை அழைக்கப் போடும் சத்தத்தைக் கூட நல்ல புள் (நல்ல சகுனம்) என்று கருதினர். "வேதின வெரிநி னோதி முதுபோத் தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும் சுரனே சென்றனர்............" [குறுந்தொகை 140. பாலை திணை ] கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய, முதிய ஆண் ஓந்தியினது சத்தத்தை, வழிச்செல்லும் மனிதர்கள் நிமித்தமாகக் கொள்ளுகின்றனர் அப்படிப்பட்ட பாலைநிலத்திற் எம் காதலர் சென்றனர் என்கிறது இந்த சங்க பாடல். கூடுதலான நிமித்தம், சகுனம் என்பவை மிருகங்கள், பறவைகள், ஊர்வன என்பனவற்றுடன் தொடர்புடையன. மிகவும் வியப்பூட்டும் அல்லது ஆச்சரியம் தரக்கூடிய செய்தி என்னவென்றால் சில சகுனங்கள் சங்க காலத்தில் இருந்தவாறு அப்படியே மாறாமல் இப்பவும் இருப்பதே. உதாரணமாக பல்லி, காகம் இவைகளின் சகுனத்தைக் கூறலாம். ஒரு பயணத்தின் போது யானையை காண்பது மிகவும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. அது போல ஒரு வீட்டின் உச்சியின் மேல் ஒரு ஆந்தை, கோட்டான் குந்தி இருப்பது மிக கெட்ட சகுனமாகும். இது படுவீழ்ச்சி, நாசம், அழிவு, மரணம் போன்றவற்றுக்கான ஐயுறவு இல்லாத, உறுதியான அறிகுறியாகும். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒரு நாய் இரவில் ஊளையிடுவது, "சா" வருவதை குறிப்பதாக நம்புகிறார்கள். காதலித்த தலைவனோடு உடன்போக்காகச் வீட்டுக்குத் தெரியாமல் சென்றுவிட்ட மகள் திரும்பி வந்து கொண்டிருக்கும் நற்செய்தியை - அதற்கான நல்ல சகுனத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே காக்கைக்கு விருந்து வைக்கும் சங்கத் தாயைக் காட்டுகிறது கிழே தரப்பட்ட ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று. ஐங்குறுநூறு 391, ஓதலாந்தையார், பாலை திணை – தலைவியின் தாய் சொன்னது "மறு இல் தூவிச் சிறு கருங் காக்கை அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ வெம் சின விறல் வேல் காளையொடு அம் சில் ஓதியை வரக்கரைந் தீமே." "அழகான கறுத்த இறகுகள் கொண்ட சிறு கருங் காக்கையே! உனக்கு நான் நெய் வழிந்தோடும் புதிய இறைச்சிச் சோற்றைப் பொன்னால் செய்யப்பட்ட தட்டில் படைக்கிறேன் .... அதை உன் கூட்டத்தோடு வந்து வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப் போ! அதன் பிறகாவது ... என் மகள் சீக்கிரம் வந்து விடுவாள் என்பதற்கு அடையாளமாகச் சிறிது நேரம் குரலெழுப்பிக் கரைந்து விட்டுப்போ!" என்று லஞ்சம் கொடுப்பது போல, சாப்பாடு கொடுத்து அதைக் கூவி அழைக்கிறாள் இந்த சங்கத் தாய்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 15: "மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள நிமித்தங்களின் இரண்டாம் பகுதி தொடரும்
-
"கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்"
"கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்" "கலாச்சாரம் தமிழா தலைசுத்துது எனக்கு கலப்பு இல்லா ஆதி மொழியே கலை மூன்றும் தந்த பெருமையே!" "பகலோனாக உலகிற்கு ஒளி ஏற்றிவவனே பகுத்தறிவு சித்தர்களின் பிறப்பு இடமே பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதலே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ "துடிக்கும் இதயங்கள்" "துடிக்கும் இதயங்கள் தேடுது அன்பு அடிக்கும் கைகள் அணைக்குது பாசம் இடிக்கும் வார்த்தைகள் வாட்டுது நெஞ்சம் குடிக்கும் மதுபானம் சிதைக்குது உடலை கெடுக்கும் செயல்கள் குறைக்குது நற்பெயரை!" "உள்ளம் மலர்ந்தால் மகிழ்வு பிறக்கும் கள்ள நட்பு மானம் கெடும் பள்ளிப் படிப்பு அறிவை வளர்க்கும் குள்ளப் புத்தி அநியாயம் செய்யும் துள்ளும் ஆசை வெட்கம் அறியாது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கரை கடந்த புயல்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்தட்டச்சு தான், எனக்கு குரல் பதிவு பெரிதாக வராது, என் உச்சரிப்பு ஆங்கிலமோ, தமிழோ கொஞ்சம் பிழை உதாரணமாக ல, ழ, ள , அப்படியே ர, ற வித்தியாசமே இல்லை. சின்ன வயதில் அதைத் திருத்தக்கூடிய வசதி இருக்கவில்லை, என் அப்ப ஒரு சுருட்டுத் சுத்தும் கூலித் தொழிலாளி, எட்டு பிள்ளைகள், நான் ஏழாவது. என்றாலும் எல்லா ஐந்து ஆண்களும் சிறந்த பணிக்கு உயர்ந்தார்கள். நானே என் பாட்டில் மனதில் வாசித்து, விளங்கி ஒரு எல்லையைத் தாண்டினேன். ஓய்வின் பின்புதான் எழுதத் தொடங்கினேன். நன்றி
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
எல்லோருக்கும் நன்றிகள்
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
சோதிடத்தைப் பற்றிய பிரத்தியேகக் கட்டுரைகளை கீழே பார்க்கவும் "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/24366525666329408/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/24413828874932420/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/24458822917099682/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/24501440722837901/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/24547155781599728/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/24591116130537026/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 07 https://www.facebook.com/groups/978753388866632/posts/24637435149238457/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/24691687010479937/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 09 https://www.facebook.com/groups/978753388866632/posts/24736573269324644/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/24788718830776754/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 11 https://www.facebook.com/groups/978753388866632/posts/24837858872529416/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 12 https://www.facebook.com/groups/978753388866632/posts/24890323107282992/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 13 https://www.facebook.com/groups/978753388866632/posts/24943993545249281/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 14 https://www.facebook.com/groups/978753388866632/posts/24993273376987964/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 15 https://www.facebook.com/groups/978753388866632/posts/25041218948860073/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 16 https://www.facebook.com/groups/978753388866632/posts/25090145337300767/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 17 https://www.facebook.com/groups/978753388866632/posts/25141261605522473/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 18 https://www.facebook.com/groups/978753388866632/posts/25196031830045450/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 19 https://www.facebook.com/groups/978753388866632/posts/25249858347996131/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 20 https://www.facebook.com/groups/978753388866632/posts/25304672232514742/?
