Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லாரும் அதையேதான் சொல்லினம். புள்ளி கிடைக்கும் என்றால்...... தோக்கவேணும் என்றால், எப்பிடி புள்ளி கிடைக்கும். புள்ளி வேணும் என்றால், வெல்லவேணும் என்றெல்லோ சொல்லவேணும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னும் ஒன்பது பேர் இந்தியாவைத் தெரிவு செய்திருக்கினம். ஆனா இந்தியா தோற்கவேணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கினம். அப்பிடி என்றால் ஏன் இந்தியாவைத் தெரிவு செய்வான். தோற்கவேணும் என்றால் எப்பிடி புள்ளி கிடைக்கும். ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யவேண்டாமா. எப்பிடி இரண்டும் உண்மையாகும். இல்ல புரியல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குல்தீப் நெருப்பாய். கேனும் தூக்கிக்குடுத்தாரு. தானே பிடித்தாரு குல்தீப். மீண்டும் கூக்லி பந்து. கேன் முன்னங்காலில் வந்து தடுக்க முயன்றார். மட்டையில் பட்டு டக்கென்டு பந்து எழும்பியது. அவர் பின்னங்காலில் அந்தப் பந்தை ஆடி இருக்கணும். 250ஏ கஷ்டம் என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குல்தீப் வந்தாரு. உடைத்தெறிந்தாரு. ரச்சின் போனாரு அறைக்கு பந்து விழுந்து மெதுவானது. ரச்சின் கணிக்கத்தவற, மட்டைக்குள்ளால காலுக்கு மேலே போய் விக்கட்டைத் தகர்த்தது. அருமையான பந்து.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓ அப்ப இந்தியா 301 😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதலாவது வீரர் ஆட்டமிழந்தார். கேன் வந்திருக்கார். இவர்கள் இருவரும்தான் தென்னாபிரிக்காவுக்கு அடி அடி என்டு அடித்தவை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியூசிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருக்கின்றது. எத்தனை ஓட்டங்கள் அடிப்பார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மழையையும் நாம எதிர்வுகூற வேணுமா. கடவுளே. எதிர்வு கூறலாம். ஆனா, அதுக்கு வசி எப்பிடி விளக்கம் எழுதுவார் என்று பாரக்க ஆவல்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியாயம் முன்னாடி போக, ஞான் பின்னாடி பகிர்ந்து கொள்ளப்போகும் தருணம். இன்னும் சிலர் இரண்டாவது நிலையில் வரும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. யாழ் களமே ஆயத்தமாகுங்கள். உங்கட ஆசைக்கு ஒரு அளவேயில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். IPLல் பெரிய நாட்டமில்லை. பெரிதாக தொடர்வதுமில்லை. இந்தமுறை பார்ப்போம். கிருபனின் போட்டியினால், ஒருமுறையும் இல்லாதவாறு அதிகமாகத் தொடர்வேன் என்று நினைக்கிறேன். சாரே 90 கேள்விகள் சாரே. எப்பிடி முடிக்கப் போறேனோ.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த ஆடுகளம் மிகவும் மெதுவானது. பந்து விழுந்து நின்று மெதுவாகத்தான் மட்டையை நோக்கி வரும். முன்னங்காலில் ஆடினாலோ அல்லது மட்டையினால் கூட்டினாலோ, ஆட்டமிழப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். மிகவும் நிதானமாக, பின்னங்காலில் ஆடவேண்டும் அல்லது ரோகித் மாதிரி விரைவாக அடித்து ஆடவேணும். வில்லியம்சன் ஒருவர்தான் இக்களத்தில் நின்று பின்னங்காலில் இலாவகமாக ஆடக்கூடியவர். மற்றவர் எல்லோருக்கும் அது சரியாக வராது. பார்ப்போம் எப்படி இந்திய சுழலர்களை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று. ரோகித் ஒரு பெரிய ஆட்டம் இதுவரை ஆடவில்லை. இறுதிப் போட்டியில் அதற்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தக் களத்தில் அவரால் மிக இலகுவாக ஆடமுடியும். ஒரு 30 ஓட்டங்கள் எடுத்துவிட்டார் என்டால், அவரிடமிருந்து ஒரு பெரிய ஆட்டம் ஒன்றை எதிர்பார்க்கலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன வசி, நீங்கள் நியூசிலாந்துக்கு ஆதரவாக மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடுகிறீர்கள். நீங்கள் சுழட்டுற சுழட்டில் நியூசிலாந்து வென்றாலும் வென்றுவிடும் போல கிடக்கிறது. உங்கள் அலசல் நன்றாக இருக்கின்றது. ஆனால் என்ன, மற்றப் பக்கம் இந்திய அணி விளையாடுகிறது என்பதை மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாசிப்பதற்கு நாங்கள் இருக்கின்றோம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நல்லதொரு இறுதிப்போட்டியாக இருக்கப் போகிறது. ஒரு பக்கச் சார்பாக இல்லாம இருந்தால், நமக்குக் கொண்டாட்டம்தான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வாருங்கள், சேர்ந்தே ஒரு கை பார்ப்போம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓ நீங்களும் இப்போதுதான் அறிகிறீர்களா. சேர்ந்தே அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. இங்கே கனபேர் பழம் தின்று கொட்டை போட்ட ஆக்கள். என்ன கேட்டாலும் சுடச் சுட வரும். ஸ்டீவன் ஸ்மித்தும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முயற்சி பண்ணிப் பார்த்தேன். கீழே பாருங்கள்.🥰 செய்து பார்த்தோம். தலையைச் சுத்தி மூக்கத்தொடுற மாதிரி. ஆனா மூக்கத் தொட்டாச் சரிதானே. கீழே பாருங்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு சந்தேகம். எப்படி படங்களை இவ்வாறு இணைக்கிறீர்கள். சாதாரணமாக வெட்டி ஒட்ட முடியவில்லை. file size பெரிதாக இருக்கிறது என்ற தகவல் வருகிறது
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
2001 உலகக் கிண்ணம் அல்ல. 2000ம் ஆண்டு நடந்த இதே சாம்பியன் கிண்ணம். கிரிஸ் கெய்ன்ஸ் (Chris Cairns) அடிச்ச அடி அப்பிடி. சதம் அடிச்சு வென்று குடுத்தார். கங்குலியும் சதம் அடிச்சிருப்பார். அந்தப் போட்டி விபரம் இதோ: ESPNcricinfoIND vs NZ Cricket Scorecard, Final at Nairobi, October 15...Live Cricket Scoreboard: Get India vs New Zealand Final, cricket scorecard, ICC KnockOut 2000/01 dated October 15, 2000.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நானும் அதைப் போலதான் நினைச்சன். பாக்கிஸ்தானோட, தென்னாபிரிக்காவையும் சேர்க்க வேணும். அவங்கள இனி மனுசன் நம்புவானா. தனி ஒருவன். ஒற்றையாளாய் நிக்கிறதும் ஒரு லெவல்தான்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுசிலாந்து வென்றால், மிச்ச எல்லாரும், ஆளுக்கு இரண்டு புள்ளி போட்டு, கிருபனுக்குக் குடுப்பம். அப்ப என்டாலும் அவர் மேல வாறாரோ என்டு பார்ப்போம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவர் வந்தால் ராசாவாத்தான் வருவேன் என்டு அடம் பிடிக்கிறார். நாம என்ன செய்ய முடியும். இன்னும் ஒருக்கா சொல்லுங்க. நம்ம இந்தியா வெல்ல வேண்டும். 😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டி எப்பிடிப் போனாலும், அவன் அவனுக்கு அவனின் கவலை. விளையாட்டின் புதிர்களில் ஒன்று.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வெல்லும் என்று ஒருவரும் கணிக்கவில்லை. இந்தியா வெல்லும் என்று 10 பேர் கணித்திருக்கிறார்கள். இப்போது யாழ் களத்தில் அந்தப் பத்துப் பேர்தான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
புரிகிறது. ஆனால் எனது பார்வை நீங்கள் சொல்வதற்கு எதிர்மாறானது. அவர் மிகவும் பொறுப்புடன் நின்று ஆடினார் என்றே நான் நினைக்கின்றேன். அவரும் அடித்து ஆடி இருந்தால் நியூசிலாந்து அணி இன்னும் மோசமாக தோற்று இருக்கும். இன்று நடந்த சம்பவத்தை பார்த்தீர்கள் தானே. அடிக்கும் போது அடிக்க வேண்டும் அடங்கும் போது அடங்க வேண்டும். வில்லியம்சன் போன்ற வீரர்கள் மிகவும் திறமையாக ஆட்டத்தை கணிக்க கூடியவர்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது மீண்டும் நிருபணமாயுள்ளது. நியுசிலாந்து இப்பிடி ஆடும் என்று எதிர்பார்க்கவே இல்லை.