Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு இனக்கொலையாளி தேசத்தின் தலைவனான கதை

Featured Replies

gandhionjew-300x195.jpgஒரு அப்பாவியை, ஒரு கோமாளியை, ஒரு மனநோயாளியை.. கண்டுபிடித்து தனது எதிரியாகவும் மக்கள் தலைவனாகவும் மாற்றி ஏகாதிபத்தியங்கள் சமூகத்தை அழிப்பதை நாங்கள் கண்முன்னால் காண்கிறோம். இவ்வாறான நடைமுறைகள் நூற்றாண்டுகளுக்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. மோகன் தாஸ் கரம்சாண்ட் காந்தி என்ற குஜராத்தில் பிறந்த குரூரம் மிக்க மனநோயாளியை பிரித்தானிய காலனியாத்திக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பி இந்திய மக்களின் விடுதலை வீரனாக்கிய அவமானம் இன்று வரை இந்தியாவைத் தின்று தொலைக்கிறது.

நிறவாதி, ஆதிக்க சாதி வெறியன், நாசிகளின் ஆதரவளான், பாலியல் நோயாளி போன்ற குரூரமான மனோவியாதி படைத்த காந்தி மகாத்மா காந்தியான கதை தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கிறது. தேசிய அரசியல் என்ற அடிப்படையில் கூட குறைந்தபட்ச அரசியலைக்கூட புரிந்துகொள்ள முடியாத கடைந்தெடுத்த முட்டாளான காந்தியை பிரித்தானிய அரசு அடையாளம் கண்டுகொண்டது தென்னாபிரிக்காவில் தான்.

நள்ளிரவில் இங்கிலாந்து அதிகாரவர்க்கம் இந்தியாவின் சுதந்திரத்தை தனது ஏஜண்ட்டும் பிரித்தானியாவின் இனப்படுகொலையில் பங்கெடுத்தவருமான காந்தியிடன் ஒப்படைத்தது. இன்றுவரை மகாத்மா காந்தியின் இருண்ட பக்கங்கள் மறைக்கப்பட்டு இந்தியாவின் ஏகோபித்த தேசியத் தலைவனாகக் கருதப்படுகிறார். குஜராத்தில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்த மோடி என்ற அருவருக்கத்தக்க கோமாளிக்கு எந்தவகையிலும் குறைவற்ற ‘தகுதிகளைக்’ கொண்டவர் காந்தி. இந்திய அதிகாரவர்க்கமும் பிரித்தானிய ஏகாதிபத்தியமும் காந்தியைச் சுற்றி ஒளிவட்டம் ஒன்றைத் திட்டமிட்டு உருவாக்கியது.

தேசப்பற்றாளர்கள், ஜனநாயகவாதிகள், மனிதாபிமானிகள் சில வேளைகளில் இடதுசாரிகள் கூட காந்தியை மகாத்மாவாக மாற்றுவதில் பங்களித்துள்ளனர். குழந்தைகளைப் பாலியல் வதைக்கு உட்படுத்திய காந்தியின் ‘சத்தியசோதனை’ என்ற நூல் இந்தியச் சிந்தனை மரபாகக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சிறையிலிருந்திருக்க வேண்டிய குற்றவாளி அரை நிர்வாணமாக நாட்டை ஆண்ட அவலம் இந்திய மண்ணின் ஜனநாயகம் என அரங்கேற்றப்பட்டது. காந்தி என்ற நோயாளியை நிராகரித்து இந்தியாவில் காக்கை கூட கரைவதற்குச் சுதந்திரமில்லாத நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

இவ்வாறான நம்பிக்கை இந்தியாவில் மக்கள் போராட்டங்களையும் புரட்சிகளையும் நீண்டகாலத்திற்குப் பின் தள்ளியது. காந்தீயம் கண்ணீரோடு வாசிக்கப்படும் தியாகத்தின் தத்துவமாக்கப்பட்டு அதிகாரவர்க்கம் நெருப்பெரித்தது.

