-
அறிவித்தல்: யாழ் இணையம் 27 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
வணக்கம், யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 94 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைகின்றது. எனவே அதன் பின்னர் புதிய சுய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். (suvy) "கரை கடந்த புயல்" (kandiah Thillaivinayagalingam) காற்றாடி ( ரசோதரன்) "கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்" (kandiah Thillaivinayagalingam) இன்னொரு சக்கரவர்த்தி ( ரசோதரன்) "நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே" (kandiah Thillaivinayagalingam) "மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" (kandiah Thillaivinayagalingam) கர்ண பரம்பரையின் கனவு ( ரசோதரன்) "அன்புடன் தேன்மொழி" (kandiah Thillaivinayagalingam) "ஏனிந்தக் கோலம்" (kandiah Thillaivinayagalingam) "வாழ்வில் வசந்தம்" & "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" ( kandiah Thillaivinayagalingam) ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! (goshan_che) இன்றைய அதிசயம் ( ரசோதரன்) "உனக்காக் காத்திருக்கேன் [14 பெப்ரவரி 2025 ]" [காதலர் தினம் கொண்டாடும் உறவுகளுக்காக] (kandiah Thillaivinayagalingam) இறை குறைபடுமோ ? - (சுப.சோமசுந்தரம்) காதலர் தினக் கதை ( ரசோதரன்) காதலர் தினத்தில் கனவொன்று கண்டேன்... (alvayan) "கும்மிருட்டில் நடனம்" (kandiah Thillaivinayagalingam) "அன்பு வலிமையானது" & "ஓடுகிற தண்ணியிலே" (kandiah Thillaivinayagalingam) ஒரு காரின் கடைசி வாக்குமூலம் ( ரசோதரன்) இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே (alvayan) "சொல்ல துடிக்குது மனசு" & "பாலகன்பிறந்தார்" (kandiah Thillaivinayagalingam) இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்? (ஈழப்பிரியன்) ஒரு முட்டை ஆயிரம் டாலர் ( ரசோதரன்) சும்மா ஒர் பதிவு (putthan) "இதுவும் கடந்து போகட்டும்" & "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "நெஞ்சோடு நிழலாடுதே" & "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு" (kandiah Thillaivinayagalingam) கைவிலங்குகள் ( ரசோதரன்) நியாயத்தின் சாம்பல் (villavan) "உன்னோடு வாழ்வது உவப்பானதே" & "புது விடியல்" (kandiah Thillaivinayagalingam) ஓயும் ஊசல் ( ரசோதரன்) ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் (goshan_che) "பிள்ளை நிலா" (kandiah Thillaivinayagalingam) "செருக்கு” [தன்முனைக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) குறள்மொழி இன்பம் / "குறள் 1265" (kandiah Thillaivinayagalingam) மூன்று கோழிக்குஞ்சுகள் ( ரசோதரன்) "யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] & "நடை பயிற்சி" (kandiah Thillaivinayagalingam) விதியற்றவர் (மெசொபொத்தேமியா சுமேரியர்) ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" & "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "நீயில்லா வாழ்வு" (kandiah Thillaivinayagalingam) பூனைகளின் பேச்சுவார்த்தை ( ரசோதரன்) "தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே" (kandiah Thillaivinayagalingam) “ஏனடி இந்த வேதனை..?” (kandiah Thillaivinayagalingam) "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" & "என்றுமே முதலாளி" (kandiah Thillaivinayagalingam) ராணுவ ரகசியம் ( ரசோதரன்) "எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] & "மாங்கல்ய கனவுடன்" (kandiah Thillaivinayagalingam) அமைதி மணம் (villavan) "மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா" (kandiah