Everything posted by செம்பாட்டான்
-
விதியற்றவர்
விதி யாரைவிட்டது. அது நிழல் போல, எப்பொழுதும் எங்கள் பின்னாலேயே வந்தபடி. விதியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றோம்.
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
அந்த மூன்றாவது கோழிக்குஞ்சு யார். தொலைந்து போன அந்தக் கோழிக்குஞ்சு யார். ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்.😀 பெண்களுடன் படிக்கவே இல்லை என்று சொல்லும் பொழுதே புரிகிறது.😉 நந்தன் எப்போதும் பூடகமாகவே பதில் அளிப்பார். 😃
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சிங்கம் என்று சொல்லி மானத்தைக் காப்பாற்றி விட்டியல். 😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாளைக்கு இங்கிலாந்து வென்றால்தான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும். ஆனால் நான் தெரிவு செய்தது ஆப்கானிஸ்தான். இங்கிலாந்து அடுத்த கட்டத்திற்குப் போகும் என்றும் நான் தெரிவு செய்துள்ளேன். ஐயகோ என் செய்வேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அல்வாயன் காட்டிலை மழை. அதிர்ஷ்டக்காரன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்பா அப்பாதான் இல்லையா. நீங்கள் குடுத்து வைத்தவர். அந்த வயதிலேயே, உங்களைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். அது ஒரு பாக்கியம். நான் பிடித்த பிடிவாதம் ஒன்றுக்கு, ஒருநாள் விட்டார் அடி. அடி என்டா அப்பிடி ஒரு அடி. அப்போ ஒரு பத்து வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். அதன்பின், ஒருதடவை கூட குரலை உயர்த்தியே ஏசியதில்லை. நானும் கரைச்சல் குடுத்ததில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தப் பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது. "இந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன் ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பானே" டில்கார பெனான்டோ 6 அடிக்கு மேலே. மிகவேகப் பந்து வீச்சாளர். நீங்கள் 6 அடி என்று சொன்னவுடன் அவர்தான் ஞாபகம் வந்தார். அப்ப, கோசானும் பந்துடன் ஓடிவரும்போது, டில்கார போலவே இருத்திருப்பாரே என்று கற்பனை பறக்குது. நீங்கள் ஓடுவது கண்முன்னே விரிகிறது. அதுசரி, நீங்களும் வேகப்பந்து வீச்சாளர்தானே. உயரத்தைவைத்து அப்பிடித்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டேன். சுரேனின் மகள் இப்போது இங்கிலாந்து அணியில் விளையாடுகின்றா. தெரியும் தானே.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்பிடி நடந்தால் ... என்னுடைய தெரிவுகள் சரியாகும். அவுஸ்ரேலியா வெளியே போகும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அந்தப் பாறைமேலே, பேச்சுவார்த்தை எப்பிடிப் போயிருக்கும் என்று என்னால் முழுதாக கற்பனை பண்ண முடிகின்றது. நம்பெற்றோர்களுக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். நாம எல்லோரும் அப்பிடித்தான் போல. கொஞ்சமெண்டாலும் வாசியடா என்று என்னுடைய பெரியப்பா ஏசுவார். இப்போதும் விளையாடுகிறீர்களா. உங்களைப் போல் திறமையாளர்கள் வெளிவராமலே போயிருக்கிறார்கள். இன்றைய சூழலில் நிறைய சந்தர்ப்பங்கள். அன்றைய சூழலில் ஒன்றுமே இருக்கவில்லை. அதுவும் தமிழர்களுக்கு.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மகிழ்ச்சி. அவர்கள் எப்போதுமே உள்ளூரில் விளையாடுவதை விட்டதே இல்லை. ரஸல் ஆரன்லட் டெனிஸ் பந்துல விளையாட வந்திடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கும் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி. மறக்க முடியாத தருணங்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கேட்பதற்கு சந்தோசம் கோசான். பிறகு நீங்கள் தொடர்ந்து விளையாடவில்லையா. விடயம் தெரிந்தவர்களுடன் உரையாடுவதும் மகிழ்ச்சிதான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓ அப்பிடி வேறை இருக்கோ. இப்போ செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், எல்லாப் படமும் வடிவா செய்யலாம்தானே. அதையும் நம்பலாமோ தெர்யாது 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
