Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாவம் கிருபன். புள்ளி போடும்போது, யாருடை பேரை கடைசியாப் போடுறது என்டு குழம்பப்போறார்😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சரி சரி. இனி என்ன. முட்டையை அவிப்பம். அந்த 8 பேரும் வரிசையில வாங்கோ.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அட அட. நம்ம ராசி அப்படி. நாம ஒன்டுநினைச்சா பாபர் ஒன்டு நினப்பாரோ. பாகிஸ்தானுக்கு போட்ட அந்த 8 பேருக்கும் ஏதாவது ஆறுதல் சொல்லலாம் என்று பார்த்தன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இப்போது நிற்கின்ற இருவரும் அருமையாக ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். வான வேடிக்கைகளுக்கு தயாராகுங்கள். கிரிக்கெட்டில் ஒரு கையளவு சொல்வார்கள். 35வது பந்துப் பரிமாற்றத்தில், ஒரு உறுதியான இணைப்பாட்டம் ஒன்றுடன், அரைவாசி ஓட்டங்களுக்கு மேல் குவித்துவிட்டால், வெல்வதற்கான சாத்தியம் மிக அதிகம். அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. பாகிஸ்தானுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போகிற போக்கை பார்த்தால் இன்றைக்கு பாபர் விசேட பிரியாணி இருக்கும் போல. பாபரும் துரத்தி அடிப்பதில் வல்லவர். இன்று பிடிகளை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்கள், கிளென் பிலிப்சிடம் பாடம் படிக்க போகலாம். ரிஷ்வான் விலக்கி அடித்த அந்தப் பந்தை காற்றில் பறந்து பிடித்தாரே ஒரு பிடி. இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த பிடியாக அது அமையப் போகிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டிகள் ஆரம்பமாகவிருக்கும் இவ்வேளையில், திரும்பிப் பார்த்தால் 1998ம் ஆண்டு முதலாவது Champions Trophy போட்டி நடைபெற்றது. தென்னாபிரிக்கா வென்ற ஒரே ஒரு ICC போட்டி. பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டு 2000, 2002, 2004, 2006ம் ஆண்டுகளில் போட்டிகள் நடைபெற்றன. அதன்பின் இழுபறிபட்டு 2009, 2013, 2017 ம் ஆண்டுகளில்தான் போட்டிகள் நடைபெற்றன. T20 பிரபலமானதால் இந்தப் போட்டிக்குரிய விருப்பு குறையத் தொடங்கியது. அதன் பின்னர் 2025ல்தான் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. நடப்பு வெற்றியாளர் - பாகிஸ்தான். இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது. மற்றைய வெற்றியாளர்கள் 2013 - இந்தியா 2009 -அவுஸ்ரேலியா 2006 - அவுஸ்ரேலியா 2004 - மேற்கிந்தியத் தீவுகள் 2002 - இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்து கொண்டன (மழை காரணமாக) 2000 - நியூசிலாந்து
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான். எப்போதும் மிகத்திறமையான வீரர்களைக் கொண்டிருக்கும் அணி. உலகக்கிண்ணப் போட்டிகளில் மழையும் ஓட்ட விகிதாசாரமும் அவர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கின்றன. பார்ப்போம் இம்முறை.
-
காற்றாடி
ஓம் ஓம். வாசிக்கும் போதே புரிந்தது. அங்கு நின்ற அனுபவமில்லாமல் கற்பனையில் எழுத முடியாது. அதுவும் பாடல் காட்சிகளில் எவ்வளவு வெட்டி ஒட்டினாலும் ஒருத்தரும் ஒன்றும் சொல்லமாட்டினம் என்பது அனுபவத்தில்தான் வரும். நாங்களும் வீட்டில் படம் பார்க்கும்போது பாட்டுகளை ஓட விட்டுத்தானே பார்க்கிறது.
-
உண்மை தெரிந்தாகனும்
பழகத்தானே வந்திருக்கிறேன். துன்பியல் இல்லாத வாழ்க்கை ஏது. பாத்துக்கலாம். "வாடா நண்பா போட்டுப் பார்க்கலாம் எதிர்நீச்சல்" பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றாகச் சொன்னீர்கள் போங்கள். இந்த இரண்டு அணியும்தான் இறுதிப்போட்டியில் என்று நான் தெரிவுசெய்துள்ளேன். தென்ஆபிரிக்கா சமீபகாலமாக தரமான ஆட்டம் ஆடிக்கொண்டு வருகினம். நல்லதொரு இளைய தலைமுறை உருவாகிக்கொண்டு வருகிறது. நல்லதொரு அணிக்கட்டமைப்புடன் உள்ளார்கள். பந்துவீச்சாகட்டும் துடுப்பாட்டமாகட்டும் சமநிலையில் உள்ளார்கள். வேகப்பந்து வேணுமா சுழல்ப் பந்து வேணுமா வெளியால உள்ளால பந்து போகவேணுமா அதிரடியா துடுப்பாட வேணுமா. நின்று நிதானித்து ஆடவேணுமா. எல்லாவற்றிற்கும் அவரிகளிடம் பதில் இருக்கு. அத்தோடு, அவர்கள்தான் World Test Championship இறுதிப்போட்டியிலும். ரபடா வாறாரு. தெறிக்க விடப் போறாரு.