Thillaivinayagalingam) "பாலியல் வன்கொடுமை" (kandiah Thillaivinayagalingam) முழிக்கும் மொழி ( ரசோதரன்) பிட்டுக்கு மனம் சுமந்து (மெசொபொத்தேமியா சுமேரியர்) தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே (Kavi arunasalam) "நீயில்லை நிழலில்லை" (kandiah Thillaivinayagalingam) அவளைத்தொடுவானேன்....??? (விசுகு) "மூன்றும் உடையது", குறள் 1085 & "பனிப்பொழிவு" (kandiah Thillaivinayagalingam) "பணம் படுத்தும் பாடு", "தைப்பொங்கல்” [ஹைக்கூ கவிதை] & "மரியாதை" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "தைமகளே வருக" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) கண் கண்ட தெய்வம் ( ரசோதரன்) தூத்துகுடி கொத்தனாரு…. (goshan_che) "வாழ்ந்து காட்டுவோம்" & "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” (kandiah Thillaivinayagalingam) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) பார்த்தீனியம் ( ரசோதரன்) கிழவனை கண்டா வரச்சொல்லுங்க (goshan_che) "கிராமியக் கலைஞன்" (kandiah Thillaivinayagalingam) தலைவரை கண்டா வரச்சொல்லுங்க (goshan_che) மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்? (villavan) "தை மகளே வருக" (kandiah Thillaivinayagalingam) பம்மாத்து (சுப.சோமசுந்தரம்) அப்பா...... (விசுகு) நானும் ஊர்க் காணியும் (மெசொபொத்தேமியா சுமேரியர்) "உழவர் திருநாள்" & "தித்திக்கும் பொங்கல் திருநாள்" (kandiah Thillaivinayagalingam) "எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு " (kandiah Thillaivinayagalingam) செவ்வந்தியில் செவ்வந்தி ( ரசோதரன்) இரத்த சொந்தம் (நிலாமதி) “காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” (kandiah Thillaivinayagalingam) "தை பிறந்தால்" & "பரோபகாரம்" (kandiah Thillaivinayagalingam) ஏழரைக்கனவு (தனிக்காட்டு ராஜா) யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது. (தமிழ் சிறி) "புதிய ஆரம்பம்" (kandiah Thillaivinayagalingam) "வாடகை வீடு..!" (kandiah Thillaivinayagalingam) "உன்னைச் செதுக்கு" (kandiah Thillaivinayagalingam) "பொறுப்பற்ற ஒரு ஊதாரி கணவன்" (kandiah Thillaivinayagalingam) "எங்களுக்கும் காலம் வரும்" (kandiah Thillaivinayagalingam) "கந்துவட்டி" (kandiah Thillaivinayagalingam) "சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிகிறதே!" (kandiah Thillaivinayagalingam) "இளங்கவியும் 'ஏடிஎச்டி' யும் [ADHD]" (kandiah Thillaivinayagalingam) கூடுவேம் என்பது அவா / குறள்1310 (kandiah Thillaivinayagalingam) "தனிக் குடித்தனம்" (kandiah Thillaivinayagalingam) "மௌனம் சம்மதமா?" (kandiah Thillaivinayagalingam) “போராடி வென்றவள்" (kandiah Thillaivinayagalingam) "உயிர்பெறுமா ஓவியம்" (kandiah Thillaivinayagalingam) "வீட்டு வேலைக்காரி" (kandiah Thillaivinayagalingam) "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்" (kandiah Thillaivinayagalingam) "மீட்டாத வீணை.." (kandiah Thillaivinayagalingam) பதியப்பட்ட 94 ஆக்கங்களில் களஉறுப்பினர்கள் @kandiah Thillaivinayagalingam 53 ஆக்கங்களையும் @ரசோதரன் 16 ஆக்கங்களையும் பதிந்துள்ளனர். கள உறுப்பினர்கள் கந்தையா தில்லைவிநாயகலிங்கம், ரசோதரன் ஆகியோருக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு: யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
வணக்கம், யாழ் இணைய வழங்கி சில புதுப்பித்தல்களுக்கு உள்ளாவதால் யாழ் இணைய சேவைகள் செவ்வாய் 18 பெப் ஐரோப்பிய நேரம் 09:30 இலிருந்து அண்ணளவாக ஒரு மணித்தியாலத்திற்கு தடங்கலுக்கு உள்ளாகலாம்.
