Everything posted by செவ்வியன்
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
எம்மதமும் சம்மதம் என இருப்பவருகளுக்கு பிரச்சனையில்லை, திருமணம் செய்ய நீ என் மதத்திற்கு மாறவேண்டும் என நினைப்பதாலயே இப்பிரச்சனை.
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
தமிழருக்கும் சிங்களவருக்குமான கலப்பு பலகாலமாகவே இருந்துள்ளது, மரபணு ஆய்வறிக்கைகளும் அதையே கூறுகின்றன. இருவரும் பிறரது பின்புலத்தை மதித்து, விரும்பி செய்தால், இது நல்ல விடயமே.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
தவறான தகவல், பாஜக தனித்து போட்டியிட்டே தன் முதன் சட்டமன்ற தொகுதியை வென்றது, அதிமுக கூட்டணியில் முதன் பாராளுமன்ற தொகுதியை வென்றது. பின்னர் தான் திமுகவுடன் கூட்டணி. அதற்கு பிறகு கூட, திமுக, அதிமுக அல்லாது பிற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பாராளுமன்ற தொகுதியை வென்றுயிருக்கிறது
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
இது மிகவும் தவறான அபாயகரமான கருத்து, ஆணோ பெண்ணோ திருமண ஒப்பந்தத்தை மீறும் போது உரிய சட்ட நடவடிக்கையோ அல்ல விவாகாரத்தையோ பெற்று அவரவர் வாழ்க்கையை வாழ முயல வேண்டும். இதில் சிலருக்கு மனக்காயங்கள், பொருளாதார சங்கடங்கள் ஏற்படும் ஆனால் அதற்கு ஒருவரது உயிரை பறிப்பது பெரும் குற்றம் மற்றும் யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படப்போவதும் இல்லை. அப்பெண்ணின் பக்க உண்மைகளோ, நியாயமோ இனி தெரியப்போவதில்லை, உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கும் இம்மாதிரியான குற்றநடவடிக்கைகளுக்கு என்றும் ஆதவளிக்ககூடாது மாறாக கண்டிக்கப்படவேண்டும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அர்த்தமேயில்லாமல் அல்ல, பொய் என்றால் சைமன், சைமன் என்றால் பொய்!!!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எந்த நாட்டவராயினும், இனத்தவராயினும், மதத்தவராயினும் மதவாதிகளின் எண்ணமும் குணமும் ஒன்றாகவே இருக்கிறது. தங்களுக்கு மட்டுமே மனமுண்டு, அது எதை பற்றி வேண்டுமானாலும் புண்படலாம், அதை புண்படாமல் பாத்துகொள்ள வேண்டியது மற்ற அனைவரது கடமையாகும். நாளை அந்த முருகனே நேரில் வந்து(அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது வராதவர் இதற்கெல்லாம் வரமாட்டார், ஒருவேளை வந்து) நானே முல்லை நிலத்தில் குடிகொண்டவன், மாமிசமே எனது உணவு எண்டு சொன்னாலும், முருகன் என்னை புண்படுத்திட்டார் என ஒதுக்கிவிடுவார்கள்
-
யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ பீடக்கற்கை நெறியின் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது - ஆறு.திருமுருகன் வேண்டுகோள்
தமிழ் மூலம் கற்பித்தலை நிறுத்தக்கூடாது, ஆங்கிலத்திலும் கற்பித்தால் பிறமொழி மாணவர்களை சென்றடையும்
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
இது பெரும் அரசியல் வெற்றிப்போல் தான் தெரிகிறது, ஆனால் ஆளுனர் மீது எதுவம் எதிர் நடவடிக்கை இருக்காது, பாஜகவை அதீதமாக எதிர்த்தால் இவர்களுக்கு பாதகமாக அமையலாம்.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
அண்ணன் பிழைக்க தெரிந்தவர் மோடி கையெழுத்தே அப்படி தான் இருக்கு😄
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
தேடிபார்த்தா ஸ்டாலினோட கையெழுத்து கோழி கிறுக்கல் மாதிரியிருக்கு, அது என்ன மொழின்னு எப்படி கண்டுபிடிச்சார்?
