Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 02 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 02 / 'புத்தரின் வருகைக்கு முன்பே இலங்கையில் மனித இனம்' புத்தர் நிர்வாணம் அடைந்து, அதாவது பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகியவற்றை நீக்கி, ஞானம் அடைந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, வான்வழியாகப் பறந்து, இலங்கைக்கு தன் முதல் வருகையை நிகழ்த்தினார் என்று இந்த நூல்கள் கூறுகின்றன. ஆனால், புத்தர் எங்களைப்போல் ஒரு மனிதர், கட்டாயம் தன்பாட்டில் இலங்கைக்கு பறந்திருக்க முடியாது. பௌத்தர்கள் அதை நம்புவது அவர்களைப் பொறுத்தது. ஏனெனில் இந்தியாவில் இருந்து, புத்தருக்கு முன்பே, அனுமன் ஒரு மலையைச் சுமந்து இலங்கைக்கு பறந்தார் என்று இன்னும் பல இந்துக்கள் நம்புவது போல, அவர்களும் நம்பலாம். அவ்வளவுதான்! மற்றும்படி அது உண்மை நிகழ்வாக இருக்க முடியாது. ஆனால், இந்துக்கள் அதன் அடிப்படையில், இலங்கை தமக்கே உரிமை என்று என்றும் கோரவில்லை. 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' பக்கம் 8ல் தெளிவாகக் கூறுகிறது, 'எந்த நேரத்திலும் அவர் (புத்தர்) காசி [வராணசி / பெனாரஸ்] யில் இருந்து 250 மைல்களுக்கு மேல் செல்லவில்லை என்று குறிப்பிடுகிறது. புத்தர் பறந்து இலங்கைக்கு வந்த பயணங்கள் உண்மையற்றதுடன் வரலாற்று சிறப்புகள் கொண்டதும் அல்ல. அவரது முதல் வருகையின் நோக்கம், அந்த நேரத்தில் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த உயிரினங்களை அகற்றுவதன் மூலம், இலங்கையை மனிதர்களுக்கு ஏற்றதாக மாற்றுவதாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன், புத்தரின் காலத்தில், இலங்கையில் கோரமா [கோரமான விலங்குகள்] போன்ற இயக்கர்கள், அரக்கர்கள், போன்ற மனிதனுக்கு கீழான உயிரினங்கள் வாழ்ந்ததாகக் கூறுவது பரிதாபகரமான பொய் ஆகும். புத்தரின் வருகைக்கு முன்னர் இலங்கையில் மனித இனம் இருந்ததற்கான பல தொல்பொருள் சான்றுகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. அவைகளின் சில மாதிரிகள் கீழே தரவுள்ளேன். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், புத்தர் காலத்தில், இயக்கர், அரக்கர், பூதம் [Yakkhas, Rakkhasas and Bhutas] போன்ற உயிரினங்கள் இலங்கையில் வாழ்ந்ததாகக் கூறுவது, அறிவியல் ரீதியான பரிணாமக் கருத்துக்கு முற்றிலும் எதிரானது ஆகும். 'The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017' என்ற நூலில், சுமார் 174 செமீ (ஐந்தடி எட்டரை அங்குலம்) உயரம் கொண்ட பலாங்கொட மனிதன் சுமார் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்ததாக கூறுகிறது. அவரது எலும்புக்கூடு 1950 களில் கண்டு பிடிக்கப்பட்டது. 'The Journey of Man – A Genetic Odyssey by Spencer Wells, 2001' என்ற நூலின் பக்கம் 77 இன் படி இது உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதனுக்கு உடையது என்கிறது. 'உலகளாவிய பார்வையில் முதல் விவசாயிகள்' [‘First Farmers in Global Perspective’] என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் திரு. ஆர். பிரேமதிலகாவின் ஆய்வு கட்டுரையில்: "குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி மற்றும் நெல் சாகுபடி உள்ளிட்ட ஆரம்பகால இரும்புக் கால பண்பாட்டின் ஆரம்ப சான்றுகள், நாட்டின் புராதன நகரமான அனுராதபுரத்தில், கி.பி. 900 இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதே தாளில்; பார்லி மற்றும் ஓட்ஸின் [barley and oats] ஆரம்ப மேலாண்மை ஹார்டன் சமவெளியில் [இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஓட்டன் சமவெளி / Horton Plains] 15,500 B. C. இல் நடந்தது என்பது தெளிவாகிறது, இது விஜயனின் வருகைக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே என்பது குறிப்பிடத் தக்கது. மேலதிக குறிப்புகளுக்கு, 'The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake' என்ற ஆய்வின் கட்டுரையைக் பார்க்கவும். இது இந்தியாவின் லக்னோவில் நடந்த ‘உலகளாவிய பார்வையில் முதல் விவசாயிகள்’ என்ற தலைப்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், 18 – 20 ஜனவரி 2006 இல் இந்த கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக. பேராசிரியர் டி. டபிள்யூ. விக்ரமநாயக்கா தனது ‘விஜயனுக்கு முந்தைய விவசாயம் [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] ’ என்ற கட்டுரையில், “இலங்கையில் 300,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இருந்தன என்று கூறுகிறது. மேலும் ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தீபகற்பத்தின் [தீபகற்பம் என்பது முழுதும் நீரால் சூழப்படாமல் உள்ள நிலம். தீவு போல் தோன்றும் தீவு அல்லாதது தீபகற்பம் ஆகும்] தென்கோடி முனைக்கு நடந்து பரவியிருக்கலாம். பின்னர் ஒரு காலம் அது பிரிந்து இலங்கையாக மாறியிருக்கலாம் என்கிறது. அதுமட்டும் அல்ல, இறுதிப் பிரிவிற்குப் பிறகும், கடல் மட்டம் குறையும் போதெல்லாம் தரைப்பாலங்கள் உருவாக்கப்பட்டு, கடந்த 50,000 ஆண்டுகளில் படகுகள் மூலம் பாக்கு நீரிணை கடக்கப்பட்டு இருக்கும். எனவே தென்னிந்தியா மற்றும் இலங்கையில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய மக்களிடையே தடையற்ற மரபணு ஓட்டமும் மற்றும் பாலியல் உறவுகள் அல்லது இனப்பெருக்கம் கூட நடந்து இருக்கும். தென்னிந்தியாவின் பாம்பன் கடற்கரையில் (இது தம்பபன்னி கடற்கரைக்கு நேர் எதிரே உள்ளது. தம்பபன்னி எனும் பெயர் தாம்ரபரணி அல்லது தாம்ரவர்ணி எனும் சமற்கிருதப் பெயரிலிருந்து ஏற்பட்டதாகும். இது விஜயனும் அவனது தோழர்களும் வந்திறங்கிய இடத்தில் அவர்கள் தொட்ட மண் செப்பு நிறத்தில் அல்லது வெண்கல நிறத்தில், அஃதாவது தாமிர நிறத்தில் காணப்பட்டதனாலாகும் என அறியப் படுகிறது) இருந்த இடைக்கற்கால மக்களின் கருவிகளுக்கும் மற்றும் இலங்கையின் இடைக்கற்கால மக்களின் கருவிகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை உள்ளது. இந்த இரண்டு கடற்கரைகளிலும், முத்து குளித்தலும் மற்றும் கடல் அடியில் உள்ள உற்பத்திப் பொருட்களும் எடுக்கப்பட்டன. இலங்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் மற்றும் சங்குகள் பெரியதாக இருந்தன, இது தென்னிந்திய மக்களை இலங்கைக்கு அழைத்து வந்திருக்கலாம்? பேராசிரியர் டி. டபிள்யூ. விக்ரமநாயக்கவின் கட்டுரை, விஜயனின் வருகைக்கு முன்னர் மக்கள் இருந்ததை உறுதிப்படுத்தக் கூடிய, மேல் அதிகமான தரவுகளையும் அது வழங்குகிறது. இது தொடர்பாக 'Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake'' என்ற குறிப்பைப் பார்க்கவும். R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, தனது குறிப்பில், ‘சிங்கள மக்கள் தென்னிந்தியாவின் தமிழர்கள் மற்றும் கேரளர்களுடனும், வங்காளத்தின் உயர் சாதிக் குழுக்களுடனும், குஜராத் மற்றும் பஞ்சாப் மக்கள் தொகையை விட நெருக்கமாக உள்ளனர்’ என்கிறது. The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia , என்ற குறிப்பைப் பார்க்கவும். (இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆய்வுகளும் 1980 களுக்கு முந்தியவை என்பதால், இந்த கட்டுரை 1970 களின் நடுப்பகுதி அல்லது பிற்பகுதியில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்). வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே, 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவான, இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளை கவர்ந்த ஒரு நாடாகும். மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் தான் பல பயணிகளும், புவியியலாளர்களும், கிருஸ்துக்கு முன்பே இருந்து இலங்கைக்கு வருகை தந்தது காண முடிகிறது. உதாரணமாக, மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் ஒரு தீவை தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களை பட்சிவ்கோணி [Patcvgoni], அதாவது பாளியின் வழித்தோன்றல்கள் [“descendants of the Pali”] என குறிப்பிடுகிறார். தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக சுமாத்திராவை குறிப்பதாக சிலர் வாதிடுகின்றனர். மாதோட்டமே இலங்கையின் முதன்முதல் துறைமுகமாகும். மாதோட்டத்தின் தலைநகராக மாந்தை இருந்தது. கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான பிடோலேமி அல்லது தொலமியின் வரைபடம் [Ptolemy's map], கிருஸ்துக்கு முன், இலங்கையின் சில நகரங்களின் பெயர்களை காட்டுகிறது. உதாரணமாக, அதில் குறிக்கப்பட்ட சில இடங்களின் பெயர்கள் இன்றைய நயினாதீவு, மாந்தை அல்லது மாந்தோட்டை, திருகோணமலை, அனுராதபுரம் [ Nainativu, Manthai, Trincomalee and Anuradhapura,] என அடையாளம் காணக்கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக அவர் மாதோட்டத்தை மாதொட்டு [Modutu] என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளார். அது மட்டுமின்றி மாதொட்டு, [முன்] பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார். உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட செங்கடல் அல்லது எரித்திரேயன் கடல் செலவு / கடல் வழிப் பயணம் (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற கையேட்டில் தமிழக வட இலங்கை துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இது முத்துக்குளித்தல், மீன் பிடித்தல் ... போன்ற வேலை செய்யும் பரவர் ["Parawa"] என்னும் சமூக குழு, மன்னார் வளைகுடாவின் இந்தியாவின் ஒரு பகுதியான பாண்டியர்களின் இரண்டாவது பெரிய நகரமான கொற்கையில், முத்துக்குளித்தலை விவரிப்பதுடன், பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிடுகிறார் [refers to "Kolkhoi," which was "Korkai"], அதன் இலங்கை பகுதியான மன்னாரை அவர் எபிடோரஸ் [Epidorus] என்று குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல அங்கு பெறப்பட்ட முத்துக்கள் மட்டுமே துளையிடப்பட்டு சந்தைக்கு தயாரிக்கப்பட்டது என்றும் கூறுகிறார் [only the pearls obtained in the fishery at the island of Epidorus (Mannar) are perforated and prepared for the market]. எனவே மன்னார் வளைகுடாவின் இரண்டுபக்கமும் பரதவர், பரவர், அல்லது பரதர் கிருஸ்துக்கு முன்னரே இருந்தது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் அந்த இரு பகுதி பரவர்களுக்கும் இடையில் கட்டாயம் தொடர்பு இருந்து இருக்கும் என்பதில் ஐயம் இருக்காது. Part: 02 / 'Human occupation in Sri Lanka before the alleged visits of Buddha' The Buddha’s alleged first visit, by flying through air, to Lanka took place, as per the chronicles, nine months after his attaining Nirvana; the enlightenment. The Buddha was a human, and he could not have flown to Lanka. It is perfectly all right for the Buddhists to believe in it, as Hindus from India also believe that Hanuman flew to Lanka carrying a mountain in their Epic Ramayana. But the Hindus have never claim sole ownership over Lanka based on it as it happened as per epic, before Buddha’s alleged first visit. 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' clearly says on page 8 that ‘At no time did he (Buddha) go farther than 250 miles from Benares. Buddha’s flying visits to Lanka are not true and have no historical merits. The alleged purpose of his first visit was to make Lanka fit for men by removing the beings existed at that time. It is a pathetic lie to say that there were sub-human beings in Lanka at the time of the Buddha, about 2500 years ago. There are many archaeological evidences for the human occupation of Lanka prior to the alleged visits of Buddha, and a few samples are given below. It is against the evolutionary concept to say that sub humans like Yakkhas, Rakkhasas and Bhutas inhabited Lanka about two thousand five hundred years ago, during the time of the Buddha. 'The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017' says that The Balangoda man of about 174 cm (five feet and eight and a half inch) in height lived in Lanka about 28,000 years ago. His skeletal remains were found in the 1950s. This belongs to an anatomically modern human as per the page 77 of Reference 'The Journey of Man – A Genetic Odyssey by Spencer Wells, 2001'. Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’: “The earliest evidence of the Early Iron Age culture including horse breeding, iron production, and paddy cultivation found at Anuradhapura, ancient city of the country has been dated around 900 B. C.’. In the same paper, the author says; ‘It is clear that incipient management of barley and oats occur around 15,500 B. C. in the Horton Plains’, well before the arrival of Vijaya. See the Reference 'The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake. This paper was presented in the International seminar on the ‘First Farmers in Global Perspective’, Lucknow, India. 18 – 20 January 2006' in this regard. Prof T. W. Wikramanayake says in his article ‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’ Quote “Pre-historic settlements existed in Sri Lanka 300,000 to 40,000 years ago. Homo sapiens would have walked to the southern-most tip of the peninsula that later separated to become Sri Lanka. Even after the final separation, land bridges created whenever the sea level dropped, and crossing the Palk Straight by sea craft during the past 50,000 years would have led to an unimpeded gene flow and complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka. There is a remarkable resemblance between tools of the Mesolithic people of the Pamban coast of South India (which is directly opposite the Tambapanni Coast) and Sri Lanka. In both coasts, there were fishing for pearls and other marine products. The pearls and chanks collected in Sri Lanka were larger, and this would have brought the people of South India to Sri Lanka”. Unquote • Prof T. W. Wikramanayake’s article gives other data too to confirm the existence of people prior to the alleged arrival of Vijaya. See the Reference 'Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake' in this regard. R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, says in the abstract ‘Sinhalese population are closer to the Tamils and Keralites of South India and the upper caste groups of Bengal than they are to the populations in Gujarat and the Panjab’. See the Reference 'The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia (This paper must have been published in the mid or late 1970s as all the studies referenced in it are pre 1980s)' in this regard. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 03 தொடரும் / Will Follow
  2. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 01 / 'அறிமுகம்' தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம், மற்றும் இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) போன்ற இலங்கையின் பண்டைய காலவரிசைப்படி [Sri Lankan chronicles such as The Dīpavamsa, Mahāvaṃsa, Cūḷavaṃsa, and Rājāvaliya] நிகழ்வுகளை பதிவு செய்த புராண நூல்களின் அடிப்படையில், சிங்கள பௌத்தர்கள் தங்களை இலங்கைத் தீவின் உண்மையான உரிமையாளர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். எனவே தீபவம்சம், மகாவம்சம் மற்றும் இராசாவலிய போன்ற அந்த நூல்களின் வழியாகச், உண்மையை அறிவியல் ரீதியாகவும் சான்றுகள் ரீதியாகவும் அலசி, நியாயமான காரணங்களைக் கண்டறிவதே இந்த நீண்ட கட்டுரையின் நோக்கமாகும். மேலும் பல புத்தகங்கள் இன்று இருந்தாலும், நேரத்தையும் இடத்தையும் மிச்சப்படுத்த இந்த மூன்று பண்டைய முதன்மை புத்தகங்கள் மட்டுமே இங்கு கருத்தில் எடுக்கப் பட்டுள்ளது. மற்றவை எல்லாம் அவையின் தொடர்ச்சியே அல்லது பிரதிகளே, என்றாலும் சில சில கூடுதல் சேர்த்தல் அல்லது விடுபட்டலுடன் எழுதப்பட்டவை ஆகும். சிங்கள பௌத்த அரசியல்வாதிகள், பிக்குகள் (புத்த குருமார்கள்) மற்றும் கல்வியாளர்கள், 1920 களில் இருந்து, இலங்கையின் உண்மையான வரலாற்றின் நூலே மகாவம்சம் என மேற்கோள் காட்டி, பண்டைய இலங்கைத் தமிழர்களின் மற்றும் தமிழ் மொழியின் வரலாற்றை மறைக்க முற்படுகிறார்கள். தீபவம்சமும் மகாவம்சமும் விஜயனின் புராண வருகையிலிருந்து மகாசேனன் (பொ.பி. 277 - 304) மன்னனின் ஆட்சியின் இறுதி வரை ஒரே எண்ணிக்கையிலான மன்னர்களை உள்ளடக்கி உள்ளது. என்றாலும் இங்கு சம்பந்தப்பட்ட காலம், மகாவம்சத்தின்படி சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து ஆண்டுகள் மற்றும் தீபவம்சத்தின்படி எண்ணூற்று முப்பத்தேழு ஆண்டுகள் ஆகும். எனவே அந்த வேறுபாடு ஒரு பிரச்சனையும் இல்லை. மேலும் இராசாவலிய நீண்ட காலத்தை உள்ளடக்கியிருந்தாலும், மன்னன் மகாசேனனனின் ஆட்சியின் முடிவு மட்டுமே இங்கு நாம் கவனம் செலுத்த உள்ளோம். சூளவம்சம் அல்லது சூலவம்சம் (Cūḷavaṃsa) என்பது மகாவம்சத்தின் தொடர்ச்சி ஆகும். இதுவும் பாளி மொழியில் தான், சிங்கள மொழியைத் தவிர்த்து எழுதப்பட்டது ஆகும். இந்நூல், கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி குறிப்பிடுகிறது. எனவே இங்கு ஆழமாக அது அலசப்பட மாட்டாது. என்றாலும் அது தேவைப்படும் போது அல்லது பொருத்தமானதாக இருக்கும் போது, அதுவும் கவனிக்கப்படும். எனவே தீபவம்சம் மற்றும் மகாவம்சம் மற்றும் அதே காலகட்ட இராசாவலியில் மட்டுமே முதன்மையாக இங்கு கவனம் செலுத்தப்படும். தீபவம்சம் கிருஸ்துக்கு பின் நான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் முதல் மூன்றாவது பகுதியில், பெயர் அறியப்படாத எழுத்தாளரால் தொகுக்கப்பட்ட நூலென நம்பப்படுகிறது. அதேவேளை, தீபவம்சம் தொகுக்கப்பட்டு சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் மகாவம்சம், மகாநாமா தேரர் என்ற ஆசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் தீபவம்சம் கொச்சை பாளி மொழியிலும் மகாவம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாளி வசனங்களிலும் உள்ளது. உண்மையில், மகாவம்சமானது தீபவம்சத்தை ஒரு சிறந்த இலக்கிய பாணியுடன், விரிவுபடுத்தப்பட்டு, செறிவூட்டப்பட்டு, மறுசீரமைத்த, அதே நேரம் பல கதைகளை அல்லது வேறுபாடுகளை புகுத்திய ஒரு நூல் என்றும் கூறலாம். தீபவம்சத்தில் முக்கியமானவர்கள் தேவநம்பிய திஸ்ஸ அல்லது தேவநம்பிய தீசன் மற்றும் மகிந்த தேரர் ஆகியோர் காணப்படுவதுடன், அங்கே ஒப்பற்ற மன்னனாக எல்லாளன் காணப்படுகிறார். இருப்பினும், மகாவம்சத்தின் முக்கிய ஆளுமை உள்ளவராக துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி இருப்பதுடன், இங்கும் எல்லாளனை சிறந்த முறையில் சித்தரிக்கப் படுகிறது. என்றாலும் எல்லாளனை, துன்மார்க்கமாக அல்லது தீய நெறியில் ஆட்சி செய்ததாக இராசாவலிய கூறுகிறது. இராசாவலிய சமீபத்திய 17 ஆம் நூற்றாண்டு வரலாற்று தொகுப்பாகும். மேலும் இது விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் (கி பி 1701) எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றி தொடர்ச்சியாக எழுதப்பட்ட இலக்கிய மூலாதாரமான இது, சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பகுப்பாய்வின் நோக்கம், ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று நாளாகமங்களின் தொனி மற்றும் உள்ளடக்கங்கள் [tone and contents], தீபவம்சத்தில் உள்ள தூய பௌத்த ஆர்வம் அல்லது விருப்பத்திலிருந்து, ராஜவலியத்தில் காட்டப்பட்டுள்ள தமிழர்களின் இறுதி வெறுப்புக்கு எவ்வாறு மாறின என்பதைக் காண்பிப்பதாகும். மகாவம்சம் சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டு காலப்பகுதியில், அதாவது சுமார் 300 கி.