Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. இன்று பிறந்த நாளை கொண்டாடும் சசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  2. தாயக விடுதலைக்காக இந்நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்!!!
  3. 2ம் லெப்டினன்ட் இறைவாணன் 02-01-2007 அன்று மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியில் தவறுதலான வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவி கொண்டார் . கப்டன் அகரமல்லன் 02-01-2007 அன்று வீரச்சாவைத் தழுவி கொண்டார் . லெப் முததுமாறன் 02-01-2008 அன்று வீரச்சாவைத் தழுவி கொண்டார் . லெப் ஆடழகன் 02-01-2008 அன்று வீரச்சாவைத் தழுவி கொண்டார் . 02.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் மாவீரர்களின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/...ical/2012/01/02 தமிழீழ தாயக விடியலுக்காய் தம்மை இந்நாளில் ஆகுதியாகிய இந்த வீரமறவர்களுக்கு எனது வீரவணக்கங்கள்.
  4. தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஆகுதியாக்கிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம்.
  5. 01.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டவீரவேங்கை தேனமுதன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/historical/2012/01/01 தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரமறவர்களுக்கு வீரவணக்கம்.
  6. வணக்கம் மோகன், என்னுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று எனது பெயரில் மாற்றம் செய்த உங்களுக்கு நன்றி
  7. தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள். *மின்னல் தங்களிடம் ஒரு வேண்டுதல் மாவீரர் நினைவு பகுதி மாவீரர் நினைவுகளை இணைத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
  8. வணக்கம் மோகன் உங்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள் எனது பெயர் தமிழ் அரசு என்பதை தமிழரசு என மாத்திவிடுவீர்களா ?
  9. 22ம் திகதி பிறந்த தினத்தை கொண்டாடிய விகடகவிக்கும்,இன்று தனது 10வது பிறந்த தினத்தை கொண்டாடும் ஜம்மு பேபிக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள். மின்னல் தங்களிடம் ஒரு வேண்டுதல் மாவீரர் நினைவு பகுதி மாவீரர் நினைவுகளை இணைத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
  11. அப்பையா அன்னைக்கும் மற்றும் இந்நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கும் வீரவணக்கம்.
  12. இன்று பிறந்தநாள் காணும் நிழலிக்கும் அபிஷேகாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று பிறந்தநாள் காணும் நிழலிக்கும் அபிஷேகாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  13. "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு லண்டன் Northwick Park மருத்துவமனைக்கு அண்மையில் WATFORD ROAD, HARROW, MIDDLESEX, HA1 3TP எனும் முகவரியில் அமைந்துள்ள "WESTMINISTER UNIVERCITY HALL" இல் "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் மற்றும் இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது. http://youtu.be/tj7ASCYiUpQ எதிர்வரும் 18-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3:00 மணிமுதல் மாலை 8:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்துகொள்ளுமாறும், தாயகம் நோக்கிய புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடு, மற்றும் சர்வதேசத்துடனான தமிழ் அமைப்புக்களின் அணுகுமுறைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பாகவும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். தமிழ்ர்களின் விடுதலைக்காக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக குரல்கொடுத்து வந்த "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய அரசியற் பணியை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தமிழீழ தேசம் தவித்துவரும் இக் காலகட்டதில் அவரின் நினைவு நாளில் புத்திஜீவிகள், அரசியல் திறனாய்வாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் அடங்கிய குழுவாக சமகால அரசியல் நிலவரம், மற்றும் தாயகம் நோக்கிய புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடு, சர்வதேசத்துடனான தமிழ் அமைப்புக்களின் அணுகுமுறை, என்பன தொடர்பான ஒரு "அரசியல் ஆய்வரங்கம்" நடைபெறவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும், அரசியல் ஆசானாகவும், உலகப்பரப் பெங்கும் எமது அரசியல் குரலாக வாழ்ந்தவரும், , தத்துவ ஞானியாக தமிழீழ வரலாற்றில் தடம் பதித்து 14.12.2006 அன்று எம்மை விட்டுப் பிரிந்து சென்ற கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் "தேசத்தின் குரல்" எனும் மதிப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காலம்: 18.12.2011 ஞாயிற்றுக் கிழமை நேரம்: மாலை 3:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை இடம்: "WESTMINISTER UNIVERCITY" Watford Road, Harrow, Middlesex, HA1 3TP http://www.seithy.co...&language=tamil தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக இந்நாளில் வீர காவியமாகிய பாலா அண்ணா உட்பட அனைத்து வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  14. தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக இந்நாளில் வீர காவியமாகிய வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  15. தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எனது வீரவணக்கம்.