-
கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
நல்ல பாடல், எனக்கு இவரைப்பற்றி படிக்கையில் மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. மிகவும் எதார்த்தவாதியாக இருந்திருக்கிறார். இயக்கமாய் செயல்பட்டது பெரும்பலம், வாக்கரசியலில் ஈடுபட்டிருந்தால் ஒரு வேளை நீர்த்துப்போயிருக்கலாம். காலம் கடந்து வாழும் தலைவர்களில் மிகவும் தனித்துவமானரவாக இருக்கிறார்.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
பாராளுமன்றத்தில் மறைமுகமால்லாம் ஆதரவு தெரிவிக்கமுடியாது, வெளிப்படையாகத் தான் பண்ணனும். இன்னைக்கு நடந்த கூட்டத்துக்கு பாஜக அடிவருடிகள் மட்டும் தான் போகல, மத்தபடி நேரெதிர் அரசியல் செய்கிறவர்கள் கூட அவர்கள் மாநில நலன் கருதி ஒன்றுகூடியிருக்கிறார்கள்.
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
இதில் எந்த பங்கும் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாவது இவர் தான். தன் தாயின் வாழ்வையும் பாத்திருப்பார் அப்போதும் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும், இனியாவது இவ்விடயத்தில் மனநிம்மதி ஏற்படட்டும். சில வாழ்வின் நிகழ்வுகள் விசித்திரமானவை தான். இவ்விடயம் இத்தோடு பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிடும், நீதிமன்றமும் இழப்பீடு கொடுக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது, பெரிய அண்ணிக்கும் உரிய ஆதரவு இல்லை, அவர் சீமான் உறவினரிடம் பேசிய ஒலிப்பதிவில் சமாதானம் பேச தயார் நிலையில் இருப்பது போலயே பேசினார். சீமான் இவ்விடயத்தில் வீண் பேச்சு பேசாமலிருந்தாலே இது அடங்கிவிடும்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
ஐயா வழக்கே என்னை நம்பி உறவு வைத்து ஏமாற்றிவிட்டார் என்பது தான். ஆனால் அண்ணன் முதலில் தெரியாது என்றார், பின்னர் 50 ஆயிரம் கொடுத்தேன் என்றார், பின்னர் விலைமாது என்றார், நீதிமன்றத்தில் சமரசமாய் போகிறோம் என்றார், வெளியில் சமரசத்துக்கே பேச்சில்லை என்கிறார். என்றாவது உண்மை பேசுவார் என்று நம்புவோம்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
ஹாஹா, அண்ணன் தன் அன்பு மனைவியிடம் "மாமா கெட்டவன் இல்லடி கேடுகெட்டவன்" என கொஞ்சி குலாவி அவரே காணொளி பொது வெளியில் வெளியிடும் போது தனியா வேற போய் உங்களுக்கு பாக்கணுமா..
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
உச்சநீதிமன்றத்தில் சைமன் தரப்பு மட்டுமே சமர்பித்தது, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் எதுவும் வைக்கவில்லை இது சட்டநடைமுறையா இல்லை வேறு காரணங்களா என தெரியவில்லை. ஒன்று குற்றஞ்சாட்டப்பட்டவர் செய்த குற்றத்திற்கு தண்டிக்கப்படவேண்டும் இல்லை குற்றஞ்சாட்டியவர் பொய்யான குற்றச்சாட்டிற்கு தண்டிக்கபடவேண்டும். அண்ணனுக்கு பின்புலம் பெரும்பலம். இனிதான் அண்ணனோட ஆட்டத்தை பாக்கபோறீங்க.