-
Posts
33749 -
Joined
-
Days Won
29
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by தமிழரசு
-
"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடிக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த 15.02.2009 அன்று தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: 15.02.2009 தமிழீழம். எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே! மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம். நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள். 'மாவீரன்' முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது. எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும். மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும். புலம்பெயர் எமது உறவுகளே! நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை. மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது. வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது. விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும். அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே! உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள். எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள். அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: 15.02.2009 தமிழீழம். அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே, நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார். அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா? உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை. அன்புக்குரிய மக்களே! எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும். அன்புக்குரிய மக்களே! எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா? யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளார்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது. அன்புக்குரிய மக்களே! எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள். அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது. சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது. அன்புக்குரிய மக்களே! நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும். நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும். அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே! போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள். உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது. ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது. சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா? அன்புக்குரிய மக்களே! எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் 'ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.' 'கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்' கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும். அன்புக்குரிய மக்களே! எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும். அன்புக்குரிய மக்களே! தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை. எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே! எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது. வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான். பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா? நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும். அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே! உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம். இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும். அன்புக்குரிய மக்களே! சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார். எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது. நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம். அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே! நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.http://www.eeladhesam.com/index.php?option=com_joomgallery&func=watermark&catid=14&id=3952&Itemid=53 திலீபன் அண்ணை கூறியது போல் "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்" "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்" இப்படிக்கு, தம்பி, அண்ணா, மகன், போராளி இ.ரூபன் http://youtu.be/-_XcRpY-hUs http://youtu.be/FddUCyW7t6A http://youtu.be/zCu-mHV7bVQ http://youtu.be/pwqFojOAPZ8 http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழம் என்னும் புனித இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீர வேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எனது வீரவணக்கம்.
-
லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள்
தமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு
பொன்னம்மான் ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் இவருக்கு இவருடன் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். -
லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள்
தமிழரசு posted a topic in மாவீரர் நினைவு
நாவற்குழியில் எதிரிகளின் பாசறையைத் தேடிச் சென்று பாசறை தகர்ப்பின் முயற்சியில் வித்தான மாவீரர்களின் நினைவினைச் சுமந்து.. விழிகளை நனைத்த வெடியின் ஓசை இன்னும் செவிகளின் சேமிப்பில் .. விடியலின் வித்தாகிப் போன வீரர்களே.. – உங்கள் சிரித்த முகங்களை நினைத்து .. தளராது தொடர்வோம் உம் பயணம்… தமிழீழம் அமைப்போம் உறுதி…. லெப் கேணல் பொன்னம்மான் யோகரத்தினம் குகன் தாயின் மடியில் : 23-12-1956 தாயக மண்ணில் : 14-02-1987 யாழ்ப்பாணம்,தமிழீழம் லெப் கேணல் பொன்னம்மான் உடன் விடுதலைக்காய் வித்தானவர்களின் விபரம் மேஜர் கேடில்ஸ் ( திலீபன்) கப்டன் வாசு (சுதாகர்) லெப். சித்தாத்தர் (வசீகரன்) 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்) வீரவேங்கை யோகேஸ்(பாலன்) வீரவேங்கை கவர்(நகுலேஸ்வரன்) வீரவேங்கை அக்பர் (லோகநாதன்) வீரவேங்கை குமணன்(மோகனலிங்கம்) வீரவேங்கை தேவன்(வசந்தகுமார்) இந்த சம்பவத்தின் போது புவுசர் வெடித்ததில் அக்கம் பக்கத்தில் இருந்த 48 பொதுமக்கள் இறந்தார்கள் . எமக்கு கிடைத்த பெயர் விபரங்களை நாம் பிரசுரிக்கின்றோம் . உங்களு தெரிந்தவர்கள் இருந்தால் எமக்கு பெயர் விபரம் அனுபிவைக்கவும் . சி. சிவசோதி த.சின்னராசு ஆ.நாகலிங்கம் சி .அழகக்கோன் தா .திபிகா சி.ரகு நா. தயாபரன் சே. செல்லையன் க. பசுபதி சி.வேலயுதம் சிவலிங்கம் லிங்கேஸ்வரி சிவலிங்கம் லிங்கேஸ்வரன் சிவலிங்கம் கிருஷ்ணன் சிவலிங்கம் கீதா சா.முத்துராஜா வை.கந்தசாமி தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா…. என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது. எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும். ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாகஈ தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள். எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான். எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். 1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம். வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உடபுகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது. தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின. பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள். இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர். 14-2-87 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும். முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. http://youtu.be/LeD5DARTDhQ நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார். கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்… மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார். முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. ‘அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ” என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள். http://meenakam.com/2012/02/14/20901 தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம். -
நான் தாயை நேசிக்கின்றேன் ...... அதனை விட எனது தாயகத்தை நேசிக்கின்றேன் ....... ஏன் என்றால்..... எனக்கு ஒரு தாயை கொடுத்ததினால் !