-
காற்றாடி
எம் சமுகத்தில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. எங்கிருந்தாழும் அது மாறாது என்றே தோன்றுகிறது. வெயில் படத்திலும் இந்த தியேட்டர் சம்பந்தமான விடயம் விரிவாகக் காட்டப்படிருக்கும். நீங்கள் விவரிக்கும்போது எனக்கு அப்படக்காட்சிகள்தான் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ரபாடா வாறாரு. தெறிக்கவிடப் போறாரு. இறுதிப் போட்டியில் தெரியும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முத்தரப்பு போட்டி ஒன்று பாகிஸ்தானில் இன்று முடிவடைந்தது. இறுதிப்போட்டியில் நியுசிலாந்து அணி பாகிஸ்தானை மிக இலகுவாக வீழ்த்தி வெற்றியைப் பெற்றது. நியுசிலாந்து வழமைபோலவே ஓர் கறுப்புக்குதிரைதான். இத்தொடரில் விளையாடிய மூன்றாவது அணியான தென் ஆபிரிக்காவும் மிகவும் வலுவான நிலையில் உள்ளது. அவர்களின் பந்துவீச்சு அணி முழுவதுமாக இத்தொடரில் இறங்கவில்லை.
-
உண்மை தெரிந்தாகனும்
சேர்ந்தே சிரிப்போம் வணங்காமுடி. காலத்தின் கோலம், சிரிப்பு, கட்டாய தேவை
-
உண்மை தெரிந்தாகனும்
வணக்கம் புங்கையூரான். நாடு முழுவதுமே செம்பாடு என்பதை நினைக்கவே நல்லாயிருக்கே. மழை தூறும்போது எழும் அந்த வாசனை..... வாழ்ந்து பார்த்தால்த்தான் தெரியும்.
-
உண்மை தெரிந்தாகனும்
தொடர்ந்து பயணிப்போம் நிலாமதி. முதல் கோணலே முற்றும் கோணல் என்று சொல்லுவினம். அதனாலதான் ஒரு சிறிய மனக்கிலேசம். அதைக் கிண்டலாக எழுதிப் பார்த்தேன். தொடர்வோம் தமிழ் சிறி. அது ஏன் எனக்கு என்டு ஒரு சங்கடம். அவ்வளவே. இன்னும் ஒரு பதிவுதான் இது. ஆனால், இதுதான் இப்போது எனது "முதற்பதிவாக" வரலாற்றில் இடம்பெறப் போகுது. எப்போதுமே புதிதாய் பிறந்தால் எப்படிஇருக்கும். நினைத்துப் பார்த்தாலே ..... தொடர்ந்து பயணிப்போம் சுவி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வரவேற்பிற்கு நன்றி. இதிலே கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம்தான் உறுப்பினராக சேர வைத்ததே. விலாசமே செம்பாடுதானா. மிக்க நன்று.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி வீரப் பையன். பார்ப்போம் எப்படி இந்தப் போட்டிகள் எமது கற்பனையுடன் பொருந்தும் என்று.
-
உண்மை தெரிந்தாகனும்
அப்பிடியா. ஒவ்வொருவராக அறிந்துகொள்ளவேணும். நானும் நீண்டநாற்களாக இங்கே வாறதுண்டு. சேர்ந்து பயணிப்போம்.
-
உண்மை தெரிந்தாகனும்
உபிசியாக உள்ளேன் 😁 ஏதோ ஒரு மாயவாதம் இந்தக்களத்திலும் இருக்கும் போல. உபிசி - உருண்டு பிரண்டு சிரித்துக்கொண்டு
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்களுக்கும் எனது வாழ்த்துகள். இதுதான் விளையாட்டின் மேன்மையே. ஆட்டம் முடியும் வரையும் என்ன நடக்கும் என்பதுதான் அதன் மீது கொள்ளும் காதலே. நம் எல்லோரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பதும் அதுவே. நம்பவே முடியாத பாக்கிஸ்தான் அணியை நம்புவதை விட நம்பக்கூடிய அணியை நம்புவோம் என்றுதான் நான் இந்தியாவைத் தெரிவுசெய்தேன்.
-
உண்மை தெரிந்தாகனும்
எனது முதற் பதிவை "சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்" என்ற தலைப்பில் நேற்று ஆரம்பித்திருந்தேன். பலரும் வரவேற்பளித்து உற்சாகப் படுத்தினார்கள். சுவாரசியமான ஓரிரண்டு விடயங்களும் அங்கே பேசப்பட்டன. தொடர்ந்தும் கதைக்கலாம் என்டு வந்து பார்த்தா, எல்லாம் காற்றிலே கரைந்து மாயமாகி விட்டது. அது ஏன் நான் ஆரம்பித்தபோது இது நடந்தது. ஏன் தளத்தை இப்போதுதான் புதுப்பிக்க வேண்டும். ஏன் ஏன் ஏன்.....இன்னும் ஒரு நாள் ஒரே ஒரு நாள் குடுத்திருந்தால்..... மலர்ந்த பூ மலராமலே போய்விடுமோ. எல்லா பயிற்றுவிப்பாளர்களும் எப்போதுமே சொல்லும் விடயம் "நாங்கள் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்று அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்ளுவோம்" (இது ஒரு கிண்டலான பதிவு) இவன் செம்பாட்டான்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
# Question Team1 Team 2 Prediction குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG AFG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS Select SA Select SA SA ENG Select ENG ENG AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PAK 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shubman Gill 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Arshdeep Singh 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Heinrich Klaasen 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SA 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rabada 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Heinrich Klaasen 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND