Jump to content

Search the Community

Showing results for tags 'sea tigers'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் பற்றித் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை. என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nanni-Chozhan) அணுகுங்கள். நானெழுதிய வேவ் ரைடர் கலங்கள் தொடர்பான ஒரு ஆவணம் "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  2. Author: Vaakai Via: Thesaththinkural magazine, 03/2022 ------------------------------------- A Stealth boat is a type of vessel that is especially used as a war vessel, and it employs Stealth technology construction techniques in an effort to ensure that time is hard to detect by one or more radar, visual, sonar, and infrared methods. The main detectors that find out whether a Navy vessel of an enemy is in the oceanic water are the sander, the radar, and the infrared. Stealth boats are designed in such a way that they are invisible, but unlike a Navy ship, which is not, it gives a very big boost and advantage to the stealth boat to launch an attack. These techniques borrow from stealth aircraft technology. The earliest known Ship to incorporate stealth technology is the US Navy Sea Shadow. It was completed in the mid-80s, but the public got its first view in 1993. Which was eventually scrapped in 2006. Our Tamil leaders, the Honourable P.V. Prabhakaran and Brigadier Soosai, were attracted by the F117A stealth fighter and decided to build their own stealthy speedboat with a low profile. The Mangai boatyard, which was founded in 1993 and established under the direct observation of the LTTE Leader and the direct guidance of the Sea Tiger leader, In early 1998, the Mangai boat yard's design and model/plug building yard started the construction of a stealth 16‘ in the Vanni jungle, several miles away from the sea. The major feature that is taken into account while constricting a stealth boat is the right angle, which is designed in such a way that it deflects and reflects the radar, and the infrared rays that hit this reflecting surface are known as the radar cross-section. By not constricting the boat with any right angles, such deflection and emerging are avoided, making the vessel a stealth boat. Distinctive low and wide wing-like structure designed to help lift the heavy bow section out of the water during high speed; the upper surface is angular with a ridge along the bow, lending to an open-topped cockpit. The important thing is the stealth, which is designed, and the plug or model construction is done without any mechanical aids or devices. The sea tiger women have done freehand boat line drawing with their master‘s instruction. 8" model of a stealth 16‘ built out of plywood, checked the angles manually, and corrected them, then its final blueprint is ready for plug building. The stealth 16‘ Hull is designed with Montego's patented Tunnel hull or tri-V hull. This design provides unusual comfort and excellent stability at high-performance speeds. When it comes to hull design, the most important concern is: i. The centre of gravity is the point in a body where the gravitational force may be taken to act. ii. The centre of buoyancy is the centre of gravity for the volume of water that a hull displaces. When the hull is upright, the centre of gravity and centre of buoyancy are on the same vertical line, and the hull is stable. When the hull line drawings are ready, plug builders will check each line by drawing in the original measurements. After the corrections, the hull line drawings and blueprint will be finalised. Building a boat plug is the first major step in fibreglass boat construction. The boat-designed construction of the plug or model calls for the traditional skills of a boat builder; wood and plywood are the principal materials for construction. Though traditional skills are required, if carpenters will be made in terms of accuracy and quality of workmanship and require constant encouragement by an experienced technician, our sea tiger women who did with their Mastery (Mestiri//master carpenter) Building the plug upside-down is normal, but in LTTE boat yards, they don‘t have a permanent place, so they have to build it strong and firm so it can be easily transported. A Stealth 16‘ plug constructed together with the upper surface, canwall, and hull, which is an exact duplicate of the real boat, will be used once and thrown away. It resembled an F117A stealth fighter. The next step is to build the main structure of the fibreglass boat, which is the mould. From here, all the construction was done by women only. The plug will receive hand-sanding several times to make sure it is smooth enough to receive a layer of hard tooling gel coat, which eventually gives the polished surface when the mould is lifted. When the time comes to make the mould, the process is a faithful reproduction of the plug surface. The mould thickness is up to twice the finished hull thickness. This layout gives the required dimensional stability once the mould has cured, with extra stability added and a mounting caste to allow it to be moved. All this is done, the mould is released or removed from the plug, and then final hand sanding and polishing are done. The Mother mould will be ready to be used for boat construction. Once all the major construction is done, building a boat is not a big deal for the Mangai boatyard ladies. The same team that built the mould also built the first stealth 16-foot boat. They consider it a small boat, which makes them construct it in just 25 days. The only struggle when joining the canwall and hull is that of its unusual wing-like structure; they have to expose themselves to fibreglass mixtures that produce adhesive vapours. When inhaled, these fumes can lead to various respiratory issues. The first stealth boat was named Thanikai (தணிகை) to honour Black Tiger captain Thanikai. On top of the gel coat, the Thanikai stealth boat is painted with a lookalike eagle. Then the Sea Tigers outboard motor technicians did the wiring, fixed the gearbox, and attached a single 200-hp outboard engine at the stern. Mangai Boat Yard always gave an awesome send-off for their boats; they did the traditional Tamil Pongal, gave it a turmeric water bath, and put a garland on the bow. Before it was dispatched, our honourable LTTE Leader visited, congratulated them, and appreciated the hard work of these lady fighters. Speaking to their Leader gave them confidence and made them feel empowered. A stealth 16-foot Thanikai boat casts off in the Vadduvakal Sea. This super-stable speed hull design calculates the speed at 45–50 knots when it reaches its highest speed of 50–55 knots. The centre of gravity and the centre of buoyancy are on the same vertical line, and their stability never vanishes at any point when making a sudden turn. The stealth technology of their construction and their inherent low profile make them difficult to spot. Stealth 16‘ was used as an explosive black tiger boat for many battles until the last war. This is one successful stealthy design boat of LTTE, Which is 90% women-built boats.
