• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

போல்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  6,101
 • Joined

 • Days Won

  47

Everything posted by போல்

 1. யாழ். மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாநகர சபை சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வியாபார நிலையங்களில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர். டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக பிரதேச மட்டக் குழுவினுடைய செயற்பாடுகள், கிராமிய சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சுகாதார குழுவினரால், வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்பட்டது. கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிராமமாக மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவ்வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போது எதிர்நோக்குகின்ற இடர்பாடுகளை களைவதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். வெற்றுகாணிகளில் அந்த காணிச் சொந்தக்காரர்கள் அந்தக் காணியை முறைப்படி பற்றைகளை வெட்டி அகற்றி அதற்கு மேலாக அங்கு காணப்படுகின்ற கொள்கலன்கள், சிரட்டை பிளாஸ்டிக் கொள்கலன் போன்றவற்றை அகற்றுவது பிரதானமானதாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று வீடுகளிலும் நீர் வழிந்தோடும் பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. தற்பொழுது கொரோனாவுக்கு இணையாக இந்த டெங்கு பரவலும் நாட்டில் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழில்-டெங்கு-ஒழிப்பு-வா/
 2. மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் (தர்ஷன்) மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பிரஜையான தர்ஷன் Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடமிருந்து ரூ .10 மில்லியன் கமிஷனைப் பெற்றார் என்று குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது. இது குறித்து ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளது. அந்த முறைப்பாட்டில், ஆறுமுகம் தொன்டமானின் அமைச்சில் தர்ஷன் உயர் பதவியில் இருந்தார். அவர்தான் அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் மற்றும் பல்வேறு திட்டங்கள் போன்றவற்றுக்குப் பொறுப்பாகச் செயற்பட்டதுடன் அனைத்து கட்டுமான மற்றும் திட்டங்களுக்கும் அவர் 10 வீதம் கமிஷனைப் பெற்றார் என்பது நாங்கள் விசாரித்தபோது தெரியவந்தது. மீள்குடியேற்ற அமைச்சால் செயற்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டம் மீள்குடியேற்ற அமைச்சால் Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பதற்கு தர்ஷன் கமிஷன் பெற்றார் என்று தற்போது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . ஆயிரம் வீடுகளுக்கு தர்ஷனின் கமிஷன் 10 கோடி ரூபா. பணத்தில் ஒரு பகுதி முற்கூட்டியே செலுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சகத்துடன் இந்தத் திட்டத்தை ஒருங்கிணைத்த விஜயலட்சுமி கேதீஸ்வரம் இதற்கு உடன்படாததால் அவரை தர்ஷனும் தொன்டமானின் செயலாளர் முகம்மதுவும் அச்சுறுத்தியுள்ளனர்" - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/144813
 3. ஸ்ரீலங்காவில் தனது பெயரைப் பயன்படுத்தி அரச நிறுவனங்கள் மீது எவரும் அழுத்தம் பிரயோகித்தால் உடன் அறியத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போலியான ஆவணங்களை தயாரித்து அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருவது பற்றி தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மோசடிக்காரர்கள் அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று தமது பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அழுத்தங்கள் எனது பணிப்புரையின் பேரிலேயே கொடுக்கப்படுவதாகவும் அந்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாக எனக்கு தெரியவந்துள்ளது. அரச பொறிமுறைக்கு வழங்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களை அரச பணியாளர்கள் உரிய முறையில் நிறைவேற்றுவது தொடர்பில் நான் முன்னுரிமையளித்து நோக்குவேன். சில பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் சட்டத்திற்கு அமைவாக பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரச பொறிமுறையைச் செயற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் எவரேனும் எனது பெயரை பயன்படுத்தி அழுத்தங்களை மேற்கொள்ள அல்லது அரச அதிகாரிகளிடத்தில் செல்வாக்குச் செலுத்த முற்படுவார்களேயானால், ஜனாதிபதி செயலகத்தின் 011 235 4479 , 011 235 4354 ஆகிய தொடர்பு இலக்கங்கள் ஊடாக உடனடியாக தொடர்பு கொண்டு அறியத்தரமுடியுமென அவர் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144841?ref=imp-news
 4. மேலதிக நேரத்தில் மட்டும் வேலை செய்து பழக்கப்பட்டவர்கள்!