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இம்மாதிரியான மனித மிருகங்களிடம் தான் நீதிமன்றமும் சமாதானமாக போங்கள் என்று சொல்கிறது, காலகொடுமை.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இலங்கை அரசினர் இன அழிப்பு செய்தனர், இந்திய இராணுவம் ஈழத்தில் செய்யாத வன்கொடுமை இல்லை, இனதுரோகிகள் பலவுண்டு. இவை ஏதாவது நீதிமன்றத்தில் நிரூபணம் ஆனதா? அதனால் இவை குற்றமாகாதா? ஒரு குற்றச்சாட்டு வெறும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மட்டும் நிலைபெறுவது கிடையாது. குற்றஞ்சாட்டப்பட்டவரின் மற்ற நடவடிக்கைகள், அதற்கான எதிர்வினை என பிற விடையங்களும் காரணியாக அமையும். இந்திய இராணுவத்தின் பாலியல் குற்றம் கூறும் சக ஈழத்தவர் அனைவரும் சகமனிதரின் துன்பம் அறிந்தவர்கள், மனிதத்தன்மை கொண்டவர்கள் , நீங்கள் நினைப்பது போல் கூட படுத்துவர்கள் கிடையாது.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
நான் அந்த பெண்ணை திட்டியதை சொல்லவில்லை , "நான் என்ன குச்சுக்கள் இருந்த பெண்ணையா.." என்று மிக எளிதாக சிறுமிகள் மீதான பாலியல் விடயங்களை பொதுவில் பேசுகிறார். அப்பெண்ணை நாதகவினரும் இதற்கு முன்னரும் தான் கேவலமாக பேசியுள்ளனர். கேவலத்திற்கு கேவலம் பதில் கிடையாது, அதோடு அவர் நம்மை போன்ற தனிமனிதர் கிடையாது , நாம் பேசுவது பல வேளைகளில் கண்டுகொள்வதும் கிடையாது, பாதிப்பு ஏற்படுத்துவது கிடையாது. இவர் தனி மனிதர் அல்ல ஈழத்தை அடிப்படையாக கொண்டு எழுப்பபட்ட ஒரு கட்சியின் தலைவர், அதற்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது. நம் பெண்கள் இந்திய இலங்கை படையினரால் சொல்லொன்னா அவலங்களை சந்தித்தனர், எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது புலிகளின் தலைமையோ அல்ல ஒரு இயக்க வீரரோ சிங்கள பெண்களை பற்றி ஒரு சிறு தவறான சொற்பிரயோகம் பயன்படுத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? எதிரிகளால் நாம் போரில் தான் வீழ்த்தப்பட்டோம், நம் கண்ணியத்தையும், மனிததன்மையையும் வீழ்த்திவிடவில்லை.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து கதைக்கிறீர்கள், இச்சம்பவத்தில் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீமானின் மோசமான பேச்சை சரி என்பது போல் உள்ளது. அப்பெண் எப்படி பட்டவராக இருக்கட்டும், ஆனால் ஒரு தலைவராக இவரது பேச்சு அருவருக்கதக்கது, அதுவும் தவறுதலாக அல்ல, திட்டமிட்டே தன் உள்ள வக்கிரங்களை வெளிபடுத்துகிறார். நீங்களுமா? ஒரு தனி மனித மீதுள்ள ஒழுங்கீனமான குற்றச்சாட்டுக்கும் . நிலத்தில் நடந்த பெருங்கொடுமைக்கும் , இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம். நகளை அவர் குற்றவாளி என ஒரு வேளை தீர்ப்பு வந்தால், அதற்கு இயக்கத்தை காரணம் சொல்லமுடியுமா?