-
நான் தாயை நேசிக்கின்றேன் ...... அதனை விட எனது தாயகத்தை நேசிக்கின்றேன் ....... ஏன் என்றால்..... எனக்கு ஒரு தாயை கொடுத்ததினால் !
-
இன்று பிறந்தநாள் கொண்டாடும். ஈழவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கொக்குவிலானுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
நான் தாயை நேசிக்கின்றேன் ...... அதனை விட எனது தாயகத்தை நேசிக்கின்றேன் ....... ஏன் என்றால்..... எனக்கு ஒரு தாயை கொடுத்ததினால் !
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் ..... காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத ..... ! எண்ணுகிறேன். "நான் இன்னும் சாகவில்லை"
-
மேஜர் சோதியா அவர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் (11.01)
தமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு
தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக இந்நாளில் தம்மை ஆகுதியாக்கிய வீர வேங்கைகளுக்கு வீரவணக்கம். -
இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்’ மைக்கேல் வசந்தி’ என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சிபெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார். மன்னாரில் லெப்.கேணல். விக்டர் தலைமையில் நடைபெற்ற பெண்புலிகளின் முதலாவது தாக்குதல் தொடக்கம் இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வரை இவர் பல களங்களைக் கண்டவர்.மணலாற்றுக் காட்டுக்குள் இருந்தகாலத்தில் ஒரு நத்தார் தினத்தன்று சுகவீனமுற்றார். பின் 11.01.1990 அன்று சாவடைந்தார். இவரின் பெயரில் ‘சோதியா படையணி’ என்ற பெண்கள் படையணி 14.07.1996 அன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னான அனைத்துக் களங்களிலும் அது சிறப்புறச் செயலாற்றியது. இன்றுவரை ஏறத்தாள ஐநூறு போராளிகளை இப்படையணி இழந்துள்ளது.தமிழீழப் போராட்ட வரலாற்றில் மேஜர் சோதியாவினது ஆளுமையும், திறமையும் இன்றுவரையான மகளிர் படையணியின் வளர்ச்சிக்கான அச்சாணி. பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற… தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக… நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன. இந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம். நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர். சோதியாக்கா வயித்துக்குத்து… சோதியக்கா கால்நோ… சோதியாக்கா காய்ச்சல்… சோதியாக்கா…. சோதியாக்கா. ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி. விடியல் – அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த பாசத்தாய்ப்பூமி என்பேன். அந்த இனிய கணப்பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள். காடு – ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வியாபித்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை பயம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக்கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ? என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள். எங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வனத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். சிங்காரித்துப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம். சமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி நிர்வாகத் திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா. உணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு சாப்பாட்டுடன் நடை… நடை. தொலைதூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் நட்சத்திரங்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பணியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சுகனத்தாலும் தொடர்கின்றேன். கனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்கவேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை ஞாபகமூட்டும். கண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா ஞாபகம் வரும். கல கல என பஜார் அடித்து சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர். கள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது கிறிஸ்தவ பாதிரியாரை ஞாபகம் ஊட்டும் சோதியாக்கா… அதுதான் எங்கள் சோதியாக்கா. பச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சுவாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. ~கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி… காட்டில் சகல வேலைகள், முகாம் அமைத்தல், கொம்பாசில் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு சகல போராளிகளையும் விளக்கிக் கொண்டு, அவர்களது ஆலோசனைகளையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் நிர்வாகத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர். உழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ~நையிற்றிங் கேலான அவர் நோயால் அவதியுற்றபோது துடித்துப் போனோம். அந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. மரணச்சடங்கில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்;து அழுதபடி அஞ்சலித்த காட்சி, நாம் நிமிர்ந்தோம். வளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம். சோதியாக்கா! நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் நிர்வாகம் செய்யும் நேர்த்தியைப் பாருங்கள். உங்கள் பெயரை இதயத்தில் ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள். விசாலி. http://www.vannionli...01/22-1101.html
-
சாத்திரியாருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் ஏனைய மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
-
வரலாற்றின் பிரமிப்பு : கப்டன் பண்டிதர் நினைவுகுறிப்புகள்!
தமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு
ஆரம்பகாலகட்டத்தில் தாயக விடுதக்காக ஓய்வின்றி உழைத்த பண்டிதருக்கும் இந்நாளில் வீரகாவியமாகிய வீரமறவர்களுக்கும் எனது வீரவணக்கம். -
விடுதலைக்கான தேடலாகவே மானிடவரலாறு நகர்ந்து கொண்டிருக்கிறது. நின்றும், நகர்ந்தும், அதிவேகமான பாய்ச்சலுடனும், தேங்கியும், பின்னகர்ந்தும் இந்த விடுதலைக்கான வரலாற்றுதேடல் இன்னும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்து விடுகின்றன. அத்தனை அர்ப்பணமும், ஈகமும், தியாகமும் அவர்களின் வரலாறுமுழுதும் நிறைந்தே கிடக்கும். அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவனாகவே கப்டன் பண்டிதர் நிற்கிறான். தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி - ஆயுதங்களுக்கு பொறுப்பாளன், முதலாவது யாழ்மாவட்ட பொறுப்பாளன், மத்தியகுழு உறுப்பினன் என்று விடுதலைக்கான பல பாரிய பொறுப்புகளை தனது முதுகில் சுமந்திருந்த இந்த மாவீரன் தமிழீழமண்ணில் ஆகுதியாகி இருபத்திஏழு வருடங்கள் உருண்டோடிவிட்டன. பண்டிதரை பற்றிய நினைவுகளை எங்கிருந்து தொடங்குவது என்பதே ஒரு சுகமான சுவாரசியம்தான். அவன் தனது பதினாறுவயதின் இறுதிலேயே தமிழீழவிடுதலை என்பதில் ஆழமான ஈடுபாடு கொண்டவனாக இருந்திருக்கிறான். விடுதலைக்கான பாடல்களை எழுதி தனது பாடசாலை கொப்பியில் அழகாக வைத்திருப்பதில் ஆரம்பித்து விடுதலைக்காக ஆயுதபோராட்ட அமைப்பை ஆரம்பித்திருந்த தேசியதலைவரை 1977ல் சந்தித்து தன்னையும் தலைவருடன் இணைத்துகொள்ள வேண்டுகோள் விடுத்ததுவரை அவனது ஆரம்பம் இருந்திருக்கிறது. எடுத்தவுடன் எவரையும் தன்னுடன் இணைத்துக்கொள்ளாமல் அவர்களை கவனித்து அவர்களின் உறுதியை சோதித்து அதன்பின்னரே தன்னுடன் இணைத்துக்கொள்ளும் தலைவரின் இயல்புக்கேற்பவே முதன்முதலாக தலைவருக்கும் பண்டிதருக்குமான அந்த சந்திப்பு இருந்திருக்கிறது. ஒரு கைத்துப்பாக்கியின் விசையை இழுக்கமுடியாத அளவுக்கு மிகவும் மெலிந்தவனாகவும் இருந்த பண்டிதரின் நெஞ்சுக்குள் இருந்த விடுதலைக்காக போராடும் உறுதி என்பது மலையளவு உயர்ந்ததாக அப்போதே இருந்ததை கவனித்த தலைவர் பண்டிதரை சிறிது காலம் வீட்டில் சென்று இருக்கும்படியும் நேரம்வரும்போது அமைப்பில் இணைத்துக்கொள்வதாகவும் உறுதிசொல்லி திருப்பி அனுப்பபட்டிருந்தான். மாதக்கணக்கில் ஆரம்பித்து சிலவேளைகளில் வருடக்கணக்குகூட இப்படி காத்திருக்க வேண்டிவரும். ஆனால் இந்த காத்திருப்பு காலத்தில்தான் ஒவ்வொருவரையும் தலைவர் அடையாளம்காணுவார். உணர்ச்சிவசப்பட்டு விடுதலைக்கு வருபவர்களில் இருந்து உணர்வுபெற்று விடுதலைக்காக வருபவர்களை வடிகட்டி எடுக்கும் தலைவரின் ஆரம்பகால இந்த அணுகுமுறைதான் விடுதலைப்புலிகளின் தோற்றத்துக்கும் உறுதியான அத்திவாரத்துக்கும் வலுச்சேர்த்தது. 