பி. முதல் 1700 கி.பி. வரை, இரண்டிற்கும் இடையில், தொனியின் மாற்றத்தின் அறிகுறியை வெளிப்படையாக காட்டுகிறது. எனவே இங்கு எமது முக்கிய நோக்கம், இவ்வற்றை, அங்கு காணப்படும் உண்மையை அலசுவதேயாகும் அல்லது வெளிப்படுத்துவது ஆகும். தீபவம்சமும் மகாவம்சமும் அத்தியாயங்களாகவும் அத்தியாயங்கள் செய்யுள் வசனங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தீபவம்சம் 1-1 தீபவம்சத்தின் அத்தியாயம் 1 இன் செய்யுள் வசனம் 1 ஐக் குறிக்கிறது. அது ; "புத்தர் இலங்கைக்கு வருகை தந்ததையும், புத்தரின் நினைவுச்சின்னம் மற்றும் அரச மர [போதி மர] கிளை இலங்கைக்கு கொண்டுவந்ததையும், மறுபரிசீலனை செய்த ஆசிரியர்களின் கோட்பாடுகளையும், தீவில் நம்பிக்கையைப் பரப்புதலையும், மனிதர்களின் தலைவரின் வருகையையும் அவ்வாற்றின் வரலாற்றையும் நான் முன்வைப்பேன்." என்கிறது. மகாவம்சத்திலும் இதே போன்ற அமைப்பே உள்ளது. இந்த முதன்மை மூன்று நாளேடுகளிலும் அவற்றின் உண்மைத்தன்மை, வரலாற்று மதிப்பு மற்றும் அவற்றுக்கிடையேயான ஒவ்வுமை அல்லாது இசைவு ஆகியவற்றினை ஒப்பிடப்பட்டு, வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, கீழே என் கருத்துக்களை நேர்மையாக பதியவுள்ளேன். Part: 01 / 'Introduction' Sinhala Buddhists claim themselves as the rightful owners of the island of Lanka based on their ancient chronicles like the Dipavamsa, the Mahavamsa, the Culavamsa, and the Rajavaliya etc. It is intended to go through the Dipavamsa, the Mahavamsa, and the Rajavaliya to see any valid reasons with consistent narratives for the rightful ownership of Lanka to the Sinhala Buddhists alone. There are other books too, but only these three books are considered here to save time and space. The Sinhala Buddhist politicians, monks (bikkhus) and academicians played havoc in the life of Tamils since 1920s citing the Mahavamsa as the beginning and the continuation of the true history of Ceylon. The Dipavamsa and the Mahavamsa cover the same number of kings, from the legendary arrival of Vijaya to the end of the reign of the king Mahasena. The period involved is about eight hundred and thirty five years as per the Mahavamsa and eight hundred and thirty seven years as per the Dipavamsa. Though the Rajavaliya covers longer period, the focus will be limited to the end of the rule of the king Mahasena. The Culavamsa is the continuation of the Mahavamsa and therefore will not be deeply analysed here but we may refer to it when it is necessary or relevant. The focus will be therefore on the Dipavamsa and the Mahavamsa, and the same period in the Rajavaliya. The Dipavamsa is the earliest and believed to be compiled between the beginning of the fourth century A. D. , and the first third of the fifth century A. D., and by an unknown author. The Mahavamsa is compiled about one hundred to one hundred and fifty years after the compilation of the Dipavamsa, and Mahanama is the author. The Dipavamsa is in crude Pali language, but the Mahavamsa is in choice Pali verses. The Mahavamsa is conscious and intentional rearrangement of the Dipavamsa with a better literary style with much enlarged and enriched details, whether factual or not. The important personalities in the Dipavamsa are Devanampiya Tissa and Mahinda Thera. The incomparable monarch as per the Dipavamsa is Elara. However, the prominent personality in the Mahavamsa is Dutthagamani. The Mahavamsa also depicts Elara in excellent terms. The Rajavaliya, however, says Elara ruled wickedly. The Rajavaliya is a very recent compilation, and covers the period from the legendary arrival of Vijaya to the end of the reign of Wimala Dhamma Suriya (1701 A.D.). The aim of the analysis is to show the transition of the tone and contents of the three chronicles of the same period from the pure Buddhist interest or desire in the Dipavamsa to the ultimate hatred of the Tamils shown in the Rajavaliya. The Mahavamsa is falling in between the two over the period of about one thousand and four hundred years, from, say, about 300 A. D. to 1700 A. D. The Dipavamsa and the Mahavamsa are divided into chapters and the chapters are divided into verses. Two numbers separated by hyphen are used to refer to a particular verse in a particular chapter. Thus, 2-7 makes reference to the verse seven of the chapter two. When a reference is made thus 4-36 to 39, it refers to the verses 36 to 39 of the chapter 4. Dipavamsa 1-1 refers the verse 1 of the chapter 1 of the Dipavamsa; ”I will set forth the history of Buddha’s coming to the Island, of the arrival of the relic and the Bo, of the doctrine of the teachers who made the recensions, of the propagation of the faith in the Island, of the arrival of the chief of men”. Similar reference is adopted for the Mahavamsa too. The Rajavaliya is not in the metric form, and the previously mentioned reference is not applicable. Summaries of the Dipavamsa, the Mahavamsa and the Rajavaliya are given separately as Appendixes to this chapter, which may be referred for specific and greater detail. All the three chronicles are compared, contrasted and commented below for their truthfulness, the historical value, and the consistency among them. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 02 தொடரும் / Will follow
  3. திரு. கந்தையா ஈஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறலும் "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" யும் முடிக்கப்படாத வரலாற்றுப் புத்தகமான "இலங்கை வரலாறு" எனது மறைந்த நண்பரும், அர்ப்பணிப்புள்ள சுயாதீன ஆராய்ச்சியாளரும் மற்றும் கட்டிட பொறியியலாளருமான திரு. கந்தையா ஈஸ்வரனின் வாழ்நாள் படைப்பாகும். அவர் இதற்காக பல நாட்களையும் மணித்தியாலங்களையும் செலவழித்து, உலகம் முழுவதும் இருந்து அரிய நூல்கள், ஆவணங்கள், சான்றுகள் என்பவற்றைச் சேகரித்து, 10–12 ஆண்டுகள் மிகுந்த ஈடுபாட்டுடன் இதை எழுதியவர் ஆவார். நாங்கள் இருவரும் யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் இணைந்து கல்வி பயின்றோம். புராணக் கதைகள் மற்றும் இதிகாசங்களின் வரலாறுகளின் கண்ணோட்டத்தைத் தவிர்த்து, வரலாற்று உண்மை, தொல்லியல், அறிவியல் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையின் உண்மையான வரலாற்றை வெளிக்கொணர்தலே அவரது மூல நோக்கமாக இருந்தது. 2024ம் ஆண்டு ஜூன் 15ம் நாள், கனடா ஸ்கார்பரோவில் அவர் திடீரென இயற்கை எய்தியபோது, ஏற்கனவே ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். அதில் 110 பக்கங்களைக் கொண்ட அத்தியாயம் 2: “இலங்கை நாளாகமம்” மிக முக்கியமானதாகும். இந்த அத்தியாயத்தில், தீபவம்சம், மகாவம்சம், மற்றும் இராசவலிய ஆகியவற்றின் உண்மை மற்றும் பிழைகள், நேர்த்தியான ஒப்பீடு, மற்றும் வரலாற்று அடித்தளங்களை வைத்து ஆராயப்படுகிறது. அவரது கருத்து மற்றும் எழுத்து பாணியை முழுமையாக தமிழில் அப்படியே கொண்டு வருவதுடன், மேலும் பல தரவுகளைச் அல்லது விளக்கங்களைச் சேர்த்து விரிவுபடுத்திய தமிழாக்கத்தை அவரது முதல் ஆண்டு நினைவு நாளில் (15.06.2025) இருந்து, அவருக்கான பணிவான அஞ்சலியாக, 120 க்கு மேற்பட்ட பாகங்களில், ஒழுங்கான கால இடைவெளியில், பதிவிட உள்ளேன். இந்த பணிவான முயற்சி, இலங்கையின் சிக்கலான, பல்லின வரலாற்றை நேர்மையுடனும் துணிச்சலுடனும் வெளிச்சம் போட்டுக் காட்ட பாடுபட்ட ஒரு அர்ப்பணிப்புள்ள அறிஞரான எனது மறைந்த நண்பருக்கு ஒரு உண்மையான அஞ்சலியாக அமையும் என்று நம்புகிறேன். 🔹 2025ம் ஆண்டு ஜூன் 15ம் தேதியிலிருந்து, திரு. கந்தையா ஈஸ்வரனின் அத்தியாயம் 2: “இலங்கை நாளாகமம்” எனும் விரிவாக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு தொடராக வெளியிடப்படும். வெளியீடுகள் பின்வரும் தளங்களிலும் மற்றும் சிலவற்றிலும் தொடர்ச்சியாக வெளியிடப்படும் In Loving Memory of Civil Engineer, Mr. Kandiah Easwaran (15.06.2025) & "A look at 'Lanka chronicles' from a scientific perspective" The unfinished historical book "History of Sri Lanka" was the life’s work of my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer by profession and a dedicated independent researcher. He spent nearly 10 to 12 years compiling this comprehensive work, drawing from numerous rare references gathered from both Sri Lanka and across the world. Mr. Easwaran and I were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. His aim was to write a historically accurate account of Sri Lanka — not through the lens of mythical puranas and epics, but through real historical facts and critical inquiry. By the time of his sudden passing on 15th June 2024, in Scarborough, Canada, he had completed seven chapters of the book. His analysis challenged long-held beliefs based on Sinhala Buddhist chronicles such as the Dipavamsa, Mahavamsa, Culavamsa, and Rajavaliya — evaluating them against archaeological, historical, and scientific evidence. As a tribute on his first death anniversary (15th June 2025), I have translated Chapter 2 of his manuscript, which consists of 110 pages, titled “Ceylon Chronicle”, into Tamil. The chapter examines the truth and falsity of these chronicles by comparing their narratives, internal inconsistencies, and factual basis. The focus is especially on the period from the mythical arrival of Vijaya up to King Mahasena, as described in Dipavamsa, Mahavamsa, and Rajavaliya. While preserving Mr. Kandiah Easwaran’s original writing, I have also expanded it with additional verified facts and references, resulting in more than 120 parts, which will begin to be posted as a humble tribute to him starting on his first anniversary (15.06.2025) I hope this humble effort stands as a sincere tribute to my late friend — a committed scholar who strove to illuminate the complex, multi-ethnic history of Sri Lanka with integrity and courage. 🔹 From 15th June 2025 onwards, the expanded Tamil translation of Mr. Kandiah Easwaran’s Chapter 02: Ceylon Chronicle — likely in over 120 parts — will be published periodically on the following platforms & few more platforms: என் வலைப்பதிவு / My blog: "A DROP IN THE OCEAN/கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam – https://www.facebook.com/groups/978753388866632/ எனது தனிப்பட்ட முகநூல் / My Facebook [Kandiah Thillaivinayagalingam] பக்கம்: https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam அறிவார்ந்த தேடல் குழு / Arivaarndha Thedal Group: https://www.facebook.com/groups/266620958015518/ யாழ் இணையம் / Yarl Inayam Website: https://yarl.com "தேடலின் தீபம் நீயே!" ஒருஆண்டு கடந்தாலும் இன்னும் வாழ்கிறீர்கள் ஒவ்வொருபக்கமும் பொழியும் சிந்தனைத் துளிகளில்! கட்டிடக் கலைஞனாக அறிஞரின் ஒளியாக இருட்டுக்கு அப்பால் உண்மையைத் தேடினீர்களே! புராண மறைக்கும் பொய்கள் மறைய கட்டுக்கதைகளை உதைத்து தள்ளினீர்கள்! புகழுரை தவிர்த்து உரிமையை உயர்த்த கடந்த காலத்தை தெளிவாக மாற்றினீர்களே! புத்தகம் ஓயவில்லை குரல் மடியவில்லை உங்கள் வரிகளில் நீங்கள் வாழ்கிறீர்கள்! சிதறிய துளிகளிலிருந்து கடல் அகலம் வரை உங்கள் உண்மையை எடுத்துச் செல்வோமே! நீங்கள் மறைந்த முதல் ஆண்டில் உங்கள் பார்வை வலிமைபெற்று நடக்கட்டும்! A year has passed, yet you remain, In every page, in thought and name. A civil hand, a scholar’s light, You sought the truth, beyond the night. With ancient scrolls and reason’s fire, You questioned myths, climbed ever higher. Not for fame, but for the right, To make the past more clear, more bright. Your chapters paused, your voice is still, But in your work, you live and will. From scattered drops to ocean wide, We carry forth your truth with pride. On this first year since you have gone, Your vision, strong, still marches on. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  4. பிறந்த நாள் நினைவு கூறல்: 'திரு வீரகத்திப்பிள்ளை கணபதிப்பிள்ளை கந்தையா' (11/06/1907 – 18/02/2000) பிறந்த நாள் இன்று உங்களுக்கு அப்பா நெஞ்சினாலே உங்கள் நினைவு மலர்கிறதே! பிறந்தாலும் மறைந்தாலும் நீங்கள் வாழ்கிறீர்கள் எங்களுள் எப்போதும் தீபமாய் ஒளிர்கிறீர்களே! சாமக்கோழி கூவும் போது எழுந்தீர்கள் நல்லூர் கந்தனை வணங்க சென்றீர்களே! வெள்ளைவேட்டி கட்டி சால்வை அணிந்து நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நடந்தீர்களே! சாவும் வரை சளைக்காமல் உழைத்தீர்கள் சாதாரண வாழ்க்கையையும் இனிமை ஆக்கினீர்களே! உண்மையைச் சொன்னீர் உன்னதமாய் வாழ்ந்தீர் ஒப்பில்லா மகத்துவம் உங்களிடம் இருந்ததே! சான்றோரை மதித்தீர் கற்றோரை போற்றினீர் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறீர்களே! உங்கள் பெயரில் புகழும்பாசமும் ஒளிர்கிறது நம் இருதயத்தில் தெய்வமாக குடிகொண்டவரே! ஒலிக்காத மௌனத்திலும் உங்களைக் காண்கிறோம் முதுமையின் மென்மையில் உங்களை உணர்கிறோமே! இப்பிறந்த நாளில் உங்களை வணங்குகிறோம் உயிருடன் வாழ்ந்த பாதையை நினைவில் கொள்கிறோமே! - கந்தையா குடும்பம் - Birthday Memoriams: Mr. Veerakathipillai Kanapathipillai Kandiah (11/06/1907 – 18/02/2000) Today we mark your day of birth, Though you’ve long returned to earth. Your voice still echoes in our soul, A guiding light, a steady goal. You rose each dawn with humble grace, To bow before Lord Nallur’s face. With dhoti draped and shawl in hand, You walked with strength across the land. You labored on without complaint, With honest heart, a life so quaint. You taught us truth, you lived it too, A soul so rare, a heart so true. You honored wisdom, revered the wise, In every act, your greatness lies. Today, in thought, you stand so tall, A simple man — yet God to all. No throne, no crown, no worldly fame, Yet love and honor bless your name. We miss your steps, your silent power, Your memory blooms in every flower. Oh Appa, your journey now divine, Still shapes this little life of mine. On your birthday, we bow our head, To the life you lived, the path you led. - Kandiah family -
  5. 🕊️ பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கம் (08.06.2025) பதினெட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் உன் நினைவுகள் நெஞ்சில் என்றும் வாழுமே! கந்தர்மடம் ஆத்திசூடியில் அவதரித்த தேவதையே ஆசிரியரின் பாசத்தில் உருவான அழகு ஓவியமே! வேம்படி பள்ளியின் அறிவு விளக்கே உயிரியல் பாடத்தில் ஒளிர்ந்த பெதுமையே! இருபத்தாறு வயதில் மணமகளாய் மலர்ந்து அத்தியடியின் மருமகளாய் வலதுகால் பதித்தாயே! யாழின் நினைவுடன் இங்கிலாந்து சென்றாய் விதியை வென்று, வாழ்வை வளமாக அமைத்தாய்! தமிழும் ஆங்கிலமும் சமநிலையில் போற்றினாய் பழமை புதுமையைச் சேர்த்து பூந்தோட்டமானாய்! மூன்று மழலைகளின் அன்புப் பாசத்தாயே கருணையும் அறிவும் வாரி அளித்த குருவே! நடனம், இசை, விளையாட்டு அனைத்தையும் படிப்புடன் சேர்த்து ஊட்டி வளர்த்த மடந்தையே! ஓயாது உழைத்து, சோராது சமைத்து பசுமை வீடாய் குடும்பத்தை நிமிர்த்தினாயே! அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த உன் வழிகாட்டலில் பிள்ளைகள் ஒளிர்ந்தனவே பெருமைகள் சேர்த்தனவே! குடும்ப மரத்தில் இன்று எட்டு மொட்டுகள் அவர்களது சிரிப்பிலும் நீயே உறைந்திருக்கிறாய்! ஒவ்வொரு புன்னகையிலும், ஒவ்வொரு கண்ணீரிலும், உன் புகழ் நிழலாக நெஞ்சங்களை நனையச் செய்கிறதே! பதினெட்டு ஆண்டுகள் பறந்து விட்டாலும், நினைவுகள் நிலவாய் நம் வாழ்வை நிறைத்தவளே! இதயத்தில் என்றும் அணையாத தீபமே எம் ஆண்டவனாய் இன்று உன்னையே வணங்குகிறோம்! - தில்லைவிநாயகலிங்கம் குடும்பத்தனர் - 🕊️ In Loving Memory of Mrs. Jeyakumary Thillaivinayagalingam (08.06.2025) Eighteen years have come and gone, Yet your light still lingers on. Born in Kandarmadam’s gentle air, To teach and lead was your family’s care. Vembadi’s halls knew your name, In bioscience, you rose to fame. At twenty-six, you joined your hand, With an engineer from Athiady’s land. From Jaffna’s soil to England’s shore, You built a life, and so much more. With heart and hope, you learned anew, A tongue, a world — yet stayed so true. Three young lives you shaped with grace, Gave them strength, a grounded place. Books, dance, keys and strings, You taught them joy in many things. A mother, guide, a soul so bright, You worked by day, loved through the night. Not once you paused to claim your due, Your children rose because of you. Now eight sweet buds bloom from your tree, Your spirit lives in their melody. Though you have gone, we feel you near, In every smile, in every tear. Eighteen years, and still you shine, Our love for you, a sacred line. Forever missed, forever dear, Your memory blossoms year by year. - Thillaivinayagalingam's Family -