இந்தியாவை நோயாளியாக்கிய காந்தி என்ற நோயாளியின் ஆரம்பம்

young_gandhi2-300x284.jpg2ம் திகதி அக்டோபர் மாதம் 1869 ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சண்ட் காந்தி குஜராத்தின் கத்திவார் என்ற குடாநாட்டில் 1869 ஆம் ஆண்டு பிறந்தார். காந்தியின் தந்தை கரம்சண்ட் தனது பகுதியின் திவான் என்று அழைக்கப்பட்ட முதன்மை அதிகாரி. தனது 13 வது வயதில் கஸ்தூர்பாய் என்ற பெண்ணைக் காந்தி திருமணம் செய்கிறார். காந்தி திருமணமான ஒரு வருடத்திற்கு உள்ளாகவே மனைவி கர்ப்பமாகிறார்.

பள்ளிப் படிப்பில் காந்திக்கு அதிக நாட்டமிருக்கவில்லை எனினும் தனது சமூகச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி சடம் படிப்பதற்காக லண்டன் பயணமாகிறார். லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி 1891 ஆம் ஆண்டு பம்பாயில் சட்டத்துறையில் செயற்பட ஆரம்பிக்கிறார். உளவியல் சிக்கல் காரணமாக தனது வேலையில் கவனம் செலுத்த இயலாமையால் மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்பிவிடுகிறார். அங்கு சிலகாலம் சட்ட ஆலோசனை போன்ற தொழிலில் ஈடுபட்டவர். வெளிநாட்டு வேலைகளுக்கான முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக தென்னாபிரிக்காவில் இஸ்லாமிய இந்திய வியாபாரிகளுக்கான சட்டப் பிரதிநிதியாக வேலைபெற்று தென்னாபிரிக்கா செல்கிறார்.

தனது 24 ஆவது வயதில் குடும்பத்தைப் பிரிந்து தென்னாபிரிக்கா செல்லும் காந்தி அங்கு 21 வருடங்கள் வாழ்கிறார். காந்தியின் தென்னாபிரிக்க வாழ்வு அவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.

நிறவெறியன், சாதி வெறியன் காந்தி

gandhi_british.jpg1906 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் பிரித்தானிய காலனி அதிகாரத்தை ஆதரிக்க வேண்டும் என்று காந்தி கூறினார். அதற்காக இந்திய மருத்துவச் சேவை ஒன்றை 300 இந்தியர்களைக் கொண்டு நிறுவினார். பிரித்தானிய நிறவெறி அரசு தென்னாபிரிக்க மக்களுக்கு எதிராக நடத்திய யுத்ததில் வெள்ளையர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் நோக்குடனேயே இச்சேவையைக் காந்தி ஆரம்பித்தார். காலனி அரசு குடியுரிமை வழங்குவதற்குப் பதிலாக இந்தியர்கள் அனைவரையும் சட்டரீதியாகப் பதிவுசெய்யுமாறு கோரியது. இதற்கு எதிராக இந்தியர்கள் போராட முற்பட்ட போது குறுக்கிட்ட காந்தி சத்தியாக்கிரகம் நடத்துமாறு அறிவித்தார். அதனைக் கூட அனுமதிக்காத பிரித்தானிய நிறவெறி அரசு காந்தியைக் கைது செய்து சிறையிலடைத்தது.

கொடுமைகளைக் கண்டு கொதித்தெழ மறுத்த காந்தி கொடுமைக்காரர்களோடு சமரசம் செய்துகொண்ட சத்தியாயக்கிரகம் முதல்தடவையாக தென்னாபிரிக்காவிலேயே அரங்கேறியது.

சிறைக்குச் சென்ற காந்தி அங்கு ஸுலூ கறுப்பினப் போராளிகளுடன் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இரண்டு வருடங்கள் சிறையிலிருந்து நமது மகாத்மா, சிறையில் உதிர்த்த பொன்மொழிகள் தாங்க முடியாதவை. கடைந்தெடுத்த நிறவாத வன்முறை!

‘உள்ளூர் சிறைவாசிகள் மிருகங்களைவிட ஒரு படி அகற்றப்பட்டவர்கள், அழுக்கானவர்கள், காட்டுமிராண்டித் தனமாவர்கள்’ என்கிறார். இந்தியர்களை கறுப்பினத்தவர்களுடன் சிறையிலடைக்க வேண்டாம் என்று வெள்ளை நிறவெறி அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். கறுப்பினத்தவர்களுன் இந்தியாவில் தீண்டப்படாதவர்களும் ஒரே வகையான மிருகக் குணம்படைத்தவர்கள் என்றார்.