-
"கரை கடந்த புயல்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்எல்லோருக்கும் நன்றிகள்
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 13 சோதிடம்: சோதிடம் குறித்த நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. குறி சொல்வோர், கைரேகை பார்ப்போர், ஏடு போட்டுப் பார்ப்போர், கிளி சோதிடம் கூறுவோர், சாமக் கோடாங்கிகள் ["நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது" என்ற இந்த வார்த்தைக்கு சொந்தக் காரர்கள் தான் சாமக் கோடாங்கிகள் எனப்படுவர்கள்] போன்றோர் கிராமத்துத் தெருக்களில் வலம் வருவதை இயல்பாகக் காணலாம். அதுமட்டும் அல்ல சோதிடத்தில் எடுத்துரைக்கப்படும் தீய பலன்களைப் போக்க, அதற்கான பரிகாரங்களை மேற்கொள்ளும் வழக்கமும் காணப்படுகிறது.. "ஆவணியில் வீடு கட்டுக ! கார்த்திகையில் குடி புகுக ! நோயறிந்து மருந்திடுக ! கோலளறிந்து வீனை செய்க ! கோள்களின் கோலாலட்டமே ! குவலயத்தின் சதுராட்டம் ! நாளிறிந்து மனைகோல்வாராக !" அக்காலத்தில் சோழ மன்னனாகிய சுபதேவனும், அவன் பட்டத்தரசி கமலவதியும் சிதம்பரம் போய் மக்கட் பேறு கேட்டு வழிபட்டார்கள். அதன் பின் கமலவதி கருவுற்றாள். கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது, ‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர்கள். அவ்வாறு ஒருநாளிகை கழித்துப் பிறப்பதற்காக அரசியை தலைகீழாக மேலே தூக்கி நிறுத்தினார்கள் என பெரிய புராணம் கூறுகிறது. குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது. கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’ என அருமை தோன்ற அழைத்தார். இவனே கோச்செங்கோட் சோழர் ஆவார். மேலும் 703 ஆண்டு பழமையான தமிழ் சோதிட நூல் இலங்கையில் இயற்றப்பட்டது என அறிகிறோம். சரசோதி மாலை என்பது இந்த சோதிட நூல். இதனை இயற்றியவர் இலங்கையில் வாழ்ந்த போசராசர். இவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அந்தணர். இந்த நூலை இவர் சக ஆண்டு 1232 க்கு இணையான கி.பி. 1310-ல் தம்பை என்னும் ஊரில் வாழ்ந்த பராக்கிரமபாகு என்னும் அரசனின் அவையில் அரங்கேற்றினார் என்று ஒரு பாடல் குறிப்பிடுகிறது. சங்க கால ஈழத்துப்பூதந்தேவனாருக்குப் பின்னர் ஈழத்து இலக்கியம் என அறியப்பட்ட முதல் நூல் இதுவாகும். பாண்டியப் பேரரசுக்குப் பயந்து ஆட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டமையினால் நான்காம் பராக்கிரமபாகு சோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதை இதன் மூலம் உணர முடிகின்றது. இந்நூலில் சோதிட கருமப் படலம் தொடக்கம் நட்சத்திரத் திசைப்படலம் ஈறாக 12 படலங்கள் உள்ளன. அதன் பின் யாழ்ப்பாண மன்னர்காலத்தில் எழுந்த மற்றொரு சோதிட நூல் செகராசசேகர மாலை ஆகும். சரசோதி மாலையில் திருமணப் பொருத்தம் பற்றி கூறும் பாடல் கிழே தரப்பட்டுள்ளது. "செப்பு நாள் கணங்கள் மாகேந்திர மொடு மங்கை தீர்க்கந் தப்பிலா யோனி ராசி ராசியின் தலை தம்மோடு ஒப்பிலா வசியம் நன்னூல் வரைதறு வேதை ஆக மைபுயல் அளக மாதே மருவிய பொருத்தம் பத்தே". இதில் இருந்து நாம் அறிவது, இந்தியாவில் மட்டும் அல்ல, இலங்கையிலும் சோதிடம் மக்களின் வாழ்வில் ஒரு பிரிக்க முடியா ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்பதாகும். அது இன்னும் இருக்கிறது. ஒரு கல்யாணத்தை ஒழுங்கு படுத்துவதில் இருந்து, கல்யாண நாள் குறிப்பது, மணமகள் புது வீடு புகுதல், ... இப்படி எல்லாவற்றிலும் இந்த சோதிடம் ஆட்சி செலுத்துகிறது, "ஆண் மூலம் அரசாலும் பெண் மூலம் நிர்மூலம்" என்ற சோதிட பழ மொழியும் உண்டு.இ தனைப்போன்ற சில பழ மொழிகளைக் கிழே தருகிறேன். கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும் சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான் பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணி ஆள்வான். மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர். "வசையில்புகழ் வயங்குவெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினுந் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி" [பட்டினப்பாலை] மேலும் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர் என்கிறது சங்க பாடல். நற்றிணை 47, நல்வெள்ளியார், குறிஞ்சி திணை – தோழி தலைவியிடம் சொன்னது "கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து அன்னை அயரும் முருகு நின் பொன் நேர் பசலைக்கு உதவா மாறே". வேலன் கழங்கு போட்டு வீடு கட்டிக் காட்டி இவளுக்கு வெறி என்று தணிக்க முயன்றால் அம் முயற்சி பயன்படுமா? என்று கேட்கிறது சோதிடத்தில் இன்னும் ஒன்று ஒருவருடைய கைரேகையைக் கொண்டு, அவரைப்பற்றிய நிகழ்காலம் மற்றும் இறந்தகாலத் தகவல்கள் கூறுதல் . இது நாடி சோதிடம். இதன் எழுத்துக்கள் வட்டெழுத்துக்களாக பழந்தமிழ் எழுத்துக்களாக எழுதப்பட்டுள்ளவையாகும். இச்சுவடிகள் 2000 வருட பழமை வாய்ந்தவை. இவர்கள் கட்டை விரலின் கைரேகையை பெறுகின்றனர். பின் அந்த ரேகைக்கு பொறுத்தமான சுவடிக் கட்டுகளை, சில கேள்விகளைத் தொடுத்து - ஆம், இல்லை - என்ற பதில் மூலம் அவர்களுக்கான ஒலையை எடுத்து வாசிக்கிறார்கள். இதை பள்ளியில் பயிலும் இரு மாணவர்கள் ஒருவருக்கொருவர் மனதில் நினைத்த எண்ணை கண்டுபிடிக்க விளையாடும் பொழுது இந்த கட்டத்தில் அந்த எழுத்து இருக்கின்றதா? இல்லையா? என்று வினவி அதன் மூலம் அவர் மனதில் நினைத்த எண்ணை கண்டுபிடித்து விளையாடுவதோடு ஒப்பிடலாம் . எண் "சோதிடம்" தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும் . என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம் - நியுமெராலஜி- (Numerology) பித்து வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது? நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! பகுதி 14 : "மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள நிமித்தங்கள்" தொடரும் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கரை கடந்த புயல்"
