-
Posts
1085 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by kandiah Thillaivinayagalingam
-
தன்முனைக் கவிதை / "நினைவுகள்”
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in கவிதைக் களம்
எல்லோருக்கும் நன்றிகள் -
"காதல் என்பது மாய வலையோ..?", "சிறுவர்களே" & "ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" "காதல் என்பது மாய வலையோ..?" "காதல் என்பது மாய வலையோ காமம் சேரும் அன்பு பொறியோ காலம் போக்கும் களி ஆட்டமோ கானல் நீரின் ஒரு வடிவமோ காரணம் புரியா நட்பின் பிணைப்போ?" "கண்ணும் கண்ணும் சேர்ந்த பின் மண்ணும் மழையும் கலந்தது போல எண்ணமும் கனவும் பின்னிப் பிணைந்து உண்மை ஆசைகள் நெஞ்சில் சுமந்து பெண் பேசும் கண்ணீர் கதையோ?" "சிறுவர்களே" "கைபேசியில் விளையாடி மகிழும் சிறுவர்களே! கைகால் ஓய்ந்து உடலெடையை ஏற்றதே! உலகம் சுருங்கி கையில் இருக்குது உண்மையைத் தேடி உயரப் பாரு!" "இளமை உன்னை சுண்டி இழுக்கும் இதயத்தை என்றும் நீ இழக்காதே! நல்லதை இணையத்தில் நன்கு தேடி நன்மை பெற்றிடு நலமாய் வாழ்ந்திடு!" "ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" "மடியில்சாய்ந்து மனதை பறிக்கும் மங்கையே கூடிக்குலாவி கொஞ்சி சிணுங்கும் மரகதமே ஆடிப்பாடி அழகு கொட்டும் மயிலே தேடியென்னை வந்து அணைத்தது எனோ? நொடிப்பொழுதில் என்னை கவர்ந்தது எதற்கோ?" "மீசைதொட்டு கண்கள் இரண்டாலும் காதல்சொல்லி ஓசையில்லாமல் செவ்விதழால் முத்தம் பதித்து இசையும்தோற்கும் இனிய குரலால் அழைத்து அசையாநெஞ்சை உருக வைத்த பெண்ணே! ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 26 சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்ற போதிலும், பூம்புகார் குறித்த கிரஹாம் ஹான்காக் [British marine archaeologist, Graham Hancock] என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு - நாகை மாவட்டம் பூம்புகார் அருகே, சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று காட்டுவதால் - தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை.தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது. மேலும் இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டு பிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகளில் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப் பயன்படுத்திய குறியீடுகளை எவரும் இன்னும், எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக வாசித்து அறிய முடியவில்லை. எப்படியாயினும் பின்னர் தொடரப்பட்ட ஆய்வுகள் எங்களுக்கு சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றியும் தெளிவு படுத்துகின்றன. இவர்கள் அதிகமாக திராவிடர்களாகவும், கி மு 2000 ஆண்டு அளவில் ஆரியர்களின் இந்தியா வருகைக்கு பின், அவர்களின் முன்னேறிய இராணுவ தொழில்நுட்பத்தால் அல்லது காலநிலை மாற்றத்தால் அல்லது வேறு காரணங்களால் அல்லது இவைகளின் கூட்டால், தெற்கிற்கு தள்ளப்பட்டார்கள் எனவும் காட்டுகிறது. எனினும் இன்றைய சைவ சமயத்திலே காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடிப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்து தற்கால சைவ / இந்து சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. அதாவது இன்றைய சைவ சமயத்திலே காணப்படும் இலிங்க வழிபாடு. சக்தி வழிபாடு, சிவ (பசுபதி) வழிபாடு முதலியன சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான சமயப் பண்புகளாக விளங்கின என்பது பல அறிஞர்களின் துணிவாகும். இன்று சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பெரும் பான்மையாகப் பேசப்படுவது இந்தோ - ஐரோப்பிய மொழிகளாகும். எனினும், இம்மொழி பேசுவோர், சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்த காலப் பகுதியிலேயே இந்தியாவுக்குள் வந்ததாகக் கருதப்படுவதால், இது இந்தோ - ஐரோப்பிய இனத்தைச் சாராத மொழியென்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பாக, இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்துக்குப் பல ஆய்வாளரிடையே ஆதரவு உண்டு. இந்திய - ஐரோப்பிய மொழிகள் (Indo-European languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக் குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக் குடும்பத்தில் ஹிந்தி, உருது என்பனவும் அடங்குகின்றன. அதாவது ஆங்கில அறிஞர் சர் ஜான் மார்ஷல் [Sir John Hubert Marshall of England] முயற்சியால் சிந்து சம வெளி நாகரிகம், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு, சிந்து சமவெளி மக்கள் திராவிடர்கள் என்றும், இவர்களது மொழி பழந் தமிழ் எனவும், ஹரப்பா, மொகஞ்சதாரோவில் தோண்டி எடுக்கப்பட்ட புதைப் பொருட்களின் ஆராய்ச்சியில் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிமுன்னோரைச் சார்ந்த ஒரு வித [மூல] "தாய்" [சக்தி], சிவ வழிபாடு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அத்துடன் லிங்க, யோனி வழிபாடும் அங்கு இருந்ததும் தெரிய வருகிறது. மேலும் அங்கு லிங்கம் யோனி தளத்தின் மேல் வைக்கப்பட்டு உள்ளது. பெண்தெய்வ (சக்தி) வழிபாடு, மூலச்சிவ வழிபாடு போன்றவற்றின் பிணைப்பாகவே இந்த இலிங்க வழிபாடு அங்கு நிலவியது என நாம் கருதலாம். மொஹெஞ்சதாரோவிலும், ஹரப்பாவிலும் கணக்கற்ற, நீண்டு குவிந்த அல்லது முக்கோணக் கற்களும் களிமண் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. மார்ஷல் அவற்றைச் சிவலிங்கங்கள் என எடுத்துக்காட்டினார். இலிங்க வழிபாடானாது உழவுத் தொழிலை மேற்கொண்டிருந்த புராதன நாகரிகங்களிற் காணப்படும் வழிபாட்டு முறையாகும். "நீண்டு குவிந்த கல்வடிவு ஆண்குறியின் அடையாளமாகவும், அக் கல்லைச் சூழ்ந்தவட்டக் கல்வடிவு பெண்குறியின் அடையாளமாகவும் முன்னையோராற் கருதப்பட்டது". ஆண் பெண் குறிச் சேர்க்கையே பண்டைக் காலந்தொட்டு இலிங்க வடிவில் அமைந்தது என்பது பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திர நூலாலும் அறியக்கிடக்கின்றது. அத்துடன் அரசமரம் [pipal] புனித மரமாக கருதப் பட்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது. பிற்காலத்தில் சைவசமய தத்துவ அடிப்படைகளிலே அரசமரம் முக்கியத்துவம் பெறாவிட்டாலும் மரங்களை வழிபடுவதும் சிந்து வெளி நாகரிக சமய முறைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. எண்ணற்ற சிந்துவெளி முத்திரைகளில் அரச மரம் இடம்பெற்றுள்ளது. சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பட்ட ஓர் இலச்சினையில் இரு அரச மரக்கிளைகளுக் கிடையிலே ஆடைகளின்றி பெண் தெய்வமொன்று காணப்படுகின்றது. நீண்ட கூந்தலும் கைகளில் காப்புகளும் காணப்படுகின்றன. மக்கள் உருவங்களும் விலங்குருவங்களும் அவ்வன்னைத் தெய்வத்திற்கு அடிபணிந்து அஞ்சலி செய்து நிற்கின்றன. அரச மரமும் அதனுடன் சேர்ந்த அன்னை வழிபாடும் ஆரியர் காலத்துக்கு முற்பட்டன என்பதற்கு இதனையும் சான்றாகக் கொள்வர் வரலாற்றாசிரியர். ஆனால் அங்கு கோயில் இருந்ததிற்க்கான ஆதாரங்கள் எதுவும் இது வரைக் கிடைக்கவில்லை. சில சிவ வழிபாட்டுக்குரிய சின்னங்கள் சிந்துவெளி நாகரிகத்திலே காணப்பட்டாலும், சிந்துவெளி நாகரிகத்திலே முதலிடம் பெற்று விளங்கியது பெண் தெய்வ (அன்னை) வழிபாடே என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. சிந்துவெளி மக்கள் வழிபட்ட தெய்வங்களை அதன் முக்கியத்துவத்தின்படி முறைப்படுத்திய மார்ஷல், முதலில் அன்னைத் தெய்வத்தையும், அதற்கடுத்தபடியாக மும்முகமுடைய கடவுளையும், மூன்றாவதாக இலிங்கம் அல்லது ஆண் குறியையும் எடுத்துக் கூறியுள்ளார். பெண்தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது தோன்றிய சமுதாயத்திலே தாய்வழிமுறை [matriarchal] நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர்கள் காட்டும் உண்மையாகும். அங்கு அன்னைத் தெய்வமே முழு முதற்றெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம். பண்டைய திராவிட மக்களிற் பெரும் பகுதியினர் தாய்வழி உரிமையை கடைப்பிடித்தனர். இதன் காரணமாகப் பெண்தெய்வ வழிபாடு திராவிட மக்களிடையே பெரு வழக்காயிருந்தது என்று சமூகவியல் அறிஞர் கொள்வர். “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று திருவாசகம் போற்றுகின்றது. "சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை” என்று திருமந்திரம் கூறுகின்றது. எனினும் சைவ சமய வரலாற்றைத் தேடி நாம் பின்னோக்கிச் செல்லும் போது தென்னாட்டை விட்டுச் சிந்து நதிப் பள்ளத்தாக்கில் கிறித்துவிற்கு முன் மூவாமிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டுச் சிறப்புற்று விளங்கிய நகரங்களுக்குச் செல்லவேண்டியிருக்கிறது என்பது இதனால் புலனாகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 27 தொடரும் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சர்வதேச சிறுவர் தினம் (ஆக்டோபர் 1)"
kandiah Thillaivinayagalingam posted a topic in நிகழ்தல் அறிதல்
"சர்வதேச சிறுவர் தினம் (ஆக்டோபர் 1)" "கள்ளம் கபடம் அற்ற உள்ளம் கருப்பு வெள்ளை பாரா மனம் கயமை பகைமை அறியா நெஞ்சம் கற்றுத் தேறி அறிஞன் ஆகவேண்டும்! "ஆசை வேண்டும் ஒழுக்கம் வேண்டும் ஆடிப் பாடி மகிழவும் வேண்டும் ஆதிரனாக என்றும் ஒளிர வேண்டும் ஆலமர நிழல்போல் வாழ வேண்டும்!" "ஆச்சாரம் அறிந்து ஒழுக வேண்டும் ஆசிரியரை மதித்து நடக்க வேண்டும் ஆடை நேர்த்தியாக உடுக்க வேண்டும் ஆதரித்து அனுசரித்து உதவ வேண்டும்!" "ஆதிக்க வெறி தவிர்க்க வேண்டும் ஆயுதம் தவிர்த்து அன்பால் இணையவேண்டும் ஆசி பெற்று மனிதனாக வளரவேண்டும் ஆக்டோபர் ஒன்று சிறுவர்தின வாழ்த்துக்கள்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] -
"தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion" - PART / பகுதி: 02 மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய் வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பப் பட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப் பட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப் பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வுத் தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப் போக்கில் - அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப - விட்டுக் கொடுப்புகளுடன் விரிவு படுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப் பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த கால, சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்க வேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறு பட்டவையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். இதனால் இவை இலகுவில் விட்டுக் கொடுப்புடன் மாற்றக் கூடியவை அல்ல. ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது. இது, மதங்களுக்கு இடையேயான மோதலையும் சிலவேளை உள் - மத உட்பூசல்களையும் ஏற்படுத்தின. உதாரணமாக, யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி, பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை பாவி என்பதாகும்- அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெற வில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. எது எப்படியிருப்பினும் முதலாவது மதம் கருவுறுதல் அல்லது வளத்தை [செழிப்பை] அடிப்படையாக அமைந்ததாக இருந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆகவே அவர்கள் தமது கவனத்தை பெரிய பெண் தெய்வம் ஒன்றை வழிபடுவதில் முதலில் கவனம் செலுத்தினர். பின்னர் கருவுறுதலில் ஆணின் பங்கை உணர்ந்தது ஆண் தெய்வங்களும் தோன்ற வழிசமைத்தது. இந்த ஆண் தெய்வங்களுக்கு, பின்னர் மத குருமார்களால் படிப்படியாக அதிகரித்த முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. இந்த நவீன் உலகத்தில் சமயம் பெரும்பாலும் மனித பயத்திற்கும், இந்த பாதுகாப்பற்ற உலகில் இயற்கையின் அனர்த்தங்களால் அல்லது மனித வெறுப்புகளால் அல்லது சகிப்புத் தன்மை இன்மையால் எந்த நேரமும் ஏற்படும் காயங்கள், உயிர் பலிகள், கொலைகள் போன்ற பாதுகாப்பு அற்ற மனிதனுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தாவும் இன்னும் சமயம் ஒரு பதிலாகவே இருக்கிறது. அதில் ஒரு மாற்றமும் இல்லை! உணவை தேடி சேகரிப்பதை விட, எப்படி உணவு உற்பத்தியை தாமே செய்யலாம் என்பதை மனிதன் அறிந்தது, அதாவது, விவசாயம் அறிமுகமாகியது, மனித வரலாற்றில் ஒரு பெரிய திருப்பம் என பரவலாக கருதப்படுகிறது. இந்த மாற்றம் உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கால கட்டங்களில் நடை பெற்றது. எப்படியாயினும், அதி நவீன மேம்பட்ட விவசாய தொழில் நுட்பம் கொண்ட இன்றும், அப்படியான எந்த வசதியும் அற்ற 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்றும், நல்ல அறுவடையை கொடுக்க, பிரகாசித்த சூரியனும் மழை வீழ்ச்சியும் எமக்கு தேவைப்படுகிறது. ஆகவே, பண்டைய மனிதன் தமக்கும் இயற்கைக்கும் இடையில் ஒரு உறவை ஏற்படுத்தியது புதுமையல்ல. எனவே அவன் இயற்கை கடவுளை மழை, வெயில் வேண்டி கெஞ்சினான் அல்லது பிராத்தனை செய்தான். என்றாலும் காலம் செல்ல, வேலை நாட்களை தவிர்த்து, அதற்கென கிழமையில் ஒரு நாளை பிரத்தியேகமாக ஒதுக்கினான். அப்படி ஒரு வழிபாடு செய்ய தனிப்பட்ட இடமும், அந்த வழிபாட்டை நிர்வாகம் செய்ய, திறமை வாய்ந்த தனி நபரும் தேவைப் பட்டனர். இந்த வகையில் தான், பெரும்பாலும் வழிபாடு செய்ய சிறப்பு தினம் அல்லது புனித நாளும் [ஓய்வு நாள்], அந்த வழிபாடு செய்ய ஒரு தனிப்பட்ட இடம் அல்லது ஆலயமும், அந்த வழிபாட்டை முன்னின்று நடத்த ஒரு பூசாரி அல்லது மத குருவும் தோன்றியிருக்கலாம்? இவற்றிற்கான பல பண்டைய கால தடையங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் வரலாற்றுக்கு முற்பட்ட, மேற் பழைய கற்காலக் குகை ஓவியம் அல்லது பாறை ஓவியத்தை, உதாரணமாக, 27,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரான்ஸ் கர்காஸ் குகைகள் [Gargas caves] போன்றவற்றை நாம் காண்கிறோம். இந்த ஓவியங்களுக்கு மதத்தின் தாக்கம் இருப்பதை காண்கிறோம். இப்படியான, இந்த குகைகளே மனித இனத்தின் முதல் ஆலயமாக இருந்திருக்கும் என கருதப்படுகிறது. இது மதத்தின் வரலாற்றை 30,000 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்கிறது. மேலும், பழநி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, இந்தோனேஷியா [South Africa, zimbabwe, France and Indonesia] ஆகிய நாடுகளில் இருப்பதைப் போன்ற நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இரத்த சிவப்பு நிறத்தில் வரையப் பட்ட இந்த ஓவியங்களில், ஒரு ஓவியத்தில் ஒரு நீண்ட கோட்டின் இருபுறமும் சூலம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் மிக முக்கியமானது. சூலம் என்பது சைவ வழிபாடு தொடர்பான சின்னமாகும். இவ்வகை சூல ஓவியங்கள் மேலும் இரத்த சிவப்பு நிறத்தில் உள்ளன. தற்போதுவரை ஊரின் எல்லையில் சூலக்கல் நடும் பழக்கம் தமிழர்களிடையே உள்ளது. இந்த ஓவியம் பழங்குடி மக்களின் பாதுகாப்பு சடங்கை குறிப்பிடுவதற்காக வரையப் பட்டுள்ளது போல் தெரிகிறது. இன்னொரு ஓவியத்தில் ஒரு மனிதன் வலது கையில் ஒரு கைக்கோடாரியை ஏந்திய நிலையில் உள்ளான். இந்த மனிதனின் காலடியில் ஒரு மனிதன் வீழ்ந்து கிடப்பதைப் போல ஓவியம் வரையப் பட்டுள்ளது. மற்றொரு ஓவியம் ஒரு மனிதனின் கை ஓவியமாகும். இது, செங்காவி குழம்பில் கையைத் தோய்த்து அதை பாறையில் அச்சு பதிக்கும் விதமாக அழுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த கை ஓவியங்களை தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, பிரான்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் காணலாம். அது மட்டும் அல்ல, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் காணப்பட்ட பண்டைய கல்லறைகளில் இருந்து, 50,000 ஆண்டுகளுக்கு முன்பே, தமது இறந்த உறவினரை அடக்கம் செய்த முதல் மனித இனம் நியண்டர்தால் மனிதன் என அறிகிறோம். சில கல்லறைகளில் இறந்தவரின் உடலுடன் மாமிச விலங்குகளின் எலும்புகளும் சேர்ந்து காணப்படுகின்றன. வேறு சில கல்லறைகளில், மலர்களும், சிலவேளை, மனிதனுக்கு பயன்படும் கருவிகளும் காணப்படுகின்றன. இது சில நியண்டர்தால் [Neanderthals] மனித குழுவிடம் ஒரு வித மறுமையில் நம்பிக்கை இருந்ததை காட்டுகிறது. இது அவர்கள், இன்று உள்ள பல மத குழுக்கள் போல், இறப்பு மனிதனின் முடிவு அல்ல, அடுத்த பிறப்பின் ஆரம்பம் என நம்பியதை எடுத்து காட்டுகிறது. ஆகவே, நியண்டர்தால் மனிதன் கடவுள், மதம், மறுமை போன்றவற்றை அறிந்திருந்தான் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 03 தொடரும் "An analysis of history of Tamil religion" - PART : 02 The first religious belief system which was formed as an oral tradition during the Upper Palaeolithic Revolution, was disseminated among the members of the tribe and was taught to each new generation. Much later, after writing was developed, the beliefs were generally recorded in written form. A major loss of flexibility resulted. Oral traditions can evolve over time; written documents tend to be more permanent. Unfortunately, because these belief systems were based on hunches, the various religions that developed in different areas of the world were, and remain, all different. Their teachings were in conflict with each other. Because the followers of most religions considered their beliefs to be derived directly from God, they cannot be easily changed. Thus, inter - religious compromise is difficult or impossible. Also, because religious texts are often ambiguous, divisions developed within religions. Different denominations, schools, or traditions have derived different meanings from the same religious texts. Thus were laid the foundations for millennia of inter - religious and intra - religious conflict. For example, During the Portuguese rule in Jaffna, The villagers asked to assemble and then a missionary ask them to reject their "God Shiva" ["false" gods as per Catholic priest] and accept "one true God" [Jesus]. "It was not a request; It was almost a command backed by the authority of the Portuguese government" - Begin by Bible, if unsuccessful then use the Sword -". Fear of a fine or corporal punishment with cane and stock ensured their regular attendance at church on Sundays and feast days. This is the way Tamils were converted to Christianity during the Portuguese rule, not by willingness or one's own consent or Comparing shaivism vs Christianity, But by means of money or power. However, The first organized religions appear to have been based on fertility. They were focused on the worship of the great Earth Goddess. Religion evolved to include male Gods who were gradually given increased importance by the priests. This development may have been caused by developing knowledge of the male's involvement in the process of reproduction. Some observers believe that modern - day religions remain largely a response to human fear. Their main function is to provide their followers with a feeling of security while living in a dangerous environment in which a person can be injured, killed or murdered at any time due to natural causes, accidents or human hatred and intolerance. The introduction of farming, when people learned how to produce rather than acquire their food, is widely regarded as one of the biggest changes in human history. This change happened at various times in several different places around the world. However, at the end of the each day both with the advanced farming technology we have today and as far back as 10,000 years ago we still need the sun to shine and rain to fall to produce a good harvest. And throughout the world today many farmers pray for a good harvest. It's not difficult to see that ancient man may too have carried out this practice, and a relationship developed between man and nature, man