  3. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை (warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்…/\… தோழர்களே! கடந்த 15 நாட்களாய் வலைத்தளங்கள் முழுவதும் துளாவியாய்ந்து ஒருவழியாய் இந்த ஆய்வு விடையினை முடித்து விட்டேன்.. வாசகர்களே! ஏதேனும் பிழை இருந்தால் உடனே சுட்டிக்காட்ட தவற வேண்டாம்.. கடற்புலிகளோ இல்லை அவர்களை அறிந்தவர்களோ யாரேனும் இதைப் வாசிக்க நேர்ந்தால் இதில் உள்ள தவறுகளை உடனே சுட்டிக்காட்டுங்கள்; திருத்திக்கொள்ள அணியமாய் உள்ளேன். எமது வரலாற்றை எழுத உதவி செய்யுங்கள்.../\... முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலம் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்..இதில் நாம் ஈழத்தீவில் வாழும் தமிழர்களுக்கென்று தனிநாடு (தமிழீழம்) கேட்டுப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படையான கடற்புலிகளால் (தமிழீழக் கடற்படை என்று அவர்களால் குறிக்கப்பட்டது) போரில் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம்.. கடற்புலிகளின் மொத்த எண்ணிக்கை: 500 - 1000 2003/10 ஆம் அண்டு வரை வீரச்சாவடைந்தோர் - 1066 பேர் இவர்களால் கடற்சமர்களின் போது ஆடப் பயன்படுத்தப்பட்ட முக்கிய கடற்கலங்கள்: வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப் படகு - 25 குமுதன் வகுப்புப் படகு - 2 வோட்டர் ஜெட் வகுப்புச் சண்டைப் படகு - 4 (இங்கிலாந்தில் கட்டப்பட்டது) குருவி, சுப்பர் சொனிக் வகுப்புச் சண்டைப் படகு - 5-10/ஒவ்வொன்றும் திரிக்கா, சகடை வகுப்பு வழங்கல் படகு - 3-5 வெள்ளை, மிராஜ் வகுப்பு வழங்கல் படகு - 5-10/ஒவ்வொன்றும் வின்னர், சூடை வகுப்புச் சண்டைப் படகு - 5-10/ஒவ்வொன்றும் பயனுடைமை தரையிறக்கக் கலம் (சிறியது) - 1 (ஆகக் குறைந்தது) பாலக் கலம் (பெரியது) - 8 (ஆகக் குறைந்தது) சேணேவிகளை (Artillery) கொண்டுவந்து இறக்குவதற்கென்று வடிவமைக்கப்பட்ட கலம் - 1 (ஆகக் குறைந்தது) தாங்கி வகைக் கலம் - 2-4 உப்பயானம் (Inflatable boat) - 10+ கட்டைப்படகு (Dinghy) - 50+ தொலையியக்கி கட்டுப்படுத்தி படகு (Remote control boat) - 1 (படம் கிடைக்கப்பெறவில்லை) K-71 வகுப்பு படகு - 1 அதிவேக முச்சோங்கு (high speed trimaran) வகை சண்டைப் படகு - 1 தாரைச்-சறுக்கு (Jetski) - 2 Water Scooter - 2 புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை.. ஆகையாலத்தான் இவை யூதரின் டோராக்களைப் (mk-III) போல அதிவேகமாக கடலில் ஓடின... ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன.. இக்கடற்கலங்களை கட்டுவதற்கு புலிகளிடம் 2 பிரிவுகள் இருந்தன. அவையாவன, மங்கை & டேவிட் படகு கட்டுமானம் என்பவையே.. கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC , Garmin & Ray Marine ஆகிய கதுவீகளைப் பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்..) கடற்புலிகளின் கடற்கலங்கள் பல்வேறு வகையாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களைச் சூட்டியிருந்தனர்.. அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய போராளிகளின் பெயர்களை தாங்கி இருந்தன.. அவ்வாறு இருந்த பெயர்களை என்னால் இயன்றளவு தேடிச் சேகரித்துள்ளேன். அவையாவன, தாழ் தோற்றுவக் கலம்(LPV) வகை: ஊடுருவி- 200G-01 அரை நீர்மூழ்கி வகை: சதீஸ், கோகுலன்-2, கோகுலன்-24, கோகுலன்-45 தாங்கி வகை: பழனி மிராஜ் வகுப்புப் படகு: ராகினி, சித்திரா, இலங்கேஸ்வரன், ###ரசி, செங்கொடி வெள்ளை வகுப்புப் படகு கொலின்ஸ், வினோத், தீபன், டீசல், மகேஸ்வரி குருவி வகுப்புப் படகு (சண்டைப்படகு): ஜீவன் 006, 004 நளன், ஜெயந்தன் சுப்பர் சொனி வகுப்புப் படகு: ஜெயந்தன், சிதம்பரம் வோட்டர் ஜெட் வகுப்புப் படகு: (இங்கிலாந்தில் கட்டப்பட்டது) நீ-004, பாமா சூடை வகுப்புப் படகு: சுதர்சன், மது, கருவிழி, ரகுவப்பா, மயூரன், தேன்மொழி, கதிரொளி சகடை வகுப்புப் படகு: செங்கண்ணன், நெடுமாறன் வின்னர் வகுப்புப் படகு: அன்புமாறன், ஓவியா வகுப்புப் பெயர் அறியா கலத்தின் பெயர் : பரணி இந்தப் பாடல் கடற்புலிகள் படகு தள்ளும் போது பாடும் 'ஏலேலோ' மாதிரியான ஓர் பாடல்.. இப்பாடல் அவர்களின் ஓர் திரைப்படத்தில்(கடலோரக் காற்று) இருந்து எடுக்கப்பட்டதாகும்.. இதை திரைப்படத்திற்காகப் பாடினார்களா இல்லை உண்மையிலே பாடுவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.. இருந்தாலும் கொடுக்கிறேன்.. இது உறுதிப்படுத்தப்படாத செய்தி! (கவிப்படகு வழிமறிக்க டோரா சுக்குநூறு….) கடற்புலி டோரா கரும்புலி வெடிக்கும் ..... (கவிப்) கடற்புலி மோத கரும்புலி வெடிக்கும் .... (கவிப்) கடற்புலி மோத இந்தா ஒண்டு, இந்தா ரண்டு, இந்தா மூண்டு.... ஏஏஏ… மேலும் வாசிக்க: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை புலிகள் இதனைச் சோதனைப் பதிப்பாக உருவாக்கியிருக்கிறார்கள் கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP மேற்கண்ட கலத்தின் உட்பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாகவும் சரக்குக் காவிக் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக 2)சரக்குக் காவிகளாக கலவர் = தேவைக்கேற்ப இங்கே மூன்று கடற்கலங்கள் நிற்பதைக் கவனிக்கவும். — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை மேலே நீங்கள் கண்ட கடற்கலங்களின் சிறிய வகை போல உள்ளது இக்கடற்கலம். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = பச்சை மேற்கண்ட கலத்தின் உட்பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை எதற்காக பாவிக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது கட்டைப்படகு வகைக் (dinghi class craft) கலம் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக, காவிகளாக, இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பில் இருந்தவை: 50+ நீளம் = ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு அளவிலிருந்தன அகலம் = ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு அளவிலிருந்தன உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP / சில வேளைகளில் 1x40 HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts தாக்குதல் கலங்களாக…. ஆய்தம் = 1x ZPU -1/ 1x 7.62 GPMG கலவர் = 3/4 தொலைத்தொடர்பு = VHF 1) மேற்கண்ட கலத்தினில் இருப்பவர் கடற்புலி அல்ல.. இவர் சிறீலங்காக் கடற்படையின் கலவர். 2) 'கலத்தினில் கடற்புலிகள் ' 3) &4) 'கலங்களில் கடற்புலிகள் ' 5) 'மேலே தெரியும் ஆறு கலங்களும் சண்டைக் கலங்களே.. ஆறிலும் சுடுகலன் பூட்டுவதற்கான தலா ஒரு தண்டு இருந்தது. இவை சுண்டிக்குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டவை ஆகும்.' 'இதில் சுடுகலன் பூட்டுவதற்கான இரண்டு தண்டுகள் இருந்தன. இது சுண்டிக்குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும்.' காவிகளாக….. ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் 1)ஆட்காவி 2)சரக்குகாவி 2) 'கடற்புலிகளின் நாச்சிக்குடா கடற்படைத்தளத்தில் சிறீலங்கா தரைப்படையால் கைப்பற்றப்பட்ட புலிகளின் படகுகள்' — மிராஜ் வகுப்புக் கலம் (Miraj class craft) இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு. ஒரே சமயத்தில் நாற்பது பேரை அவர்களுக்கான படைக்கலன்களுடன் ஏற்றவல்லது. மொத்தம் 4000 கிலோகிராம் வரை இதில் பொருட்கள் ஏற்றலாம். நீளம் = அறியில்லை. ஏறக்குறைய வேவ் ரைடரின் நீளமே. அகலம்= அறியில்லை உயரம் = ~5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 30-35 kts ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் 1) 2) 3) 4) கலப்பெயர்: இலங்கேஸ்வரன் 'ஓயாத அலைகள் மூன்றின் போது' வகுப்பு II மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. ஆனால் இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. எனவே, இது உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட படகாகும். இதே போல இருந்த மற்றொரு படகு இடியனாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு உள்ளிணைப்பு மின்னோடிகள்(IBM) இருந்தது அறியப்பட்டுள்ளது. கலப்பெயர்: ###ரசி வகுப்பு III பார்ப்பதற்கு மிராஜ் வகையைச் சேர்ந்ததாக தோன்றினாலும் இதன் கடையால் தோற்றத்தால் அதனினின்று வேறுபடுகிறது. மிராஜைவிட பெரிதாக நல்ல உயரமாக உள்ளது. கடையாலில் இரு சுடுகலன்கள் பூட்டுவதற்கேற்ப இரு தண்டுகள் உள்ளன. கடையால் பக்கமாக மிராஜின் கடையாலைக் காட்டிலும் நீளம் குறைவாக மிகவும் கட்டையாக உள்ளது. இதன் மேற்பரப்பில் கோபுரம் போன்று ஏதோ பொருத்தப்பட்டுள்ளது. அது என்னவென்று தெரியவில்லை. வட்டு வரைக்குமான உயரம்: 5.6' - 5.8 மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது 'மேலே உள்ள கலத்தின் மேல் உள்ள கோபுரம் போன்றதுதான் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது' 'மேற்கண்ட கலத்தின் உட்புறத்தோற்றம்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை அதிவேக தாக்குதல் கலங்களாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP நிறம் = உருமறைப்பு (கறுப்பு& மஞ்சள்) ஆய்தம் = 14.5 mm ZPU-1, 1x 7.62mm GPMG கலவர் = 6 1) இக்கலத்தின் கலப்பெயர் பரணி ஆகும் 'அணியம், பக்கவாட்டுத் தோற்றம்' 'கடையால்' 2) — வின்னர் வகுப்புப் படகு (Winner class boat) இவ்வகைக் கலங்கள் தாக்குதல் கலங்கள் ஆகும். இவை நான்காம் ஈழப்போரில் தவிபுவினரால் கட்டப்பட்டன. போராளிகளின் இழப்பைக் கடலில் சந்திப்பதைக் குறைப்பதற்கும், வடுப்படத்தக்கத் தன்மையை குறைப்பதற்கும் உருவாக்கப்பட்ட படகு ஆகும். நீளம் = அறியில்லை அகலம்= அறியில்லை வெளியிணைப்பு மின்னோடி= 2 x 200 நிறம் = உருமறைப்பு கலவர் = 07 வேகம் = 30–35kts தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் உயரம் = ~3.4' ஆய்தம் = 01 x M2 Browning/ ZU-23 (முன்); 01 x 12.7mm (பின் ); 01 x RPG ; 01 x PK(பின்) 1) 2) 3) இக்கலத்தின் பெயர்: அன்புமாறன் ''அன்புமாறன்' கலத்தின் அடிப்பகுதி' 4) இக்கலத்தின் பெயர்: ஓவியா 'கலத்தின் கடையால்' 'கலத்தில் பின்னிருந்து முன்னோக்கிய தோற்றம்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் வழங்கல் கலங்கள் ஆகும். 