காயம் காரணமாக, அவர்கள் பந்துவீச்சு சுமார்தான். ஆனால் அவர்கள் துடுப்பாட்டத்தில் அதனை ஈடுசெய்ய முடியும். இங்கிலாந்தை வைச்சு செய்தாங்களே. எந்தப் பந்து வீச்சையும் துவம்சம் செய்யக்கூடிய இருவர் இருக்கினம். ஆனா.... ரபடா இருக்கான், எல்லாருக்கும் சேர்த்து.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கனக்க பிரபலங்கள் இந்தக் களத்தில இருக்கினம் போல. சச்சின் வந்தாக, குலுஸ்னரோட பாத்தாக, ஜெயசூரியாவோட கும்பிட்டாக..... இப்பிடிச் சொல்வி எங்களுக்கு எரிச்சலூட்டுறதே வேலையாப்போச்சு. 😛
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மையில்லாத விடயங்களைத் தவிர்ப்பது நலம். எமக்கு என்று ஒரு சுயகட்டுப்பாடு வேண்டும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றுடன் யாழ் களப்போட்டியில் இருந்து ஒருவரை தூக்கியாச்சு. இன்னும் 22 பேர் இருக்கினம். ஒவ்வொருத்தராக தட்டித் தட்டி மெதுவாக மேலே வரவேண்டியதுதான். 🫣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
புரிந்தது. புதிதாக எழுதுவதால், என்ன நடந்தது என்று புரியாமல்தான் அதைக்கேட்டேன். இத்தளத்தில் எப்படி இயங்குவது என்று இப்போதுதான் அறிய முயற்சிக்கிறேன். ஒரு மனக்கிலேசமும் இல்லை. அட.... அந்தக் கஞ்சத்தனம் கரிசனையுடையது. நாம எல்லோரும் ஏதோவொரு விதத்தில கஞ்சர்களாக இருக்கப் பழகிக்கொண்டோம். நாம் வளர்ந்த சூழல் அப்படி. இது நீங்கள் நம்மாளு என்ற கோணத்தில்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சாக்குப் போக்குக்கு இக்களத்தில் குறைவேது. அதுவும் சம்பந்தா சம்பந்தமில்லாமல். 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த வசனம் நான் சொல்லியது என்று காட்டுகின்றது. நான் அப்பிடி சொல்லவேயில்லை. எப்பிடி இப்பிடிக் காட்டும். எப்பிடி அல்வாயன். எனக்குப் புரியவில்வை. "ரசோவும் சும்மாதான் ..இருக்காப்போல....என்னை கலாய்க்கிறது மட்டுமில்லை ...கவிதை ..கதையுமெல்லே எழுதுறார்....."
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதுதான் கடைசிப் போட்டி. அனேகமா ஒரு உப்புச்சப்பு இல்லாத போட்டியாத்தான் இருக்கும். வெளுக்கிறது ஒன்றுமே இருக்காது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதல்வர் என்று சொன்னவுடனேயே, அப்பிடி இப்படி வரும் போல. ஆனால் உங்கள் காண்டீபத்திலிருந்து விடுகின்ற அம்புகளை விட்டுவிடாதீர்கள். டிரம்ப் சும்மாதான் இருப்பார். ஆனா ரசோதரனுக்கு நேரம் இருக்குமோ தெரியாது. நாம எல்லாரும் சேர்ந்து பாகிஸ்தான கொண்டுபோறம். 😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ரசோதரனுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள். வங்காளதேசம் நியுசிலாந்துக்கு அடிக்குது (நாளைக்கு). பிறகு பாகிஸ்தான் வங்காளதேசத்தை ஓட விடுது. இந்தியா நியுசிலாந்த முடிச்சு வைக்குது. பாகிஸ்தான் உள்ள வருது. நம்பிக்கைதானே வாழ்க்கை. வாழ்ந்து பார்த்திடலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
துரத்தல் மன்னன் மிகவும் அருமையாக துரத்தி முடித்தார். கடைசியில் அவர் அந்த 100ஜ எட்டுவாரா என்று கலக்கம் ஏற்படுத்தினார். அருமையாக ஆட்டத்தை முடித்து வைத்தார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளார்கள். அவர்கள் அணியில் ஒரு மாற்றம். இமாம் வந்திருக்கின்றார். இந்தியா அதே அணியுடன் இறங்குகிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆமாம். பார்கர் காயமடைந்ததால் அணியை நிட்டு நீங்கினார். இமாமும் நன்றாக அடித்து ஆடக்கூடியவர்தான். இந்தியாவுக்கு நிறைய தேர்வுகள் இருக்கிறது. அது ஒரு நல்ல பிரச்சினைதானே.