சிறையிலிருந்து விடுதலையான காந்தி, பிரித்தானிய அதிகாரத்துடன் முழுமையாக சமரசம் செய்துகொள்கிறார்.

‘நாங்கள் இருவருமே இணைக் காலனிகள். ஆயினும் கறுப்பினக் காட்டுமிராண்டிகள் காலனி அதிகாரத்தின் அரசியலில் பங்கெடுக்கத் தகுதியற்றவர்கள். தவிர, தென்னாபிரிக்காவில் கூலித் தொழிலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட இந்தியர்களும் அரசியலில் பங்கெடுக்கத் தகுதியற்ற சபிக்கப்பட்டவர்கள் என்றார். தலித் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்பாக காந்தி தொடர்கிறார் ‘அவர்கள் இஸ்லாமியர்களாகட்டும் இந்துக்களாகட்டும் அவர்களுக்கு எந்தவகையான மத ஒழுக்கங்களும் தெரியாது. அவர்களின் வாழ்க்கையோடு பொய் ஒன்றிணைந்துள்ளது. காரணமின்றிப் பொய் சொல்வார்கள்.

காந்தியைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்களும் தலித்துக்களும் முழு மனிதர்கள் அல்ல. இதுவே பின்னாளில் ஹரிஜன் என்று தாழ்தப்பட்டவர்களை மிகவும் தந்திரமாக மொத்த மக்களிலிருந்து ஒதுக்கிவைத்து சாதியமைப்பை நிரந்தமாக்க வழிசெய்வதற்கான ஆரம்பச் சிந்தனை.

பெண்கள் தொடர்பாக காந்தீயம்

gandis_sex.jpg

காந்தியின் அதிகாரத்தின் முன்னால் அடிமைகளான குழந்தைகள்

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட எந்தப் பெண்ணும் மனிதத் தன்மையை இழந்தவளாகிறாள் என்பது இந்தியக் கோமாளி காந்தியின் பொன்மொழிகளில் ஒன்று. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் குழந்தைகளைக் கொலை செய்யும் தந்தையர்களின் செயல் நியாயமானது என வாதிடும் காந்தி சமூகத்தின் நன்மதிப்பிற்காகவும் குடும்பத்தின் புனிதத்திற்காகவும் அது தவறல்ல என்கிறார்.

கருத்தடைக்கும் கருக்கலைப்பிற்கும் எதிராக நாசிகளின் கருத்தைக் கொண்டிருந்த காந்தி கருத்தடை அல்லது கருக்கலைப்புச் செய்து கொள்பவர்கள் விபச்சாரிகள் என்கிறார்.

மனித குலத்தை வெட்கித் தலைகுனியவைக்கும் காந்தியின் பாலியல் தொடர்பான சமூகக்கருத்துக்கள் ஆபத்தானவையும் அருவருக்கத்தக்கவையும் 38 வயதில் தான் பிரமச்சாரி என அறிவிக்கும் காந்தி தனது பிரம்ச்சாரியத்தை நிறுவுவதாகக் கூறி பல்வேறு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவியுடன் தனிமையில் இருப்பது தவறானது என்றும் பாலுணர்ச்சி ஏற்படும் போது குளிர் தண்ணீரில் குளித்து அதனை நீக்க வேண்டும் என்றும் கூறும் காந்தி குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் பாலுறவு வைத்துக்கொண்டால் போதுமானது என்கிறார். எது எவ்வாறாயினும் காந்தியின் இக் கட்டுப்பாடு அவருக்கு மட்டும் விதிவிலக்கு.

