Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சார்வாள். இப்பிடி தட்டை மாத்தக் கூடாது. என்னா பேச்சு. இப்ப உங்களை வைச்சே உங்களை முடிச்சம் பாத்தியலா. நீங்கள் சொன்ன ஒன்றுகூட நடக்கவில்லை என்பதை நினைக்கும் போது மனது பூரிக்குது. செய்த செய்கை அப்பிடி. அதுவும் ஒரு சர்மாவ வைச்சு செஞ்சம். இதுகாணும் இந்த முறைக்கு. உண்மைபோலத்தான் கிடக்கு. இப்போ இன்னும் அதிகமாக. முதல்வரெல்லோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் எதிர்பார்த்தேனே. இதில ஒரு அதிர்ச்சியும் இல்லையே. எல்லாம் முறைப்படி நடந்திருக்கு. அத்தனைக்கும் ராகுலும் விளையாடேல்ல. கருண் நாயரும் விளையாடேல்ல. பாவம் நம்ம @வீரப் பையன்26 நிலைமை. பார்த்தா, ஆறுதலா இரண்டு வார்த்தை சொல்லி விடுங்க. புலம்பிட்டு இருக்கார். தான் சொன்னதையே இப்ப மாற்றி சொல்லிட்டிருக்கார். இதுக்கு பதில் சொல்ல வேணுமா. அவசரப் பட்டுட்டீங்களே. அவளைத் தொடுவானேன். 🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுதான். என்னமோ நடந்திருச்சு. எப்பிடி இப்பிடி நடக்குது என்று எனக்கே புரியேல. ஆனா சுகம்மா இருக்கு. நன்றி வாத்தியார். பொறுங்க. ஒவ்வொருத்தரா வாறன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பவே சொன்னன். விலகி நில்லுங்க அங்க இங்க பட்டுடப் போகுது என்டு. இப்ப வந்து குய்யோ முறையோ என்டா. கொஞ்சம் நிதானிச்சிருக்கலாம். காயமடைந்த நெஞ்சங்களை குளிர்விக்க, ஆவன செய்யப்படும். இந்தப் பாடலைக் கேளுங்கள் யார்ரா அந்தப் பையன் நான்தான் அந்தப் பையன் நன்றீங்க. அந்த ஆயின்மென்ற் வாங்கி வைச்சிருக்கிறன். அனுப்பி விடவா. எரியுற இடத்தில தடவிக்கலாம். 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வன் படத்தில கடைசியில அர்ஜுன் சொல்லுவார் " என்னையும் கடைசியில அரசியல்வாதி ஆக்கிவிட்டீங்களேடா" என்று. அதுமாதிரி, என்னையும் கடைசியில ஜபில் பாக்க வச்சிட்டீங்களே ஜயா. நான் ஒருமுறை கூட இவ்வளவு ஆர்வமாய்ப் பார்ததில்லை. @கிருபன் செய்த வேலை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அங்கால போட்டுவர விடமாட்டியல் போல. பூரானத் தூக்கியாச்சு. இனி...... இதில கடைசியா இருக்கிற பிள்ளையை கண்டா வரச்சொல்லுங்க. ஓம். அவர் விளையாடவில்லை. எல்லாப் பக்கத்தாலும் அடி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னா அடி. பூரான் பூந்து விளையாடுறான். இலகுவான ஒரு பந்தை ஏந்தாமல் தவறவிட்டதுக்கு, போட்டு இப்பிடியா அடிக்கிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி வீரர்கள். நம்ம தூக்குதுரை டூ பிளேசி, ஜேக் பிரேசர், ராகுல், கருண் நாயர். கருண் நாயர் இருக்கிற formக்கு என்ன அடி அடிப்பானோ தெரியா. இன்றைக்கு டெல்லியின் விளையாட்டப் பாருங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரிசப் பாந்தும் ராகலும் இப்போது அணிகள் மாறி விளையாடுகினம். அவ்விரு அணிகளும் மோதுகின்றன. யார் தங்களின் பழைய அணிக்கு அடிப்பினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுவையான தகவல். கோலி ஒருவர்தான். எல்லா ஜபில் தொடர்களிலும் ஒரே அணிக்காக விளையாடிய வீரர். பிசிசிஜ அவரைக் கௌரவித்து 18 என்ள இலக்கம் படைத்த கேடயம் ஒன்றை வழங்கியுள்ளது. தோனி, ஜடேஜா மற்றும் மனிஷ் பாண்டேவும் எல்லா ஜபில் தொடர்களிலும் விளையாடியுள்ளனர். ஆனால் வேறு வேறு அணிகளிற்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@ஈழப்பிரியன் மேலே சொல்ல வந்த கதை என்னவோ. சொல்லிடுங்க. என்னவோ சொல்ல வந்து மறந்து போனியல் போல. உங்கட பதிவக் காணோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாங்கள் கண்ணில விளக்கெண்ணையை விட்டு பாத்துக் கொண்டிருக்கிறம். டெல்லி அணியின் வெற்றியுடன் அவரின் வீழ்ச்சி ஆரம்பிக்குது. நம்ம தூக்குதுரை டீ பிளேசி டெல்லி அணிக்காக ஆடுகிறார். அவரின் அதிரடியுடன், டெல்லி கணக்கைத் தொடங்கினம். ஈழப்பிரியன் கணக்கு முடியுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புள்ளிகள் எனக்குத்தான் கிருபன். நீங்கள் வந்து புள்ளிகளை வெளியிட, யாழ் களமே அதிரப் போகுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதென்ன யேசு பிரான் சொல்றமாதிரியே கிடக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல் மூன்று போட்டிகளையும் சரியாகத் தெரிவு செய்து போட்டேனே. பாத்து ஏதாவது போட்டுக் குடுங்க. அடுத்த அடி: டெல்லி குடுக்குறான் லக்னோவுக்கு. நான் வந்துகொண்டிருக்கிறன். விலகி நில்லுங்க. ஏடாகூடாம அங்கின இங்கின பட்டுடப் போது. 🫠😆