  6. "சாம்பலாகிய யாழ் பொது நூலகமும் [01/06/1981] காதலும்" 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண கோடையின் ஈரப்பதமான அரவணைப்பில், ஆனந்த் என்ற கூச்ச சுபாவமுள்ள, கண்ணாடி அணிந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பிரமாண்டமான யாழ்ப்பாண பொது நூலகத்தின் சாளரத்தின் அருகில் நின்று, வெளியே, தான் படித்த பாடசாலை, யாழ் மத்திய கல்லூரியையும், தான் விளையாடிய அதன் மைதானத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். ஆனால், அவன் விரல்கள் நீலத் துணியால் கட்டப்பட்ட, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில், எழுதப்பட்ட, சிங்கள மற்றும் தமிழர் வரலாற்றின் நெருங்கிய தொடர்புகளையும் யாழ்ப்பாணத்தின் பெருமையையும் அதன் பாரம்பரியத்தையும் வரலாற்று ரீதியாக கூறும் 'யாழ்ப்பாண வைபவமாலை' என்ற புத்தகத்தின் விளிம்புகளைப் மகிழ்வுடன் தேடின. அதில் அவனுக்கு ஒரு மகிழ்வு! பல பண்டைய தமிழர் மற்றும் இலங்கைத் தமிழர் வரலாற்று நூல்களை வாசித்த அவனுக்கு, இதையும் வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுவது இயற்கைதானே! என்றாலும் அது உசாத்துணை அல்லது குறிப்பு பகுதியில் இருப்பதால், அங்கிருந்து தான் வாசிக்கவேண்டும். அது தான் அவனுக்கு பிரச்சனையாக இருந்தது. தமிழர் பண்பாட்டு மரபின் பெருமையை பிரதிபலிக்கும் திராவிட மற்றும் கிழக்கத்திய கலையின் ஒருங்கிணைப்புடன் கட்டப்பட்டு வெள்ளை வர்ணத்தில் ஒளிரும் அதன் முகப்புடன் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட தூண்கள் மற்றும் பரந்த வளைந்த நுழைவுகள் கொண்ட நுழைவாயில், துல்லியமாக வடிவமைக்கப்பட்ட மரக்கதவுகள் மற்றும் முல்லை இலைகள், வளைந்த அலங்காரங்கள் மற்றும் நுணுக்கமான மலர் வடிவ சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட, கோரிந்திய தூண்கள் (Corinthian Columns) கொண்ட பெரிய படிகளால் அலங்கரிக்கப்பட்டு, உயரமான சாளரங்கள், நுட்பமான மர வேலைப்பாடுகள், வெளிச்சம் நிறைந்த உள்வடிவமைப்பு, வாசகர்களுக்கு ஒரு அமைதியான வாசிப்பு சூழலை வழங்கும் அந்த பெருமைமிக்க நூலகத்திற்குள், அவன் யோசித்துக் கொண்டு நின்றான். நூலகத்தின் உள்ளே, 97,000 நெடுங்கால அரிய நூல்கள், பண்டைய கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள், பத்திரிகைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு இருந்தன. தரையில் பிரதிபலிக்கும் அளவுக்கு மென்மையாகப் மெருகேற்றப்பட்ட பளபளப்பான தரை, மேற்கூரை வழியே மெல்லிய ஒளியை உள்வாங்கும் திறமையான கட்டமைப்புடன் இருந்தது. நூலகத்தின் மையத்தில் பெரிய குவிமாடம் (குவிந்த கூரை / dome) அமைக்கப்பட்டிருந்தது, தமிழர் அறிவு மற்றும் பண்பாட்டு பெருமையின் சின்னமாக அது உயர்ந்து காட்சியளித்தது. கட்டிடத்தைச் சுற்றிய வளவில் [நிலத்தில்] பரவி வளர்ந்த மல்லிகைப் பூக்களின் மென்மையான நறுமணத்துடன் பழங்கால நூல்களின் மெல்லிய வாசனையும் அவ்விடத்தை நிரப்பியது. இது ஒரு புனிதமான தலமாகவும் கனவுகளின் பீடமாகவும் இருந்தது. முதிர்ந்த பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கவனமாக பட்டியலிடப்பட்ட புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையில், தமிழர் வரலாறு அங்கு கிசுகிசுத்துக் கொண்டு இருந்தன. அந்த கிசுகிசு அவன் காதில் கேட்டுதோ என்னவோ, வேம்படி மகளீர் பாடசாலை உயர்வகுப்பு மாணவி மாலினியின் கிசுகிசுப்பு மட்டும் அவனுக்கு கேட்டது. அவன் திரும்பி பார்த்தான். அவள் இன்னும் பள்ளி சீருடையுடனே, எதோ ஒரு ஆய்வில், உதவி நூலகர் சயந்தியுடன் அலசிக்கொண்டு இருந்தாள். அவன் அங்கே மெல்லச் சென்று, எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டான். அவளும் ஆமாம் என்று, சி. கணேசையார் 1939 ஆம் ஆண்டில் வெளியிட்ட "இலங்கைத் தமிழ்ப் புலவர்களின் வரலாறு" என்ற நூலில், பக்கம் ஆறில், நல்லூர் சரஸ்வதி மகாலயம் நூலகம் ஒரு சிங்கள அரசன் மூலம் தீ வைத்து எரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருப்பது பற்றிய செய்தியின் உண்மைத்தன்மை பற்றிய விளக்கம் கேட்டாள். இது பதின்மூன்றாம் நூற்றாண்டளவில், யாழ்ப்பாணத்தில் நல்ல நிலையில் செயற்பட்டது என்றும், இந்த நூலகத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய நூல்கள் காணப்பட்டன என்றும், தற்போது நாயன்மார்கட்டு என அழைக்கப்படும் இடமே முன்னர் சரஸ்வதி மகாலயம் இருந்த இடமென என்றும், அறியப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும். அப்பத்தான் அவன், அவளை நெருக்கமாக அருகில் பார்த்தான். ஒரு சிங்கள அரசன் நெருப்பு வைத்தானோ இல்லையோ, அல்லது போர்த்துக்கீசர் 17ஆம் நூற்றாண்டில் இதைச் செய்தனரோ இல்லையோ, இப்ப அவன் நெஞ்சத்தில், அவள் ஈவுஇரக்கமின்றி நெருப்பு வைத்துவிட்டாள்! அவன் இதயம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது!! அழகிய கண்களை ரசிப்பதாலும், அழகிய கண்களுடைய பெண்களை வர்ணிப்பதாலும் தான் நான் என் பெயரை கண்ணதாசன் என மாற்றிக் கொண்டேன் என்றான் ஒரு கவிஞன். இவனோ அதைவிட ஒரு படி மேலே போய்விட்டான். காலுக்கு கீழ் பஞ்சு போல ஒரு உணர்வு, கொஞ்சம் சலங்கைச் சத்தம், மிதப்பது போல் உணர்வு, ஏன், பிரபஞ்சமே காதலியாக மாறி விட்டது, அவ்வளவுக்கு காரணம் சுட்டும் விழிச்சுடர்களான, அந்த அழகிய, அவளின் காந்தக் கண்கள்தான்! ”நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை தாக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன, வீக்கிய கணை கழல் வீரன் செங்கண்ணும் தாக்கணங் கணையவள் தனத்தைத் தைத்ததே..!” மாலினியின் வேல் போன்ற கண்கள் ஆனந்த்தின் அகன்ற தோளில் நிலைத்து நிற்க, ஆனந்த்தின் கண்கள் மாலினியின் தனங்களைத் தைத்து நின்றன, வாய்கள் பேசவில்லை, கேள்வியும் மறுமொழியும் மறைந்து விட்டன. விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தது போன்ற ஒரு பிரமையில் இருவரும் மௌனமாக நின்றனர். சயந்தி, ஒரு புன்முறுவலுடன் தன் வேலையைக் கவனிக்க அங்கிருந்து அகன்றுவிட்டாள்! அமைதியான, அழகான மாலினியின் சந்திப்பு முன்னறிவிப்பு இல்லாமல், அவனது உலகத்தைத் திருப்பிய அச்சாக மாறியது. அவள் அடிக்கடி உயரமான, வளைந்த ஜன்னல்களுக்கு அருகில், பிந்திய மதியம் பாடசாலை முடிய இரண்டு மணித்தியாலம் அளவு, தனது வேம்படி பாடசாலைக்கு அருகிலேயே அமைந்து இருக்கும் யாழ்ப்பாண பொது நூலகத்தில், தன் தந்தை யாழ்ப்பாண மாநகரசபையில் வேலை முடிந்து வரும் வரை, அங்கு படிப்பது வழமை. அப்படியான ஒரு நாள் தான் அது. அவள் எனோ விடையை அறியாமலே, தான் முன்பு இருந்த இடத்தில் போய் அமர்ந்துவிட்டாள். அவளுடைய நீண்ட சடை அவள் தோளில் பட்டும் படாமலும் விழுந்து இருந்தது. அவளுடைய உதடுகள் தனக்குள் பழங்கால வசனங்களை முணுமுணுப்பது போல் அமைதியாக எதோ சொல்லிக் கொண்டு இருந்தது. ஆனால், சத்தம் வரவில்லை! யாழ்ப்பாண பொதுநூலக உசாத்துணை பகுதிக்கு அடிக்கடி வருவது ஒரு பிரச்சனையாக முன்பு நினைத்தவன், இப்ப தவறாமல் ஓய்வு கிடைக்கும் பொழுது வரத் தொடங்கி விட்டான். ஒருநாள், எதிர்பாராத மழையால் அவர்களின் முதல் உண்மையான உரையாடல் தொடங்கியது. அன்று மாலினியின் பொன் நிற உடல், அவளின் வேம்படி கல்லூரி சீருடையின் வெண்ணிறத்துடன் இணைய, மருட்சி தேங்கி நின்ற அவளின் விழிகள் அலைபாய, இரட்டைப் பின்னல்கள் அவளது நடையின் சீரான தாளப் போக்கிற்குப் ஏற்ப அசைந்தாட, பாடப் புத்தகங்களை மார்புக்கு நேராகப் பிடித்துக் கொண்டு அவள் நடந்து வந்த அழகு அப்படியே அவன் மனதில் எதோ ஒன்றைத் தோற்றுவித்தது. என்றாலும், அதை வெளியே காட்டாமல், ஆனால், அவளை இலகுவாகப் பார்க்கக் கூடியதாக அமர்ந்தான். இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தருகுதே! சக்கர தோடு கழுத்தைத் தொட சடை பின்னல் அவிழ்ந்து விழ சலங்கைக் கால் இசை எழுப்ப சங்காரம் செய்யுதே இள நகை! சங்கீதம் பொழியும் அவள் குரல் சந்தனம் மணக்கும் அவள் உடல் சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து சங்கடம் தருகுதே அவளின் பார்வை! மாலினி ஒரு குறிப்பிட்ட நூலைத் தேடும் அவசரத்தில், தனக்கு அருகில் இருந்த சாளரத்தை எட்டி மூட எத்தனிக்கும் பொழுது, மறுகையில் இருந்த சில புத்தகங்கள் நழுவப் பார்த்தன, அதற்குள் சில மழைத் துளிகள் உள்ளே விழுந்துவிட்டன. விலைமதிப்பற்ற அந்த நூல்கள் ஈரமான கல் தரையைத் தொடமுன், ஆனந்த், அவள் பக்கம் விரைந்து சென்று, தன் இயல்பான கூச்சத்தையும் மறந்து, அவள் கையைப்பற்றி, அந்த புத்தகங்களை கவனமாக எடுத்துவிட்டான். என்றாலும் அவற்றை அவளிடம் திருப்பி அவளிடம் கொடுக்கும் பொழுது அவன் கைகள் கொஞ்சம் நடுங்கின. அவள் 'அது பரவாயில்லை' என்று சிறு புன்னகையுடன் கூறி, அவ்வற்றைப் பெற்றாள். புத்தகங்களை அந்தந்த இடங்களில் திருப்பி வைத்துவிட்டு, அவன் அருகில் சென்று "நன்றி," சொல்லிவிட்டு, அங்கேயே பக்கத்து நாற்காலியில் அமர்ந்தாள். அவளுடைய கயல்மீன் போன்ற, கரும் மையிட்ட கண்கள் முதல் முறையாக மிக நெருக்கமாக நேரடியாகச் சந்தித்தன. "இந்த நூல்கள் ... என் தாத்தாவின் படைப்புகள். அவர் நமது வரலாற்றைப் பாதுகாப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்" என்று தனது உரையாடலை ஆரம்பித்தாள். "இவரின் பேத்தியா நீங்கள்? அவன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான். ஆமாம் உங்கள் தாத்தாவின் நூல்கள் உண்மையில் மிகவும் விலைமதிப்பற்றவை, காலத்தின் தேவை " என்று அவன் பதிலளித்தான், அவனது குரல் ஒரு கிசுகிசுப்பை விட அதிகமாக இருந்தது. "நான் அடிக்கடி அவரது படைப்புகளைப் படிப்பேன். அவை நமது கடந்த காலத்தை மிகவும் உயிரோட்டமாக உணர வைக்கும் புதையல்கள்." என்றான். அந்த நாளிலிருந்து, அவர்களின் பாதைகள் அடிக்கடி குறுக்கிடுவது போல் தோன்றியது, யாழ்ப்பாண பொது நூலக புத்தக அலமாரிகளின் வரிசைகளுக்கு இடையே அவர்களின் அமைதியான ஒப்புதல் தலையசைப்புகள் படிப்படியாக நீண்ட உரையாடல்களாக வளர்ந்தன. அவர்கள் யாழ்பாணம் வைபவமலையிலிருந்து பல பகுதிகளைப் பகிர்ந்து கொண்டதுடன் மற்றும் தத்துவஞானி ஆனந்த குமாரசாமி, பேராசிரியர் டாக்டர் ஐசக் தம்பையா போன்ற குறிப்பிடத்தக்க நபர்களின் படைப்புகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளையும், அதேநேரம் ஆரம்பகால தமிழ் செய்தித்தாள்களின் பதிவுகள், குறிப்பிடத்தக்க பொருட்களின் மைக்ரோஃபிலிம்கள் [microfilms] மற்றும் காலனித்துவ சகாப்தத்தின் ஆவணங்களுடன் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் என எல்லாவற்றிலும் மேலோட்டமாக, தங்களுக்கு தேவையான பகுதிகளை இருவரும் ஒன்றாக அலசி, இலங்கை தமிழ் மக்களின், தமிழ் மொழியின் நீண்ட வளமான வரலாற்றைப் பற்றி விவாதித்தனர். மேலும் தங்கள் பாரம்பரியம் போற்றப்பட்டு பாதுகாக்கப்படும் எதிர்காலத்தைக் கனவு கண்டனர். நாட்கள் செல்லச் செல்ல, அவர்களின் பிணைப்பு ஆழமடைந்தது. நூலகத்திற்குப் பின்னல் காணப்படும் ஒதுக்குப்புறமான பூந் தோட்டத்தில் அவர்கள் சிலவேளை நீண்ட இருக்கையில் [bench] அமர்ந்து தங்கள் தனிப்பட்ட விடயங்கள் கதைப்பதும் உண்டு, அங்கு பிந்திய மதிய வெயிலிலும் கூட கல் பெஞ்சுகள் குளிர்ச்சியாக இருக்கும். அதில் அவள் அமர்ந்து, மலர்களை வட்டமிடும் வண்டுகளை மற்றும் வண்ணாத்திப் பூச்சிகளைப் வேடிக்கை பார்ப்பாள். இடுப்பிலிருந்து இறங்கிவிடுவேன் எனப் பயமுறுத்திக்கொண்டிருந்த அரைக் காற்சட்டையை இறுகப் பற்றியபடி கடையிலிருக்கும் மிட்டாயை ஆசை பொங்கப் பார்க்கும் சிறுவனைப் போல, அவன் அவளைப் பார்ப்பான். இப்படி சிலவேளை அவர்கள் அமைதியாக கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தனர், நேரத்தைக் களித்தனர். ஒரு நாள், ஆனந்த் அவளிடம் கிசுகிசுத்தான். அவள் முன்னோக்கி சாய்ந்து அவன் வார்த்தைகளைப் உற்றுக் கேட்கும் போது, அவள் இடையின் மென்மையான வளைவில் அவன் கண்கள் பதிந்தன. அதைக்கண்ட அவள் அதிசயித்தாள். அவள் கடை இதழில் ஒரு புன் முறுவல் புறப்பட்டது. அவன் அப்படியே சொக்கிப்போனான்! கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர் உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். உசாத்துணை பகுதியில், இடைவெளிவிட்டு தள்ளி இருந்தாலும், இருவர் கண்களும் அமைதியாக ஒருவரை ஒருவர் எண்ணங்களில் நெருங்கினர். அவன் கண்களால் அவளிடம் 'உன் சகோதரர்கள் கடலில் சென்று மீன்களை பிடித்து (கொன்று) வாழ்கிறார்கள். நீயோ என் உடலின் உள் சென்று என் உயிரை எடுத்து (கொன்று) வாழ்கிறாய். உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை என்னால் பார்க்க முடியவில்லையே என்றான்! ஆனால் அதை அவள் பொருட்படுத்தவில்லை, அவள் தன் நாற்காலியை கொஞ்சம் விலத்தி வைத்து, தரையில் எதோ விழுந்ததை பொறுக்குவது போல குனிந்து, இடையை மேலும் காட்டி, அங்குமிங்கும் கண்களைச் சுழட்டி, தலையை நிமிர்த்தி, அவனை தன் மான் விழியால் சுட்டாள். கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும் வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். உன் தந்தை மீன் பிடிக்கும் கொடுமையான வலையால் உயிர்களை கொல்லுகிறான். நீயோ, உன் கண் என்ற வலையால் என் உயிரைக் கொல்லுகிறாய். மாலை அணிந்த உன் மார்பால் மழை நேர மின்னலைப் போன்ற உன் இடை எவ்வளவு சங்கடப் படுவதை எப்படி நான் பொறுப்பேன் என்றான். அவள் தன் குறும்புத்தனத்தின் பின், தன் விரல்களால் பழைய உசாத்துணை புத்தகங்களின் சிதைந்த விளிம்புகளை தற்செயலாகத் தேடினாள். "நம் பெயர்கள், நம் கதைகள், இந்தப் பக்கங்களிலும் ஒரு காலம் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். அதனால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு யாராவது அவற்றைப் படிக்கும் போது, நாம் வாழ்ந்தோம், நாம் நேசித்தோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்." என்றாள். சாளரத்தின் வழியாக ஊடுருவி வந்த மங்கலான சூரிய ஒளியில் அவன் கண்கள் மின்னின, மாலினி திரும்பி பார்த்தாள். அங்கு ஒருவரும் இல்லை. அவள் கை நீட்டி, அவன், தன் விரல்களை லேசாகத் தடவ அனுமதித்தாள். "ஒருவேளை அவை ஏற்கனவே இருக்கலாம்," என்று அவள் மீண்டும் கிசுகிசுத்தாள், "இந்த இடத்தின் காற்றில் அது இன்று எம் இருவரின் விரல்களால் ஒன்றாக இணைந்து எழுதப்பட்டு விட்டதே." என்றாள். அவர்களின் பகிரப்பட்ட தருணங்கள் யாழ்ப்பாண பொது நூலகத்துக்குள் மீண்டும் மீண்டும் தினம் தினம் தொடர்ந்தன - பிரதான மண்டபத்தின் குறுக்கே ஒருவருக்கு ஒருவர் திருடப்பட்ட பார்வைகள், நாற்காலியில் அமரும் பொழுது விரல்கள் பட்டும் படாமலும் உராய்வது. பண்டைய அல்லது அண்மைய காதலர்களின் குறிப்புகளைப் புரட்டும் போது, அவர்களுக்கிடையிலான அமைதியான சிரிப்புகள் எனத் தொடர்ந்தன. அவர்கள் ஒருவருக் கொருவர் சிறிய குறிப்புகளை, உதாரணமாக, கவிதை வரிகள், பண்டைய காதல் பாடல்களின் சில வரிகள் மற்றும் வாக்குறுதிகள் அல்லது பொன்மொழிகள் போன்றவற்றை ஒரு சிறு காகித தாளில் எழுதி, அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களின் பக்கங்களில் மறைத்து வைத்து, அதில் ஒரு சுகம் கண்டனர். தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் அதிகரித்து வரும் விரோதம், யாழ்ப்பாணத்தை கொதிநிலை பயம் மற்றும் வெறுப்பின் கொப்பரையாக மாற்றி, தமிழர் தாயகத்தில் அமைதியின்மை மற்றும் வன்முறையின் நிழல்கள் பரவியிருந்த இந்த நேரத்தில் தான், இன்று அவர்களின் காதல் முழுமையாக மலர்ந்தது. அது ஒரு வெள்ளிக்கிழமை, மே மாதம் 29,1981 ஆம் திகதி. 1971 ஆம் ஆண்டு, இலங்கை சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையிலான இலங்கை அரசாங்கம், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக கல்வி மற்றும் மொழியில் பாகுபாடு காட்டும் கொள்கைகளை அமல்படுத்தியது. இது, ஏற்கனவே இருந்த இனப் பதட்டங்களுடன் சேர்ந்து, தமிழ் இளைஞர்களிடம் எழுச்சிக்கு வழிவகுத்து, இறுதியில், 1972 இல் போராளிக் குழுக்கள் உருவாக வழிவகுத்தது. அதைத்தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் பற்றி முழுமையாக இருவரும் தற்செயலாகக் இன்று கதைத்தனர். 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'.என்பார்கள். அப்படியான ஒன்றைத்தான், கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரீகத்தை படைத்த மாயன் மக்களை துன்பத்தில் இருந்து மீட்பவர் [இரட்சகர்] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார். அமாம் வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர். மாயன்கள் எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற, மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும். அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா? அவன், அவள் முகத்தைப் பார்த்து கேட்டான. ஆனால், அதற்கிடையில் தந்தை வரும் நேரம் வந்ததால், விடை கொடுக்காமல், விடை பெற்று மாலினி போனாள். இனி ஜூன் ஒன்று திங்கள் தான், அவளை மீண்டும் காணமுடியும் என்ற ஏக்கத்துடன் அவனும் வீடு திரும்பினான். மே 31, 1981 அன்று மாலை, ஞாயிறுக்கிழமை ஆனந்த் நூலகப் படிகளில் நின்று, பழைய நகரத்தில் உள்ள ஒரு சிறிய புத்தகக் கடையில் கண்டெடுத்த தமிழ் காதல் கவிதைகளின் மெல்லிய தொகுதி ஒன்றை மாலினிக்கு ஜூன் 1, திங்கள் கிழமை பரிசாக கொடுக்க வேண்டும் என்று, அதை கையில் வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம், கல்வியின் தெய்வம் சரஸ்வதியை பார்த்துக் கொண்டு நின்றான். அந்தப் புத்தகம் ஆழமான மெரூன் நிறத் தோலால் கட்டப்பட்டிருந்தது. அதன் பக்கங்கள் பல நூற்றாண்டுகளாக ஏக்கத்தையும் காதலையும் பேசும் வசனங்களால் நிரப்பப்பட்டு இருந்தன. மே 31 1981 இரவு நாச்சிமார் கோயிலடியில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, நாச்சிமார் கோவிலடிக்கு காவல்துறையினரும், துணை இராணுவக் குழுக்களும் சீருடை அணிந்தவர்களாகவும், சீருடை அணியாதவர்களுமாக அங்கு விரைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர். அருகில் இருந்த மூன்று வீடுகள், இயந்திர ஈருளிகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களும் தாக்கப்பட்டனர். இவ்வகையான பதட்டங்களால் சோர்வடைந்த யாழ் மக்கள், வீடுகளில் நேரத்துடன் முடங்கினர். யாழ்ப்பாண பொது நூலகமும், சந்திரனின் கண்காணிப்புக் கண்களின் கீழும், கடல் காற்றின் கிசுகிசுப்பின் கீழும், அதன் பிரமாண்டமான கதவுகள் உறுதியாக மூடிய நிலையில் அமைதியாக நின்றது. ஆனால் ஜூன் 1, 1981 ஆம் தேதி அதிகாலையில், மே 31 இன் நள்ளிரவுக்குப் பிறகு, யாழ்ப்பாண பொது நூலகம் அருகில் அமைதி சிதறியது. சிங்கள வன்முறைக் குழு ஒன்றால் இந்நூலகம் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. அடர்த்தியான கருப்பு புகை வானத்தில் சுழன்று, எரியும் காகிதத்தின் கடுமையான வாசனையையும் பல நூற்றாண்டுகள் பழமையான பனை ஓலைகளையும் சுமந்து சென்றது. அரை மைல்களுக்கு அப்பால் இருந்த ஆனந்த் மற்றும் பலர் தொலைதூரக் கூச்சல்களின் சத்தத்திற்கும், அடிவானத்தை வரைந்த ஆரஞ்சு நிற ஒளிக்கும், விழித்தனர். உடனடியாக அவனும் அவனைப் போல சிலரும் துணிந்து நகர மையத்தை அடையும் போது, மிகவும் தாமதமாகி விட்டது. இரவு முழுவதும் காலியாக இருந்த நூலகம், இடிந்து விழும் எலும்புக்கூடாக மாறியிருந்தது, அதன் விலைமதிப்பற்ற சேகரிப்புகள் இருண்ட வானத்தில் எரிந்து கருகின. யாழ்பாணம் வைபவமலை மற்றும் பல நூற்றாண்டுகளாகத் திரட்டப்பட்ட அறிவு உள்ளிட்ட விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகள் சாம்பலாகின. அடுத்த நாட்களில், யாழ்ப்பாணம் சாம்பல் நகரமாக இருந்தது. ஒரு காலத்தில் தமிழ் கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாக இருந்த நூலகம், புகைந்து கொண்டிருக்கும் இடிபாடுகளில் கிடந்தது, அதன் கருகிய எலும்புக்கூடு அதைச் சூழ்ந்திருந்த வன்முறைக்கு ஒரு கொடூரமான சான்றாகும். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், ஆனந்த் சில நாட்களுக்கு மாலினியைச் சந்திக்கவில்லை. மற்றும் மாலினியின் வீடு, நாச்சிமார் கோவிலடி என்பதாலும், அது தான் முதலில் தாக்கப்பட்ட இடம் என்பதாலும், அவளுக்கு, அவளின் குடும்பத்துக்கு என்ன நடந்தது என்பதை அறிய, அவன் ஆவலாக இருந்தான். என்றாலும் அதன் பின் அவன் அவளைக் காணவே இல்லை. பாடசாலைக்கும் வரவில்லை என்பதை அவளின் பாடசாலை தோழி ஒருவள் மூலம், இரண்டு கிழமையின் பின், அறிந்தான். அதன் பின், அவன் விசாரித்ததில், அவளின் குடும்பம் கொழும்புக்கு அல்லது வெளிநாடு ஒன்றுக்கு இடம்மாறி விட்டனர் என்பதை அறிந்தான். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. அன்றைய காலத்தில் கைத்தொலை பேசி அல்லது வலைத்தளங்கள் இல்லை. பின்னர் 1984 ஆம் ஆண்டு நன்கொடைகளுடன், யாழ்ப்பாண பொது நூலகம் ஓரளவு மீண்டும் பகுதியாக கட்டப்பட்டது. ஆனந்த் இன்னும் அவளை மறக்க வில்லை. ஆனந்த் இன்னும் அந்த - பகுதியாக திறக்கப்பட்ட - நூலகத்தின் காலியான அரங்குகளில் அலைந்து திரிந்தான். இழந்த கட்டிட தொகுதிகளுக்காகவும், நூல்களுக்காகவும் மற்றும் காற்றில் சாம்பலைப் போல, அவனது பிடியிலிருந்து நழுவிய காதலுக்காகவும், அவனது இதயம் இன்னும் வலித்துக் கொண்டே இருக்கிறது! "நீ இன்னும் இங்கே இருக்கிறாய், மாலினி," அவன் கிசுகிசுத்தான் "நாம் இழந்த அனைத்தின் நினைவுகளிலும். நான் படித்த ஒவ்வொரு வசனத்திலும், மீதமுள்ள பக்கங்களின் ஒவ்வொரு கிசுகிசுப்பிலும், நீ இன்னும் இங்கே இருக்கிறாய். வாழ்கிறாய்! " என்று அவன் முணுமுணுக்க என்றும் மறக்கவில்லை! நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்
