Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "காசேதான் கடவுளடா" & "தர்மம் தலை காக்கும்" "காசேதான் கடவுளடா" "காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா காதல் வேண்டுமா பரிசு கொடடா காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா! காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால் காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!" "ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா! ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும் ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!" "தர்மம் தலை காக்கும்" "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இருவரையும் மதித்து வாய்மை என்னும் பண்பு கொண்டு ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல் மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால் செய்த நன்மை தலை காக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. "தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils!" / பகுதி / Part 02 [In English & Tamil] சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு "புதியீடு" என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். 'புதியீடு விழா' என்று ஒரு கல் வெட்டுக் குறிப்பதாக அறிந்து உள்ளேன். விவசாயிகள் 'அறுவடையில் ஒரு பங்கை' அரசனுக்கு / கோயிலுக்குக் கொடுக்கும் விழாவாக இருக்கலாம்?. "புதியீடு" என்பது, புதுஇடு என்று பிரிபடும்? புதிய (அறுவடையில்) ஒரு பங்கு என்று கொள்ள முடியும்? உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள். பொங்கல் என்பதற்கு பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். அறுவடை செய்துக் கிடைத்த புது அரிசியைக் (இந்தியாவில் அரிசிப் பயன்பாடு அநேகமாக கங்கைப் பகுதியில் தொடங்கப்பட்டாலும், சிந்து நாகரிகப் பகுதியில் 3200-1500 கி.மு.க்கு இடையில் நமக்குக் மிகப் பெரிய ஆரம்ப ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனினும் சிந்து நாகரிகத்தில் அரிசி பயன்படுத்தப் பட்டதற்கான சான்றுகள் பாரம்பரியமாக மிகவும் சர்ச்சைக்குரியவை. புல்லர் மற்றும் மடெல்லா "அரிசி ஒரு பயிராகக் கிடைத்தது ஆனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை" என்றும் "இது ஒரு முக்கியமான பயிர் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை" என்றும் வாதிட்டனர். கின் ஹரப்பான் காலத்தின் பிற்பகுதியில் கி.மு. 2000 வரை நெல் விவசாயம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று வாதிட்டார்,) களைந்து போட்டால் அது வெண்மையாகப் பொங்கும். அது மேகத்தின் பொங்கலாடுதல் போல இருப்பதால், அந்த உணவுக்கும் பொங்கல் என்ற பெயர் வந்தது. பஞ்சு போல வெண்மையாக மேலெழுந்து மேகம் நின்றால் அதற்குப் பொங்கலாடுதல் என்று பெயர். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த தானியத்தை [நெல்லை] மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை அனுபவிக்க தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால் நடை களுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்தது வழிபட்டனர் என்பர். இந்துக்கள் பொங்கலை இந்து முறைப்படி கொண்டாடுகிறார்கள் என்பது தவிர பொங்கல் இந்து மத விழாவாக அல்லாமல் தமிழர் திருநாளாகவே அன்றும் இன்றும் இருந்து வருகிறது. பொங்கல் யாரையும் வணங்குவதல்ல. மாறாக நன்றி செலுத்துவது மட்டுமே. இயற்கைக்கு நன்றி என்பதை தமிழர்கள் சூரிய வழிபாடாக வணங்குகின்றனர். உலகுக்கு உணவு தரும் உழவனுக்கு நன்றி சொல்லும் நன்னாள் தான் பொங்கல். உழவன் அதை இயற்கைக்கு நன்றி சொல்லும் நாளாக நினைக்கிறான். அவ்வளவுதான்! சங்க இலக்கியத்தில் பொங்கல் உழவர் திருநாளாகக் கொண்டாடப்பட்டதா? அல்லது சூரியனுக்கு [பகலவனுக்கு] நன்றி நவிலும் நாளாகக் கொண்டாடப் பட்டதா? அல்லது இரண்டிற்கும் சேர்த்தா? இக் கேள்விகளுக்கான பதில்களை தேடித்தான் பார்க்க வேண்டும். தமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால் தான் வள்ளுவர் உலகம் பல தொழில்களைச் செய்து கொண்டு சுழல்கிறது, இந்த உலகத்தின் சுழற்சி உழவர்களின் ஏர் [மேழி] வழியே செல்கிறது என்று மேழியின் மேன்மையை உலகச் சுழற்சி என்ற அறிவியல் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ” சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை'' (குறள் 1031) ” என்றார். அதாவது சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தில் பல வகையான தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாறி மாறி வேறு பல தொழில்கள் செய்து வந்தாலும், ஏரால் உழுது பயிர் விளைவிக்கும் உழவுத் தொழிலைச் சார்ந்தே உலகத்தார் வாழவேண்டி யிருக்கிறது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாதாரமும், பொருளாதாரமும் அமைந்திருப்பதால், என்றென்றும் உழவுத் தொழிலே தலை சிறந்த தொழிலாகத் தனிப் பெருஞ்சிறப்புடன் விளங்குகிறது என்கிறார் வள்ளுவர். “ஏற்றுக உலையே! ஆக்குக சோறே'' (புறம் 172) எனும் புறநானூற்றுப் பாடலின் அடி, பொங்கல் விழாவின் தொடக்க கால நிலையை நினைவு கூர்கிறது. புதியதாகக் கொண்டு வந்த செந் நெல்லைப் பொங்கலாக்கிப் பலரோடும் சேர்ந்து பகுத் துண்ணும் திருநாளாக [`பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்'] அக்காலத்தில் `பொங்கல் திருநாள்' பொலிவுற்றது. உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று காத்துக் கிடப்பவன் தமிழன். சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் என்று யாரும் சொல்லுவதில்லை. எனவே எந்த மாதத்தில் தமிழனுடைய வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதமே சிறப்பான மாதம்! சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக் கிடைக்கின்றன. தை [நற்றிணை 80-தைஇத் திங்கள் தண் கயம் படியும். குறுந்தொகை 196-தைஇத் திங்கள் தண்ணிய தரினும்; புறநாநூறு 70-தைத் திங்கள் தண் கயம் போலக், ஐங்குறுநூறு 84-தைஇத் தண் கயம் போலப் , கலித்தொகை 59-தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ, பரிபாடல் 11- இன்ன பண்பின் நின் தைந் நீராடல்], மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சித்திரை, சங்க மரவிய காலத்தில், கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்திலும் [5:64-69], கி. பி. மூன்றாம் ஆண்டை சேர்ந்த நெடுநல்வாடையிலும் சொல்லப் பட்டுள்ளது: பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, நக்கீரனாரால் பாடப்பட்டது. அந்தப் பாடலில் "திண் நிலை மருப்பின் ஆடுதலையாக விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து" என்ற வரி மூலம் மேட ராசி (Aries), ராசிகளில் முதலாவதாக காட்டப் பட்டுள்ளதே தவிர அது ஆண்டின் தொடக்கம் என எங்கும் குறிக்கப் படவில்லை. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். மேலும் “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார். அவ்வளவு தான். இங்கும் இது ஆண்டின் தொடக்கம் என கூறப்பட வில்லை. இந்திர விழா இளவேனில் காலத்தில் அதாவது சித்திரையில் நடந்தது; ஆனா காமவேள் விழா / காதல் விழா என்று தான் பேசுகிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. இவ்வாறு சங்க காலத்தில் தொடங்கிய பொங்கல் விழா, காலப் போக்கில் வழிபடு தெய்வங்களுக்குச் செய்யப் படும் சடங்குகளோடு இணையலாயிற்று. பொங்கலைச் செய்து தெய்வங்களுக்குப் படைக்கும் வழக்கமும் தோன்றியது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 03 தொடரும் Thai is a special month for Tamils! / Part 02 According to the stone carvings [kalvettu] at Thiruvotriyoor, Pongal was celebrated during the time of the great king Raajaraaja Chozhan 1. This festival was known as the “Puthiyeedu” ["புதியீடு"] festival. Puthiyeedu meant the first harvest of the year. Thanksgiving is an important aspect of Tamil culture and tradition, as is the case with many other civilisations. Most thanks giving ceremonies are religious in nature, as people of each culture thank their chosen deity for the favours granted to them, though this is not always the case. The Tamil festival of Thai Pongal is such a thanks-giving ceremony. This four-day festival of thanks giving to nature takes its name from the Tamil word meaning "to boil" and is held on the first day of the month of Thai (January -February) when rice and other cereals are harvested. [Please note that rice use in India probably began in the Gangetic region, the largest body of early evidence we have comes from far to the west in the Indus Civilization region c.3200–1500 BC. The evidence for rice use in the Indus Civilization has traditionally been highly contentious. Fuller and Madella (2002, pp. 336–337) have argued that “rice was available as a crop […] but not adopted” and that “there is no reason as yet to believe it was an important crop,” while Fuller and Qin (2009) have argued that there is no evidence of rice agriculture until the Late Harappan period c.2000 BCE, when it is likely that the japonica rice arrived. However, there has been a long tradition of rice data from Indus sites, and it has been strengthened over time with new data especially since these statements were published. ] That is Pongal in Tamil means 'boiling over' or spill over. Tamilians say 'Thai pirandhaal vazhi pirakkum', ["தை பிறந்தால் வழி பிறக்கும்" / "the commencement of Thai paves the way for new opportunities"] and believe that knotty family problems will be solved with the advent of the Tamil month Thai that begins on Pongal day. Tamil farmers celebrate the event to thank gift of nature like the Sun and the farm cattle for their assistance in reaping a bountiful harvest. Thiruvalluvar [திருவள்ளுவர்] said, "At several times the cry has been 'Back to the land' and even those who have taken to the other walks of life are staunch on the point. As the agriculture is the staple industry of the people and the important of all occupations, It deservedly takes the first rank of all. Agriculture provides the necessary sustenance of every body in other vocations & It is good for meeting almost every need a man may have." "Wherever it may wander, the world follows the farmer’s plough. Thus despite all its hardships, farming is the foremost occupation."-Kural 1031 Purananuru 172 suggests that the celebration of the Pongal ceremony in early days like- "fire the furnace! Boil the rice".[“ஏற்றுக உலையே! ஆக்குக சோறே'']. It was celebrated as "Thamilar Peruvilaa" [Tamils mega festival] - known for long as "Thamilar Thirunaal" [great or special day]. "Thai piranthaal Vazhi pirakkum", This is a phrase commonly used by Tamils since the Sangam Period (2,000 year back). Why not "Chithirai piranthall vazhi pirakkum", if Chithirai is the special month or New Year of the Tamil people?. Names of the few Tamil months are available in Tamil Sangam literature, such as Thai [Natrinai 22,80, Kurunthokai196, Puranānuru70, Ainkurunuru 84, Kalithokai 59, Paripaadal 11], Masi [Pathitruppathu] & panguni [Puranaqnuru], But month of Chitterai only mentioned in Chilappathikaram of 2 nd century AD & Nedunalvaadai of 3rd century AD. Nedunalvaadai of Poet Nakkirar, says Mesha / Chitterai raasi is the first of all raasis & it never says it is for the new year at any time. ie It only said as: திண் நிலை மருப்பின் ஆடுதலையாக விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து, that is; roams high in the sky, along with many other constellations starting with the goat constellation, shown with a ram with strong horns. The beginning of the Ilavenil Kaalam of the Tamils coincides with the beginning of the Sun moving into the Meda Veedu or Rasi, which falls in mid April, and is the time of commencement of the Tamil month of Chitthirai.` Indira vizha in Chilappathikaram is happened during the month of Chithirai [இளவேனில் காலத்தில்]. It says it is the lovers festivals [காமவேள் விழா / காதல் விழா] & It never says it is the new year ["புத்தாண்டு"] or the first month of the new year. Indra Vizha was surely a festival to celebrate love in ancient times in Tamil Nadu. we have enough evidence to show that there was a festival where lover came out openly and showed their affection for each other and it also was place where it was hunting ground for youth to find a partner. Indra Vizha chapter from Puhar Kandam in Silapathikaram and Ainkuirunuru 62 mentioned about these. "Like the cock with its small head which called for the hens from shady place, you gathered women of this town in festival of Indra. Now towards which town is your chariot proceeding, so that you can have more pleasure?" [Ainkuirunuru 62] The Pongal festival [Pongal means "boiling over" or "overflow"] which commenced during Sangam period, got many transition right from Sangam age to Pallavas to Cholas to British India to Dravidian [Tamil] movement. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part 03 Will Follow