  16. 11.12.2001 அன்று திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பாலத்தோப்பூர் சிறிலங்கா படை முகாம் தாக்குதலில் லெப்.கேணல் மனோஜ் (பாலசிங்கம் வந்தகுமார் - உவர்மலை. திருகோணமலை), மேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் - மாமாங்கம், மட்டக்களப்பு), லெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி - மூதூர், திருகோணமலை). 2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் - மூதூர், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேபோன்று மட்டக்களப்பு வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படைமுகாம் மீதான தாக்குதலின் போது கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் - மத்தியமுகாம், அம்பாறை) கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் - மல்வத்தை 2, அம்பாறை) கப்டன் மணிராஜ் (சிங்காரவேல் கமலேந்திரராசா - வாகரை, மட்டக்களப்பு) லெப்.மணியரசன் (குமாரசூரியம் ரவிச்சந்திரன் - சித்தாண்டி, மட்டக்களப்பு) லெப். முகுந்தன் (நடராசா யோகேஸ்வரன் - விநாயகபுரம், அம்பாறை) 2ம் லெப். உமாகரன் (சிவசம்பு சசிக்குமார் - கரடியனாறு, மட்டக்களப்பு) 2ம் லெப். வினோகரன் (சதாசிவம் சௌந்தராஜன் - நெடியமடு, மட்டக்களப்பு) 2ம் லெப். மணிகண்ணன் (கணேஸ் சண்முகநாதன் - சந்திவெளி, மட்டக்களப்பு) 2ம் லெப். முகுந்தனன் (அழகப்பொடி ஜெயகாந்தன் - புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) 2ம் லெப். மணிப்பிறை மகேந்திரன் மகேஸ்வரன் - கரடியனாறு, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். போராளிகளின் இந்த இரு தாக்குதல்களில் சிறிலங்கா காவல்துறை மற்றும் படையினர் 10ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். பெருமளவான போர்க்கருவிகள், வெடி பொருட்களும் விடுதலைப் புலிகளால் இதன்போது கைப்பற்றப்பட்டமை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழீழ தாய் மண்ணை வல்வளைப்பாளர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கம் http://www.eeladhesa...ndex.php?option ஈழ விடுதலை என்னும் புனித இலட்சியத்த்க்காக இந்நாளில் தம் இன்னுயிரை ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.
