Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயக விரோத செயற்பாடுகளை தேசியக் கொடியின் மூலம் மூடி மறைத்துவிட முடியாது

Featured Replies

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தவறுமேயானால் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட 15 நாடுகளையும் இழக்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. மங்கள சமரவீர நேற்று சபையில் எச்சரிக்கை விடுத்தார்.

ஜெனீவா வலியுறுத்தல்களை நிறைவேற்றாவிட்டால் அது அரசாங்கத்தின் ஏகாதிபத்தியமாகவே அமையும். தேசப்பற்றாளர்களாக காட்டிக் கொள்கின்றவர்களின் கருத்துக்களால் எமது நாடு உகண்டாவாகவோ கொங்கோவாகவோ சிம்பாப்வேயாகவோ இல்லாவிட்டால் மியன்மாராகவோ மாற்றமடைவதை தடுக்க முடியாது போகும் என்றும் அவர் சொன்னார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன் போது ஆரம்ப உரையை நிகழ்த்துகையிலேயே மங்கள சமரவீர எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஜெனீவா பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையின் மூலம் எமது நாடு பாரிய தோல்வியை சந்தித்திருக்கின்றது. இதன் மூலம் எமது நாட்டின் தேசிய இறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதனை அமைச்சர்களும் தலைவர்களும் கூட கூறிக் கொண்டிருக்கின்றனர். எது எவ்வாறிருப்பினும் ஜனநாயக கோட்பாடுகளை மீறியதான ஜனநாயக விரோத செயற்பாடுகளை தேசியக் கொடியின் மூலம் மூடி மறைத்துவிட முடியாது. ஏனெனில் சர்வதேச மட்டத்தில் எமது நாடு மனித உரிமைகள் விவகாரம் உள்ளிட்ட 7 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கின்றது.

தமரா குணநாயகம் என்ற தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயற்படுகின்றவர். 1987 காலப் பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு புலிகளுக்கு சார்பாகவும் அதேநேரம் இலங்கைக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஆனால் இன்று அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கூறுகின்றார். உள்நாட்டுப் பிரச்சினைகளில் சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்று அன்று கூறிய ஜனநாயகம் இன்று தேவையில்லை என்றார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கடந்த காலங்களில் ஜெனீவாவுக்கு சென்ற இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்காக நரகத்திற்கு செல்லவும் தயாராகவும் இருப்பதாக அன்று கூறினார். இன்றும் அதே நிலைமை தான் தோன்றியிருக்கின்றது. இந்நிலையில் தான் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இந்த பிரேரணை யைத் தோற்கடிப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசியர் ஜி.எல்.பீரீஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஓடினார். ஆனாலும் கண்ட பலன் எதுவுமில்லை. இறுதியில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 24 வாக்குகளுடன் நிறைவேறியது. அதேநேரம் பிரேரணைக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் 15 நாடுகள் வாக்களித்திருந்தன. இவ்வாறு இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் கூட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு தான் கூறியிருக்கின்றன.

எனவே ஜெனீவாவின் இந்த வலியுறுத்தலை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகவிருக்கின்றது. அதுமாத்திரமன்றி ஜெனீவா பேரவையில் கலந்துகொண்ட இலங்கைக் குழுவின் தலைவரான அமைச்சர் சமரசிங்க மேற்படி சிபாரிசுகளை ஒருவருடத்தில் நிறைவேற்றுவதாக கூறியிருக்கின்றார். இது தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டினை வெளியுறவுத்துறை அமைச்சர் பீரீஸிடமிருந்து தெளிவான சிங்கள மொழியிலோ இல்லாவிட்டால் ஆங்கில மொழியிலோ எதிர்பார்க்கின்றோம்.

இந்நிலையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறுமேயானால் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட 15 நாடுகளின் ஆதரவினையும் இழக்க வேண்டிய நிலைமை உருவாகலாம்.

நிறைவேற்றப்பட்ட பிரேரணையை சர்வதேசத்தின் சதியாக வர்ணித்து அதனை நிறைவேற்ற மறுக்குமானால் அது அரசாங்கத்தின் ஏகாதிபத்திய சொரூபத்தையே பிரதிபலிப்பதாய் அமையும்.

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றியமைக்கப் போவதாகக் கூறி மியன்மாராக மாற்றியமைக்கும் முயற்சிகளே இடம்பெற்று வருகின்றன என்றார்.

http://akkinikkunchu.com/new/index.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.