1) 2) — குமுதன் வகுப்புக் கலம் (Kumuthan Class craft) இது ஒரு விதமான வழங்கல் படகாகும். இதன் படம் எதுவென்று எனக்குத் தெரியவில்லை. — சூடை வகுப்புக் கலம் (Sudai Class craft) இவ்வகைக் கலங்கள் தாக்குதல் கலங்கள் ஆகும். இவை புலிகளிடம் 5-10 ஆவது இருந்திருக்கலாம் என்று கணிக்கிறேன். இவற்றில் ஆகக்குறைந்தது ஒரு படகு இடியனாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. நீளம் = 35.8' அகலம் = 8.9' உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = உருமறைப்பு கலவர் = 6-8 வேகம் = 30-35 kts எடை = 10-kilo tonne கதுவீ =வட்டு வடிவம் தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = ZPU-1 / 20mm ஒலிகன் (முன்), 1x GPMG(பின்), 1x12.7mm(பின்), 1xRPG 1) கலப்பெயர்: சுதர்சன் 2) 3)கலப்பெயர்: அறியில்லை 4) 5) கலப்பெயர்: மது 'கலத்தின் தோற்றம்' 6) கலப்பெயர்: ???? 'கலத்தின் கடையால்' 7) கலப்பெயர்: கருவிழி இவற்றின் ஒருசிலவற்றின் மீகாமன் இருப்பிடத்திற்கு கூடும் போடப்பட்டிருந்தது. கீழுள்ள இரு படிமங்களும் ஒரே படகினையே காட்டுகின்றன. 8 ) & 9) கலப்பெயர்கள்: அறியில்லை — சகடை வகுப்புக் கலம் (Sahadai Class craft) இவ்வகைக் கலங்கள் வழங்கல் கலங்கள் ஆகும். ஆய்தம் = 1x pk (பின்), 1x 12.7/20mm(முன்) கதுவீ = இல்லை வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP/ 4 x (~100) HP 1) கலப்பெயர்: செங்கண்ணன் 'முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆய்தங்கள் கடல் வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படுகின்றன' உருமறைப்பு நிறம் பூசப்படும் முன்னர் எடுக்கப்பட்ட படம்: 2) மற்றொரு கலத்தின் பெயர் நெடுமாறன் என்பதாகும். வேவ் ரைடர் மற்றும் வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள்: — வோட்டர் ஜெட் சுற்றுக்காவல் படகுகள் (Water Jet patrol boat) இவை சிறீலங்காக் கடற்படையிடம் இருந்து விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டவையாகும். நீளம் = 13.5m அகலம் = 3m உயரம் = 1m வேகம் = 40 kts நிறம் = உருமறைப்பு தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் =1x 12.7mm(பின்), 1x 12.7/20mm(முன்) கலவர் = 8–12 கதுவீ = இல்லை வெளியிணைப்பு மின்னோடி = 3 x 200 HP 1)இங்கே நீங்கள் கீழே பார்க்கும் கலத்தின் பெயர் : {ச _(இது ஒரு மெய்யெழுத்து) _ _ } ஆக மொத்தம் நான்கு எழுத்துக்கள் உள்ளன. 2) கலத்தின் பெயர் நீ-004/ பாமா 3) இக்கலத்தின் பெயர் தெரியவில்லை 'முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆய்தங்கள் கடல் வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படுகின்றன' 4) இதன் முன்புறத்தில் முதன்மைச் சுடுகலம் தவிர இருபக்கவாட்டிற்கும் இரு இயந்திரச் சுடுகலன்கள்(7.62 மி.மீ) பொருத்தப்பட்டிருந்தன. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது பயனுடைமை தரையிறக்கக் கலங்கள் (LCU) ஆகும். இவ்வகைக் கலங்கள் சரக்குக்காவிக் கலங்கள் ஆகும். இக்கலங்கள் பெரிய கப்பல்களில் இருந்து ஊர்திகள் உள்ளிட்ட சரக்குகளைக் கரைக்குக் கொண்டுவரப் பயன்பட்டன நீளம் = அறியில்லை அகலம்= அறியில்லை வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP நிறம் = உருமறைப்பு, பச்சை வேகம் = ??? தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = சிறியளவிலான ஆய்தங்கள் — குருவி வகுப்புக் கலம் : (kuruvi class craft) இவ்வகைக் கலங்கள் ஆட்காவி அ சுற்றுக்காவல் கலங்களாகும். நீளம் = அறியில்லை அகலம்= அறியில்லை வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 25-30 kts கலவர் = சுற்றுக்காவல் - 3/4 ஆட்காவி - பணியைப் பொறுத்து ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk 1) 2) 3)&4) 5)இது இரட்டை வெளியிணைப்புப் பொறி கொண்ட படகாகும் 6) இப்படகிற்கு மீகாமன் இருக்குமிடத்திற்கு சாளரம் போல ஆடி(glass) பூட்டப்பட்டுள்ளது. — திரிக்கா வகுப்புப் படகு (Thirikka class craft): நீளம் = ??? அகலம்= ??? வெளியிணைப்பு மின்னோடி = 4 x 150 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு கலவர் = 3 தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 32 kts ஆய்தம் = .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் இதுவும் கடற்புலிகளின் ஒருவகையான படையேற்பாட்டுக் கலம்தான். இதால் 15-20 பேர் வரை அவர்களுக்கான படையப்பொருட்களுடன் ஏற்றிச்செல்ல முடியும். 1) 'வலப்பக்கத்தில் உள்ள கடற்கலம் தான் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வகையைச் சேர்ந்தது ' 2) 2) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை கலவர் = 5-7 ஆய்தம் = 1x.50cal (முன்) & 1xRPG(தனியாள்) வெளியிணைப்பு மின்னோடி = 2x150 HP 1) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை கலவர் = 3 ஆய்தம் = 1x.50cal வெளியிணைப்பு மின்னோடி = 1 x 150 HP 1) 'கடையால் பார்வை' — சுப்பர் சொனிக் வகுப்புப் படகுகள் (Super Sonic class boats) இவை புலிகளின் தாக்குதல் கலங்களாகவும் சுற்றுக்காவல் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்ட படகுகளாகும். இவற்றில் புலிகளிடம் இரு விதம் இருந்தது. நீளம்: 23 அடி(ஒரு சில படகுகளில் கதுவீ(RADAR) இருந்தது) ஆய்தம்: .50 mm (முன்) கலவர்: 3 வேகம்: 30–35kts வெளியிணைப்பு மின்னோடி: 1 x 200 HP/ 2 x 200 HP தொலைத்தொடர்பு = VHF நிறம் = உருமறைப்பு, பச்சை, நீலம், கறுப்பு இப்படகின் வரலாறு மிகவும் சுவையானது.. தன்துரையை அழிக்க தானே துணைபோன பெருமை இப்படகினைச் சேரும். அதாவது ஈழக் கடற்போரியல் வரலாற்றில் கடற்புலிகள்தான் முதற் தடவையாக 16 அடி நீளக் கலன்களை உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். பின்னர், அதனை கைப்பற்றி கொண்ட சிறிலங்கா அரசாங்கமானது அதன் வலுவைப் பயன்படுத்தி புலிகளுடனான கடற்போரில் பெரும் திருப்பங்களை விளைவித்தது எனலாம்… ஆனால் இன்று சிங்கள அரசாங்கமானதோ அதனைத் தானே முதன்முதலில் புதுப்புனைந்ததாக(invent) உலகரங்கில் கூசாமல் பறைகிறது... சரி அப்படியென்றால் இது எப்படி சிங்களப் படைகளின் கைகளுக்குப் போனது? .. சுருக்கமாகப் பார்த்து விடுவோம், வாருங்கள்… https://globalecco.org/ctx-v1n1/lashkar-e-taiba?p_p_auth=KcgCT0Hx&p_p_id=101&p_p_lifecycle=0&p_p_state=maximized&p_p_mode=view&_101_struts_action=%2Fasset_publisher%2Fview_content&_101_assetEntryId=611601&_101_type=content&_101_urlTitle=learning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers&redirect=https%3A%2F%2Fglobalecco.org%2Flearning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers%3Fp_p_id%3D3%26p_p_lifecycle%3D0%26p_p_state%3Dmaximized%26p_p_mode%3Dview%26_3_keywords%3Dsea%2Btigers%26_3_struts_action%3D%252Fsearch%252Fsearch%26_3_redirect%3D%252Flearning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers அது ஆழிப்பேரலை வந்து முடிந்த முதலாம் ஆண்டு. சிறிலங்காப் படைகளின் சிறப்பு படகு சதளம் (special boat squadron) என்னும் சிறப்புப் பிரிவு 2006 ஆம் ஆண்டு முடியன்செலகே பந்துள திஸ்ஸநாயக்கே என்பவர் தலைமையில் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் படகு கட்டுமானத்தளம் இருந்த காட்டு இடத்துக்குள் ஆழஊடுருவி அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த 16-அடி நீள படகினை தோண்டி திருகோணமலைக்கு எடுத்துச் சென்றனர்.. பின்னர் அதை மறிநிலை பொறியியல் (reverse engineering) மூலம் மீளுருவாக்கம் செய்து தற்போதைய அம்புப்படகுகள் என்னும் அதே 16 அடி நீளப் படகுகளாக வடிவமைத்தனர். https://nps.edu/documents/110773463/120130624/CTX+Vol+2+No+2.pdf/7e23b091-6c64-0081-b3b9-45e1a0f25072?t=1589935699254 இதில் இப்போது 18 அடி, 23 அடி என்று மேலும் இரண்டு புதிய விதங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. இதன் இப்போதைய பெயர் செட்ரிக் சுற்றுக்காவல் கலம் ஆகும் (பழைய அதிகாரியின் பெயரால்…) ஆக மக்களே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள், இங்கு யார் புதுபுனைவர்கள் என்று! சொந்தமாக உருவாக்கியதாகவே கூசாமல் பரப்புமை...!.. ம்.. மக்களே, போரில் இரிபுநாட்டின் செல்வத்தையெல்லாம் வாகைநாடு சூறையாடுவது பரவலானது.. ஆனால் இதுகால் வரை சொந்தமாக ஒன்றினையும் உருவாக்காமல் தோற்றவனிடம் இருந்து ஊரறிந்த ஒன்றினை எடுத்துவிட்டு அதைப் புதுப்னைந்தவனே நான்தான் என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் வாகைநாட்டை என்னவென்று விளிப்பது? ஆதாரங்கள் பின்வருமாறு: எனக்குக் கிடைத்த புலனங்கள் அடிப்படையில் இவையெல்லாம் 2006 ஆம் காலப்பகுதிக்கு முன்பாக எடுக்கப்பட்ட நிழற்படங்கள் என்று உறுதியளிக்கிறேன்… 1) 'கடற்புலிகளின் 23 அடி நீளக் கலம் | தவளை நடவடிக்கையின் போது' 2) 'சம்பூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படகு' 3) 'கடற்புலிகளின் 23 அடி நீளக் கலங்கள்' 4) மேற்படத்தினை நன்றாகப் பார்த்துவிட்டு அப்படியே கீழே கடற்புலிகளின் கலத்தினைப் பாருங்கள். கீழ்கண்டது கடற்புலிகளின் 23 அடி நீளக் கலமாகும். இக்கலம் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெருகல் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகும். படம் மட்டக்களப்பில் எடுக்கப்பட்டதாகும். 