  7. 🎂 இனிய 6வது அகவை நாள் வாழ்த்துக்கள், 'கலை'! [25 மே 2025] 🎉 / 🎂 Happy 6th Birthday, 'Kalai'! 🎉 [25 th May 2025] ஒட்டாவா தென்றலில் மிதந்து வந்த மாணிக்கமே ஒளிகள் வீசி இதயம் கவர்ந்த மழலையே! ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த 'கலை'யே ஒளியார் முன் ஒள்ளியராய் வாழ்கவாழ்கவே! வசந்தம் பாடும் ஒரு பாட்டுப் போல வண்ண ஒளிகள் தரும் அழகு போல வலிமை மிக்க பெரும் தலைவன் போல வளமான வாழ்வு உனக்கு மகிழ்வு தரட்டுமே! அக்கா 'ஜெயா' அறிவில் உயர்ந்து ஓங்கி அன்போடு உன்னை என்றும் வழி நடத்த அகவை எட்டில் அன்பின் ஒரு தாயாக அவள் பாசம் உன்னை வழி காட்டுமே! இரண்டு அகவை உன் தம்பி 'இசை'க்கு இன்பம் கொண்டு அவன் பின் தொடருவான்! இந்திரா லோகம் நீ அருகில் இருந்தால் இறைவன் அவனுக்கு நீ தான் 'கலை'! ஆறுதல் கொடுக்கும் புத்தகமும் பொம்மையும் சேர ஆனந்தம் பொங்கி கனவுகள் மெய்ப் படுமே! ஆக்கமும் ஊக்கமும் நோக்கமும் பெற்றோர் தர ஆறு மெழுகுவர்த்தி கேக்கின் மீது ஒளிரட்டுமே! அன்பு மழையில் மகிழ்வுடன் நீ ஆடிப்பாடி அழகு 'கலை'யே இன்றும் என்றும் கொண்டாடு! அம்மா அப்பா உறவினர்கள் ஒன்று கூட அலங்காரப் பந்தலில் பூ தூவி வாழ்த்துகிறோம்! 💖 அன்புடன் தாத்தா: 'கந்தையா தில்லைவிநாயகலிங்கம்' In Ottawa’s breeze, six years ago, A star was born with a gentle glow ! 'Kalai', so bright, with a heart so kind, A treasure of joy, a curious mind ! With laughter that dances like songs in spring, You’ve learned to run, to dream, to sing. Building castles, chasing light, You make each day feel warm and bright ! Your sister 'Jeya', wise and tall, Guides you gently through it all ! At eight, she’s proud, with love so wide, Always there, right by your side ! And little 'Isai', just two years small, Follows your giggles, your games, your call ! His eyes light up when you are near You’re his hero, it’s perfectly clear ! Six candles now upon your cake, Make a wish for the dreams you’ll make ! From puzzles to planets, books to play, We’re cheering you on every day ! So dance, dear 'Kalai', in birthday delight, Surrounded by love, glowing so bright ! From 'Amma' and 'Appa', from all of us too A world full of wonder awaits little you ! Granddad: Kandiah Thillaivinayagalingam
  8. நன்றிகள் மன்னிக்கவும் , ஒரு எழுத்துப்பிழை கஞ்சி என வாசிக்கவும் "முள்ளிவாய்க்கால் கஞ்சி"
  9. "முள்ளிவாய்க்கால் கஞ்சி" ஓயாத எறிகணை வீச்சுகளுக்கும், பீரங்கித் தாக்குதல்களின் காது கேளாத எதிரொலிகளுக்கும் மத்தியில், முள்ளிவாய்க்கால் தமிழ் உணர்வின் இறுதி கோட்டையாக நின்றது. ஒரு காலத்தில் பசுமையான, உயிரைக் கொடுக்கும் வன்னி நிலங்கள், தரிசு நிலமாக, இரத்தத்தில் தோய்ந்து மூழ்கிய வயல்களாக மாறிவிட்டன. நம்பிக்கை உயிருடன் அங்கு இல்லை, பலவீனமாக இருந்தது, மங்கிப்போய் இருந்தது, அணையப் போகும் நெருப்பில் கடைசியாக ஒளிரும் நெருப்பைப் போல. என்றாலும் ஆறிலும் சாவு அறுபதிலும் சாவு என்ற வீர உணர்வுமட்டும் எரிந்துகொண்டே இருந்தது. பெருமைமிக்க மக்களின் வெடித்து சிதறிய எச்சங்கள் பதுங்கு குழிகளில் ஒன்றாகக் குவிந்தன. இன்னும் அந்த அவலங்களை பார்த்து அனுபவித்துக் கொண்டு எஞ்சி இருக்கும் வன்னி மக்களின் உடல்கள் மெலிந்தன. ஆனால் அவர்களின் ஆன்மா உறுதியாக இருந்தது. அது உடைக்கப்பட முடியாதது. இந்த பேரழிவு நிலப்பரப்பில்தான் அறிவு மற்றும் வான்மதியின் காதல் கதை முட்கள் நிறைந்த வயலில் ஒரு உடையக்கூடிய மலராக மலர்ந்தது! அந்த சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது. தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது. எட்டுத்திக்கும் மரண ஓலங்கள், ஆண்களின் அலறல்கள் பெண்களின் கதறல்கள். ஆர்ப்பரித்து ஓடிய இரத்த வெள்ளங்களில் பல்லாயிரக்கணக்கான சடலங்கள். மூக்கை பழுது பார்க்கும் பிணவாடைகள். கைக்கடிகாரங்கள் அணிந்திருந்த கைகள், திருமண மோதிரங்கள் அணிந்திருந்த விரல்கள், விலையுயர்ந்த காலணி அணிந்திருந்த கால்கள், பால்சுரந்த கொங்கைகள் என அங்குமிங்குமாக சிதறிகிடந்தது ஏராளம் ஏராளம். வான் மழை கூட பெய்ய மறுத்த அந்த நிமிடங்களில் வானூர்திகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது. இன்னும் அந்த சத்தங்கள் ஓயவில்லை, முறிந்து விழுந்த மரக்குற்றி ஒன்றின் மேல் அமர்ந்தபடி, அங்கு நடப்பவைகளை மெல்ல கவனித்து கொண்டிருந்த வான்மதி, பல மணி நேரமாக தூங்காத கண்ணுக்கு ஓய்வுகொடுத்து சற்று தன்னை மறந்து, அயர்ந்து தூங்கி விட்டாள். மூதாதையர்களின் கடுமையான மன உறுதியை இன்னும் தாங்கிய கண்களைக் கொண்ட இளம் தமிழ் மருத்துவர் அறிவு தற்செயலாக, அந்த வழியால் போகும் வேளையில், காலை சூரியனைப் போல மென்மையான இதயம் கொண்ட துடிப்பான தன்னார்வலரான வான்மதி மரக்குற்றியின் மேல், சரியான களைப்பில், தன்னையே மறந்து, தூங்கிக்கொண்டு இருக்கும் சங்கடமான நிலையைப் பார்த்து குழம்பினான். அங்கே கொஞ்சம் தூரம் தள்ளி மக்கள் குழப்பத்தின் மத்தியிலும், தங்கள் உயிரைப் பிடித்து வைத்திருக்க ஒரு தேங்காய் சிரட்டை கஞ்சியை குடித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட அவன், இரண்டு தேங்காய் சிரட்டைகளில், பலருக்கு இறுதி உணவாக மாறிய உயிர்வாழும் உப்பில்லா கஞ்சியை தானும் பெற்று அவளை நெருங்கினான். அவன், அவள் அருகில் வர, அவளும் கண் திறக்க சரியாக இருந்தது. எந்த வித சலனமும் இன்றி மெதுவாக அடிமேல் அடி வைத்து வந்த அவனைக் கண்டு அவள், தன் களைப்பிலும் சோர்விலும் பசியிலும் கூட சொக்கித் தான் போனாள். வழித்து வாரிய தலைமயிர், புருவம் உயர்த்திய சீரிய கண்கள், அளவான சிரிப்போடு இதழ்கள், மரண வாடையின் மத்தியிலும் மனம் தளரா கம்பீர நடை. அவனை வைத்த கண் வாங்காமல், அருகில் வரும் மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் அருகில் வரும்பொழுது தான், அவள் யார் என்று உற்றுக் கவனித்தான். அப்படியே ஒருகணம் தன்னை மறந்தான். 'கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்' ஒப்புமையில் கடலினையும்,மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும் ,வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடைய அவள், அந்த கண்களை இன்னும் மூடவில்லை. ஆனால் அப்படியே எந்தக் குறையும் இல்லாத சிற்பம் ஒன்று மரக்குற்றியின் மேல் செதுக்கியது போல, ஒய்யாரமாக ஒரு மரக்கிளையுடன் சாய்ந்து இருந்தாள். அவள் கண்கள் விழித்து இருந்தாலும் அதில் சோர்வைக் கண்டான். பசியின் ஏக்கத்தைக் கண்டான். அவன் தான் கொண்டுவந்த, தேங்காய் சிரட்டையில் உள்ள அந்த காஞ்சித் தண்ணீரில், மிதந்து கொண்டு இருந்த சோற்றைக் கிளறிக்கொண்டு அவள் அருகில் வந்தான். அவன் ஒரு மருத்துவன், அவனுக்கு அவளின் பசிக்கொடுமை மற்றும் பயம் புரிந்துகொண்டது. அவளின் தலை முடியை தடவிக் கொடுத்துக் கொண்டு, அந்த கஞ்சியில் கலந்து இருந்த சோற்றை பிரித்தெடுத்து அவளுக்கு முதலில் ஊட்டினான். முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, பின் கடலுடன் கலக்கும் நையாற்றின் நீரோட்டத்தால்,வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைப் போல, அவளின் கூந்தல் அவனுக்கு இருந்தது. அவள் நாணமிகுதியால் அவனை கள்ளப்பார்வையால் நோக்கி சாய்ந்திருந்தது கழுத்து. காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்கள், அவனை தடுக்க முற்பட்டு, ஆனால் மனமும் வயிறும் இடம் கொடுக்காமல் போராடிக் கொண்டு இருந்தது. சாதாரண நேரம் என்றால், அவள் கஞ்சியைத் தானே, அவனிடம் இருந்து எடுத்து சாப்பிட்டு இருப்பாள். ஆனால், இன்று எனோ அவனை ஊட்ட விட்டுவிடடாள். அவள் பேசவில்லை. அவனும் பேசவில்லை. ஏன், குண்டுகள் கூட அமைதியாக இருந்துவிட்டது. அவர்கள் இருவரும் வெறும் வார்த்தைகளை விட, அதிகமாகப் தங்கள் எண்ணங்களை உணர்வுகளை உள்ளத்தால், கண்களால் பரிமாறிக் கொண்டனர். அவர்களின் மௌனப் பார்வைகள் சொல்லப்படாத எதோ ஒன்றை ஒருவரின் மேல் ஒருவர் தேடிக்கொடு இருந்தன. அவள் ஒரு சிறிய புன்சிரிப்புடன், அவனைப் பார்த்தாள். பின் அவன் வைத்திருந்த கஞ்சி சிரட்டையை ஒருமுறைத் தொட்டாள். அவள் மனதில் சில வேதனைகள் ஊசல் ஆடுகிறது என்பதை அவன் அறிந்தான். அவள் அதை உணர்ந்தது போல, இரு நாளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை கூறத் தொடங்கினாள்: "அன்று சிறிய பதுங்கு குழி ஒன்றுக்குள் இருந்த நான் கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினேன். அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று, வாங்கிய கஞ்சியின் சூடு ஆறுவதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக திரும்பி வந்தேன். ஆனால் என்னால் அந்த கஞ்சியைக் கூட பருக முடியவில்லை.பல் குழல் எறிகணை வீச்சில் வீழ்ந்த குண்டோன்று சிறுவர்களை பாதுகாத்து வைத்திருந்த பதுங்குகுழிமீது வீழ்ந்தது. என் கையிலிருந்த கிண்ணம் தன்பாட்டிலேயே கீழே வீழ்ந்து உருண்டது. கஞ்சி மண்ணோடு மண்ணாய்க் கலந்து. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஒருவர் பதுங்கி குழிக்கு அருகில் நிற்பதைப் என்னால் பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் அவரை மொய்த்துக் கொண்டிருந்தது. என்றாலும் அவர் அதைப் பொருட் படுத்தாமல், என்னை கத்திக் கூப்பிட்டார். நான் கிடங்கின் அருகில் ஓடிச் சென்று பார்த்த பொழுது அது ஒரு மாபெரும் மனித படுகொலைக் கிடங்காக மாறிக் காட்சியளித்தது. அங்கே, என்னோடு சற்று முன் கஞ்சி அருந்திக்கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டு இருந்த அந்த சிறுவர்கள் சிதையுண்டிருந்தார்கள்." என கண்ணீருடன் அவனுக்கு கூறினாள். அவர்களின் கண்கள் ஒருவரை ஒருவர் சுற்றி சுற்றி வந்தது. "காதல் ஹார்மோன்" [The love hormone] என்று அழைக்கப்படும் ஆக்சிடாசின் (Oxytocin) கசிந்து அவர்களை கிளர்ச்சி அடைய செய்திருந்தது. 'உயிரும் உணர்வும் சங்கமிக்கும் பார்வையே பருவத்தில் பூத்து மாற்றிடும் மனதையே வேம்பும் கரும்பும் சேர்ந்தக் கலவையோ காமத்தின் பாதையில் புனிதப் பயணமோ இயற்கை உதிரும் இன்பச் சருகோ தெளிவாய்த் தெரியுதே குழம்பிய பார்வையில்! அவன் ஓர் மருத்துவன், நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்தவன். தொட்டவன், ஆனால் இன்று அது ... அதன் தாக்கம் அவனால் தாங்க முடியவில்லை. என்றாலும் அவன் அவளுக்கு உப்பில்லா கஞ்சியை ஊட்டிய பின், அவளை ஒரு மரத்தின் கீழ் தரையில் படுக்க விட்டுவிட்டு, தானும் ஒரு தேங்காய் சிரட்டை கஞ்சியை ஒரு பாறைக் கல்லில் இருந்து கொண்டு, அவளைப் பார்த்தபடியே குடித்தான். பின் அவளையும் அழைத்துக் கொண்டு, தன் கடமையை செய்ய புறப்பட்டான். தன் மருத்துவப் பணியை அடுத்த கிராமத்தில் தொடர, அங்கு எங்கும் பரந்து விரிந்து இருக்கும் அகழிகளில் குறுகிய, ஆபத்தான நடைப்பயணங்களை மேற்கொண்ட போது, தமிழ் காவியங்களிலிருந்து அல்லது தானே இயற்றிய சில வரிகளை வான்மதிக்கு, அவளை உற்சாகப்படுத்துவதற்காக, பயத்தை நீக்குவதற்காக அடிக்கடி கூறிக் கொண்டு போனான். அவன் சிலப்பதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டினான். கண்ணகியின் தளராத மனப்பான்மைக்கும் தமிழ் மக்களின் உயிர்வாழ்வுப் போராட்டத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை வரைந்து காட்டினான். புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மந்துவில், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொக்கணை,வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர். அங்கு அந்த இறுதி நாளில் மிக சொற்ப மருத்துவர்களே கடமையாற்றினார். அவர்களில் ஒருவனே இந்த அறிவு! அவன் முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களுக்கு அருகில் இருக்கும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் அருகில் சென்றதும், கண்ணகி என்ற பத்தினித் தெய்வத்தை அவளுடன் சேர்ந்து வணங்கி விட்டு, வன்னி நாட்டின் காவல் தெய்வமாகவும் தாய்த் தெய்வமாகவும் இருக்கும் கண்ணகி முன்னால், தன்னை வான்மதியுடன் இணைத்த உப்பில்லா முள்ளிவாய்க்கால் காஞ்சிக்கும் நன்றி தெரிவித்தான். பின் அவன் அங்கு காயப்பட்டிருக்கும் எல்லோருக்கும் ஆலய முன்றலில் தன்னால் இயன்ற வைத்தியம் செய்தான். இம் முறை வான்மதியும் அவனுக்கு உதவியாக அங்கு கடமையாற்றினாள். ஆனால் அந்த அவலம் நிறைந்த சூழலிலும், அவன் மேலும் அவளை ஈர்த்தான் அது அவன் வசிகரமா அல்லது அவள் பலவீனமா என்று ஆராய்வது தேவையற்றது. ஏனேன்றால் அது காதலின் இலக்கண விதி. அன்று முதல் அவனை பின் தொடர்வதையே வாடிக்கையாக்கி அவனை மணப்பதையே லட்சியமாக்கினாள். வைகாசி மாதத்தில் பூரணை நாளை அடுத்து வரும் திங்கள் நாளில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் நிகழும் பொங்கல் விழாவில் தான் அவனுடன் கலந்து கொள்வேன் என்று தன் மனதில் வேண்டிக் கொண்டாள். நாள்பட நாள்பட, பஞ்சத்தினால் அங்கிருந்த மக்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தினர். தாக்குதல் கொடூரத்திலும் அதனை பொருட்படுத்தாது உணவு தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதனாலேயே பெரும்பாலான மக்கள் செல் வீச்சுக்களில் சிக்குண்டு மாண்டனர். தென்னங்குருத்து, பனங்குருத்து, கரையோர நண்டு,பனங்கீரை, இலைகள், குழைகள், காட்டுக்காய்கள், கடற்கரை ஏரல் (சிப்பி) கடல் மற்றும் குளத்து மீன்கள், ஆலமர குருத்துகள்,ஆலங்காய், ஈச்சம் வட்டு, இளநீர், தேங்காய் என இருக்கின்ற எல்லா வகையான பொருட்களையும் தமது உணவாக்கிக் கொண்டனர். எஞ்சி இருந்த ஆடு, மாடு, கோழிகள் அனைத்தையும் உணவாக்கி இனிகால் நடைகள் இல்லை என்ற நிலைக்கே முள்ளிவாய்க்கால் வந்திருந்தது. நாட்கள் செல்லச் செல்ல, நிலைமை மேலும் இருண்டது. சக்திவாய்ந்த சர்வதேசத்தின் அமைதியான உடந்தையால் இலங்கை அரசாங்கம் தங்கள்ப் பிடியை இறுக்கிக் கொண்டன. கொத்து குண்டுகள் மற்றும் வெள்ளை பாஸ்பரஸ் மழை பெய்தன, அவற்றின் வெடிப்புகள் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் நெரிசலான பதுங்கு குழிகள் வழியாகச் சென்றன. பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்ட மனிதாபிமான வழித்தடங்கள் கூட பொறிகளாக மாற்றப்பட்டன, அப்பாவிகளை அவர்களின் கொடிய வலையில் சிக்க வைத்தன. ஒரு மாலை, புகை மூட்டம் நிறைந்த அடிவானத்திற்குப் பின்னால் சூரியன் மறையும் போது, அறிவு மற்றும் வான்மதி இருவரும் தங்கள் கடைசி உணவாக இருக்கலாம் என்று அஞ்சியதை பகிர்ந்து கொண்டனர் - அது ஒரு சிறிய சிரட்டை முள்ளிவாய்க்கால் கஞ்சி. அவர்கள் ஒருவருக் கொருவர் நெருக்கமாகப் பிடித்துக் கொண்டு, உள்ளக சுதந்திரம் பெற்று, 'சமஷ்டிக் கட்டமைப்பு அடிப்படையில், மொழிவாரியான வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் சுயாட்சிப் பிரிவு அமைந்து, மீண்டும் கட்டப்பட்ட அந்த தமிழ்த் தாயகம் ஒன்றில், ஒரு நாள் தெளிவான வானத்தின் கீழ் சுதந்திரமாக ஓடிவிளையாடும் குழந்தைகள் பற்றிய கனவுகளை கிசுகிசுத்தனர். பட்டினி முள்ளிவாய்க்காலை உலுக்கி எடுக்க ஆரம்பித்தது. சிறார்கள் எலும்பும் தோலுமாக காட்சியளித்தனர். கர்பிணித் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பெற்றெடுக்க போகின்றோம் என்ற ஏக்கத்திலேயே மயக்கமுற்று விழும் அளவிற்கு நிலைமை மாறிக்கொண்டு இருந்தது. அது மட்டும் அல்ல, கஞ்சிக்கு கை ஏந்தியவர்களும் கொன்று குவிக்கப் பட்டனர். துப்பாக்கி ரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்தன. தனியே செல்லவும் பயமாக இருந்த காலம் அது. என்றாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, மறுநாள் காலையில், அருகிலுள்ள குழியிலிருந்து தண்ணீர் சேகரிக்க வான்மதி மற்றவர்களுடன் வரிசையில் நின்றபோது, திடீரென குண்டுகள் அந்த வரிசையைத் தாக்கின. குண்டுவெடிப்பு, சதை மற்றும் எலும்பைக் கிழித்து, காற்றில் ஒரு இரத்தம் கலந்த சிவப்பு மூடுபனி தொங்கியது. அருகில் இருந்த அறிவு, புகையை நோக்கி விரைந்தான். அவனது இதயம் பயத்தால் துடித்தது. ஒரு காலத்தில் மனித உருவங்களாக நடமாடியவர்களின் சிதைந்த எச்சங்களுக்கு மத்தியில் வான்மதியைக் கண்டான். அவளுடைய இடது கால் சேதமடைந்திருந்தது. அவளுடைய உடல் துண்டுகளால் சிக்கியிருந்தது. ஆனாலும் அவள் உயிருடன் இன்னும் ஒட்டிக்கொண்டு இருந்தாள், அவளுடைய கண்கள் இன்னும் அவனைத் தேடிக்கொண்டிருந்தன. அவன் அவளை ஒரு பதுங்கு குழிக்கு அழைத்துச் சென்று, எதோ கையில் கிடைத்ததை வைத்து தன்னால் இயன்ற வைத்தியம் செய்தான். சங்க இலக்கியங்கள் போற்றிய பண்டைய வசனங்களின் சிலவரிகளை, அவளை உற்சாகப்படுத்த காதில் கிசுகிசுத்தான். ஆனால் அவளுடைய இரத்தம் அவன் சட்டையில் ஊறி, எதை எதையோ வரையத் தொடங்கியது. அவளுடைய பிடி தளர்ந்தது, அவளுடைய மூச்சு மங்கியது, அவளுடைய கண்கள் பளபளப்பாக, அவனால் எட்ட முடியாத தூரத்தைப் பார்த்தன. அறிவு அவள் உடலை குளிர்ந்த பூமியில் கிடத்தி, இறுதி விடை கொடுத்தான்! "அழகான என் குட்டிச் செல்லமே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ?" "வாய் மடித்து கண் சுழன்று வான் உயர கை அசைத்து வாட்டம் இன்றி துள்ளிச் சென்றவளே வான்வழியால் உன்னை பொசுக்கியவன் யாரோ?" "மணலால் கதிரவன் எழும் காலையில் மனதை உறுதியாக்கி தண்ணீருக்கு நின்றவளே மரணப் பயமின்றி தொண்டு செய்தவளே மண்பானையில் கஞ்சி கொதிப்பது தெரியாதோ?" "செவ்வாய் நீயோ என்னைச் சந்தித்தாய் செவ் இதழ் கொண்டு கஞ்சி பருகினாய் செந்தமிழ் நிலைக்க துன்பம் சுமந்தாய் செல்லடித்து உன்னைச் சிதைத்தவன் யாரோ ?" முள்ளிவாய்க்கால் கஞ்சி ஒரு அடையாளமாக, உயிர்வாழ்வின் அமிர்த சுவையாக, துரோகம் செய்யப்பட்ட மக்களின் உப்புக் கண்ணீராக, சுதந்திரம் மீண்டும் மலரும் நாளைய தினம் பற்றிய அழியாத வாக்குறுதியாக, இன்று 'அறிவு'க்கு மட்டும் அல்ல, எல்லா ஈழத் தமிழர் மனதிலும் ஒட்டி நிற்கிறது! நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்