"கரை கடந்த புயல்" நவம்பர் 27, 2024 அன்று காலை கடற்கரை நகரமான திருகோணமலை அபாய எச்சரிக்கையுடன் விழ்த்தெழுந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்ற, பெஞ்சல் புயலாக [Fengal Cyclone] வலுவடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. செல்வராஜா குடும்பத்தினருக்கு இந்தப் புயல் இயற்கைப் பேரிடரை விட அதிகம்; இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. மீன்பிடி தொழிலாளியான செல்வராஜாவுக்கும், மீனா என்ற அவரின் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்தவரான 18 வயது கவிதா, தனது குழந்தைப் பருவ காதலியான அரவிந்துடன் நவம்பர் 29ஆம் தேதி திருமணத்தை பதிவு செய்யவிருந்தார். அரவிந்த் அடுத்த வாரம் உயர் படிப்பைத் தொடர லண்டனுக்குப் புறப்பட இருப்பதால், அவன் புறப்படுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் காதலை, திருமணப் பதிவாக, அதை இரு குடும்பத்தார்களின் மத்தியில் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். ஆனால், அவன் திரும்பி வந்த பின்புதான், குடும்ப மரபின்படி [சம்பிரதாய முறைப்படி] திருமணம் செய்வதென்றும் முடிவெடுத்தனர். இலங்கையில், நவம்பர் 27 2024 புதன்கிழமை மாலை வரை, நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளதுடன் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 8 பேர் காணாமல் போயுள்ளனர். இது தவிர 9 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 8 வீடுகள் முழுமையாகவும், 620 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என அரசு அறிவித்தது. இவைகளில், திருகோணமலையில் 1537 குடும்பங்களைச் சேர்ந்த 4385 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இது கிழக்கு கடலின் ஊடாக நகர்வதால் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றராகக் காணப்படும் எனவும் ஆழ்கடல் பகுதிகளில் 80 – 90 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு தெரிவித்தது. செல்வராஜாவும் மீனாவும் தங்கள் வீட்டில் இருந்து கடலை நோக்கினார்கள். அங்கே, அவசர அவசரமாக கரைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் மீன்பிடி படகு ஒன்று, புயல் காற்றினால் கவிழ்வதைக் கண்டனர். "கால் ஏமுற்ற பைதரு காலைக் கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு" 'கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்று கடலிலே தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட, கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து' என நற்றிணை (30: 7-8) கூறுவதை செல்வராஜா ஒப்பிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் சிந்தியது. இந்த பெஞ்சல் புயல் மேகங்கள் மெல்ல மெல்ல பெரிதாக திரண்டதால், செல்வராஜா குடும்பத்தின் கவலைகளும் அதிகரித்தன. அவர்களின் சாதாரண வீட்டிற்கு மேலும் பலமான காற்றுடன் மழை பெய்தது, அந்தக் கடலோரக் காற்று அச்சுறுத்தலாக வளர்ந்தது. எனவே திருமண பதிவை ஒத்திவைக்கலாமா என்று செல்வராஜாவும் மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் அலுவலகம் கூட அருகில் இல்லை, சில கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது. அதேவேளை இலங்கை வானொலி, எச்சரிக்கை அறிவித்தல்களை தொடர்ந்து அவசரம் அவசரமாக அறிவித்துக்கொண்டு இருந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன .கூரைகள் பறந்தன. ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பெரியோரும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர் என ஒரு பட்டியலையே கொடுத்துக் கொண்டு இருந்தது. "கடற்கரை ஊருகள், நகரங்கள் அழிந்திடுமாம் வெள்ளம், ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம் சீருந்துகள் [மகிழுந்து], படகுகள் அழிந்திடுமாம் வீடுகள், பாடசாலைகள் வெள்ளம் நுழைந்துடுமாம் சோலைகளும் மரங்களும் வேர்கள் பிடுங்கிடுமாம்" "புயல் தீவிரமடைந்தால் என்ன செய்வது?" மீனா கேட்டாள், அவள் குரல் கவலையில் கனத்தது. "இது மிகவும் ஆபத்தானது." ஆனால் கவிதா, அரவிந்தின் கையைப் பிடித்துக் கொண்டு உறுதியாக இருந்தாள். “அம்மா, இது எங்களுக்கு முக்கியம். புயல் நம்மைத் தடுத்து நிறுத்த அனுமதிக்க முடியாது. அரவிந்தும் தலையசைத்தான், அமைதியான உறுதியால் அவர்கள் இருவரினதும் கண்கள் நிரம்பி ஒளிர்ந்தன. "இதை ஒன்றாகச் சந்திப்போம்," என்று அவன் உறுதியளித்தான். "உரு கெழு யானை உடை கோடு அன்ன, ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ, தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ வில் எறி பஞ்சி போல, மல்கு திரை வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே" 'அச்சம் தரும் யானையின் உடைந்த தந்தம் போல மலர்ந்திருக்கும் தாழம்பூவின் மடல், வாடைக்காற்று வீச்சில், மகளிர் வண்டல் விளையாடும் களத்தில் வந்து விழும் ஊர் நம் [கடற்கரை] ஊர். இந்த ஊரே என்னைக் கைவிட்டுத் தனிமைப்படுத்தினாலும், அவர் தான் எனக்குத் துணை. அவரும், நான் இல்லாமல், தான் இல்லை என்று வாழ்பவர். வில்லால் அடித்த பஞ்சு போல அலைநுரை பொங்கும் குளிர்ந்த கடல்நிலத் தலைவனாகிய சேர்ப்பன் [நெய்தல் நிலத்து மகன் ] அவன். அவனோடு சிரித்துக்கொண்டு விளையாடாவிட்டால் நான் இருக்கமாட்டேன்.' என்கிறது நற்றிணை 299 கூறுகிறது. அப்படித்தான் கவிதா இருந்தாள். நவம்பர் 29 காலை இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்றுடன் விடிந்தது. வெளியே குழப்பம் இருந்தாலும், செல்வராஜா குடும்பத்தினர் அன்றைய தினத்திற்கு தங்களை தயாராக்கினர். அக்கம்பக்கத்தினர் எல்லோரும் எல்லாவித உதவிக்கும் விருப்பத்துடன் உள்ளே வந்தனர். கையில் குடைகள் மற்றும் மழையங்கிகளும் கொண்டுவந்தனர். மற்றும் பதிவாளர் அலுவலகத்திற்கு பயணம் செய்ய ஒரு வேனையும் [கூண்டுந்து] கொண்டு வந்தனர். கவிதாவின் சகோதரர்கள், 15 வயது ரமேஷ் மற்றும் 12 வயது சஞ்சய், மழையில் இருந்து அக்காவை பாதுகாக்க, குடைகளைப் பிடித்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டனர். செல்வராஜா குடும்பம் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்லும்போது, மரங்கள் மற்றும் மின்கம்பிகள் அங்கும் இங்கும் விழுந்து கிடந்தது . வேன், அங்கு வீதியில் ஓடாமல் தேங்கி இருக்கும் வெள்ளத்தில் பல முறை சறுக்கியது, ஆனால் ஓட்டுநர், அனுபவம் வாய்ந்த உள்ளூர்வாசி, திறமையாக அந்த வீதியில் சமாளித்து ஓட்டினான். "நாங்கள் சரியான நேரத்துக்கு முன் அங்கு போவோம்," என்று அவன் அவர்களுக்கு உறுதியளித்தான், “பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின்” எனப் புறநானூறு 89 இல் கூறும் 'மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர்த்தண்ணுமையில் (போர்முரசு) காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியான' ஊளையிடும் காற்றையும் மீறி