  3. "விழிமூடித் துயில்கின்ற வேங்கைகள்" இன்று கார்த்திகைத் திங்கள் இரண்டாம் கிழமை, முல்லைச்செல்வி தனது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு, தனது வீட்டில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தாள். வானம் இருண்டுபோய் இருந்தது. குளிர் காற்றுப் பலமாக வீசிக்கொண்டிருந்தது. அவள் வாய் "தீபங்கள் அணையாலாம் தீ அழிவதில்லை தேசத்தை காத்த உயிர் ஓய்ந்து அழிவதில்லை" என்று முணுமுணுத்தபடி, காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை நோக்கிச் சென்றாள். அவள் பேருந்துவால் இறங்கி, நடக்கத் தொடங்கிய போது, அவளுடைய ஊன்றுகோல் சீரற்ற மண் பாதையில் உறுதியாக அழுத்தியது. ஒரு காலத்தில் மாவீரர் விழிமூடித் துயில் கொண்ட அமைதியான அந்த இடம், இப்போது, உடைத்து எறியப்பட்டு ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தது. அன்று பல உயிர்களைப் பறித்த அதே கைகளால், கல்லறைகள் எல்லாம், மண்ணுடன் மண்ணாக நொறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதுவும் அவளைத் தடுக்க முடியவில்லை. இது தமிழ் பாரம்பரியத்தின் புனிதமான நினைவேந்தல் மாதமான கார்த்திகைத் திங்கள், தெய்வங்கள் மற்றும் மறைந்தவர்கள் ஆகிய இருவரையும் போற்றும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டது. இன்று, அவள் வெறும் விளக்கை மட்டும் சுமக்கவில்லை, ஆனால் கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்த அவளுடைய முகிலன் மற்றும் எண்ணற்ற மக்களின் நினைவுகளின் கனத்தையும் சுமந்து, அவர்கள் எல்லோரையும் நினைவுகூர, கௌரவிக்க அங்கு, மயானத்திற்குள் அடி எடுத்து வைத்தாள். துயிலுமில்ல மைதான நடுவில், பீடத்தில் சற்று உயரமான பெரிய சுடர் நாட்டப்பட்டு இருந்தது. உணர்வுக் கொந்தளிப்போடு, மக்கள் அங்கு குவிந்து, பின்னர் ஒரு ஒழுங்கில் நின்றனர். அவள் அங்கு மூலைமுடுக்கெல்லாம் தேடி, ஒருமுறை தன்னவனின் பெயரைக் கொண்ட, உடைந்த கல் துண்டுகளைப் பொறுக்கி எடுத்து, அதன் முன்னால் அவள் மண்டியிட்டாள். அவளுக்கு அரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலின் இறப்பைக் கூறும் புறநானூறு 229 ஞாபகம் வந்தது. இன்று, வலிய யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கியது. வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டது. காவலுக்கு அடையாளமாக இருக்கும் கொற்றக்குடையின் காம்பு ஒடிந்து சிதைந்தது. காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள் நிலைகலங்கி நின்றன. இந்நிலையில், பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற பொருட்களை அளித்த கொடைவள்ளலும், நீலநிறமுடைய திருமால் போன்றவனுமாகிய சேரன் விண்ணுலகம் அடைந்தான். தன் மனைவியர்க்கு உறுதுணையாக இருந்தவன் அவர்களை மறந்தனனோ? "மைந்துடை யானை கை வைத்து உறங்கவும் திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும், காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், கால் இயல் கலி மாக் கதி இன்றி வைகவும், மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின் ஒண்தொடி மகளிர்க்கு உறு துணை ஆகித் தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ," தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற மருத்துவம் அளித்த முகிலனும் இன்று விண்ணுலகம் அடைந்தான். தன் காதலிக்கு உறுதுணையாக இருந்தவன் அவளை மறந்தனனோ? என்று ஒரு தரம் கண்ணீருடன் அவனை நினைத்தவள் மனதில் முன்னைய காலத்தின் நினைவுகள் நிரம்பி வழிந்தன. முல்லைச்செல்வி ஒரு வன்னிக் கிராமத்தில் ஒரு தற்காலிக மருத்துவமனையில் பணிபுரியும் இளம் செவிலியர். அங்கு அரசின் தடைகளாலும் மற்றும் பல காரணிகளாலும் வளங்கள் பற்றாக்குறையாக இருந்தன, ஆனால் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான உறுதிப்பாடு ஏராளமாக இருந்தது. அங்குதான் முகிலன் என்ற கருணையுள்ள இளம் மருத்துவரைச் சந்தித்தாள், அவனுடைய கண்கள் எண்ணற்ற துயரங்களின் பாரத்தைச் சுமந்து கொண்டிருந்தாலும், நல்ல நாளைய நம்பிக்கையில் மின்னியது. அதேவேளை, போர் வன்னி மண்ணை உலுப்பி எடுத்துக் கொண்டிருந்தது. நாலாபுறமிருந்தும் மாறி மாறிப் போர்முனைச் சத்தங்கள் தினமும் கேட்டுக்கொண்டிருந்தன. ஆவேசம் கொண்டு கிளம்பும் படையினரும் அவர்களின் முன்னேற்றத்தை முறியடிக்கும் போராளிகளும் ஊடகங்களில் நாளாந்தச் செய்தியாகினர். தடுப்போம் விடமாட்டோம் என்ற கூக்குரல்களில் களமுனைகள் எரிந்து கருஞ் சாம்பலாகிக் கொண்டிருந்தன. நாலாபுறமும் அனல்பறக்கும் போர்கள் அடிக்கடி நடந்தன. எந்த முறியடிப்புத் தாக்குதலிலும் போராளிகள் மும்மரமாக ஈடுபட்டு தம்மை தாரைவார்த்து தடுத்துநிறுத்தினாலும் அவை, மீண்டும் மீண்டும் ஓயாமல் தொடர்ந்தவண்ணம் இருந்தன. கல்லறை வரிசைகள் வேகமாக நிறையத்தொடங்கின. கல்லறையில் விதைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் களமுனையில் எதோ ஒருவகையில் மடிந்தவர்கள். அந்தச் சோகமான அழுகுரலுக்கும் மற்றும் குண்டுச் சத்தங்களுக்கும் இடையில், போரின் நடுவே, தரிசு நிலப்பரப்பில் வாழ்வில் ஒட்டிக்கொண்டிருக்கும் மல்லிகைக் கொடியைப் போல அவர்களது காதல் மெல்ல மெல்ல மலர்ந்தது. அவர்கள் குழப்பங்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியின் தருணங்களைக் கண்டனர் - கட்டப்பட்ட காயங்களின் மீது இருவரும் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்திய அதே தருணத்தில், அவர்களின் அன்பும் பாசமும் அதனுடன் ஒட்டிய புன்னகையும் பரிமாறிக்கொண்டனர், பல வேளைகளில், நட்சத்திரங்களின் கீழ், குண்டுகளின் வெடிச்ச சத்தங்களுக்கிடையில், அவர்கள் அவசர உணவைப் பகிர்ந்து கொண்டனர், அதேவேளை வன்முறையின் நிழல்களிலிருந்து விடுபடக்கூடிய எதிர்காலத்தைக் கனவு கண்டனர். முகிலன் ஒரு மருத்துவரை விட அதிகமாகத் தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அவன் வலிமையின் ஆதாரமாக இருந்தான். குண்டுவெடிப்புகளின் போது அவனது அமைதியான, நிதானமான நடத்தை, காயமடைந்தவர்களை அவனது மென்மையான தொடுதல், அரவணைப்பு மற்றும் தளராத அர்ப்பணிப்பு அவனை அனைவருக்கும் ஒரு தோழனாக மாற்றியது. முல்லைச்செல்விக்கு கூட இந்த புயலில் அவளது நங்கூரமாக அவன் இருந்தான். அவள், முகிலனின் உடைந்த கல்லறைத்துண்டுகள் முன் தன் கண்களை மூடிக்கொண்டாள், அவள் மனம் அவளது வாழ்க்கையின் இருண்ட நாளை மீண்டும் மறுபரிசீலனை செய்தது. எத்தனைதான் வீரத்தோடு உறுதியோடு மக்கள் நின்றாலும் இலங்கை வான்படையின் குண்டு வீச்சுக்கள் தமிழ் மக்களால் என்றும் மறக்க முடியாதவை. உலக நாடுகளால் கொடுக்கப்பட்ட பலவகைப்பட்ட போர்விமானங்கள் ஆலயங்களையும் குடியிருப்புகளையும் சிதறடித்துச் சென்றன. போர்விமானங்களின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் எண்ணிறைந்த பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். கிபிர்கள், மிக் விமானங்கள் போன்றவை வீசிய பலநூறு குண்டுகளால் கட்டிடங்கள் அழிந்தன. உடல்கள் எரிந்து கருகின. விமானத் தாக்குதல்கள் பற்றிய செய்தி வராத ஒரு நாளும் அன்று இருக்கவில்லை. "களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய் நுதி மழுங்கிய வெண் கோட்டான் உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;" யானைகள் மதிற் கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள், மனித உயிர்களை இரக்கம் எதுவுமின்றி கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளித்தன என்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட புலவன் ஒருவன். ஆனால் இன்று கூற்றுவன், இழுத்துக்கட்டிய கச்சையோடு, கிபிர்கள், மிக் விமானங்களில் அகோரத்தாண்டவம் ஆடத்தொடங்கிவிட்டான். இப்போது அந்த மக்கள் திரள், இலங்கை அரசு, பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த பகுதியான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உடையார்கட்டு, விசுவமடு வள்ளிபுனம், இரணைப்பாலை ஆகிய போன்ற சில பகுதிகளுக்கு நகரத்தொடங்கியது. என்றாலும் கணக்கிலடங்கா எறிகணைகள் குண்டுகள் ஊர்மனைகளுக்குள் விழுந்த வண்ணமே இருந்தன. அங்கே தொட்டிலில் கிடந்த குழந்தைக்கும் உடல் சிதறும். தாயின் முலையில் பாலருந்திக் கொண்டிருக்கும் மழலைக்கும் தலை பறக்கும். சோற்றை அள்ளி வாயில் வைக்க போனவரின் கையும் துண்டாடப்படும். பதுங்கு குழிக்குள் பாயும் சிறுமியின் காலும் அங்கு இருக்காது! சாவு நடக்காத குடும்பம் எதுவும் இருக்கவில்லை. கதறல் ஒலி கேட்காத நேரமென ஒன்றும் இல்லை. எந்த நேரமும் எல்லோருக்கும் அடி விழுந்தது. அனைவரும் வலியால் துடித்தனர். "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங் கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!" பசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்"/ "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளைக் கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. ஆனால் வன்னியில் நடந்தது என்ன? அப்படியான ஒரு நாளில், அன்று அந்த கொடுமையான போரின் நடுவில், அரசாங்கத்தால் மக்கள் பாதுகாப்பாக ஒதுங்க எனவும், தற்காலிக வைத்தியம் பார்க்கும் இடமாகவும் அறிவிக்கப்பட்ட, துப்பாக்கிச் சூடு இல்லாத பகுதியென வரையறைக்கப் பட்ட பகுதியில் அவள் கடையாற்றிக் கொண்டு இருந்தாள். அங்கு காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இடைவிடாத ஷெல் தாக்குதலில் இருந்து தஞ்சம் அடைந்தவர்கள் என பலரும் புகலிடம் நாடிப் அங்கு புகுந்து இருந்தனர். ஆனால் பாதுகாப்பு வாக்குறுதிகள் பொய்யானவை என்பது பின்புதான் தெரியவந்தது. அடுத்தநாள் காலை, குண்டுகளின் வீச்சில் சத்தம் காற்றைத் துளைத்தது, அதைத் தொடர்ந்து காதை துளைக்கும் வெடிப்புச் சத்தங்கள், தற்காலிக பாதுகாப்பான மருத்துவமனையை குழப்பத்தில் மாறியது. வேதனையின் அலறல்களும், உதவிக்கான அழுகைகளும், கண்ணை எரிக்கும் புகையின் கடுமையும் காற்றை நிரப்பியது. அப்பொழுது முகிலன் அவள் பக்கத்தில் இருந்து, சிறு சிறு காயங்களுடன் ஒரு குழந்தைக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்தான். "நாங்கள் இனி எல்லோரையும் இங்கிருந்து நகர்த்த வேண்டும், அரசாங்கம் மீண்டும் பொய்யே கூறியுள்ளது" என்று அவன் அவசரமாகக் அவளுக்கும் மற்ற உதவியாளருக்கும் கூறினான். ஆனால் அதற்கிடையில், ஒரு ஷெல் மிக அருகில் தரையிறங்கி வெடித்தது. எல்லாம் சின்னாபின்னமாகச் சிதறின. முல்லைச்செல்வி சுயநினைவு திரும்பியதும் தான் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதை உணர்ந்தாள். அவளது இடது கை மற்றும் கால் குண்டின் தாக்கத்தால், வெடித்துச் சிதறி இருந்தது. வலியின் வேதனையோடும், முகிலன் சுவரில் சாய்ந்து, அவன் கீழே இரத்தம் தேங்கிக் கிடப்பதைக் கண்டாள். அவள் எஞ்சியிருந்த வலிமையுடன் அவனிடம் ஊர்ந்து சென்றாள், அவள் இதயம் விரக்தியால் துடித்தது. “முகிலன்” என்று அவன் தலையை மடியில் வைத்துக்கொண்டு அழுதாள். அவனது மார்பு மேலோட்டமான அவளின் மூச்சுக் காற்றால் கொஞ்சம் துடித்தது, அவனது கண்கள் திறந்தன. "மன்னிக்கவும்," அவன் கிசுகிசுத்தான், அவனது குரல் மிக குறைவாக இருந்ததால் அவளுக்கு கேட்கவில்லை. "நான் விரும்பினேன்... இன்னும் பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் ... உனக்கு ஒரு சிறந்த வாழ்வை, உலகத்தைக் கொடுக்க வேண்டும் ..." என்றான். "பேசாதே" என்று கெஞ்சினாள், அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தது. "நீ நன்றாக இருப்பாய். நான் - நான் இதை சரிசெய்கிறேன். நான் உன்னைக் காப்பாற்றுவேன்." என்றாள். ஆனால் அங்கு எந்த மருந்தோ, கருவிகளோ, இருக்கவில்லை, எல்லாம் சிதைந்து விட்டது, எரிந்து விட்டது. நடுங்கும் கைகளும், பிரார்த்தனைகளும் தவிர அவளிடம் வேறொன்றுமில்லை. அவள் கன்னத்தில் இரத்தம் தோய்ந்த தன் கையை வைத்தான். எனக்கு சத்தியம் செய்” என்று மூச்சுத் திணறினான். "நீங்கள் எங்கள் இருவருக்குமாக வாழ்வீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள். ." என்றான். அவள் பதில் சொல்வதற்குள் அவன் கை தளர்ந்தது. அவன் கண்கள் மூடின, முகிலன், அவளுடைய காதலன், அவளுடைய தலைவன், மறைந்தான். அப்பொழுது பரந்த வெளியைக்கொண்ட குளக்கரைக்கு அருகில் இருந்த அந்த துயிலுமில்லதில் ஒரு குளிர் காற்று அவளை நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது. முல்லைச்செல்வி கண்ணீரைத் துடைத்துவிட்டு ஒரு சிறிய தீபச் சுடரை ஏற்றி, அதன் சுடரை காற்றிலிருந்து பாதுகாக்க தன் இருகைகளாலும் பொத்தி பொத்தி மறைத்தாள். முகிலனுக்காக மட்டுமல்ல, இரக்கமற்ற போரில் இழந்த அனைத்து உயிர்களுக்காகவும் அவள் ஒரு பிரார்த்தனையை மனதினுள் வேண்டினாள். "மொழியில் ஒரு பற்று கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரர்கள் இவர்கள்!" "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரர்கள் இவர்கள்!" "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரர்கள் இவர்கள்!" "உயிரைக் காப்பாற்ற சேவை செய்து குண்டும் சூட்டுக்கு மத்தியில் வாழ்ந்து மருந்தும் சிகிச்சையும் அளித்த இவனும் விண்ணில் வாழும் வீரன் தானே!" "அவர்கள் உன்னை, உன் ஞாபகத்தை அழிக்க முயற்சித்தார்கள், நடுகல்லை உடைத்து எறிந்தார்கள் " அவள் மெதுவாக, உடைந்த கற்களை விரல்களால் தேடித் தட்டிப் பார்த்தாள். "ஆனால் அவர்களால் முடியாது. என் இதயத்திலிருந்து மட்டும் அல்ல, நம் மக்களின் இதயங்களிலிருந்து மட்டும் அல்ல. நான் எடுக்கும் ஒவ்வொரு மூச்சிலும், நான் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் கூட நீங்கள் வாழ்கிறீர்கள்." என்று முணுமுணுத்தாள். சூரியன் மறையும் போது, இடிபாடுகள் மீது ஒரு ஆரஞ்சு ஒளியை வீச, முல்லைச்செல்வி தன் ஊன்றுகோலுடன் இன்னும் அங்கு நின்றாள், அந்தி வெளிச்சத்திற்கு எதிராக தனது நிழற்படத்தை மண்ணில் வடிவமைத்தாள். அது அந்த உடைந்த முகிலனின் கல்லறைத் துண்டுகளைத் தழுவிக்கொண்டு இருந்தது. அவள் அங்கிருந்து விலகிச் செல்லும்போதும், அவள் ஏற்றிய விளக்கின் சுடர் உறுதியாக ஒளிர்ந்துகொண்டு இருந்தது, விழுந்தவர்களின் ஆவிகள் மாலைக் காற்றோடு மேலே சொர்க்கத்துக்கு எழுந்தது போல் தோன்றியது. அவர்களின் கிசுகிசுக்கள் அவளது வாக்குறுதியை வானத்திற்கு எடுத்துச் சென்றன: "நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்." அவள் கொஞ்ச தூரம் சென்றாள், பின் திரும்பி பார்த்தால், ஒவ்வொரு நடுகல்லும் எதோ அவளிடம் கேட்பது போல் இருந்தது. காதைக் கூர்மையாக்கி உற்றுக் கேட்டாள், அது அவளின் இதயத்தின் குரல், வன்னி மண்ணின் குரல்: "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையைச் சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களைத் தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்- விசாரணை எடு- உண்மையை நிறுத்து கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள்- படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. எல்லோருக்கும் நன்றிகள்
  5. "எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025] "பூமியிலிருந்தும் வானத்திலிருந்தும் வாழ்த்துகள் பாட எல்லையற்ற வானத்தின்கீழ் கொண்டாட்டம் நிகழ அன்புஜெயா, மகிழ்ச்சி பெருமை தருபவளே எங்கள் பொக்கிஷமே எங்கள் விண்மீனே!" "மண்ணிலிருந்து தாத்தாவின் பாசம் சூழ உங்கள் நாட்களும் ஆத்மாவும் ஒளிரட்டும் ஒவ்வொரு அடியிலும் அறிவு வழிகாட்டட்டும், அன்பும் மகிழ்வும் உங்களை அணைக்கட்டும்!". "விண்ணிலிருந்து அம்மம்மா ஆசீர்வாதம் பொழிய அவளின் பெயரில் ஆறுதல் வழங்குபவளே நீங்கள் ஒளிர்ந்து கனவுகள் பறக்கட்டும் அரவணைப்பும் வலிமையும் உலகை நிரப்பட்டும்!" "உங்கள் வாழ்க்கை நேசத்தின் பாடலாகட்டும் அமைதியும் மகிழ்வும் அங்கு பொங்கட்டும் புகழும் வாழ்வும் விண்மீன்போல் உயரட்டும் துணிவும் பலமும் வானத்தைத் தொடரட்டும்!" "அன்பு சகோதரங்கள் கலையுடனும் இசையுடனும் பாசப் பிணைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் இதயங்கள் இணக்கமாக பிணைக்கட்டும், உடன்பிறப்பு பந்தம் என்றென்றும் தெய்வீகமே!" "உங்கள் இதயத்தில் கருணை பூக்கட்டும் அன்பின் கலங்கரை விளக்கே கலையின் வடிவே கொடுப்பதிலும் பெறுவதிலும் ஊக்கம் வரட்டும் நம்பிக்கை ஒன்றே உன்னை உயர்த்துமே!" அன்புடன் தாத்தா கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ❤️ "From Earth and Heaven, our wishes rise, To celebrate you under boundless skies. Dear Jeya, our joy, our pride so true, A treasure to cherish, a star to pursue. From Grandpa on Earth, my love does flow, May your days be bright, your spirit glow. In every step, may wisdom guide, And love and joy walk by your side. From Grandma in Heaven, blessings rain, For my namesake, free from pain. Shine your light, make dreams take flight, And fill the world with your warmth and might. May life for you be a cherished song, With peace and laughter all along. Reach for the stars, climb ever high, With courage and strength, touch the sky. With Kalai and Isai, your brothers dear, Share bonds of love that persevere. In harmony, may your hearts entwine, A sibling bond, forever divine. May kindness bloom within your heart, A beacon of love, a work of art. In giving and receiving, may you inspire, A world of hope, lifting it higher. With all my love, Grandpa Kandiah Thillaivinayagalingam ❤️