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இது 12 ஆண்டுகள் முன்னர் கொடுக்கப்பட்ட வழக்கு, எவ்வித விசாரணையும் செய்யப்பட்டதாக தெரியவில்லை, இதற்கு அரசியல் காரணங்கள் கூறப்படுகிறது. அதோடு நீங்கள் கூறியது போல் பாலியல் குற்றங்கள் நிருப்பிக்கப்படுவது கடினம், இதிலும் அதுவே நடக்கும் என நினைக்கிறேன். நான் மீண்டும் சொல்லவருவது, குறை சொல்வது, கடந்த 2 நாட்களாக சீமான் என்னும் நபர் பேசும் மிகவும் மோசமான பேச்சை பற்றிதான்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
நான் முதலிலேயே குறிப்பிட்டது போல் இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை நீதிமன்றத்தில் முடிவு செய்யவேண்டியது. நான் கண்டிப்பது சீமானின் வக்கிரமான பேச்சையே. இந்திய நீதிமன்ற தீர்ப்புகளின்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதியளித்துவிட்டு உறவுகொள்ளுதல் பாலியல் குற்றமே. ஆனால் இதை நிரூப்பிக்க படவேண்டியது நீதிமன்றத்தில் உங்களது கருத்தை முழுமையாக ஏற்கிறேன். நான் அவரை குற்றவாளியென்று சொல்லவில்லை, சொல்லுவதும் தவறு, ஆனால் முறையற்று பேசுகிறார், அதையே கண்டிக்கிறேன்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
உங்களின் கோபம் எனக்கு முழுமையாக விளங்காவில்லை, கருத்தியல்ரீதயாக வேறுபாடு இருக்கலாம், நாம் வெவ்வேறு பாதையில் பயணிக்கலாம், அது அனைவரது உரிமை. ஆனால் அடிப்படை மனிதத்தன்மை என்பது பொதுவானது, நம் கொள்கைகளுக்கு என்ற தனி மனிததன்மை கிடையாது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, அடக்குமுறை எவ்வித தயக்கமின்றி, வேறுபாடின்றி கண்டிக்கப்பட வேண்டும், அதை எக்காரணம் கொண்டு நியாயபடுத்த முடியாது. அதுவும் நம்மினம் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்னும் மீளாமல் இருக்கிறோம். நாம் இக்கொடுஞ்செயல் செய்கிறவன் நம்மொழி பேசுகிறான், நம் கொள்கையை தூக்கிபிடிக்கிறான் என்ற காரணத்திற்காக அவன் பின்னால் நின்றால் அது மனிததன்மையற்றது, நம் போராட்டத்தையும், அதன் நியாய குரலையும் நீர்த்து போக செய்வதேயாகும்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
நிச்சயம் கதறத்தான் வேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மிக எளிதாக பேசும் இந்த வக்கிர மனிதனை தலைவனாக ஏற்றுக்கொண்டு கண்ணெதிரே தெரியும் உண்மைகளை மறுதலிக்கும் போக்கை கண்டு கதறத்தான் முடியும், வேறு என்ன செய்ய முடியும். இந்த குற்றத்தின் உண்மைத்தன்மை எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் இந்த இரு நாட்களாக அவர் பேசிய பேச்சுகளை ஏற்று கொள்கிறீர்களா? ஒரு மாண்பானவன் இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன், நீதிமன்றத்தில் என் தரப்பு நியாயங்களை தெரிவிப்பேன் என கூறியிருப்பான், ஆனால் இந்த அறமற்ற மனிதர் பெண்களின் பாலியல் குற்றங்களை கேவலமாக பேசிவிட்டு, புலிகள் பின்னால் ஒளிந்து கொள்கின்றார். இந்த சம்பவத்திருக்கும் இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இது என்ன கொடுமை பாதிக்கப்பட்டவரையே குற்றஞ்சாட்டுவது, ஒரு பெண் இப்படிதான் கட்டுப்பாடாக இருக்க வேண்டும், அப்படியில்லையென்றால் அவரை ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பது போல் உள்ளது. இந்த வழக்கை பொறுத்த வரை வெறும் வதந்தியாகவோ வெற்று குற்றச்சாட்டாகவோ அந்த பெண் வைக்கவில்லை, முறைப்படி வழக்கு பதிந்திருக்கிறார். அவருக்கு நியாமாக கிடைக்கவேண்டிய ஆதரவு அரசிடமிருந்து கிடைக்கவில்லை. இதை மற்ற வதந்திகளோடு பொதுவாக கூறப்படும் விடயங்களோடு ஒப்பிடுவது இதை நீர்த்து போகத்தான் செய்யும். இக்குற்றச்சாட்டின் உண்மை தன்மை நீதிமன்றத்தில் தான் நிருப்பிக்கபடவேண்டும், அது எப்படியிருந்தாலும், சீமான் இரு நாட்களாக உதிர்த்த சொற்கள் அவரது வக்கிர எண்ணங்களையே பறைசாட்டுகிறது. இதில் எனக்கு உள்ள பெருங்கோவம், இது போன்ற கேவலங்களை செய்துவிட்டு இயக்கத்திற்கு பின் போய் ஒளிந்துகொள்கின்றனர்.