and God, a sort of unwritten agreement, a contract, where man pleads with God or prays to God for sunshine and rain. And as time moved forward it came to pass that this contract required a special day of the week, separate from work days, when prayer could take place. Also required was a special place where the contract could be honoured along with skilled people who would administer the carrying out of the contract. From this idea probably we can see where the apparatus of organised religion, Such as special or Holy day for worship or prayer [Sabbath], the temple, and the priest, may have stemmed from. Throughout the world we find Palaeolithic Cave Art and in many of these caves, such as the Gargas caves in France, there appears to be a religious influence behind the art. Some of these caves could be regarded as mankind's first temples. So there appears to be evidence of religion stretching back to almost 30,000 years ago. Further, A team of Indian archaeologists also discovered ancient rock paintings in a dilapidated cave near a Paliyar tribal habitation at Kombaikadu village situated 1,000 metres above sea level on Palani - Kodaikanal Road, Tamil Nadu, India in mid 2015. In one of the paintings, A holy lance was drawn on the cave wall, The picture of holy lance showed prevalence of shaivite culture in ancient times, Another picture depicts a person holding an axe in his hand with a dead body lying near his feet and Hand symbol was also painted on these rock. This type of hand symbol was present in many rock paintings throughout the world, such as South Africa, zimbabwe, France and Indonesia. Also the ancient artists used red colour to draw these paintings. All these paintings are at least 4000 years old. Not only that, Graves from Europe and western Asia give a strong indication that the Neanderthals were the first hominoids to bury their dead perhaps as long as 50,000 years ago. In some cases the buried bodies were accompanied with meaty animal bones. Other times with flowers, and in some cases useful objects such as tools suggesting that some Neanderthal groups may have had a belief in some kind of an afterlife. They, like so many religions of today saw death as not the end, but merely the beginning of a new cycle of existence. So, we can easily assume that, the Neanderthals the first hominoids, Also may be aware of God, religion and an afterlife. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part 03 Will follow
-
"ஞானச் செருக்கு" "உள்ளத்தில் உண்மை உறாமல் உலகத்தே துள்ளி ஆரவாரம் என்ன செய்தாலும் வெள்ளை மனம் கொண்டவனாக நடித்தாலும் அள்ளி அள்ளி செல்வம் கொடுத்தாலும் உள்ளபடி உண்மையை தெளிவாக அறிந்து ஆள்பவன் ஞானச் செருக்கு கொண்டவனே!" "தனக்குள் தேடித் தெளிவைக் கண்டவன் அனல் பறக்கும் துணிவைக் கொண்டவன் மனம் திறந்து செயல் ஆற்றுபவன் கனம் இல்லா மடியைக் கொண்டவன் இனம் சாரா நடுநிலை உள்ளவன் ஊனமற்ற அவனுக்கு ஞானச்செருக்கு இயல்பே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"காலத்தினால் செய்த உதவி"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in கதைக் களம்
எல்லோருக்கும் நன்றிகள் -
"தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion" - PART / பகுதி: 01 எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகிய போது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேட வேண்டியுள்ளது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும். காடுகள், கொடிய மிருகங்கள், இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல் மற்றும் பூமி அதிர்ச்சி போன்ற ஆபத்து நிறைந்த இயற்கை அனர்த்தங்கள், சூழ ஆதி கால மனிதர்கள் வாழ்ந்தார்கள். பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. அந்த கும்மிருட்டில் கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து, இந்த பயத்தினால் இரவானால் குகைகளினுள் குடியிருப்பு. பகல் வந்த பின்பு தான் அவர்களுக்கு உலகமே மீண்டும் தெரியும். அப்பொழுது தான், அவன் வெவேறு இடங்களுக்கு சென்று, குழுவாக வேட்டையாடி, கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்து உண்டான். அவன் பயந்தது பெரும்பாலும் இயற்கைக்கு மட்டுமே. இந்த பயம் தான் முதலாவது சமயத்தை உருவாக்கியிருக்கும் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இப்படியான பாதுகாப்பற்ற உலகில், மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் தமது கட்டுப்பாட்டில் அடங்காத சுற்றுப் புற சூழலையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், அந்த மனித இனக்குழுவில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ - இவைகளை பார்த்து பார்த்து அவர்களின் இந்த பய உணர்வை போக்கி ஒரு ஆறுதல் அளிக்க, அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள். அந்த விளக்கமே கடவுளை, மதத்தை உண்டாக்கியது எனலாம். அந்த ஆதி மனிதனிடம் தன்னைப் பற்றியும் தான் வாழும் சூழ்நிலை பற்றியும் பல பல கேள்விகள் கட்டாயம் மனதில் எழுந்திருக்கும். எது இயற்கையின் பருவகால சுழற்சியை கட்டுப்படுத்துகிறது? - கதிரவனின் நாளாந்த அசைவா?, விண்மீன்களின் அசைவா?, கடந்து செல்லும் கால நிலைகளா? .... எது தமது சுற்றுப் புற சூழலை கட்டுப் படுத்துகிறது? - எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது? / ஏற்படுத்துகிறார்கள்? ... எது கருவுறுதலை கட்டுப்படுத்துகிறது? - தமது இனத்தின்?, தமது வளர்ப்பு பிராணியின்?, தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை? ... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலை நாட்ட எப்படியான அற நெறி அல்லது ஒழுக்க நெறி தேவை? ... எல்லாத்திற்கும் மேலாக, முக்கியமான கேள்வி, ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது? விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காண முடியாது. ஏன்? இன்றும் கூட, கடைசிக்கு முதல் கேள்விக்கு - அறநெறி அல்லது ஒழுக்க நெறிக்கு - இன்னும் விவாதித்துக்கு கொண்டு இருக்கிறோம், கடைசி கேள்விக்கு - மறுமைக்கு - இன்னும் ஒரு ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த இரு கேள்விக்கும் [கட்டாயம் இறுதி கேள்வியான மறுமைக்கு] ஒரு ஊகத்தின் அடிப்படையிலாவது ஒரு முன் எச்சரிக்கையாக ஒரு பதில் வேண்டும். ஆதி மனித இனக் குழுவில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட அனுமானத்தின் அடிப்படையில் விடை கண்டார்கள். அதுவே, முதலாவது கடவுள் நம்பிக்கை அமைப்பு முறை தோன்றவும், முதலாவது சமய குருமார் அமைப்பு தோன்றவும், கடவுளை சாந்தப்படுத்த முதலாவது வழிபாட்டு சடங்குகள் தோன்றவும், கருவுறுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் அம்சங்களை கட்டுப்படுத்தும் முதலாவது சடங்குகள் தோன்றவும், இனக்குழு உறுப்பினர்களின் நடத்தை எதிர்பார்ப்புகளை விளக்கும் முதலாவது அறிவுறுத்தலும் அதற்கான ஒழுக்கநெறி தோன்றவும் வழிசமைத்தது. எப்பொழுது மனிதன் முதல் முதல் ஆத்திகன் [கடவுள் உண்டு என்ற கொள்கை உடையவர்] ஆனான் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், மத நடத்தைகள் பற்றிய நம்பத் தகுந்த ஆதாரங்கள், மத்திய பழைய கற்காலம் சகாப்தத்தில் [Middle Paleolithic era] இருந்து, அதாவது 300–500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அல்லது அதற்கு முன்பே இருந்து எமக்கு கிடைத்துள்ளன. சில அறிஞர்கள், மனிதனின் மிக நெருங்கிய உறவினரான, சிம்பான்சிகள் [மனிதக்குரங்குகள்] மற்றும் பொனொபோ குரங்குகள் [chimpanzees and bonobos] போன்றவை, மனித கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு முன்னோடிகளாக உள்ளன என்கின்றனர், உதாரணமாக, சில மனிதக் குரங்குகள் கடும் மழை தொடங்கியதும் அல்லது ஒரு நீர் வீழ்ச்சியை காணும் போதும் ஆடுகின்றன. இந்த, இவைகளின் அடிப்படை ஆடும் காட்சிகள், மத சடங்குகளுக்கு ஒரு முன்னோடி என்றும் எடுத்துக் கொள்ளலாம். பல மிருகங்கள் தம் உறவினரின் பிரிதலால் அல்லது இறப்பால் துக்கம் கொண்டாலும், அங்கு, மனிதர்கள் போல், இறுதி ஊர்வல சடங்குகள் நடைபெறுவதில்லை, எப்படியாயினும், யானையின் விரிவான புதைத்தல் நடத்தையை காணும் ஒருவர், அது கட்டாயம் ஒரு சடங்கு முறையின் அல்லது மத நடத்தையின் ஒரு அறிகுறி என்பதை நிராகரிக்க மாட்டார்கள். உதாரணமாக, யானை ஒன்று இன்னும் ஒரு யானையின் இறந்த உடலை காணும் போது, அது அந்த உடலை சேறு, மண் மற்றும் இலைகள் கொண்டு பெரும்பாலும் அடக்கம் செய்கின்றன. அது மட்டும் அல்ல, அவை தமது இறந்த உறவினரின் உடலை, அதிக அளவு பழங்கள், மலர்கள் மற்றும் வண்ணமயமான இலைத்தொகுதி அல்லது குழை கொண்டு புதைக்கின்றன. எனினும் மனிதனை தவிர்த்த மற்ற எந்த மிருகங்களும் கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் பிரார்த்தனை, வழிபாடு மற்றும் இவைபோன்ற மனிதனுக்கே உரித்தான மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான எந்த சான்றுகளும் இல்லை. எது எப்படியாயினும், சில மனித குழுக்கள் அல்லது இனங்கள், தமது பண்டைய காவியங்கள் மற்றும் மதம் அல்லது கடவுள் கதைகளில் குரங்கு, யானைகளை இணைத்ததற்கு இந்த மிருகங்களின் இப்படியான நடவடிக்கைகளே காரணமாக இருந்திருக்கலாம். இவை பின் படிப்படியாக கடவுள் அந்தஸ்த்தை அல்லது தகுதியை பெற்றிருக்கலாம்? உதாரணமாக அனுமான், கணபதி அல்லது பிள்ளையார் ஆகும், மனிதனின் முந்தைய மத சிந்தனைக்கான சான்றாக, அவர்கள் தமது இறந்த உறவினர்களுக்கு செய்த சடங்கு முறை சாட்சியாகிறது. இந்த சடங்கு முறை அடக்கம், மனித நடத்தையில் ஒரு பெரும் திருப்பத்தை கொடுத்தது. அதாவது இது, வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய அவர்களின் விழிப்புணர்வை பிரதிநிதித்துவம் படுத்துவதுடன், அதிகமாக