  6. "ஆடம்பரம்" போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரின் நடுவே, எழுச்சிமிக்க ஒரு தமிழ்க் குடும்பம் கம்பீரமும் ஆடம்பரமும் நிறைந்து காணப்பட்டது. அவர்களைச் சூழ்ந்து இன்னும் சவால்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் இருந்தபோதிலும், அவர்கள் அதன் மத்தியிலும் தமக்கு இயல்பான, பழக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடிந்தது. உண்மையில் ஆடம்பரம் என்பது பார்ப்பவரின் பார்வையில் தான் உள்ளது. நேற்று (கடந்த காலம்) ஆடம்பரமாகக் கருதப்படுவது இன்று (தற்போது) ஆடம்பரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்று ஆடம்பரமானது ஸ்மார்ட்போன்கள், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய சொகுசு வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் வீடுகள் போன்ற உயர் தொழில்நுட்ப கேஜெட்டுகளை உள்ளடக்கியது. விரைவான இணைப்புகள் மற்றும் இருப்புக்கான வசதிகள் ஆகியவை நவீன ஆடம்பரத்தின் மிகவும் மதிப்புமிக்க அம்சங்களாகியுள்ளன. ஏன் உணவு உடை கூட “தென்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழி, உடுப்பது இரண்டே" என்ற கருத்தில் இருந்து மாற்றம் அடைந்துதான் உள்ளது. அவரவர் வாழும் சூழல் மற்றும் அவர்களின் வசதிகளைப் பொறுத்து. இலங்கையின் இறுதிக்கட்ட இராணுவ யுத்த நகர்வின் போது, வன்னிப்பிரதேசத்தில் இருந்த மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றுமோரிடத்திற்கு விரட்டியடிக்கப்பட்டு இறுதியாக முள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து அவர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அப்போது, பிள்ளைகள் மற்றும் தாய்மார் என குடும்ப உறவினர்களின் கண்முன்னாலேயே கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி சரணடையும் சம்பவம் இடம்பெற்றிருந்தது. ஆனால் இவ்வாறு சரணடைந்தவர்களை அதன் பின்னர் அவர்களது உறவினர்கள் இன்னும் காணவில்லை. சரணடைந்தவர்களின் நிலைமை என்ன அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் அல்லது எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற மக்களின் போராட்டமும் மற்றும் காணி பறிப்பு, பலவந்த குடியேற்றம், திடீரென முளைக்கும் புத்தருக்கு எதிரான சாத்வீக கொந்தளிப்பால் இன்னும் அங்கு அமைதியில்லா அரசியல் மோதல்கள் தொடர்ந்து இருந்தபோதிலும், மதியழகன் குடும்பம் தங்கள் செல்வத்தையும் சமூக அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொண்டனர். குடும்பத்தின் தலைவரான மதியழகன் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார், அவர் தனது செல்வத்தை ஜவுளி மற்றும் கட்டுமானம் உட்பட பல்வேறு தொழில்களில் பன்முகப்படுத்தினார். அவரது தீவிர வணிக புத்திசாலித்தனம், துன்பங்களை எதிர்கொண்டாலும் குடும்பத்தை செழிக்க அனுமதித்தது. மதியழகன் குடியிருப்பு வவுனியாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த ஒரு அற்புதமான மாளிகையாகும். வீட்டின் பிரமாண்டம் அதன் ஈர்க்கக்கூடிய கட்டிடக்கலை, பசுமையான தோட்டங்கள் முதலியவற்றை கொண்டு இருந்ததுடன், பாதுகாப்பிற்காக உயர்ந்த சுவர்களாலும் சூழப்பட்டு இருந்தது. உள்ளே, வீடு நேர்த்தியான கலைப்படைப்புகள், பழங்கால பொருட்கள் மற்றும் சிறந்த அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டும், பார்ப்பவர் கண்களுக்கு, அது அமைந்து இருக்கும் சூழலைப் பொறுத்து ஒரு ஆடம்பரமாக காட்சி அளித்தது. அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியல் மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றிவிட்டது என்ற கருத்து பரவலாக இருந்தாலும், மதியழகனின் மனைவி பொற்கொடியை அப்படி முழுதாக சொல்லமுடியாது. இவர் கலையில் வல்லவர் மற்றும் கருணையுள்ள உள்ளமும் படைத்தவர். அவர் அடிக்கடி ஆடம்பரமான விருந்துகள் மற்றும் கலாச்சாரக் கூட்டங்களை ஏற்படுத்தி அதற்கு நகரத்தின் உயரடுக்கினரை அவர்களின் வீட்டிற்கு அழைப்பதும் உண்டு. என்றாலும் தம்மைச் சுற்றியிருந்த மக்கள் படும் துன்பங்களை அவர் மறக்கவில்லை. உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு தம்மால் இயன்ற ஆதரவையும் வழங்கி வந்தார். இதற்கு அவர்களின் வீட்டில் நடைபெறும் விருந்துகளும், அதனால் ஏற்பட்ட பல்வேறு பட்ட உயரடுக்கினரின் தொடர்பும் உதவின. அவர்களின் இரண்டு குழந்தைகளான ஆரன் மற்றும் ஆதிரை ஆகியோருக்கும் சிறந்த கல்வி மற்றும் வாய்ப்புகள் வழங்கியதுடன் ஆரன் லண்டனில் படிக்கவும் அனுப்பப்பட்டார், அதேவேளை ஆதிரை கொழும்பில் உள்ள ஒரு புகழ்பெற்ற சர்வதேச பள்ளியில் படித்தார். குடும்பம் தங்கள் குழந்தைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் உறுதியாக இருந்ததுடன், குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் மற்றும் தாம் வாழும் பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கு சாதகமான பங்களிப்பை வழங்கவும் தயார் படுத்தினார்கள். உண்மையில் அவர்களின் ஆடம்பர வாழ்க்கை வெறும் பொருள் செல்வத்தைப் பற்றியது அல்ல; அவர்களின் பரம்பரை செழித்து வருவதற்கான ஒரு சான்றாகவும் இருந்தது. நகரின் மறுபுறம், ஒரு சுமாரான சுற்றுப்புறத்தில், வாணன் என்ற இளைஞன் வசித்து வந்தான். ஆதிரைக்குப் பழக்கப்பட்ட செல்வமும் ஆடம்பரமும் அவனுக்கு இல்லை என்றாலும், அவன் அறிவால் நிறைந்தவனாகவும், நல்ல இதயத்தை உடையவனாகவும் இருந்தான். வாணன் தனது வாழ்க்கையை கல்வி மற்றும் விளையாட்டுக்காக அர்ப்பணித்திருந்தான், மேலும் அவன் தனது திறமை மற்றும் இரக்கத்திற்கு பெயர் பெற்ற உயர் தகுதி வாய்ந்த மருத்துவனாக சித்தியடைந்து, வவுனியாவில் தன் முதல் பணியை ஆரம்பித்தான். வாணனின் தந்தை ஒரு சாதாரண தோட்டக்காரனாக இருந்ததால், அவன் படிக்கும் காலத்தில் கஞ்சியுடன் வெங்காயம் மிளகாய் கடித்து சாப்பிட்ட காலமும் இருந்தது. பிறகு பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது பல கறிகளுடன், நண்பர்களுடன் சுவைத்து சாப்பிட்ட காலமும் இருந்தது. அது அவனுக்கு அப்ப ஒரு ஆடம்பர உணவாக இருந்தது. ஆனால் இன்று அவன் ஒரு மருத்துவனாக, உயர் சம்பளத்தில் வந்ததும், அந்த உணவு அவனுக்கு ஒரு சாதாரண உணவாக அமைந்துவிட்டது. உடைகளும் அப்படியே! அதுதான் ஆடம்பரம்! ஒருமுறை ஆதிரை விடுமுறையில் வவுனியா வந்து இருந்தாள். இப்ப அவள் கொழும்பு பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி. அவளின் ஒரு துரதிஷ்டமான நாளில், வாணன் பணிபுரிந்த மருத்துவமனைக்கு கொஞ்சம் அருகில் உள்ள தூசி நிறைந்த தெருவில் ஆதிரையின் கார் பழுதடைந்தது. மன உளைச்சலும் விரக்தியும் அடைந்து, தன் பயணத்தை எப்படித் தொடர்வது என்று யோசித்துக் கொண்டே காரை விட்டு இறங்கினாள். அப்போது, ஆஸ்பத்திரிக்கு செல்லும் வாணன் அவளின் இக்கட்டான நிலையைக் கவனித்தான். அவன் உடனடியாக அவளை அணுகி, தன் உதவியை வழங்கினான். வாணனின் கனிவான புன்னகையும், உதவும் குணமும் ஆதிரையை ஒருமுறை நிலைகுலைய வைத்தது. அவன் காரின் நிலையை விரைவாக மதிப்பிட்டு, இயந்திரவியல் பற்றிய தனது அறிவைக் கொண்டு, காரை சரிப்பண்ணிக் கொடுத்தான். அவனது உதவிக்கு நன்றியுடன், ஆதிரை தனது பாராட்டுக்கு அடையாளமாக அவனை ஒரு காபிக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தினாள். ஆனால் தனக்கு வேலைக்கு போக நேரமாச்சு என்று அதை நிராகரித்து, தன் மோட்டார் சைக்கிளுக்கு போனான். அவள் நீங்க யார்? எங்கே வேலை? என்று கேட்டதுக்கு அவன் பதில் சொல்லாமல், தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தான். என்றாலும் அந்த நேரம் அதன் வழியே சென்ற வவுனியா மகாவித்தியாலய அதிபர், தன் காரை விட்டு இறங்கி, 'ஐயா, உங்களால் தான் என் மகள் இன்று தப்பி பிழைத்தாள். உங்கள் உடனடியான சத்திர சிகிச்சைக்கு மிக்க மிக்க நன்றி' என அழாக்குறையாக கூறி நன்றி தெரிவிப்பதை அவள் கவனிக்கத் தவறவில்லை. "அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன் தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;" அவன் கம்பீரமான அழகை மட்டும் அல்ல, இப்ப அவனின் தகமையையும் அறிய, அவளை அறியாமலே ஒரு காதல் நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. அவள் ஆடம்பரமான கார் மற்றும் அலங்காரம் கொண்டு இருந்தாலும், அவன், அவனின் எளிமை, அறிவுத் தகமை அதை விட உச்சமாக அவளுக்கு தெரிந்தது. அவனின் கழல் அணிந்தது போன்ற கால்களையும் கருநிறத் தாடியையும் கண்டு, கொண்ட காதலால் அவளின் ஆடம்பர கைவளைகள் கூட ஜொலிக்க மறந்து அவளின் கையில் இருந்து வெட்க்கி கழல்கின்றன. அவள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி அங்கிருந்து அகன்றாள். என்றாலும் அடுத்தகிழமை வரும் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு, ஆடம்பரமான விருந்த்துக்கு அவனையும் அழைக்க தாயிடம் கேட்கவேண்டும் என்று முடிவு செய்தாள். பிறந்த நாள் விருந்தின் போது, வாணனை, வவுனியா மகாவித்தியாலய அதிபர், எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, ஆதிரை வாணனுடன் கொஞ்சம் நெருக்கமாக உரையாடலைத் தொடங்கினள். அப்பொழுது வாணனின்புத்திசாலித்தனம் மற்றும் பணிவு ஆகியவற்றால் அவன் மேலும் ஈர்க்கப்பட்டதுடன் அவன் தனது தொழிலில் காட்டும் அர்ப்பணிப்பு, சமூகத்தின் மீதான அவனது பார்வை மற்றும் தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கான அவனது கனவுகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயப் பட்டாள். வாணனும் அவளின் கருணை மற்றும் அழகால் வசீகரிக்கப்பட்டான். அவர்களின் சந்திப்பு அழகான நட்பாக அன்றில் இருந்து மாறியது. தன் பெற்றோரினூடாக வாணனின் மருத்துவமனைக்கு தன்னால் இயன்ற விதத்தில், தொண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலிருந்து குறைந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு பொருட்களை வழங்குவது வரை உதவினார், வாணனும் தேவைப்படுபவர்களுக்கு உதவும் மனதைக் கவரும் உலகத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தினான், இது அவள் எப்போதும் அறிந்த ஆடம்பரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. “ராஜ பார்வையின் ரகசியங்கள்” "ராஜ பார்வையின் ரகசியங்கள் எதுவோ ராதை கொடுத்த ஊடலின் வலியோ ராத்திரி துயிலாத விழிகளின் கோலமோ ராணியைக் காணாத ராமனின் சீற்றமோ?" "கண்கள் ஏங்கும் பார்வை ஏனோ கண்மணி சுற்றி சிவந்தது எதற்கோ கவலைகள் தந்த கண்மணி யாரோ களங்கம் படுத்திய செயல் என்னவோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. நான் இடைக்காட்டில் [ அச்சுவேலிக்கும் செல்லச்சன்னதிக்கும் இடையில் இருக்கும் தோட்டங்கள் நிரம்பிய ஒரு கிராமம்] , சிறு வயதில் பெரியம்மா & மாமா வீட்டில் பாடசாலை விடுமுறை காலத்தில் போய் நிற்பது உண்டு. அப்பொழுது கிணற்றுநீரில் ஒற்றுமையை கண்டுள்ளேன், குடி நீரில் இருந்து, குளிப்பது, தோட்டத்துக்கு நீர் பாச்சுவது முதல். நான் 2024 ஒக்டோபரும் அங்கு சென்று வந்தேன். மற்றது படத்தில் காட்டியவாறு, ஒருவருக்கு ஒருவர் துணையாக நீர் கிணற்றில் இருந்து அள்ளுவதைக் குறிப்பிட்டே, அந்த வரியை அமைத்தேன் . அதேபோல நீர் குடத்தில் காவிக்கொண்டு வருவதையும் பார்க்கவும். நன்றி
  9. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 02: முகவுரையின் இரண்டாவது பகுதி தொடர்கிறது ஊருக்கே குறி சொல்கிறது பல்லி, என்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள்.மேலும் “பூனை குறுக்கால போனால் போகிற காரியம் சரிவராது” என்று சொல்லுவாங்க.அது பூனை பயத்தில் அல்லது ஏதாவது ஒன்றை பிடிக்க ஓடுது. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்.பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தானே கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறானே.வேடிக்கையாக இல்லையா? இப்ப இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "தும்மலை"[sneeze]ப்பற்றி வள்ளுவர் கூறுவதை கேளுங்கள் : "நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்"- குறள் 1203 தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?. விக்கலும்[hiccough] அப்படியே. அவரைப்பற்றி யாரோ கதைக்கிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்பார்கள்.இப்படி சொல்வதன் மூலம் தூர வசிப்பவர் ஒருவரின் அல்லது தூர பயணம் செய்துகொண்டு இருப்பவர் ஒருவரின் ஞாபகத்தை வைத்திருப்பதற்கு உதவும் என்பதாலே.ஆனால் நாளடைவில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. "சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்டநிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது"ம் அப்படியே .அதாவது ஏணியின் கீழாக நடக்கும் போது தவறுதலாக ஏணியை தட்டிவிட்டால் மேல் இருப்பவர் அல்லது அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் கை நழுவி,கீழால் நடப்பவரின் மேல் விழலாம் என்பதால் ஆகும்.இது ஒரு பகுத்தறிவு சிந்தனையே.ஆனால் நாளடைவில் அதுவும் மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. அவ்வளவுதான்! "மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும்நம்பிக்கையாக இருந்திருக்கிறது." பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன.சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால்,அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில் காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும் என்றும் தமிழர்கள் நம்பினார்கள். கலிங்கத்துப்பரணி முதலிய பரணி வகை இலக்கியங்களில் இவை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. சங்ககால நூல்களில் புறம் 356, 363 குறுந்தொகை 231 முதலிய பாடல்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகை நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தகவல்களை அரிசில் கிழாரும் (புறம் 281), வெள்ளி மாறனாரும் (புறம் 296) தருகின்றனர் "வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே - நீ வெம்பி விடாதே" [பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் படம்: அரசிளங்குமரி, 1957] இவை எல்லாத்தையும் விட ,"பன்றியே" சகுனம் பார்த்ததாக ஒரு போடு போட்டுவிட்டார் பாண்டிய மன்னர் ஒருவர் .எப்படி இருக்குது மூட நம்பிக்கை.இதோ அந்த சங்க கால பாடல்: [புலவர் -உக்கிரப் பெருவழுதி]/( நற்றிணை - 98. (குறிஞ்சி)]: "எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் செய்ம்மம் மேவல் சிறு கட் பன்றி ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி நூழை நுழையும் பொழுதில் தாழாது பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன் கல் அளைப் பள்ளி வதியும் நாடன் ......" [பொறி அமைக்கப்பட்ட புனத்தில் மேய்வதற்காகச் சிறிய கண்களைக் கொண்ட பன்றி ஒன்று வருகிறது. அது முள் போன்ற பிடரி மயிரைக் கொண்டிருந்தது. அது நுழையும் போது ஒரு குறித்த திசையிலிருந்து பல்லி கத்தியது. உடனே பன்றி நின்றது. ஏதோ ஒரு நுண் உணர்வு. அது திரும்பாமலேயே அப்படியே பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று அதன் பின்னர் தப்பிச்சென்று விட்டது.] நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட, உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர் .உதாரணமாக குடும்பத்தில் ஒரு பெண் சொல்லுகிறாள்: "மாமி ! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது. நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!" இதற்கு மாமி கூறுகிறாள்: "அடி, விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் பூப்பு[பெண்மை]அடைந்து அமர்வாள்! அதிலும் நீ விடியற்காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!" இறுதியாக சங்க கால உரையாடல் ஒன்று : தோழி[தலைவியை.பார்த்து ]: "அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றானே. அப்படியிருக்கும்போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? " தலைமகள் [தோழியிடம்]: "தோழி! இதனைக் கேள். அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன். அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான். மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன். விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக்கொண்டிருந்தேன். வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து/ சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்". "கேட்டிசின் வாழி தோழி யல்கற் பொய்வ லாளன் மெய்யுற மரீஇ வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந் தமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற வளியேன் யானே"-குறுந்தொகை 30 நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!. அடுத்த அடுத்த இதழ்களில் பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகளை ஒவ்வொன்றாக விபரமாக ,கூடிய வரை " பழ மொழிகள் :,+ சங்க இலக்கியம்" துணையுடன் பார்ப்போம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 03: "ஆடி மாதம்" தொடரும்