-
அறிவித்தல்: யாழ் இணையம் 27 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2025 அன்று யாழ் இணையம் 26 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 27 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 27 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 27 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
-
கருத்துக்களில் மாற்றங்கள் - 2025
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல தனி மனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும், அநாவசியமான கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், கருத்தாடற்பண்பைக் கடைப்பிடிக்காத கள உறுப்பினர் மீது இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
கருத்துக்களில் மாற்றங்கள் [2024]
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! எனும் திரியில் தலைப்புக்கு பொருத்தமில்லாத சீண்டல் கருத்துக்களும், பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் சக உறுப்பினர்களைச் சீண்டும் பதிவுகளை இட்டு கருத்துக்களத்தின் தரத்தை கீழிறக்கும் உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில்கொண்டு ஆக்கபூர்வமான கருத்தாடலில் ஈடுபடுங்கள்.
-
கருத்துக்களில் மாற்றங்கள் [2024]
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் எனும் திரியில் பண்பற்ற வகையில் தனிநபர் தாக்குதல் கருத்துக்களும், சீண்டல்களும், அதற்கான பதில்களும் என பதியப்பட்ட கருத்துக்களும் நீக்கப்பட்டு திரியும் பூட்டப்பட்டுள்ளது. களவிதிகளை மீறும் கருத்துக்களை முறைப்பாட்டு முறை மூலம் அறியத் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கமுடியும் என்பதை கள உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
-
அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......! (suvy) புதனும் புதிரும் ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே ( சுப.சோமசுந்தரம்) (தீ) சுவடு (தனிக்காட்டு ராஜா) இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024. ( ஈழப்பிரியன்) மரணம் (ரஞ்சித்) களியாட்டத்தில் கலாட்டாவா ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா? (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன். ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும் ( Kavi arunasalam) மயிலம்மா. ( suvy) வல்வை மண்ணில் பிரித் (nedukkalapoovan) ஆதி அறிவு ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை ( ரசோதரன்) என்ன பார்ட்டி இது?? (விசுகு) முடிவிலி (ரசோதரன்) மழைப் பாடல்கள் (ரசோதரன்) மின் காற்றாலைத் தோட்டம். ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும் (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா. (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம் (ரசோதரன்) இந்த ஏழு நாட்கள் (ரசோதரன்) தோற்கும் விளையாட்டு (ரசோதரன்) அன்றுபோல் இன்று இல்லையே! ( பசுவூர்க்கோபி) வாசலும் வீடும் (ரசோதரன்) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) மேய்ப்பன் (ரசோதரன்) ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்) தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி) விழல் (ரசோதரன்) தம்பி நீ கனடாவோ..? (alvayan) என் இந்தியப் பயணம் (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை (ரசோதரன்) புளுகுப் போட்டி (ரசோதரன்) சிறந்த நடுவர் (ரசோதரன்) ஒரு பொய் (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன் (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க… (alvayan) புலம் பெயர்ந்த புகை (ரசோதரன்) பிஞ்சுக் காதல்… (alvayan) கனத்தைப் பேய்க் கவிதை….. (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. (goshan_che) காந்தி கணக்கு (ரசோதரன்) சனாதன வருத்தம் (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு (theeya) தோற்ற வழு (ரசோதரன்) பாக்குவெட்டி (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால் (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும் ( P.S.பிரபா) எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. (தமிழ் சிறி) அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம் (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய் (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....? (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள் (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள் (ரசோதரன்) உயிர்த்தெழுதல் (ரசோதரன்) குரு தட்சணை (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்" (kandiah Thillaivinayagalingam) தேனும் விஷமும் (ரசோதரன்) சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா (விசுகு) நிலவே நிலவே கதை கேளு! (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ. (ஈழப்பிரியன்) நூலறிவு வாலறிவு (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு! (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த உறுப்பினர் @ரசோதரன் 31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு: யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
கருத்துக்களில் மாற்றங்கள் [2024]
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல் எனும் திரியில் நீக்கப்பட்ட காணொளிகளை மீண்டும் மீண்டும் இணைப்பதை தவிர்க்கவேண்டும். களவிதிகளை தொடர்ச்சியாக மீறும் வகையில் கருத்தாடல் புரிவோர் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் உள்ள “கருத்துக்கள உறுப்பினர்கள்” பகுதிக்கு நகர்த்தப்படுவார்கள்.