அவர்கள் மறுமை பற்றி அறிந்திருந்தார்கள் அல்லது அதில் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. மத எண்ணங்களை குறியீட்டு மூலம் தெரிவிப்பது பெரும்பாலும் உலகளாவிய ஒரு முறையாகும். பொதுவாக மத நடவடிக்கைகளில் தெய்வீக அல்லது ஆவித்தொடர்புடைய சக்திகளையும் அதன் கருத்துகளையும் பிரதி நிதித்துவம் படுத்த படங்கள் மற்றும் சின்னங்கள் உருவாக்குவது ஒரு இயல்பான செயல் ஆகும். அப்படியான முன்னைய சான்று மத்திய கற்கால ஆப்பிரிக்கா பகுதியில் கிடைத்துள்ளது. குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு, சாயப் பொருளான [நிறமி] சிவப்பு காவிக்கல் [red ochre] பாவித்தது தெரிய வந்துள்ளது. இன்னும் உலகில் வாழும் வேடுவர்கள் மத்தியில், இந்த சிவப்பு காவிக்கல், சடங்குகளுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக உலகளாவிய மனித பண்பாட்டில், சிவப்பு நிறம் - குருதி, பாலியல், வாழ்க்கை மற்றும் இறப்பு [blood, sex, life and death] போன்றவற்றை எடுத்துச் சொல்லும் அல்லது குறித்துக்காட்டும். எப்படியாயினும் இவையை தவிர, மனிதன் நவீன நடத்தையை [behavioural modernity] அடையும் முன்பு, அங்கு மதம் இருந்ததற்கான வேறு சான்றுகள் ஒன்றும் இல்லை. நடத்தை நவீனத்துவம் [behavioural modernity] என்பது பொருத்தமான நடத்தை மற்றும் அறிவாற்றல் பண்புகளால் தற்போதைய ஹோமோ சப்பியென்ஸ் ஆகிய தற்கால மனிதர், கிடத் தட்ட 200,000 ஆண்டுகளுக்கு முன்பு, புராதான மனிதரில் இருந்து உருவாகிய உள்ளமைப்புப்படி நவீன மனிதர் போன்ற மனிதரில் இருந்து வேறுபடுத்துவதை குறிக்கும். நவீன நடத்தை, மனிதனில் 50,000 ஆண்டளவில் வெளிப்படத் தொடங்கி, காலக் கிரமத்தில் முழுமை அடைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. சமயம் மற்றும் ஆவி உலகம் பற்றிய விழிப்புணர்வு பழங்கற்கால பகுதியில், அதிகமாக ஆரம்பித்து இருந்தாலும், அது மேலும், உலகளாவிய பொதுவான பண்பாடுகளான [cultural universals] கலை, இசை, மொழி இவைகளின் வளர்ச்சியுடன் சேர்ந்து தானும் விருத்தி அடைந்தது. வேடையாடி சேகரித்து வாழ்ந்த இந்த முன்னைய நாடோடி மக்கள்,அதிகமாக 10,000 ஆண்டுகளுக்கு முன், தேவையின் அடிப்படையில் அல்லது அன்று அவர்களுக்கு ஏற்பட்ட வசதி நிமித்தம், முதல் முதல் ஓர் இடத்தில் குடியேறி வேளாண்மை நுட்பத்தை கற்று, முதலாவது விவசாயி ஆகினான். இந்த விவசாய வாழ்க்கையே ஒழுங்கமைக்கப் பட்ட மதம் ஒன்றிற்கு அத்திவாரம் இட்டது. இதன் மூல தடயம் மைய கிழக்கு (Near East) நாடுகளில், குறிப்பாக மெசொப்பொத்தேமியாவில் காணலாம். என்றாலும், இப்படியான விவசாய வாழ்க்கை சுயாதீனமாக உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று இருக்கலாம்? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும் "An analysis of history of Tamil religion" - PART: 01 Nobody knows with accuracy how the first religions evolved. By the time that writing had developed, many religions had been in place for many millennia and the details of their origins had been forgotten. However, there is speculation that the first religions were a response to human fear. They were created to give people a feeling of security in an insecure world, and a feeling of control over the environment where there was little control. During their evolution from proto-human to full human, they developed questions about themselves and their environment: What controlled the seasonal cycles of nature -- the daily motion of the sun; the motion of the stars, the passing of the seasons, etc. What controlled their environment -- what or who caused floods, rains, dry spells, storms, etc? What controls fertility -- of the tribe, its domesticated animals, and its crops. What system of morality is needed to best promote the stability of the tribe? And above all, what happens to a person after they die? Living in a pre-scientific society, people had no way to resolve these questions. Even today, with all of our scientific advances, we still debate about the second last question, and still have no way of reaching an consensus on the last. But the need for answers (particularly to the last question) were so important that some response was required, even if they were merely based on hunches. Some people within the tribe started to invent answers based on their personal guesses. Thus developed: The first religious belief system, The first priesthood, The first set of rituals to appease the Goddess, Other rituals to control fertility and other aspects of the environment, A set of behavioural expectations for members of the tribe, and a set of moral truths to govern human behaviour. When humans first became religious remains unknown, but there is credible evidence of religious behaviour from the Middle Paleolithic era (300–500 thousand years ago) and possibly earlier. Though some scholars believe that, the closest Human Relatives, chimpanzees and bonobos may have the precursors for culture and spirituality, for example, some chimpanzees may “dance” at the onset of heavy rain or when they come across a waterfall, and this “elemental” displays may be precursors of religious ritual. While grief is common to many animals, funeral rituals are not. However, one cannot ignore the elaborate burying behaviour of elephants as a similar sign of ritualistic or even religious behaviour in that species. When encountering dead animals, elephants will often bury them with mud, earth and leaves and in addition, Elephants have [been] observed burying their dead with large quantities of food fruit, flowers and colourful foliage. There is no evidence that any non-human animals believe in gods, pray, worship, or many other behaviours typical of human religion. However, These may be the reason why some ancient tribes or races includes these animals, chimpanzees or monkeys and elephants in their epics or religious or god stories and later promoted them as one of their gods, for example, Hanuman & Ganapathi or Pillaiyar. The earliest evidence of religious thought of human is based on the ritual treatment of the dead. Ritual burial thus represents a significant change in human behaviour. Ritual burials represent an awareness of life and death and a possible belief in the afterlife. The use of symbolism in religion is a universal established phenomenon. It is common for religious practices to involve the creation of images and symbols to represent supernatural beings and ideas. Some of the earliest evidence of symbolic behaviour is associated with Middle Stone Age sites in Africa. From at least 100,000 years ago, there is evidence of the use of pigments such as red ochre. Among extant hunter gatherer populations around the world, red ochre is still used extensively for ritual purposes. It has been argued that it is universal among human cultures for the colour red to represent blood, sex, life and death. However, there is no other evidence that religion existed in human culture before humans reached behavioural modernity. It is also interesting to note that, though the awareness of religion and the spirit world probably began at the time of the Palaeolithic Revolution, It would have developed further alongside other cultural universals that were also evolving at this time such as art, music and language which is key to the origin and development of all the cultural universals. The first farmers belief to began to cultivate crops over 10,000 years ago. Driven by necessity or just convenience, the nomadic hunter-gathers of the time began to settle in the one location and learn the art of farming. It is considered that Farming may have given us the building blocks of organised religion with the traces its roots in the Near East but may have occurred independently in several other locations around the world. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part 02 Will follow
-