  10. "உறவு சொல்ல ஒருத்தி" இலங்கை உள்நாட்டுப் போர் 27 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது. இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த நிகழ்வு என்பவற்றின் பின் 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, யூலை 2006 இல் மீண்டும் வெடித்தது. புளியங்குளத்திலும் முகமாலையிலும் மணலாறிலும் அதன் நாலாபுறமும் அனல்பறக்கும் சண்டைகள் அடிக்கடி நடந்தன. வன்னி முழுவதிலும் இப்படியான நிகழ்வுகள் நாளாந்தம் நடக்கத் தொடங்கின. கிளிநொச்சியிலும், முல்லைத்தீவின் முள்ளியவளையிலும் விசுவமடுவின் தேராவிலிலும் நாளாந்தம் சோக இசைகள் இறப்பினை தெரிவித்துக்கொண்டு இருந்தன. இந்த சூழலில் தான், அங்கு ஒரு மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மருத்துவராக பணிபுரிந்து வந்த டாக்டர் அகத்தியன் குடும்பத்துக்கு கவலை மேல் கவலை வரத் தொடங்கியது. தங்கள் ஒரே மகன், தங்கள் உறவின் சின்னம், உயர் வகுப்பில் படித்துக்கொண்டு இருக்கும் தூயவனை எப்படியாவது, வெளியே அனுப்ப வேண்டும். என்றாலும் தம்மால் முடிந்த அளவு இன்னும் சில மாதங்களோ, ஆண்டுகளோ இருந்து மனித அவலங்களுக்கு துன்பங்களுக்கு செய்யக்கூடிய ஆறுதலான மருத்துவ உதவிகளை வழங்கவேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். டாக்டர் அகத்தியனின் மருத்துவ மனை அமைந்த கிராமத்தின் பெரிய வயல்க்காரர் தான் சின்னத்தம்பி முதலியார். அவரின் அப்பா, அம்மா தான் அகத்தியன் முதல் முதல் இந்த கிராமத்துக்கு டாக்டராக சித்தியடைந்து வந்ததில் இருந்து, அவரின் திருமணம் மற்றும் தூயவனின் பிறப்பு மற்றும் எல்லா குடும்ப நிகழ்வுகளிலும் நேரடியாக பங்குபற்றியவர்கள். அதுமட்டும் அல்ல, சின்னத்தம்பி முதலியார் ஓரளவு ஒத்த வயது என்பதால், இருவரும் நெருங்கிய நண்பர்களாகியதுடன், இருவரின் மனைவிகளும் தோழிகளும் ஆவார்கள். சின்னத்தம்பி முதலியாரின் கடைசி மகள் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறாள். அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவளின் பெயர் சிற்பிகா. அவள் படிப்பிலும் நல்ல சூரி. அதனால் தானோ என்னவோ டாக்டர் அகத்தியனுக்கும் அவரின் மனைவிக்கும் அவளில் எந்தநேரமும் ஒரு கண். சிலவேளை சின்னத்தம்பி முதலியாரிடமோ அல்லது அவரின் மனைவியிடமோ, சிற்பிகா தான் எமக்கு 'உறவு சொல்ல ஒருத்தி' யாக வரவேண்டும் என்று கூறுவதும் உண்டு. ஏன், ஒரு முறை சிற்பிகா, எதோ பாடத்தில் விளக்கம் கேட்க தூயவனிடம் 'அண்ணா, இதை ஒருக்கா விளங்கப் படுத்துகிறீர்களா?' என்று கேட்க, அவளை கட்டி அணைத்த அகத்தியனின் மனைவி, ' நீ எங்கள் மருமகள், என் மகனுக்கு 'உறவு சொல்ல ஒருத்தி' , அண்ணா இல்லை என்று கன்னத்தில் தட்டி செல்லமாக கூறினாள். "இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும் நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல அவளின் ஒழுக்கமான பேச்சும் செய்யலுமே வனப்பு" இடையின் அழகோ, தோளின் அழகோ அல்லது ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ,நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா , சிற்பிகாவின் இனிய கொஞ்சல் பேச்சும், உண்மையான பாசமிகு நடத்தையுமே அழகு என்பது அகத்தியனின் மனைவிக்கு தெரியாதது அல்ல. அது தான் அவளை தங்கள் உறவுக்குள் எடுக்க இப்பவே திட்டம் போட்டு விட்டாள். என்றாலும் அவளின் அழகும் அவளை மெய்மறக்க வைத்துதான் உள்ளது. அப்படி என்றால் தூயவனுக்கு எப்படி இருந்து இருக்கும்? பொதுவாக தன் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டால், பிறரைக் காண நாணுவார். ஆனால் பெண்களுக்கோ அப்படி அல்ல? "நிலத்திற் கணியென்ப நெல்லும் கரும்பும் குளத்திற் கணியென்ப தாமரை - பெண்மை நலத்திற் கணியென்ப நாணம்'' நிலத்துக்கு அழகு தருவது நெல்லும் கரும்பும். குளத்துக்கு அழகு தருவது தாமரை. பெண்மையின் பெருமைக்கு அழகு தருவது நாணம். இதை சிற்பிகா அறிந்தாலோ என்னவோ, அவளில் ஒரு மாற்றம் தெரிந்தது. கட்டாயம் அவளுக்கு வயலும் அதனுடன் சேர்ந்த நெல்லு, கரும்பு, குளம், தாமரையும் தெரிந்து இருக்கும். ஆனால் வெட்கம், இன்றுதான் அவளை சூழ்ந்தது போல காணப்பட்டாள். அகத்தியனின் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு, மெல்ல மெல்ல நடந்து தூயவனின் அறைக்கு போனாள். காதல் என்ற ஒற்றை வார்த்தையில்தான் இன்றைய இளைய சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில் தூயவனும் ஒருவன் தான். தாய் சிற்பிகாவுடன் கதைத்தது அவனின் காதிலும் விழுந்தது. எனவே அவன் கதவையே பார்த்துக்கொண்டு இருந்தான். எத்தனையோ தடவை அவள் வந்து போய் இருக்கிறாள். இது ஒன்றும் புதிது அல்ல. ஆனால் அவனுக்கு எனோ இது, அவள் தன்னவளாக வருவது, புதிதாகவே இருந்தது. காதல் என்பது மனிதனின் உடலில் தூண்டப்படும் ஒரு உணர்வு. அவன் அதில் தோய்ந்தே இருந்தான். உண்மையாக காதலிக்கும் போது ஆண்களுக்கு தன் காதலி தேவதைப் போல் தான் காட்சி அளிக்கிறாள். அவளின் ஒவ்வொரு அசைவும் ஓராயிரம் கவிதைகளை அவனுக்கு சொல்கிறது, அவளின் நெருக்கம் சுகமாக இருக்கிறது, சிறிய பிரிவும் பெரிதாக வலிக்கிறது. கோபமும் சின்ன ஊடலும் கூட சுவையாகத் தான் இருக்கிறது. அப்படித்தான் அவன் இருந்தான். "ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள் நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே; இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்; சில மெல்லியவே கிளவி; அனை மெல்லியல் யான் முயங்குங்காலே." அழகாக ஒடுங்கிய அடர்த்தியான கூந்தலை உடையவள், பிறை போல் வளைந்த வாசனை நெற்றியை உடைய சின்னப் பெண், சுவையான குளிர்ந்த நீரைப் போன்றவள் என் சிற்பிகா, அவளைப் பிரிந்தால் வருத்தம் தருகிறாள், அவள் இப்படி பட்டவள் தான் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை , அவளைப் பற்றி சொல்ல வார்தையில்லை. கொஞ்சம் தான் பேசுகிறாள், ஆனால் திரும்ப திரும்ப அவள் பேச்சை கேட்க வேண்டும் என்று தோணுகிறது, அணைக்கும் போது மென்மையான இலவம் பஞ்சால் செய்யப்பட்ட தலையணை போல் மென்மையாக இருக்கிறாள். காதல் பித்தம் எறியவன் போலத்தான் இருக்கிறான். முன்பு எத்தனை தடவை அவள் இவனுடன் பேசியிருப்பாள். எத்தனை தடவை இருவரும் விளையாட்டாக கட்டிப்பிடித்து அணைத்து இருப்பார்கள். அது என்ன புதுமை இன்று? ஏன் அவளும் விதிவிலக்கல்ல. காதல் ஒரு காற்றைப் போல, அதை உணரத்தான் முடியும், பார்க்க முடியாது என்பார்கள். அது முகிழ்வதென்னவோ குறுகிய காலத்தில்தான். ஆனால் பல படிகளைத் தாண்டித்தான் காதல் ஆழம் அடைகிறது. முழுமை பெறுகிறது. ஆரம்பத்தில் வரும் உணர்வு மட்டுமே காதலாகாது. என்றாலும் இது அவனின் தாயே முன்மொழிந்தது. அவள் முகம் மலர்ந்தது. அவள் அவனின் கதவைக்கூட இன்று தட்டவில்லை. நேரடியாக உள்ளே போனாள். எதோ தனது அறைக்கு போவது போல. பல நேரங்களில் பெற்றோர் கண்டித்தாலும் காதல் வயப்படாத வரையில் பெண் குழந்தைகள் ஆண்களுடன் இணைந்து விளையாடுவதை நிறுத்துவது இல்லை. ஆனால் இன்று அவளின் நிலை வேறு. அது தான் என்னவோ, அவள் தயங்கி தயங்கி அவன் அருகில் சென்றாள். அவனுடைய ஒரேயொரு சொல்லுக்கு ஏங்குகிறவளாக, எதை கேட்க வந்தாள் என்பதை மறந்து அவனின் முன், அவனின் கண்களை பார்த்தபடியே நின்றாள். அவனும் அவள் கண்களை பார்த்தான். இருவரும் பேசவே இல்லை. கொஞ்ச நேரத்தால், 'நீ தான் எனக்கு உறவு சொல்ல ஒருத்தி, ஒருத்திமட்டுமே' என்று கூறியபடி அவளை அணைத்தான். இது அவர்களின் பிஞ்சு காதலின் ஆரம்பமே! அதன் பின் இருவரும் கொஞ்சம் தயக்கங்களுடன் சந்தித்து பாடங்களுடன், தம் புது உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டாலும், தூயவன் வெளிநாடு செல்வது உறுதியாகிவிட்டது. இருவரும் தம்மிடையில் உறுதியை பகிர்ந்து கொண்டு, தூயவன் தன் உயர்வகுப்பையும் பல்கலைக்கழகத்தையும் அங்கு தொடர, எல்லோரிடமும் விடை பெற்று புறப்பட்டான். தூயவன் சென்று சில மாதங்களில், வன்னியில் போர் கடுமையாக, டாக்டர் அகத்தியன் குடும்பமும் கொழும்புக்கு மாற்றம் கிடைத்து சென்றுவிட்டது. ஆனால் சின்னத்தம்பி முதலியார், தனது வயல் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களை நிர்மாணிப்பதால், உடனடியாக அங்கிருந்து வெளியே போக அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் அது எந்தப் பெரிய பிழை என்பதை அவர் உணர சில மாதங்களே தேவைப்பட்டது. ஆமாம், அதன் பின் வெளியே போகக் கூடிய வாய்ப்பு முடங்கிவிட்டது. இறுதியில் உள்நாட்டு அகதிகளாக வன்னியிலேயே இடம் பெயர்ந்தார்கள். அவர்களின் வீடு, நிறுவனங்கள், வயல்கள் எல்லாம் ஆர்மி முகமாகவும் மாறி விட்டது. குறிப்பிட்ட இடத்தில் மக்கள் இடப்பெயர்வு அடைந்தால் அந்த இடங்களில் எந்த விதமான தாக்குதல்களும் நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய பூர்வீக இடங்களை விட்டுவிட்டு அந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள் இடம் பெயர்வு செய்தனர். அப்படித்தான் சின்னத்தம்பி முதலியார் குடும்பமும் அங்கு போய் இருந்தது. என்றாலும் நாளடைவில் அதுவும் பாதுகாப்பு அற்றதாகவே மாறியது. ஒரு நாள் குண்டு தாக்குதலில் சிற்பிகாவைத் தவிர அவரின் குடும்பம் அங்கு பலியானது. சிற்பிகாவுக்கு காயங்கள் என்றாலும் உயிருக்கு ஆபத்து வரவில்லை. வன்னி மருத்துவமனையில் சில மருத்துவர்கள், நல்லகாலம் இன்னும் குண்டு மழை மற்றும் ஆயுதத் தாக்குதல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அங்கே பாதிக்கப்பட்ட, காயம்பட்ட மக்களுக்கு பேருதவியைச் செய்தனர். எனவே சிற்பிகாவும் அங்கு சேர்க்கப்பட்டார். அவள் இன்னும் தூயவனை மறக்கவில்லை. அவன் இப்ப பாதுகாப்பாக வெளியே இருக்கிறான் என்ற எண்ணம் மகிழ்வையும் கொடுத்தது. இதற்கிடையில் சின்னத்தம்பி முதலியார் குடும்பத்தின் இறப்பை கேள்விப்பட்ட டாக்டர் அகத்தியன், ஒருவாறு, ஆர்மியின் அனுமதியுடன் அங்கு வந்தார். அவர் தனது செல்வாக்கால், ஒருவாறு சிற்பிகாவை கொழும்புக்கு பல இடையூர்களைத் தாண்டி கூட்டி சென்றார். இப்ப முதலியார் சின்னத்தம்பியினதும் டாக்டர் அகத்தியனினதும் ஒரே "உறவு சொல்ல ஒருத்தி" யாக சிற்பிகா, சாதாரண வகுப்பில் கொழும்பில் படித்துக்கொண்டு இருக்கிறாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க” “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க நாலா பக்கமும் தெரியும் வயல்வெளிகள் நாவூற குழைச்ச சாதகம் உண்ணலாம் நாணிக் கோணும் விறலியும் காணலாம்!" "கற்றாழை முள்ளும் காலில் குத்தும் கருவாட்டு குழம்பும் மூக்கை இழுக்கும் கள்ளம் இல்லா வெள்ளந்தி அவர்கள் கருப்பு சாமியின் பக்தர்கள் இவர்கள்!" "விற கொடிக்கப் காட்டுக்கும் போவாள் விதைப்புக் காலத்தில் மண்ணையும் கிளறுவாள் விரிச்ச நெற்றி இவள் வீராப்புக்காரி வித்தைகள் காட்டிடும் குறும்பு பொண்ணு!" "கிராமம் எங்கும் பண்பாடு அழைக்கும் கிணற்று நீரும் ஒற்றுமை காட்டும் கிளுகிளு தரும் தண்ணீர் குடங்கள் கிண்கிணி இசைக்கும் உலக்கை குத்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. “நினைவு வணக்கமோ?" [படக்கவிதை] "கார்த்திகை தீபம் ஏற்றும் காந்தையே காலத்தின் கட்டாயம் இது என்றாயோ? காரணம் கேட்டு நீதிக்குப் போராடிய காணா உயிரின் நினைவு வணக்கமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] காணா - காணாமல் போன
  13. "தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils!" / பகுதி / Part 01 [In English & Tamil] பொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் உள் அடங்கியிருக்கின்றன என்பது யாருக்கும் பொதுவாக தெரியாது. தமிழ் நிலங்களில் கார்த்திகை மாதம் வரை மழை இருக்கும். மார்கழி மாதம் வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும். மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும். தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. அதனால் தை என்னும் பெயர் இந்த மாதத்திற்கு வந்திருக்கலாம்? தை என்றால், தைத்தல் என்று பொருளும் உண்டு. சங்க காலத்தில், தையில், சில குறிப்பிட்ட வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன. நல்ல கணவன் வேண்டும் என்று கன்னிப் பெண் வேண்டுவாள். கணவன் நன்கு ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று மனைவி வேண்டுவாள். இந்த வேண்டுதல்களின் அடிபடையில் காலையில் எழுந்து நீராடி, விரதம் இருப்பார்கள். அதனால் இது "தை நீராடல்" என்றும் அழைக்கப் படுகின்றது. மார்கழியும் தையும்; முன்பனிக்காலம். இக்குளிரிடையே மிகக் குளிர்ந்திருக்கும் நீரில் குளிப்பது ஒரு அருமையான அனுபவம். அவ்வாறு குளித்ததுடன் இயற்கைச் சூடு உடம்பில் இருந்து வருவதால் ஒரு இன்ப அனுபவம். இயற்கையையோடு இணைந்த ஒரு தவம் செய்கிறோம் என்ற எண்ணம் நமக்கு வரும். நோன்பு என்பது ' மனவலிமை கொள்ளுதல்' எனப் பொருள் கொள்ளலாம். இந்நாளில் நோன்பு ' விரதம் ' என்று மாறி நம் வாழ்வில் இடம் பெற்று வருகிறது "தை நீராடல்" [பாவை நோன்பு] செய்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது ஒரு நம்பிக்கை. இளம் பெண்கள் மணலில் அழகிய பாவை செய்து பூச்சூட்டி விளையாடினர்; மணல் பாங்கான இடம், நீர் நிலைகளின் அருகில் விளையாடினர்; தாம் நீராடும் போது பாவையினையும் நீராட்டி மகிழ்ந்தனர் எனப் பலச் செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. ’பார்ப்பு’ எனும் சொல் பாப்பு – பாப்பா என்றாகிப் பின்னாளில் ‘பாவை’ எனத் திரிந்தது என்பர். இச்சொல்லு அழகிய உருவம் என்ற பொருளில் பொதுவாக வழங்கப் படுகிறது. பாவை நோன்பின் போது அவர்கள் கண்ணில் படுவது, மழையும் அவனே! குளமும் அவனே! எல்லாம் அவனே! அவர்கள் இயற்றும் தவம்தான் என்ன என்பதை பரிபாடல் வரிகளில் பார்ப்போம் [பரிபாடல் 11], “கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல, விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ என்மாரும், ‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது, யாம் வீழ்வார், ஏமம் எய்துக!’ என்மாரும், ‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும், மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” என்மாரும் “எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். பல பூக்களை நாடும் வண்டுகள் போல, எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும். எம் கணவரும், யாமும், கிழவர்,கிழவியர் என்று உலகத்தோர் கூறா வண்ணம், பேரிளம் பெண் என்னும் எமது ஏழாம் பருவம் [பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை & பேரிளம் பெண் ] எய்துமளவும், இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலை பெற வேண்டும்.”