78ல் பண்டிதரும் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டான். எந்தநேரமும் வாட்டிக்கொண்டிருந்த ஆஸ்த்மாநோயுடன் அவன் விடுதலைக்காக முழுநேரமானான். அவன் நிறையவே தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்டான். அவரிடம் இருந்து எளிமை. அவரிடம் இருந்தே ரகசியம்பேணும் தன்மை. அவரிடம் இருந்தே மக்களை ஆழமாக நேசிக்கும் பண்பு. என்று எல்லாமே அவரைப்போலவே அவனும். எல்லாவற்றிலும் பார்க்க தலைவரிடத்தில் இருந்த நேர்மைதான் அவனில் இன்னும் ஆழமாக புகுந்துகொண்டது..! இதனை அவதானித்த தலைவர் 70களின் இறுதியிலேயே அவனிடம் இயக்கத்தின் முழு நிதி பொறுப்பையும் கொடுத்திருந்தார். எல்லோருக்கும் மாதம் முதல்திகதியில் அந்த மாதத்துக்கான கொடுப்பனவு பண்டிதரால் கொடுக்கப்பட்டுவிடும். தினசரி சாப்பாட்டுசெலவு பத்துரூபாவீதம் கணக்கு பார்த்துகொடுக்கப்படும் இந்த பணத்துக்கான செலவுகணக்கு மாதமுடிவில் பண்டிரிடம் கொடுத்தால்தான் மறுமாதத்துக்கான பணம் பெறமுடியும். தலைவர் உட்பட அனைவருக்கும் இதே வரையறையைதான் பண்டிதர் வகுத்திருந்தான். ஒவ்வொருவரின் கணக்குதுண்டுகளையும் பார்த்து அதில் இருக்கும் அதிகமான செலவுகளை குறைப்பது சம்பந்தமாக அவர்களுடன் அவன் கதைக்கும் பாங்கு இன்னும் நினைவுக்குள் நிற்கின்றது. பகல்முழுதும் சைக்கிளில் அங்கும் இங்கும் என்று இயக்கவேலைக்களுக்காகவும், மக்களை சந்திப்பதற்காகவும் அதிகாலைமுதல் நள்ளிரவுவரை ஓடிக்கொண்டே இருப்பான். இரவு அவன் தங்குமிடத்தில் அனைவரும் தூங்கியபின்னரும் இவன் தனித்து ஒரு குப்பிவிளக்கு ஒளியிலோமெல்லிய வெளிச்சத்திலோ அன்றைய கணக்குகளை எழுதிக்கொண்டிருப்பான். மிகவேகமாகவே பண்டிதர் அனைவரதும் தேவைகளையும் அனைவரதும் கோரிக்கைகளையும் உள்வாங்கி இயக்கத்தை நிர்வகிக்கும் ஒருவனாக ஆகிப்போனான். நிதியை திறம்பட கையாண்ட அவனிடம் மீண்டும் ஒரு பொறுப்பை தலைவர் 80களின் ஆரம்பத்தில் வழங்குகிறார். அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தினதும் பொறுப்பாளனாகிறான் பண்டிதர். நிதிபொறுப்பு என்பதைவிட ஆயிரம்மடங்கு கடினமானது ஆயுதபொறுப்பு. அந்தநேரம் இருந்த ஆயுதங்களில் ஒருபகுதி எந்தநேரமும் நிலத்துகீழாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அப்படி புதைத்துவைத்திருக்கும் ஆயுதங்களின் விபரங்கள், அவை வைக்கப்பட்ட திகதி, மீண்டும் எடுத்து மீளவும் சரிபார்க்கப்பட்டு வைக்கப்படவேண்டிய திகதி என்று அனைத்தும் அவனால் மிகவும் அழகானமுறையில் எழுதப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் என்ன. அதை வேறுயாருமே படிக்கமுடியாது. இத்தகைய ஆவணம் எதிரியின் கையில் கிடைத்தால் அனைத்து ஆயுதங்களும் பிடிபட்டுவிடும் என்பதால் பண்டிதர் ஒரு இரகசிய சங்கேத எழுத்துமுறையை கண்டுபிடித்தான் அதில்தான் எழுதுவான். இதனை படிக்ககூடியவர்களாக இயக்கத்தில் தலைவரும், லெப்.சங்கரும், ரங்சன்லாலாவுமே விளங்கினார்கள். அதனைபோலவே இயக்கத்தின் முதலாவது ஆவணப்பொறுப்பாளனாகவும் அவனே இருந்திருக்கிறான். விடுதலைஅமைப்பு சம்பந்தமான செய்திகள், தமிழர்கள் மீதான சிங்களபேரினவாத தாக்குதல்கள் செய்திகள் என்று அனைத்தையும் வெட்டிஎடுத்து அழகாக தொகுத்து ஒட்டிஅவன்தான் இதனை ஆரம்பித்தான். 