Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலப்பறிப்பும் சர்வதேசமும்.

Featured Replies

 

2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் புதிய வடிவத்தை எடுத்துள்ளன.

இது காலவரை தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளைப் பறிப்பது என்ற இலக்கை நோக்கி நகர்ந்த ஒடுக்குமுறை தற்சமயம் எமது இனத் தனித்துவத்தையும் ஒரு தேசிய இனத்துக்கான தகைமையையும் அழித்து எம்மை ஓர் உதிரித் தன்மை கொண்ட இனக் குழுமமாக மாற்றும் முயற்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக எமது தாயகத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை விரட்டி அவர்களை நிரந்தரமாகவே அகதிகள் நிலைக்குத் தள்ளிவிட்டு அந்த நிலங்களைப் பாதுகாப்பு, அபிவிருத்தி என்ற பேரில் அபகரிக்கும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்குக் கிழக்கில் பலவந்தமான சிங்களக் குடியேற்றங்கள் முன்பு சிங்களவர் வாழ்ந்த இடங்கள் எனக் கூறப்பட்டு அரச படையினரின் உதவியுடன் உருவாக்கப்படுகின்றன. தொழில் காரணமாக சில இடங்களில் சிங்களவர்கள் வடக்குக் கிழக்கில் வந்து தற்காலிகமாகத் தங்கியிருப்பதுண்டு. 

சில கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி காலங்களில் வந்து தங்கிவிட்டு, சீசன் முடியத் திரும்பிச் செல்வதுண்டு. அவர்கள் எல்லோரும் மட்டுமன்றி அவர்களுடன் சேர்ந்தவர்களும் போரின் முன்பு இங்கு குடியிருந்ததாகக் கூறப்பட்டுக் குடியேற்றப்படுகின்றனர். 

அதைவிடப் படையினரின் குடும்பங்களுக்கான வீடுகள் அமைப்பது என்றபேரில் பெரும் குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவையும் எமது தாயக நிலத்தைச் சிங்களமயப்படுத்த நீண்ட கால இலக்கின் ஒரு பகுதியென்றாலும் கூட இதை விடக் கொடுமையான மனித உரிமைமீறல் தற்சமயம் பாதுகாப்பு, அபிவிருத்தி என்ற பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த காணிகளிலிருந்து வலிகாமம் வடக்கு, சம்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். போர் முடிந்த பின்பும் உயர் பாதுகாப்பு வலயம் எனக் கூறப்பட்டு மக்கள் அங்கு குடியேற அனுமதிக்கப்படவில்லை. 

சர்வதேச ரீதியாக எழுந்த நெருக்கடிகள் காரணமாக உயர் பாதுகாப்பு வலயம் என எதுவும் இல்லை என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்பும் கூட மக்கள் அங்கு குடியேற அனுமதிக்கப்படவில்லை. மாறாக அந்த நிலப்பகுதிகள், படைமுகாம்களை அமைக்கவும் பொருளாதார அபிவிருத்திக்கெனவும் சுவீகரிக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் காணிகள் சட்டபூர்வமான காணி உறுதிகள் மூலம் அந்தப் பிரதேச மக்களால் பல தலைமுறைகளாகச் சொந்தம் கொண்டாடப்பட்டவை. இந்த வலி.வடக்கு, சம்பூர் ஆகிய இரு பிரதேசங்களுமே சிறந்த விவசாய நிலங்களையும் முக்கிய மீன்பிடி மையங்களையும் கொண்டவை. அவை அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் தேசிய உற்பத்தியின் ஒரு வலுவான கருவறையாகவும் விளங்கியவை.

ஆனால் இன்றுவரை இந்த இரு பிரதேசங்களும் படையினர் வசமேயுள்ளன. எனினும் வலி.வடக்கு மக்கள் கடந்த 23 வருடங்களாகவும் சம்பூர்மக்கள் 7 வருடங்களாகவும் அகதி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கிப் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 

அரசு அவர்களின் நிலைமை தொடர்பாக எவ்வித அக்கறையோ பொறுப்போ இன்றி அவர்களின் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஒருவருக்குச் சொந்தமான காணியை அவரின் சம்மதமின்றி இன்னொருவர் கையகப்படுத்துவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை சாசனத்தின்படி ஒரு மனித உரிமை மீறலாகும். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனத்தை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தக் காணிகள் அபகரிப்பு தொடர்பாகச் சர்வதேச நாடுகளுக்குத் தட்டிக் கேட்க உரிமை உண்டு.

ஏற்கனவே தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாகவோ சிங்கள மக்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பாகவோ அது உள்நாட்டு விவகாரம் எனக் காரணம் காட்டப்பட்டு சர்வதேசம் தலையிட மறுக்கலாம்.

ஆனால் வலி.வடக்கு, சம்பூர் ஆகிய பிரதேசங்கள் தொடர்பானவை சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை. தனி நபரொருவரின் காணி அவரின் சம்மதமின்றி அபகரிக்கப்படுவது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதி மக்கள் கூட்டம் தங்கள் பகுதியிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படும்போது அவர்கள் தங்கள் பொருளாதார, கலாசார, நில உரிமை தொடர்பான மூல வேர்கள் அறுக்கப்படுகின்றன. 

அவர்கள் தங்கள் மொழியைப் பேணி அதை வளப்படுத்தும் ஆற்றலையும் இழக்கின்றனர். அதாவது அவர்களிடமிருந்து ஒரு தேசிய இனத்துக்கான தனித்துவங்கள் பிடுங்கப்படுகின்றன.