என்கிறது. இதனால் நாட்டு வழக்கில் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும் வந்திருக்கலாம்? மார்கழியில் அறுவடை முடிந்து கையில் செல்வம் [பொருள்] இருக்கும். திருமண செலவுகளுக்குத் தேவையான அளவு சேர்ந்திருக்கும். கன்னிகையும் நோன்பிருக்கவே, திருமண முயற்சிகள் எளிதில் கூடி வரவே, இந்தப் பழமொழி வழக்கில் வந்தது. இதுதான் தை மாதம் குறித்த பண்டைத் தமிழர் வாழ்கை இயல்பு ஆகும். இதனால் தானோ என்னவோ, தை முதல் நாளன்று ‘தை நீராடல்’ என்கிற பெயரில் விரதத்தை முடித்துக் கொண்டு, நிறைய பால் போட்டு செய்த பொங்கல் சாப்பிடுகிறார்களோ! சங்க காலத்தில் தைந்நீராடலாக இருந்தது. ஆண்டாள் காலத்தில் மார்கழி நீராடலாக மாறியது. திருவெம்பாவை - திருப்பாவை தமிழ் நாட்டில் தோன்றிய காலத்தில் இந்த நோன்பு மார்கழித் திங்களிலேயே நடைபெற்றது. திருப்பாவையில், ''மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் '' எனவும் . திருவெம்பாவையில், '' போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய் '' எனவும் கூறப்பட்டுள்ளது. இங்கே நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது, ஆண்டாள் தன் திருப்பாவையில் மார்கழி முதல் நாளைக் குறிப்பிடவில்லை. "மதிநிறைந்த நன்னாள்" என்றுதான் குறிப்பிடுகிறார். மதிநிறைந்த நன்னாள் என்பது பௌர்ணமி. எனவே, திருப்பாவை நோன்பு மார்கழிப் பௌர்ணமியில் தொடங்கி தை மாதம் பௌர்ணமியில் முடிகிறது. தமிழ் மாதங்கள் அனைத்தும் பொதுவாக பௌர்ணமியில் இருந்தே தொடங்குகின்றன. திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும் Thai is a special month for Tamils! / Part 01 “When Thai is born, it paves the way for hope.” ["Thai piranthaal Vazhi pirakkum"], is a well known phrase & commonly used by Tamils since the Sangam Period [500BC to 300AD] .However, most of them does not know or aware of, how much information or significance it hold in this phrase Northeast Monsoon season is the major period of rainfall activity over south India. So there is constant rain fall in Tamil lands Up to mid of December [Karthikai/ கார்த்திகை ]. There after, MARGAZHI [மார்கழி / mid of December to mid of January] arrives after a long spell of plentiful rains. The river is full of flood water and at many places it looks muddy in color as the sediments have not yet settled down. The mornings are cold and waters are ice-cold. And the fogs have not started. The month when this happens is like a Tank ["Kulam"' குளம்'] - as all tanks and water bodies are full by the time. The water is not fast but it gently moves along the breeze. It is also not deep but sufficient enough to take a dip, It is safe for the young girls to play as they take bath. That is also why this month came to be called as "Kulam" குளம். However, the conditions have changed as "Thai" தை [mid of January] comes in, The water becomes crystal clear. The river is calm and it is time for 'தவத்தை ஆடல்' a tapas, a thavam or a time of prayer. Bathing as a tapas [தவத்தை நீராடல் ] is done as a continuation of bathing in cold water [மார்கழி பனி -நீராடல்]. As the water in Thai is clear or glassy, It is the right one to absorb the wishes exactly. ['நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்' என்மாரும், 115-Paripaadal 11] Some historians identify Thai PONGAL with the "Thai Un" தை உண் and "Thai Niradal" "தை நீராடல்", believed to have been celebrated during the Sangam Age (500 B.C. to 300 A.D). Although, As part of the festivities, maidens of the Sangam era observed 'Pavai Nonbu' பாவை நோன்பு at the time of Thai Niradal. It is considered as an important tradition in the lives of Tamils from times of antiquity. Pavai Nonbu is performed by women for prosperity and to get good husbands. The history of Pavai Nonbu is more than 2000 years old and is mentioned in the early Tamil scriptures such as Paripaadal. Women and girls observing Pavai Nombu woke before sunrise, go to the river bank accompanied by their friends. There they make the Pavai 'பாவை ' – the image of a girl on the sand and offer flowers to it. After this they enter the river water, splash and play in the water. [ie bath in the River]. It looks as though the water is playing with them. The Nonbu that begins with a prayer to have the world cool at all times , ends in Thai with a prayer for a happy married life [get good husbands.]. Pukaar khandam of சிலப்பதிகாரம் [சிலப்பதிகாரம்] {கணவற்கு ஒருநோன்பு .....கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில் .....சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்....காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு} also reports a kind of பாஸ்டிங் [Nonbu/ நோன்பு] like Thai niradal [தை நீராடல்] . Here , A Brahmin girl by name Devanthi [தேவந்தி] tells Kannaki [கண்ணகி] that the root cause of her suffering of separation from Kovalan [கோவலன்], who went after Mathavi [மாதவி] , was perhaps due to not doing a Nonbu in her previous birth, that was meant for a happy married life. It is safe to assume that Devandhi could have meant the Maargazhi and Thai Nonbu, Because the Nonbu she mentioned was also about bathing in the river and praying for happy married life. Only the scene was different. Also the prayer is directed to the Lord of Love, Manmathan [மன்மதன்]. The customs around the Nonbu was like this after a few centuries of Paripaadal times. After a another 1000 years, it became Margali Nonbu [மார்கழி நோன்பு] That is what we know from Thiruppavai of Saint Aandaal. Tamil month of "Thai" [mid January to mid February] is always a month of promise with the feeling of joyful anticipation of good things to come [such as marriages] .According to the Sangam literary work Paripaadal, this day [1st of Thai] is related to the Thiruvaathirai festival. Having spent the entire month of Maarkazhi praying to god and observing ritual fasting, young virgins celebrated the last day, Thai 1, with the Thai Bathing. According to the work Kaliththokai, the rituals during the month of Maarkazhi are observed in the hope that it will lead to wedlock with a good-hearted husband. It also mentions the worship of Sun as a deity. Also Andal's Tiruppavai and Manickavachakar's Tiruvembavai vividly describe the festival of Thai Niradal and the ritual of observing Pavai Nonbu.Today, women and girls undertaking Pavai Nonbu during Margali month take bath at dawn and visit temples and read a verse from Thiruppavai composed by Aandaal. The most detailed account of this Nonbu and the Nonbu done in the month of Thai (known as தை- நீராடல் ) are found in Paripaadal பரிபாடல் ! They help us in knowing the culture and tradition of Tamils who lived 2000 years ago. [The time period of this composition Paripaadal is about 161 BC] "The married woman prays that her husband's love for her never diminishes. She prays that he never leaves her. Some married women pray that they as a couple would remain youthful for long, even after the wife attains the last and the 7th stage of womanhood (of பேரிளம் பெண்/old woman )They also pray for prosperity in the company of relatives."- [Paripaadal 11] As Pavai Nonbu or fasting ends in 1st of Thai with a prayer for a happy married life/ get good husbands with Thai Niradal as well as They have enough money to spend for marriage ceremony after the harvest in the month of markazhi, Tamil girls are set to enter in wedlock in the month of Thai. These may be the reasons for the saying "the birth of the month of Thai will pave the way for new opportunities." Such as marriages. This is not a surprise in a largely agricultural community - the riches gained from a good harvest form the economic basis for expensive family occasions like weddings. Thamils refer to Pongal as "Tamizhar Thirunal" (meaning "the festival of Tamils"). In the Thiruppavai Pasuram ,It says, "The full moon day of Margazhi is here What an auspicious day it is! O dear ornamented girls who thrive in Brindavana, overflowing with prosperity Come along, let us go bathe, Come along if you so desire." "Oh bejewelled girls (nerizhayeer)! This is the month (thingal) of December/ January (Maargazhi), an auspicious day (nannal) filled (niraindha) with moonlight (madhi). Those of us who want to go (pothuveer) to perform the penance of 'paavai nonbu' (neeraada), let us go" In Thiruvempaavai,It says, "Praises ! Bathing in the mArkazi month ! " Both the Maarkazhi month rituals and the Thai 1st bathing rituals are practiced even today. It was these secular rituals that inspired the immortal hymns of Thiruppaavai and Thiruvempaavai by Saint Aandaal and Saint Maanikkavaasakar respectively in the 9th century. Also in tamil "Thingal" indicates month as well as Moon, as tamil months generally starts from full moon [Pournami] day. The Moon takes 30 days from waxing (to become full-Moon), to waning (to completely disappear).The Tamils called the visible Moon as Thingal and named the duration for one cycle of waxing and waning of the Moon, Maatham or Thingal, (Month). Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part 02 Will Follow
  14. "ஏமாற்றும் காதல்" ஒரு காலத்தில் இலங்கையின் ஒரு அழகிய கடற்கரை நகரத்தில் ராஜ் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு அன்பான மற்றும் பாரம்பரிய குடும்பத்தின் ஒரே குழந்தை. ராஜ் தனது வசீகரம், புத்திசாலித்தனம் கடலின் மீது ஆழ்ந்த அன்பு, தாராள மனப்பான்மை மற்றும் அன்பான புன்னகைக்காக அவனது கிராமம் முழுவதும் அறியப்பட்டான். ராஜ் உள்ளூர் புத்தகக் கடையில் சுமாரான வேலையில் இருந்தான், அங்கு அவன் தனது நாட்களை புத்தகங்களில் மூழ்கி, வாடிக்கையாளர்களுக்கு சரியான வாசிப்பைக் கண்டறிய உதவினான். சமீபத்தில் அவனது கிராமத்திற்குச் சென்ற அழகிய பெண்ணான மாயாவை சந்தித்த ராஜின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. மாயாவை சுற்றி ஒரு மர்மம் இருப்பது அவனுக்கு அப்ப தெரியாது. துடிப்பான பெண்ணான அவளது வசீகரிக்கும் வனப்பு உடனடியாக ராஜின் கவனத்தை ஈர்த்ததுடன் அவளுடைய அழகு மற்றும் உண்மையான ஆளுமைத் தோற்றத்தில் அவன் திகைத்தான். "வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும், பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும், சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ? "நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!" வில்லைப் போல் நெற்றி என்றாலும், வேலைப் போன்ற விழி என்றாலும், முத்தை போன்ற பல் என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும், சொல்வதற்கு வேண்டுமானால் நல்லா இருக்கும், ஆனால் அர்த்தம் சரியா வராது. அவளின் அழகை சொல்ல ஒரு உவமை உண்டா ? புல்லு, நெல்லை போல இருக்கும் என்றாலும் அது ஒரு சரியான விளக்க, பொருள் ஆகாது. உவமை என்பது உயர்த்திச் சொல்வது. அப்படி பார்த்தால் சீதையின் அழகுக்கு எதை உதாரணமாக சொல்வது ? எல்லாவற்றையும் விட அவளின் அழகு உயர்வாக இருக்கிறது. எதைச் சொன்னாலும் அவளின் அழகு அதையும் விஞ்சி நிற்கிறது. கம்பன் திணறினான். அப்படித்தான் ராஜும் திணறினான். ராஜும் மாயாவும் அவர்களின் அறிமுகத்தின் பின், ஒன்றாக அதிக நேரம் செலவழித்ததால், அவர்கள் கவிதை, இசை மற்றும் பொது விடயங்களின் மீது பகிரப்பட்ட தங்களது விருப்பங்களை கண்டறிந்தனர். ஒவ்வொரு நாளும் அவர்களது தொடர்பு வலுவடைந்தது, மேலும் ராஜ், தன்னை அறியாமலே மாயாவை ஆழமாக காதலிப்பதைக் கண்டான். ராஜ் மற்றும் மாயாவின் காதல் சூடான இலங்கை வெயிலில் மலர்ந்தது. அவர்களின் நாட்கள் சிரிப்பாலும், இரவுகள் கிசுகிசுப்பான வாக்குறுதிகளாலும் நிரம்பியிருந்தன. அவர்கள் அடிக்கடி மணற்பாங்கான கரையோரங்களில் உலாவுவார்கள், இந்தியப் பெருங்கடலின் முடிவில்லாத விரிவைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள், அவர்களின் இதயங்கள் தங்கள் காலடியில் மெதுவாகப் படும் அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. எதுவும் அவர்களைப் பிரிக்க முடியாது என்று தோன்றியது. ஒரு நாள், மாயா தன் கனவுகளையும் லட்சியங்களையும் ராஜுவிடம் பகிர்ந்து கொண்டாள். தான் ஆடம்பர மற்றும் செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழ என்றுமே விரும்புவதாக அவள் விளக்கினாள். அவளுடைய வார்த்தைகள் தற்காலிகமாக இருக்கலாம் என்று அவன் அதை பெரிதாக பொறுப்படுத்தவில்லை. ஏனென்றால், உண்மையான காதல் எந்த தடையையும், ஆரம்ப விருப்பங்களையும் வெல்லும் என்று அவன் நம்பினான் மாதங்கள் செல்ல செல்ல, மாயா மீதான ராஜின் காதல் வலுவடைந்தது, தங்கள் இருவராலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க முடியும் என்று நம்பி, அவளுக்கு முன்மொழிய முடிவு செய்தான். ராஜு தன் பெற்றோர்களின் உதவியாலும் அவர்களுக்காக ஒரு சிறிய ஆனால் அழகான வீட்டை வாங்குவதற்கு விடாமுயற்சியுடன் கவனமாக சேமிக்க திட்டமிட்டான். காதல் முன்மொழிவு நாள் வந்தது, ராஜு மாயாவை இந்தியப் பெருங்கடலைக் கண்டும் காணாத ஒரு அழகிய இடத்திற்கு அழைத்துச் சென்றான். சூரிய அஸ்தமனம் வானத்தை இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் வரைந்து இருந்து, அவனது அன்பின் அறிவிப்புக்கு சரியான பின்னணியை உருவாக்கியது. அவன் ஒரு முழங்காலில் கீழே இறங்கி, அவனது இதயம் உண்மையான உற்சாகத்தால் துடிக்க, மாயாவை தனது மனைவியாகக் கேட்டான். அவளும் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் அதை ஏற்றுக்கொண்டாள், அல்லது அப்படித் அவனுக்கு தோன்றியது. அவன் விரைவில் தன் திருமணத்தைத் திட்டமிடத் தொடங்கினன், திருமணமானது, அவளது ஆடம்பர நினைவுகளுக்கு இணங்கக்கூடியதாக இசை, நடனம் மற்றும் நேர்த்தியான அலங்காரங்களால் நிறைந்த ஒரு பிரமாண்ட நிகழ்வாக இருக்கவேண்டும் என்று யோசித்தான். ராஜ் மாயாவுடன் காதல் சபதம் பரிமாறிக் கொண்டதால், அவள் வாழ்நாள் முழுவதும் அன்பு மற்றும் மகிழ்ச்சியுடன் இருப்பாள் என்று நம்பினான். இருப்பினும், நேரம் செல்ல செல்ல, ராஜ் மாயாவில் ஒரு மாற்றத்தை கவனித்தான். அவள் அவனிடம் இருந்து தூரமாகிக்கொண்டு போனதுடன் அவனுடனான உறவில் ஒரு ஆர்வமின்மையைக் காட்ட ஆரம்பித்தாள். என்ன தவறு என்று ராஜுவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நாள் மாயாவுக்கும் அவள் தோழிக்கும் இடையே நடந்த உரையாடலைக் கேட்டபோதுதான் அவளது உண்மையான நோக்கத்தை அவன் கண்டுபிடித்தான். அவள் அவனை உண்மையாக