'இக்கலத்தினை நன்கு உத்துப் பாருங்கள். முன்னால் பின்னால் சுடுகலன்கள் பூட்டுவதற்கு ஏற்ற தண்டுகள் வெள்ளை நிறத்தில் தெரிகின்றன' 5) கீழ்கண்டது கடற்புலிகளின் 23 அடி நீளக் கலமாகும். இக்கலத்தின் பெயர் அதன் கூட்டில்(hul) எழுதப்பட்டுள்ளது.. ஆனால் கட்புலனாகவில்லை. இது 2000 ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதியில் எடுக்கப்பட்ட படமாகும். 6) 7) மேற்படத்தினை நன்றாகப் பார்த்துவிட்டு அப்படியே கீழே சிங்களத்தின் படகினைப் பாருங்கள். படியெடுக்கும் இயந்திரத்தில் (photocopy machine) போட்டு எடுத்தது என்று மட்டும் நினைக்க வேண்டாம் …./\… 'சிங்களக் கடற்படையின் சிறப்பு படகு சதள(SBS) 23' அம்புப் படகு' | படிமப்புரவு : Sri Lanka "Arrow" RAB it was designed... - The Boats of Warboats ..., Facebook அடுத்து சிங்களவரின் 23 அடி நீளக் கலங்களையும் காண்போம். இந்த 16 அடி அம்புப் படகுகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே 23 அடிக் அம்புக் கலங்களாகும். 'சிங்களக் கடற்படையின் சிறப்பு படகு சதள(SBS) 23' அம்புப் படகு | படிமப்புரவு: RP Defense - Overblog' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இதுவும் கடற்புலிகளிடம் இருந்த ஒரு வகைக் கலம். நீளம்: 17.3 அடி அகலம் : 3 அடி கலவர் : 1–2 வேகம்: 25–30 kts வெளியிணைப்பு மின்னோடி = 1 x 150 HP — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது அதிவேக முச்சோங்கு (high speed trimaran) வகையைச் சேர்ந்த கடற்புலிகளின் கலமாகும். இவ்வகையிற்குப் புலிகள் பெயர் சூட்டினார்களா என்பது தெரியவில்லை. இதன் கலக்கூடு(hull) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. இதனால் கடலில் நல்ல வேகமாக உருவோட முடியும்.. வெளியிணைப்பு மின்னோடி = 3 x X 1. 'அணியம்' 'கடையால்' 2. இதன் கூடு(hull) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. வெளியிணைப்பு மின்னோடி = 1 x X 'கடையால் மூலைப் பார்வை' 'அணியத்தோற்றம், இழுவையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது' 'அணியத் தோற்றம்' 'பக்கவாட்டுத் தோற்றம்' 'கடையால் தோற்றம்' இஃது இரட்டை கூடு கொண்ட ஓர் கடற்கலனாகும். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X மேலே உள்ளது தான் கீழே உள்ளது:- 'பின்பகுதி' 'அணியம்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது ஒற்றை இருக்கை கொண்ட , முக்கூட்டினை உடைய ஒரு சரக்குக் காவிக் கலனாகும். இதுவும் முக்கூட்டினை(tri hull) உடைய படகாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250HP வேகம் = ??? kts கலவர் = பணியைப் பொறுத்து 'பின்னிருந்த பார்வை' பக்கவாட்டுப் பார்வை — ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடற்புலிகள் பொதுமக்களின் நலன் கருதி பெரிய கடற்கலங்களில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து மிகக்குறைந்த விலையில் மீனவர்கள் ஊடாக பொதுமக்களுக்கு மீன்களை வழங்கினர் . அவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக விடுதலைப் புலிகள் பயன்படுததிய கடற்கலங்கள்தான் இவையாகும். மேலும் இவை வழங்கலுக்கும் பயன்படுத்தப்பட்டன. வகை: படகு 1) 2) கலப்பெயர்: அன்னை வேளாங்கண்ணி 3) 4) இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'வெளிப்புறம்' 'உட்புறம்' 'வெளிப்புறம்' வகை: வள்ளம் 1)கலப்பெயர்: அந்தோணி. வகை: ??? நீளம்: 30அடி இவ்வகைக் கலங்கள் புலிகளிடம் 5 இருந்தது. 1) & 2) 3) & 4) 5) இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'இக்கலத்தில் சிறீலங்கா தரைப்படை வீரன் ஒருவர் ஏறி நிற்கிறார்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: இது சிறிலங்காக் கடற்படையிடமிருந்து கடற்சிறுத்தைகளால் 1999/02/18 கைப்பற்றப்பட்டது ஆகும். இவ்வகுப்புக் கலங்களின் வகுப்புப் பெயர் K-71 என்று சிங்கள படைத்துறை கூறுகிறது. இதன் படிமங்களை கீழே இணைத்துள்ளேன். இதன் கலப்பெயராக புலிகள் "நிமல்" என்ற பெயரினைச் சூட்டினர் இதன் அணியம் கூர் அணியமாகும். இதற்கு காப்பு அடுக்கு போடப்படவில்லை. மாறாக, இதன் தளப்பகுதியானது உட்புறமாக குடையப்பட்டது போன்று தாழ்வாக இருந்தது. குடையப்பட்ட தாழ்வுயரம் எவ்வளவு என்று அறியமுடியவில்லை. இதன் கலக்கூடு கூட வேறு வடிவுடையதாக உள்ளது. அதாவது அதன் கடைக்கால்(stern) கலக்கூட்டில் ஒரு முக்கோண வடிவ புடைப்பம் ஒன்று உள்ளது. இதன் மீகாமன் அறை வேவ் ரைடர் கலங்களின் போன்று உள்ளது. மேலும் இக்கலத்தின் இரும்புக் கம்பி வேலியானது கடைக்காலிற்கு போடப்படவில்லை. இந்த இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும். இதன் முற்பகுதியில் இரண்டு DSHK(12.7 mm) பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமே இதில் தரிக்கப்பட்ட ஆய்தம் ஆகும். இதைத் கவிர வேறு ஏதேனும் சிறிய வகை வேட்டெஃகங்கள்(firearms) இருந்தனவா என்று என்னால் அறிய முடியவில்லை. நீளம்: 13.5 மீ அகலம்: 3.18 மீ வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP வேகம் : 35-40 kts கலவர் = 5–7 கதுவீ = வட்டு வடிவம் தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 2 x 12.7 mm வகை-54 (முதன்மை) ''கடற்கரும்புலி கப்டன் வெற்றி சிங்கள வழங்கல் தொடரணி மீது மோதியிடித்த அன்று ஆனையிறவுக் களப்பில் நடந்த கடற்சமரில் அடிபடும் போது'' 'அணியத்தில் கடற்புலிகள்' 'கலத்தின் அணியம் | பின்னிருந்து முன்னோக்கிய பார்வை | கடற்கலத்தில் நின்று தாக்குதல் நடத்துபவர்கள் கடற்புலிகள். திரைப்படத்திற்காய் சிங்கள உடை அணிந்துள்ளர்கள் (உப்பில் உறைந்த உதிரங்கள் )' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்டது ஆகும். நீளம்: 80+ அடி 'மேற்கண்ட படம் என்னால் உருவாக்கப்பட்ட படம் ஆகும்' 'உட்பகுதி' படகினில் ஓர் சிறீலங்கா தரைப்படை வீரன் ஏறி நிற்கிறார்.. அவரை வைத்து கடற்கலத்தின் நீள அகலத்தினை எடை போட்டுக்கொளுங்கள், எவ்வளவு பெரியது என்று! 'வெளிப்புறம்' கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன். 'வெளிப்புறம் | கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன் ஆவார்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'பின்பக்க மூலையில் இருந்து முன்னோக்கிய பார்வை' 'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய சத்தார் பார்வை' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை பார்ப்பதற்கு ஆட்காவிக் கடற்கலம் போன்று உள்ளது... இதே போன்று 2 கடற்கலங்கள் சிறீலங்காத் தரைப்படைகளால் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்தது. 1) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலத்தினைப் பற்றிய மேலதிக குறிப்புகள் ஏதும் தெரியவில்லை — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை படகு வகையைச் சேர்ந்த புலிகளின் ஓர் கடற்கலம். கதுவீ = வட்டு வடிவம் ஆய்தம் = 2x 7.62 mm 'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய பார்வை... படத்தின் முன்னே தண்டு போல நிமிர்ந்து நிற்பது சுடுகலன் தாங்கி.. பின்னால் தெரிவது கதுவீ' ' 'முதலில் தெரிவது சுடுகலன் தாங்கி.. அதற்குப் பின்னால் தெரிவது கதுவீ'' 'படகில் இருந்த இரும்புச் சட்டகத்தில் மேலே உள்ளது போன்ற இரும்பு உருளைகள் பொருத்தப்பட்டிருந்தன.. பயன் தெரியவில்லை' இது ஒரு வலிப்பு படகு(rowing boat). இதன் பின்பகுதியில் துடுப்புடன் அமர்ந்திருப்பவர் கடற்கரும்புலி லெப்.கேணல். நாளாயினி. முன்பகுதியில் அமர்ந்திருப்பவர் யார் என்று தெரியவில்லை. இவர்கள் இருவரையும் சுற்றி 4 நீர்முழுகி வீரிகள் (women diver) உள்ளனர். — உப்பயானம் (Inflatable boat) / இறப்பர் படகு (Rubber boat) இக்கலங்களுக்கு புலிகள் எப்பெயரும் சூட்டவில்லை. இது ஆட்காவுதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. நீளம் : 15'- 17' கலவர் : தேவையைப் பொறுத்து வெளியிணைப்பு மின்னோடி = 1 x <150 HP நிறம் = சிவப்பு, நீலம், சாம்பல் — மிதவைகள் (floaters) இந்த உப்பயானத்தில் அமர்ந்திருப்பவர்கள் கடற்சிறுத்தைகள் (sea leopard commandos) ஆவர். இவர்களின் கையில் இருப்பது ஒரு மிதவை ஆகும். இதனுள் ஆய்தங்கள் வைக்கப்பட்டிருக்கும்.. மேலும் இதைப் பயன்படுத்தி நீரினிலும் மிதந்து நகர்வார்கள். 