1983 இனப்படுகொலை நிகழ்வுகளின் பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் ஆதரவால் அங்கு எமது விடுதலை இயக்கத்தின் முக்கிய கட்டமைப்பு நகர்ந்தபோது எமது விடுதலைப்போராட்டம் பற்றிய பழைய செய்திகளை ஆர்வத்துடன் கேட்ட பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொடுப்பதற்கு பண்டிதர் சேகரித்துவைத்திருந்த ஆவணங்கள்தான் மிகவும் உதவின. ஒரு பெரும் விடுதலை அமைப்பை கட்டிவளர்ப்பதில் தலைவருக்கு மிகவும் நெருக்கமாக நின்று உழைத்தவன் அவன். இப்படி இந்த விடுதலைக்கான பெரும் பயணத்தின் முதல் பயணவீரர்களின் வரிசையில் முன்னோடியாக நின்ற அந்த வீரன் 1985ம்ஆண்டு ஜனவரி 9ம்திகதி அதிகாலையில் அச்சுவேலிப்பகுதியில் நடந்த ஒரு முற்றுகைக்குள் விட்டுவந்த ஆவணங்களை எடுக்க மீண்டும் அதே முற்றுகைக்குள் நுழைந்து வீரச்சாவடைந்தான். தூக்கம், சோர்வு, உணவு என்று எல்லாம் மறந்து எந்நேரமும் இயங்கிவந்தவன் அவன். அவனுக்குதான் தினமும் எத்தனை வேலைகள். கடலால் வந்திறங்கும் சாமான்களை இறக்கி சரியான இடத்தில் வைக்கவேண்டுமா. அங்கும் பண்டிதர்தான்... தென்தமிழீழத்தில் இருந்துவரும் ஒரு நிதி சம்பந்தமானதோ ஆயுதம் சம்பந்தமானதோ அதுவும் அவன்தான் கவனித்தான்... போராளிகளுக்கு சப்பாத்துகள் கிழிந்துவிட்டனவா.. கூப்பிடு பண்டிதரை... ஒருசிறு முகாம் அமைக்கவேண்டுமா அதுவும் அவனே போய்பார்த்து சரி செய்யவேண்டும்... தமிழகத்தில் ஒரு பெரும்தொகை அமைப்புக்கு வழங்கப்படுகிறதா...பண்டிதர்தான் அங்கும் சென்று அதனை கணக்கில் வைக்கவேண்டும்... இத்தனையும் செய்துகொண்டு அவன் ஒரு பழைய சாரத்துடனும், சிலவேளைகளில் கசங்கிய ரவுசர் உடனும் திரிந்து எளிமையானவனாகவே இருந்திருக்கிறான். மிக எளிமையான அவனுக்குள் இருந்ததுவோ மிக ஆழமான விடுதலை இலட்சியம். அது என்றும் சாகாது. அவனின் நினைவுகள் போலவே. இன்னும் என்றும் என்றும் அவன் வாழ்வு நான் எழுதியதை விடவும் மிகப் பிரமிப்பான ஒன்றே. ச.ச.முத்து. http://www.pathivu.c...ticle_full.aspx
-
இன்று பிறந்த நாளை கொண்டாடும் சசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் ..... காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத ..... ! எண்ணுகிறேன். "நான் இன்னும் சாகவில்லை"
-
தாயக விடுதலைக்காக இந்நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்!!!
-
2ம் லெப்டினன்ட் இறைவாணன் 02-01-2007 அன்று மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியில் தவறுதலான வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவி கொண்டார் . கப்டன் அகரமல்லன் 02-01-2007 அன்று வீரச்சாவைத் தழுவி கொண்டார் . லெப் முததுமாறன் 02-01-2008 அன்று வீரச்சாவைத் தழுவி கொண்டார் . லெப் ஆடழகன் 02-01-2008 அன்று வீரச்சாவைத் தழுவி கொண்டார் . 02.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் மாவீரர்களின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/...ical/2012/01/02 தமிழீழ தாயக விடியலுக்காய் தம்மை இந்நாளில் ஆகுதியாகிய இந்த வீரமறவர்களுக்கு எனது வீரவணக்கங்கள்.