நேசித்ததில்லை; அவள் அவனை தனது பொழுபோக்குக்காகவும், தன் எண்ணப்படி, ஒரு பணக்கார புலம்பெயர்ந்த வாலிபன் தன் வலையில் கிடைக்கும் வரை, அவனது பணத்தில் அனுபவிப்பதற்காகவும் ஏமாற்றிக்கொண்டு இருந்தாள் என்பது தெரிய வந்தது. "பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் மேகத்தில் மின்னை முன்னே வென்ற நுண் இடையினாளை மாகத்தோள் வீரபெற்றால் எங்ங்ணம் வைத்து வாழ்தி?” சிவன் உமையைத் தன் மறுபாகத்தில் வைத்துக் கொண்டான், திருமால் திருமகளைத் தன் மார்பில் வைத்துக் கொண்டான், பிரம்ம தேவன் கலைமகளைத் தனது நாவிலே வைத்துக் கொண்டான். மேகத்திலே தோன்றும் மின் வெட்டுகளைப் போன்ற நுண்ணிடை யாளான அச்சீதையை வானளாவிய உயர்ந்த தோள்களையுடைய வீரனாகிய நீ எங்ங்ணம் வைத்து வாழப்போகிறாய் என்கிறான் கம்பன். அப்படித்தான் ராஜும் தவித்தான் அன்று . ஆனால், 'நீ எங்ங்ணம் வைத்து வாழப்போகிறாய்?' என்பதன் கருத்தை அவன் இன்று உணர்ந்தான். ராஜ் நொந்து போனான். அவளது துரோகம் அவனது இதயத்தை உடைத்தது. அவன் முழு மனதுடன் நேசித்த பெண் அவனை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தினாள் என்பதை அவனால் இன்னும் நம்பமுடியவில்லை. மாயாவின் உண்மையான நிறம் அவனுக்கு வெளிப்பட்டது. வீட்டிற்கு அன்று நேரத்துடன் சென்ற அவன், தன் தாயின் கழுத்தில் சாய்ந்து, விக்கி விக்கி அழத் தொடங்கினான். அவனால் இன்னும் நம்பமுடியவில்லை. மகன் அழும் சத்தம் கேட்டு தந்தையும் வெளியே வந்து நடந்தவற்றை கவனித்தார். அன்பெனும் சொல்லுக்கு மாற்றாக நாம் பாசம், நேசம், பரிவு, பிரியம், சினேகம், நட்பு, பற்று, காதல் போன்ற சொற்களைக் கையாள்கிறோம். அன்பின் மேலானதோர் நிலையைக் காதல் என்று கொள்ளலாம். எனினும் பின்பு காதல் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் இடையே தோன்றும் அன்பின் பெருக்கு எனக் கொள்ளப்பட்டது. அப்படியான அவனின் உண்மையான காதல், அவளின் நடிப்பில் கருத்து அற்று போயிற்று! இறுதியில், ராஜ், அம்மாவின் ஆறுதலான நம்பிக்கையான வார்த்தைகளால், மாயாவுடனான தனது காதலை கனத்த இதயத்துடன் முடித்துக்கொள்ள வேதனையுடன் ஒத்துக்கொண்டான். அவளின் காதல் பொய்யிலும் ஏமாற்றத்திலும் கட்டப்பட்டது என்பதை உணர்ந்தான். மாதங்கள் வருடங்களாக மாறியது, ராஜ் மாயாவை எனோ இன்னும் முற்றாக மறக்கவே இல்லை. அவர்கள் முதலில் சந்தித்த கடற்கரையில், பல மாலைகளில் அவன் தனிமையில் பொழுது போக்கினான். மற்ற நேரங்களில் அவன் தனது வேலையில் தன்னை முழுதாகக் ஈடுபடுத்திக் கொண்டான். ராஜின் இதயம் உடைந்திருக்கலாம், ஆனால் உண்மையான காதல் ஒருபோதும் வஞ்சகத்தின் அடிப்படையிலோ அல்லது சுயநல நோக்கங்களிலோ அமையாது என்பதைக் கற்றுக்கொண்ட கனிவான மனிதனாக அவன் இன்று வாழ்கிறான். அவனது கதை ஒரு அழகான முகத்தின் வசீகரத்தால் கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகக் இருந்து காதல் எப்போதும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறது. “காதலில் இரண்டு விதமாம். ஒன்று உண்மைக் காதலாம்! மற்றொன்று வெறும் காதலாம்! இல்லாத வஸ்துவிற்கு இரண்டு பெயர்கள் இருந்தால் என்ன? நூறு பெயர்கள் இருந்தால் என்ன?" என்று 1943 ஆம் ஆண்டிலேயும், “காதலும் கடவுளும் ஒன்று என்றால் - காதலும் பொய், கடவுளும் பொய் என்று தான் அர்த்தம்” என்று 1947 ஆம் ஆண்டிலேயும் பெரியார் எழுதிய சிந்தனைகள் அவன் மனதில் அலை மோதின. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. “செங்காந்தள்” [அந்தாதிக் கவிதை] "செங்காந்தள் முகிழ்விடும் நம் தேசமே தேசம் எமக்கு ஈன்ற மாவீரர்களே மாவீரர்களே எங்கள் நிலத்தின் தெய்வமே தெய்வமே உங்களுக்கு தீபம் ஏற்றுகிறோம் ஏற்றிய சுடரில் உங்களைக் காண்கிறோம்! காண்கிறோம் நேர் உரிமைப் போராட்டத்தை போராட்டம் காட்டிய உங்கள் வீரத்தை வீரத்தில் நீங்கள் உரைத்த நீதியை நீதி நிலைநாட்டிடச் செய்த தியாகத்தை தியாகம் விதைத்த பூமியே செங்காந்தள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. “புத்தாண்டே 2025!” "இழிவூட்டும் இன்னல்களை நேற்றோடு அகற்றி இதயத்தோடு நிம்மதியை எல்லோருக்கும் அளித்து இதழோடு முத்தமிட்டு அன்பாக அணைத்து இனிதாய் வாராயோ மலரும் புத்தாண்டே !" “மலரும் 2024 இல் மகிழ்வாக இருக்க அலறும் இன்னல்களே விலகி போகாயோ ? நிலவின் ஒளியில் இன்பம் பொழிய புலரும் புத்தாண்டே மகிழ்வாக வாராயோ ?” "கழனி எங்கும் கதிர்கள் ஆட கயவர் கூட்டம் உளறுவதை நிறுத்த கருத்து சுதந்திரம் பாது காக்க கடந்த ஆண்டு அனுபவமாக மாறட்டும்!" "பட்டிதொட்டி எங்கும் மங்களம் ஒலிக்க மட்டு மரியாதை மேள தாளத்துடன் வாட்டசாட்டமாக புது ஆடை ஜொலிக்க பட்டாசு வெடித்து வருக புத்தாண்டே!" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்)
  17. "சாதிக் கொடுமை" சாதி அமைப்புகளின் வரலாற்றைக் கொண்ட பல ஆசியா சமூகங்களில், உதாரணமாக, தெற்காசியாவில் உள்ள பல்வேறு சமூகங்களிடையே இருந்ததைப் போலவே, சாதி அடிப்படையிலான பாகுபாடும் கொடுமையும் இலங்கைத் தமிழர்களிடையே பிரச்சினையாக இருந்த காலம் அது. இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் பெரும்பாலும் இந்துக்களிடம் சாதி அமைப்பு பாரம்பரியமாக அவர்களின் சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டு இருந்தது. என்றாலும் சாதி அடிப்படையிலான பாகுபாடு முன்பு இருந்ததைப் போல பரவலாகவோ அல்லது வெளிப்படையாகவோ இல்லாவிட்டாலும், அது தமிழ் சமூகத்தின் பல பகுதிகளில் இன்னும் ஓரளவு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்தில் "உயர்குடி" இந்துக்களே கோவில்களில் வழிபட அனுமதிக்கப்பட்டு வந்தனர். இவ்வாறே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலிலும் தாழ்ந்த சாதி இந்துக்கள் அனுமதிக்கப்படவில்லை. 1950கள், 60களில் ஆலயப்பிரவேசப் போராட்டங்கள் யாழ்ப்பாணத்தில் எழுச்சி பெற்றன. 1956 சூலை 9 இல் நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணைச் சிவன் கோவில், பெருமாள் கோவில் போன்ற பல புகழ்பெற்ற கோவில்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டன. 1968 ஆம் ஆண்டில் பல நூற்றுக்கணக்கான தாழ்ந்த சாதி இந்துக்கள் (குறிப்பாக பள்ளர், நளவர் போன்றவர்கள்) மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இப்போராட்டத்தை வெள்ளாளர் எனப்படும் உயர்சாதி இந்துகள் செ. சுந்தரலிங்கம் தலைமையில் வன்முறைகள் மூலம் எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'உயர்குடிகளின்' எதிர்ப்புக்குத் தலைமை வகித்த செ சுந்தரலிங்கத்திற்கு "சமூக ஏற்றத்தாழ்வு ஒழிப்புச் சட்டத்தின்" கீழ் குற்றவாளியாக அறிவித்து ரூ. 50 தண்டம் மட்டுமே அறிவித்தது. இந்த செல்லப்பா சுந்தரலிங்கம் (1895 ஆகத்து 19 - 1985 பெப்ரவரி 11) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கல்விமானும், வழக்கறிஞரும் ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல 1931 இல் இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டபோது, ராமநாதன் எல்லா மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதை எதிர்த்து வேளாளர் சாதி ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமையை இடஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார் என்பது மற்றும் ஒரு வெட்கத்துக்கு உரிய தமிழ் அரசியல் வாதிகளின் செயலாகும். இது தான் அன்றைய நிலைப்பாடு. அழகிய யாழ்ப்பாண நகரத்தில், முருகன் மற்றும் எழிலரசி என்ற இரண்டு இளம் மாணவர்கள் முறையே யாழ் மத்திய கல்லூரியிலும் வேம்படி மகளீர் கல்லூரியிலும் உயர் வகுப்பில் படித்து வந்தார்கள். ஒரு பிரகாசமான மற்றும் உறுதியான இளைஞரான முருகன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஒரு வெற்றிகரமான பொறியியலாளராக வேண்டும் என்ற கனவுகளுடன் தனது புத்திசாலித்தனத்திற்கும் வசீகரத்திற்கும் பெயர் பெற்றவர். அவரது குடும்பம் தாழ்த்தப்பட்ட சாதி என்று தம்மை மற்றவர்கள் பாகுபடுத்தி பிரித்து தள்ளி வைத்ததால், எப்படியும் கல்வி மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான பாதையை அமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அவன் தனக்குள் விதைத்திருந்தான். அதேநேரம் எழிலரசி ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த படித்த, உயர் சாதிப் பெண். அவர் வழக்கறிஞர் ஆக ஆசைப்பட்ட ஒரு சிறந்த மாணவி ஆகும். அது மட்டும் அல்ல, அங்கு கடுமையாக இன்னும் இருக்கும் சாதி அடிப்படையிலான பாகுபாடும் மற்றும் பிரச்சினைகளில் உள்ள உண்மைகளை அறிய அவள் குடும்பத்திற்குள் அவளுக்கு வாய்ப்பு இருக்கவில்லை, அவளுடைய வளர்ப்பு சலுகை மற்றும் வசதிகளால் அந்த அனுபவமும் அவளுக்கு கிடைக்கவில்லை. சாதி அடிப்படையிலான பாகுபாடு யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், கூலித்தொழிலாளிகளாக இருந்த தனது பெற்றோர்கள் மனிதர்களை விட குறைவாக நடத்தப்படுவதை கண்டவன் என்பதால், அது அங்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை உணர்ந்தான். உயர்சாதிக் குடும்பங்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதி, அதிகாரத்தின் மீது இரும்புப் பிடியை வைத்திருந்தனர், அதே நேரத்தில் முருகனின் குடும்பத்தைப் போன்றவர்கள் அற்ப இருப்பை வெளிப்படுத்தவே போராடவேண்டி இருந்தது. சிறு வயதிலிருந்தே, முருகன் சாதிக் கொடுமையின் கடுமையான யதார்த்தங்களை, சாதி அடிப்படையிலான பாகுபாட்டையும் அதனால் தனக்கும் தன்னைப் போன்ற இளைஞர்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை கண்டவன், அனுபவித்தவன். எனவே சாதிக் கொடுமையின் சங்கிலியிலிருந்து விடுபட அறிவுதான் முக்கியம் என்று அவன் சிறுவயதில் இருந்தே நம்பினான். அது மட்டும் அல்ல, அந்த அறிவால் பெரும், பெரிய பதவி கூட ஒரு அந்தஸ்த்தை கொடுத்து, தான் கண்ட அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்க உதவும் என்பது அவனின் திட நம்பிக்கை. அவன் தனது சாதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் அவலநிலையில் அனுதாபம் கொண்ட மற்றவர்களின், ஒத்த எண்ணம் கொண்ட யாழ்ப்பாண வாசிகளின், குறிப்பாக சக மாணவர்களின் அனுதாபங்களை திரட்டுவதிலும் ஆர்வமாக இருந்தான். எனினும் இதனால் தனக்கோ அல்லது தன் குடும்பத்துக்கு என்ன நடக்கும் என்பதை அவன் அப்பொழுது சிந்திக்கவில்லை. யாழ் மத்திய கல்லூரி மற்றும் வேம்படி மகளீர் கல்லூரி இணைந்து நடத்திய உயர் வகுப்பு மாணவர்களின் பட்டி மன்றம் ஒன்று ஒரு நாள் நடந்தது. அதில் எழிலரசி பங்குபற்றி, தன் வாதமாக கூலி வேலை செய்து பிழைக்கும், பள்ளர் சமூகத்தில் பிறந்த திருநாளைப் போவார் நாயனார் என்ற நந்தனாருக்கு ஒரு ஒருநாள் அருகேயுள்ள திருப்புன்கூருக்குச் சென்று பெருமானை நேரில் கும்பிடவேண்டுமென்ற ஆசை பெருகியது. அன்பரின் ஆசை தீர்ப்பதற்கு பெருமான் நந்தியை விலகுமாறு செய்து நேரே தரிசனம் அளித்து எல்லோரும் சமம் என நிறுவினார் என்று பெருமையாக வாதிட்டார். முருகனுக்கு சிரிப்பு தான் வந்தது, தன் முறை வர, இவரை [எழிலரசியைச்] சொல்லி ஒரு குற்றமும் இல்லை. அவளுக்கு, அவள் வளர்ந்த முறையில் இவ்வளவு தான் தெரியும். என் அனுதாபம் அவளுக்கு என்று தொடங்கி, நந்தனார் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது. எனவே மனவருத்தத்துடன் இறைவனை மனமுருகி பாடினார். ஆனால் அந்த இறைவன் கூட உள்ளே வா என்று கூப்பிடவில்லை?? என்றாலும் நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்து, வெளியில் இருந்தே தன்னை பார்த்து வழிபடு என்றே பணித்தார் என்பது எழிலரசிக்கு எங்கே விளங்கப் போகிறது என்று அவளை அவன் உற்றுப்பார்த்தான். 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!' கம்பனின் பாடல் அங்கு இருவருக்கும் தெரியாமல் அரங்கேறியது. ஆமாம் அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன. அவன் தன்னை சமாளித்தபடியே, "நந்தியை விலத்தி-ஒரு அருள் காட்டியவனை-எனக்குப் புரியவில்லை? மந்தியின் துணைக்காக-ஒரு வாலியை கொன்றவனை-எனக்குப் புரியவில்லை?" "வருணத்தை காப்பாற்ற-ஒரு பக்தனை நீ அழைக்காதது-எரிச்சலை ஊட்டுகிறது! கருணைக்கு அகலிகை-ஒரு சீதைக்கு நீ தீக்குளிப்பு-எரிச்சலை ஊட்டுகிறது!" என்று சொல்லி முடித்தான். எங்கும் கைதட்டல். தன்னை அறியாமலே, எதிர் வரிசையில் இருந்தாலும், எடுப்பான தோற்றமும், வசீகரக் கவர்ச்சியும், கூறிய ஞானமும் கொண்ட எழிலரசி, முருகனிடம் சென்று வாழ்த்து கூறினாள். என் தாயும் உன் தாயும் யார் யாரோ? - உன்னை உயர்ந்தவள் என்கிறார்கள், என்னை தாழ்ந்தவன் என்கிறார்கள். என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானர்கள்? - தமிழ், தமிழன் என்ற உணர்வில் நாம் உறவினர்களே. எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்? சக மாணவன், மாணவி என்பதே எம் உறவு. செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே! இருவர் வாய்களும் தமக்குள்ள முணுமுணுத்தன. "யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே." முருகன் மற்றும் எழிலரசி இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக சொல்லக்கூடிய சூழல் அன்று இருக்கவில்லை. எனினும் இருவரும் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு சென்றதும், அவர்களுக்கு வெவ்வேறு பின்னணிகள் இருந்தபோதிலும், அவர்கள் சமூக நீதிக்கான பகிரப்பட்ட ஆர்வத்தில் ஆழமான தொடர்பைக் ஏற்படுத்திய காரணத்தாலும், அன்று மேடையில் சந்தித்த கண்கள் அவர்களை விரைவில் பிரிக்க முடியாதவர்களாக மாற்றியது. அவர்களின் அன்பு, உண்மையான மற்றும் தூய்மையானது, எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக மலர்ந்தது. இருப்பினும், அவர்களின் உறவின் கிசுகிசுக்கள் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்துக்கும் பரவியது. அது எழிலரசியின் குடும்பம் மற்றும் அவர்களின் உயர்சாதி சமூகத்தினரிடையே வெறுப்பைக் கிளறத் தொடங்கியது. அதே போல முருகன் குடும்பத்தினரும், உயர் சமூகத்தில் இருந்து வரக்கூடிய தொல்லைகள் குறித்து கவலையடைந்தனர். அவர்களின் காதல் ஒரு அச்சுறுத்தலுக்கு வந்தது அவர்களுக்கு சவால் செய்தது. சமூக அழுத்தம் மற்றும் ஆழமாக வேரூன்றிய சாதி வெறியால் எழிலரசியின் குடும்பம் அவர்களின் காதல் உறவை கடுமையாக எதிர்க்க தொடங்கியது. எழிலரசியை உடனடியாக தொடர்பை முறித்துக் கொள்ளுமாறு கோரினர். அது மட்டும் அல்ல, அவளுக்கு உடனடியாக தங்கள் சமூகத்துக்குள் வரன் பார்க்க தொடங்கியதுடன், தங்கள் பணம், சாதி செல்வாக்கால் முருகன் குடும்பத்துக்கு தொல்லைகளும் கொடுக்கத் தொடங்கினர். இருவர் குடும்பத்துக்குள்ளும் பதற்றம் அதிகரித்ததால், அவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இருவரும் சமூக பாகுபாடு இல்லாமல் தங்கள் காதல் செழித்து வளரக்கூடிய வெளிநாட்டு உலகம் ஒன்றில் அடைக்கலம் தேடி ஓட முடிவு செய்தனர். என்றாலும், அதற்கிடையில் முருகனின் குடும்பத்தை அவர்களின் குடிசையில் இருந்து அடித்து துரத்த எழிலரசியின் பெற்றோர்களின் சதி முருகனுக்கு தெரிய வந்தது. அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவனுக்கு இப்ப பெற்றோர்கள், அவனின் தங்கை தம்பி முக்கியம். அவன் எழிலரசியுடன், அவளின் பெற்றோர் பார்க்கும் இளைஞனை திருமணம் செய்து வாழும் படி புத்திமதி கூறினான். தான் அவளின் எண்ணத்துடனே, சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிக்க, சாதிக் கொடுமை சம்பவங்களை ஆவணப்படுத்தி, அந்தந்த அதிகாரிகளிடமும் புகார் செய்து, பரந்தபட்ட இயக்கம் ஒன்றை நிறுவி, அதற்கு தலைமை தங்கி இயங்கப் போவதாக கூறினான். அவள் எதுவும் பேசவில்லை. மௌனமாக இருந்துவிட்டாள். அது சம்மதத்தின் அறிகுறியா இல்லை கோபமா அவனுக்கு புரியவில்லை. முருகனின் முயற்சிகள் கவனிக்கப்படாமல் போகவில்லை, அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை இழந்துவிடுமோ என்று பயந்த உயர்சாதிக் குடும்பங்களுக்கிடையில் அவன் விரைவில் எதிரிகளை உருவாக்கினான். அவனுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன, சில சமயங்களில், அவனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ஆனால் முருகன் நீதி மற்றும் சமத்துவத்திற்கான தனது உறுதிப்பாட்டில் அசைக்காமல் உறுதியாக நின்றான். ஆனால் அதே நேரத்தில் எழிலரசி, பெற்றோர்கள் பார்க்கும் எந்த வரன்களையும் சம்மதிக்காமல் பிடிவாதமாக இருந்தாள். மணந்தால் முருகன் இல்லையேல் சாதல் - அது தான் அவளின் முடிவாகிற்று. ஒரு நாள் எழிலரசி முருகனை சந்தித்து தன் இறுதி முடிவை கூறினாள், தன்னால் இனிமேலும், பெற்றோரின் கட்டாய வேண்டுதலை தட்டிக் கழித்துக்கொண்டு வாழ முடியாது. தான் தற்கொலை செய்யப் போவதாக கூறிவிட்டு, உடனடியாக அவனை திரும்பி பார்க்காமலேயே புறப்பட்டாள். முருகனுக்கு இனிமேலும் அவளுக்கு ஆறுதல் கூறக் கூடிய நிலை இல்லை என்று புரிந்தான். அவளின் கையை ஓடிப்போய் பிடித்து, ஒரு முத்தம் கொடுத்தான். தானும் உன்னுடன் வருகிறேன். இருவரும் சாவில் இணைவோம். அங்கு சாதி இல்லை. அவள் அவனை பார்த்தாள். மீண்டும் 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!'