1) 2) கீழே நீங்கள் பச்சை நிறத்தில் பார்ப்பது ஒரு காற்று நிரப்பப்பட்ட ஒரு வகையான மிதவை.. அருகில் நின்று ஆர்.பீ.ஜி -ஆல் அடிப்பவர் ஒரு கடற்சிறுத்தை வீரர் ஆவர். இந்த காற்று நிரப்பப்பட்ட பையானது நீள்சதுர வடிவிலானது ஆகும். 3) கலத்தின் மீகாமன் அறையில் செம்மஞ்சள் நிறத்தில் தொங்கிகொண்டிருப்பது இன்னொரு வகையான மிதவையே — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை எல்லாம் ஒரு தாழ் மட்டக் கடற்கல (Low planing Vessel) வகையினைச் சேர்ந்த கலங்களாகும். இவற்றின் வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது இவை ஊடுருவல் கலங்களாக(infiltration crafts) இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இக்கலங்களில் இருக்கை போன்று ஒன்று நடுவில் உள்ளது. கலவர் = 1–2 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP ஆய்தம் = GPMG 7.62mm (முன்) 1. 2. பின்பக்கத் தோற்றம்: 'அடிப்புறம்' 3. 'சத்தார் பக்க வாட்டுத் தோற்றம்' தாரைச்-சறுக்கு (Jetski): 1) 2) இது எறிகணை வீச்சில் சிதைந்துவிட்டது. water scooter: 1) 2) பாதை வகைக் கலம்:- இது வெறுமையான பெற்ரோல் கலன்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். விடுதலைப் புலிகள் தமது ஊர்திகள் மற்றும் பாரமான பொருட்களை ஏற்றி இறக்க பயன்படுத்திய பாலக் கலம் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி புலிகளிடத்தில் 8 இருந்தன. இவை ஒவ்வொன்றிலும் 250 குதிரை வலுக்கொண்ட எட்டு வெளியிணைப்பு மின்னோடிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை கரையிலிருந்து ஒன்றரை மணிநேர ஓட்டத்தில் ஆழ்கடலிற்குச் சென்று அங்கு வந்து தரித்து நிற்கும் போர்த்தளவாட வறைக்கூடக் (warehouse) கப்பல்களிலிருந்து இறக்கப்படும் போர்த்தளவாடங்களைக் கரைக்கு ஏற்றிவரப் பயன்பட்டன. இவற்றில் 14-18 வரையான கடற்புலிப் போராளிகள் நிற்பர். கடற்புலிகளின் கலம் சோதனை இடம். நீளம்: 100 அடி உயரம்: 10 அடி கலையரசன் நீரடி நீச்சல் பயிற்சித் தடாகம் இது கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு போராளிகளை கடலில் பயிற்சி எடுப்பிப்பதற்கு முன்னர் பயிற்றுவிக்கும் இடமாகும். இது 83 அடி நீளமும் 23 அடி ஆழமும் கொண்டதாகும். இது 2001 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று சிறிலங்கா படைத்துறை கூறியுள்ளது. இதன் மேலுள்ள அந்த கம்பிகளில் பிணைக்கப்பட்டிருக்கும் உருமறைப்புகள் (தரப்பாள், மற்றும் இன்னபிறவன) வானிலிருந்து வேவெடுக்கும் போது இதை உருமறைக்கும் விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அது பற்றிய ஒரு நிகழ்படம்(video) கீழ்கண்ட இந்த இழுவைகளில்தான்(trailer) புலிகள் தங்களின் படகுகளை ஏற்றி வைப்பார்கள்.. தேவை வரும்போது இவற்றினை உழவு இயந்திரங்களில் கட்டி கரைக்கு இழுத்துச் செல்வார்கள். பின்னர் அங்கு உள்ள ஓர் ஊர்தி ஒன்றின் மூலம் கரையில் உள்ள மண்ணை தோண்டி அதன் மூலம் கலத்தினைக் கடலினுள் இறக்கிவிடுவார்கள்.. அந்த இறக்கும் ஊபின்புறத்தில் ஓர் கயிறு கட்டி அக்கயிற்றினை பினால் ஓர் ஊர்திக்கு கட்டிவிடுவார்காள். இதன் மூலம் அந்த தள்ளி இறக்கும் ஊர்தி கடலினுட் விழுந்தாலும் அதை கரையில் பிணைக்கப்பட்டுள்ள ஊர்தியைப் பயன்படுத்தி அதை உள்ளிழுத்து விடலாம் 'கடலினுட் கலத்தினை இறக்கும் அந்த ஊர்தி' 'அந்த ஊர்தி' அருகில் அமர்ந்திருப்பவர் சிங்கள ஊடகவியலாளர். 'படகுகாவிகள் எ இழுவைகள்' 'படகுகாவி எ இழுவை' இதுவும் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஊர்தியே. இதன் பயன்பாடு என்னவென்று எனக்குத் தெரியவில்லை! இறுதியாக…………….. 'கடல் தன்னில் அலைமீது கவிபாடி விளையாடி புவியாளச் சென்றவரே! - உங்கள் உடலின்றி உயிரின்றி ஒளியோடு ஒலிகேட்டு எமை ஏங்க வைத்தவரே!' — கடற்புலிகளின் இறுவெட்டிலிருந்து… நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத் தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: https://eelam.tv/ - ஈழத்தமிழர்களின் யூடியுப் போன்றதொன்று Commentary #77) Sundayobserver.lk - Sri Lanka கடலோரக்காற்று - திரைப்படம் உப்பில் உறைந்த உதிரங்கள் - திரைப்படம் EelamView (EelamView) Sea Tigers of the LTTE | Richard Pendavingh) The Island (The Island) (Learning from Our Enemies: Sri Lankan Naval Special Warfare against the Sea Tigers) http://boatswainslocker.com/customer/boloin/customerpages/jetbriefs/HJ_JB427_Sri_Lankan_Patrol_Fleet.pdf Lost Victory (Lost Victory) http://www.fak.dk/en/news/magazine/Documents/ISSUE%2002,%20VOLUME%2002/Whither_the_Hybrid_Threat.pdf புலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…! (https://eelavarkural.wordpress.com/2017/06/03/sea-tigers/) LTTE Suicide Boat Found (LTTE Suicide Boat Found) https://www.researchgate.net/figure/Text-accompanying-the-swimming-pool-Source-Author-photo-2013_fig4_276886367) புலிகளின் படகுத்தொழில்நுட்பத்தை களவாடிய சிங்கள அரசு.!! வெளிவரும் உண்மைகள் (https://www.vivasaayi.com/2016/08/real-sea-battalion.html?m=0) தமிழீழக் கடற்புலிகள்...! | வெளிச்சவீடு (http://www.velichaveedu.com/28219-5-a/) புலிகள் - எரித்ரியா தொடர்புக்கு நோர்வே அரசு உதவியுள்ளதா? (புலிகள் - எரித்ரியா தொடர்புக்கு நோர்வே அரசு உதவியுள்ளதா?) IDA71 - Wikipedia (IDA71 - Wikipedia) Stealth boats, mini subs of the LTTE(with janes video) (Stealth boats, mini subs of the LTTE(with janes video)) The last ‘Ad­mi­ral’ from http://H.M.Cy.S. Coastal Forces (The last ‘Ad­mi­ral’ from H.M.Cy.S. Coastal Forces) Dossier on weapons of ltte- pdf புலிகளின் மக்கள் சேவைப்படகு போர் காயங்களுடன் அனாதரவாக கிடக்கின்றது!. கடற்படையினரின் கட்டுப்பாட்டு வளாகத்தில் விடுதலைப் புலிகளின் தோணிகள் Sea Tigers – Wikipedia கடற்சிறுத்தை பெண்புலி நாதினி. | ஒருபேப்பர் https://noolaham.net/project/481/48098/48098.pdf கருணா குழுவின் துரோகத்தால் கொல்லப்பட்ட கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன் படிமப்புரவு (image courtesy) பெருமளவான படிமங்கள் YouTube இருந்து உருவாக்கப்பட்டவை ஆகும் Galledialogue 2019 http://eelamaravar.com Mapio.net IDA71 - Wikipedia தமிழீழக் கடற்புலிகள்...! | வெளிச்சவீடு TripAdvisor JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn Richard Pendavingh ResearchGate Getty Images Wikimedia Commons H I Sutton - Covert Shores YouTube SBS and RABS breaking new grounds Thuppahi's Blog - WordPress.com: Create aFree Website or Blog (http://WordPress.com) Photography Unit of Liberation Tigers (http://aruchuna.com) Eelam Archives on Twitter https://twitter.com/EelamArchives/status/1254396048505798661/photo/1) Getty Images Home (https://www.uyirpu.com/) Steemit (http://steemit.com) LankaWeb News Eela Malar Pulikalin Kural - Pulikalin Kural (http://pulikalinkural.com) https://www.army.lk/ (https://www.army.lk/) http://tiger.javon.us (http://tiger.javon.us) Web Page Under Construction (http://TamilNation.com) EelamView (EelamView) Aruchuna (Photography Unit of Liberation Tigers) Enjoy free comfortable tools to publish, exchange, and share any kind of ocuments online! Explore Sri Lanka (Emerging Out Of The Shadows) Lakdasun Trip Reports Archive Navy Museum - Trincomalee (Navy Museum - Trincomalee) Al Jazeera http://HISutton.com (http://HISutton.com) Sri Lanka: Sea battle (Sri Lanka: Sea battle) Two more LTTE Suicide Boats &amp; Three Vehicles Found (http://WikimediaCommons.com) (no title) Sri Lanka Navy Museum - Captured LTTE Boats) (https://puliveeram.wordpress.com/2018/12/12/ltte-made-weapons/#jp-carousel-37657) http://Flickr.com (http://Flickr.com) EagleSpeak (EagleSpeak) http://www.shunya.net/Pictures/SriLanka/Vanni-East/Vanni-East.htm)) This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. H I Sutton - Covert Shores) Log In or Sign Up LTTE smuggling of diesel and cement foiled in Pesalai கடற்புலிகளின் முகாம் கண்டுபிடிப்பு: சிறிய நீர்மூழ்கிகள், படகுகள் மீட்பு. http://www.வேர்கள்.com தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் http://flickr.com - kumaran satha ரூபபாகிணி தொலைக்காட்சி - சிங்களம் TamilNet ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  4. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் உருவோட்டப்பட்ட Wave Rider வகுப்புக் கலங்கள் பற்றியே. இவ்வாணத்தில், இவை பற்றி நானறிந்த செய்திகளை எழுதி வைத்துள்ளேன். '2005 ஆண்டு முல்லைத் தீவுக் கடலில் ஓடும் கடற்புலிகளின் படகுகள். இப்படத்தில் 3 விதமான மொத்தம் 4 படகுகள் காணப்படுகின்றன.' இவை 1993 இல் இருந்து 2009 ஐந்தாம் மாதம் வரை கடலில் ஓடின. பின்னாளில் சிங்களக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு 'Wave Rider' என்னும் அதே பெயரிலே மீண்டும் கடலில் ஓடுகின்றன. இவைதான் கடற்புலிகளின் முதன்மை கடற்சண்டைக் கலங்கள் ஆகும். இவை உலகத்தால் சுடுகலப் படகு (GB) என்னும் வகையினில் சேர்க்கப்பட்டன. கடற்புலிகளிடம் இவை 10–20 வரை இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை.. ஆகையாலத்தான் இவை யூதரின் டோறாக்களைப் (Super Dvora Mk-III. 2008 ஆம் ஆண்டின் இறுதியில் இதன் பெரும வேகம் 48.3 நோட்ஸ் ஆகும்) போல அதிவேகமாக கடலில் ஓடின. ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன. கடற்புலிகளால் நான்காம் ஈழப்போரில் கட்டப்பட்ட ஒரு இவ்வகுப்பான சண்டைப் படகுகளானவை 50 நோட்ஸ் வேகத்தில் ஓடியவை ஆகும். அதன் படம் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. அந்த சண்டைக் கலத்தின் வெள்ளோட்டத்தின் போது தான் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்கள் நேர்ச்சியாகக் காயப்பட்டவர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. இக்கடற்கலங்களை கட்டுவதற்கு புலிகளிடம் 2 பிரிவுகள் இருந்தன. அவையாவன, மங்கை & டேவிட் படகு கட்டுமானம் என்பவையே.. கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC, Garmin & Ray Marine ஆகிய கதுவீகளை (RADAR) பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்..) இக்கலங்கள் யாவும் தரித்து நிற்க துறைமுகங்கள் இல்லையாதலால் இவை படகுகாவிகளில்(dock) ஏற்றி அவர்கட்கு தேவையான இடங்களில் உருமறைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின் கடற்சமர் வரும்போது உழுபொறியின்(tractor) உதவியுடன் கரைக்கு இழுத்துவரப்பட்டு அங்கு நிற்கு ஒருவகை இடிவாருவகத்தின்(Bulldozer) உதவியுடன் கடலினுள்ளே இறக்கப்படும். இறக்கும் போது கரையோர மணல் சாய்வாக தோண்டப்பட்டே இறக்கப்படும். இறக்கிய பின்னர் படகுகாவிகள் எல்லாம் அருகில் உருமறைக்கக் கூடிய இடங்களில் தரிபெறும். பின்னர், கடற்சமர் முடித்து கரைக்கு திரும்பிவரும் படகுகள் யாவும் படகுகாவிகளில் ஏற்றப்பட்டு மீண்டும் பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டு செல்லப்படும். தொடர்தடம் (Continuous track) உடைய இடிவாருவகங்கள் மட்டும் கடற்புலிகளிடம் ஆகக் குறைஉந்தது 6 இருந்தன. இவை யாவும் ஓயாத அலைகள் - 2 இன் போது சிறிலங்கா படைத்துறையிடமிருந்து விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டவையாகும். 'பலவகை படகுகாவிகள்' 'மணலைத் தோண்ட வரும் அந்த இடிவாருவகம்(bulldozer) | கவனி: இவ்வூர்தியினை ஓட்டுபவர் ஒரு பெண் போராளியாவார்' 'மணலைத் தோண்டும் இடிவாருவகம்' 'தோண்டப்பட்ட சாய்வான இடத்தினூடாக கடலினுள் இறக்கபடும் வேவ் ரைடர் படகு | படகு, படகுகாவியின் மேலே வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்' கடற்புலிகளின் கடற்கலங்கள் பல்வேறு வகையாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களை (கலப்பெயர்) சூட்டியிருந்தனர். அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய போராளிகளின் பெயர்களை தாங்கி இருந்தன. இப்பெயர்கள் யாவும் அக்கலங்களின் கலக்கூட்டின் நடு அல்லது முன்பகுதியில் எழுதப்பட்டிருந்தன. சில கலங்களின் கலக்கூட்டில் அவற்றின் கலப் பெயர்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்த பெயர்களை என்னால் இயன்றளவு தேடிச் சேகரித்துள்ளேன். அவையாவன, வேவ் ரைடர்(Wave Rider) வகுப்புக் கடற்கலன்: இங்கு 25 கடற்கலங்களின் பெயர்களை கொடுத்துள்ளேன். கூர் அணிய வேவ் ரைடர்கள்:- பரந்தாமன், மாதவி, இசையரசி, உதயச்செல்வி, மதன், மருதன், ஆதிமான்(ஒஸ்கார்), பாரதிதாசன், அகச்செழியன், இளநிலா, கடலரசன், இந்துமதி, சுகி, அருணா, கேசவன், றோசா Rosa கரண்டி அணிய கத்தேட்றல் கலக்கூட்டு வேவ் ரைடர்கள்:- பசீலன், எரிமலை, வேங்கை, போர்க், வெண்ணிலா, பிரசாந்த், ராஜ்மோகன், சேரன் கரண்டி அணிய பிளானிங் கலக்கூட்டு வேவ் ரைடர்கள் ஆகக்குறைந்தது ஒரு படகு 'வர்மன்' என்னும் கலப்பெயரைக் கொண்ட இக்கலத்தின் வகுப்பு, வகை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. சரி, இனி ஒவ்வொரு வகையினைப் பற்றியும் காண்போம். — வேவ் ரைடர் வகைப் படகு (Wave Rider Type boat) முதலில் வேவ் ரைடர் வகைப் படகுகள் பற்றி காண்போம். இவை வேவ் ரைடர்(Wave Rider) என்றும் புலிகளால் அழைக்கப்பட்டன. இப்பெயரானது இக்கலங்களின் மீகாமன் அறையின் பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருக்கும். இவற்றில் கடற்புலிகளிடம் 3 விதமான படகுகள் இருந்ததன. அவை ஆவன; கூர் அணியப் படகு (Pointed bow boats) - Planing Hull கரண்டி அணியப் படகு (spoon bow boats) - Cathedral hull கரண்டி அணியப் படகு (spoon bow boats) - Planing hull இவ்வகைக் கலங்கள் பெரியளவிலான தாக்குதல் கலங்கள் ஆகும். இவை யூதர் படகேறி சீறும் கணையோடு கடலில் விரையும் சிறீலங்காக் கடற்படையோடு பொருத கடற்புலிகளுக்கு பெரிதும் உற்ற துணையாய் இருந்தன. மேலும் கலத்தினைச் சுற்றிவர பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாரில் இருந்து முதன்மைச் சுடுகலன் வரையிலான இரும்புக் கம்பி வேலியின் உயரம் 3.4 அடி ஆகும். அதன் பிறகு பாதியாகக் குறைந்து 1.7 அடியாகக் குறைந்து சிறிது தூரம் வரை இருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்றாவது விதமான வேவ் ரைடரின் பக்கவோரத்தின் கம்பிவேலி அதன் அணியத்தின் நுனி வரை நீண்டுள்ளது. இக்கலங்களில் கடற்புலிகளின் கொடியும் தமிழீழத் தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும். இக்கலங்களின் உள்ளேயே, இவற்றிற்குத் தேவையான அனைத்து கூடுதல் கணைகளும்(ammunition) இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். சில படகுகளின் கலக்கூட்டில் கடற்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அணியத்தின் ஆக முன்பகுதியின் மேற்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகினைக் கட்டி வைக்க(நங்கூரமிட) உதவுகிறது. அத்துடன் கலக்கூட்டின் ஆக முன்பகுதியின்(அணியத்தின் கீழ்ப்புறம்) கீழ்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகுகாவியில் இருந்து இப்படகினை கீழே இழுத்து இறக்க உதவுகிறது. இக்கலங்களின் கடையாரின் இரு பக்கவோரங்களின் தொடக்கத்தில்(கடையாரில் இருந்து) இரு கட்டைகள்(இடப்பக்க-1; வலப்பக்கம்-1) உள்ளன. இக்கலங்களில் சிலவற்றின் மீகாமன் அறையின் வெளிப்புறத்தில் வளைவாக இரு கம்பிகள் சமாந்தரமாக பொருத்தப்பட்டிருக்கும். இக்கம்பிகள் பக்கவாட்டுச் சாளரத்திற்குச் சமாந்தராமக இருக்கும். இவற்றின் மேல் தொலைதொடர்பு வட்டு, கதுவீ போன்றன பொருத்தப்பட்டிக்கும். தேவைப்படின் கொடிக்கம்பங்களும் இதில் கட்டப்பட்டிருக்கும். (பட விளக்கத்திற்கு கரண்டி அணிய விதம் மூன்றில் உள்ள வெண்ணிலா என்னும் படகினைக் காண்க) அடுத்து இவற்றின் கலக்குழு (crew) பற்றிப் பார்ப்போம். குழுவினர்: 13–15 முதன்மைச் சுடுகலனின் முதன்மைச் சூட்டாளர் - 1 கடையாரில் இன்னொரு கனவகை சுடுகலன் பூட்டப்பட்டிருப்பின் அதற்கும் ஒரு முதன்மைச் சூட்டாளர் அமர்த்தப்பட்டிருப்பார். முதன்மைச் சுடுகலனின் உதவியாளர்மார் - 2/3 பொறியியலாளர் & உதவியாளர் - 1+1 பக்கவாட்டில் உள்ள 5/6 சுடுகலன்களிற்குமான சூட்டாளர்மார் - 5/6 தொலைத்தொடர்பாளர் (படகு கட்டளை அதிகாரி) - 1 உந்துகணை சூட்டாளர் - 1 மீகாமன் - 1 இனி ஒவ்வொரு வகுப்பாக விரிவாகக் காண்போம்:- குறிப்பு: நான் இங்கே கொடுத்திருக்கும் பல்வேறு படைக்கலன்களின்(munition) பெயர்கள் யாவும் கடற்புலிகளின் பல வேவ் ரைடர் வகைப் படகுகளின் படங்களில் நான் கண்டவற்றை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன். பட ஆதாரம் தேவைப்படுவோர் "கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images" என்ற என்னால் ஆக்கப்பட்ட படிம கப்பகத்தினுள் இருந்து எடுத்துக்கொள்ளவும். கூர் அணியம் கொண்ட சண்டைப்படகு - இது கூர் அணியம் கொண்ட கலமாகும். இவ்விதக் கடற்கலங்கள் பிளானிங் வகை கலக்கூட்டினை உடையவை ஆகும். இவற்றில் ஒரு தெறுவேயம்[cannon (முதன்மை)] உட்பட மொத்தம் 6 & 7 சுடுகலங்கள் (உதயச்செல்வி(8) தவிர) இருந்தன. இவற்றில் நான்கு விதம் உண்டு. 'கலக்கூடு(hull)' 'மூன்று விதமான இவ்வகை சண்டைப் படகுகள் (வலது படிமம்) | இவற்றில் வலது படிமத்தில் உள்ள படகுகளில் இடது பக்கத்தில் இருக்கும் படகின் இடது பக்கவாட்டுப் பார்வையானது, இடது பக்கத்தில் தனியாக உள்ள படிமத்தில் காட்டப்பட்டுள்ளது' நீளம் = 55' அகலம் = 18' வேகம் : 35–40 kts தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = வட்டு வடிவம் வெளியிணைப்பு மின்னோடி= 4/5 x 250 HP புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {ZPU-2/ ZU-23 (ஒற்றை & இரட்டை)/ 20mm GIMAT / 25mm ஓர்லிகோன்/ 35மி.