அந்த அவனது குரல் அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. பதிவாளர் அலுவலகத்தில், ஒரு சில தம்பதிகள் மட்டும், புயலையும் தைரியமாக எதிர்கொண்டு, தங்கள் குடும்பத்துடன் பதிவு திருமணம் செய்ய அங்கு வந்திருந்தனர். வளிமண்டலம் பதட்டமாக இருந்தாலும், தங்கள் நல்ல நாளை பின்போடாமல், நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்வாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். கவிதா மற்றும் அரவிந்தின் முறை வந்ததும், பதிவாளர் விழாவை விரைவாக, சுருக்கமாக ஆனால் ஆடம்பரமாக நடத்தினார். இளம் தம்பதிகள் ஒருவருக்குஒருவர் சபதம் பரிமாறிக் கொண்டார்கள். அவர்களின் காதல், வெளியில் வீசும் புயலை விட பலமாக இருந்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள், ஒரு திருமணக் கோரிக்கை அல்லது முன்மொழிதல் உடன் ஆரம்பமாகி, அதை தொடர்ந்து, திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டு , இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. அங்கு பொதுவாக எல்லா பெண்களும் தமது சம்பிரதாய பங்கான, மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர். பெண் தெய்வம் குலாவிற்கான [goddess Gula] துதிப்பாடல், பெண்களின் வெவ்வேறு நிலைகளை "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு மனைவி, நான் ஒரு இல்லத் தரசி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"].என கூறுகிறது. அப்படித்தான் இன்று கவிதா மகள் நிலையில் இருந்து மணமகள் நிலைக்கு வந்துள்ளார். "புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, ''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என, நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, வதுவை நல் மணம் கழிந்த பின்றை" திருமண பதிவு நிலையத்தில் கூடியிருந்த சிறுகூட்டத்தில் இருந்த திருமணமான மகளிரும் தம் தம் கணவருடன் சேர்ந்து கூடிநின்று ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க” என்றல்லாம் வாழ்த்தினர். கவிதாவின் தலையில் போட்ட பூவும், நெல்லும், சீவி முடித்த கூந்தலில் (கதுப்பு) கிடந்தன. அவள் மகிழ்ச்சியின் ஒரு எல்லைக்கே போய்விட்டாள். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “பெங்கல்” சூறாவளியானது திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 இரவு 11.30 மணிக்கு நிலை கொள்ளுமென வானிலை ஆய்வு மையம் அன்று தெரிவித்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்தது. எனவே வீட்டிற்கு திரும்பிய குடும்பம், அவசரம் அவசரமாக ஒரு சிறிய கொண்டாட்டத்திற்கு கூடியது. அக்கம் பக்கத்தினர் கலந்து கொண்டு, வீட்டில் இருந்து இனிப்புகளை எடுத்து வந்து வாழ்த்துக்கள் [ஆசிர்வாதம்] கூறினர். அரவிந்தும் கவிதாவும் எதிர்கால கனவுகளைப் பகிர்ந்து கொண்டு, மாலைப் பொழுதை தங்கள் வீட்டின் சுற்றாடலில் கழித்தனர். "புயல்கள் கரையைத் தாக்கினாலும், கடல் கிசுகிசுக்கிறது: எங்கள் காதல் நிலைத்திருக்கும்." என்ற உணர்வுதான் அவர்கள் இருவரிடமும் இருந்தது. புயல் ஓயாமல் தொடர்ந்தாலும், அவர்களின் இதயம் அமைதியாக இருந்தது, அவர்களின் அன்பாலும், குடும்பத்தினரின் ஆதரவாலும் அது நங்கூரமிட்டது. மறுநாள் காலை, வானம் தெளிவாகத் தொடங்கியது. என்றாலும் இருவர் குடும்பமும் மற்றொரு சவாலை எதிர்கொண்டது: அரவிந்தை கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லவேண்டி இருந்தது. பொது போக்குவரத்து தடைப்பட்டதால், செல்வராஜா ஒரு நம்பகமான வேனை ஏற்பாடு செய்தார். ஆனால் மரங்கள் முறிந்து விழுந்த மற்றும் உடைந்த பாலங்கள் நிறைந்த சாலைகளும் இடைவிடாத மழையும் பயணத்தை அவர்களுக்கு கடினமாக்கியது. எது எப்படியாயினும் அவர்கள் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைந்தனர். புறப்படும் வாயிலில் கவிதாவும் அரவிந்தும் கண்ணீர் மல்க விடைபெற்றனர். அரவிந்த் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். “தினமும் உன்னுடன் பேசுவேன், எழுதுவேன், இந்த ஆண்டுகள் விரைவில் கடந்துவிடும்" என்று ஆறுதல் கூறினான். அவன் சென்றதும், கவிதா தன் கண்ணீரைத் துடைத்தாள், அவளுடைய இதயம் கனமாக இருந்தாலும் நம்பிக்கையுடன் இருந்தது. அவர்களின் காதல் தூரத்தையும் நேரத்தையும் தாங்கும் என்று அவளுக்குத் தெரியும். செல்வராஜா குடும்பத்தினர் அன்று மாலையே திருகோணமலைக்குத் திரும்பினர். புயல் அவர்களின் நெகிழ்ச்சியை சோதித்தது, ஆனால் அவர்கள் அதை ஒன்றாக எதிர்கொண்டனர். கவிதா மற்றும் அரவிந்துக்கு, புயல் இயற்கையின் சக்தி மட்டுமல்ல, அவர்களின் அன்பின் வலிமைக்கு ஒரு சான்றாக இருந்தது, கடுமையான காற்று கூட அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நினைவூட்டியது. காதலும் கரையைப் போலவே ஒவ்வொரு புயலையும் தாங்கும் என்பதை உணர்ந்தாள். "புளகாங் கிதமே புறவேலி யாக. கன்னந் தனில் நீ சின்ன மாகள். அடைக்கலப் பொருள்போல் அமையப் பேணும்" [காதா சப்த சதி 1 - 69] [காதா சப்த சதி' என்பது கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்] ஒரு பொருளை ஒருவரிடம் அடைக்கலமாகக் கொடுத்தால், அதை பாதுகாப்பது அவரின் அறத்தின் கடமை. அதைப்போலத்தான் அரவிந், விமான நிலையத்தில் பிரியும் முன் கவிதாவை காதலுடன் முத்தமிட்ட பற்குறியை கவிதா கண்ணாடியில் காணும் போதெல்லாம் புளகிதம் அடைந்து, அதை அரவிந்தின் நினைவாக விரும்பி பாதுகாத்தாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
எல்லோருக்கும் நன்றிகள்
-
“On the day of this Independence Day (04/02/2025)"