"காலத்தினால் செய்த உதவி" "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது." காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும் என்கிறார் திருவள்ளுவர். ஆமாம் உதவி என்பது எப்படி செய்கிறோம், எவ்வளவு செய்கிறோம் அல்லது யாருக்கு செய்கிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதை என்றும் தன் நெஞ்சில் பதித்து வாழ்பவள் தான், ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில், வாழும் உடலாலும் மனதாலும் அழகிய இந்த இளம் பெண். அவளின் பெயர் 'அருள்மலர்'. பெயருக்கு ஏற்ற அன்பு, இரக்கம், மற்றும் எந்தநேரமும் உதவும் இயல்பு கொண்டவள். ஒரு சிறிய கருணை செயல் ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற தீவீர நம்பிக்கை உடையவள். அழகில் ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை, ஏன் ரதி தேவதையை விட ஒரு படி மேல் என்று சொல்லலாம்! மனதை கவரும் ஒரு மாலை பொழுது, சூரியன் மலையில் மறையும் அழகை ரசித்தபடி அருள்மலர் தன் வீட்டின் முற்றத்தில் இருந்த பாறாங்கல்லில் குந்தி இருந்தாள். இவளின் அழகு கதிரவனையும் கொஞ்சம் தடுமாற வைத்தது போலும். அந்த தடுமாற்றம் இயற்கையை குழப்பியது போல, இதுவரை அழகை பரப்பிய அது, திடீரென, எந்த முன் அறிவித்தாலும் இல்லாமல், கிராமத்தின் மீது கடுமையான புயலை வீசியது. காற்று ஊளையிட்டது, பலத்த மழை பெய்தது. ஓயாத புயலில் இருந்து தஞ்சம் தேடி கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு விரைந்தனர். ஆனால் அருள்மலர், தனது இரக்கமுள்ள இதயத்துடன், புயலின் கோபத்தில், வெள்ளத்தின் சீற்றத்தில் யாராவது சிக்கிக்கொண்டார்களா என்று தான் இதுவரை இருந்த பாறையின் உச்சத்தில் எழுந்து நின்று நான்கு பக்கமும் பார்த்தாள். மரங்கள் சுற்றி இருந்ததால், சரியாக பார்க்கமுடியவில்லை. அவள் உடனடியாக தன் வீட்டின் மாடி ஜன்னலின் ஊடாக வெளியே எட்டிப்பார்த்த போது தான், ஒரு வயதான பெண் மழையின் வழியே, வெள்ளத்தின் நடுவில், மின்னலின் வெளிச்சத்தில், நடக்க சிரமப்படுவதை கவனித்தாள். அந்தப் மூதாட்டி நனைந்து, நடுங்கி, ஒரு கிழிந்த குடைக்குள், ஆனால் நம்பிக்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்தாள். அருள்மலரின் இதயம் பச்சாதாபத்தால் வீங்கியது, அவள் எப்படியாவது உதவ வேண்டும் என்று முடிவு எடுத்தாள். சிறிதும் தயங்காமல், அருள்மலர் தனது நீர்புகா மேற்சட்டை [ரெயின்கோட்டைப்] ஒன்றை அணிந்துகொண்டு வெளியே விரைவாக விரைந்தாள். சீறிப் பாய்ந்த காற்றையும் வழுக்கும் சேற்றையும் எதிர்த்துப் போராடி, கிழவியின் பக்கம் ஒருவாறு வந்தாள். அருள்மலர் ஓடிப்போவதைக் கண்ட சில இளைஞர்களும் ஆவலுடன் இணைந்தனர். அது அவளுக்கு மேலும் உத்வேகத்தை கொடுத்தது. மூதாட்டி மிகவும் பயந்தும் களைத்தும் இருந்ததால், அவளுடன் இணைந்த இளைஞர்கள் மூலம் மூதாட்டியை தூக்கி சிறிது தூரத்தில் இருந்த தன் வீட்டை நோக்கி எல்லோரையும் வழிநடத்தினாள். அவர்கள் எல்லோரும் சேறும் வெள்ளமும் நிறைந்த பாதைகள் வழியாகச் சென்றனர், மழை அவர்கள் எல்லோரையும் முழுமையாக நனைத்தது. மூதாட்டி, புயல் காரணமாக தனது வீட்டில் மின்சாரம் முற்றாக இழந்ததையும், உதவிக்கு யாரையும் அழைக்க முடியாமல் போனதையும் அருள்மலருக்கும் மற்றவர்களுக்கும் தளதளத்த குரலில் கூறினாள். அருள்மலர் அதை கவனமாகக் கேட்டாள், தன்னால் முடிந்த எந்த வகையிலும் ஆறுதலையும் ஆதரவையும் வழங்குவதில் உறுதியாக இருந்தாள். தனது வீட்டில் மூதாட்டி மற்றும் இளைஞர்களுக்கு சுட சுட தேநீரும் அதனுடன் கடிக்க தன்னிடம் இருந்த எதோ சில பண்டங்களையும் கொடுத்து, சிறு ஆறுதல் அடைந்தபின், இறுதியாக, அவர்கள் எல்லோரும் மூதாட்டியின் சிறிய குடிசைக்கு வந்தனர். உட்புறம் இருட்டாக இருந்தது, மற்றும் அலறல் காற்று சுவர்களின் விரிசல் [இடைவெளி] வழியாக ஊடுருவியது. என்றாலும் தன்னுடன் வந்த இளைஞர்களின் உதவியுடன் தற்காலிகமாக சில நடவடிக்கைகளை எடுத்து ஓரளவு மூதாட்டியின் குடிசையை சரிப்பண்ணியத்துடன், அவள் கண்களில் உறுதியுடன், எல்லாம் சரியாகிவிடும் என்று மூதாட்டிக்கு உறுதியளித்தாள். ஒளிரும் விளக்கைப் [flashlight] பயன்படுத்தி, அருள்மலர் மெழுகுவர்த்திகள் மற்றும் தீப்பெட்டிகளைத் மூதாட்டியின் குடிசையில் தேடினாள் . அவள் அவற்றை ஒவ்வொன்றாக முக்கிய முக்கிய இடங்களில் ஏற்றி, அறையை ஒரு சூடான, மினுமினுப்பான பிரகாசத்தால் நிரப்பினாள். இதற்கிடையில் வளிமண்டலம் [அல்லது காலநிலை] மிகவும் அமைதியானது, அத்துடன் மூதாட்டியின் நடுக்கம் தணிந்தது. என்றாலும் அருள்மலர் வெளியே சென்று அந்த இளைஞர்கள் துணையுடன் கொஞ்சம் தடிப்பான இரண்டு போர்வைகளைச் சேகரித்து, ஒரு சிறிய எரிவாயு அடுப்பில் சூடான வடிசாறையும் [சூப்பையும் அல்லது காய்கறிக் கஞ்சியையும்] தயாரித்து திரும்பவும் மூதாட்டியின் குடிசைக்கு வந்தாள். அவர்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து, சூடான சூப்பைப் பருகும்போது, மூதாட்டி தன் தனிமையை மறந்துவிட்டதை உணர்கிறார் என்பதை அருள்மலர் உணர்ந்தாள். அருள்மலர் இரக்கத்துடனும், அன்புடனும் மூதாட்டியுடன் அளவளாவி, கிராமத்தில் எப்போதும் ஒரு நண்பர் உங்களுக்கு தனிமையை போக்கி கதைக்க, உதவ இருப்பார் என்று உறுதியளித்தாள். அடுத்த அடுத்த நாட்களில், புயல் முற்றாக தணிந்து, கிராமம் மீண்டும் பழைய நிலைக்கு வரத் தொடங்கியது. மின்சாரம், மற்றும் தொலைபேசிகள் வழமைக்கு திரும்பியது, கிராம மக்கள் தங்கள் பழைய வாழ்வுக்கு திரும்பினர். ஆனால் அருள்மலரின் கருணை செயல் மூதாட்டியின் இதயத்தில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றது. மூதாட்டி, இப்போது தன்னுள் ஒரு புதுப்பித்த உணர்வை உணர்ந்து, கிராமத்துடனும் அருள்மலருடனும் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார். அருள்மலரின் தன்னலமற்ற தன்மையையும், புயலின் போது அவள் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவையும் அவர் பாராட்டினார். அருள்மலரின் செயல்களால் ஈர்க்கப்பட்ட கிராமவாசிகள், அவளது அளவிட முடியாத கருணையைக் கொண்டாட வார இறுதியில் ஒன்றுகூடினர். அன்று முதல், அருள்மலர் கிராமத்தில் நம்பிக்கை மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக மாறினாள். ஊர்மக்களால் பெற்ற ஆர்வம் [உற்சாகம்], அவளை சமூக நிகழ்வுகளை, தன்னார்வக் குழுக்களை அங்கும் அயல் கிராமங்களிலும் நிறுவ ஊக்கம் கொடுத்தது. மேலும் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் மக்களை ஒன்றிணைத்தாள். மூதாட்டியின் தேவையின் போது அவருக்கு உதவிய அவளது எளிய செயல் கிராமத்தில் ஒற்றுமை மற்றும் கருணையின் தீப்பொறியை பற்றவைத்தது. ஆண்டுகள் செல்ல செல்ல, அருள்மலரின் தாக்கம் கிராமத்திற்கு அப்பால் நீண்டது. அவளுடைய கதை மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்தது, மேலும் அவளுடைய இரக்கச் செய்தி காட்டுத்தீ போல பரவியது. தொலைதூர சமூகங்கள் அவளது தத்துவத்தை ஏற்றுக்கொண்டன, இருண்ட காலங்களில் உதவும் கரத்தின் சக்தியை அங்கீகரித்தன. "காலத்தினால் செய்த உதவி" அல்லது அருள்மலரின் கதை ஒரு புராணக்கதையாக மாறி, கருணை மற்றும் தன்னலமற்ற அவளது மரபு, எமது அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கும் தொடரும் என்பதில் ஐயமில்லை. இரக்கத்தின் ஒரு செயல், உலகில் ஏற்படுத்தக்கூடிய ஆழமான தாக்கத்தை நம் அனைவருக்கும் இன்று அது நினைவூட்டிக் கொண்டு இருக்கிறது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
- 1 reply
-
- 1
-
தன்முனைக் கவிதை / "நினைவுகள்” "நினைவுகள் பறக்குது அவள் பிரிந்தது வதைக்குது! நினைவுகள்அணைக்குது அவள் வாழ்ந்தது இனிக்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
'மாலைக் காற்று மெதுவாய் வீச' "மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே !" "பாடும் குயில்கள் பறந்து செல்ல பாதை நிறைய பாசம் விதைத்து பாலைவனத்தை சோலை வானம் ஆக்கி பாடல் ஒன்றை நட்பில் பாடியவளே !" "வெண் புறா மாடத்தில் பதுங்க வெண்நிலா புன் முறுவல் பூக்க வெற்றி மகளாய் இதயத்தில் பதுங்கி வெறுமை நீக்கி உத்வேகம் தந்தவளே !" "வானம் தொடும் வண்ணத்துப் பூச்சியாய் வாசமிகு மலராய் பாசமிகு உறவாய் வான வில்லாய் ஜாலங்கள் புரிந்து வாழ வைக்க தன்னையே தந்தவளே !" "மகரந்த தூளைச் சுமந்து கொண்டு மனதை மயக்கும் வாசனை உடன் மழைக் கால காற்றாய் உறவாடி மகத்தான காதல் சொல்லி தந்தவளே !" "மல்லிகையை உரசும் மாலைக் காற்றாய் மனங்களை வசப்படுத்தும் தென்றல் காற்றாய் மஞ்சத்தில் கொஞ்சிடும் கூதல் காற்றாய் மனதை நெருடி மகிழ்ச்சி தந்தவளே !" "நாதமுனி தந்த திவ்யப்பிரபந்த ஆண்டாளாக நாணத்தை விட்டு எனக்கு வழிசொல்லாயோ நாதியற் றிவ்வுலகில் நலிந்து விட்டேனம்மா நாதமாய் காற்றில் என்னுடன் கலந்துவிடம்மா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 25 ஹரப்பான் பல பொருட்களை மெசொப்பொத்தேமியாவிற்கு ஏற்றுமதி செய்ததாக அறிகிறோம். எனினும் அவர்கள் பரிமாற்றம் ஆக என்னத்தை பெற்றார்கள் என்பதற்கு ஒரு ஆதாரமும் எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதிகமாக மெசொப்பொத்தேமியாவின் முக்கிய ஏற்றுமதி பொருளாக, எந்த வித தொல் பொருள் சுவடுகளையும் [archaeological trace] கொடுக்காத கம்பளி துணியாக இருக்கலாம்? மேலும் கம்பளி தருகிற செம்மறி ஆடுகள் கி மு 4000 ஆண்டளவில் மெசொப்பொத்தேமியாவில் வளர்க்கப்பட்டன. இவை விரைவாக ஐரோப்பா வழியாக, அகன்று பரந்த மரங்கள் அற்ற புல்வெளியில் பரவினாலும் இவை கிழக்கிற்கு கி மு 2000 ஆண்டுகளுக்கு முன் பரவியதாக தெரியவில்லை. ஆரம்ப கட்ட விலங்கினங்கள் வளம் பற்றிய ஆய்வுகள் [faunal data], ஹரப்பான்கள் அதிகமாக கம்பளிக்காக எந்த விலங்கு இனங்களையும் வளர்க்கவில்லை என்பதை தெரியப்படுத்துகிறது. ஆகவே அவர்கள் கம்பளி தருகிற செம்மறி ஆடுகள் வைத்திருக்கவில்லை என நாம் கூறலாம். எனவே கம்பளி துணி அவர்களின் மிகவும் விரும்பிய இறக்குமதி பொருளாக கட்டாயம் இருந்திருக்க வேண்டும். ஆகவே சுமேரியர்கள் தமது கம்பளி துணி, தானியங்கள் [பயிர்கள்] போன்றவற்றை ஏற்று மதி செய்த அதேவேளையில், ஹரப்பான் மரக்குற்றிகள், செப்பு, தங்கம், தந்தம் [lumber, copper, gold and ivory] போன்றவற்றை வர்த்தகம் செய்தார்கள். இவைகளை பொதுவாக சுமேரிய அரச குடும்பத்தார்கள் வாங்கினார்கள். தமது வியாபார பண்டங்களை இலகுவாக எடுத்து செல்வதற்காக இந்த இரண்டு நாகரிகமும் போக்கு வரத்தில் மிக முன்னேற்றம் கண்டார்கள். சுமேரியர்கள் சக்கரத்தையும் அனேகமாக பாய் படகையும் அபிவிருத்தி செய்தார்கள். அதே வேளையில் ஹரப்பான்கள் தாமும் மாட்டு வண்டி, சிறிய தட்டையான அடியை கொண்ட படகுகள் [flat-bottomed boats] போன்றவற்றை மேம்படுத்தினார்கள். இவைகள் எல்லாம் வணிக ரீதியாக பாவிக்கப்பட்டன. ஒரு வேளை, தமக்கு இடையில் நடை பெற்ற பாரிய வர்த்தகம் அப்படி ஒத்த துறைகளில் அபிவிருத்தி செய்ய அவைகளை தூண்டி இருக்கலாம்? அக்காடிய மன்னன் சார்கோனின் (Sargon:2334–2279 BC) குறிப்பில் மேலுஹ்ஹா, மகன், டில்முன் போன்ற இடங்களை சார்ந்த கப்பல்கள் அக்காடியா [அகாதே] நகரத்திற்கு வந்ததாக "மேலுஹ்ஹாவில் இருந்து கப்பல், மகனில் இருந்து கப்பல், டில்முன்னில் இருந்து கப்பல் வந்தன,அவன் அக்காடியா கப்பல் துறையின் பக்கத்தில் கட்டினான்" ["the ships from Meluhha,the ships from Magan,the ships from Dilmun,He made tie-up alongside quay of Akkad"] இப்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ஹரப்பான் அக்காடியா நகரத்திற்கு நேரடியாக வந்ததை குறிக்கிறது. அது மட்டும் அல்ல, 'சு -இலிஷு உருளை முத்திரையில்' காணப்பட்ட மிலேச்ச மொழி பெயர்ப்பாளர், தங்கள் வர்த்தகம் சம்பந்தமான