  10. "தர்மம் வகுத்த வழியில் நின்று" "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இருவரையும் மதித்து வாய்மை என்னும் பண்பு கொண்டு ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல் மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால் செய்த நன்மை தலை காக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. "Celebrate Mothers" [அன்னையர் நாள் / Mother's Day / 11th May, 2025] Mother are generally human beings great assets . If no mother , There is no human life - Even you and me - in the earth now! So in Sri Lanka and many other countries celebrate Mothers in mid of May, for example in 2022 , we celebrate on may 8 th and Next year, It will be on May 14 th , 2023. It is so natural that ,We celebrate Mothers each year as the days start lengthen and The weather begins to warm up as Mothers lengthen their love & affection and Warm up their relationship with additional care they take against their own kids as well as generally all children of the world! Here I am giving a real feeling of a daughters about her mother, whom they lost, without giving their identity, which they truly expressed to me & Others on her Anniversary which falls on June 8 th each year. just after mother's day ! Though Mother's day is meant for celebration, for both of them, It was a sad day. But they too celebrate along with all others, dedicating this to her mother, who built a foundation for a better life for them and encourage to study hard and achieve a better position in a society. "In my heart, The god I pray is you Mother is only my prime god" "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா" "My Sincerity & honesty- is you The life, I am living- is yours You become flowered creeper with my pregnant" "என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா" "My work & advancement - is your dream your smelling flower- is my life I need one more time- your womb Again!" "என் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பேயம்மா நான் மீண்டும் வேண்டுவது உன் கருவறையம்மா" Yes, for them mother is every thing. For example, When I spoke with the eldest daughter, who is now a reputed dental surgeon, She told me - Though the pain of losing mum is so immense and even worse, While she was at the university, She continued studies without any sort of lagging, because to fulfil mother wishes and prove that ' I AM YOUR CHILD'. As per her: My mother worked so hard to raise us as a good family. She always trying to improve and better ourselves in every way possible .For example, She always provide us with the best in terms of education, career and life, All in the hopes that One day she can sit back and enjoy the fruits of her labour. But unfortunately this was not to be for her. But who ever know her story, Definitely will celebrate Mothers !! She married at the age of 26, and become a mother at the age of 29, and when the daughter become four years old, She started to take more care about their studies and bring them as a good citizen. For example, from nursery to college, her intention was to select the best school possible, So that child will learn not only school subjects but also good manners. In addition them, She focused on extra activities such as swimming, dance, vocal, violin, veena, keyboard, typing, sewing ... , because She wanted her children to be a well rounded individuals. Though after married , she moved away from the mother country, She had all determination and high sprit to learn herself to read, write and speak English fluently , before become a mother and it helped her to fit into a new culture and new way of living , but without loosing her real identity too. So It helped her to bring us too in the same way. Daughter continued and said that mother worked solid 5 / 6 days in a large charity organization, about four to five hours a day as a volunteer, in order to improve language and learn and familiar with new culture , But still she had the strength to be an amazing housewife and mother! Though her mother finally not put her feet up and enjoy the world and its wealth, After we all grown up and started to work, But, Perhaps, in some ways mother had done her duty and now She laid to rest and also mother have left enough memories for a life time which will forever blossom in our minds. Not only that, our mother was an inspiration and comfort to others , who celebrate mothers!! Finally daughter said to me that She thanks mother for all She have given them and pray that She and other her children will continue to make mother proud!! "Even shoot from roots - wood apple is wood apple Even child fly anywhere - it is your feather My light house for my life - is you " "வேரோடி முளைத்தலும் விளாத்தி விளாத்தியினமே பாரோடி பறந்தாலும் நான் உன் சிறகே அம்மா - என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயம்மா " "Even scent from your foot step - is a temple which is a peace of mind for me You are my first doctor " "தாயின் காலடியும் ஒரு ஆலயமே .... அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே - நான் கண்ட முதல் வைத்தியரும் நீயம்மா" "Earth & woman are breath for life Chastity is a cultured behaviour of you You felt fear on my cry & felt happy on my laugh" "மண்ணும் பெண்ணும் ஒன்றே .... தாய்மை பண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா - என் அழுகையில் பதறி, சிரிக்கையில் மகிழ்ந்தவளே" "I call you as "Amma" - is your blessing I am Always your - hailing toddler Your god gifted child - is me " "நான் அம்மா என்று அழைப்பதும் .... உன் வரமே என்றும் நான் உன் மழலை அம்மா ....தெய்வம் உனக்கு தந்த குழந்தை அம்மா" Mother's Day is a celebration honouring the mother of the family, as well as motherhood, maternal bonds, and the influence of mothers in society. The origin of Mother’s Day or Celebrate Mothers as we know it took place in the early 1900s. A woman named Anna Jarvis started a campaign for an official holiday honouring mothers in 1905, the year her own mother died. Here too we will Celebrate Mothers, along with the daughter, who share her mother dedicated story with us, remembering her and all mothers!! Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna Sri Lanka
  12. "ஆசையில் ஓர் காதல்" மலை அடிவாரத்தில் உஷா என்ற அழகிய இளம் பெண், தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்தாள். அவள் நீண்ட கருங்கூந்தலையும் பிரகாசிக்கும் அழகிய கண்களையும் கொண்டு இருந்தாள். அவள் ஒரு உண்மையான காதல் தனக்கு கிடைக்கவேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஏங்கிவந்தாள். ஆனால் இப்ப அவள் பல்கலைக்கழகம் போன பின்பும், இன்னும் அப்படியான ஒரு காதலை அவளால் அடைய முடியவில்லை. ஒரு நாள், பல்கலைக்கழக விடுமுறை நாளில், தன்னந்தனிய சிறு பத்தைகள் நிறைந்த காட்டுப்பகுதியில், இயற்கையின் அழகையும் அங்கு பறந்து திரியும் பறவைகளையும் ரசித்தபடி நடந்துசென்றாள். அப்பொழுது அவளுக்கு எதிராக நல்ல உயரமும் அழகிய வலிமை பொருந்திய உடல் அமைப்பும் கொண்ட அவன் நடந்து சென்றான். "அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன் தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;" என புறநானுறு 83 கூறியதுபோல். இன்று செருப்பு அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நடையுடன் செல்லும் அவன் மேல் எனோ அவளுக்கு ஒரு ஈர்ப்பு தானாக ஏற்பட்டது. அது எப்படி, ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. அவள் கைவளைகள் கூட நெகிழ்ந்து கழல்கின்றன. அவளை அறியாமலே, அவள் திரும்பி தாமரை போன்ற தன் இரு பாதங்கள் நோகும் படி மெல்ல அடி எடுத்து வைத்து அந்த இளைஞனைப் பின் தொடர்ந்தாள். அவளுக்கு என்ன நடந்தது? இதுவரை அவள் அறியாத ஒன்றால் அவனிடம் ஈர்க்கப்பட்டாள். ஆனால் அவனோ ஒரு பேரழகி ஒருத்தி தன்னந்தனியாக, பூத்து குலுங்கும் மரங்களுக்கிடையில் தன்னைப் பின் தொடர்வதைக் எதேச்சையாக கண்டாலும், எனோ அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவேளை, கம்பர் கூறியது போல, "துணைத்த தாமரை நோவத் தொடர்ந்து, அடர் கணைக் கருங் கணினாளை ஓர் காளை தான், ‘பணைத்த வெம் முலைப் பாய் மத யானையை அணைக்க, நங்கைக்கு, அகல் இடம் இல்’’ என்கிறானோ? அம்பை நிகர்த்தும் கரும் கண்களை உடைய அவளை, அவன் பார்த்து, பருத்துப் பெரிதாக அழகாக விரும்பத்தக்க அவளின் மார்பகங்களை முழுவதுமாக அணைத்து ஏந்தக் கூடிய அளவுக்கு தனக்கு விசாலமான அகன்ற மார்பு இல்லையே என்று நொந்து போய்ப் அவளை பார்க்கவில்லை போலும்! என்றாலும் அவன் மனமும் கலங்க தொடங்கியது. அவன் கொஞ்ச நேரத்தால் ஒரு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டு அவள் நடந்து வரும் அழகை ரசித்தான். அப்பொழுது "பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, நாள் இரை கவர மாட்டித் தன் பேடை நோக்கிய பெருந்தகு நிலையே." என்பது போல, அங்கே ஒரு காட்டுக்கோழி ஈர மண்ணைக் கிண்டி இரையை வாயில் வைத்துக்கொண்டு தன் பெண் - கோழியைப் பார்ப்பதை கண்டான். அது அவனை ஆச்சரியப் படுத்தி, தன் ஈரம் கொண்ட இதயத்தை கிண்டி, காதல் என்ற இரையை தன் வாயில் வைத்துக்கொண்டு, அதை அவளுக்கு ஊட்டிட , கண் வெட்டாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அவளும் அவன் அருகில் வர, 'ஹாய்' என்று பேச்சைத் தொடங்கினான். அவள் தன்னை அறியாமலே, அவன் கையை பற்றினாள். அவனும் மெதுவாக அவளை தன்னுடன் அணைத்தான். இருவரும் மலர்களுடன் கொஞ்சி குலாவி, சிறகடித்து வட்டமிடும் வண்டுகளை ரசித்தபடி நடக்கத் தொடங்கினர். அவர்கள் புரிந்தோ புரியாமலோ ஏதேதோ பேசினார்கள். அவர்களுக்கு இப்ப மலர்களோ, வண்டுகளோ, தென்றல் காற்றோ, மரக்கிளைகளில் ஒன்றை ஒன்று கொத்தி காதல் புரியும் பறவைகளோ அல்லது தரையில் ஒன்றை ஒன்று துரத்தி, உரசி காதல் புரியும் விலங்குகளோ தெரியவில்லை அவனுக்கு அவள் மட்டுமே தெரிகிறாள். அவளுக்கு அவன் மட்டுமே தெரிகிறான். ஆசையில் ஒரு காதல் மொட்டாக அரும்பத் தொடங்கியது! அவர்கள் இருவரும் இசை மற்றும் கலையில் நாட்டம் கொண்டு இருந்ததுடன், இயற்கையின் மீது ஆழ்ந்த ஆர்வத்தையும் இருவரும் கொண்டு இருந்தது, இருவரின் மனமும் பலவகையில் இணைய அனுகூலமாக இருந்து, அவர்களை மேலும் மேலும் ஒன்றாக்கின. இதழ்கள் குவிந்து மொட்டாக இருந்த காதல் ஆசை மெல்ல மெல்ல மலரத் தொடங்கின. காதல் என்பது இப்ப அவர்களுக்கு பேரின்பம், பேருணர்ச்சி, பேராற்றலாக மலர்ந்து அவர்களின் இணைப்பு மேலும் வலுவடைந்து, விரைவில் அவை பிரிக்க முடியாத உறவாக இறுக்கமாக வளர்ந்தது. இருவரும் பல நேரம் மகிழ்வாக ஒன்றாக பொழுது போக்கியத்துடன், அவள் இதுவரை அனுபவித்திராத வகையில் அவளது இதயம் அவனிடம் சரணடைந்தது. "யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்" என வள்ளுவர் கூறியது போல, நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா என்பதை அவன் உணரும் நாள் விரைவில் வந்தது. என்றாலும் அவனுக்குள் ஒரு போராட்டம். இது அவனின் இரண்டாவது காதல், முதல் காதல் பல இழுபறிக்குள் இன்னும் சிக்கி தவிக்கிறது. அவனுக்கு அந்த முதல் காதலில் பல விடயங்களால் வெறுப்பு என்றாலும், இன்னும் அந்த முதல் காதலி முழுமையாக விலகிப் போகவில்லை. அவன் தன் பிரச்னையை இவளிடம் கூறி, தான் எப்படியும் முதல் காதலுக்கு ஒரு முடிவை விரைவில் கொண்டுவந்து உன்னையே மணப்பேன் என்று சபதமும் செய்தான். ஆனால் அவள் அதை உடனடியாக நம்பும் நிலையில் இல்லை. என்றாலும் அவன் மேல் கொண்ட காதல் மட்டும் இன்னும் இன்னும் வளர்ந்துகொண்டே இருந்தது! அவளுக்கு ஆசையில் ஓர் காதல் அது மட்டுமே! நாட்கள் கிழமைகளாக, மாதமாக நகர்ந்த போதிலும், அவனின் முன்னைய காதல் முடிவு இல்லாமல் இழுபறியில் இருந்த போதிலும், அவன் மேல் கொண்ட அவளின் 'ஆசையில் ஓர் காதல்' தணிந்த பாடாக இல்லை. அது இன்னும் பலத்துடன் அவள் இதயத்தில் வளர்ந்து கொண்டே இருந்தது. அவளுக்கு நன்றாக தெரியும், அவனின் முன்னைய காதல் முடிவு பெறாமல், அவனை நேசிப்பதில் பயன் இல்லை என்று. அதனால் அவள், அவனில் இருந்து விலகி இருந்தாலும், அந்த அவளின் காதலின் தணல் அணைந்தபாடில்லை. அது புகைத்துக்கொன்டே இருந்தது. காதல் ஒரு தந்திரமான விடயம் என்று அவளுக்குத் நன்றாகத் தெரியும். எனவே எதிலும் அவசரப் படாமல் நிதானமாக இருந்தாள். அவளின் ஆசையில் ஓர் காதல் வெற்றியா தோல்வியா என்று அவளுக்கு இன்னும் தெரியாது. அவள் இரண்டும் அற்ற நிலையில் தன் வீட்டின் முற்றத்து தரையில் இருந்தபடி நிலாவை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தாள். அது அவளின் காதல் தணலை திருப்பவும் ஊதி பற்றவைத்ததே தவிர, அதை அணைக்கவில்லை ஆசையில் ஓர் காதல் அவள் இதயத்தில் எரிந்து கொண்டே இருக்கிறது. அவன் நல்ல செய்தியுடன் வருவான் என்று ஏங்கிக்கொண்டே இருக்கிறது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. "வாராயோ வெண்ணிலாவே" "வாராயோ வெண்ணிலாவே சொல்லாயோ காதல் பாராயோ என்னைத் அன்பாய் தழுவாயோ போராட்டம் வேண்டாம் பொறுமையாய் கேட்கிறேன் தாராயோ உன்னை முழுதாக எனக்கு வைராக்கியம் விட்டு அருகில் வருவாயோ?" "சோராத என்மனம் ஏங்கித் துடிக்குது சேராத இதயமே வந்திடு என்னிடம் சீராக சிறப்பாக வாழ்வு தந்து தீராத ஆசைகளை நிறைவு ஏற்றி பாராட்டி உன்னைத் பல்லக்கில் தூக்கவா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. 'பாய்ப் படகு' ஒரு நாகரிகம் அதனின் வர்த்தகம் மற்றும் வணிகத்தின் அடிப்படையில் தழைத்து ஓங்குகிறது. இதற்கு மெசொப்பொத்தேமியா விதி விலக்கல்ல. அவர்கள் தமக்கு அருகில் உள்ள நகரங்களுடனும் நாடுகளுடனும் வர்த்தக தொடர்புகள் ஏற்படுத்த விரும்பினார்கள். இது போக்கு வரத்துக்கான வீதி பாதைகள் அமைக்கப்பட முன்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பொதுவாக நில பாதை மிகவும் கடினமாகவும் இடர்ப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தன. இதனால் சுமேரியர்கள் வேறு ஒரு மாற்று போக்குவரத்து வசதியை பொருட்கள் மற்றும் மக்களை கொண்டு செல்ல கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. அது, அந்த மாற்று வழி, நீர் போக்கு வரத்தாக வடிவம் பெற்றது. அதாவது முதலாவது படகு சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு மிக எளிமையான மரப் படகாக அமைந்தது. ஓவியன் ஒருவனின் சுமேரிய பாய்ப் படகின் உருவிளக்க படம் இங்கு தரப்பட்டுள்ளது. இதில், கொடிக்கம்பத்தில் எங்கு பாய் தொங்க விடப்படும் என்பதை கயிறு சுட்டிக்காட்டுகிறது. மேலும் இரு முன்னைய பாய் படகின் படங்கள் படகோட்டிகளுடன் இணைக்கப் பட்டுள்ளது. அந்த சுமேரிய படகின் பாய் [sails] சதுரமாக துணியால் செய்யப்பட்டதாக இருந்தது. அனால் அதன் கோணத்தையோ திசையையோ மாற்ற முடியவில்லை. உதாரணமாக படகு போக வேண்டிய திசையில் காற்று வீசினால், பயணம் நன்றாக அமைந்தது. ஆனால் அப்படி இல்லை என்றால், அவர்கள் தங்களுக்கு சாதகமாக காற்று அடிக்கும் மட்டும் காத்து இருக்க வேண்டி இருந்தது. அதாவது இந்த நீர் போக்கு வரத்து சாதகமான காற்று வீசலில் தங்கி இருந்தது. இந்த படகுகள் பழமையான வடி வமைபாக primitive in design] இருந்தது. எப்படியாயினும் இந்த பாய்ப் படகுகள் மெசொப்பொத்தேமியா மக்களுக்கு வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கு உதவி செய்தது. அது மட்டும் அல்ல நீர்பாசனத்திற்கும் மீன் பிடித்தலுக்கும் கூட இது உதவி செய்தது. உதாரணமாக நீர் ஓட்டத்துடன் அதன் திசையில் [downstream] பாய்ப் படகில் சென்று தமது வலைகளை வீசுகிறார்கள். அதன் பின் அங்கு தங்கி காத்து இருந்து தமது பிடித்த மீன்களுடன் கரை திரும்புகிறார்கள். அவர்களால் ஒரு அளவிற்கு அதிகமாக பொருட் களையோ அல்லது மக்களையோ கையாள முடியா விட்டாலும், அந்த அவர்களின் படகு அமைப்பு [boat design] வருங்கால படகின் வளர்ச்சிக்கு, ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு கூட , இன்னும் மூல /அடிப்படை கருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்க்கும் போது புறநானூறு - பாடல் 66 நினைவிற்கு வருகிறது. இங்கு வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து, காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டு கிறார். அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர்களின் காலத்திலேயே காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள், ''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி வளிதொழில் கண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!" ஆகும். (முக்கியச் சொற்களின் பொருள்: வளி -காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்) ''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!'' என்று உரையாசிரியர்கள் இப்பாடல் வரிகளுக்கு பொருள் எழுதி வைத்துள்ளனர். அந்த தமிழர்களின் முனோர்களே