அதன் காரணமாக அந்த மக்கள் மெல்ல மெல்ல தமது தேசிய தனித்துவத்தை இழந்து உதிரிகள் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒரு தேசிய இனத்தின் தனித்துவம் அழிக்கப்படுவதைக் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சாசனம் மனித உரிமை மீறலாகவோ வகுத்துள்ளது. 

எனவே வலி.வடக்கு சம்பூர் ஆகிய பிரதேசங்கள் சுவீகரிக்கப்படுவது சர்வதேச நியமங்களை மீறும் ஒரு மனித உரிமை மீறலாகும். எனவே இந்தப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிடுவதற்கான முழு உரிமையும் உண்டு. 

ஆனால் இன்றுவரை இந்தப் பிரச்சினையைச் சர்வதேசம் கண்டுகொள்ளவில்லை. அது தொடர்ந்தும் இந்த விடயத்தில் பாராமுகமாகவே இருந்து வருகிறது. போரின் இறுதி நாள்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக சர்வதேசம் ஒரு காட்டமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் இரு முறை நிறைவேறப்பட்டன. இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கனடா கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன. 

வழமையாகப் பொதுநலவாய மாநாட்டுக்குத் தலைமை தாங்கி ஆரம்பித்து வைக்கும் பிரிட்டிஷ் மகாராணி இரண்டாவது எலிசபெத் கொழும்பில் இடம்பெறும் ஆரம்ப விழாவில் கலந்துகொள்ளமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி பலமுனைகளிலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. 

இப்படியாக இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித குல விரோத நடவடிக்கைகள் என்பன தொடர்பாக கூடிய அக்கறை காட்டும் சர்வதேசம், சம்பூர், வலி.வடக்கு ஆகிய பகுதி மக்கள் தொடர்பாக மனித உரிமைகள் சாசனம் மீறப்படுவதை ஏன் பொருட்படுத்தவில்லை என்பதே ஒரு பெரும் கேள்வியாகும். 

இங்குதான்  இந்தியா உட்பட சர்வதேசத்தின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கவும் அவற்றின் உள்ளர்த்தங்களையும் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்படுகிறோம்.

வலி.வடக்கில் இந்திய உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானத்தளம், சிமெந்து தொழிற்சாலை தொடருந்துப் பாதையமைத்தல் என்பன இடம்பெறவுள்ளன. 

இதேபோல அனல் மின் நிலையம், யந்திர உதிரிப் பாகங் கள் தொழிற்சாலை என்பன இந்திய உதவியில் சம்பூரில் அமைக்கப்படவுள்ளன. நீண்டகாலக் கடனாகவோ குறுகிய காலக் கடனாகவோ இந்தியா இலங்கைக்கு இந்த உதவிகளை வழங்குகிறது. இது இந்திய மக்கள் செலுத்தும் வரிப்பணம். 

அதேவேளையில் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கும் தொழிற்சாலை அமைக்க சம்பூரில் 819 ஏக்கர் நிலம் 99 வருடக் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்தப் பெரும் நிறுவனங்களை நிர்மாணிக்கப் போவது இந்தியப் பெரும் தனியார் நிறுவனங்கள். நிர்மாணம், பராமரிப்பு எனப் பல வழிகளிலும் கொள்ளை இலாபம் ஈட்டப் போவது இந்தப் பெரும் நிறுவனங்களே. 

இந்தப் பெரும் நிறுவனங்களின் நலன்களின் அடிப்படையிலேயே தேசிய சர்வதேசக் கொள்கைகளை வகுத்து இயங்கி வரும் இந்திய மத்திய அரசு இந்த நிலப்பறிப்பை மறைமுகமாக ஆதரிக்குமேயொழிய தடுக்க முனையாது.

இவ்வாறே ஏனைய சர்வதேச வல்லரசு நாடகளும் ஒன்றுடன் ஒன்று  போட்டியிட்டுக் கொண்டாலும் சாதாரண மக்களின் நலன்கள் பெரும் முதலாளித்துவ நிறுவனங்களின் நலன்களுக்காகப் பறிக்கப்படும் போது வாய்மூடி மௌனித்து விடுவதுண்டு.

எனவே சம்பூர், வலி.வடக்கு நில அபகரிப்பு எவ்வளவுதான் கொடிய மனித உரிமை மீறலாக இருந்தபோதும் சர்வதேசம் கண்டுகொள்ளப் போவதில்லை. எனவே நில அபகரிப்பு என்ற பயங்கர மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள் தாங்களே போராட வேண்டிய நிலை எழுந்துள்ளது. 

பயனுள்ள வழியில் சர்வதேச நாடுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கு என நம்புவது முட்டாள்தனமாகும். கொக்கிளாய் மக்கள் இதற்கு ஒரு நல்ல முன்னுதாரணத்தை வழங்கியுள்ளனர். கருநாட்டங்கேணியிலுள்ள அவர்களின் வயல் நிலங்களை ஆக்கிரமித்த சிங்களவர்களுக்கு எதிராகப் போராடி அவர்கள் தமது நிலங்களை மீட்டுள்ளனர்.

எனவே எமது மண்ணில் எங்கள் நிலம் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதுடன் புலம்பெயர் நாடுகளிலும் இந்தி யாவிலும் இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குரல்கள் ஒலிக்க வேண்டும். 

இந்தியா உட்பட சர்வதேசத்தின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கவும் அவற்றின் உள்ளர்த்தங்களையும் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்படுகிறோம்.

சந்திரசேகரஆஷாத்

 

 

- See more at: http://www.tamilkathir.com/news/13269/58//d,full_art.aspx#sthash.D9icFHju.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.