மீ ஓர்லிகோன்} பக்கவாடு: 2/3 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2/ W85/ T-85 ]/ M1919, 1xதானியங்கி கைக்குண்டு செலுத்தி, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம்(portable) -01 x RPG/Carl Gustav, AKS துமுக்கிகள்(rifle) விதம் - 1 இது கல்லப்பட்டுள்ளது. அதாவது இதன் தளப்பகுதிக்கு மேலே ஒரு காப்பு அடுக்கு ஒன்று போடப்பட்டிருக்கிறது. அதன் தாழ்வானது, கிட்டத்தட்ட ஒரு சராசரி மனிதனின் முழங்கால் வரையிலான உயரம் உடைய அளவிற்கு தளத்தின் மேற்பரப்பிலிருந்து இருக்கிறது. இந்த காப்பு அடுக்கானது முழு அணியத்திற்கும் பக்கவோரத்திற்கும்(gunwale) போடப்பட்டுள்ளது. கடைக்காலில் அதன் பக்கவோரத்திற்கு மட்டும் போடப்பட்டுள்ளது.. அணியத்தின் முன்பகுதியில், பிறை வடிவ, ஓர் சராசரி மனிதனின்(ஈழத் தமிழன்) இடுப்பளவு உயர தடுப்பு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது அந்த காப்பு அடுக்கைக் காட்டிலும் உயரமானது ஆகும். இது முதன்மைத் தெறுவேயத்தை நோக்கி சுடப்படும் எதிரியின் சன்னத்தில் இருந்து ஓரளவிற்கு காப்பளிக்கிறது. இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் அணியக் கட்டை மற்றும் சுடுகலத் தண்டு எண்ணிக்கை அடிப்படையில் வேறுபடுகிறது. இது போன்ற படகுகளிற்கு கட்டையானது நடுவில் இல்லாமல் அவற்றின் அணியத்தின் இருபுறத்திலும் இருக்கிறது. மேலும் இவற்றில் வலது பக்கவாட்டிற்கு 2 சுடுகலனும், இடது பக்கவாட்டிற்கு மூன்றும் சுடுகலனும் (எல்லாவற்றையும் போல் முதன்மைச் சுடுகலனாய் ஒன்றும்) என மொத்தம் 6 சுடுகலன்கள் உள்ளன. 'தளப்பகுதிக்கு காப்பு அடுக்கு போடப்பட்டுள்ளதையும் அணியத்தில் தடுப்பு கட்டமைப்பு(structure) உள்ளதையும் நோக்குக' விதம் - 2: இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் காப்பு அடுக்கு அடிப்படையில் மட்டும் வேறுபடுகிறது. இது கல்லப்படவில்லை. இதற்கு, காப்பு அடுக்கு முன்னர் போடப்பட்டு பேந்து கழற்றப்பட்டுள்ளது. அதற்கான அடையாளங்களும் இதன் தளப்பகுதில் தெரிகிறது. மாறாக தளத்தின் மேற்பரப்பில் இருந்து அரையடி உயரத்திற்கு பக்காவோரத்தில் (gunwale) உள்ள கம்பியின் அடியில் தகரம் போடப்பட்டுள்ளது. இதற்கு காப்பு அடுக்கு போடப்படாதலால் முன்பக்க தடுப்பும் இல்லை. இதன் நீளம் விதம் ஒன்றினது போலத்தான் உள்ளது. மேலும் அணியத்திற்கு வரும் பக்கவோர கம்பியின் உயரம் 0.8 அடியாக உள்ளது. 'இவ்விதக் கலங்களின் முன்னிருந்து நோக்கும் காட்சி' இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் சுடுகலத் தண்டு அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பெயர் 'உதயச்செல்வி' ஆகும். இது நீல வரி அணிந்த பெண் போராளிகளைக் கொண்டிருந்தது. இதில் 8 சுடுகலன்கள் பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் முன்னிற்கும்(ZPU-2) பின்னிற்கும் (ஓர்லிகோன் 20மி.மீ) தலா ஒரு முதன்மைத் தானியங்கி தெறுவேயம்(Autocannon) பூட்டப்பட்டிருந்தது. வலது பக்க நடுவில் மட்டும் ஒற்றைக் குழல் கைக்குண்டு செலுத்தி(40 mm) இருந்தது. இடது பக்க நடுவில் 7.62mm GPMG ஓர் பூட்டப்பட்டிருந்தது. ஏனைய நான்கு மூலைக்கும் இரண்டு 12.5மிமீ உம் இரண்டு PK GPMG உம் பூட்டப்பட்டிருந்தது. மேலும் இதன் கடைக்காலின் பக்கவோரத்திற்கு(gunwale) இரும்புக் கம்பிவேலி போடப்படவில்லை. இவை சில நேரத்தில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகளையும் கொண்டிருக்கும். இவை இனியில்லை என்ற வேகத் தாக்குதலிற்கு பூட்டப்பட்டு கொண்டு செல்லப்படும். 'மாதவியில் ஐந்து பொறிகள்(250Hp) பூட்டப்பட்டிருப்பதைக் காண்க' விதம் - 3: கலப்பெயர்: றோசா Rosa இதனுடைய கலப்பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதனது கலக்கூட்டில் மேற்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது. இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் பொறிகள் ( 3 உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட கலம்) அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பொறிக்கு(engine) கடைக்காலில் தனியாக ஓர் பெட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் கரையோரத்திற்கும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. ஆனால் பெட்டி தளத்தில் இருந்து சிறிது உயரமாக இருப்பதால் கம்பிவேலியின் உயரம் குறைவாக உள்ளது. மேலும் அந்த கம்பிவேலியின் உயரம் ஏற்கனவே கடைக்காலிற்கு முன்னால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலியில் இருந்து காலடியாவது குறைவாக இருக்கிறது. கரண்டி அணிய வகை சண்டைப்படகு இவை கரண்டி வடிவ அணியத்தினையும் கத்தேட்றல் கலக்கூடுகளை(cathedral hull) உடையவை. நீளம் = தெரியவில்லை அகலம் = 18' கலவர் = 12–15 வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP வேகம் : 35-40 kts(உச்ச வேகத்தில்) தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = நீள சதுர வடிவம், வட்டு வடிவம் புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {ZPU-2/ 20mm GIMAT/ 2M-3 25மி.மீ (ஒற்றைக்குழல்)/ 25mm ஓர்லிகோன்/ 35மி.மீ ஓர்லிகோன்} பக்கவாடு: 2/3 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2/W85/ T-85] / M1919, 1xதானியங்கி கைக்குண்டு செலுத்தி, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம் (portable) - 01 x RPG, துமுக்கிகள்(rifle) விதம்-1: இவை கல்லப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 7 சுடுகலத் தண்டுகள் இருந்தன. அதற்கு அதிக உருமறைப்பு செய்யும் வகையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் தளத்திற்கும் காப்பு அடுக்கு போடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒன்றே ஒன்றினைத் தவிர ஏனை அனைத்துக் கலங்களிற்கும் மீகாமன் அறை ஒரே மாதிரி இருந்தது. 1) 2) இதன் மீகாமன் அறையும் ஏனைய கலங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. அதாவது, மீகாமன் அறையின் சாளரங்கள் வேறுபடுவதோடு அவை சாய்ந்தாரமாக(slopy) இல்லை. முன்பக்க சாளரங்கள் எல்லாக் கலங்களிற்கும் பிரிந்திருப்பது(இடத்திற்கு ஒன்று வலத்திற்கு ஒன்று) போன்று இல்லாமல் இரண்டும் இணைந்து செவ்வக வடிவில் உள்ளன. இதன் மீகாமன் அறை: 'இதன் முகப்புச் சாளரம் பிரிபடாமல் உள்ளதைக் காண்க' விதம்-2: இவை கல்லப்பட்டவில்லை. ஆனால் இவற்றின் தளத்திற்கு காப்பு போடப்படவேயில்லை. மாறாக பக்கவோரங்கள் 0.8 அடிக்கு தகரம் கொண்டு அடிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உருமறைப்பு செய்யும் வகையில் வரி வண்ணமும் லேபெர்மஸ்டெர் வண்ணும் பூசப்பட்டுள்ளது . இது, விதம் ஒன்றில் இருந்து நீளம் குறைவானது ஆகும். 4 ஆம் ஈழப்போரில் தான் இது கட்டப்பட்டிருக்கிறது. இவை வெளியிணைப்பு மின்னோடி கொண்டவையாகும். இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன. இதன் கலப்பெயர்: போர்க் விதம்-3: இது, விதம் 2 போன்றே தோற்றத்தில் இருந்தாலும் மின்னோடி அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் நீளம் அதே தான். இவை கல்லப்பட்டவில்லை. இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன. இது போன்ற கலத்தினை புலிகளின் எந்தவொரு பாடல் நிகழ்படங்களிலும் காண முடியவில்லை. இப்படகின் பெயர் வெண்ணிலா என்பதாகும். இதே போன்ற மற்றொரு கலத்தின் பெயர் பிரசாந் என்பதாகும். இவை 3 உள்ளிணைப்பு மின்னோடி கொண்டவையாகும். இதன் பொறிக்கு(engine) கடைக்காலில் தனியாக ஓர் பெட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் கரையோரத்திற்கும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. ஆனால் பெட்டி தளத்தில் இருந்து சிறிது உயரமாக இருப்பதால் கம்பிவேலியின் உயரம் குறைவாக உள்ளது. மேலும் அந்த கம்பிவேலியின் உயரம் ஏற்கனவே கடைக்காலிற்கு முன்னால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலியில் இருந்து காலடியாவது குறைவாக இருக்கிறது. உள்ளிணைப்பு மின்னோடி = 3 x 250 HP 'உள்ளிணைப்பு மின்னோடி' கரண்டி அணிய பிளானிங் கலக்கூடு வகை சண்டைப்படகு இவை கரண்டி வடிவ அணியத்தினையும் பிளானிங் கலக்கூடுகளை (Planning hull) உடையவை. நீளம் = தெரியவில்லை அகலம் = 18' கலவர் = 12–15 வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP வேகம் : 35-40 kts(உச்ச வேகத்தில்) தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = நீள சதுர வடிவம், வட்டு வடிவம் புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {2M-3 25மி.மீ இரட்டைக்குழல் / 25mm ஓர்லிகோன்} கடையார்: 1x ZPU-2 பக்கவாடு: 1/2 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2] /.30mm M1919, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம் (portable) - 01 x RPG, துமுக்கிகள்(rifle) அணியத்தின் ஆக முன்பகுதியில் (கீழ்க்கண்ட படத்தில் கம்பிவேலி குத்தென்று விழுமிடத்திற்கு முன்னால்) இதைக் கட்டி வைப்பதற்கான கட்டை உள்ளது. 