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரவில பந்து கூட வழுக்கும். அதனால கனபேர் யோக்கர் பந்து போட கொஞ்சம் தயங்குவினம். கொஞ்சம் வழுக்கினாலும் அது full toss பந்தாக வரும். ஆறடிக்க மிக எளிதாக இருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட இப்பிடியும் நடக்குதா. சொல்லவேயில்லை. உபிசி. SRH என்னா அடி. அவங்கட முதல் அஞ்சு பேரும் இம்மை மறுமை இல்லாமல் அடிக்கிற ஆக்கள். இது முழுத் தொடருக்கும் வேலை செய்யாது. இவர்கள் மிகக்குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கிற அணியாகவும் வர சந்தர்ப்பம் கூட. இவர்களின் போட்டிகள் நல்ல ஒரு கொண்டாட்டமான போட்டிகளாக இருக்கும். அந்த மாதிரி அடி விழும். எல்லாத்துக்கும் ஆசைப்பட்டா எப்பிடி. எங்களையும் கொஞ்சம் ஆட விடலாமே. 🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பார்த்தா, இப்ப ஒரு நாலஞ்சு பேர்தான் இதுக்குள்ள குதிரை ஓடுறம். எங்க மிச்ச எல்லோரும். எல்லாரையும் இதுக்குள்ள இறக்கினாத்தான் பம்பல் கூடும். பல வருடங்களாக இப்பிடியான அணியுடன்தான் அவர்கள் விளையாடுகிறார்கள். இதனால்தான் கோப்பையை அடிக்க கஷ்டப் படுகினமோ. இம்முறையாவது, நடக்குமா. பாவம் கோலி. அணி விசுவாசத்தினால், இதுக்குள்ளேயே மாட்டுப்பட்டு இருக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுனில் நாராயன் இன்னும் மெதுவாக வீசுபவர். அவர் 27 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் வருண் 43 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் பெற்றனர். இங்கு மிதமான வேகம்தான் வேலை செய்திருக்கிறது. இப்படியான நேரங்களில் வருண் தனது வேகத்தை மட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனாலும் கோலி ஆடின ஆட்டத்தினால் RCB எப்பிடியும் வெற்றி பெற்றிருக்கும். அவர்களின் நேரம் அது. அனில் கும்ளேவும் முரளி வார்ன் போன்றோரை விட வேகமாக வீசுபவர். மூவரும் எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்று தெரியும். இவர்களைப் போல் வருணும் வருவாரா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுதானே முதலாவது போட்டி. இன்னும் 69 போட்டி இருக்கு. ஏன் கனக்க யோசிப்பான். அதுவும் முக்காவாசி, சும்மா அடிச்சு விட்டது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதேதான். இதுதான் நானும் சொன்னது. யாராவது ஒருவர் வருணின் மாய சுழற்சியைக் கண்டுபிடித்துவிட்டால், அவர்கதி அதோகதிதான். பார்ப்போம் அடுத்த போட்டியில் எப்பிடி என்று. வெறும் இலக்கங்களை வைத்து, வீரரை எடுபோடக்கூடாது. அதுவும் கிரிக்கட் போன்ற ஒரு விளையாட்டில். வேறுபாடுகள் நிறைந்த விளையாட்டு இது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களை மாதிரியே கதைச்சுப் பார்த்தன்😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வருண் சக்கரவரத்தி தாக்கப்பட்டார். இப்பிடியே போனால்..... அவரின் காலங்கள் எண்ணப்படும் தூரம் வெகுதூரமில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுதான் இங்குள்ள நன்மையே. நமக்குத் தெரிந்ததை கிறுக்கலாம். ரசிக்கலாம். அப்ப என்ன RCB தனது கணக்கை தொடங்குது இறுதிப் போட்டியை நோக்கி. 18 வருட தவம். "கப் நம்தே" உங்களுக்கு குல்தீப்புடன் என்ன வாய்க்கால் தகராறோ. பாவம். குல்டீப்புக்குத் தெரியுமோ தெரியா. குல்டீப் ஒரு முறையான சுழல் பந்துவீச்சாளர். வருண் அப்பிடி இல்லை. ஒரு போட்டி அவரின் வாழ்க்கையையே மாற்றும். ஒரே ஒரு மட்டையாளர் அவரின் சுழல்களை சமாளித்து வெளு வெளு என்டு வெளுத்தா, வருண் காலி. குல்டீப் அப்பிடி இல்லை. ண
-
வணக்கம்
வணக்கம். வாங்க செழியன்.