  17. தலைநகர் ஊற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 அன்று உப்பாற்று மண்ணின் விடிவிற்காக மட்டுமல்லாமல் தமிழீழ மண்ணின் விடிவிற்காகவும் ஆண் மகன் ஒருவனை ஈன்றெடுத்தாள் அன்னை இராசமணி. தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட்டைகாப்பது மட்டுமல்லாமல் தன் இனத்தையும் காக்கப் புறப்பட்டான். எவன் எதிரியோ அவனை கொன்று குவிப்பதுவே அவன் செயல். தனக்கு வேண்டிய பயிற்சிகளை மிக வேகமாக கற்றுத் தேர்ந்தான். தோற்றம் சிறிதாக இருந்தாலும் அவனின் குணவியல்வுகளும் உணர்வுகளும் எல்லை கடந்தது. கடலின் எல்லை காண்பது இலகு. அனால் அண்ணன் மனோஜின் ஆழம் காண்பது கடினமானதாகும். குறும்புத்தனமிக்க அண்ணன் எதிரியின் சூழ்ச்சிகளையும் இடங்களையும் வேவு பார்த்து தரவுகளை திறம்பட பொறுப்பாக நடத்துவதிலும் பெயர் போனவர். தனக்குப் பிடித்தவர்கள் என்று வேற்றுப்பிரிவு காட்டமாட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் எடுத்துக்காட்டாகவும் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். புலிகள் என்றும் கூண்டுக்குள் அடைபடுபவர்களுமல்ல காட்டில் மட்டும் வாழ்பவர்களுமல்ல என்ற விதியை எதிரிகளுக்கு பலதடவைகள் உணர்த்தியவர். எந்த ஒரு துரும்பினாலும் நுழைய முடியாது என்று கூறும் போராளிகளை தன் நுண்ணிய அறிவால் வழியமைத்து நுழையவிடுவார். அவரின் பாதம் படாத இடம்தான் உண்டோ? சொல்லு வான் நிலாவே? உனக்குத்தான் தெரியும் அவனின் வீரநடையும் செவ்விதழ் புன்னகையை கண்டு நீ பொறாமை கொண்ட நாளும் உண்டு. வன்னியில் இருந்து திருமலைக் காட்டுப்பாதை வழியை கொம்பாஸ் மூலம் கண்டுபிடித்தவர். நாடுகாண் பயணங்களை மேற்கொண்டவர்கள் கூட தனக்கு உதவியாக பலரை இணைத்துக் கொண்டு கடல்பாதையை கண்டுபிடிக்க ஆண்டுக்கணக்காகின. அனால் அண்ணன் துணிவும் திறமையும் ஒன்றாகப் பெற்றவர் என்பதால் யாரும் நுழைய முடியாத அந்த வனாந்தர பாதைகளை கண்டுபிடித்து தன்கண்டு பிடிப்பை யாரும் தட்டி விடக்கூடாது என்பதற்காக புல்மோட்டை பாதையில் கிடந்த சிறு கற்களை பொறுக்கி தன் சேட்பொக்கட்டில் போட்டுக் கொண்டு தளபதியிடம் காட்டினார். எதிரியுடன் சண்டை அவர் குதுகலிப்பார். எதையும் செய்ய முடியாது என்று இவரின் வார்த்தையில் வந்ததே கிடையாது. எதையும் முடிக்கும் திறமை கொண்டவர். இவரின் முதற் சமர் 1990ல் திருமலை யாழ் வீதியில் 16 எதிரிகளின் உடல்களை தரை சாய்த்தது. பாராட்டும் கிடைத்தது. அண்ணாவின் படையில் அதிகளவு போராளிகள் காணப்படமாட்டார்கள். ஆனால் அவரின் முயற்சியால் ஒரு போராளி பத்து பேருக்கு சமன் போல் அவரின் சமர் வெற்றி கொள்ளும் மின்னல் வேகத்தில் சென்று சூறாவளியாக சமரை வீசி பின்பு பனிமழை போல் வருவார். வெற்றிவாகை சூடிக்கொள்வதில் தனிப் பிரிவு இவர். ஆண்களின் இயல்பு பெண்களை சீண்டிப்பார்ப்பது. ஆனால் அண்ணன் பெண்களை தாயாக மதிப்பவர். தன் சகாக்கள் பெண்களை நக்கல் செய்தால் பொங்கி எழுவார். இவ்வாறானவர் களத்துக்கு சென்றால் மகளிர்ப் படையணி போருக்குப் புயலாக இணைந்து கொள்ளும். இவர் தலைமையில் வேங்கைகள் போர்களம் புகுந்தார்கள் என்றால் தளபதிகள் கூட தன்னகத்தே பெருமிதம் கொள்வார்கள் மனோஜின் தலைமையிலான போர் வெற்றி கொள்ளும் என்று. அந்த அளவிற்கு தமிழீழத்தை மீட்டெடுத்து