Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முற்றாக சிங்களமயப்படுத்த கூட்டு முயற்சி! - கந்தரதன்

Featured Replies

பிரித்தானியாவில் போர்க்குற்றவாளி மகிந்தவின் பிரசன்னத்திற்கு எதிர்ப்பலைகள் ஓங்கியுள்ள நிலையில், சர்வதேசத்தின் பார்வை பிரித்தானியாவை நோக்கித் தற்போது திரும்பியுள்ள நிலையில் தற்போது இந்த சாதகமான சூழலில் ஒவ்வொரு தமிழ் மகனின் பங்களிப்பும் இன்றியமையாததாக உள்ளது. இந்த நேரத்தில் தாயகத்தில் சிங்களத்தின் அத்து மீறல்கள் மேலும் மேலும் உச்சமடைந்து கொண்டிருக்கின்றது.

ஒரு போர்க்குற்றவாளியை பிரித்தானியாவின் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு அழைத்திருக்கும் நிலையில், லண்டன் பி.பி.சி தமிழோசை சேவைக்கு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய வழங்கிய செய்தியில், இலங்கையின் வடபகுதி தமிழர்களுக்கு உரித்தானதல்ல எனவும் யார்வேண்டுமானாலும் அங்கு காணி வாங்கலாம் எதுவும் செய்யலாம் எனத் துணிச்சலாக இறுமாப்போடு தெரிவித்திருந்தார்.

அத்துடன் கோத்தபாயவின் கூற்றை வரவேற்று அதற்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் வகையில், ‘வந்தேறு குடிகளான தமிழர்கள் வடக்குக்கு உரிமை கோருவதா’ எனக் கடும் போக்கிலான கருத்துகளை முன்வைத்தார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர். இந்நிலையில், புத்தரின் சித்தாந்தங்களை அறிந்த எங்களுக்கு, வல்லரசு முத்திரை குத்தப்பட்டவர்கள் போதிக்க வேண்டிய அவசியமில்லை. நீதியும், சட்டத்தின் ஆட்சியும் எங்களுக்கு அந்நியமான எண்ணக்கருக்கள் அல்ல. இவ்வாறு மஹ்ந்த ராஜபக்ஷ தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐ.நா.வெசாக் தின வைபவத்தில் உரையாற்றுகையில தெரிவித்தார்.

மேலே குறித்த விடயங்கள், நாம் தமிழ் மக்களை எதுவும் செய்வோம் எம்மை எவரும் கேட்கக் கூடாது என்ற இறுமாப்பிலேயே சிங்களம் உள்ளமை தெட்டத் தெளிவாகப் புலப்படுகின்றது. இதனை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும். இதேவேளை, சிங்களத்தின் கூற்றுக்களுக்கு அமைவாக தமிழர் தாயகப் பகுதிகளை முற்றாக சிங்களமயப் படுத்தும் நடவடிக்கைகள் வேகமாக சிங்கள இனவாதத்தால் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தை அண்டிய, முத்தையா சுவாமிகள் வசித்த கந்தவேள் முருகன் ஆலயத்தினுள் கடந்த வெள்ளிக்கிழமை பிரவேசித்த இராணுவ உடையணிந்தோர் அங்கிருந்த கருங்கற்களினாலான தூண்கள், சிறிய கட்டடம் மற்றும் வழிபாட்டுப் பொருள்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அங்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்தவை வருமாறு தாந்தாமலை முருகன் ஆலயமும் அதனை அண்டிய பிரதேசங்களும் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுக்குரிய புனித பிரதேசமாகும். இந்தப் பிரதேசங்களில் அண்மைக்காலமாக பெரும்பான்மை இனத்தவர்களும் இராணுவத்தினரும் இந்துக்களின் வழிபாட்டு தலங்களை அழித்துவிட்டு, பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சைக்கொடி சுவாமிமலை எனும் இந்துக்களின் பூர்வீக பிரதேசத்தில் அங்குள்ள பௌத்த பிக்குகள் இராணுவம் மற்றும் பொஸிசாரின் உதவியுடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றையும் நான் நேரில் சென்று பார்வையிட்டு விகாரை அமைப்பதை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டிருந்தேன். எனவே, இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களைப் பூண்டோடு அழித்துவிட்டு அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு இலங்கை அரசின் அனுசரணையுடன் பௌத்த பிக்குகள் செயற்படுகின்றனர்.

இதற்கு இராணுவத்தினரும் சிறிலங்கா காவல்துறையினரும் பாதுகாப்பளிக்கின்றனர் என்றார். இந்நிலையில், இறுதிக்கட்ட போர் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில், மக்களின் பலத்த எதிர்ப்பை மீறி சிறிலங்கா படையினர் பௌத்த விகாரை ஒன்றை அமைத்துள்ளனர். யுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னரே வட்டுவாகல் பிரதேசத்திற்கு செல்வதற்கான வீதி திறக்கப்பட்டது.