 5. முண்டுகொடுத்து பொய்களை அள்ளிவீசி பிழைப்பு நடத்தும் பலர் தேர்தல் காலமென்பதால் புற்றீசல் போல வெளிப்படுவார்!
 6. காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் நிர்வாண நபரை (கிரிஸ் பேய்) கண்டுபிடிக்க பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர். நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெலுவ பெலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வார காலங்களாக நெலுவ மற்றும் ஹினிதும பொலிஸ் பிரதேசங்களில் வீடுகளுக்கு நிர்வாணமாக நுழையும் நபர்கள் அங்குள்ளவர்களை அச்சுறுத்துவதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக திடீர் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிரிஸ் பேய்களின் நடமாட்டம் காரணமாக பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் அவ்வாறு நடமாடும் மக்களை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் திணறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.tamilwin.com/community/01/247872?ref=home-imp-parsely
 7. அண்மையில் சகுனி சம்மந்தனின் அறிக்கைகள் விரைவில் ... விரைவில்..... என்று வெளிவருகிறது. ஏன் உடன் வெளியிட முடியாது? இது சிங்கள அரச கொலைகாரர்களுடன் பேரம் பேசி தங்களுக்கு சலுகைகளை பின்கதவால் பெறும் தந்திரம். சலுகைகள் கிடைத்தால் அறிக்கைகள் வரவே வராது.
 8. இலங்கையின் மாணவர்களுக்கு சீன அரசாங்கம் 125 ஆயிரம் முகக்கவசங்களை வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் இந்த முகக்கவசங்களை சீனத் தூதரகத்தின் அதிகாரி ஹூ வெய் கையளித்ததாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கே இந்த முகக்கவசங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. சீனத் தூதரகம் இலங்கை மாணவர்களுக்கு சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அன்பளிப்புக்களை வழங்கிவருவதாக தூதரக அதிகாரி இதன்போது குறிப்பிட்டார். அத்துடன் கொரோனவைரஸ் பாதிப்பால் நலிந்துப்போயிருக்கும் பொருளாதாரத்துக்கு சீனத் தூதரகம் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/community/01/247851?ref=home-feed
 9. "பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். இதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ராஜபக்ச அரசின் இந்த படுமோசமான செயல்களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டமான அறிக்கையை விரைவில் நாம் வெளியிடவுள்ளோம்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நீதியான, சட்டத்தை மதிக்கும் சமூகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதில் முந்நாள், இந்நாள் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மாத்திரம் உள்ளடக்கிய 13 பேரை ஜனாதிபதி நியமித்துள்ளார். அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதிலும் பௌத்த மதம் சார்ந்த பிக்குகள், படை அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 11 சிங்களவர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஒரு தமிழரோ, ஒரு முஸ்லிமோ இல்லாமல் இந்தச் செயலணியை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உருவாக்கியுள்ளார். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், ஜனாதிபதி கோட்டாபயவின் இந்த சர்வாதிகார ஆட்சி முறைக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் காட்டமான அறிக்கையை வெளியிடவுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/144690
 10. உருப்படியான முயற்சி! சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டுக்கள்!!!
 11. மூடர்களின் கேலிக் கூத்துகளை ஒத்த சிங்கள-பௌத்த அரசின் கேலிக் கூத்துகளை அறிய இந்த திரியில் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புக்களே போதுமானது.
 12. ஊரை ஏமாற்றும் நடவடிக்கையில் ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இறங்கியுள்ளார்!
 13. சாட்சி போதாது என்று பாமர, அறிவற்ற தமிழ்மக்களை ஏமாற்றும் சுமந்திரன், சாட்சிகள் போதும் என்று தொடுத்த வழக்குகளில் 99% ஆனவற்றில் தோல்வியடைந்துள்ளார். பெருமெடுப்பில் வித்தியாதரன் போன்ற மோசமான பத்திரிகையாளர்களின் போற்றுதல்களுடன் வாதாடிய கடைசி வழக்கிலும் படுதோல்வி!
 14. அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்து சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதிமன்றுகளால் கொலையாளியாக தண்டனை விதிக்கப்பட்ட கொலையாளிகளை விடுதலை செய்யும் போர்க்குற்றவாளிப் பயங்கரவாதி கோட்டாபய ஆட்சியை கைப்பற்றிய நிலையில் எதுவும் நடக்கலாம். கைது எல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகங்கள்.
