Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Featured Replies

கனடா மறுவாழ்வு அமைப்பு

MARUVAZHVU   CANADA   INC 

1193A - UNIT 5  Brimley Road,  Scarborough, ON  M1P  3G5

அன்புடையீர்

னடா றுவாழ்வு கனடா அமைப்பு கனடிய சட்டதிட்டத்தின் கீழ் இலாபநோக்கற்ற அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பதிவு இல. 3512482)

றுவாழ்வு அமைப்பு மிகக் குறுகிய காலத்தில் வட - கிழக்கில் போரினால்  வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களின் மறுவாழ்வுக்கு பல உதவிகளை வழங்கி வருகிறது.

2006 மே மாதம் 25 ஆம் நாள் காலை கொழும்பில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அன்று மாலை 5.15 மணி அளவில் மூதூர் கிழக்கைச் சேர்ந்த சம்பூர்,கூனித்தீவு, நவரத்தினபுரம், சூடைக்குடா, கடற்கரைச் சேனை ஆகிய கிராமங்கள் மீது கண்மூடித்தனமான எறிகணை, பல்குழல் பீரங்கி, விமானத் தாக்குதல்கள் இடைவிடாது நடந்தன. இதனால் இப் பிரதேச மக்கள் உடுத்த உடையுடன் உறவுகளை இழந்து, வீடுவாசல் உடைமைகளை இழந்து ஏதிலிகளாக மட்டக்களப்பு வரையும் ஓடி ஏதிலி முகாம்களில்  சொல்ல முடியாத துன்ப துயரங்களுடன் வாழந்து வந்தார்கள்.

இவர்களில் ஏழு ஆண்டுகள் கழித்து 24 - 03 - 2013 இல்  நவரத்தினபுரம், கூனித்தீவு மக்கள்  மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சம்பூர், கடற்கரைச்சேனை மக்கள் தொடர்ந்தும் ஏதிலி முகாம்களிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

நவரத்தினபுரம், கூனித்தீவு மக்கள்  வாழ்ந்த வாழ்நிலங்கள் 

அ) புற்களும் மரங்களுமாக வளர்ந்து காடாகக் காட்சியளித்தன.

ஆ)வீடு வாசல்கள் உடைக்கப்பட்டு முற்றாகச் சேதமாக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மக்களே தம் சொந்த முயற்சியில் பலநாட்களாக கடினமான துப்பரவுப் பணிகளை மேற்கொண்டனர்.

ஒஃபர் (OFFER) அமைப்பு நவரத்தினபுரம் மக்களுக்கு 139 தற்காலிக கொட்டில்கள் ஒவ்வொன்றும் 18 அடி தர 14 அடி அளவில் அமைத்துக் கொடுத்துள்ளது.

அரசாங்கம் ஒவ்வொரு தற்காலிக வீட்டுக்கும் 12 கூரைத்தகடுகள், 4 சிமெந்துப் பைகள் வழங்கியுள்ளது. நீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

வேறு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.

இந்த மக்களுக்குத் தேவைப்படும் இன்றியமையாத வாழ்வாதாரத் தேவைகள்:

மக்களின் வாழ்வாதாரங்கள் சீராகும் வரை   உலர் உணவுகளை வழங்கல்.

வாழ்வாதார உதவிகள்

 வீட்டு வளவினைச் சுற்றி வேலி அமைத்தல்

) விவசாய உபகரணங்கள்  வழங்கல்

இ)  பயிர் விதைகளை வழங்கல்

ஈ)  ஆடு, மாடு, கோழி வளர்ப்பு வசதிகளைச் செய்து கொடுத்தல்

உ) சுயதொழில் வழிகாட்டல், பயிற்சி, நிதி போன்றவற்றை கொடுத்து உதவுதல்.

நவரத்தினபுரம் மக்களுக்கு ஒரு குடும்பத்திற்குத் தொடக்க உதவியாக உரூபா 10,000 வீதம் 139 குடும்பங்களுக்கு (139 x 10,000)  உருபா 1,390,000.00 வும்

293 குடும்ப உறுப்பினர்களுக்கு மாணவர்கள் உட்பட உரூபா 1,000.00 வீதம் உரூபா 293,000.00 வும் தேவைப்படுகிறது.

கூனித்தீவு மக்களுக்கு 89 தற்காலிக குடிசைகள் மற்றும் கழிவறைக் கூடம் கட்டிக்கொடுக்க உரூபா 12,905,000.00 தேவைப்படுகிறது.

இந்தப் பணிக்கு முடிந்தளவு உங்களால் முடிந்தளவு  நிதியுதவி  செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்.

CIBC   Bank

MARUVAZHVU   CANADA   INC

Transit Number   06832   / Account  Number 6016812                    

அன்பளிப்புச் செய்தவர்களின் விபரம் செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்படும்.

மண்திணி ஞாலத்து வாழ்வோர் எல்லாம் உண்டியும் உறையுளும்  கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

 

வி.எஸ். துரைராசா 

தலைவர்

கனடா மறுவாழ்வு அமைப்பு

தொடர்பு -  647 829 4044 416 854 5015, 416 281 1165, 416 282 0947இ 647 292 5571

                      Email: raja@cfsginc.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.