Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்-4 திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்: அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சனல்-4 திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்: அரசு
வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013 00:45    
-அழகன் கனகராஜ்
 
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படம் தாங்கிய ஒளிநாடாவை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்த அரசாங்கம் இது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலாகும் என்றும் தெரிவித்துள்ளது.
 
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாரளருமான கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
 
இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலேயே இந்த சனல்-4 நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது. 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டொரு வாரங்கள் இருக்கின்ற நிலையில் இந்த படம் வெளியிட்டமைக்கான நோக்கம் என்ன?
 
2009 ஆம் ஆண்டு மே மாதம் பிரபாகரனின் இறப்புடன் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு பின்னர் மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போதெல்லாம் இந்த படம் காண்பிக்கப்படாமைக்கான காரணங்கள் என்ன?
 
சனல்-4 வும் புலம் பெயர்ந்துள்ள புலிகள் சார்பான அமைப்பினரும் கனடாவிலுள்ள உலக தமிழ் காங்கிரஸும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றனர்.
 
சனல்-4 ஒவ்வொரு பாகமாக வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது. அடுத்தவருடம் மனித உரிமை பேரவை கூடுகின்ற போது அதன் 5 ஆவது பாகம் வெளிவரலாம்.
 
செஞ்சோலை மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அதனை பாடசாலையாகவும் அங்கிருந்தவர்களை மாணவர்களாகவும் காண்பிப்பதற்கு மனித உரிமை கண்காணிப்பகம் காண்பிப்பதற்கு முயற்சித்தது.
 
அதேபோல, வைத்தியசாலையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காண்பிப்பதற்கும் அந்த அமைப்பு முயற்சித்தது. இவையிரண்டினையும் புலிகளின் முகாம்கள் என்பதனை நிரூபித்தோம். அதேபோல் இந்த காட்சி பொய் என்பதனை தொழிற்நுட்ப ரீதியில் நிரூபிப்போம் என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.