. அது தான் அவர்களின் கடைசிப் பார்வை. "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" பிறப்பால் நான்கு பிரிவுகள் உண்டு. அவற்றில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேல்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான் என்ற ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் புறநானுறு 183, முருகன் மற்றும் எழிலரசி வாழ்வில் அர்த்தமற்று போயிற்று. இரு உடல்களும் ஒன்றாக ஒரு மரக்கிளையில் தொங்கிக்கொண்டு இருந்தன. ‘நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால் நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்றாம் என்பார் ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார் பாடை கட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்.‘ என்று பாரதி சொல்வது போல, இங்கே சாதி என்ற வெறி இருவரையும் பாடை கட்டி கொண்டு செல்ல வழிவகுத்து விட்டது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. "மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி........" "மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி தொட்டு உறவாட கேட்டு நிக்கிறேன்டி" "மொட்டு மலருதையா மெட்டு போடுதையா பொட்டு வைக்கத் தட்டு தேடுதையா" "நாட்டுப் பாடலில் நயமாகப் பாடுகிறேன்டி காட்டு வழியிலே விறகு பொறுக்கப்போறவளே" "வாட்டும் வெயில் உனக்குப் புரியாதாடா கட்டு விறகை வந்து சுமக்கமாட்டாயோ" "வெட்டிப் பேச்சில் வெகுளி காட்டுறாயடி குட்டைப் பாவாடையில் என்னை ஆட்டுபவளே" "கேட்காத இனிமை காதில் தருபவனே வாட்டாத நிலவு நானென்று தெரியாதோ" "ஒட்டி உடையில் பெண்மை சொல்லுபவளே கட்டி அணைக்க நெஞ்சம் துடிக்குதடி" "நாட்டி வளர்த்த காதல் எல்லாம் கூட்டிக் குழைத்து உனக்குத் தரவாடா" "தட்டிக் கேட்க துணையாய் வாறேன்டி ஒட்டி உரசி போவமா பெண்ணே" "மொட்டு விரிந்து வாசனை தரவாடா போட்டி போட்டு கொஞ்சிக் குலாவவா" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  19. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 01: முகவுரை "நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்; துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத் துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்." [மகாகவி பாரதியார்-] ஒரு மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ,ஒவ்வொரு நாள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ,முடிவற்ற பல நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டு அதனால் ஆளப்படுகிறான். நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம்.அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இல்லாத இடத்து மூடநம்பிக்கை(Superstition)யாகிறது. "யானையின் பலம் தும்பிக்கையிலே மனிதனின் பலம் நம்பிக்கையிலே" என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது? நம்பிக்கைகள் தாமே மனிதனை இயக்குகின்றன? இதை எவராலும் மறுக்க முடியாது?இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும்,திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் அறியாத நிலையிலும், மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே நம்பிக்கைகள்’ ஆகும். நம்பிக்கைகளின் நம்பகத் தன்மை, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் நம்பிக்கைகளை நம்பிக்கை(Belief) , திட நம்பிக்கை (Faith), மூட நம்பிக்கை(Superstition) என்று வகைப்படுத்தலாம் காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை (Belief) என்றும், நிச்சயம் பலன் உண்டு என்ற உறுதியான நம்பகத் தன்மையைக் கொடுப்பதைத் திட நம்பிக்கை (Faith) என்றும் (நான் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவது), காரண காரியம் அறியப் படாத நிலையில் உள்ளதை மூட நம்பிக்கை (Superstition) என்றும் குறிப்பிடுவதுண்டு. பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன. வெவ்வேறு கலாச்சாரம்[பண்பாடு ] வழிவழி வந்த மாறுபட்ட மூட நம்பிக்கைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக, ரோம,கிரேக்க நாகரீக மக்கள்,இயற்கை நிகழ்வுகள் கடவுளின் செயலே என நம்பினர்.அதனால் ஏற்பட்ட கடவுள் மேல் உள்ள பயமே[deisidaimonia:in a good sense reverencing god or the gods, pious, religious in a bad sense superstitious religious or The fear of supernatural powers ] ,ரோமர்கள் மூட நம்பிக்கை என கருதியது. மேற்குலக சில நம்பிக்கைகள் உண்மையிலே பெரும் அழிவை ஏற்படுத்தயுள்ளது.இங்கிலாந்தில் பூனை ஒரு சூனியகாரியாக கருதியது[cats were witches] ,அதனால் பூனைகளை சாக்கொண்டது /அழித்தது ,எலி தனது தொகையை பெரும் அளவு அபிவிருத்தி செய்ய உதவியது.இதனால் 1665-1666இல் கொள்ளை நோய்[Plague/பிளேக்நோய்.] வந்து 100,000 மக்களை பலி கொண்டது எல்லோருக்கும் இன்னும் நினவு இருக்கலாம்?மேலும் மேற்குலகில் முதலிடம் வகுப்பது இலக்கம் 13 ஆகும்,அதனுடன் வெள்ளி கிழமை சேர்ந்தால் அது மேலும் மோசமாகிறது.அப்படியே விரலை குறுக்கே வைப்பதும்["crossing fingers"], சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பதும் ஆகும். பொதுவாக பல மூட நம்பிக்கைகள் சமயத்துடன் தொடர்புடையவை .உதாரணமாக தாயத்து[Talisman/மந்திரக்காப்பு] கட்டுதல் போன்றவையாகும் .இந்தியாவிலும் மற்றும் தமிழர்களுக்கிடையில் நிலவும் பொதுவான மூட நம்பிக்கைகளை நாம் சங்க பாடல்களில் காணக்கூடியதாகவும் உள்ளது. ஒரு மனிதனுக்கு நீரழிவு நோய் இருப்பதை அறிய[screening diabetes] எப்படி இரத்த பரிசோதனை செய்கிறோமோ அப்படியே ஒரு தமிழ் குடும்பத்தில்,கல்யாண பொருத்தம்,இருவரினதும் சாதகம் பரிசோதனை[horoscope matching] மூலம் அறியப்படுகிறது. இந்த சோதிடம்[astrology] பிள்ளைக்கு பெயர் வைப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என்பதால். காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம் என்பதால்.அது போல, இரவில் நகம் வெட்டக் கூடாதும் ஆகும். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்.தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும்? . இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!எப்படியாயினும் சங்க காலத்திலேயே தமிழன் இதை,இப்படியான மூட நம்பிக்கைகளை நம்ப தொடங்கி விட்டான். ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந்தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது.இடைக்காட்டுச்சித்தர் தன் ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர், "6௦" ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.பெண்பால் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர் என்று சங்க பாடல் கூறுகிறது .மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் நம்பினர் . "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி"-- பட்டினப்பாலை. இப்படியாக இன்னும் கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டுநம்பிக்கைகளுடனும் மனிதன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும் [முகவுரை தொடர்கிறது]
  20. "குறள் 1163" "இளமை பருவம் அழகு கூட்ட இச்சை கொண்டு மனது ஏங்க இளைஞன் ஒருவன் நட்பு வேண்ட இணக்கம் சொல்லி காதல் வளர்த்தேன்!" "இதலை அவன் கை வருட இயைந்து நானும் விட்டுக் கொடுக்க இன்பம் தூய்த்து இருவரும் மகிழ இதழ் கொஞ்சி மனையாள் என்றான்!" "இதயம் இரண்டும் ஒன்று சேர இமைகள் நான்கும் மூடாமல் இருக்க இரத்த உறவுகள் சம்மதம் தர இல்லத்து முன்றலில் தாலி கட்டினான்!" "இடம் தேடி பொருள் சேர்க்க இரவு பகலாய் தனிய விட்டு இரக்கம் அற்ற காமம் சூழ இரதம் ஏறி பிரிந்து விட்டான்!" "இமயவன் ஆலய காவடி போல இச்சை வெட்கம் இரண்டும் தொங்கி இரு பக்கமும் சுமைகளாய் அழுத்தி இடையை ஒடித்து என்னை கொல்லுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. "புரிதலின் போது" "புரியாத கர்வம் பலரைத் தள்ளிவைக்கும் அறியாத உண்மை உன்னைச் சிதைத்துவிடும் நெறியான வாழ்வு இல்லாமல் போய்விடும் 'புரிதலின் போது' எல்லாமே தேடிவரும்!" கதிரழகி ஒரு அழகின் தரிசனம். அவளுடைய இருப்பு எவரையும் சலிப்படைய முடியாதவாறு, அது எந்த இடமாக இருந்தாலும் அதை ஒளிரச் செய்வது, அவளுடைய அற்புதமான உடல் அம்சங்கள் அவளைப் பார்த்த அனைவரையும் கவர்ந்திழுக்கும். தினமும் காலையில், அவள் தன் உருவத்தை கண்ணாடியில் பார்க்கிறாள், அது அவளுக்கு ஒரு மகிழ்ச்சி, ஒரு தற்பெருமை! அவளது தோள்களின் மேல் படர்ந்திருக்கும் அவளது நீளமான, கருமையான கூந்தலையும், அவளது பெரிய, மான் போன்ற மயக்கம் தரும் கண்களையும், அவளது குறைபாடற்ற உடலின் முழுத் தோற்றத்தையும் மீண்டும் மீண்டும் பார்க்கிறாள். அதில் அவளுக்கு சொல்லென்ன இன்பம். அவள் தன் வளைந்த புருவங்களைப் பார்க்கிறாள். அது அம்பை எய்வதற்க்காக வளைக்கப்பட்ட வில்லைப் போல நினைக்கிறாள், தன் விழி அம்பில் எத்தனை பேர் சுருண்டு விழுந்தார்கள் என எண்ணும்பொழுது, அவள் தற்பெருமை கொண்டாள். தன்னை இளவரசியாக எண்ணி எண்ணி, தன் அழகைக் கிரீடமாக தன் தலையில், தானே சூட்டினாள். அவள் கொஞ்சம் தன் கண்களில் இருந்து மெல்ல மெல்ல தனது விம்பத்தை கீழ் நோக்கி மேயத் தொடங்கினாள். தன் மார்பங்களை மறைத்திருக்கும் ஆடையைப் பார்க்கிறாள். அது மதயானைக்கு அணியப்படிருக்கும் முகத்திரையைப் போல் அவளுக்குத் தோன்றியது. எத்தனை ஆண்களின் பீறிட்டுக் கிளம்பும் தீவிர காம உணர்வுகளை அது தடுத்திருக்கும். அப்பொழுது அவளுக்கு திருஞான சம்பந்தர் ஒருமுறை தான் வணக்கும் தேவலோக உமாதேவியாரைப் பற்றி கூறியது ஞாபகம் வந்தது. "மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும்" கற்றையாகச் செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும், ஒளி சேர்ந்த நுதலையும் [நெற்றியையும் ], மான்விழி போன்ற விழியையும் உடைய மங்கையென வர்ணித்தது தான் அது. ஆனால் அவளுக்கு அவளின் அழகு முன் உமாதேவி எங்கே என்ற எண்ணம் தான் வந்தது. அவள் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். அது தான் அவளின் புரிதல் அப்பொழுது! அழகான தோற்றம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அது ஓர் இயற்கையான உணர்வு. இள வயது பெண்களுக்குச் சிக்கென்ற உடல், பளபளப்பான முகம், பட்டுக் கூந்தல், வெள்ளை நிறம் தான் அழகு என்கிற எண்ணம் மிகச் சிறிய வயதிலேயே பெண் குழந்தைகள் மனதில் விதைக்கப்படுகிறது. அதில் அவள் விதிவிலக்கல்ல. இனிய புன்னகை, கருணை கொண்ட மனம், உதவ நீளும் கரங்கள், சோர்ந்திருக்கும் மனதிற்குத் தரும் இதமான அன்பு, ஆரோக்கியமான மனம், உடல் எல்லாமே அழகு. இதற்கெந்த ஒப்பனையும் தேவை இல்லை. அந்த நிமிடத்தை அழகாக்கும் அனைத்துமே அழகுதான். நான் என்பது கண்ணாடியில் தெரியும் உருவம் அல்ல. நான் என்பது எனது நம்பிக்கை, எனது திறமை, எனது தோற்றம், எனது எண்ணங்கள், எனது செயல்பாடு அனைத்துமே தான். ஆனால் இந்த "புரிதலின் போது" தான் உண்மையில் மனிதன் விழித்தெழுகிறான் என்பதை அவள் உணரும் பக்குவத்தில் இன்று இல்லை. சிறுவயதிலிருந்தே கதிரழகி தன் அழகே தனக்குப் பெரிய சொத்து என்று நம்பினாள். தன்னழகைப் பார்த்து, அதிசயித்து,ஆராதித்த தன் இளமை பூரிப்பு, பின் ஒரு காலம் குறைந்து போகும் என்ற உண்மையை இன்றைய "புரிதலின் போது" அவள் அறியவில்லை. அறியும் பக்குவத்தில் அவள் இருக்கவில்லை, அவளின் கர்வம், ஆணவம், செருக்கு அதற்கு இடமளிக்கவில்லை. "அலையாடும் அழகு குமரியின் வனப்பே விலையற்ற அவளின் கவர்ச்சிச் சிரிப்பே! உலை வைக்கும் மங்கையின் கண்ணே அலை எடுத்து எவரையும் மயக்குமே!" இப்படித் தான் கதிரழகி தன்னை நினைத்துக் கொண்டாள். என்றாலும் பெண்ணின் பருவம் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவமாகும் என்ற "புரிதலின் போது" தான் அவள் உண்மை உணருவாள் என்பதை அலட்சியமாகப் பார்த்தாள். அவளின் எல்லையில்லா அழகால், ஆண்கள் பலர் அவளை நேசித்தார்கள், நண்பர்கள் அவளைப் பாராட்டினர், அந்நியர்களால் கூட அவளை உற்றுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஆயினும் கூட, அவள் தன்னை அணுக முயற்சிக்கும் ஒவ்வொரு இளம் ஆண்களையும் தகுதியற்றவர்களாகக் கருதினாள், அவர்களை வெறும் அபிமானிகள் என்று ஒதுக்கித் தள்ளினாள் - அவளுடைய சொந்த மனதில். "ஆண்கள் என்னைப் போற்ற வேண்டும். என்னுடன் பேசுவதற்கு கூட அவர்கள் ஒரு அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும் " என்று செருக்காக நினைத்தாள். ஒரு நாள் மாலை, அவளுடைய நெருங்கிய தோழி மீரா அவளுடன் தேநீர் அருந்தும் போது,“ ஹாய் கதிரழகி, நீ மிக அழகாக இருக்கிறாய். ஆனால் அழகு தான் முக்கியம் என்று நினைக்கிறீயா?. எனக்குத் தெரியும் நீ: 'மிடித்தவர் களைப்பொருள் மிகுத்தவர் வினைத்தொழில் விளைப்ப தெனவே கொடிப்படர் பொருப்பென இடைக்கிடர் விளைத்தன கும்ப வழகும் தடித்தின டிநிற்கும்இ ரதத்தைநி கர்பொற்கடி தடத்தி னழகும் பொடித்தெழு வெயர்த்திரு முகத்தழ குமுற்றொளி பொழிந்தொ ழுகவே.' வறுமையுற்றவர்களைப் பெருஞ்செல்வர்கள் கண்டு மிகவுந் தொழில் புரிவித்து வருத்துவதுபோல், ஒரு கொடிமேல் தங்குகின்ற இரண்டு மலைகள் போன்று இடைக்குத் துன்பம் விளைக்கின்ற தனக் குடத்தின் அழகையும், ஒரு மின்னலின் அடியிலே நிற்கிற தேரைப்போன்ற அழகிய அல்குலின் அழகையும், பொடிப்பொடியாக எழுகின்ற வியர்வைத் துளிகள் பொருந்திய திருமுகத்தின் அழகையும், ஒன்றாக நிறைவு பெற்று ஒளி ததும்பும் வடிவத்தையும் கொண்டுள்ளாய் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. என்றாலும் உன்னை நாடி வரும் எத்தனையோ இளம் ஆண்களை நீ திரும்பியே பார்க்காமல் தள்ளி வைக்கிறாய்? - அவர்களில் பலர் நல்லவர்கள், கனிவானவர்கள். என்றாவது ஒரு நாள், உன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவனை நீ சந்திக்கலாம், ஆனால் அவன் உன் அழகை விட, உன்னை அதிகமாக பார்ப்பாரா என்பதை யோசி ?" என்றாள். ஆனால், கதிரழகி, கையைக் காட்டி, அதை நிராகரித்து சிரித்தாள். “ஐயோ, மீரா, அப்பாவியாக இருக்காதே. நான் எவ்வளவு அழகு என்பதில் தன்னை இழந்து, என்னைப் போற்றும் ஒருவனை நான் கண்டுபிடிப்பேன். நீங்கள் அழகாக இருக்கும்போது ஆண்களை கட்டுப்படுத்துவது எளிது. நான் ஏன் அதைவிட குறைவான ஒன்றில் திருப்தி அடைய வேண்டும்?" என்று கேட்டாள். ஆண்டுகள் கடந்தன, அவளை ரசித்த ஆண்கள் ஒவ்வொருவராக அவளை விட்டு நகர்ந்தனர். அதில், எப்பொழுதும் ஆழ்ந்த அனுதாபத்தைக் காட்டும் இரக்கமுள்ள இளம் மருத்துவர் அறிவழகன் இருந்தான். கதிரழகி அவனின் கம்பீரத்தையும் அறிவையும் போற்றினாலும், அவனிலும் தன் காதலில் ஒரு சலிப்பாகக் கண்டாள், அவளுடைய கவர்ச்சியான அழகுக்கு அவன் சாதாரணமே என்று கருதினாள். அவன் அவளிடம் தன் காதலை முன்மொழிந்த போது, அவள் வெறுமனே