 15. கள்ள வாக்குகளை எங்கெங்கு செலுத்தமுடியுமென திட்டமிடுகிறார்கள். கொழும்பில் வேலைசெய்யும் 8 இலட்சம் உதவியாளர்களில் குறைந்தது 6 இலட்சம் மக்களின் வாக்குகளை திருடினாலும் மேலதிகமாக உறுப்பினர்களை பெறமுடியும். 2/3 பெரும்பான்மை பெற்று சட்டங்களை தங்கள் வசதிக்கு இயற்ற விரும்பும் இராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் இவர்களின் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் அவ்வப்பகுதிகளில் கள்ள வாக்குகளை செலுத்துவது உட்பட பல்வேறு தில்லுமுள்ளுகளைச் செய்ய தயாராகி வருகின்றனர்.
 16. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களிக்காடு பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி அற்ற முறையில் கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், அவ்விடத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் நேற்று சென்றுள்ளனர். குறிப்பாக குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்று செய்தி சேகரிக்கும் பணியை ஆரம்பித்ததும், அந்த இடத்தில் இருந்த டிப்பர் வாகனங்கள் அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றதோடு மீண்டும் அந்த இடத்திற்கு கிரவல் ஏற்றுவதற்காக வருகைதந்த டிப்பர் வாகனங்களும் திரும்பிச் சென்றுள்ளன சம்பவ இடத்துக்கு சென்றதும் சம்பவத்தை அவதானித்த ஊடகவியலாளர்கள் முள்ளியவளை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கும் வனவள திணைக்கள அதிகாரிக்கும் தகவல் வழங்கி இருந்த போதும் அந்த இடத்தில் இருந்த வாகனங்கள் அனைத்தும் அவ்விடத்தை விட்டு செல்லும் வரை சுமார் அரை மணி நேரமாக அந்த இடத்திற்கு பொலிஸாரோ வனவள அதிகாரிகளோ வருகைதரவில்லை அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பக்கோ இயந்திரமும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அந்தஇடத்தில் இருந்து அகற்றப்படும் வரை வனத்துறை அதிகாரிகளும் பொலிசாரும் வரவில்லை. அந்த இடத்திலிருந்து மிகவும் அண்மையில் பொலிஸ் நிலையமும் வனவள அலுவலகமும் இருந்தபோதும் அவர்கள் வருகை தராமல் அந்த இடத்திலிருந்து சட்டவிரோத பணியில் ஈடுபட்டவர்கள் விலகிச் செல்லும் வரை இவர்கள் அவ் இடத்திற்கு வரவில்லை இவ்வாறு சட்டவிரோதமாக கிரவல் அகழ்வு காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அந்தப் பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் அனைத்தும் உயிரற்ற நிலைக்குச் சென்றுள்ளன. இக் கிரவல் அகழ்வானது ஏற்கனவே பிரதேச சபையுடன் இணைந்து மரநடுகைக்கென சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக பாரியளவிலான விருந்தினர் விடுதி ஒன்றை அமைத்து வரும் அவலோன் நிறுவனத்தினராலேயே ஏற்றிச் செல்லப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றார்கள். அப்பகுதியில் கிரவல் அகழ்வில் ஈடுபட்டவர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் கேட்ட போது அங்கு நின்றவர்கள் அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்கவில்லை. இவ்வாறு ஊடகவியலாளர்களை கண்டவுடன் வாகனங்களை எடுத்துச் செல்கிறார்கள் எனில் இங்கு சட்டவிரோத தொழில் இடம் பெறுவது உறுதியாகி இருக்கின்றது. இங்கிருந்து அனைத்து வாகனங்களும் திரும்பி சென்றபின்னர் அந்த இடத்துக்கு வருகைதந்த வனவள அதிகாரி 15 கியூப்க்கு அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட போதும் அந்த இடத்தில் சுமார் 150 கியூப்க்கு மேல்நேற்று கிரவல் அகழப்பட்டுள்ளமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக குறித்த பகுதியை அண்டிய பகுதிகளில் அனைத்து வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு பாரியளவிலான மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இவ்வாறாக சட்டவிரோத கிரவல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் தகவல்கள் வழங்கியுள்ளார்கள். இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகாரிகள் பூரண ஆதரவை வழங்குகின்றார்களா என்ற சந்தேகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக குறித்த இடத்திற்கு வருகை தந்த வனவள திணைக்கள அதிகாரி அவ்இடத்திலிருந்து திரும்பி செல்லும் போது, அகழ்வில் ஈடுபட்ட ஒரு நபரை மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் கூட அணியாமல் ஏற்றிச் செல்கின்றார். இவ்வாறான செயற்பாடுகள் இவர்கள் குறித்த நபர்களுடன் என்ன ஒப்பந்தத்தில் இந்த வேலைகளை செய்கின்றார்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்த தவறும் பட்சத்தில் முல்லைத்தீவு வனப்பகுதிகள் அழிந்து உரிய காலத்தில் மழைவீழ்ச்சி இன்றி விவசாயத்தையே நம்பி வாழும் மக்களை பாதிக்கும். எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/144608