இந்த சுமேரியர்கள் ஆகும் ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  15. "நானே வருவேன்" "பரதவம்சத்தில் பிறந்தவனே, எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு வீழ்ச்சியும், அதர்மத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் என்னை பிறப்பித்துக்கொள்கிறேன்" [பகவத்கீதை 4.7] உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, 'நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார் என்று என் அம்மா சொன்னது ஞாபகம் வருகிறது ஆனால் இவை எல்லாம் புராணத்தில் தான் காண்கிறோம். இந்த புராணங்கள் வாய் மொழிமூலம் சில நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்து, கி பி இரண்டாம் ஆண்டளவில் அல்லது அதற்குப் பின் எழுத்தில் எழுதப் பட்டவையாகும். நான் ஒரு கிழமைக்கு முன் தான் திருமணம் செய்து, என் மனைவியை, அவளின் சொந்த கிராமத்தில் இருந்து வெளியே, தலை நகரத்துக்கு கூட்டி வந்துள்ளேன். இங்கு, கொழும்பையும் உள்ளடக்கிய மேல் மாகாணத்தில், தமிழ் பேசும் மக்கள் மொத்தமாக [ தமிழர் + தமிழ் பேசும் முஸ்லீம்] 15 % தான் வரும். ஆனால் கொழும்பு என்று மட்டும் எடுத்தால் 50 % அல்லது சற்றுக் கூட தமிழ் பேசும் மக்களாக இருப்பார்கள். எனவே கொழும்பில் வாழ்வது பெரிதாக வித்தியாசம் தெரியாது. நான் 2019/04/21 ஞாயிறு காலை, சில முக்கிய விடயங்களாக, வேலைத் தளத்துக்கு போகவேண்டி இருந்தது. எனவே அப்பொழுது, 'பயப்பட வேண்டாம் ... தனியே இருக்கிறேன் என்று .. தொலைக்காட்சி பெட்டி இருக்குது .. தொலைபேசி இருக்குது .. நீ அதை பாவிக்கலாம் .. நீ என்னில் நல்ல காதல் பக்தி கொண்டு இருப்பதால் .. உனக்கு ஒரு சங்கடமோ .. தேவையோ ஏற்பட்டால், 'நானே வருவேன்' [ஒரு பகிடியாக] மற்றது பொன்னம்பலவாணேசுவரர் கோயில் மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் .. இங்கிருந்து சொற்ப தூரத்திலேயே .. ஒரு 15 அல்லது 20 நிமிட நடக்கும் தூரத்திலேயே ... இரண்டும் அருஅருகே இருக்கு .. நீ விரும்பினால் போய் பார்த்தும் வரலாம்', என்று அன்பாக அவள் கையை பிடித்து அணைத்துக்கொண்டு கூறி விடை பெற்றேன். முதன் முதல் பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் பெற்றோர் சொல்லும் பயப்படாதே என்ற உபதேசம் – முரட்டு சிறுவர்களோ, சிறுமியோ, உன்னை படுத்தினால் பயப்படாதே, டீச்சரிடம் சொல்லு என்று சொல்லுவது போலத்தான் அவளிடம் சொல்லிவிட்டு, கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்துவிட்டு, பேரூந்து தரிப்பு நிலையத்துக்கு போனேன். ஏன் என்றால் அவள் கொழும்புக்கு புதிது என்பதால்! "மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்" [ஏசாயா 35:4] நான் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் (St. Anthony's Shrine) அருகில் பேரூந்தில் ஏறி வேலைக்கு போனேன். நான் பொதுவாக எந்த ஆலயமும் போய் கடவுள் / தூதுவர் இப்படி எவரையும் வணங்குவதில்லை. 'நானே வருவேன்' என்றவர் வந்தபின்பு வணங்குவோம் என்று அதை பொருட் படுத்துவதில்லை. பேரூந்தில் இருக்கும் பொழுது கொஞ்சம் என் அறிவுக்கு எட்டியவரை யோசித்தேன். அதற்குப் பின்பு எந்த பெரும்பான்மையான மதங்களின் தூதுவர்களோ இல்லை கடவுளோ 'நானே வருவேன்' என்று வந்ததாக எந்த பிற்கால புராணமும் வரலாறும் இல்லை! நான் என் வேலையில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த தருவாயில், திடீரென என் சக நண்பர் வந்து ஒரு அதிர்ச்சி தகவல் கூறினார். 'இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் சுமார் 290 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், அதிலும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலேயே பெரும் உயிர் சேதம் என்றும் கூறினார். நான் உடனடியாக என் மனைவிக்கு தொலை பேசி எடுத்தேன். ஆனால், அவரின் தொலைபேசி பதில் இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. உடனடியாக வாடகை மோட்டார் [Taxi] எடுத்துக்கொண்டு வீடு போனேன். வீடு பூட்டி இருந்தது. எனவே தேவாலயத்தைச் நோக்கி நடக்க தொடங்கினேன். அப்ப அந்த வழியில் இருந்த, நான் வழமையாக போகும் பலசரக்கு கடைக்காரர் , என்னைக் கண்டதும், ஓடி அருகில் வந்து, உங்க மனைவி, மெழுகுதிரியும், அர்ச்சனை சாமான்களும் வாங்க்கிக்கொண்டு, தான் தேவாலயத்துக்கும் சிவன் கோயிலுக்கும் போவதாக கூறிச் சென்றதாக கூறினார். அது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது, தேவாலயம் சுற்றி ஒரே ராணுவம். கிட்ட போக எவரையும் விடவில்லை. இன்னும் அங்கிருந்து இறந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் , தேவையான முதல் உதவி செய்து வைத்தியசாலைக்கு அவசரம் அவசரமாக கொண்டு போய்க்கொண்டு இருந்தார்கள். எனவே நான் முதலில் பக்கத்தில் இருந்த சிவன் கோவில் போனேன். நான் பதறிக்கொண்டு வருவதைக்கண்ட குருக்கள், கிட்ட வந்து, நான் உங்களை , சிலவேளை பேரூந்து தரிப்பில் நிற்கும் பொழுது கண்டுள்ளேன், ஆலயத்தில் ஒரு நாளும் காணவில்லை, என்ன நடந்தது என்று ஆறுதலாக அமைதியாக கேட்டார். நான் என் தொலைபேசியில் இருக்கும் மனைவியின் படத்தை காட்டி, இவர் என் மனைவி, இவர் கிட்டடியில் தான் என்னை திருமணம் செய்து கொழும்பு வந்தவர், ஆலயம் அர்ச்சனை செய்ய வந்ததாக அறிந்தேன், இவரை பார்த்தீர்களா என்று கவலையாகக் கேட்டேன். குருக்கள் என் முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டு, பயப்பட வேண்டாம், அவளுக்கு ஒன்றும் நிகழவில்லை. நல்ல காலம் அவர் என்னுடன் ஆலய வரலாறு, பெருமைகளை, கடைசி நேரத்தில் கேட்டுக் கொண்டு இருந்ததால், குண்டு வெடிக்கும் பொழுது இங்கு தான் நின்றார். எனினும் அந்த சத்தம், அதிர்வு அவரை பயப்படுத்தி, அதனால் மயங்கி விழுந்து விட்டார், நான் நோயாளர் ஊர்தியில் (Ambulance) பக்கத்தில் இருந்த சர்வதேச மருத்துவ - அறக்கட்டளை தனியார் வைத்திய சாலையில் [International Medi-Trust (Pvt) Ltd] சேர்த்துள்ளேன் என்று கூறினார். மேலும் அவர் உண்மையில் அவள் கொஞ்சம் முந்தியே தேவாலயம் போய் இருக்கவேண்டும். இன்றைக்கு என்று எம் ஆலய மணியில் ஏற்பட்ட திடீர் கோளாறால், கொஞ்சம் சுணங்கிவிட்டது. உங்க மனைவியின் கடவுள் பக்தி, ஆண்டவனை குளிர்ச்சிப்படுத்தி, அவரை அந்த விபத்தில் இருந்து காப்பாற்ற, இப்படி செய்திருக்கலாம் என்று ஒரு போடும் போட்டுவைத்தார். எனக்கு இப்ப அவரின் 'கடவுள் நம்பினாரை விடமாட்டார் 'நான் வருவேன்' என்று சரியான நேரத்தில், எதோ ஒரு வழியில் காப்பாறுவார்' என்ற கூற்றை எதிர்த்து வாதாட விரும்பவில்லை. என்ன இருந்தாலும் என் மனைவியை கதையினால் தாமதித்ததே அவர்தானே! ஆனால் என் மனம் 'தேவாலயத்தில் இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் அநேகமானோர் தமிழரே, அதிலும் சிலர் சைவரே! அப்படி என்றால் ஏன் அவர்களை காப்பாற்றவில்லை. உயிர்களில் ஆண்டவனுக்கு வேறுபாடு இல்லையே!' என்று அலட்டிக்கொண்டு இருந்தது. நான் உடனடியாக வாடகை மோட்டாரில் அந்த குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு போனேன். நானும் அவருக்கு அருகில், அவர் இருந்த அறைக்குள் போக, அவரும், கண் துறக்க நேரம் சரியாக இருந்தது. 'நான் வருவேன் , என் செல்லத்துக்கு பக்கத்தில் எப்பவும்' என்று ஒரு நம்பிக்கைக்காக , தெம்பு கொடுப்பதற்காக சொல்லிக்கொண்டு அணைத்து ஒரு முத்தம் கொடுத்தேன்! அவள் தான் அந்த குருக்களிடம் முதலில் ஆசீர்வாதம் பெற்று, அங்கு சிவனை வழிபட்டு பூசை செய்தபின்பே வீடுபோவோம் என்று என்னிடம் உருக்கமாக கெஞ்சி கேட்டார். அந்த நேரம் அதற்கு ஆமா போடுவதைவிட எனக்கு வேறுவழி தெரியவில்லை? 'நான் வருவேன்' என்று அவரை காப்பாற்றியது கடவுளா ? குருக்களா? இல்லை தற்செயலான ஒன்றா ? இதைத்தான் பாக்கியம் [அதிர்ஷ்டம்] என்பதா? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. "நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!" "நெருங்கி அருகில் நீ வந்தால் நெடுநாள் கனவு நனவு ஆக நெஞ்சம் இரண்டும் ஒன்று சேர நெற்றியில் குங்குமம் நான் இட நெருப்பாய் காதல் பற்றி எரிய நெடும்பொழுதும் சிறு பொழுதாய் ஆகுமே!" "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பதால் நெறியிலாதார் போல் வீணராய்ப் பிறக்காமல் நெய்த் துடுப்பால் அன்புத்தீ ஏற்றி நெருக்கம் கொண்டு அருகில் வராமல் நெடுநாள் கனவை சிதைப்பது எனோ? நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] நெருநல் - நேற்று; சற்றுமுன் நெறியிலாதார் - அசடர், கீழோர் நெய்த்துடுப்பு - சுருவம் [Spatula, used especially in Vēdic sacrifices / ஸ்பூன் வடிவத்திலுள்ள ஒரு யாகம் செய்யும் பாத்திரம்]
  17. “கீதை பிறந்தது" "கீதை பிறந்தது தர்மத்தை விளக்கவே மேதை கிருஷ்ணன் அருச்சினனுக்கு போதிக்கவே! காதை கொடுத்துக் கேட்டவன் தயங்கினான் பாதை புரியாமல் போரில் நின்றானே!" "தத்துவவாதியின் அறிவுரையோ ஒரு பக்கம் தத்துவம் சொன்னவனே மீறியதோ மறுபக்கம்? தந்திரம் நிறைந்த மாயோனின் கூத்தில் தயாளகுணன் கர்ணன் மடிந்ததும் தெரியாதோ?" "தர்மத்தை பாதுகாக்கப் பூமிக்கு வந்தவனே அர்த்தமே புரியாமல் வஞ்சகம் புரிந்தானே! வார்த்தையில் அழகாய்க் கூறிய அவனே தேர்ந்து எடுத்ததோ பொய்யும் பித்தலாட்டமுமே!" "அன்பை விதைத்தால் மனிதம் உயரும் அறம் நிலைநாட்டினால் பண்பு மலருமே! அவதாரம் எடுத்து போதித்த கொள்கை அநீதி வழியில் சென்றது ஏனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. "மீட்டாத வீணை.." வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும் நிறைந்த யாழ்ப்பாண மாவட்டமானது எழில் கொஞ்சும் கடற்கரையினையும் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலப்பகுதிகளில் அதிக வெப்பநிலையினையும் டிசம்பர் - பெப்ரவரி வரை குளிரான காலநிலையினையும் கொண்டு இருப்பதுடன் தரைத் தோற்றத்தினை அவதானிக்கு மிடத்து கரையோர சமவெளியினை கொண்டும், அழகியத் தீவுகளினையும், பல்லுருவத்தன்மை கொண்ட கடற் கரைகளினையும், பாரிய மணல் மேடுகளினையும், நாற்புறமும் பனை சூழவும் காணப்படுகின்றது. அங்கு தான் கவிதா என்ற ஒரு இளம் பட்டதாரி ஆசிரியை, பெற்றோருடனும் சகோதர, சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்தார். அழகு மற்றும் நாகரிகம் என்ற வார்த்தைகளுக்கு அவளே உதாரணம். அவள் படிக்கும் காலத்திலும் சரி, இன்று ஆசிரியையாக பணிபுரியும் காலத்திலும் சரி, அவளின் கண் பார்வைக்காக, காதலுக்காக ஏங்காத ஆண்கள் மிகமிகக் குறைவே என்று சொல்லலாம். மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போல கூந்தலுடனும், காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடனும், அழகான அரும்பை போல செவ் இதழுடனும், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போல ஒளி விடும் நெற்றியுடனும், குழழின் இசையையும், யாழின் இசையையும், அமிர்தத்தையும் கலந்த இனிய சொற்களை இயல்பாக கூறும் திறனுடனும், தலையில் சூடும் ஒரு பூவைக் கூடச் சுமையாக உணரும் நூலை விட இளைத்த இடையுடனும் அவள் கண்களுக்கு விருந்தாக இருந்தாள். என்றாலும் அவளிடம் தற்பெருமையோ தலைக்கனமோ இல்லை. எல்லோரையும் மதித்து நாகரிகமாக பழகுவாள். ஆனால் எனோ எந்த ஆணிடமும் சிக்காமல், 'மீட்டாத வீணை' யாக, அவளுடைய உணர்வுகள், வீணையின் தந்திகள் போல, இன்னும் கேட்கப்படாத, மீட்டபடாத அழகான மெல்லிசைகள் நிறைந்து, அதை வாசிக்க பொருத்தமான ஒருவனுக்காக, தனக்குப் பிடித்த சரியான ஒரு வாழ்க்கை துணைக்காக, அதையும் பெற்றோர்கள் முதலில் விசாரித்து தேடட்டும், அதன் பின் இறுதி முடிவைத் தானே எடுப்பேன் என்று, பெற்றோரிடம் அந்த பாரத்தைக் கொடுத்துவிட்டு, தானும் தன்பாடுமாக இருந்துவிட்டாள். "மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்.. வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ.. தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை.. பளிங்கான பதுமை இது பழகாத இளமை.." தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற கவிதாவுக்கு பொருத்தமான மற்றும் அவளுக்கு பிடித்த வரன், பல இழுபறிகளுக்கு பின் ஒருவாறு கண்டு பிடித்தார்கள். அவன் பெயர் எழிலன். லண்டனில் மேற்படிப்பு முடித்து, அங்கேயே ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் அதே நேரம் அங்கே ஒரு விஞ்ஞானியாக ஆராச்சியிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தான். அடுத்த சில மாதத்தின் பின் விடுதலையில் அவன் யாழ்ப்பாணம் வருவதால், அதற்கு முதல், அவனின் பெற்றோர்கள் கவிதாவை பெண் பார்க்க மற்றும் அவளின் விருப்பத்தையும் நேரடியாக அறிய அவளின் வீட்டிற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை சென்றார்கள். ஆனால் கவிதா, பெற்றோரின் தேடுதல் நல்ல வரனாக, நல்ல படித்த, பண்பாடுள்ள குடும்பத்தில் இருக்கிறது என்றாலும், தானும் பார்த்த பின்பு தான் முடிவு சொல்லுவேன் என்று கொஞ்சம் பிடிவாதமாக முதலில் இருந்துவிட்டாள். என்றாலும் அவளின் பெற்றோர்கள் அவனின் சில படங்களை, விடீயோக்களை, அவனின் தாயின் தொலைபேசியில் இருந்து எடுத்துக் காட்டி சம்மதத்தை பெற்று, திருமணத்துக்கான திகதியையும் குறித்தனர். எழிலன், தங்கள் வருங்கால மருமகன், கட்டாயம் தங்கள் மகள், கவிதாவின் அழகை மற்றும் குணங்களைப் பாராட்டி அவளுக்கு மகிழ்ச்சியைத் தருவார் என்று நம்பினார்கள். எழிலன் விரிவுரையும் ஆராச்சியும் செய்வதால், அதில் அவன் கூடுதலாக தன் கவனத்தை முழுக்க முழுக்க கொண்டு இருப்பதால், இரண்டு கிழமை விடுதலையில் தான் அவன் யாழ்ப்பாணம் வந்தான். அது இரு பக்க பெற்றோருக்கும் ஏமாற்றமாக இருந்தாலும், திருமணத்தின் பின், உடனடியாகவே தன்னுடன் கவிதாவையும் கூட்டிச் செல்லும் ஏற்பாடுகளை முன்னமே செய்து கொண்டு வந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. எழிலன் யாழ்ப்பாணம் வந்து மூன்றாம் நாள் திருமணம் ஆகஸ்ட் தொடக்கத்தில் நிச்சயிக்கப்பட்டது. எனவே ஆக ஒரு நாள் தான் இருவரும் - கவிதாவும் எழிலனும் - சந்தித்து கதைக்க வாய்ப்பு கிடைத்தது. என்றாலும் இருவரும் மகிழ்வாக கூடுதலாக தங்கள் தங்கள் இன்றைய அபிலாசைகளையும் மற்றும் வருங்கால கனவுகளையும் பகிர்வதிலும் அலசுவதிலும் நேரம் சரியாகப் போய்விட்டது. கவிதா தானும் அங்கு ஒரு பொருத்தமான ஒரு வேலை செய்ய விரும்பினாள், ஆனால் அதற்கு தன்னுடைய இப்போதைய இலங்கை படிப்பு அதிகமாக போதாது என்பதால், தான் ஒரு மேல் படிப்பு தன் துறையில் படிப்பது நல்லது என்ற தன் எண்ணத்தையும் மற்றும் தாம்பத்திய வாழ்வை மகிழ்வாக முழுமையாகவும் ஒன்றாக ஒற்றுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற அவாவையும் வெளிப்படுத்தினாள். இன்று நாட்டில் சில, பல வீணைகள் முழுமையாக மீட்டபடாமலே புழுதியில் வீழ்கின்றன. மகிழ்வாக தொடங்கும் திருமண வாழ்வு, பாதியிலேயே பிரிவுக்கோ, விவாகரத்துக்கோ போய்விடுகின்றன, அப்படி இல்லாமல் தான் மதிக்கும், வணங்கும் கலைவாணியின் கைகளும் பட்டு [ துணை கொண்டு], அது நிரந்தரமாக அன்பு, காதல், விட்டுக் கொடுப்பு, ஒருவரை ஒருவர் மதித்தல், புரிந்துணர்வு .... என்று வீணையின் சரங்கள் தொடர்ந்து இசைத்திடாதா! அந்த இசைகள், இன்பங்கள் இதயத்தை என்றும் நிரப்பவேண்டும் என்பதே அவளின் சுருக்கமான அவா ! . எழிலன் பெரிதாக சமயம், தெய்வங்களில் நம்பிக்கை இல்லா விட்டாலும், அதை அவன் புரிந்துகொண்டான். அவனுக்கும் அவளின் அழகிய உடல் மற்றும் உள்ளம் என்ற வீணையின் சரங்களுடன் விளையாடி மீட்க ஆசை இல்லாமல் இல்லை. என்றாலும், அவளின் முதல் ஆசை முக்கியம். அது நிறைவேறும் மட்டும் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும் என்ற தன் அறிவுரையையும், தன் பல்கலைக்கழகத்திலேயே அதற்கான ஏற்பாடு தான் உடனடியாக செய்வதாகவும் இந்த செப்டம்பரில் இருந்து அங்கு தொடரலாம் என்று உறுதியும் கொடுத்தான். அதே நேரம், தன் ஆராச்சியையும் முழுக்கவனம் செலுத்தி, அதற்குள் முடித்துவிடுவேன் என்ற தன் ஆதங்கத்தையும் அவளுக்கு ஒரு முதல் முத்தத்துடன் கூறினான். அவளும் தன் முதல் அணைப்பையும் முத்தத்தையும் மகிழ்வாக அவனுக்கு கொடுத்தாள்! என்றாலும் அவள் இதயம் தனக்குள் "வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம் கானல்கள் நிறைவேற்றுமோ? ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே? தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி தொடும்நேரம் தொலைவாகுதே? மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது என் எழிலனே?" என முணுமுணுத்தபடி இருந்தது. அவள் நினைத்தது என்னவோ, நடக்கப் போவது என்னவோ? தான் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தாம்பத்திய வாழ்வும், பிந்திப் போடாமல் அதனுடன் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதே அவளின் ஆசை! ஆனால் தன் ஏமாற்றத்தை - தான் இன்னும் சில ஆண்டு 'மீட்டாத வீணை' யாக இன்னும் இருக்கப் போவதை - அவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. முக்கியமாக அவனுக்கும் இருபக்க பெற்றோர்களுக்கும். காலையில் நடந்த திருமண நிகழ்வும், அதைத் தொடர்ந்து அன்று மாலையே ஆரம்பித்த திருமண வரவேற்பு ஆர்பாட்டமும் குதுகழிப்பும் அடங்கி விருந்தினர்கள் மண்டபத்தை விட்டு வெளியேற, முன் யாமம் ஆகிவிட்டது. