Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யதார்த்தமும் நடைமுறையும் ஒத்து வராட்டிப் பரவாயில்லை. புரியாத ஒன்று: உங்களின் உதாரணத்தையே எடுத்தால், இந்தியா தோற்கவேண்டும் என்று விருப்பம். ஆனால் இந்தியாவைத் தெரிவு செய்வது. இது சரியானதா. ஓரே குழப்பமாயிருக்கும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றாகச் சொன்னீர்கள். நுனிப்புல் மேய்கின்ற ஆக்களாலதான் இப்போ பெரும் ரோதனையே. நீங்கள் சொன்னமாதிரி இலகுவா கடந்து போனால் பரவாயில்லை. ஆனால், நாஞ்சொல்றதுதான் சரி என்று வாதிக்கிறதும், மற்றவை என்ன சொன்னாலும் கண்டுக்காமல் இருக்கிறதும், தனிமனித தாக்குதலில் இறங்குவதும்,.... இது இன்றைய சமூக வலைத்தளங்களினால் நிகழ்கின்ற வினோதம். அறியாமை வேறு. அறியாமலே இருப்பது வேறு. வில்லியம்சன் ஆடினது சுயநலமா. விளையாட்டை அறிந்த நீங்களே இப்பிடிக் கதைக்கலாமா. போட்டி எப்படிப் போனது என்று பார்த்திருப்பீங்கள் என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வேறு யார். அந்த 7 பேரும்தான் புள்ளிகள் பெறுவார்கள். முதல் ஜந்து பேருக்குள் இவன் செம்பாட்டான் வாறான். நாளைக்குப் பாருங்க கிளாசனின் அடிய.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியாவைத் தெரிவு செய்ய அந்த 8 பேரையும் தூக்கியாச்சு. இன்னும் ஒரு 12 பேர் இருக்கினம். 😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லாம் இனிதே முடிந்தது. இந்தியா இறுதியில். கோலியின் ஆட்டமிழப்பு, ஒரு சிறிய சுணக்கத்தைக் கொண்டுவந்தது. அவுஸ்ரேலியாவின் முதல்தர பந்துவீச்சாளர்கள் இல்லாத குறை அந்த இடத்தில் தெரிந்தது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எதிர்பார்த்தது போன்று, அவுஸ்ரேலியா நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்திருக்கிறது. இரு மாற்றங்களுடன் அவுஸ்ரேலிய அணியும் ஒரு மாற்றமும் இல்லாமல் இந்திய அணியும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியாவா அவுஸ்ரேலியாவா. இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். இந்தியா தோக்கவேண்டும் என்று நினைத்து இந்தியாவைத் தெரிவுசெய்த எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்கும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
டிராவிஷ் ஹெட் என்ற ஒரு மனிதன் தான் பலமான இந்திய அணிக்கு எதிராக. சமீப காலங்களில் அந்த ஆள் அடித்த அடி அப்படி. என்னமோ தெரியல இந்தியா என்றால் அந்தாளுக்கு ஓட்டங்கள் அருவியாக் கொட்டுது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கில் சதமடிப்பார் என்று நினைக்கிறேன். இன்னொருவர் நின்று விளையாடினா, இந்தியாவின் வெற்றி உறுதி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது தலைவற்ற விளையாட்டெல்லோ. விஜயசாந்தி தான்தான் முதல் என்று சொல்ல, தலைவர் இரண்டுதானே பெரியது என்று கடுப்பேத்துவார். படம்: மன்னன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்பிடி நடந்தால், குல்தீப்புக்கு 5 விக்கட்தான். இந்தியா இன்று விளையாடிய அதே அணியுடனதான் இறங்கும் என்று நினைக்கிறேன். இன்னொரு வேகப்பந்து வீச்சாளரைக் கொண்டுவந்து, ஹெட்ட அடிக்க விட்டா, பிறகு ஒருத்தராலும் அந்தாள நிப்பாட்ட முடியாது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான். எப்பிடி மீண்டும் மீண்டும் இப்பிடியான கட்டங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். மற்ற அணிகளினால் அவர்களைப் போல் தொடர்ச்சியாக ஏன் ஆடமுடியவில்லை என்ற பொறாமைதான், அவுஸ்ரேலியா தோற்கவேண்டும் என்று நான் விரும்புவது.