நடவடிக்கைகளில் இலகுவாக கையாளும் பொருட்டு, அங்கு ஒரு ஹரப்பான் குடியேற்றம் அல்லது காலனிகள் [settlements or colonies] இருக்க வாய்ப்பு இருந்து இருக்கலாம் என்பதை காட்டுகிறது. பல காரணங்களுக்கு மொழி பெயர்ப்பாளர் அங்கு தேவைப்படுகிறது. உதாரணமாக, ஒரு தூதுக்குழு அல்லது முக்கிய பிரமுகர்கள் [delegations or important dignitaries] தமக்கு பழக்கம் இல்லாத மொழியையும் பண்பாட்டையும் கொண்ட ஒரு வெளி நாட்டிற்கு விஜயம் செய்யும் போது, கட்டாயம் ஒரு மொழி பெயர்ப்பாளர் தேவைப்படுகிறார். ஆகவே அங்கு கட்டாயம் ஹரப்பான் குடியேற்றமோ அல்லது ஒரு ஹரப்பான் வியாபாரிகளின் தொகுதிகளோ உண்மையில் மெசொப்பொத்தேமியாவில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் தங்களுடன் வியாபாரத்திற்கான பண்டங்கள் தவிர, தங்கள் நாட்டின் மட்பாண்டங்கள் மற்றும் பொருட்களை தமது தேவைக்காக அங்கு எடுத்து சென்று இருக்கலாம். ஓமானில் கண்டு பிடிக்கப்பட்ட ஹரப்பான் மட்பாண்டங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆகவே ஓமானில் மட்பாண்டங்களும் மெசொப்பொத்தேமியாவிலும் ஈரானிலும் வர்த்தக பொருட்களும் முத்திரைகளும் கிடைக்கும் என்றால், கட்டாயம் இந்த ஹரப்பான் குடியேற்றத்திற்கான அல்லது அவர்கள் தற்காலிகமாக தங்கி இருந்த இடத்திற்கான சான்றுகளையும் அறிய சந்தர்ப்பம் உண்டு. அப்படி இவைகளை கண்டு பிடிக்கும் சந்தர்ப்பத்தில், அங்கு இருமொழி கல்வெட்டு [bilingual inscription] ஒன்று கண்டு பிடிக்கவும் சந்தர்ப்பம் உண்டு என நம்புகிறேன். ஆகவே மெசொப்பொத்தேமியா தொல் பொருள் தரவுகளை, ஹரப்பான் தொல் பொருள் ஆய்வாளர்கள் மிக கவனமாக பிரித்து பரிசோதித்து, அங்கு கிடைக்கக் கூடிய ஹரப்பான் பொருள்கள், தரவுகளை பிரித்து எடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் ஆகும். இப்ப, தற்காலத்திய ஆய்வுகள் இந்த அறை குறையுமாய் விளங்கிய ஹரப்பா, மொகஞ்சதாரோ வரி வடிவங்கள் அல்லது எழுத்துகள் பண்டைய திராவிட வடிவை சேர்ந்தது என்கிறது. அதாவது சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல் [Marshall]. ஹீராஸ் [Heros]. செக் நாட்டு அறிஞர் பேராசிரியர், கமில்சுவலபில் [Czech scholar Professor kamilcuvalap] மற்றும் உருசியா [Russia]. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளதுடன், கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்றும் ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். மேலும் நாம் முன்பு எடுத்து காட்டியவாறு வேதத்திலும் [இருக்கு வேதம்] சிந்து சம வெளி மக்கள் யார் என்பதற்கான தகவல் காணப்படுகின்றன. இது திராவிடர்கள் தென் இந்தியாவின் நிலத்துக்குரிய தொன்முதற்குடி மக்கள் அல்ல என்றும், அவர்கள் சிந்து சம வெளி நாகரிகம் நிலை குலைந்த பின், ஒரு கால கட்டத்தில் தென் இந்தியா சென்றவர்கள் என முடிவு செய்ய வழி வகுக்கிறது. பல தமிழர்கள் தமது தொன்மையை சிந்து சம வெளியுடன் இணைக்கிறார்கள். எப்படியாயினும் இன்னும் மேலும் பல ஒழுங்கான திட்ட மிட்ட ஆய்வுகள் தேவைப்படுகிறது. இன்னும் சரியாக சிந்து சம வெளி எழுத்துகள் மொழி பெயர்க்கப்படாததால், உறுதியாக சிந்து சம வெளி மக்கள் யார் என்பதும் எங்கிருந்து அவர்கள் தொடங்கினார்கள் என்பதும் உறுதி படுத்துவது கடினமாக உள்ளது. பேராசரியர் ரோமிலர் தர்பார் [Romilar Tharpar], "Early India, From the Origins to AD 1300" என்ற தனது ஆரம்ப ஆய்வில் ஆரியர்களின் வழித் தோன்றலான ஹிந்தி பேசும் மக்கள் 'Mlechcha' என்ற சொல்லை, சாதி அமைப்பு முறைக்கு அப்பாற்படவர்களை குறிக்க பயன் படுத்துகிறார்கள் என்கிறார். இது மேலுஹன் [Meluhans ] ஆரியர் அல்ல என்பதை சுட்டி காட்டுகிறது. சுமேரிய நூலில் மேலுஹன் ஒரு கருத்த நாட்டான் அல்லது கருத்தவன் என்கிறது. சாதிக்கும் நிறத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறியா மேலை நாட்டு அறிஞர்கள், மேலுஹனை ஆபிரிக்காவில் தேடினார்கள். உண்மையில் மேலுஹன், சாதிக்கு அப்பாற்பட்டவன். ஆகவே அவன் ஆரியருக்கு கருப்பானவன். அதாவது அவர்கள் திராவிடர்கள் என நாம் ஊக்கிக்கலாம். Fr. ஹீராஸ் [Rev. Fr. Heras] ‘Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக் காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர். [கி மு 2020 ஆண்டை சேர்ந்த அக்காடியன் ஆப்பு வடிவ முத்திரை இணைக்கப் பட்டு உள்ளது. இதில், தாடி வைத்துள்ள மேலுஹன் ["Meluhan"] தனது துணைவியாருடனும் மொழி பெயர்ப்பாலருடனும் வரைந்து காட்டப்படுகிறது] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 26 தொடரும்
-
"தோஷமும் விரதமும்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in மெய்யெனப் படுவது
"தோஷமும் விரதமும்" / பகுதி 02 தமிழரின் ஆதி மதம் என கூறப்படும் சைவ மதத்தை எடுத்துக் கொண்டால், அது இந்து மதத்திற்குள் உள் வாங்கப் பட்டிருப்பதாலும், அங்கு இன்று பல வகையான விரதங்களை காணக்கூடியதாக உள்ளன. சிவ விரதம் பிடித்தலை திருமந்திரம் 557 இல் சுட்டிக்காட்டி, "தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ் சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து நிவம்பல செய்யின் நியமத்த னாமே." தவம், செபம், சந்தோஷம், தெய்வ நம்பிக்கை, அடுத்தவர்க்குக் கொடுத்து உதவுவது, சிவ விரதம், சித்தாந்த அறிவு, யாகம், சிவபூஜை, தூய்மையான தெளிந்த ஞானம் ஆகிய பத்தும் உயர்வு தரும். இவற்றைக் கடைப்பிடித்து வாழ்பவனே உண்மையான ஆன்மிகவாதி என்று கூறுகிறார் திருமூலர். விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலையும் இந்து மதம் தருகிறது. உதாரணமாக, சிவபெருமானைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில் கடைப் பிடிக்கப்படும் சோமவார விரதம், தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகளில் [அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதின் மூன்றாவது திதிகளில்] சிவபெருமான், நந்திதேவரின் அருள் வேண்டி கடைபிடிக்கப்படும் பிரதோஷ விரதம், மற்றும் மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை அடைய சித்ரா பவுர்ணமி விரதம், முன்னோர்களுக்கு முக்தி கிடைக்கவும், குடும்பமும் அபிவிருத்தி அடையவும் தை அமாவாசை விரதம், அப்படியே கந்தசஷ்டி விரதம், தைப்பூச விரதம், நவராத்திரி விரதம் என நீள்கின்றன. பிறந்த சாதக அமைப்பில் அல்லது கட்டத்தில், 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செய்வாய், சனி, ராகு மாற்று கேது போன்ற கோள்கள் இருந்தால் அவை தோஷத்தை அல்லது பாவத்தை ஏற்படுத்தும் என் நம்பப் படுகிறது. எனினும் இதற்கும் தோஷ விலக்குகளும் உண்டு. உதாரணமாக, ஒரு திருமண பொருத்தத்தை கருத்தில் எடுத்தால், ஆணின் தோஷம் பெண்ணை விட கூடுதலாக அல்லது சமனாக இருந்தால் திருமணம் செய்யலாம். இங்கு மீண்டும் ஆணாதிக்கத்தை பார்க்கிறோம் ? இருவரின் சாதகமும் தோஷம் இல்லை என்றால் அது உண்மையில் சரியான முறையாகும். மற்றும் சம தோஷம் சாதகம் தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாக சொல்லப்படுகிறது. உதாரணமாக செய்வாய் தோஷம் உள்ள சாதகம் இன்னும் ஒரு செய்வாய் தோஷ சாதகத்துடன் தான் பொருத்தம் செய்யவேண்டும். இது முதலாவது விதி. மற்றது ஒருவருக்கு புத்திர தோஷம் உள்ளது என்றால், இன்னுமொரு புத்திர தோஷம் உள்ள சாதகத்துடன் கட்டாயம் பொருத்தம் பார்க்க கூடாது. ஏன் என்றால், அது மகா புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் . இது இரண்டாவது விதியாகும். புத்திர தோஷம் என்பது, குழந்தை பிறப்பதற்கு தடை அல்லது திடீர் கருக்கலைப்பு அல்லது மலட்டுத் தன்மை போன்றவற்றை ஏற்படுத்துவது ஆகும். எனவே இப்படியான தோஷத்தை கொண்ட ஒருவரது சாதகத்துக்கு, அவரை திருமணம் செய்ய இருக்கும் மற்றவரது சாதகம், அதை சரிபடுத்துவதற்கு, வலுத்த புத்திர யோகம் கொண்டதாக கட்டாயம் இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப் படுகிறது. அப்ப தான் ஒரு சில பரிகார தோஷ நிவர்த்தி கொண்டு, தோஷத்தை விலத்தி, புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தலாம் என கருதப் படுகிறது. இந்து தொன்மவியலில் [Hindu mythology] கூறப்படும் நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதியான அங்காரகன் மூலம் ஏற்படும் செவ்வாய் தோஷம். ராகு, கேது மூலம் உண்டாகும் சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம். எட்டாம் இடத்து கிரகங்களால் உண்டாகும் மாங்கல்ய தோஷம். களத்திர காரகன் சுக்கிரனால் ஏற்படும் களத்திர தோஷம். தனித்த குருவினால் உண்டாகும் இல்லற தோஷம். ஏழாம் இடத்து கிரகங்களால் ஏற்படும் பாபகத்ரி நீச்ச தோஷம். சூரிய தோஷம். விஷக் கன்யா தோஷம். சந்திரன், சனி மூலம் உண்டாகும் புனர்பூ தோஷம். மேலும் 6, 8, 12 க் கிடையே கிரகங்களின் மூலம் ஏற்படும் தோஷங்கள் என பல வகையான கிரக தோஷங்கள் இருப்பதாக நம்புகிறார்கள். தோஷங்களில் மிகப் பிரபலமாக உள்ளது ராகு, கேது எனப்படும் சர்ப்ப தோஷமும், செவ்வாய் தோஷமும் மட்டும் தான். இந்த செவ்வாய் தோஷம். சமூகத்தில் ஒரு வித அச்சத்துடன் பார்க்கப்படுகிறது. மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய் உடலில் ரத்த ஓட்டத்திற்கு காரணகர்த்தா. உடலில் வெப்பத்தை தரக் கூடியவர், உஷ்ண தேகவாகு [உடல்] உள்ளவர்கள். செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்திருப்பார்கள். ஒரு ஆண் மகனின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் தான் தன்னம்பிக்கை, திட தைரிய வீரியம், ஊக்கம். ஆண்மை போன்ற லட்சணங்கள் இருக்கும். பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் முக்கிய பங்கு வகிக்கிறார். பெண்கள் பூப்படைவது செவ்வாயின் அருளினால் தான். மாதவிடாய் சரியான சுழற்சி முறையில் வருவதற்கு செவ்வாயும், சந்திரனும் காரணமாக இருக்கிறார்கள். ஆசை, காமம், சம்போகம் [புணர்ச்சி, உடலுறவு], உறவில் இன்பம், உள்ளக் கிளர்ச்சி, பாலுணர்வு ஆகியவற்றை தூண்டக் கூடியவர் செவ்வாய். செவ்வாயின் இந்த ஆதிக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் தோஷம் என்ற பெயரில் ஆண், பெண் ஜாதகங்களை பொருத்தம் பார்த்து சூட்சுமமாக சேர்த்தார்கள். இல்லறம் என்ற திருமண பந்தத்தில் ஆண், பெண் உடல் உறவு சேர்க்கையே முக்கிய அம்சமாகும். இதன் வழியாகத்தான் வம்சம் விருத்தியாகிறது இதற்கான வீரியத்தையும், ஆற்றலையும் தரக்கூடியவர் செவ்வாய் அதன் காரணமாக உள்ளமும், உடலும் சாந்தி அடைகின்றது. ஆகையால் தான் ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய வீரியம் மிக்க செவ்வாய் ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று சொல்கிறோம். இதற்கேற்ப ஆண், பெண் இரு ஜாதகங்களிலும் 2, 4, 7, 8,12 ஆகிய இடங்களில் இருக்கும் ஜாதகங்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது. தோஷம் என்பது ஒரு சமஸ்கிருத சொல். இது குற்றம் அல்லது பாவம் அல்லது குறை என பொருள்படும். உலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாகும் என்கிறார்கள். ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வகைகள் : 1.செவ்வாய் தோஷம். 2.பித்ரு தோஷம். 3.புத்திர தோஷம். 4.மாங்கல்ய தோஷம். 5.சர்ப்ப தோஷம். 6.களத்திர தோஷம். 7.பிரம்மஹத்தி தோஷம். 8.நாக தோஷம்.9.இராகு-கேது தோஷம். 10 நவக்கிரக தோஷம், 11 சகட தோஷம் ஆகும். தோஷங்களுக்கு பரிகாரம் கூறப்பட்டாலும், பலர் அதன்படி வழிபாடு, பரிகாரம் செய்தாலும், அவரின் துன்பங்கள் நீங்காமல், அதற்கான பலன்கள் கிடைக்காமல் போவதை பலநேரம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கும் சோதிடர்கள் பதில் தயாராக வைத்திருக்கிறார்கள். அதாவது நாம் பரிகாரம் செய்வதற்கு முன் எந்த கர்மவினை [வினைப்பயன்] நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டு நாம் அதற்கேற்றாற் போல பரிகாரங்கள் செய்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும் என்பது ஜோதிடர்களின் அறிவுரையாக இருக்கிறது. உதாரணமாக, குறைந்தபட்சம் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்வதும், அதன் மூலம் அவர்களின் வாழ்த்து கிடைத்து, அதனால் அடுத்த தலைமுறையினருக்காவது அந்த பாவம் தொடராமல் இருக்க ஓரளவு வழிசமைக்கலாம் என்கின்றனர். இங்கு தான் அவர்களின் கெட்டித்தனம் வெளிப்படுகிறது. உங்களிடம் ஏமாளித்தனம், அதாவது எதையும் எளிதில் நம்புகிற குணம் இருக்கும் வரை, அவர்களின் பயணமும் வியாபாரமும் என்றும் தொடரும் ! [தோஷமும் விரதமும் பிராமண இந்து சமயம் பெரும்பாலும் புகுத்தியதால், இங்கு பல சோதிடர்கள் கையாளும் சமஸ்கிரத சொற்கள், அப்படியே இந்த கட்டுரையில் உள்வாங்கப் பட்டுள்ளன] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று -
"தோஷமும் விரதமும்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in மெய்யெனப் படுவது
எல்லோருக்கும் நன்றிகள் -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
kandiah Thillaivinayagalingam replied to narathar's topic in மெய்யெனப் படுவது
எல்லோருக்கும் நன்றிகள் -
"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"/ பகுதி: 05 வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான். மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான். அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி, சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கிறார். சம்புகனைத் தேடிச் சென்ற இராமன், ஒரு மலைச்சாரலில், ஒரு ஏரிக்கு அருகில், ஒரு சாது ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டு இருப்பதை கண்டார். அவன் அருகில் சென்ற ராமர், ' நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல்' என்று கேட்க, அவன், 'மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன். சம்பூகன் என்று எனக்குப் பெயர்' என விடையளித்தான். உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல், மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் அங்கேயே அவனைத் தனது வாளால் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்றான். தவம் இயற்றிய சூத்திரன் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இராமனால் கொல்லப்பட்டான் ?விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை - நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றிச் சம்புகனின் தலையைச் சீவிவிட்டான் இராமன். இராமனின் காரியத்தைப் பார்த்தீர்களா? தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டி ருந்ததைத் தடுத்துத் தண்டித்துச் சம்புகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக பார்ப்பனர்கள் மகிழ்ந்தார்களாம்? கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக ? அவனைப் பாராட்டி னார்களாம்? எப்படி இருக்குது ராமன் கதை? இவனுக்கு தான் இந்த தீபாவளி? இவனைத்தான் கடவுளாம்? இவன் மாதிரி உத்தம புருஷனுக்காக அலைகிறார்களாம் இன்றைய சீதைகள்? எப்படியிருக்குது வேடிக்கை? திருவிளையாடல் புராணத்தில் 26 வது கதையாக 'மாபாதகம் தீர்த்த படலம்' வருகிறது. அதில், அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள். அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான். தாயை நிர்ப்பந்தப்படுத்தினான். இந்தக் கொடுமை கண்டு மனம் தாளாத அவனது தந்தை, அவனைத் தடுத்தார், ஆனால் அவன் தந்தையையே கொன்று விட்டு, தனது காம பசி தீர்க்க, தாயை இழுத்துச் சென்று விட்டான். காமுகனாகத் திரிந்ததால் அவனது உடலில் கொடிய நோய் ஏற்பட்டது. என்றாலும், இறுதியில், அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார். இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார். எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி? இந்த அறிவுரை எமக்கு தேவைதானா? இப்படியான கடவுளும் எமக்கு வேண்டுமா? பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன. கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு-141 கூறும். இந்த நிகழ்வு பிற்காலத்தில், ஆரியரின் நாகரிகக் கலப்பால், தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள். இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளி யானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை. விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை) பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை) மதுரை நாயக்கர்களா லும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள் இது எனலாம்? மேலும் தீபாவளிப் பண்டிகை, கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியத்துவம் பெற வில்லை. ஆனால் அங்கு ‘ஓணம்’ பண்டிகை மிகச் சிறப்பாக நடை பெறுகிறது. "உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர வருக தில் அம்ம துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித் தகரம் நாறுந் தண் நறுங்கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்" [அகநானூறு 141] உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது. உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழை பொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது. ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது. இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடு வார்கள். இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்து கிறார்கள். அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன என்கிறது இந்தப்பாடல். உலகின் எங்கும் மரணம் கொண்டாடப் படுவதில்லை. ராமன் பெருமைக்குரிய மனிதனாக இருக்கலாம், ஆனால் அவன் சீதைக்கு செய்தது என்ன? சீதையின் வாழ்க்கை தனிமையில் வீணாகியது. அவள் அனுபவித்தது எல்லாம் துக்கமே. ராவணன் அரக்கனும் அல்ல, கடவுளும் அல்ல. அவன் ஒரு சாதாரண மனிதன். அவன் தவறுகள் விட்டுள்ளான். நான் அவனை மூடிமறைக்க முயலவில்லை. நான் பாரம்பரிய ராமாயணத்தை, அப்படியே, ராவணன், ராமனை சித்தரிக்க கையாளுகிறேன். அவ்வளவுதான். கடவுளாக கருதப்படும் ராமனையும் அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணனையும் ஒப்பிடும் போது , ராமன் பல பல குற்றங்கள் புரிந்து உள்ளான். மிகப்பெரிய கொடுமை தன் மனைவியையே சந்தேகித்தது. அதனால் அவள் அடைந்து துன்ப வாழ்வு! இருவருமே நல்ல தீய செயல்கள், பண்புகள் கொண்டுள்ளனர். ஆனால் எப்படி ஒருவர் கடவுளானார்? மற்றவர் அரக்கன் ஆனார்? ராமாயணத்தில் உள்ள உண்மைகளை அப்படியே சிந்தியுங்கள். ஒரு மனிதனின் இறப்பை நாம் கொண்டாடலாமா? இல்லை ராமனைத்தான் கடவுளாக்கலாமா? கடவுள் என கருதுபவர் மக்களுக்கு, எங்களுக்கு தார்மீக பிடிப்பை உண்டாக்கக் கூடியவராக இருக்கவேண்டும். அவர்கள் நாம் பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக இருக்கவேண்டு? இதையாவது நம்புகிறீர்களா? ராமர் கதையில் அவரின் ஒரு பண்பு மட்டுமே மாறாமல் கதை முழுவதும் அப்படியே தொடருவதை காண்கிறோம். இதைத்தான் நாம் அவரிடம் இருந்து கற்கலாம். கண்மூடித்த தனமான கீழ்ப்படிதல் அல்லது பணிவு! அது மட்டுமே அவரிடம் இருந்து நாம் பெறலாம்? ராமன் குழந்தையாக இருக்கும் பொழுது அவர் ஒரு நன்றாக நடந்து கொள்ளும் அன்பான குழந்தை, மற்றும் படி ஒரு சிறப்பும் அங்கு காணப்பட வில்லை! இளைஞனாக இருக்கும் பொழுது, அவர் ஒரு தந்தை சொல் தட்டாத பிள்ளை, ஆனால் மீண்டும் ஒரு நடுத்தர வயது மனிதனாக, யாரோ ஒரு வழிப்போக்கன் தனது அன்பு மனைவியின் 'கணவன் மனைவி' விசுவாசத்தை சந்தேகப்பட்டான் என்பதால் ஒரு அரசனாக தனது கடமையை, 'மக்கள் எவ்வழி அரசனும் அவ்வழி' என்ற கண்மூடித்த தனமான கீழ்ப்படிதலை திடீரென்று நினைவுக்கு கொண்டு வருகிறேன். இதனால் கர்ப்பணி சீதை பிரிந்து, காடு சென்று, இறுதியாக தற்கொலை செய்கிறாள். அவனின் பண்பில் நிலைத்து நின்று மாறாதது, 'மாற்றான் சொல்' கேட்டு நடக்கும் பண்பு மட்டுமே! தனக்கு என ஒரு புத்தி அவனிடம் என்றுமே காணப்படவில்லை? அவன் வாழ் நாள் முழுவதும், பண்பான, இணக்கமான, கீழ்ப்படிதல்' நபராகவே, எந்த கேள்வியும் கெடுக்காமல் பிறர் புத்தி கேட்டு நடக்கும் ஒரு மனிதனாகவே வாழ்ந்து விட்டான்!! அவ்வளவுதான்!!! [இதுவரையில் நாம் அறிந்ததிலிருந்து, ஆரியரின் தந்திரமான புராண செருகலின் விளைவாக, தமிழரின் தொன்மை வாய்ந்த தீப ஒளியேற்றும் விழா [விளக்கீட்டு விழா] என்பதின் பாதையையும், கருத்துக்களையும், அது அடியோடு மாற்றிவிட்டன என உணர்கிறோம். எனவே, உறவுகள் கூடி, எண்ணங்களில் நல்லொளி ஊட்டித் தீபம் ஏற்றித் தமிழ்த் 'தீப + ஆவளி', அதாவது, 'தீப' (என்னும் வடசொல்லும்) + 'ஆவளி' என்ற இரு சொற்கள் இணைந்து வெளிப்படும் 'தீபங்களின் வரிசை' என பொருள்படும், தீப ஒளித்திருநாளை கொண்டாடுவோம்! எங்கள் 'தீபாவளி' வேறு என ஆரிய தீபாவளிக் குப்பைகளை எறிந்திடுவோம்!!] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [முற்றிற்று]