“On the day of this Independence Day (04/02/2025)" On this day of freedom bright, I searched for truth in morning light. Independence—what does it mean? A land unchained, a soul serene? Self-rule, they say, self-sufficiency, Freedom, liberty—words of potency. Yet echoes rise in silent air, Are we truly free and fair? Seventy-seven long years have passed, Since colonial chains were cast. Yet do our women walk unafraid, From cruelty’s grasp and justice delayed? Do our children laugh and play, Safe from shadows where dangers lay? Do scholars climb the heights they dream, Or sink beneath a broken scheme? Caste and creed still draw the lines, A past unhealed, a present blind. In corridors of power’s reign, Corruption flows like poisoned rain. A bribe for gas, a bribe for bread, A bribe for justice left unfed. From peons low to judges high, The price of freedom wears a lie. Where once we stood with heads held tall, Now greed and hatred make us fall. Do we walk as equals true, Or march as pawns in politics’ view? History bends to twisted tales, Taught to suit what power prevails. Through media’s glass, the truth distorts, And venom drips from preacher’s courts. Temples lost and lands erased, Freedom stolen, faith displaced. Voices silenced, shackled fast, Futures fading in the past. Yet still I dream, yet still I fight, For dawn to break this endless night. For unity beyond the pain, For hands to build, not break again. Independence is more than a day, It lives in hearts that find their way. When hate is quelled and wounds are healed, When justice stands and truth is sealed. When no man bows to caste or creed, When all can live and none must plead. When power bends to serve, not steal, Then, at last, we'll call it real. So let us rise, both you and me, And shape the land we wish to see. For freedom comes not just by date, But when we choose to change our fate. Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna On the day of independence I started my day browsing on the internet and searching for the literal meaning of the word Independence and this is what I found, ‘Self-governance’, ‘Self-sufficiency’, ‘Freedom’, ‘Liberty’, then a thought popped up in my mind, ‘Are we really Independent?’ Is it enough being a constitutionally independent country? Are we living with complete freedom, are we really liberated? These are the few questions we have to to ponder upon… It’s been now 77 years since we are free from the clutches of British rule in Srilanka. Today standing here after 77 years, do our women feel the freedom, freedom from the atrocities against them? Are our kids safe today? Do our students have the freedom to select the career they want? Do our students get higher studies on merit? Do we have freedom from caste discrimination? Have we got the freedom from the communal tensions in our country? Have we got the freedom from the corruption? Have we got the freedom from all those corrupt, criminal politicians or so called corrupt, criminal religious leaders / spiritual leaders who promoting hate violence and discrimination instead of Promoting Just and Harmonious Societies ? Have we at least got the freedom from our basic problems like poverty and unemployment? If your answer is No then we need to revisit our belief on being free and independent? Corruption is one of the major problem which has been haunting Srilankans and adversely affecting Srilanka economic system. Though we are independent country, we are not able to get freedom from corruption which has made its way into the hearts and veins of most of the government offices. We have seen cases where small peons to top government officials including Supreme Court judges and ministers are involved in corruption. Where independence mean self-government, We the people in Srilanka have to pay bribe to get a basic driving license, to a traffic police, to clerk/peon in govt. office, to even get gas connection. Is this freedom, Are we really independent? Caste, religious and race discrimination is another major social evil deeply entrenched in our society. Even though we are marching ahead towards education and development, these related violence is still occurring in so many nooks and corners of our country with support of politicians and so called higher administrative officers. So are we really Independent? National Integration is essential for any nation with socio-cultural, religious, linguistic and geographical diversities and for a country like ours it is still more necessary. But a series of religious, communal violence in Srilanka has raises many questions for us. After so many years of independence, we are still struggling to stop communal violence in Srilanka as well as respect & treat all citizens equally. Though a large group of Srilankan strive for peace and harmony in the country, there are few groups, parties, organizations including religious organizations, politicians working in Srilanka to divide and rule the country. Political parties for their benefits have created communal hatred among communities. Communalism has been injected in our education curriculum, history has been changed, and media which is controlled by political parties and corporates has played its own role on all this. We should not get into the trap of few ill mindset people or media’s tactics, let us have independent thinking, let us have religious tolerance, mutual acceptance and let us cherish each other’s culture, language, religion etc. of our country Srilanka. It’s not like I am pointing out only negatives about our country, we have undergone many positive changes after independence, in fact lot many. It’s just that me being a proud Srilankan, just wanted to highlight on few issues on which we together as Srilankans have to come together , out of our comfort zones and strive to make our great country Srilanka a much