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் அவர்களுள் இருந்த சோர்வு மற்றும் நிம்மதியின் காரணமாக, ஹோட்டலில் அவர்அவர்களுக்கு என ஒதுக்கிய அறைகளில் நித்திரைக்கு போய்விட்டார்கள். அந்த பெரிய ஹோட்டலில் ஒன்றிரண்டு அறைகளில் மட்டுமே இன்னும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பெரிய அறையில் கவிதா, எழிலன் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மட்டும் இன்னும் கதைத்துக்கொண்டு இருந்தனர். கவிதா, தன் கலைந்த அலங்காரத்தை ஆளுயர கண்ணாடியின் முன் சரிபடுத்திக்கொண்டு இருந்தாள். இளநீல நிற புடவையுடன் நீண்ட கூந்தல் பின்னலிட்டு தலைநிறைய மல்லிகை இன்னும் சூடியபடி இருந்தது. தன் கயல்விழிகளுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக கண்மையை தீட்டி வானவில் புருவங்களுக்கு இடையில் கோபுர வடிவ பொட்டும் வைத்து இருந்தாள். அதன் கீழ் சிறிதளவு குங்குமம் இப்ப தாய் தன் கையால் வாழ்த்தி வைத்தாள். கைகள் முழுவதும் அழகு வளையல்களும் கழுத்தில் சங்கிலியும் சிறிய ஜிமிக்கி வைத்த காதணியும் அணிந்து அழகு பதுமையென கவிதா அங்கு இருந்தாள். படபடக்கும் விழிகளுடனும் துடிதுடிக்கும் இதயத்துடனும் குளிரூட்டப்பட்ட அறையிலும் எனோ வேர்த்து ஈரமான உள்ளங்கைகளுடனும் புதுப்பெண்ணிற்கு உரிய சில அடக்கத்துடனும் அளவளாவிக் கொண்டு இருந்தாள். பக்கத்தில் எழிலன் எல்லாவற்றையும் கவனித்தபடி, சிரித்து ஆனால் கொஞ்சமாக அவளுடன் சேர்ந்து மற்றவர்களுடன் கதைத்துக் கொண்டும் இருந்தான். நேரம் சாமம் ஒரு மணி ஆகிவிட்டது. அவளது தாயும் அத்தையும், இனி கதைத்தது காணும் எல்லோரும் படுக்க போவோம் என்று, புதுமானத் தம்பதிகளை அவர்களுக்கு என ஒதுக்கிய அறைக்கு அனுப்பிவைத்தனர். அவ்வறை முழுவதும் பூக்களாலும், வாசனை திரவியத்தின் நறுமணத்தாலும் நிறைந்து இருந்தது. அப்ப தான் அவளுக்கு ஞாபகம் வந்தது, இது முதல் இரவு என்று. முதன்முதலில் இருவரும் மிக நெருக்கமாக தனி அறையில் சந்திப்பதால், அவர்களுக்குள் ஒரு ஆர்வத்தின் தீப்பொறி இருந்தது. அவள் எழிலனை ஆசையாக பார்த்தாள். அவன் எந்த ஒரு சலனமும் இல்லாமல், சர்வசாதாரணமாக, தன் மடிக்கணினியை எடுத்து, கவிதாவின் உயர் படிப்பிற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் தீவிர கவனம் செலுத்தியதால் அவர்களது உறவு அன்று மெதுவாகப் போய்விட்டது. ஒருவேளை தன்னை கட்டுப்படுத்துவதற்காக அவன் அப்படி செய்திருக்கலாம்? என்றாலும் கொஞ்ச நேரத்தால் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிவிட்டார்கள். அடுத்தநாள் காலை, கவிதா எழிலனை தன்னுடன் ஹோட்டலில் இருக்கும் பூங்காவில், காலை உணவுக்கு முன் நடக்க அழைத்தாள். அமைதியான பாதையில் அவர்கள் நடந்து செல்லும்போது, அவனுடன் தனது இதயத்தின் ஒரு பகுதியை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிவு செய்தாள். அங்கு மலர்கள் வண்ணம் வண்ணமாக அழகாக பூத்து பூத்து குலுங்கி இருப்பதையும், அதைச் சுற்றி வண்டுகள் ரீங்காரம் செய்தபடி மொய்ப்பதையும் காட்டி, இப்படியான இயற்கைக்காட்சிகளைப் ரசிப்பதில்லையா என்று கொஞ்சலாக கேட்டாள். அவன் மௌனமாக அவளைப்பார்த்து, அவளின் கன்னத்தை மெதுவாக தடவி, கூந்தலை வருடினான். அவள் இதுதான் தருணம் என்று, "வாழ்க்கை இந்த சின்ன சின்ன சந்தோஷங்களால் நிரம்பியது. நாம் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்." எந்த வெட்கமோ இன்றி, அவனை கண் வெட்டாமல் பார்த்தபடி கூறினாள். அவளின் வார்த்தைகள் எழிலனிடம் எதிரொலித்தது. அவன் அவளை அணைத்தபடி, முதலில் நீ படிப்பை தொடங்கு, நாம் மெதுவாக வாழ்க்கை என்ற வீணையை வாசிக்க தொடங்குவோம். அவள் நெருங்க நெருங்க, எழிலன் கவிதாவை புதிய வெளிச்சத்தில் பார்க்க ஆரம்பித்தான். வாழ்க்கையின் மீதான அவளது ஆழ்ந்த அன்பையும், எளிமையான விஷயங்களில் அழகைக் காணும் அவளது திறனையும் அவன் பாராட்டினான். "வாழ்க்கை வழங்கும் அனைத்தையும் நான் பார்க்க விரும்புகிறேன், உன்னுடன் என் பக்கத்தில்," அவன், அவள் காதில் சொன்னான்! அவனுடைய வார்த்தையில் கவிதாவின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. அவள் மகிழ்வாக எல்லோருக்கும் போய்வருகிறேன் என்று கூறி, விமானத்தில் எழிலனுடன் ஏறினாள், ஆனால் இன்னும் சரியாக, முறையாக 'மீட்டாத வீணை' யாகவே ! ஆனால் அது விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  19. "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்" "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை" செயற்கைக் கால்களைப் பெற வரிசையில் நின்ற ஒரு இளம் தாய், கால் கருகிய தன் சேயை இடுப்பில் காவி வந்திருந்தாள். 'என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ’ என்று கைகளை நீட்டிய படி அவள் அங்கு கெஞ்சினாள். அந்தச் சிறுவன் வளர வளர, தன் வாழ்க்கையில் எத்தனை பொய்க் கால்களுக்காக அலைய வேண்டும்?’ - 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்னும் நூலில் தீபச்செல்வன் ஈழ மக்களைப் பற்றி எழுதிய வரிகள் இவை. ''யுத்தம் தின்றது போக எஞ்சியிருப்பவற்றை ராணுவத்திடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதே போருக்குப் பிந்தைய பெரும் போராக மக்கள் மீது கவிந்திருக்கிறது'' என்ற தீபச்செல்வனின் கவலைக்கு ஒரு அத்தாட்சியாகக், கிளிநொச்சியின் மையப்பகுதியில், போரினால் சிதைந்த கடந்த காலத்தின் எதிரொலிகளுக்கு மத்தியில், ஒரு இளம் உயர்நிலைப் பள்ளி மாணவன், 'நீதிவானவன்' தன் பெற்றோருடனும் இளைய சகோதர, சகோதரியுடனுன் வாழ்ந்து வந்தான். "நான் படித்த கிளிநொச்சி மத்தியக் கல்லூரிக்குள் போரில் காலை இழந்த அப்பண்ணா என்ற அண்ணா ஒருவரைத் தேடும் போது என்னைப் பாதித்த நிகழ்வுகள் தான், நூலின் முதல் பகுதியை எழுதத் தூண்டின. உண்மையில் கால்களை இழந்த அப்பண்ணாக்களின் நகரமாக கிளிநொச்சி மாறியிருந்தது! எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். பாரம்பரிய வாழ்விடங்களில் வாழ்ந்த மக்களை, வனாந்தரங்களில் வீசிச் சென்றிருக்கிறது போர். அதுமட்டும் அல்ல, அனைத்துப் பிரதேசங்களிலும் சில பல இந்து ஆலயங்களை அழித்துவிட்டு புத்தரைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது.'' மகாவம்சம் / முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில், [40,41] மன்னர் மணிஹிரா - விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை - விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. இங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது அது மேலும் 'இலங்கை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே சைவ ஆலயங்களை அளிப்பதும் புத்தரை நிறுவுவதும் ஒன்றும் புதுமை இல்லை. மகாசேன மன்னன் கிறிஸ்துவுக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் (275–301 AD) இதை தொடங்கி வைத்தான். அவர் கூறிய வார்த்தை முற்றிலும் சரி என்பது போல கிளிநொச்சி மத்தியக் கல்லூரி மாணவன், நீதிவானவனனின் தந்தை, போரின் போது ஊனமுற்றவர், மற்றும் அவரது தாயார், இன்று சொற்ப ஊதியம் பெறும், தொட்டாட்டு வேலை வீடுகளிலும் வயலிலும் செய்யும் கூலித் தொழிலாளி, பெயர் 'அகலெழில்'. அவள் தன் பெயருக்கு ஏற்ற அகன்ற எழில் கொண்டவள். அவர்களின் வீடு இன்று ஒரு குடிசையாக ஒரு ஒதுக்குப்புறத்தில் மாற்றப்பட்டு விட்டது. "சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய் அகலெழில் அல்குல் அவ்வரி வாடப் பகலுங் கங்குலு மயங்கிப் பையெனப் பெயலுறு மலரிற் கண்பனி வார" ஈழத்து பூதந் தேவனார் என்ற இலங்கையை சேர்ந்த சங்க கால புலவர் கூறியது போல அவள் பெரிய தோள் மெலிந்து, அகன்ற எழிலுடைய அல்குலின் அழகிய வரிகள் வாட, பகலும் இரவும் மயங்குதலுற்று, மழை பெய்தலை ஏற்ற மலரைப் போலக் கண்ணில் நீர்பெருகி வழிய, ஆனால், உறுதியுடனும் பொறுமையுடனும் அல்லும் பகலும் உழைத்து, குடும்பத்தை காப்பாற்றி வந்தாள். ஈழத்து பூதந் தேவனார் கிருஸ்துக்கு பின் 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவராவார். அதாவது சிங்கள மொழி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் தோன்ற முன்பு, தமிழ் மொழி, ஈழத்தில் இத்தனை இலக்கிய நயத்துடன் வாழ்ந்தத்துக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகும். நீதிவானவன், மூத்த மகனாக குடும்ப பொறுப்பு சுமைகளையும் தாயுடன் சேர்ந்து சுமந்தான். அதனால், தன் தாய் நோய்வாய்ப்படும் போது அல்லது போகமுடியாத சூழ்நிலை வரும் பொழுது, தாய்க்குப் பதிலாக அவன் வேலைக்குப் போவதும் உண்டு. ஒரு முறை நீதிவானவன் ஒரு பண்ணை முதலியார் மாளிகைக்கு வேலைக்கு போன பொழுது, அவரின் மாளிகைக்கு வெளியே உள்ள பழைய மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்களை வைக்கும் கொட்டகை ஒன்றைத் துப்பரவு செய்யும் பொழுது, புறக்கணிக்கப்பட்ட பழைய பள்ளி புத்தகங்களின் குவியல் ஒன்றைக் கண்டான். அது தன் படிப்புக்கு உதவும் என்பதாலும், அவை கைவிடப்பட்ட நிலையில் அங்கு இருந்ததாலும், நேர்மையற்ற பாதையில் தான் நடக்கிறேன் என்று அறியாமல், ஒரு சில தனக்குத் தேவையான புத்தகங்களை மட்டும் எடுத்து, வீட்டுக்கு கொண்டு போனான். இந்த அவர்களால் மறக்கப்பட்ட, தூசு படிந்த புத்தகங்களின் பக்கங்களை அவன் ஒவ்வொன்றாக படித்த பொழுது, அவனுக்குள் ஒரு மாற்றம் வேரூன்றத் தொடங்கியது. ஒவ்வொரு பக்கத்தையும் அவன் கவனமாக வாசிக்க வாசிக்க, அவனது கல்வி செயல்திறனும் உயர்ந்தது. ஆனால் ஒரு சில மாதங்களுக்குள் விதி அவனை சோதிக்கத் தொடங்கியது. அவனின் அந்த நடவடிக்கைகள் அம்பலமானது, அதன் விளைவுகள் கடுமையாக இருந்தன. பணக்கார நில உரிமையாளர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, நீதிவானவனனை சீர்திருத்த பள்ளியில் ஓர் சில மாதம் அடைக்கப்படுவதற்கும் அகலெழிலியின் குடும்பத்தை கிராமத்திலிருந்து வெளியேற்றுவதற்கும் வழிவகுத்தது. நீதிவானவன் தனது கல்வியைத் திரும்பவும் தொடங்கிய பொழுது, புதிய கிராமத்தின் அமைதியான சூழல் அவனுக்கு ஆறுதல் கொடுத்தது. ஒரு நாள் அகலெழிலும் நீதிவானவனும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். தாய் கேட்டாள், “கண்ணா!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?” மகன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தானம்மா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”. தாய் சொன்னாள், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு” மகன் சிரித்தான். தாய் ஒரு கத்தரிக்கோலால் நூலை வெட்டினாள். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. “ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே !. அதிலிருந்து அறுத்துக் கொண்டால், பட்டத்துக்கு நடந்ததுதான் நடக்கும். சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்று சொல்லிவிட்டு, மகனை பார்த்தாள். மகனுக்குப் புரிந்துவிட்டது. உடனே தாயைக் கட்டிப் பிடித்தான். " அம்மா எனக்கு குறள் 132 நன்றாகத் தெரியும். பொருள் உட்பட, ஆனால் நான் அன்று நினைத்தது, அவை கவனிக்கப்படாமல் தூசு படிந்து வெளியே கொட்டகையில் இருந்ததால், மற்றும் நான் படிப்புக்கும் மட்டும் எடுத்ததால், அது தப்பு அல்லது ஒழுக்கத்தை மீறுகிறேன் அல்லது அறுக்கிறேன் என்று நினைக்கவில்லை, அது என் தவறுதான் அம்மா, மன்னித்து விடுங்கள்" என்றான். "மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற் கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன்" நன்னன் என்பவன் கேரளாவின் ஒரு பகுதியாக அன்று இருந்த பூழி நாட்டையாண்ட ஒரு சிற்றரசன். நன்னனது தோட்டத்திலுள்ள மரத்திலிருந்து விழுந்த மாங்காய் ஒரு கால்வாயில் மிதந்து வந்தது. அது கால்வாயில் இருந்தது. எனவே தப்பில்லை என்று அதனை அங்கு நீராடச் சென்ற ஒரு பெண் எடுத்துத் தின்று விட்டாள். உடனே அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன். அப்படித்தான் மகனே உன்னையும், பெண்கொலை புரிந்த நன்னன் போன்ற அந்த பண்ணை முதலாளி செய்துவிட்டார். அவரை மறந்துவிடு. அதை பாடமாக எடுத்து, வாழ்வில் என்றும் வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும் என்று மகனுக்கு அறிவுரை வழங்கினாள். தாயின் அறிவுரையும், அதை ஆமோதிப்பது போல இதமான காற்றில் இலைகளின் சலசலப்பும் அவனுக்கு திருவள்ளுவரின் 132 இன் மேல் முழு நம்பிக்கையைக் கொடுத்து, அவனுக்கு நேர்மை மற்றும் நேர்மையின் சரியான பாதையை உருவாக்கி கொடுத்தது. அதனால், முறையற்ற ஆதாயங்களின் கவர்ச்சியில் அல்லது செயல்களில் சிக்கித் தவிக்க மறுத்து, புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் தனது படிப்பிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தான். என்றாலும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் முயற்சியில், நீதிவானவன் பல சோதனைகளைச் சந்தித்தான். ஆனால் அவன் உறுதியாக நின்றான். அவன் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் படிக்கும் பொழுது, அவனின் இதயம் தன்னை அறியாமலே சக மாணவி மகிழினியுடன் சிக்கிக்கொண்டது. அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். ஆனால் இவள் ஆபரணமும் புதையலும். இரண்டும் அவளில் அடங்கி இருந்தன. அவளது பிரகாசமான புன்னகை அவனது ஆன்மாவின் இருண்ட மூலைகளை ஒளிரச் செய்தது. நீதி மற்றும் நீதியின் மீதான இருவரின் பகிரப்பட்ட பேரார்வம், காலத்தின் எல்லைகளைத் தாண்டிய தீவிரத்துடன், காதல் தீயை கொழுந்துவிட்டு எரிக்க, ஒரு சுடரைப் பற்றவைத்தது. பசுமையான மலை வெளிகள் மற்றும் சலசலக்கும் மகாவலி ஆற்றின் பின்னணியில் அவர்களின் காதல் வெளிப்பட்டது. நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் அடியில், பேராதனை பூந்தோட்டத்திலும் குறுஞ்சிக் குமரன் ஆலயத்துக்கு ஏறும் குன்றின் பாதையிலும் இருவரும் கைகோர்த்து நடந்த நீண்ட நடைப் பயணங்கள் அவர்களின் காதலின் சரணாலயமாக மாறியது, அங்கு கனவுகள் பகிரப்பட்டன மற்றும் அபிலாஷைகள் அப்பட்டமாக வைக்கப்பட்டன. ஆயினும் கூட, அன்பின் மென்மையான தருணங்களுக்கு மத்தியில், நீதிவானவன் சரியான நடத்தை மற்றும் நடத்தைக்கான ஒழுக்கத்தின் உறுதிப்பாட்டில் உறுதியாக இருந்தான். ஒரு முறை, மகிழினி தனது அன்பின் அடையாளமாக, காதலர் தினத்தில் அவனுக்குப் பரிசளிக்க விரும்புவதை வெளிப்படுத்திய போது, நீதிவானவன் நெறிமுறைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதைக் காரணம் காட்டி மெதுவாக மறுத்துவிட்டான். காதலர் தினம் என்ற ஒரு ஒற்றை நாளில் பரிசுகள் இன்பத்தின் கவர்ச்சியால் கொடுக்க ஆசைப்பட்டாலும், உண்மையான காதல் அப்படி அல்ல, இப்படியான ஒற்றைத் தருணங்களை கடந்தது என்பதே அவனின் வாதம். அவர்களின் காதல் உறவு மலர்ந்தபோது, நீதிவானவனின் அசைக்க முடியாத நேர்மை மகிழினிக்கு வழிகாட்டும் வெளிச்சமாக மாறியது, அவன் தனக்கு நேர்ந்த சோதனைகளை, எதிர்கொண்ட அவனது உறுதிகளைக், கண்டு வியந்தாள். அவளும், நீதியின் நெறிமுறைகளைத் தழுவி, அவர்களின் அன்பின் தூய்மையில் ஆறுதல் கண்டாள். நீதிவானவனின் விடாமுயற்சியும் நேர்மையும் கவனிக்கப்படாமல் போகவில்லை. ஒவ்வொரு ஆண்டும், நல்லொழுக்கத்தின் முன்னோடி என்ற அவனது புகழ் வளர்ந்தது. நீதிக்கான அவனது அர்ப்பணிப்பு செல்வாக்கு உள்ளவர்களின் கண்களைக் கவர்ந்தது, மேலும் அவன் கல்வி மற்றும் நீதித்துறையின் தரவரிசையில் உயர்ந்தான். இன்று, நீதிவானவன் ஒரு புகழ்பெற்ற தலைமை நீதிபதியாக மட்டுமல்லாமல், வாழ்க்கையின் கொந்தளிப்பான நீரில் பயணிக்கும் எண்ணற்ற ஆன்மாக்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகவும் நிற்கிறான். விரிவுரை அரங்குகள் மற்றும் நீதிமன்ற அறைகளில், அவன் தனது பயணத்திலிருந்து கற்றுக் கொண்ட விலைமதிப்பற்ற பாடங்களை - நேர்மையின் முக்கியத்துவம், நெறிமுறை நடத்தையின் முக்கியத்துவம் மற்றும் திருவள்ளுவரின் போதனைகளில் பொதிந்துள்ள காலமற்ற ஞானம் ஆகியவற்றை மறக்காமல் கூறுவான், அதிலும், தனது சீர்திருத்த பள்ளியின் அனுபவமும் அங்கு தான் அடைக்கப் பட்டதுக்கான அந்த அவனின் கதையையும் சொல்ல மறக்கமாட்டான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  20. "வீட்டு வேலைக்காரி" மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்டும், வவுனியாவின் எந்தப் பக்கமும் கடலின் வாடை இல்லது இருந்தாலும், ஆங்கங்கே குன்றுகளும், பரந்து விரிந்த எண்ணற்ற செழிப்பான குளங்களும், காடுகளும், இருப்புகளும், ஊர்களும், ஓடைகளும், கட்டுகளும், கரைகளும், கற்களும், குழிகளும், சூரிகளும், சோலைகளும், தாழிகளும், தோட்டங்களும், வயல்களும் பள்ளங்களும் மற்றும் பனையும் தென்னையும் குடை பிடித்து நிழலோடு வளம் தரும் நிலப்பரப்பையும் கொண்டும் உள்ள அந்த நகரத்தில் கலா என்ற பெண்மணி வாழ்த்து வந்தார். இப்பகுதியில் உள்ள பலரைப் போலவே அவரது வாழ்க்கையும் கஷ்டங்கள் மற்றும் நெகிழ்ச்சியின் இழைகளால், குறிப்பாக 2009 இன் பின் பின்னப்பட்டது. ஒரு காலத்தில் அமைதியான இடமாக இருந்த வவுனியா ஒரு கொந்தளிப்பான கடந்த காலத்தின் வடுக்களை இன்று சுமந்து இருக்கிறது. அங்கு குடும்பங்கள் மோதலால் பிளவுபட்டு, சோகத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் இன்று விட்டுச் சென்றுள்ளன. கலாவுக்கு கஷ்டங்கள் புதிதல்ல. இலங்கை இராணுவம் தனது கணவரை விசாரணைக்கு என அழைத்துச் சென்ற போது இளம் வயதிலேயே விதவையான அவர், பொறுப்பின் பாரத்தை அன்றில் இருந்து தனியாக சுமந்து கொண்டு இருக்கிறார். இரண்டு சிறு குழந்தைகளை வளர்த்து படிக்கவைக்க வேண்டி இருப்பதால், வசதி படைத்தவர்களின் வீடுகளில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை தேடுவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அவரின் பிள்ளைகள் படிக்கும் ஆரம்ப பாடசாலை ஆசிரியை, தனக்குத் தெரிந்த ஒரு இடத்தில் வீட்டு வேலை இருக்கு, ஆனால் ' வேலையில சுத்தம் வேணும். நேர்மை வேணும். சரியான நேரத்துக்கு வந்து வேலை பாக்கணும்' என்பது அவர்களின் எதிர்பார்ப்பு என்று கூறினாள். “எவ்வளவு சம்பளம் தருவாங்க?” என்று கலா இழுத்தாள். இன்றைய நாட்டு நடப்பின் படி தருவாங்க என்று சொல்லிவிட்டு, " விரும்பினால் போய்ப்பார், நான் தந்தது என்று சொல்லு" என்று கூறிவிட்டு, வீட்டு விலாசத்தையும் கொடுத்தார். அன்று இரவு, மீண்டும் மீண்டும் விலாசத்தைப் பார்த்தாள். வெளியில் பெய்த மழை, உள்ளே படுக்கையில் குளிர்ந்தது. உடலும்; மனமும் போர்வையில் சுருண்டுக் கொள்ளும் சுகத்தைக் கோரின. என்றாலும் நாளை காலை நேரத்துடன் எழும்ப வேண்டும் என்பதால், கடிகாரத்தில் அலாரம் வைத்தாள். அதன் பின் படுத்துக் கொண்டு இமைகளை மூடினாள். நித்திரை வருவதற்கு பதில், காலை செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலே நினைவில் நீண்டது. என்றாலும் ஒருவாறு கொஞ்ச நேரத்தின் பின், பாயில் அயர்ந்து தூங்கினாள். அன்று காலை, அவளின் உடலுக்குள் ஓர் உயிரியல் அலாரம் இருந்தது போல, தன்பாட்டில் கண்விழித்து அவள் எழுந்தபோது, அலாரம் இன்னும் அலரவில்லை! அலருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் எஞ்சியிருந்தன. ‘இன்றைக்கு நீ அலர வேண்டாம்’ என்பதுபோல், அலாரத்தினை நிற்பாட்டினாள். கலா வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது பிள்ளைகளின் அறையில் இருந்து எதோ அரவம் கேட்டது. அவளின் குடிசை ஒரு அறை மட்டுமே, கலா அறைக்கு வெளிய, ஆனால் குடிசைக்குள் உள்ள சிறு விறாந்தையில் தான் படுப்பாள். அது தான் பிள்ளைகளின் படிப்பு அறையும் கூட. கலா பிள்ளைகளின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே நித்திரையில் வரைந்த ஓவியத்தைப் போல் அலங்கோலமாய் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து வீட்டு நண்பியிடம் பிள்ளைகளைப் பார்க்கும்படி சொல்லி விட்டு, நேர்த்தியாக உடையணிந்து, சாதாரண சிவப்பு நிற புடவையில், தலை முடியில் எண்ணெய் தடவி பின்னப்பட்ட கூந்தலுடன், அவள் தனது வீட்டு வேலைக்கான பணியிடத்தை, சூரியன் அடிவானத்தில் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே, அங்கு அடைய குறுகிய மண் தெருக்களின் வழியாகச், சாலையோர மரங்களுடன் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் காற்றிடமும், விவாசயிகளின் உழைப்பை உரைக்கும் சேற்றிடமும் இயற்கையின் எழிலை அனுபவித்தவண்ணம் சென்றாள். அவள் பணிபுரியும் அந்த மாளிகை அவளுடைய தாழ்மையான குடிசைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது, அதன் பிரம்மாண்டம் அவளுடைய வாழ்க்கையின் எளிமையை மறைத்தது. அவள் தன் நண்பிகளிடமும் மற்றும் செய்திகள் மூலம் கேள்விப்படத்தில், சில நிஜ வாழ்க்கை வீட்டுப் பணியாளர்கள் அவர்களின் பணக்கார முதலாளிகளால் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் ஆனால் பல கற்பனையான கதைகளில், இலக்கியங்களில், அதற்கு மாறாக வேலையாட்கள் அவர்களின் முதலாளிகளால் நன்றாக நடத்தப்படுகிறார்கள் என விபரிப்பதையும் அறிந்து இருந்தாள். அதனால்த் தான், அந்த மாளிகையைப் பார்த்ததும் மனதில் ஒரு தயக்கம் அவளுக்கு வந்தது. என்றாலும் எல்லோரும் அப்படி இல்லை என்று அதே மனம் அவளுக்கு ஆறுதலும் கொடுத்தது, அதிகமான கற்பனைக் கதைகளில் காணப்படுவது போல! என்றாலும் நாட்கள் நகர, நகர, குடிசையில் அவள் அனுபவிக்கும் அன்பும் ஆறுதலும் இங்கு அவள் காண்பதே இல்லை என்பதை உணர்ந்தாள். அது ஒரு கற்பனை கதையாகவே, கனவாகவே இருந்துவிட்டது. உள்ளே, அவளுடைய கைகள் சளைக்காமல் எந்த நேரமும் எதோ ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும். அவளின் வாழ்க்கை அங்கு ஒரு இயந்திரம் போலத்தான் எந்த நேரமும் சுழன்று கொண்டு இருந்தது. அவள் பணியாற்றிய குடும்பம், அவள் அங்கு தினம் நேரத்துடன் போனாலும், அதைப் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. ஏன் அவளை குறைந்தது ஒரு புன்சிரிப்புடனாவது பாராட்டுவதில்லை. அவர்களின் வார்த்தைகள், செய்கைகள் பொதுவாக மனச்சோர்வு தரக் கூடியதாகவும் மற்றும் அது அலட்சியத்துடனும் இருந்தன. அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் வசதியான வாழ்வுக்கு, எடுபிடி வேலைகளுக்கு கூலிக்கு ஒத்தாசை புரியும் எந்திரம் தான் அவள். அவர்கள் ஒவ்வொரு பணியிலும் பரிபூரணத்தைக் கோரினர், ஆனால் அவளுடைய சோர்வுற்ற கண்களுக்குப் பின்னால் உள்ள மனிதாபிமானத்தை அடையாளம் காணத் தவறிவிட்டனர். ஆனால், தினமும் வரவேண்டும், சுத்தமாய் இருக்கவேண்டும் என்பதை அழுத்தமாய் சொல்லிவிட்டு, லீவு வேண்டுமென்றால் முன்கூட்டி சொல்லிவிட்டுத்தான் எடுக்க வேண்டும் என்றும் கறாராகச் சொல்லிவைத்தாள் வீட்டுக்காரி அம்மா. அனால், கலா மென்மையாகப் பேசுகிறாள், அவளது பதில்கள் நிதானமாக அளவுடன் வருகிறது. அவள் வவுனியாவில் உள்ள ஒரு கிராம பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டும் தான் படித்தவள். குடும்பச் சூழல் இடையில் நிறுத்தி விட்டது. கலாவின் தந்தை வயல் வேலைகள் செய்வதுடன் கொஞ்ச மாடுகளையும் வளர்த்தார், தாய் அவருக்கு துணையாக நின்றார். கலா மாடுகளை கவனிப்பதுடன் வீட்டு வேலைகளும் செய்தார். அப்பொழுது அவர்களுக்கும் பஞ்சம் என்று ஒன்று இருப்பதே தெரியாத காலம் அது. கலா பாடசாலையால் நின்று விட்டாலும், வாசிப்பதில் என்றும் நிற்கவில்லை. அருகில் உள்ள நூல்நிலையத்தில், ஓய்வு நேரங்களில், பல புத்தகங்கள் வாசிப்பாள் . ஒருமுறை அம்பலசோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார். கம்பர் வீட்டு வாசலில் ஒரு பெண் வரட்டி தட்டிக் கொண்டிருந்தாள். அம்மா! கம்பர் இருக்கிறாரா? என்று கேட்டார். பல புலவர்கள் அவரிடம் தமிழின்பம் இப்ப நுகர்ந்து கொண்டு இருக்கின்றனர். அவரை யாரும் எப்போதும் பார்க்கலாம். கருணை மிக்கவர், என்று பதில்களை அடுக்கிக்கொண்டு போனாள். இருக்கிறாரா என்று கேட்டால் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று சொல்லியிருக்கலாம். வாயாடி போலும், எத்தனை பதில் சொல்கிறாள்' என்று அவர் அசைபோட்டார். பின் நீ இவ்வளவு பேசுகிறாயே! கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா? என்று கேட்டார். அதற்கெல்லாம் நேரமேது புலவரே! அன்றாடப் பணிக்கே பொழுது சரியாக இருக்கிறது. சரி.. சரி... எனக்குத் தெரிந்த தமிழை உம்மிடம் பேசுகிறேன். ஒரு சின்ன விடுகதை, பதில் சொல்லுமேன் என்றாள். புலவர் ஆர்வமானார். 