-
அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
வணக்கம், யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதியில் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......! (suvy) புதனும் புதிரும் ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே ( சுப.சோமசுந்தரம்) (தீ) சுவடு (தனிக்காட்டு ராஜா) இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024. ( ஈழப்பிரியன்) மரணம் (ரஞ்சித்) களியாட்டத்தில் கலாட்டாவா ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா? (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன். ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும் ( Kavi arunasalam) மயிலம்மா. ( suvy) வல்வை மண்ணில் பிரித் (nedukkalapoovan) ஆதி அறிவு ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை ( ரசோதரன்) என்ன பார்ட்டி இது?? (விசுகு) முடிவிலி (ரசோதரன்) மழைப் பாடல்கள் (ரசோதரன்) மின் காற்றாலைத் தோட்டம். ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும் (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா. (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம் (ரசோதரன்) இந்த ஏழு நாட்கள் (ரசோதரன்) தோற்கும் விளையாட்டு (ரசோதரன்) அன்றுபோல் இன்று இல்லையே! ( பசுவூர்க்கோபி) வாசலும் வீடும் (ரசோதரன்) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) மேய்ப்பன் (ரசோதரன்) ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்) தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி) விழல் (ரசோதரன்) இதுவரை பதியப்பட்ட 30 ஆக்கங்களில் புதிதாக இணைந்த உறுப்பினர் ரசோதரன் 12 ஆக்கங்களை பதிந்துள்ளார். உற்சாகமாக சுய ஆக்கங்களை பதியும் உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. சுய ஆக்கங்கள் எழுதக்கூடிய ஆற்றல் உள்ள உறுப்பினர்கள் பலர் இன்னும் பதியாமல் பார்வையாளார்களாக உள்ளனர். யாழ் அகவை 26 க்கு இன்னும் 15 நாட்களே உள்ளன என்பதால் விரைவில் ஆக்கங்களைப் பதியுங்கள். குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும். இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். சக கள உறுப்பினர்கள், பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம். நன்றி
-
கருத்துக்களில் மாற்றங்கள் [2024]
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து? எனும் திரியில் தேவையற்ற கருத்தாடல்கள் நடைபெறுவதால் பல அரட்டைத்தனமான கருத்துக்கள் நீக்கப்பட்டதுடன், திரியும் பூட்டப்பட்டுள்ளது.
-
அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
வணக்கம், யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்கள் போன்று சுய ஆக்கங்களைப் பதிந்து யாழ் அகவை 26 இனை சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். யாழ் களத்தில் முதலில் பதிந்த பின்னர் முகப்புத்தகத்தில் விரும்பினால் பிரசுரிக்க வேண்டுகின்றோம். சுய ஆக்கங்கள் பகுதிக்கு ஏதாவது பதிவுகளை மாற்ற விரும்பினால் இந்தத் திரியிலேயே அறியத்தாருங்கள். நன்றி.
-
அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 26 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 26 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
-
கருத்துக்களில் மாற்றங்கள் [2024]
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன். எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. களவிதிகளை மீறும் கருத்துக்களை உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து யாழ் களத்தின் தரத்தைப் பேணமுடியும். இதற்கு கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோருகின்றோம்.
-
அறிவித்தல்: யாழ் இணையத்தில் இருந்து 'திண்ணை' நீக்கம்
வணக்கம், யாழ் களம் புதிய வழங்கிக்கு மாற்றப்பட்ட பின்னர், இணைப்புக்கள் சற்று மந்தமான வேகத்தில் இயங்குவதும், இதற்கு திண்ணை மென்பொருள் காரணமாக இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளதால், திண்ணை வசதி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. யாழ் இணையத்தின் இணைப்புக்களை திறப்பதற்கான வேகத்தை அவதானித்து, உரிய மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். நன்றி