better peaceful place to live in. UNITED WE STAND, DIVIDED WE FALL. On the day of this Independence Day let us keep all our differences aside and fight against these grappling issues and make our Srilanka independent from all sorts of slavery. "Independence day, a day to celebrate the birth of a nation and those who fought and currently fight to keep it free. It is something more at least to me ,it don't have to be limited to just the forth of February We can have Independence day any day When some one gets victory over Alcohol or drugs, it is an Independence Day When someone breaks free from abuse, it is an Independence Day When someone free from discrimination, it is an Independence day When someone free from hate violence, it is an Independence day When someone free from inequality, it is an Independence day When someone free from Corruption, it is an Independence Day When someone free from communal tensions, it is an Independence Day When someone free from twisted Purana history or false stories related to history, It is an Independence Day When someone free from religious leaders false propaganda and hate speeches , It is an Independence Day When minorities / tamil speaking people free from land capturing on false archeological or security reasons ,free from encroaching their religious and cultural places by forces ,It is an Independence Day When minorities / tamil speaking people free from arresting and putting in prison Indefinitely without any legal justice or cases ,It is an Independence Day For people of all breeds and creeds, to free themselves from the chains of nationalistic enslavement; "Where the mind is without fear and the head is held high Where knowledge is free Where the world has not been broken up into fragments By narrow domestic walls Where words come out from the depth of truth Where tireless striving stretches its arms towards perfection Where the clear stream of reason has not lost its way Into the dreary desert sand of dead habit Where the mind is led forward by thee Into ever-widening thought and action Into that heaven of freedom, my Father, let my country awake" [Gitanjali / Rabindranath Tagore] (Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna)
-
"இந்த சுதந்திர தினத்தன்று (04/02/2025)"
"இந்த சுதந்திர தினத்தன்று (04/02/2025)" காலைக் கதிரவன் பொற் கதிரில் உண்மைச் சுதந்திரம் தேடிச் சென்றேன் வெளிச்சத்தில் மிளிரும் இலங்கை மண்ணில் விடுதலையின் முகம் நான் கண்டேனா? உண்மைச் சுதந்திரம் நியாயமாக இல்லையே தன்னாட்சி தன்னிறைவு கொண்ட நாட்டில் விடுதலை ஓங்கும் சுதந்திரம் மலருமென்று அமைதியான காற்றில் எதிரொலி கேட்கிறதே? காலனித்துவ சங்கிலிகளை அறுத்து எறிந்து எழுபத்தேழு நீண்ட ஆண்டுகள் இன்று நீதியின் வெளிச்சம் சமமாக வீசுகிறதா பெண்கள் தலைநிமிர்ந்து வாழ்வது எப்போ? மழலைகள் சிரித்து ஓடி விளையாட ஆபத்து நிழல்கள் மறைய வேண்டுமே அறிவியல் சிறகுகளால் எதிர்காலம் உறுதியாக சமத்துவ கல்விவாய்ப்பு என்று வருமோ? சாதியும் மதமும் பிரித்து ஆழ ஊழல் நச்சு மழையாய் பொழிய அதிகார ஆட்சியின் அயோக்கிய கரங்களில் நம் எதிர்காலம் இருளாகி மங்கிற்றோ? அடிமட்ட ஊழியர்முதல் உயர்மட்ட ஊழியர் வரை வழமையான உரிமைக்கே போராட்டம் இங்கே எரிவாயுவுக்கும் கையூட்டு வெதுப்பிக்கும் கையூட்டு நீதிக்கும் கையூட்டு சுதந்திரத்தின் விலையெதுவோ? தலைநிமிர்ந்து வாழ்ந்த ஈழ மண்ணில் அரசியலின் சிப்பாய்கள் திரண்டு அணிவகுக்க பேராசையும் வெறுப்பும் தூவி விதைக்க சிறுபான்மை சமமாக நிமிர்வது எப்போது? வெறுப்பின் நஞ்சு சிந்தும் போதனைகளும் உண்மையை நொறுக்கும் திரிக்கப்பட்ட வரலாறும் ஊடக கண்ணாடியும் உண்மையைப் பொய்யாக்க அரசியல் கருங்கூட்டத்தில் விடுதலை எப்போது? ஆலயங்கள் இடிபட்டால் நம்பிக்கை நழுவுமா காணிகள் பறிபட்டால் வாழ்வு குலையுமா குரல்கள் நசுக்கினால் உண்மைகள் முடங்குமா கயவர்களின் சங்கிலிகள் விழிப்பைத் தராதா? முடிவற்ற வாழ்வின் இரவை விடியலாக்க கனவு காண்கிறேன் இன்னும் போராடுகிறேன் வலிக்கு அப்பாற்பட்ட ஒரு ஒற்றுமைக்காக கைகள் இணைந்து உள்ளங்கள் சேராதா? வெறுப்பு தணிந்து காயங்கள் குணமாகும்போது நீதி நிலைத்து உண்மை முத்திரையிடப்படும் போது இதயங்களில் அது தினம் வாழுமே சுதந்திரம் வாழ்த்த ஒருநாள் போதுமா? சாதி மதம் மனிதனை பிணைக்காதபோது அனைவரும் மன்றாடாமல் வாழும் போது சமதர்ம சேவை வழங்கும் போது விடுதலை இதுவே என்று அழைப்போமா? நீங்களும் நானும் உணர்வுடன் எழுவோம் எங்கள் நாட்டை மகிழ்வாக வடிவமைப்போம் சுதந்திரம் என்பது ஒருநாள் கொண்டாடமல்ல நாம் நம்விதியை மாற்றிக் கொள்வோமா? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] சுதந்திர தினத்தன்று, நான் இணையத்தில் சுதந்திரம் என்ற வார்த்தையின் நேரடி அர்த்தத்தைத் தேடினேன், இதுதான் நான் அங்கு அறிந்துகொண்டது. 'தன்னாட்சி', ‘தன்னிறைவு’, தடை அல்லது கட்டுப்பாடு இல்லாமல் ஒருவர் விரும்பியபடி செயல்பட, பேச அல்லது சிந்திக்க வழிவிடும் ஒன்று ', 'அதிகாரத்தால் விதிக்கப்படும் அடக்குமுறைக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்ட நிலை', அப்படியென்றால், இலங்கைவாழ் நாம், குறிப்பாக தமிழ் பேசும் நாம், உண்மையில் சுதந்திரமானவர்களா?’ அரசியலமைப்பில் சுதந்திர நாடாக இருந்தால் போதுமா? நாம் முழு சுதந்திரத்துடன் வாழ்கிறோமா, உண்மையில் விடுதலை பெற்றோமா? நாம் சிந்திக்க வேண்டிய சில கேள்விகள் இவை ... இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் பிடியில் இருந்து நாம் விடுபட்டு இன்றுடன் 77 ஆண்டுகள் ஆகின்றன. 77 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்று எங்கே நிற்கிறோம்? நம் பெண்கள் தங்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இருந்து சுதந்திரத்தை, விடுதலையை உணர்கிறார்களா? இன்று நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? எங்கள் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் தொழிலைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் உள்ளதா? நமது மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் உயர்கல்வி பெறுகிறார்களா? சாதிப் பாகுபாட்டிலிருந்து நமக்கு விடுதலை உண்டா? நம் நாட்டில் இனவாத பதற்றத்தில் இருந்து விடுதலை கிடைத்து விட்டதா? ஊழலில் இருந்து விடுதலை கிடைத்து விட்டதா? நியாயமான மற்றும் இணக்கமான சமூகங்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக வெறுப்பு வன்முறை மற்றும் பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஊழல், குற்றவியல் அரசியல்வாதிகள் அல்லது ஊழல்வாதிகள், குற்றவியல் [கிரிமினல்] மதத் தலைவர்கள் / ஆன்மீகத் தலைவர்கள் ஆகியோரிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றிருக்கிறோமா? வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளில் இருந்து குறைந்தபட்சம் விடுதலை கிடைத்திருக்கிறதா? உங்கள் பதில் இல்லை என்றால், அடிமைப்படாத சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையை, மறுபரிசீலனை செய்ய வேண்டுமா? ஊழல் என்பது இலங்கையர்களை ஆட்டிப் படைக்கும் மற்றும் இலங்கையின் பொருளாதார அமைப்பை மோசமாக பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். நாம் சுதந்திர நாடாக அரசியல் அமைப்பில் இருந்தாலும், பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஊழலில் இருந்து விடுபட முடியவில்லை. சிறிய பியூன்கள் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரை ஊழலில் ஈடுபடும் சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். சுதந்திரம் என்றால் தன்னாட்சி [சுயராஜ்யம்] என்று பொருள் இலங்கையில் உள்ள மக்களாகிய நாம் அடிப்படை ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், போக்குவரத்து காவல்துறைக்கு, அரசாங்கத்தில் கடமையாற்றும் எழுத்தர் / பியூனுக்கும் கூட கையூட்டு [லஞ்சம்] கொடுக்க வேண்டும். எரிவாயு இணைப்பு பெறக் கூட அதே நிலைமை தான். அப்படி என்றால், இது சுதந்திரமா, நாம் உண்மையில் தனித்துவமாக இயங்குகிறோமா? சாதி, மத மற்றும் இனப் பாகுபாடு இலங்கை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மற்றொரு பெரிய சமூகத் தீமையாகும். கல்வி மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் முன்னேறிச் சென்றாலும், அரசியல்வாதிகள் மற்றும் உயர் நிர்வாக அதிகாரிகளின் ஆதரவுடன் வன்முறைகள் நம் நாட்டின் மூலை முடுக்குகளில் இன்னும் நிகழ்ந்து வருகின்றன. அப்படியானால் நாம் உண்மையில் சுதந்திரமா? சமூக-கலாச்சார, மத, மொழியியல் மற்றும் புவியியல் வேறுபாடுகளைக் கொண்ட எந்தவொரு தேசத்திற்கும் தேசிய ஒருங்கிணைப்பு இன்றியமையாதது மற்றும் நம்மைப் போன்ற ஒரு நாட்டிற்கு அது இன்னும் அவசியமானது. அதுமட்டும் அல்ல, இலங்கையில் நடக்கும் மத, இனவாத வன்முறைகள் நமக்கு பல கேள்விகளை எழுப்புகிறது. சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், இலங்கையில் இனவாத வன்முறையை நிறுத்தவும், அனைத்து குடிமக்களையும் சமமாக மதிக்கவும், நடத்தவும் வேண்டி, நாங்கள் இன்னும் போராடி வருகிறோம். நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பெருமளவிலான இலங்கையர்கள் பாடுபடுகின்ற போதிலும், இலங்கையில் சில குழுக்கள், கட்சிகள், மத அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டைப் பிரித்து ஆட்சி செய்ய இலங்கையில் செயற்படுகின்றனர். அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்காக சமூகங்கள் மத்தியில் வகுப்புவாத வெறுப்பை உருவாக்கி வருகின்றன. நமது கல்விப் பாடத்திட்டத்தில் வகுப்புவாதம் புகுத்தப்பட்டுள்ளது, வரலாறு மாற்றப்பட்டுள்ளது, அரசியல் கட்சிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் இவை அனைத்திலும் தன் குற்றவியல் பங்கை ஆற்றி வருகின்றன. தவறான மனநிலை கொண்ட சிலரின் வலையில் அல்லது ஊடகங்களின் தந்திரங்களில் நாம் சிக்கக்கூடாது. சுதந்திரமான சிந்தனையை உருவாக்குவோம் மத சகிப்புத்தன்மை, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளுவோம் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனின் கலாச்சாரம், மொழி, மதம் போன்றவற்றைப் போற்றுவோம். நான் நம் நாட்டைப் பற்றிய எதிர்மறைகளை மட்டும் இங்கு சுட்டிக் காட்டுவது என் நோக்கம் இல்லை, சுதந்திரத்திற்குப் பிறகு நாம் பல நேர்மறையான மாற்றங்களைச் சந்தித்துள்ளோம். நான் ஒரு பெருமைமிக்க இலங்கையனாக இருப்பதால், இலங்கையர்களாகிய நாம் ஒன்றுகூடி, நமது வலயங்களிலிருந்து வெளியேறி, நமது பெரிய நாடான இலங்கையை, வாழ்வதற்கு மிகச் சிறந்த அமைதியான இடமாக மாற்றப் பாடுபட வேண்டிய சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு . உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை " இந்த சுதந்திர தினத்தன்று, நமது வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த பிரச்சனைகளுக்கு எதிராக போராடி, அனைத்து வகையான அடிமைத்தனத்திலிருந்தும் நமது இலங்கையை சுதந்திரமாக்குவோம். "சுதந்திர தினம், ஒரு தேசத்தின் பிறப்பைக் கொண்டாடும் நாள். அதை சுதந்திரமாக வைத்திருக்க போராடிய, போராடிக்கொண்டு இருப்பவர்களை நினைவூட்டும் நாள் இது எனக்கு மேலான, பெருமையான ஒன்று. பிப்ரவரி நான்காம் தேதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, எந்நாளும் சுதந்திர தினமாகட்டும்! மது அல்லது போதைப்பொருளுக்கு எதிராக வெற்றி பெற்றால், அது சுதந்திர தினமாகும் துஷ்பிரயோகத்தில் இருந்து யாராவது விடுபட்டால், அது சுதந்திர தினமாகும் பாகுபாடுகளில் இருந்து ஒருவர் விடுபட்டால், அது சுதந்திர தினமாகும் வெறுப்பு வன்முறையிலிருந்து விடுபட்டால், அது சுதந்திர தினமாகும் சமத்துவமின்மையிலிருந்து விடுபட்டால், அது சுதந்திர தினமாகும் ஊழலில் இருந்து விடுபட்டால், அது சுதந்திர தினமாகும் வகுப்புவாத பதட்டங்களில் இருந்து விடுபட்டால், அது சுதந்திர தினமாகும் திரிக்கப்பட்ட புராண வரலாறு அல்லது வரலாறு தொடர்பான பொய்யான கதைகளில் இருந்து விடுபட்டால், அது சுதந்திர தினமாகும் மதத் தலைவர்களின் பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளிலிருந்து விடுபட்டால், அது ஒரு சுதந்திர தினமாகும் தவறான தொல்பொருள் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் நிலம் கைப்பற்றப்படுவதிலிருந்து விடுபடும்போது, அவர்களின் மத மற்றும் கலாச்சார இடங்களை படைகளால் ஆக்கிரமிப்பதில் இருந்து விடுபடும்போது, அது ஒரு சுதந்திர தினமாகும். எந்த சட்ட நீதி அல்லது வழக்குகள் இன்றி கைது செய்யப்பட்டு காலவரையின்றி சிறையில் அடைக்கப்படுவதிலிருந்து விடுபடும்போது, அது சுதந்திர தினமாகும். எல்லா இனங்கள் மற்றும் மத மக்களும் தங்களை தேசிய அடிமை என்ற சங்கிலிகளிலிருந்து தங்களை விடுவிக்க; "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம் எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்! [இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;" கவிதைத் தொகுப்பு / கீதாஞ்சலியில் இருந்து] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025]