தன் தாய் மண்ணை காக்கவேண்டும் என்ற உத்வேகம் தனையனிடம் குடிகொண்டிருதது. மனோஜ் அண்ணன் 2001.07.20 அன்று தன் போராளிகளுடன் தமிழீழ தலைநகருக்கு தன் பயணத்தை ஆரம்பித்தார். காட்டுமிராண்டிகளான படைகளின் கண்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தவராக காடு மலை கடல்நீர் என்று பல தடைகளையும் கடந்து எம்மை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார். ஆசையோடு கண்டு 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அண்ணன் தன் தம்பியை காண வந்தார். ஆனால் தம்பியோ தன் பிறப்புக் கடமையை அசட்டை செய்து சிங்கள வெறியர்களிடம் இருந்து தமிழ் மண்ணை மீட்கும் இலட்சியத்தில் தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து தன் பணியில் ஈடுபட்டார். அண்ணன் தன் உடம்பில் ஏற்பட்ட சிறு காயத்தினால் சிலகாலம் ஓய்வு பெற்றார். ஆனால் தன் நினைவலைகளை போர்க்களத்திலேயே செலுத்தி நின்றார். சில நாட்களின் பின்னர் வேவுப்புலியானார். அண்ணன் வழிநடத்திச் சென்ற படையணி வெல்வேரிச்சமரில் மாபெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது. இச்சண்டையில் எதிரிகளிடம் இருந்து பல்ரக ஆயுதங்களை கைப்பற்றியதால் தலைவரிடமிருந்து பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார். இது மட்டும் போதும் என்று நினைக்கவில்லை. இதனைவிட பன்மடங்கு வெற்றியை தன் வழி நடத்தலில் தன் படையணி பெறவேண்டும் என்ற உள்நோக்கம் அவரிடம் ஆலவிருட்சம் போல் பரவி கிடந்தது. இவருடைய முக்கிய சமர்க்களங்களாக திருமலை – யாழ். வீதி பதுங்கித்தாக்குதல், தவளைப்பாய்ச்சல் சமர்கள் ஆனையிறவு பரந்தன் சமர்கள், மன்னார் காவல்துறை நிலைய தாக்குதல், ஜெயசிக்குறு சமர்கள், வெல்வேரி வெற்றிச் சமர், பச்சனூர் காவல்துறை நிலைய தாக்குதல், கந்தளாய் கடவாணை வீதி மருத்துக்காவு வண்டித் தாக்குதல், பாலம் போட்டாறு பதுங்கித் தாக்குதல் என்பவற்றைக் குறிப்பிடலாம். மூதூர் பாலத்தோப்பூர் படையப் புலனாய்வுப்பிரிவு முகாம் மீதான தாக்குதலே இவரின் இறுதித் தாக்குதலாக இருக்கும் என்று கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. சண்டைக்கான பயிற்சி நெறிகளும் தொடங்கி விட்டன. ஒத்திகை பார்க்கும் நாளோ நெருங்கிவிட்டது. தனக்கு சிறந்த மகளிர் படையணி தலைவி வேண்டும் என்று கேட்டார். அதற்கமைய இக்கட்டான காலகட்டத்திலும் படையணியை சிறந்தாற்போல் வழிநடத்தும் படையணித் தலைவி கொடுக்கப்பட்டார். நள்ளிரவில் தொடங்கிய சமர் எம் செவிப்பறைகளை அதிரவைத்தது. சீறிச் சிலிர்த்த புலியாய் எதிரியைத்தாக்க தொடங்கினார். திடிரென மனோஜ் அண்ணனின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாங்கள் அனலில் விழுந்த புழுவாக துடி துடிக்கலானோம். காயம் என்று அறிந்ததும் ஓரளவு மனதைதேற்றிக் கொண்டோம். அந்த வேளையில் யாரும் அறியவில்லை புலரும் பொழுதிலே இடியோசை ஒன்று காத்து நிற்கின்றது என்று. ஆம்! அதிகாலை 5.25 மணியளவில் மின்னலென எம் செவிகளை நோக்கி ஓர் செய்தி வந்தது மின்னல் வேகத்தில். எதிரியை தாக்கி விட்டு எதிரியின் இலக்குக்கு திடீரென உள்ளாகிவிட்டார். தனயனின் மார்பை எதிரியின் துப்பாக்கி முனை குறிபார்த்து விட்டது. அண்ணனின் துணிவைப் பார்த்து அந்தச் சூரியன் கூட