'புலிகளின் குமுதனின் அணிய கலக்கூடு' 'அணியம்' மேலும் இதன் மீகாமன் அறையின் முகப்புத் தோற்றமும் சால்டாக்கைப் (Shaldaq - 2) போன்று உள்ளது (அதாவது சாளரங்களில் நடுவில் ஒன்று நேராகவும், அதன் இரு பக்கங்களிலும் இரு சாளரங்கள் சற்று சத்தாராகவும், மூலையும் பக்காவடும் தொடங்கும் இடத்தில் முக்கோண வடிவில் இரு பக்கத்திற்கும் ஒவ்வொன்றென இரண்டும் போடப்பட்டுள்ளது). மீகாமன் அறை முற்றிலும் வேறுபாடாக உள்ளது. சிறு மறைப்போடு பெரும்பகுதி திறந்த வெளியாகவே உள்ளது . மீகாமன் அறைக்கு மேலே வட்டுவடிவ கதுவீ பொருத்தப்பட்டுள்ளது. 'மீகாமன் அறையும் சுற்றுப்புறமும்' 'மீகாமன் அறையும் சுற்றுப்புறமும்' 'அணியச் சுடுகலத் தொகுதி' 'அணியச் சுடுகலன்கள்' உள்ளிணைப்பு மின்னோடிப் பெட்டியுனுள் கடையாரிலிருந்து ஏறுவதற்கு பின்பக்கமாக நிரந்தர ஏணி பொருத்தப்பட்டிருக்கிறது. 'புலிகளின் டோறாவின் கடையால்' இதற்கு வெளியிணைப்பு மின்னோடி(OBM) இல்லை. பெட்டியின் பின்புறத்தின் அடியில் 6 சிறு துவாரங்கள் உள்ளன. இதன் கடையாலின் அடிப்புறத்தை உத்துப் பார்க்கும் போது இதற்கு 3/4 உள்ளிணைப்பு மின்னோடி(IBM) பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது . 2) புலிகளிடம் இருந்த இரண்டாவது கடற்கலன்: இது இவ்வகுப்பைச் சேர்ந்த இரண்டாவது படகா அல்லது ஒரே படகின் அணியச் சுடுகலன் மட்டும் மாற்றப்பட்டதாலான படகா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. இதில் முதன்மைச் சுடுகலனாக வகை - 61 ஐச் சேர்ந்த 25 மி.மீ சுடுகலன் பொருத்தப்பட்டுள்ளது. இச்சுடுகலனானது ஓ.அ- 3 இன் மூன்றாங் கட்டமான ஆனையிறவுச் சமர்க்களத்தில் கைப்பற்றப்பட்டதாகும். இதன் கடையாலில் சிபியு 2 பூட்டப்பட்டுள்ளது. கனவகைச் சுடுகலனுக்குப் பின்னால், பக்கவாட்டில், மேலும் இரு சுடுகலன்கள் பூட்டப்பட்டுள்ளன. இக்கடற்கலத்தில் வேறேதும் சுடுகலன் பூட்டப் பட்டிருக்கிறதா என்பதை என்னால் அறியமுடியவில்லை! வேவ் ரைடர் வகுப்புக் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்: வேவ் ரைடர்கள் மொத்தம் மூன்று வரை மீகாமன் அறை வடிவத்தினைக் கொண்டிருந்தன. அனைத்து கூர் அணிய வடிவங்களும் ஒரே மாதிரியான அறையினைக் கொண்டிருந்தன (இவற்றின் முகப்பில் இரு சாளரங்கள் இருந்தன). இதனை நீங்கள் மேலே காணலாம், கூர் அணிய வடிவில். கரண்டி அணிய வடிவங்களானவை கூர் அணிய வடிவங்களின் அறையோடு இன்னும் இரு (ஒன்றினது முகப்புச் சாளரம் பிரிபடாமல் ஒரே சாளராமகவும் வேறு இரண்டில் இங்கிலாந்தின் வோட்டர் ஜெட்டின் மீகாமன் அறையை ஒத்த அறை வடிவமும் காணப்பட்டன) வடிவங்களையும் கொண்டிருந்தன. 'வேவ் ரைடர் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்' 'மீகாமன் அறையினுள் இரு பெண் மீகாமர் கலத்தினை செலுத்தும் காட்சி' 'மீகாமன் அறையினுள் ஒரு மீகாமனும் படகு கட்டளை அதிகாரியும் (வோக்கியுடன்) நிற்கின்றனர்' மேற்கண்ட படத்தில் மீகாமன் அறையின் சாளரத்தை நோக்குக. இம்மீகாமன் அறையின் கூரையில் ஒரு கம்பி பொருத்தப்பட்டுள்ளது. இது பிடித்துக்கொண்டு நிற்பதற்காகும். முகப்புச் சாளரத்தின் மேலே முச்சக்கரவண்டிகளுக்கு இருப்பது போன்று நீர் உள்ளே வராமல் தடுப்பதற்கான திரை (தரப்பாள் போன்ற பொருண்மத்தால் ஆனது) மடித்துக் கட்டப்பட்டுள்ளது. 'இங்கிலாந்தின் வோட்டர் ஜெட்டின் மீகாமன் அறையை ஒத்த அறை வடிவம்' சுடுகலத் தண்டு: வேவ் ரைடர் வகுப்புக் கலங்களில் இருக்கும் இச்சுடுகலத் தண்டுகள் யாவும் வளி மூலம் இயங்குபவை ஆகும். இவற்றை எத்திசையிலும் எப்படியும் சுழற்ற இயலும். ஆனால் கீழ்நோக்கி குறிவைக்க முடியாது. இவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. முதன்மைத் தண்டு - முதன்மைச் சுடுகலன்கள்/ தெறுவேயங்களிற்கு(cannon) மட்டும் நடுத்தரத் தண்டு - 12.7 மிமீ சுடுகலன்களிற்கும் கைக்குண்டு செலுத்திகளிற்கும் மெல்லிய தண்டு - 7.62 மி.மீ சுடுகலன்களிற்கு மட்டும் ' குடைக்கப்படாத கூர் அணியக் கலனின் உட்புறத் தோற்றம்' 'வேவ் ரைடர் வகைப் படகுகளில் பூட்டப்பட்டிருக்கும் தானியங்கி கைக்குண்டு செலுத்தி (GL)' இவற்றுள் முதன்மைச் சுடுகலனானது(ஒருசிலவற்றிற்கு - ZPU-23 ) அதன் தண்டில் ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு மிண்டு கொடுக்கப்பட்டிருக்கும். மிண்டானது அதன் தண்டோடு கீழ்கண்டவாறாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேல்தான் சுடுகலன் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சுடுகலங்களை இயக்கும் விற்பனர்கள் நிற்கும் இடத்திற்கு ஒரு குறுகிய உயரம் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏறி நின்றபடியே எதிரிமீது இவர்கள் சுடுவார்கள். அது ஒரு அரையடி/ முக்கால் அடி உயரம் உடையதாகும். பின்னுதைப்பற்ற சுடுகலன்(Recoilles gun):- இவ்வகைகலங்களில் (வேவ் ரைடர்) பின்னுதைப்பற்ற சுடுகலனும்(106 mm) பொருத்தப்பட்டிருக்கிறது. 'பொருத்தப்பட்டிருப்பதை நோக்கவும். படம் அவ்வளவாக தெளிவாக இல்லையாதலால் இதன் வகைப்பெயர் என்னவென்று என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை' மற்றுமொன்று குறிப்பிடப்பட வேண்டியது யாதெனில், கடற்புலிகளின் முதன்மைச் சுடுகலன்களிற்கு மேலேயும் வட்டு வடிவ தொலைத் தொடர்புக் கருவி & சுடுகலனின் வலது / இடது பக்கத்தில் கதுவீ திரையும்(RADAR display) பொருத்தப்பட்டிருக்கும். 'முதன்மைச் சுடுகலனிற்கு மேலே தொலைத் தொடர்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக| இப்படகு கட்டப்பட்ட ஆண்டு : 1999 இன் பிற்பகுதி.' 'முதன்மைச் சுடுகலனிற்கு மேலே கதுவீ திரை பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக' நங்கூரம் - இவ்வகைப் படகுகளின் அணியத்தில் தான் இவற்றின் நங்கூரம் இருக்கும். (அணியத்தின் மேற்புறத்தில் உள்ள கட்டை). இதன் மூலம் இது கடல்களில் நங்கூரமிடப்பட்டிருக்கும் 'மாதவி என்னும் கலப்பெயர் கொண்ட வகுப்புக் கலம். இதன் நங்கூரத்திற்கு அருகில் தெரியும் அந்த சுவர் போன்ற கட்டமைப்புத்தான், சன்னத் தடுப்பு கட்டமைப்பாகும்' கலப் பெயர்: வர்மன் உயரம்: 6' - 6.3' — புலிகள் சூட்டிய வகுப்புப் பெயர் தெரியவில்லை இது ஒரு வேறுபட்ட வகுப்பிலான படகாகும். இதன் வடிவம் வேவ் ரைடர் வகையை ஒத்திருப்பது போல தோன்றினாலும் அதனினின்று வேறுபட்டது ஆகும். இது கூர் அணியத்தைக்(pointed bow) கொண்டிருந்தது. இதன் கலக்கூடானது ஏனைய கலங்களின் கலக்கூட்டில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக உள்ளது. (மேலே & கீழே உள்ள படத்தைக் கண்டு தெளிக). 'கலக்கூடு(hull)' 'அணியம்' ' அணியத்தின் தளம் கல்லப்பட்டுள்ளதைக் காண்க' இதற்கு அணியத் தளத்தின் உட்பகுதியானது இரண்டு அடிக்கு தோண்டப்பட்டுள்ளது. ஆனால் மீகாமன் அறையின் முன்பகுதித் தொடக்கத்தோடு இக்கட்டமைப்பு முற்றுப்பெறுகிறது. கடையார் அனைத்தும் தட்டையாக உள்ளது. அதற்கு தகரம் கூட அடிக்கப்படவில்லை. அணியத்தில் இருந்து கடைக்காலினை நோக்கும்போது கிட்டத்தட்ட ஒரு படி போல இருக்கிறது, இதன் தளம். அதாவது அணியப் பகுதியிலிருந்து ஏறி கடையாரிற்குச் செல்வது போல! ' 'Battle field' என்று எழுதப்பட்டுள்ளதிற்கு இடது புறத்திலே அந்த படி அமைப்பு முற்றுப்பெறுகிறதைக் காண்க' 'பக்கவாட்டுத் தளம் கல்லப்படாததைக் காண்க' இதன் பின்பகுதியில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகள்(OBM) பொருத்துவதற்கு ஏற்ப இட வசதி உண்டு. ஆனால் எத்தனை பொருத்தினார்களோ நானறியேன். மேலும் கலத்தினைச் சுற்றிவர வேவ் ரைடருக்கு போடுவது போல பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாரில் இருந்து மீகாமன் அறை வரையிலான இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும். மேலும் எங்குமே சுடுகலன் பூட்டுவதற்கான தண்டுகளைக் காண முடியவில்லை. பின்வாங்கும்போது கழற்றிச் சென்றிருப்பார்களோ என்னவோ. ஆனால் கழற்றிச் சென்றிருந்தாலும் அதற்கான தடையம் இருந்திருக்கும், இதில் அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை! அணியம் மொட்டையாக இருந்தது. கடையாரில் சரக்கறைகள் இருந்தன(எண்ணிக்கைக்கு - என்னால் சரியாக எண்ண முடியவில்லை!). 'இதுதான் மீகாமன் அறை' 'கடையாரும் வெளியிணைப்புப் பொறிக்கான(4/5) இட வசதியும் இங்கு காட்டப்பட்டுள்ளது | கடையாரில் சரக்கறைகள் தெரிகிறதைக் காணவும் ' இந்தச் செய்தியாளரை வைத்து அதன் நீள அகலத்தை எடை போட்டுக்கொள்ளவும்! நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத்தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: youtube - virusinic http://boatswainslocker.com/ https://www.maritimemanual.com/types-of-bow-designs/)ations Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka, SLN Admiral Jayanath Colombage ஏனைய அனைத்தும் சொந்தமாக எழுதியவையே! லெப். கேணல் நிரோஜன் வாழ்க்கை வரலாறு படிமப்புரவு YouTube Photography Unit of Liberation Tigers Google EelamView Log In or Sign Up Royalty Free Stock Photos, Illustrations, Vector Art, and Video Clips நீல அச்சுப்படிகள் ரொகான் குணரத்னேவால் எழுதப்பட்ட "Maritime Terrorism: Technologies, Tactics, and Techniques" இருந்து எடுத்து நான் திருத்தியவை ஆகும் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.