பணத்திற்காகவும், சமூக அங்கீகாரத்திர்க்காகவும் இங்கே மத மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நடக்கும்.. காரணம் களையப்படாதவரை...
மதம் என்பது எம்முடைய அடையாளம்.
ஆம் இந்த மதம்தான் எம் மீது சாதிய கட்டமைப்புகளை அமிழ்த்துகிறது. இந்த மதத்தின் பெயரில்தான் மனுஸ்மிருதி உருவாக்கப்பட்டது. அதன் பெயரிலேயே நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம் . அதன் பெயரிலேயே எனது பாட்டன் முப்பாட்டன் மிக கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். அதன் பெயரிலேயே எமக்கு சமூக நீதி மறுக்கபப்டுகிறது. நான் இந்து என்று சொல்லிக் கொண்டிருக்கும் வரையில் கீதை இருக்கும், கீதையில் சொல்லப்பட்ட வர்ணாசிரம் இருக்கும். அதன் பெயரால் நான் மீண்டும் துன்புறுத்தப்படலாம்.
வேறு எங்கும் சாதிப் பாகுபாடு இருக்கிறதோ இல்லையோ? சுரண்டல் இருக்கிறதோ இல்லையோ?? தெரியாது. அதைப் பற்றிய கவலையும் எனக்கு இல்லை. ஆனால் இங்கு இருக்கிறது அதுவும் மிக கடுமையாக இருக்கிறது. சாதியின் பெயரால் சிதைக்கப்படுகிறார்கள். வறுமையின் பெயலால் வதைக்கபப்டுகிறார்கள். சமூக நீதி பெறவும், வறுமையிலிருந்து விடுபடவும் யாரவது உதவ மாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். சில பேர் வருகிறார்கள் அவர்கள் அடையாளத்தை மற்றக் கோருகிறார்கள். இந்த அடையாளத்தை மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு வறுமையில் இருந்து தப்பிக்க ஒரு வழி தெரிகிறது. தனது தலைமுறைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. மாறுவது என முடிவு கொண்டு மாறுகிறார்கள். ஏனெனில் இந்த அடையாளம் நல்ல வாழ்வைத் தரவில்லை வசதியை தரவில்லை. இதனால் யாருக்கு என்ன கோபம்?? இவ்வளவு காலம் நான் சுரண்டப்படும்போது குரல் கொடுத்தார்களா? இல்லை. வதைக்கப்படும்பொது வாழ்வு கொடுத்தார்களா? இல்லை. அப்புறம் இன்ன இப்பொழுது?? ஏன் அடிமை எண்ணிக்கை ஒன்று குறைகிறதே என்று வருத்தமா?
பணத்திற்காகவும், சமூக அங்கீகாரத்திர்க்காகவும் இங்கே மத மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நடக்கும்.. காரணம் களையப்படாதவரை...