சிறியண்ணாஎன்னிடம் உரிமையாகக் கேட்பதற்கு ஏனண்ணா "யாரோ" என்ற பீடிகை???
கருத்துக்களத்தில் அடிபட்டாலும் நான் மானசீகமாக நேசிக்கும் ஒருவர் தாங்கள். ஒரே நாட்டில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் எப்பவும் பிரியாவுடன் வந்தே உங்களைச் சந்திக்கலாம்.
எதுக்காகவும் நான் அவளின் விருப்பத்திற்கு தடை போட்டதில்லை அண்ணா. நீ ஏன் யாழுக்கு போவதில்லை என்றும் கேட்டதில்லை. நான் கூடத் தான் முன்னர் போல எழுதுவதும் இல்லை, யாழுடன் நேரம் செலவளிப்பதும் இல்லை. ஒரே ஒரு காரணம் முன்னர் போல நான் உட்பட யாழுறவுகளுடன் நல்ல நட்புநிலை இல்லை. மாம்ஸ் எனறும்,அண்ணா என்றும் , மச்சி, நண்பா என்றும் ஒரு நெருக்கத்துடன் பழகினோம் ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம்.