காந்தியின் செயலாளரான சுஷீலா நாயரின் அழகான தங்கை காந்தியுடன் நிர்வாணக் குளியலில் ஈடுபட்டது மட்டுமல்ல நிர்வாணமாக உறங்குயதும் கூட அண்மையில் வெளியான ஆதாரங்கள். மகாத்மா சொல்கிறார் ‘அவள் குளிக்கும் போது உள்ளாடையை அணிந்திருக்கிறாளா இல்லையா என்பதை சோப் போடும் சத்தத்திலிருந்தே கண்டுபிடித்துவிடுவேன்’.

gandhi_dancing-220x300.jpgகாந்தியின் பேரப்பிள்ளை மனு தனது பதினெட்டாவது வயதில் காந்தியின் ஆச்சிரமத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறார். ‘நாங்கள் இருவரும் இஸ்லாமியர்களால் கொல்லப்படலாம், அதனால் இருவரும் நிர்வாணமாக உறங்கி எமது புனிதத்தை சோதித்துக்கொள்ள வேண்டும்’ என்று அவருடன் நிர்வாணமாக உறங்குகிறார்.

இதே போல காந்தியின் மற்றொரு பேரப்பிள்ளையான அபாவுடனும் நிர்வணப் பரிசோதனை நடத்தப்படுகிறது. இருவருமே காந்தியின் ஆணாதிக்கத்தின் முன்பு அபலைகளாயினர். காந்தியின் பெண்கள் தொடர்பான பாலியல் வன்முறை உட்பட பெண்கள் தொடர்பான கருத்துக்கள் இன்றைய இந்தியச் சிந்தனையின் ஊற்றுமூலம். வருடம் தோறும் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொன்றுபோடப்படும் போது இந்தியாவின் பெரும்பான்மை முச்சுவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ஆதிக்க சாதியினரின் மனோநிலை இந்திய தேசத்தின் தந்தையின் கோட்பாடு.

நாஸிகளும் காந்தியும்

இந்தியா ஆங்கிலேயக் காலனியாதிக்கத்திற்கு உட்படிருந்த இறுதிக் காலங்களில் ஐரோப்பாவில் நாஸிகளின் ஆதிக்கம் தோன்றியிருந்தது. ஹிட்லர் முசோலீனி ஆகியோர் உருவாகினர். ஐரோப்பாவில் நாஸிகளின் கோரம் அரங்கேறிக்கொண்டிருந்தது. காந்தி என்ற இந்தியாவின் சாபக்கேடு முசோலினியைப் பற்றிக் கூறுவது:

‘முசோலீனி வறியமக்களின் மீது அதிக கவனம் செலுத்துகிறார். நகரமயமாக்கலுக்கு எதிரான முசோலீனியின் கொள்கை, தொழிலாளர்களுக்கும் மூலதனத்திற்கும் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கும் அவரது நிலைப்பாடு என்பன என்னைக் கவர்ந்தது என்கிறார்.

பிரித்தானியா ஹிட்லரின் படைகளால் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் காந்தி பிரித்தானிய அரசிற்கு எழுதிய கடிதத்தில் ஹிட்லர் மோசமான மனிதன் அல்ல, நீங்கள் தொடர்ந்தால் அதிக ரத்தம் சிந்தப்படும் என்றார்.

உங்ககளின் அழிகிய தீவையும் அழகிய கட்டங்களையும் ஹிட்லருக்குக் கொடுத்துவிடுங்கள், உங்களது ஆத்மாவையும் மனதையும் கொடுக்கத் தேவையில்லை என்று பிரித்தானியாவிடம் கோரினார் காந்தி என்ற இந்தியக் கோமாளி.

இனக்கொலையாளி காந்தி பிரித்தானியாவின் முகவர்

gandhi_boer_war.jpg

காந்தி:பிரித்தானியக் கொலைப்படையில்

தென்னாபிரிக்கச் சிறையிலிருந்து பிரித்தனிய நிறவெறி அரசுடன் சமரசம் செய்துகொண்டு வெளியேறிய காந்தியை தென்னாபிரிக்க இந்திய சமூகம் சந்தேகத்துடன் நோக்கியது. இந்தியர்கள் சிலரால் தாக்கப்பட்ட காந்தி படுகாயங்களுக்கு உள்ளானார்.