எல்லோருக்கும் நன்றிகள்
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
எல்லோருக்கும் நன்றிகள்
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 12 கனவுகள்: கனவு என்பது நமக்கு வரும் நன்மையையும் கேட்டையும் உணர்த்த கடவுள் அனுப்பும் முன்னெச்சரிக்கை யாகவே (Prenomination) நம் மக்கள் நீண்டகாலமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் முதல் காப்பியம் படைத்த இளங்கோவடிகள் இதே நம்பிக்கையில், சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியின் கனவை [5 புகார்க்காண்டம் / 9 கனாத்திறம் உரைத்த கதை] விரிவாக தந்திருப்பதுடன், பாண்டிய அரசன் நெடுஞ் செழியனிடம் அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட கனவின் சகுனத்தைப் பற்றி கூறும் போது, அது உண்மை ஆவது போல அப்பொழுது அங்கு ஒரு கால் சலங்கையுடன் கண்ணகி முறையிட வந்தாள் என்கிறார். நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட, உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர். உதாரணமாக குடும்பத்தில் ஒரு பெண் சொல்லுகிறாள்: "மாமி ! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது. நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!" இதற்கு மாமி கூறுகிறாள்: "அடி, விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் பூப்பு [பெண்மை] அடைந்து அமர்வாள்! அதிலும் நீ விடியற்காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!" மேலும் ஒரு உதாரணமாக பேரன் தன் பாட்டனிடம் சொல்லுகிறான்: "தாத்தா எனக்குப் புதையல் கிடைத்தது, நான் பணத்தில் புரள்வதைப் போல்க் கனவு கண்டேன்; விழித்துப் பார்த்தால் நான் பழைய கிழிந்து போன பாயில்தான் புரண்டு கொண்டிருந்தேன்." தாத்தா சொல்லுகிறார்: "உனக்கு நோய் வரும் என தெரிகிறது." மேலும் சில கனவு பற்றிய நம்பிக்கையைப் பார்ப்போம்: "கனவு (dream) என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. "கனவு என்பது மனிதனின் தூக்கத்தில் உலாவரும் உள்மன வெளிப்பாடாகும். வேடிக்கை என்னவென்றால் கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாகத் தீயது நடக்கும் என நம்புகிறார்கள். ஆகவே கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என நம்புகிறார்கள். இது கனவு நம்பிக்கைகளுக்கு மட்டுமே உரிய சிறப்புத் தன்மையாகும். அதாவது மரணம் வருவது போன்று கனவு கண்டால் வீட்டில் நல்லகாரியம் நடக்கும் என்றும் திருமணம் நிகழ்வது போன்று கனவு கண்டால் அவ்வீட்டில் துன்பம் ஏற்படும் என்றும் நம்புகின்றனர். அதிகாலையில் கனவு கண்டால் பலிக்குமெனவும், பகலில் கனவு கண்டால் பலிக்காது எனவும் நம்புகின்றனர். அகநானூறு 141, நக்கீரர், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது "அம்ம வாழி, தோழி ! கைம்மிகக் கனவும் கங்குல் தோறு இனிய: நனவும் புனை வினை நல்இல் புள்ளும் பாங்கின! நெஞ்சும் நனி புகன்று உறையும்; எஞ்சாது" என் தோழியே உன்னை வாழ்த்துகிறேன் ,என் இரவு இனிய கனவுகளுடன் கழிந்தது, எனது பகலும் எமது அலங்காரிக்கப்பட்ட வீட்டில் நல்ல சகுனத்துடன் கழிந்தது, எனது நெஞ்சும் மிகவும் மகிழ்ச்சியுள்ளது. என் தலைவன் வருவானா? இப்படி ஒரு சங்கத் தலைவி கேட்கிறாள் . ஆனால் உண்மையில் கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது, நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள். கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். அவை நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் தான்! இதைத்தான் கிழே குறிப்பிட்ட சங்க கால உரையாடல் ஒன்றும் எடுத்து காட்டுகிறது. "கேட்டிசின் வாழி தோழி யல்கற் பொய்வ லாளன் மெய்யுற மரீஇ வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந் தமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற வளியேன் யானே" [குறுந்தொகை 30] தோழி [தலைவியை பார்த்து ]: "அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லி விட்டுச் சென்றானே. அப்படியிருக்கும் போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? " தலைமகள் [தோழியிடம்]: "தோழி! இதனைக் கேள். அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன். அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான். மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன். விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக் கொண்டிருந்தேன். வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து / சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்". இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். கனவில் மலத்தைக் கண்டால் பணவரவாம்! மாங்கல்யத்தைக் கண்டால் துன்பம் சூழுமாம்! உடலின் மேல் பாம்பு ஊர்ந்து செல்வது நல்லது. சங்க காலத்தில் வாழ்ந்த வேடுவர்கள் இதனை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர். எனவே, பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால், அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாகக் கருதலாம். எது எப்படியாயினும், இப்படியும் சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பல்லி விழுந்தாலும் பலன் சொல்வார்கள்! பல்லு விழுந்தாலும் பலன் சொல்வார்கள். ஆனால் தங்கள் பலனை மட்டும் பார்க்க மாட்டார்கள். அப்படி பார்த்திருந்தால் இப்படி வெற்றிலைப்பாக்குக்கும் ,பழந்துணிக்கும், கால்படி அரிசிக்கும் வாசலில் வந்து நம் தூக்கத்தை கலைக்க மாட்டார்கள்? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 13: " சோதிடம் தொடரும்