 17. தமிழ் அரசியல் அரங்கில் செயற்பட்டுவருகின்ற பல அரசியல் தலைவர்களும் சுமந்திரன் வெளியிட்டு வருகின்ற நிலைப்பாடுகள், கருத்துக்கள் தொடர்பாக மிகப் பெரிய அதிருப்திகளை பதிவுசெய்து வருகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் அங்கம் வகிக்கும் பெரும்பாலான தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் சுமந்திரனின் போக்கு, நிலைப்பாடுகள் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றார்கள். பெரும்பாலான தமிழ் மக்கள் சுமந்திரனை திட்டி தமது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஏன்? சுமந்திரன் மீது ஏன் இத்தனை விமர்சனங்கள் எழுகின்றன? எதற்காக சுமந்தினை அவரது கட்சியின் சகாக்கள் கூட எதிர்க்கின்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுகின்ற 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி இது: https://www.tamilwin.com/politics/01/247671?ref=archive-feed
 18. டெங்கு, எலி காய்ச்சல் தீவிரம் - சுகாதார அமைச்ச விடுத்துள்ள எச்சரிக்கை நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் ஆபாயம் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மே மாதத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சளினால் 920 பேரும் எலி காய்ச்சளினால் 740 பேரும் பீடிக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் டெங்கு காய்ச்சளினால் 19,940 பேரும் , எலி காய்ச்சலினால் 2,198 பேரும் பீடிக்கப்பட்டிருந்தனர். கொழும்பு , கம்பஹா , களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் டெங்கு காய்ச்சள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தப்படுத்தி கிருமிநாசினியை தெளிக்குமாறு சுகாதார பிரிவினருக்கு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில் 1735 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/community/01/247713?ref=home-feed
 19. மாணவர்களின் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்! க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்டை நடத்துவது தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பொது தேர்தல் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளமையினால் பரீட்சைகள் தாமதமாகுமா என பரீட்சைகள் ஆணையாளரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்தவர், “நாட்டின் தற்போதைய நிலைமையை நாங்கள் அவதானித்து வருகின்றோம். இன்னமும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே பரீட்சைகள் தொடர்பில் ஏதாவது தீர்மானம் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144603?ref=imp-news
 20. கூட்டமைப்பின் பேச்சாளர் சிங்கள-அரச பயங்கரவாதத்துக்கு துணை போவதை தட்டிக்கேட்க வக்கில்லாத விந்தன் கனகரத்தினம் தமிழரசுக் கட்சி மீது பழியை சுமத்தி தப்புவது கோழைத்தனமான அரசியல். இந்த கோழைகள் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எடுக்காவிட்டால் வழமைபோல சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு வழமை போலவே முண்டு கொடுப்பார்கள்.
 21. ஐக்கிய தேசிய பயங்கரவாதக் கட்சியின் அரசில் நடந்த முறைகேடுகள்?
 22. திட்டமிட்டு கடத்தத் தெரிந்த தந்தைக்கு திட்டமிட்டு ஒற்றுமையாக குடும்பம் நடத்தத் தெரியவில்லை.
 23. சனிக் கிழமை முதல்..... ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவித்தல் ஜுன் 6 ஆம் திகதி சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இதேவேளை முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இரவு பத்து மணிக்கு அமுலாகும் ஊரடங்குச்சட்டமானது, நாளை வியாழக்கிழமை (4) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (5) முழு நேரமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144548?ref=home-imp-parsely