1906 ஆம் ஆண்டு ஸுலு இனக்குழுவினர் பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தனர். ஸுலூ கறுப்பின மக்களின் வீரம் செறிந்த போராட்டம் பிரித்தானிய காலனிய அதிகாரத்தால் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டது. நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்பட்ட மக்கள் தெருத்தெருவாகக் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்கள். பலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள். பலர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டார்கள். காந்தி வெள்ளை நிறவெறி அரசை ஆதரித்தார். உலகம் முழுவதையும் நாகரீகப்படுத்தும் வெள்ளை நிறத்தவர்கள் கறுப்பினக் காட்டுமிராண்டிகளின் வன்முறைக்கு எதிராகப் போராடுவதாக ‘மகாத்மா’ வெளிப்படையாகச் சொன்னார்.

ஸுலு மக்களுக்கு எதிராகப் போராடும் வெள்ளை அதிகாரத்திற்கு உடை உணவு போன்றவற்றையும் ஏனைய உதவிகளையும் வழங்குமாறு தென்னாபிரிக்க இந்திய சமூகத்தை காந்தி வேண்டிக்கொண்டார். இந்தியர்களை கறுப்பின மக்களை அழிப்பதற்குப் பயிற்றுவிக்குமாறு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை வேண்டிக்கொண்டார். இந்தியர்களை இராணுவத்திற்குப் பயிற்சியளித்துப் போரில் ஈடுபடுத்தாமல் அவர்களின் சக்தியை வீணடிப்பதாக பிரித்தானியாவிற்குக் கடிதமெழுதினார்.

இறுதியில் ‘அகிம்சாவாதி’ காந்தி தனது எஜமானர்களுக்குச் சேவை செய்யும் அடிமை வேலைக்கு பிரித்தானியர்களால் அமர்த்தப்பட்டார். பிரித்தானிய இராணுவத்தில் ஸுலு இன மக்களைக் கொலை செய்வதற்காக சார்ஜன்ட் மேஜர் என்ற பதவி காந்திக்கு வழங்கப்பட்டது. போர்க்களத்திற்குப் போவதற்கு முன்னர் மகாத்மா ‘இந்தியர்கள் பிரித்தானியர்களுக்கு உதவ வேண்டுமா இல்லையா’ என்ற கட்டுரை ஒன்றை எழுதினார். ‘கறுப்பர்களுக்கு எதிராகப் போராடுவது இந்தியர்களுக்கு இலகுவான பணி, அவர்கள் ஆண்டவனில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள்’ என்று இந்தியர்களை கறுப்பின மக்களை அழிப்பதற்கு அழைத்தார்.

அழிப்பதற்கான அடிமைச் சேவகத்தில் காந்திக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பிரித்தானிய அரசின் கறுப்பின மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில் முக்கிய பங்காற்றிய காந்திக்கு வழங்கப்பட்ட உயர் விருது அது! இந்தச் சந்தர்ப்பத்தில் பிரித்தானிய காலனி ஆதிக்க நிறவெறி அரசின் முழுமையான முகவராகக் காந்தி மாறியிருந்தார்.

காந்தி பிரித்தானியாவின் அடியாளாகத் தென்னாபிரிக்காவில் செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. சுவதேசி இயக்கம் உட்பட பல இஸ்லாமியத் தலைவர்களின் எழுச்சி போன்றவை பிரித்தானிய காலனியாதிக்கத்தை கதிகலங்கச் செய்தது. முரண்பாடுகளை மறந்து முழு இந்தியாவும் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இணைந்தது.

boseandgandhi-300x190.jpg

சுபாஸ் சந்திரபோஸ் உடன் காந்தி

அதே வேளை சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்டுக்களின் எழுச்சி ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர்ச்சியை வழங்கியது. இந்தியாவில் கம்யூனிஸ்டுக்கள் காலனியதிகாரத்திற்கு எதிரான எழுச்சியில் பங்காற்ற ஆரம்பித்தனர். இவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பொருத்தமான ஆளாக இங்கிலாந்து அரசால் தெரிவுசெய்யப்பட்டவர் தான் காந்தி.