'வட்டமாக இருக்கும், வன்னிக்கொடியில் தாவும், கொட்டுபவர் கையில் கூத்தாடும். எரித்தால் சிவசிவ என்பர். அது என்ன?' என்றாள். புலவர் விழிக்கவே, ஒருநாள் யோசித்து சொல்லுமேன், என்றவள் விடுவிடுவென போய்விட்டாள். கம்பர் வீட்டு வேலைக்காரியிடம் மாட்டினால் சும்மாவா? ஆனால், இப்ப கலா இருப்பதையும் தொலைக்கும் நிலையில் தான் இங்கு வேலைக்காரியாக இருக்கிறாள். வீட்டை விட்டுப் புறம்படும் போது மனதில் இருக்கும் உற்சாகம், திரும்பி போகும் பொழுது இருக்காது? காலை கையில் வாளித் தண்ணீர் , விளக்குமாற்றுடன் வெளியில் வந்தால், வாசல் தெளித்து, பெருக்கி கோலமிட்டு உள்ளே சென்று சற்று ஓய்வு எடுக்கவே முடியாத சூழல் அங்கே. தட்டுமுட்டுச் சாமான்கள் துலக்கிக் பின் சமையல் என நீண்டு கொண்டே இருக்கும். யாரும் அவளை ஏறிட்டுக்கூட பார்க்க மாட்டார்கள் காலை, மதிய சமையலை விட, அவள் வீட்டைக் கூட்டித் துடைத்தாள். பாத்திரங்களை கழுவி கவிழ்த்துப் ஈரம் காய வைத்தாள். காய்ந்த பாத்திரங்களை எடுத்து அடுக்கி வைத்தாள். உடுப்புக்களை துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டு வெளியில் காயப் போட்டாள். காய்ந்த உடுப்புகளை மடித்து வைத்தாள். கதவு, சாளரம் , மூளைமுடக்குகள் என பார்த்து பார்த்து சுத்தம் செய்தாள். அவள் ஒரு இயந்திரமாக எல்லா வேலையும் நேரப்படி முடித்துவிட்டு, இரவு இருட்ட முன்பு எப்படியும் குடிசை திரும்பி விடுவாள். அதுவரை, பக்கத்துவீட்டு, அவளின் நண்பியுடன் தான் பிள்ளைகள். ஒரு நாள் மதியம், அவள் அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட ஒரு அலமாரியை கவனமாகத் துடைத்துக் கொண்டிருந்தபோது, வீட்டின் எஜமானர் உள்ளே நுழைந்தார். அவரின் பார்வை அவள் மீது ஒரு கணம் நிலைத்திருந்தது, அவரது உதடுகள் ஒரு மெல்லிய புன்னகையில். "கலா, நீ நன்றாக வேலை செய்கிறாய் ," என்று ஒருபுகழாரம் சூட்டினார், ஆனால் அவரின் பார்வையும், கலாவிடம் அவர் நெருங்கி வந்ததும், அவரின் வேறு ஒரு நோக்கத்தை வெளிப்படையாக காட்டியது. எனவே கலா தனது அசௌகரியத்தை மறைக்கும் முயற்சியில் அவள் கண்கள் கீழே பார்த்து, கொஞ்சம் விலகி நின்றாள். அவளுக்கு மனக்குழப்பம் இருந்தபோதிலும், தனது கடமைகளில் உறுதியாக இருந்தாள், தந்திரமாக அந்த சூழ்நிலையில் இருந்து சற்று ஒதுங்கி, சமையல் அறையில் எதோ வேலை இருப்பது போல விலகிச் சென்றாள். அந்தஸ்துள்ள ஒரு மனிதனுக்கு எதிராகப், வெறும் வீட்டுப் பணிப்பெண்ணாக அவள் எதிர்த்துப் பேசுவதால் ஏற்படும் விளைவுகள், என்ன என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் தங்கள் பிழைகளை மறைக்க எதை வேண்டும் என்றாலும் சொல்லுவார்கள். அவர்களின் பணப் பலமும் செல்வாக்கும் மற்றவர்களை அதை நம்பவும் செய்யும். அன்றைய நிகழ்வுக்குப் பிறகு வாரங்கள் கடந்து செல்ல, கலா தனது ஒப்பந்தம் முடிவடையும் வரை, நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள், ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் அவள் பெறும் சொற்ப ஊதியத்தில் மட்டுமே அவளுக்கு ஆறுதல் இருந்தது. வீட்டு எஜமானர் அவளுக்கு சம்பளம் ஒழுக்காக வழங்கிய போதிலும், அது அவளின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை, ஆனால் சமாளிக்கக் கூடியதாக இருந்தது. அது தான் உடனடியாக வேலையை விட்டு போகவில்லை. என்றாலும் தன்னில் கவனமாக இருந்தாள். அவள் உடனடியாக விலகாததுக்கு இன்னும் ஒரு காரணமும் இருந்தது, வீட்டு எஜமானின் இளைய மகள், தனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களைப் போலல்லாமல், மேகங்கள் வழியாக சூரிய ஒளியின் கதிர்கள் துளைப்பதைப் போல, எப்பொழுதும் ஒரு கருணையுடன் கலாவை நடத்தினாள். ஒரு நாள் மாலை, கலா சமையலறையில் இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, இளைய மகள் அமைதியாக உள்ளே நுழைந்தாள், அவளுடைய கண்கள் பச்சாதாபத்தால் நிறைந்தன. "கலா, நலமா?" அவள் மெதுவாகக் கேட்டாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் இல்லை. இளைய மகளின் எதிர்பாராத அந்த நட்பான வார்த்தையில், தன்னை பறிகொடுத்த அவள், பதில் சொல்ல வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் கொஞ்சம் தடுமாறினாள். என்றாலும் மென்மையான தலையசைப்புடன், அவள் மெல்லிய புன்னகையைத் பதிலாக கொடுத்தாள். அந்த இளைய மகளின் செயலை, கலா இன்னும் மறக்க வில்லை. அவள் ஒருநாள் வீட்டுக்கு அவசரம் அவசரமாக திரும்பிக்கொண்டு இருக்கையில் , அவள் மனம் தன் குழந்தைகளை நோக்கி அலைந்தது. அவர்கள் மங்கலான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பதுங்கியிருப்பதையும், கிழிந்த பாடப் புத்தகங்களைத் சரிப்பண்ணி சரிப்பண்ணி படிப்பதையும் , அவர்களின் கனவுகள் வறுமையின் பீதியால் மறைக்கப்பட்டதையும் அவள் கற்பனை செய்தாள். தனக்குக் கிடைக்காத வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கவும், தனது குடும்பத்திற்கு நேர்ந்த கடுமையான கஷ்டத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றவும் அவள் உள்ளம் ஏங்கியது. வீட்டுக்கு வரும் வேலைக்காரியை உணர்வுள்ள ஒரு ஜீவனாகப் அவர்கள் நினைப்பதே இல்லை. வீட்டைப் 'பெருக்கும் துடைப்பத்தைப் போல்' வேலைக்காரியை நினைக்கிறார்கள் என்பது தான் அவளுக்கு ஒரு வெறுப்பையும் கவலையையும் கொடுத்தது. தன் தோள்களில் கனமான சவால்கள் இருந்தபோதிலும், கலா தனது தளராத உறுதியில் ஆறுதல் என்றும் கண்டாள். கலாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சூரிய உதயமும் அதனுடன் ஒரு புதிய நோக்கத்தை கொண்டு வருவதாக நம்பினாள். தானும் அப்படியே புதிய நோக்குடன் அசைக்க முடியாத உறுதியுடன் ஒவ்வொரு நாளையும் கடக்க வேண்டும் என்று எண்ணினாள். அந்த அவளின் திடகாத்திரமான போக்கு, முன்னோக்கி செல்லும் பாதை நிச்சயமற்றதாக இருந்தாலும், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பிரகாசமான நாட்கள் காத்திருக்கின்றன என்ற நம்பிக்கையில், அவள் மனது தானே ஒரு பாடலை இயற்ற, அவள் வாய் அதை இராகத்துடன் முணுமுணுக்க, மரக்கிளைகள் காற்று பட்டு வளைந்து வளைந்து ஆட, வண்டுகள் ரீங்காரம் இட்டு மலர்களை வட்டமிட, அவள் தலையை உயர்த்தி நடந்து வீடு சென்றாள். "மின்சாரம் இல்லாமல் இயங்கும் இயந்திரம் நானோ? துன்பங்களை சுமந்து இன்பங்களை கொடுப்பவளோ? காலங்களை கண்ணீரில் கழுவும் துர்ப்பாக்கியவாதியோ?? இங்கு புதுவிதம் அதிலும் பலவிதம் காண்கிறேனே! காமத்துக்கும் சுரண்டலுக்கும் மனசு கொதிக்குதே! ஊருக்கென்ன தெரியும் வீட்டுக்கள் நடப்பது தெரிந்தும் என்ன ? பணம் வாயை மூடுமே!!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. "உயிர்பெறுமா ஓவியம்" உயிர்பெறுமா ஓவியம் எழுந்து நடப்பானா உலகம் இவனுக்கு நீதி வழங்குமா? உள்ளம் கொண்டு பாகுபாடு நிறுத்தி உண்மை வரலாற்றை நன்கு அறிந்து உள்நாட்டில் அரசு வேற்றுமை அகற்றாதா? வன்னியில் நடந்தது உனக்குத் தெரியாதா வளமான தேசம் சிதைந்தது உணராயா? வஞ்சகம் தவிர்த்து அவனைப் பார்க்காயா வருத்துதல் ஒரு மனிதச் செயலல்ல வலி தரும் கொடூரம் இதுவல்லவா? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  22. “போராடி வென்றவள்" விதை செடியாக வளர மண்ணுடன் ஒரு போராட்டம் செடி நிலைத்து நிற்க வானிலையோடு ஒரு போராட்டம். பூ மலர இதழ்களோடு ஒரு போராட்டம் நதி ஓட நிலத்தோடு ஒரு போராட்டம் கோழிக்குஞ்சு வெளியேவர முட்டைஓட்டோடு ஒரு போராட்டம். மீன்கள் உயிர்வாழ அலைகளோடு ஒரு போராட்டம். அருளம்மா மட்டும் இதற்கு விதிவிலக்காக ? ஆமாம், அருளம்மாவின் வாழ்க்கை, போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பின்னணியில், ஒரு போர்க்களமாகவே இருந்தது. முல்லைத்தீவின் ஒரு அமைதியான கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவள், அது பின்னாளில் ஒரு கலவரப் பூமியாக மாறும் என்று, என்றும் நினைக்கவில்லை. அர்ப்பணிப்புள்ள ஒரு மனைவியாகவும் மூன்று சிறு பிள்ளைகளின் அன்பான தாயாகவும் அன்று இருந்தாள். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கைச் சூழ்ந்த வன்னிப் போரின் இறுதிக் கட்டம் அவளது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியமைத்தது. அவளது இளம் விவசாயிக் கணவர், போரின் பயங்கரங்களுக்கு மத்தியில் காணாமல் போனார். அவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்று அறியும் சூழ்நிலை அன்று இருக்கவில்லை. எங்கும் குண்டு சத்தங்களும், எறிகணை வெடிச்சத்தங்களும் கேட்டுக்கொண்டு இருந்தன. அதிரடிப் படையினரின் மோசமான கைதுகள், அடக்குமுறைகள், காரணமின்றி சுட்டுக்கொல்லுதல் போன்றவை நிகழ்ந்த காலப்பகுதி அது. அங்கு முறையிடுவதற்குக்கூட ஒரு நீதியான முறையான சூழ்நிலை இருக்கவில்லை. என்றாலும் தான் 'போராடி வெல்வேன்' என்று, அருளம்மா தனக்குள் ஒரு மனவலிமையை, உறுதியை ஏற்படுத்தினாள். மூன்று இளம் குழந்தைகளை முறையாக வளர்க்கவும், தனது வாழ்க்கையை மீண்டும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியாக கட்டியெழுப்புவதற்கான கடினமான சவாலை சமாளிக்கவும் அதை எதிர்த்துப் போராடவும் துணிந்தாள். முதல் கட்டமாக, நெல் வயல்களில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து, கொளுத்தும் வெயிலையும், உடல் களைக்கும் கடின உழைப்பையும் தாங்கிக் கொண்டு, தன் பிள்ளைகளுக்கு உணவும், கல்வியும் கிடைப்பதை உறுதி செய்தாள். அதேவேளை, இரண்டாவது நடவடிக்கையாக, அவள் அகதிகள் முகாம்கள், கோவில்கள் மற்றும் எஞ்சியிருக்கும் சில அரசாங்க அலுவலகங்களைத் தன் கணவனின் அடையாளத்திற்காகத் தேடுவதுடன், இராணுவம் மற்றும் காவல் நிலையங்களிலும் விசாரித்தாள். காமரம் முரலும் பாடல், கள், எனக் கனிந்த இன் சொல்; தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் அணங்கு ஆம்" என்னத் தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்; யாம் உரை வழங்கும் என்பது ஏழைமைப்பாலது அன்றோ? காமரம் என்ற இசை தொனிக்கும், கள்ளைப் போல இனிமையான சொற்கள், தேன் நிறைந்து இருக்கும் மலர்களைச் சூடிய கூந்தல், தேவ லோக பெண்களும் போற்றும் தாமரை மலரில் இருக்கும் அந்தத் திருமகளும், அவளுக்குப் பணிப் பெண்ணாகக் கூட ஆகும் தரம் இல்லை என்று சொல்லும் படி, அருளம்மாவின் அழகு இருந்தது. அதிலும் அவள், இனிமையாக பேசுவது ஒரு அழகு. ஒரு வசீகரம். அவளின் உடல் அழகை விட, அவளின் அந்த பேச்சு அழகு எல்லோரையும், குறிப்பாக ஆண்களை, கட்டிப் போடும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவளும் அதற்குத் விதிவிலக்கல்ல. அதைவிட, அவளின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போலவும் மற்றும் பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் அடிக்கடி துள்ளுவதும், கரிய விழிகளில் புருவம் வில்லைப்போல் வளைந்திருப்பதும் எவரையும் அவளை திரும்பி பார்க்க வைக்கும். நாளடைவில் அவளுடைய அந்த பேரழகும் இளமையும் ஒரு நல்வாக்காகவும் சாபமாகவும் மாறியது. முள்ளிவாய்க்கால் கடலில், அலை படகை அடித்து செல்வது போல் காற்றில் அசையும் அவளுடைய கருமையான, பளபளப்பான கூந்தல், அவளின் உள் வலிமையை, சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கும் பெரிய, வெளிப்படையான கண்கள், அதேவேளை எவரையும் சிக்கவைக்கும் வலையையும், கொன்று குவிக்கும் வாளையும் நினைவூட்டிக்கொண்டும் இருந்தது. அவளுடைய ஒவ்வொரு நடத்தையும் அவளுடைய குடும்பத்தை பாதுகாக்க, உறுதியான ஒரு பெண்ணின் கண்ணியத்தை சுமந்து கொண்டு இருந்தது. போரினால் சீர்குலைந்த ஒரு சமூகத்தில், அவளது பாதிப்பை சுரண்ட முயன்ற ஆண்களிடமிருந்து அவளுடைய அழகு தேவையற்ற கவனத்தையும் ஈர்த்து அவளுக்கு பல தொல்லைகளையும் கொடுத்தது. ஆனால் அவள், தனது ஒவ்வொரு முன்னேற்றத்திலும், உழைப்பிலும், தேடலிலும், ஒரு வெற்றியை நோக்கி போராடிக் கொண்டே இருந்தாள். மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும் மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும் கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும் பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும் பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும் கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும் மங்கையர் ஒயில்கண்டே வலை வீசும் ஆண்களின் பொல்லாத ஆசை சொல்லாத துன்பம் தூவும் [முதல் ஆறு வரியும் பாம்பாட்டி சித்தருடையது] மின்னலை போன்ற மேகமும், ஒளி பொருந்திய கண்களை உடையவளே, மெல்லிடை உடையாளே, மேனகயை போல் அழகு நிறைந்தவளே, சீனி சர்க்கரை கட்டியே என்றும் பூவை போன்றவளே, அழகு உருவம் உடைய பொம்மையை போன்றவளே, தங்கமே, பொக்கிஷமே என்றும், கோவைப்பழம் போன்றவளே, முத்தே என்றும் மங்கையின் அழகில் கவர்ந்திழுக்கப்பட்ட ஆண்களின் பொல்லாத ஆசை சொல்லாத துன்பம் கொடுக்கும் என்பதை அருளம்மா நன்றாகவே அறிவாள். அவளுக்கு முதல் சோதனை ஒரு பணக்கார நில உரிமையாளர் இடமிருந்து வந்தது. அவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியைக் தன்னகத்தே கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் மிகவும் வசதியான வேலையை அவளுக்கு வழங்கி, அவளுடைய குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை வழங்குவதாக உறுதியளித்தார். அவரது வார்த்தைகள் தேனாய் இருந்தன, ஆனால் அவரது உள்நோக்கங்கள் தெளிவாக இருந்தன. அருளம்மாவின் இதயம் கோபத்தாலும் வெறுப்பாலும் எரிந்தது. அவள் கவனமாக அவனது நடவடிக்கைகளை நிராகரித்தாள். அதனால், அவளுடைய வேலைக்கு ஆபத்து என்பதை நன்கு அறிந்திருந்தாள். ஆனால் அவளது மானம் அவளுக்கு முக்கியமாக இருந்தது. அது அவளின் முதல் போராட்டம். இரண்டாவது போராட்டம் விசாரணையின் போது வந்தது. அந்த பிராந்தியத்தில் அதிகாரம் செலுத்திய சில நபர்களில் ஒருவரான அரசாங்க அதிகாரியிடமிருந்து அது வந்தது. போரின் போது காணாமல் போனவர்கள் பற்றிய இரகசிய தகவல்களை தேடி அறிந்து, அவன் அவளது கணவரைக் கண்டுபிடிக்க அல்லது என்ன நடந்தது என்பதை அறிய உதவ முன்வந்தான். பதிலுக்கு, அவன் அவளுடைய தோழமையைக் கோரினான். தன் கணவனின் தலைவிதியையும், தன் தார்மீக திசைகாட்டியையும் அறிந்து கொள்ள வேண்டிய அவலத்திற்கு இடையே, அருளம்மா திண்டாடினாள். அவள் மீண்டும் தன்மானத்தையே முதன்மைப் படுத்தி, அதிகாரியின் கோரிக்கையை நிராகரித்தாள். மூன்றாவது போராட்டம், மிகவும் நயவஞ்சகமான சவாலாக, ஒரு பயண வணிகரின் வடிவத்தில் வந்தது. மற்றவர்களைப் போலல்லாமல், அவன் அவளை அன்புடனும் மரியாதையுடனும் அணுகினான். அவளுடைய இதுவரையான போராட்டங்களைக் கேட்டு ஒரு அனுதாபத்தைக் காட்டினான். என்றாலும் காலப்போக்கில், அவன் அவளிடம் திருமணத்தை முன்மொழியத் தொடங்கினான். அவளுடைய குழந்தைகளுக்கு ஒரு தந்தை தேவை என்றும் அவள் தன்னுடனான தோழமைக்கு தகுதியானவள் என்றும் வாதிட்டான். முதல் முறையாக அருளம்மா தயங்கினாள். அவனது வார்த்தைகள் கவர்ச்சியாக அதேநேரம் நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருந்தன, அவளது தனிமை பெரும் சுமையாக இருந்தது. ஆனால், காணாமல் போன கணவனுக்கு அவளது விசுவாசமும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான அவளது அர்ப்பணிப்பும் இறுதியில் அவளுடைய முடிவை வழிநடத்தியது. அவள் மீண்டும், தான் பிள்ளைகளுடன் எப்படியும் 'போராடி வெல்வேன்' என்ற மன உறுதியுடன் நிராகரித்தாள். வருடங்கள் கடந்தன, அருளம்மாவின் பிள்ளைகள் திறமையான இளைஞர்களாக வளர்ந்தார்கள். அவளது மூத்த மகன் ஆசிரியராகவும், மகள் செவிலியராகவும், இளையவர் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சமூக சேவகியாகவும் ஆனார்கள். அருளம்மாவின் தியாகங்கள் பலனளித்தன, அவர்களின் வெற்றியில் அவள் ஆறுதல் கண்டாள் ஒரு 'போராடி வென்றவள்' என்ற நம்பிக்கையில். இதற்க்கிடையில், இலங்கை அரசும் 2024 இறுதியில் மாறியது. அவளது மற்றும் காணாமல் போனவர்களின் கோரிக்கைகளை தாம் நீதியின் அடிப்படையில் ஆராய்வதாகவும் கூறியது. என்றாலும், அது நிறைவேறும் மட்டும், அவள் நம்ப மறுத்தாள். அது வரலாற்றின் அனுபவமாகும். அவளது போராட்டங்கள் வெற்றிகளுடன் நகர்ந்து கொண்டே இருந்தன. இந்த இறுதி போராட்டமும், குறைந்தது அரசின் பார்வைக்கு முறையாக வந்ததும் ஒரு வெற்றியே! கணவர் இனி வருவார் என்று அவள் எண்ணவில்லை. ஆனால், அவருக்கு என்ன நடந்தது, இதற்க்கு யார் காரணம் ?, இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகளை அரசு எடுக்கும் மற்றும் இதற்கான நீதி என்ன? இதைத்தான் தான் அவள் எதிர்பார்க்கிறாள். "போராடி வென்றவள்" என்ற உணர்வுடன் தன் மண்ணின் வாழ்வை மகிழ்வாக முடிக்க! ஆழமான போராலும் துயரத்தின் புயல்களாலும் அவளுடைய உறுதியான உள்ளம் அழமறுத்தது அருளம்மாவின் கதை வழிகாட்டும் விண்மீன் ஆசையும் உறுதியுமிருந்தால் போராட்டம் வெற்றியே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.