தன் செங்கதிரை மண்ணில் பாய்ச்ச மறுத்து விடட்டது. காரணமோ! ஓர் வீரனின் உடல் இங்கு மாய்ந்து கிடக்குறது. அந்த வீரனின் பலத்துக்கு முன் அந்த கதிர்களின் ஒளிக்கு பலமில்லை. வீரத்தாயின் மடியினிலே வீரத்தாலாட்டில் தமிழீழ மானம் காக்க வந்தவன் 11.12.2001 அன்று இறுதியான போர்க்களத்துடன் தமிழீழ மண்ணை எங்கள் கரத்தில் ஒப்படைத்துவிட்டு அந்த மண்ணின் மடியில் தன் உயிரை நீத்து மூன்று போராளிகளுடன் நீத்தார். அண்ணனே! நீங்கள் மாவீரராகி இன்று துயில்கிறீர்கள். உங்கள் நினைவாக மூதூர் பள்ளிக்குடியிருப்பில் “லெப். கேணல் மனோஜ் பாலர் பாடசாலை” தொடங்கப்பட்டுள்ளது. மாவீரரான உங்கள் பாதச்சுவட்டை நோக்கி நாங்களும் இங்கு தடம் பதிக்கின்றோம். செல்வி ஜீவி தலைநகர் மகளீர் படையணி http://meenakam.com/...cal/2011/12/11/ ஈழ விடுதலை என்னும் புனித இலட்சியத்த்க்காக இந்நாளில் தம் இன்னுயிரை ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.
  18. 08.12.1999 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக கடற்புலிகள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் கார்வண்ணன்,மேஜர் யாழ்வேந்தன், மேஜர் இசைக்கோன் மற்றும் கப்டன் கானவன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும். இக்கரும்புலி வீரர்களின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு கடுமையாக சேதமடைந்ததுடன் அதிலிருந்த கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்திருந்தனர். விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்க கொண்டுவரப்பட்ட பொறுமதி வாய்ந்த போர்க் கருவிகள் மற்றும் வெடிபெருட்கள் இக்கரும்புலி வீரர்களின் உயிர்க்கொடையினால் பத்திரமாகக் கரைசேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழத் தாய் மண்ணின் விடிவிற்காய் தம்மை வெடியாக்கி வித்தாகிப் போன இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம். http://meenakam.com/...ured/2011/12/08 தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக இந்நாளில் தம்மை ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  19. விடுதலை என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்முடைய இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீர வேங்கைகளுக்கு வீரவணக்கம்
  20. Small Point பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......
  21. வல்வை சாகரா மற்றும் ரகுநாதனுக்கும் R ராஜாவுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  22. 03.12.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் வரதன் (றொனி/சாமி) அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள் http://meenakam.com/...ical/2011/12/03 தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஆகுதியாக்கிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் .
  23. இன்று பிறந்தநாள் காணும் புயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
  24. http://youtu.be/CXygUck4PI0 http://youtu.be/k-h8DzPaO14 http://youtu.be/OBN1_oFUjQE http://youtu.be/u8-tev6B93g

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.