இதற்கு முன்னர் சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். எனினும் தற்போது, வீதி திறக்கப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்துக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மைதானத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விகாரையை நிர்மாணிக்க வேண்டாம் என்ற உத்தரவை வட மாகாண ஆளுநர் பிறப்பித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதனையும் மீறி விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தமிழ்மக்களை முற்றுமுழுதாக வெளியேற்றி அதனை ஒரு படைகேந்திரமையமாக மாற்றுவதற்கான திட்டங்கள் மறை முகமாக அரங்கேறிவருவதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தினை முற்றுமுழுதாக சிங்கள மயமாக்கும் நோக்கில் சிங்கள குடியேற்றங்கள் தொடராக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

முல்லைத் தீவு மாவட்டத்தில் படையினர் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் மொத்தப் பரப்பில் பெருமளவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, துணுக்காய், ஒட்டிசுட்டான், கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 6069 ஏக்கர் பரப்பு படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளது, இவை அரச காணிகள்என்பதாக படையினர் அறிவித்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் தமிழ்மக்களின் காணிகளிலே படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.

குறிப்பாக தமிழ்மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த ஓட்டிசுட்டான் பிரதேச செயலகத்தின் திருமுறுகண்டி பிரதேசத்தில் மக்களுக்கு சொந்தமான 4000 ஏக்கர் பரப்பளவை படையினர் அபகரித்திருக்கின்றார்கள் குறித்த பகுதியில் சிங்கள பெயர்சூட்டப்பட்டு போரில் காயம் அடைந்த படையினரின் குடும்பத்திற்கு 1000 வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறு படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகள்அதிகளவில் காணப்படும் இடமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது, முல்லைத்தீவு மாட்டத்திலேயே அதிகளவு படையினர் நிலைகொண்டுள்ளார்கள், குறிப்பாக முள்ளிவாய்க்கால் பகுதியினை சேர்ந்த மக்கள் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தற்போதும் அகதி வாழ்வினை வாழ்ந்துவருகின்றார்கள்.

மறுபுறத்தில் அத்துமிறீய சிங்களக்குடியேற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன. நாயாறு, கொக்குளாய், முகத்துவாரம் போன்ற இயற்கை வளங்கள் கொண்ட பகுதியில் சிங்கள மக்கள் மறைமுகமாக குடியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு மறைமுக சிங்கள ஆதிக்கத்தினை படையினர் முல்லைத்தீவினை மையமாகக்கொண்டு நகர்த்தி வருகின்றார்கள் இதற்கான செயற்பாட்டில் சிறீலங்கா அரசாங்கமும் ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் படையினரின் மதுபான கடைகள், தேநீர்கடைகள் மற்றும் தென்னிலங்கை முதலீட்டாளர்களின் நவீன சந்தை (சுப்பர்மார்க்கட்) போன்றன முல்லைத்தீவு மாவட்டத்தினை மையப்படுத்தி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

இந்நிலையில், வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குச் சொந்தமான ஒரு தொகுதிக் காணியை தமக்கு உரியது என்று எழுதித்தருமாறு சிறிலங்காப் படையினர் கடிதம் ஒன்றினை பிரதேசசபைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்குப் பகுதியில் இன்னமும் மக்களுடைய காணிகளில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையின் 14வது கெமுனு வோர்ச் படைப்பிரிவினரே வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள சாலம்மை கலட்டியில் உள்ள சுமார் 10 பரப்பிற்கும் அதிகமான காணியினை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் ஒருவருக்குச் சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டு அக்காணியினை படையினருடைய பாதுகாப்புச் செயற்பாடுகளுக்காக தரவேண்டும் என்றும் கடிதத்தில் குறிபிடப்பட்டுள்ளது. மேலும் மேற்படிப் பிரதேச சபைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதமானது ஒரு வேண்டுகோள் கடிதம் என்று அல்லாது ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்ட மிரட்டல் கடிதமாகவே அது உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் இராஜதந்திரிகளிடம் வடக்கில் படைகுறைப்புச் செய்யப்பட்டு வரு

கின்றது என்று யாழ்.கட்டளைத் தளபதி குறிப்பிட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் மாறாக சிறிலங்கா படையினருடைய இவ்வாறு வலுக்கட்டாயமாக காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களின் விபரங்கள் படையினரால் திரட்டப்பட்டு அவர்களின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வைத்து யாழிற்கு செல்லமுடியாத மக்களின் காணிகளை கையகப்படுத்தும் நோக்கில் சிறீலங்கா அரசுடன் படையினரும் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது, குறிப்பாக சிங்கள முதன்மை வணிகர்களை மையமாக வைத்து யாழில் உள்ள தமிழ்மக்களின் காணிகளைக் கொள்வனவு செய்வதில் சிறிலங்கா புலனாய்வுப் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

யாழில் காணிகளை சொந்தமாக கொண்ட வெளிநாடுகளில் வாழும் மக்கள் தங்கள் காணிகளை சிங்களவர்களுக்கு விற்பனை செய்வதன் ஊடாக வடக்கில் சிங்கள குடியேற்றத்திற்கு அவர்களும் மறைமுகமாக உதவுகின்றதாக யாழில் இருக்கும் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எத்தனையோ சிங்களத்தின் கபடத்தனத்துக்கு தமிழ் மக்களும் தெரிந்தோ தெரியாமலோ துணைபோகின்றார்கள். இதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் எமக்கு எதுவுமே இல்லாமல் போய்விடும் நிலையே உள்ளது. புலம் பெயர் வாழ் தமிழ் மக்களே சற்று சிந்தியுங்கள். நாம் ஒருமித்துக் குரல் கொடுத்து போர்க்குற்றவாளி ராஜபக்ச கும்பலை சர்வதேசக் கூண்டில் நிறுத்தப் போராடுவோம்! சிந்திக்கும் நேரமல்ல இது செயற்படும் நேரம்!

(சூறையாடல் தொடரும்)

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.