-
ஆஸ்கர் விருதுகள் பலவற்றை வென்ற ‘அனோரா’
ஹாலிவுட்டுக்கு விபச்சாரிகள் என்றால் ஒரு மயக்கம். விபச்சாரிகளாக நடித்த நிறைய நடிகைகள், சிறந்த நடிகை அல்லது சிறந்த துணை நடிகைக்கான விருதுகளை பலமுறை வென்றிருக்கிறார்கள். இந்தப் படமும் அதேதான். சிறந்த பட விருதையும் சிறந்த நடிகை விருதையும் தட்டிச் சென்றது. விபச்சாரிகளுடன், அப்பிடி என்ன மயக்கமோ. என்ன, விபச்சாரி என்பது நடிப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உள்ள ஒரு பாத்திரம்தானே. அவர்கள் வாழ்க்கையில் இல்லாத உணர்வுகளா. அதனால்த்தான், பெரிய பெரிய நடிகைகள் எல்லாம், மிகவும் விரும்பி அப்பாத்திரத்தை ஏற்றுக்கொள்வார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அஜந்த மென்டிஷ் ஒரு தொடரில், இலங்கையில் வைத்து இந்தியாவ உருட்டு உருட்டென்று உருட்டினார். அடுத்த தொடரில் இந்தியாவில் வைத்து, இந்தியா வெளுத்துத் தள்ளிவிட்டுது. அதிலிருந்து அவரால் பெரிதாக ஷோபிக்க முடியவில்லை. எல்லோருக்கும் இந்தியா காட்டிக்குடுத்து விட்டுது. வருணுக்கும் அதேதான் நடக்கும். இப்போ சிறிய மாற்றங்களுடன் வந்திருக்கிறார். நீங்கள் சொன்னமாதிரி, வேகமாகவும் வீசுகிறார். ஆனால் டிராவிஷ் ஹெட்டுக்கும், மாக்ஸ்வெலுக்கும் எப்பிடிப் போடப்போகிறார் என்பத்தில்தான் எல்லாம் இருக்கிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியாவுக்கு பெரிய தலைவலி தலைதான், டிராவிஷ் ஹெட். கொஞ்சநாளா, அவனும் இந்தியா என்டா சூரசம்காரம் ஆடுறான். அதுக்கு ஏதாவது ஒழுங்கோட வந்தால், இந்தியாவுக்கு இலகுவான வெற்றியாய் அமையும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான். மழை அவரையும் பாதித்துவிட்டது. பார்ப்போம் அரை இறுதிச் சுற்றில் என்ன மாயம் செய்கிறார் என்று. பரவாயில்லை. வசியா கிருபனா. பொறுத்திருந்து பார்ப்போம். வாத்தியாரும் உதவக்கூடும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
புலவர் எல்லோரையும் ஏப்பம்விட்டு, வந்துட்டாரையா முதல்வராக. மொத்தமாக 48 புள்ளிகளில் 39 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவர் மட்டும்தான், இரு குழுக்களிலும் முதலாவது இரண்டாவது அணிகளைச் சரியாகக் கணித்தவர். இங்கிலாந்து இறுதியாக வரும் என்று கணித்தவர், பாகிஸ்தானுடன் கோட்டைவிட்டுவிட்டார் (அந்த ஒரு புள்ளிதான் அவருக்குக் கிடைக்கவில்லை). தரமான சம்பவம் புலவர். 🖖
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அரை இறுதிப் போட்டிகள் ஆரம்பமாக இருக்கும் இந்த வேளையில், யாழ் கள நிலவரம் எப்படி இருக்கின்றது. எல்லாப் புள்ளிகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் யார் முதல்வர்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனது அரையிறுதித் தெரிவுகளில் ஒரு அணி மாறிவிட்டத. இங்கிலாந்தைத் தெரிவு செய்தேன். ஆனால் அவுஸ்ரேலியா அவர்களை அடித்துத் துவைத்து விட்டது. அரையிறுதி: இந்தியா எதிர் அவுஸ்ரேலியா தென்னாபிரிக்கா எதிர் நியுசிலாந்து
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வருணின் தலைமையில் சுழல்பந்து வீச்சாளர்கள் சுழட்டிய சுழட்டில், நியுசிலாந்து ஆட்டங்கண்டது. இந்தியாவுக்கு இலகுவான வெற்றியாக முடிந்தது. இக்களத்தின் விருப்பமும் நிறைவேறவில்லை. புள்ளிகளாவது கிடைத்ததே.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதிசயம் இல்லை. அவர்கள் சுழலில் மாட்டிக்கொண்டார்கள். 7வது வீரர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது நல்லாருக்கே. தோற்றால், வேணும் என்று தோற்றது என்று சொல்லலாம். வென்றால், இது தேவையில்லாத வெற்றி என்று சொல்லலாம். எப்பிடி என்டாலும் இந்தியா தோற்றால் சரி. அப்பிடித்தானே. 😀
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியாவிடம் அவ்வளவு பயமா. அது ஒரு பல்லுப் போன பாம்பு. இம்முறை கடியாது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிருபனும் சழைக்காம ஒரே கேள்வியைத்தானே கேற்கிறார். யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முன்னாடி இரண்டு பேரையும் பிடிக்கமுடியுமா. இல்ல இது முடிந்த முடிவா.