புன்னகைத்து, "நான் உன்னைவிட தகுதியானவனை பெறக்கூடியவள்" என்று பதிலளித்து நிராகரித்தாள். பின்னர் கவின், ஒரு நிலையான வேலையுடன், ஒரு கனிவான இதயத்துடன் மற்றும் மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்ட ஒரு பொறியியலாளர் ஆவான். அவன் கனவுகள் எல்லாம் அவளை திருமணம் செய்து அவர்கள் ஒன்றாக, எல்லோராலும் மதிக்கக் கூடிய ஒரு குடும்ப வாழ்வை கட்டியெழுப்புவது ஆகும். ஆனாலும், கதிரழகி முன்போலவே, அவனை "மிகவும் கனிவானவனாகப் " பார்த்து, "எனக்கு உலகிற்கு கட்டளையிடக்கூடிய ஒருவன் தான் வேண்டும்," என்று அவனைத் திருப்பிவிட்டாள். கூரிய மனமும், வாழ்க்கையின் உண்மையான ஆர்வமும் கொண்ட, மதிப்பிற்குரிய பேராசிரியரான நற்சீலனாலும் கூட அவளது கவனத்தை ஈர்க்க முடியவில்லை. "அவன் ஒரு சிந்தனையாளர், ஆனால் அவனுக்கு பெரியளவு வசீகரம் இல்லை," என்று அவள் நினைத்தாள். அவளின் ஒவ்வொரு மறுப்பிலும், ஒவ்வொரு கோரிக்கை நீக்கத்திலும், அவள் உண்மையான அன்பு மற்றும் தோழமைக்கான மற்றொரு கதவை மூடிக்கொண்டே இருந்தாள். ஆண்டுகள் உருண்டோடின, கதிரழகி பாராட்டுதலும் அழகும் நிறைந்த தன் சொந்த உலகில் தொடர்ந்து வாழ்ந்தாள். ஆனால் படிப்படியாக, அவள் மாற்றங்களை கவனிக்க ஆரம்பித்தாள். ஒரு காலத்தில் அவளைச் சூழ்ந்திருந்த நண்பர்கள் இப்போது தங்கள் தங்கள் "புரிதலின் போது" உண்மை அறிந்து, உலகம் அறிந்து, திருமணமாகி, குடும்பங்களை உருவாக்கி, தங்கள் வாழ்வை இன்பமாக மகிழ்வாக புரிதலுடன் அமைத்து வாழ்வதைக் கண்டாள். ஒருமுறை அவள் தன் அழகின் பெருமையால் தற்பெருமை கொண்டு, அதனைத் தன் கையில் எடுத்து, தன்னை நாடி வந்த இளம் ஆண்களை புறக்கணித்து, அவர்களை எதோ ஒரு வகையில் ஏளனம் செய்த அவளின் திவீரம் மங்கத் தொடங்கியது. அவளது இதயம், ஒரு காலத்தில் பெருமிதமாகவும், நிறைந்ததாகவும் இருந்தது, ஆனால் இப்போது வெற்று மற்றும் நிச்சயமற்றதாக உணர்ந்தது. இந்த நிலையில்‌ அவள் இதயத்தில் அழகு தானேயென்று குடியிருந்த அவளது மாயைத் தோழி, காதலி, சிநேகிதி வெளியே வந்தாள். கதிரழகியின் தோற்றத்திலே புலப்பட்ட சோர்வு அவள்‌ கண்ணை உறுத்துகிறது; "ஏன் இப்படி இருக்கிறாய்‌?" என்று அந்தரங்கமாகக்‌ கேட்டாள். அதற்கு கதிரழகி பதில் சொல்ல எண்ணுகிறாள்‌. வார்த்தை அவளுக்கு வரவில்லை; அவளுக்குத்‌ துக்கம்‌: பொங்குகின்றது. முதல்‌ நாள்‌ வாங்கி வைத்த வெற்றிலை இன்று வாடிப் போயிற்று; அரைத்து வைத்த சந்தனம்‌ உலர்ந்து போயிற்று; இறை வானத்திலே செருகி வைத்த பூ. குருவி கொத்தியதால்‌: அழகு குலைந்து விட்டது. இப்படித்தான் தானும் நாள்ப்பட ஆகிவிட்டேன். "புரிதலின் போது" தான் தன்னை, இளமை அழகின் உண்மையை, அறிந்துவிடேன். இந்தக்‌ குறைகளைத்தான்‌ .. வெளிப்படையாகச்‌ சொல்லலாம்‌ என்று நினைக்கிறாள்‌. எல்லாவற்றையும், அவள்‌ தன்னை அறியாமலே கவிதையில், சேர்த்து தன் இதயத்துக்குப் பாடி விடுகிறாள்‌: "வாட வெத்தலை வதங்க வெத்தலை வாய்க்கு நல்லால்லே நேத்து வச்ச சந்தனப்‌ பொட்டு நெத்திக்கு. நல்லால்லே குருவி கொத்தின அரளிப்‌ பூவு கொண்டைக்கு நல்லால்லே . மாமன்‌ வந்து தோப்பிலே நிக்குது மனசுக்கு நல்லால்லே" என்றாலும் கடைசி வரியில் "மாமன்‌ வந்து தோப்பிலே நிக்குது மனசுக்கு நல்லால்லே" என்று தன்னைத் தேடி, ஒருவன் காத்து நிற்கிறான், ஆனால் தன் மனசுக்குத் தான் நல்லா இல்லை என்று ஒரு போடு போட்டும் பாடினாள். ஒரு நாள் மாலை, தன் அறையில் தனியாக அமர்ந்திருந்த போது, கடிதங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் அடங்கிய பழைய பெட்டியை திறந்து பார்த்தாள் கதிரழகி. அவற்றில், அவள் பகலவனிடமிருந்து ஒரு குறிப்பைக் கண்டாள், அது நேர்த்தியான கையெழுத்தில் எழுதப்பட்டது: "என் அன்பான கதிரழகிக்கு, என் இதயத்தில் உள்ள அன்பை, கருணையை நீங்கள் காண்பீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் நான் உன்னை, மற்றவர்களைப் போல இல்லாமல், மதிப்பாக கருதுகிறேன். ஆனால் உன்னுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நான் என் வாழ்வை, என் மதிப்புகளுக்கு ஏற்றவாறு என்றும் வாழ்வேன், நீ என்னை ஏற்காவிட்டாலும் நான் அதை புரிந்துகொள்வேன். நீயும் உன் விருப்பப்படி மகிழ்வாக வாழலாம் அன்புடன் பகலவன்" அந்த வார்த்தைகளைப் படித்ததும் அவளுக்குப் பரிச்சயமில்லாத வருத்தம் ஏற்பட்டது. இந்த ஆண்கள், அன்று அவளுக்கு பொருத்தமானவர்கள் இல்லை என்று தன்னாலேயே புரிதலின்றி தள்ளிவிடப் பட்டவர்கள் என்பதை அவள் உணர்ந்தாள். ஆனால் இன்று அவள் அடையாளம் காணத் தவறிய ஒன்றை அவள் கண்டாள்: அது 'புரிதல், இரக்கம் மற்றும் சொந்தமான உணர்வு' ஆகும். ஒரு அமைதியான மதியம், அவள் தன் நண்பி மீராவுடன் அமர்ந்து தேநீர் பருகினாள். “மீரா,” கதிரழகி தயக்கத்துடன் தொடங்கினாள், “நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? ஒரு வேளை நான் ... என் பெருமையையும் அழகையும் முன்னிலைப்படுத்தி, அன்பின் வழியின் கதவை மூடிவிட்டனா?”என்று கேட்டாள். மீரா பெருமூச்சு விட்டு கதிரழகியின் கையை தன் கையால் வருடினாள். “ஆம், நண்பரே, நீங்கள் செய்தீர்கள். அழகு என்பது ஒரு பரிசு, ஆனால் அது ஒரு நபரை அன்பாக ஆக்குவது அல்ல. நீங்கள் நிராகரித்த பல மனிதர்கள், உங்களை கட்டாயம் நேசித்திருப்பார்கள், அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை." என்றாள். கதிரழகியின் கண்களில் கண்ணீர் பெருகியது, அவளுடைய பெருமை கரைந்தது. “ஆனால் இப்போது ... நான் தனியாக இருக்கிறேன் மீரா. முப்பது வயதாகியும், என்னை அன்புடன் பார்க்கும் ஒரு ஆண் கூட இன்னும் இல்லை. நான் யாரையாவது கண்டுபிடிக்க மிகவும் தாமதமாகிவிட்டதா?" என்று கேட்டாள். மீரா ஆறுதலான புன்னகையை வழங்கி அவள் கையை அழுத்தினாள். “கதிரழகி, புரிதல்தான் மாற்றத்தின் முதல் படி. ஆம், ஒருவேளை உங்கள் இளமைப் பருவத்தில் சில புரிதலில்லா காரணங்களால் அது நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால் உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் இந்த "புரிதலின் போது" ,பெருமையை விட்டுவிட்டு, உங்கள் அன்பான உண்மையான இயல்பை மக்களுக்கு காட்டினால், உங்கள் தோற்றத்திற்கு மேலாக உங்களை நேசிக்கும் ஒருவரை நீங்கள் இன்னும் காணலாம். அது கட்டாயம் நடக்கும்" என்றாள். "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது." நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  22. "கனகம்மா" அத்தியடி, யாழ்ப்பாணத்தில் கந்தையா & கனகம்மா குடும்பம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும், 1971 ஆம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளாலும், அதைத்தொடர்ந்து 1983 தமிழருக்கு எதிரான ஜூலை கலவரத்தாலும் அவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்புக்காகவும், அமைதியான சூழலுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மெல்ல மெல்ல இலங்கை நாட்டை விட்டு வெளிக்கிடத் தொடங்கினர். அப்படியான ஒரு கால கட்டத்தில் தான், குடும்பத் தலைவன் கந்தையாவும் திடீரென ஒரு நாள், 18/02/2000 இல் மாரடைப்பால் காலமாகிவிட்டார். இனக்கலவரம் பெரும் போராக வெடித்த காலம் அது. கிழக்கு வடக்கு மாகாணம் எங்கும் ஒரு பாதுகாப்பற்ற சூழல். தனித்துப்போன கனகம்மா, தன் இளைய மகளுடன் அத்தியடியிலேயே வாழத் தொடங்கினார். தொடக்கத்தில் போரின் பாதிப்புகள் குறைவாக இருந்ததாலும், தட்டுப்பாடுகள் அவ்வளவாக பாதிப்பு அடையாததாலும் வாழ்வு ஓரளவு சமாளிக்கக் கூடியதாக இருந்தது. என்றாலும் வேலைகளுக்கு போய் வருவதும், பாடசாலைக்கு போய் வருவதும் பல இடர்பாடுகளை சந்தித்தது. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பயம் பொதுவாக எல்லா வடக்கு கிழக்கு மக்களிடமும் இருந்தது. இனப் போரின் திவீரமும் அதனால் தட்டுப்பாடுகளும் போக்கு வரத்துக்களும் பிரச்சனைகளுக்கு உள்ளாக, குடும்பத்துக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. பிள்ளைகளின் படிப்பை தொடரவேண்டும், அதேநேரம் பாதுகாப்பும் வேண்டும் தாயையும் பார்க்கவேண்டும் போன்ற சுமைகள் ஒருபக்கம். இவற்றை ஓரளவு சமாளிக்க யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்புக்கு போகவேண்டும் என்று இளைய மகளும், தான் பிறந்த மண்ணை விட்டு வரமாடடேன் என்று தாயும் இரு வேறு திசையில் இருந்தார்கள். மகளின் தற்காலிக முடிவு நல்லதாக இருந்தாலும், பிறந்த மண்ணில் தாய் கொண்ட பற்று இழுபடியை கொடுத்தது. கனகம்மா, மகள் குடும்பம் கொழும்பு போவதைத் தடுக்கவில்லை, ஆனால் தன்னை பார்க்க வேலைக்கு ஒரு ஆளை ஒழுங்குபடுத்தி, தன் அத்தியடி வீட்டிலேயே, தன்னை விட்டு விட்டு போகும்படி எந்த நேரமும் கேட்டுக் கொண்டே இருந்தார். அச்சுவேலி, இடைக்காட்டை பூர்வீக இடமாக கொண்ட , ஆனால் அத்தியடியில் 1917 இல் பிறந்து வளர்ந்த கனகம்மா, எட்டுப்பிள்ளைகளின் தாயாக இருந்தாலும், இரண்டு பிள்ளைகள் இளம் வயதிலேயே காலமாகியும், ஐந்து பிள்ளைகள் ஒவ்வொருவராக தங்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு போனதாலும், மிஞ்சி இருக்கும் இளைய மகளின் அரவணைப்பும் பாதுகாப்பும் அவசியம் என்பதை அறியாதவர் அல்ல கனகம்மா. பணம் அவருக்கு பிரச்சனை இல்லை. அவரின் பிரச்சனை தன் வீட்டை, மண்ணை விட்டு வெளியே போவது தான். கனகம்மா அதே சிந்தனை, அதனால் அவரின் கவலையும் அதிகரித்து, அவரின் முகத்தின் செந்தளிப்பும் குறையத் தொடங்கியது. அரசை, அரசியல்வாதிகளை தன்பாட்டில் திட்டுவார். சிலவேளை முற்றத்து மண்ணைத் தூக்கி எறிவார். கனகம்மாவின் போக்கு ஒரு வித்தியாசமாக மாறிக்கொண்டு இருந்தது. கணவனின் மறைவிற்கு பிறகு, அவரின் வாழ்வில் ஒரு கை முறிந்தது போல உணர்ந்தார். ஆனால் அவரின் மருமகன் அந்தக்குறையை விடாமல், தேவையான வெளி உதவிகளை அன்பாகவும் ஆதரவாகவும் செய்தார். ஆகவே கனகம்மாவிற்கு பெரும் பிரச்சனை என்று ஒன்றும் இருக்கவில்லை, முதுமையும் கவலையும் தான் அவரை வாட்டிக் கொண்டு இருந்தது. யாழில் அடிக்கடி நடைபெறும் ஆகாயத்தில் இருந்து குண்டு வீச்சிலும், கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதலும் மற்றும் படையினரின் கெடுபிடிகளும் கனகம்மாவின் இளைய மகளுக்கு எப்பவும் ஒரு பதற்றத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது. அது ஞாயமானது கூட. எவ்வளவு கெதியாக வடமாகாணத்தை விட்டு வெளியே போகவேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருந்தார். ஆனால் தாயின், கனகம்மாவின் பிடிவாதம் தளர்ந்த பாடில்லை. தாயை தனிய விட்டு விட்டு போகவும் மனம் இல்லை. முதியோரின் தனிமை எவ்வளவு கொடுமை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஒரு காலத்தில், புதிதாக வீட்டுடன் அணைத்துக் கட்டிய புதுவிறாந்தை முழுவதும் பொயிலை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதன் மேல் ஏறி, தம்பி இருவருடனும் விளையாடும் போது வாங்கிய அடிகள் எத்தனையாக இருந்தாலும், 'அம்மா, கனகம்மா என்றும் எங்களை மிக அன்போடும் ,கண்டிப்போடும் வளர்த்திருந்தாள். பிள்ளைகளை கண்ணுங்கருத்துமாக வளர்த்து கரை சேர்த்திருந்தாள்' .... மகள் அதை முணுமுணுத்தபடி வானத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும்? பேரப்பிள்ளைகளின் உலகத்தில் கனகம்மா ஒரு குழந்தையாகவே மாறிப் போவாள். கனகம்மாவிடம் அன்பு எவ்வளவு இருந்ததோ அந்த அளவு வைராக்கியமும் இருந்தது. அது மட்டும் அல்ல, அவரது வார்த்தைகள் உச்ச ஸ்தாயில் [மண்டிலத்தில்] வெளிப்படும் தன்மை கொண்டவை. எனவே அந்த பேச்சை கோபப் பேச்சாக புரிந்து கொண்ட உறவுகளும் இல்லாமல் இல்லை. அந்த இரண்டும் தான் அவரின் குறைபாடு என்று சொல்லலாம். கனகம்மா இப்ப அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த வாசகம் படுக்கையில் போட்டு வதைக்காமல், இவங்களின் கெடுபிடியால் அகப்படாமல், சீக்கிரமே போயிரணும். வீட்டின் வளவில் பதுங்கு குழிகள் கட்டி இருந்தாலும், கனகம்மா அங்கெல்லாம் போகமாட்டார். அப்படியான சூழலில் அத்தியடி பிள்ளையாரையும் நல்லூர் முருகனையும் திட்டித் தீர்த்துவிடுவார். கந்தையா இறந்ததிலிருந்து கனகம்மா தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள். பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கோணல் பார்வைகளுக்கு இரையாவதை விட தனிமையில் அமைதி பெறுவதையே அவர் அதிகமாக விரும்பினார். ஒரு சில நேரங்களில் பழைய நினைவலைகளில் சிக்கி, அவளுக்குள்ளேயே ஒப்பாரிவைத்து அழுவதும் உண்டு. ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப் பட்டு விடும் என ஏங்க தொடங்குவதும் அவர்களின் உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். அதனை கனகம்மாவின் இளைய மகள் நன்கு உணர்ந்தவர். அது தான் அவரை விட்டு விட்டு போகாமல் இன்னும் அத்தியடியிலேயே இருந்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம்.அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா? "இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே" இங்கே முதல் பதினொரு அடிகளில் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்விட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில் ... "பூண் சூட்டிய நுனியை யுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து , இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும் , முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார். அப்படித்தான் கனகம்மா இன்று இருக்கிறார். என்றாலும் அவர் எந்த வயதிலும் மறக்காத சில இருக்கிறது. அதி காலை கிணற்றில் அள்ளி முழுகி, ஞாயிறு உதிக்கையில் சூரிய நமஸ்காரம் செய்வதும், புராணங்களில் இருந்து சில, தனக்குப் பிடித்த உதாரணங்களை தகுந்த இடத்தில் பொருத்தமாக கூறுவதும், பேரப்பிள்ளைகள் தமிழை மறக்காமல், தமிழ் பண்பாட்டை அறிந்து போற்றி வாழவேண்டும் என்ற விருப்பமும் ஆகும். மழையற்றுப் போக சூரியனின் வெப்ப சக்தியால் காடுகளும் அழிந்து நிலம் காய்ந்து வெடித்துப் பாலை நிலமாய் மாற உலகம் துன்புற்றது. அது சூரிய வழிபாட்டிற்குக் காரணமாயிற்று. “………………………… ஓங்கு திரை முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி ஏமுற விளங்கிய சுடரினும்” என மதுரை மருதன் இளநாகனார் சூரியனும் பழந்தமிழர் வழிபட்ட தெய்வமாக இருந்ததைக் கூறுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது என்றாலும் மூத்த மகளும் நாலாவது மகன் குடுப்பத்துடனும் 2003 யாழ் போனபோது, மூத்தமகள், நாலாவது மருமகள், இளைய மகள் எல்லோரும் சேர்ந்து கனகம்மாவுடன் கவனமாக எடுத்து உரைத்ததின் பலனாக இறுதியில் ஒருவாறு அத்தியடியை விட்டு நகர ஒத்துக்கொண்டார். மனிதரின் வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டமும் பலவிதமான உறவுகள் கடந்து சென்று கொண்டே தான் இருக்கும். ஒவ்வொன்றும் அன்பு, பாசம், நேசம், துன்பம், களிப்பு என்று மனதில் தோன்றும் மொத்த உணர்வுகளையும் உள்ளடக்கியதாய் இருக்கும். எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மாவுக்கும் பிள்ளைக்குமான உறவுக்கிடையேயான பந்தம், மற்ற எல்லாவற்றையும் விட மேலானது. வாழ்வின் பாதையில் ஆயிரம் பேர் வந்தாலும் இவர்கள் இருவருக்குமிடையேயான மனது மட்டும் அருகருகே அமர்ந்து மற்றவர்களை வேடிக்கை பார்க்கும். அவ்வளவு எளிதில் இந்த உறவுக்கயிற்றை வெட்டிவிட முடியாது. அதனாலதான் கனகம்மா இறுதியில் சம்மதித்தார் போலும். என்றாலும் சுவருடன் சாய்ந்து தன் முகத்தை சுளித்து தன் வெறுப்பையும் கோபத்தையும் காட்டிடத் தவறவில்லை. அது அவரின் இயல்பான குணம். அதை யாராலும் மாற்ற முடியாது. "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே .... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா - என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா" "என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா .... நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா - என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.