இவ்வேளையில் 1915 ஆம் ஆண்டு காந்தி என்ற பிரித்தானிய இராணுவ மேஜர் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படுகிறார். 1885 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசால் பிரித்தானிய நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தியக் காங்கிரஸ் கட்சியில் ‘மகாத்மா’ என்ற பட்டத்துடன் வந்திறங்கிய இனக்கொலையாளி காந்தி உறுப்பினராகிறார். இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தையும் அதன் கர்த்தாவான அனகாரிக்க தர்மபாலவையை உருவாக்கிய தெயோசோபிகல் சொசைட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த வெள்ளையரான அலன் ஒக்டாவியன் ஹூயும் என்பவரால் காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

இனப்படுகொலையில் ஈடுபட்ட போர்க்குற்றவாளி காந்தி இந்தியாவிற்கு வந்தத்தும் அகிம்சா வாதியாகவும், வன்முறைக்கு எதிரானவராகவும், அமைதிவழிப் போராட்டம் என்ற போலித்தனத்தின் நாயகனாகவும் தன்னைக் காட்டிக்கொள்கிறார். இவரது போராட்டங்களை முகம்கொடுக்க இயலாமல் பிரித்தானியா பின்வாங்குவது போன்ற நாடகம் அரங்கேறியது. ஆயுதம் தாங்கிப் போராடி பிரித்தானிய இராணுவத்தைப் பின்வாங்கச் செய்த நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்களைத் தீவிரவாதிகள் என காந்தி பிரச்சாரம் செய்தார். மத முரண்பாடுகளின் தோற்றத்திற்கு காந்தி ஆரம்பப் புள்ளியாக அமைந்தார். தாழ்த்தப்பட்ட்ட தலித்துக்களை முழு இந்தியாவிலும் அன்னியமானவர்களாக்கினார்.

இந்தியாவின் தேச பிதாவாகவும், தேசியத் தலைவராகவும் போற்றப்படும் காந்தி பிரித்தானியக் காலனியாதிக்கத்தின் அடியாள். காந்தி என்ற சாதி, நிற வெறியன் இந்தியாவை பிரித்தானியர்கள் விரும்பியவாறு மாற்றினார். இரண்டாவது உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னர் காலனி நாடுகளிலிருந்து பிரித்தானியா வெளியேறியது. அவ்வாறு வெளியேறும் போது தனது நம்பிக்கைக்குரிய அடியாட்களையும் கோமாளிகளையும் ஆட்சியதிகாரத்தில் அமர்த்தியது. காந்தியின் இந்தியாவிலிருந்து பிரித்தானியா நிம்மதிப் பெருமூச்சுடன் தனது படைகளை திரும்பப்பெற்றுக்கொண்டு இன்று வரை தனது சுரண்டலை தனது முகவர்கள் ஊடாக நடத்தி வருகிறது.

ஒரு மனநோயாளியை, இனக்கொலையாளியை, பெண்களை அடிமைகளாக எண்ணிய ஆணாதிக்க வாதியை, போர்க்குற்றவாளியை, சமூகவிரோதியை, நிற வெறியனை, ஆதிக்கசாதியின் வக்கீலை தேசத்தின் தந்தையாகவும், தேசியத் தலைவனாகவும், மகாத்மாவாகவும் பிரித்தானிய அரசு மாற்றிய வரலாறு அருவருக்கத்தக்கது. இன்று வரை காந்தியை விமர்சிப்பவர்கள் கூடத் துரோகியாகக் கருதப்பட்டார்கள். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியாமுழுவதும் பொய்யில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகஸ்ட் 15ம் திகதி இந்தியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சுதந்திரதினம் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கறுப்பு நாள்.

தொடர்பான நூல்களும் ஆதாரங்களும்:

http://www.ibtimes.com/mussolini-gandhi-strange-bedfellows-214200

http://www.telegraph.co.uk/news/worldnews/europe/germany/6140002/Mahatma-Gandhi-was-one-of-Nazis-greatest-friends-German-historian-claims.html

http://www.thecrimson.com/article/1983/3/7/the-truth-about-gandhi-pbtbhe-movie/

http://ofmi.org/gandhis-goes-to-war-against-black-africans/

http://www.sikhsundesh.net/gandhi.htm

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2657

http://www.archive.india.gov.in/knowindia/culture_heritage.php?id=5

Gandhi: Naked Ambition by Jad Adams : ISBN-10: 085738161X

 

 

http://inioru.com/?p=41653

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.