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
kandiah Thillaivinayagalingam replied to narathar's topic in மெய்யெனப் படுவது
Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் சைவ சித்தாந்தம் மிக மிக அழுத்தமாக தெளிவாக விடை கூறியுள்ளது உதாரணமாக புறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன், "சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;" என்று கூறுகிறான். அதாவது சாதலும் புதி தன்று, கரு விற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான். அத்துடன்,பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கி யார் அடித்துச் சொல்கிறார்.மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று. "கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா, உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா, விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா, இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை, இல்லை இல்லையே!" அதே போல,கம்பராமாயணத்தில், "நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா" என கூறப்படுகிறது. அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிர்ரை காக்க முனையேன்.ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான் கும்பகருணன். அப்படி என்றால், அதுமட்டும் அல்ல எம் சிந்தனை, அனுபவம், வரலாறு [புராண மற்றும் அவைபோன்ற சமய கருத்துக்களை தவிர] போன்றவற்றையும் சேர்த்து அலசி உண்மையை பாருங்கள் சைவ சித்தாந்தம் அதற்கு துணை போகும் மேலும் சில உதாரணம் கீழே இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான, பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த, பிந்தைய சங்க காலத்து, கி பி 100 - 500 சேர்ந்த நாலடியாரில் சில பாடல்களை பார்ப்போம். உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சி யூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல் என "நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி" என்று நாலடியார் 12 சொல்கிறது. மேலும் நாலடியார் 4 இல், வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டு மானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும். ஏனெனில், வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன. மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்று வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது என்பதை கூறுகிறது "நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று." அப்படி என்றால், அதை அனுபவரீதியாக விளங்கிக்கொள்ள முடியும் என்றால் எதற்கு வேண்டும் ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடமான வேத மதம் ??? பொய்களை இன்னும் வாழவைக்கவா ???? -
"தவமின்றிக் கிடைத்த வரமே" "தன்னந் தனியே தவித்து இருந்தவனை தட்டிக் கொடுத்து தெம்பு அளித்து தத்துவம் தவிர்த்து யதார்த்தம் உணர்ந்து தன்னையே தந்து மகிழ்வை ஈன்று தலைவி நானேயென நாணிக் கூறி தளர்வு இல்லாக் காதல் தந்தவளே!" "அவல நிலையில் நின்ற இவனை அவனியில் வெறுத்து தனியே சென்றவனை அவனது மேலே கொண்ட கருணையால் அவதிப் படாதே ஆயிரம் வந்தாலுமென அவதாரமாக வந்தவளே! அன்பின் அழகே! தவமின்றிக் கிடைத்த வரமே! நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தோஷமும் விரதமும்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in மெய்யெனப் படுவது
கண் - பார்க்க , காது - கேட்க , மூக்கு - நுகர , வாய் - பேச , உடல் - ஒரு மனிதனின் முழுப்பாகமும் , அதில் அந்த நாலும் உண்டு, ஆனால் அவற்றை விட மேலும் பல உண்டு . உதாரணமாக உடல் இல்லையேல் உயிர் இல்லை, ஆனால் அந்த நாலும் அப்படி அல்ல, உதாரணமாக கண் இல்லை என்றால் குருடு மட்டுமே . அது தான் வித்தியாசம் -
"தோஷமும் விரதமும்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in மெய்யெனப் படுவது
எல்லோருக்கும் நன்றிகள் -
"தோஷமும் விரதமும்" / பகுதி 01 மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கவும் உடலை கட்டுப்படுத்தவும் உண்மையில் உதவும் விரதம் அல்லது நோன்பு அல்லது உபவாசம் என்ற சடங்கை, பொதுவாக எல்லா சமயங்களும் இறைவனை வேண்டி, தாம் நினைத்த காரியங்கள் சரிவர செய்யும் ஒரு சடங்காக மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது. விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவை குறைத்தல் என்று பொருள் கொள்ளலாம். இங்கு புலன்களின் அடக்கம் மிக முக்கியமாகிறது. அல்ல விட்டால் விரதம் முழுமையாக நிறைவேறாமல் போய் விடலாம். இங்கு புலனடக்கம் என்று கூறும் பொழுது மன அடக்கம் மிக முக்கியமாகிறது. அந்த மன அடக்கம் தனிய உணவின் மேல் எழும் ஆசையை, தூண்டலை அடக்குவது அல்ல, மனதை ஒரு நிலை படுத்தி பக்குவப் படுத்துவதையும் கூறலாம். இதனால் தான் இது அந்த காலத்தில் மதத்துடன் இணைத்து இருக்கலாம்? மதம் என்பது அன்று திக்கு திசை இல்லாமல், ஆடு மாடு போல நாகரிகம் அடையாமல் திரிந்த மனிதர்களை ஒரு வழி படுத்தி, ஒரு ஒழுங்கை நிலை நாட்ட ஏற்படுத்திய ஒன்றாகும். என்றாலும் காலப்போக்கில் அது தன் முதன்மை நோக்கை இழந்து பல மதங்களாக பரிணமித்து, ஒவ்வொரு மதமும் தன் இருப்பை வைத்துக்கொள்ள போட்டிகளிலும், வியாபாரங்களிலும் ஈடுபட்டன. ஆகவே இன்று விரதங்களின் விளக்கம் மதத்துக்கு மதம் வேறுபடுகின்றன எனலாம். மேலும் மனிதனின் பலவீனத்தை தனக்கு சாதகமாக மாற்ற விரதத்தை ஒரு ஆயுதமாகவும் மத குருமார்கள் பாவிக்க தொடங்கினார்கள். உதாரணமாக தோஷம் மற்றும் பரிகாரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி, ஒவ்வொரு தோஷத்துக்கும் அல்லது குற்றத்துக்கும் விரதத்துடன் சேர்ந்த ஒவ்வொரு பரிகாரத்தையும் எடுத்துக் கூறி தம் இருப்பையும் வியாபாரத்தையும் அதன் மூலம் வலுப்படுத்தி கொண்டார்கள் என்று கூறலாம். ஆறுமுகநாவலர் விரதம் என்பது, "மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல் விரதமாகும்" என்கிறர். இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் நீதிவெண்பாவில் "ஒருவேளை உண்பான் யோகி இருவேளை உண்பான் போகி மூவேளை உண்பான் ரோகி நான்குவேளை உண்பான் பாவி" என்று கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது. விரதம் இருப்பது மத நம்பிக்கை என கருத்துக்கள் இருந்தாலும், விரதத்திற்கு பின்னால் இருப்பது உண்மையில் மிகப்பெரிய விஞ்ஞானம் என்பதை இந்த பாடல் மூலம் அறியமுடிகிறது. அத்துடன் 'அன்னத்தை அடக்கியவன் ஐந்தை (கண், காது, மூக்கு, வாய், உடல்) யும் அடக்குவான்' என்பார்கள் பொதுவாக. நமது வயிறு ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருக்கா, ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். இதனை யொட்டித்தான் எல்லா மதங்களுமே விரத்தை கடைபிடிக்கின்றன எனலாம். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. ஜீரண உறுப்புகள் சீராகிறது. இது ஒரு ஆரோக்கியமான வழி முறை ஆகும். உதாரணமாக, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் மேற்கொள்வர். அதேபோல, ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. இந்து மாதத்தில் அமாவாசை, பெளர்ணமி எனவும் மற்றும் பல வகையான விரதங்கள் ஒவ்வொரு மாதமும் காணப்படுகின்றன. விரதத்தை இரண்டு முக்கிய வகையாகவும் பிரிகிறார்கள். ஒன்று எதிர் பார்ப்புடன் கடைபிடிப்பது. மற்றது எதிர் பார்ப்பு இன்றி கடைப்பிடிப்பது. உதாரணமாக தோஷ பரிகாரமாக செய்வது முதல் வகையாகும். குறிப்பிட்ட தோஷத்திற்கான பரிகாரத்துடன் கூடிய விரதங்களை தவிர, வாரத்தின் ஏழு நாட்களுக்கும் கூட விரதம் உண்டு. உதாரணமாக, திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் முழுமையான அன்பையும், செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீக்கவும், புதன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் நோய் தீரவும், வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறவும், வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் செல்வம் பெருகவும், ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறவும் அல்லது நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்கிறது இந்து மதம். மேலும் ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும் என்றும் கூறுகிறது. இந்த விரதங்களில் ஒன்றை கவனித்தீர்களா ?, மனைவியின் நீண்ட ஆயுளை வேண்டியோ அல்லது மனைவியின் முழு அன்பை வேண்டியோ ஒரு விரதமும் இல்லை. இது என்னத்தை காட்டுகிறது ? விரதங்கள் எல்லாவற்றிற்கும் விதி முறைகளும் உண்டு. உதாரணமாக, விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும். அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று என்கிறது. மேலும் ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகளும் உண்டு. மாதவிலக்கான பெண்கள், குழந்தை அண்மையில் பெற்ற பெண்கள், அண்மையில் குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பத்தினர் போன்றோர் விரதம் கடைபிடிக்க முடியாது என்கிறது. அது மட்டும் அல்ல, விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது என்றும் ஒரு ஒழங்கையும் வரையறுக்கிறது. விரதங்களை மேற்கொள்வதால், மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு தெய்வ நம்பிக்கையை அது மேலும் அதிகமாக்கிறது. அதேநேரம் அது ஓழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துகின்றன. உடல் ஆரோக்கியமும் பெறுகிறது. ஆயுள் அதிகமாகிறது பிரச்சினைகள் குறைகின்றன. தனிமனிதன் நன்மை பெறுவதனால் அவன் குடும்பம் நன்மை பெறுகிறது. இரக்க சிந்தனை, தருமம் செய்யும் குணம் ஆகியவை வளருகின்றன. விஞ்ஞான முறைப்படியோ அல்லது எந்த முறைப்படியோ ஆராய்ந்தாலும் விரதங்கள் நமக்கு ஒரு போதும் விரோதமான நிலைமைகளைத் தரவில்லை என்பது மட்டும் உறுதி. [தோஷமும் விரதமும் பிராமண இந்து சமயம் பெரும்பாலும் புகுத்தியதால், இங்கு பல சோதிடர்கள் கையாளும் சமஸ்கிரத சொற்கள், அப்படியே இந்த கட்டுரையில் உள்வாங்கப் பட்டுள்ளன] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும்