Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தல் - வெல்லப்போவது யார்? (எதிர்வுகூறல்)

Featured Replies

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பலரது பேசுபொருளாகியிருக்கும் இன்றைய நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம் என்பதும் பலரது எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.

 

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்தை விடக் குறைவான காலமே இருக்கின்ற இந்த நிலையிலும் தேர்தல் குறித்த திடமான ஒரு முடிவை எதிர்வு கூறுவது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கிறது.

 

இதற்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சித் தாவல்கள் அரச சொத்துக்களைப் பாவித்தும் சட்டவிரோத பணத்தினைப் பாவித்தும் மக்களிடையே குறிப்பாக கிராமப் புற மக்களிடையே வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் மக்களிடையே எத்தகைய எதிர்வினையை உருவாக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலை, இன்னும் மதில் மேல் பூனையாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் தெரிவு எப்படி இருக்கும் அல்லது அவர்களது தெரிவு வாக்காளர்களிடையே எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த தெளிவற்ற தன்மை என பல காரணங்களைச் சுட்டிக் காட்டலாம்.

இதை விட தேர்தலை அண்மிய நாட்களிலும் தேர்தல் நாளன்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கையின் போதும் அரச தரப்பால் மேற்கொள்ளப்படக் கூடிய வாக்கு மோசடிகள் எத்தகைய எதிர்வு கூறலையும் பொய்யாக்கக் கூடியளவிற்கு சக்திவாய்ந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

 

 

இந்த நிலையில் ஓரளவிற்கு சாதாரணமான தேர்தல் நடத்தப்பட்டால் வாக்காளர்களின் தெரிவு எத்தகையதாக அமையலாம் என்பது குறித்த ஒரு எதிர்வுகூறலை மேற்கொள்ளும் வகையில் இந்தப் பதிவைத் தொடர நினைக்கிறேன்.

 

2010ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளையும் தொடர்ந்து கட்டம் கட்டமாக நடத்தப்பட்ட மாகாண சபைத்தேர்தல் முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டும் அண்மைய நாட்களில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வகளை அடிப்படையாகக் கொண்டும் மாவட்ட ரீதியான எதிர்வு கூறலை மேற்கொள்ள விளைகிறேன்.

 

இது குறித்த உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள்.

 

 

இந்த அடிப்படையில் எனது எதிர்வு கூறலுக்கான முதலாவது மாவட்டமாக பொலன்னறுவையைத் தெரிவு செய்துள்ளேன்.

பொலனறுவை மாவட்டம் தொடர்பான பதிவுடன் விரைவில் சந்திப்போம்.

  • தொடங்கியவர்

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றான பொலனறுவை விவசாயத்தை நம்பி வாழும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாகும்.

பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் சொந்தமாவட்டமாகவும் திகழும் பொலனறுவை கடந்தத தேர்தல்களை விட மாறுபட்ட பெறுபேறுகளைத் தரக்கூடிய மாவட்டங்களில் முதன்மையானதாகத் திகழ்கிறது.

 

சிங்கள தேசத்தின் போர் வெற்றி முழக்கங்களுடன் அரங்கேற்றப்பட்ட 2010ம் ஆண்டுத் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவரும் பெற்ற வாக்குகள் வருமாறு

 

CANDIDATE NAME

VOTES OBTAINED

PERCENTAGE

Mahinda Rajapaksha

144,889

64.92%

Sarath Fonseka

75,026

33.62%

 

 

இதனைத் தொடர்ந்து இரண்டாண்டுகள் கழித்து நடத்தப்பட்ட மாகாண சபைத்தேர்தல்களில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள்.

Name of the Party/Independent Group

No. of Votes Received

Percentage%

No. of Members Elected

United People's Freedom Alliance

104,165

58.15 %

6

United National Party

69,943

39.04 %

4

People's Liberation Front

4,382

2.45 %

 

United Socialist Party

196

0.11 %

 

 

பொலனறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவது மட்டுமல்லாமல் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற விடயமும் விவசாயிகள் மத்தியில் சிறீசேனவிற்கான ஆதரவை அதிகரித்துள்ளது.

 

கடந்த மாகாணசபைத் தேர்தலில் 58 சதவீத வாக்குகள் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் 39 சதவீத வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் 2 சதவீத வாக்குகள் மக்கள் ஐக்கிய முன்னணிக்கும் கிடைத்திருந்தன.

 

எனினும் மைத்திரிபால சிறிசேனவின் பிரிவு மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பலை என்பன சுமார் பத்து சதவீத வாக்குக்களையாவது எதிரணிக்கு எடுத்து வரும் என நினனக்கிறேன்.

 

மாகாண சபைத் தேர்தல்களை விட பொதுத் தேர்தலின் போதான வாக்களிப்பு எப்போதும் அதிகமாகவே இருப்பது வழக்கம். அந்த வகையில் சுமார் 70 சதவீதமான வாக்குகள் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் பெறக்கூடிய வாக்குகள் கணிக்கப்படுகின்றது.

 

மைத்திரிபால சிறிசேன :

மகிந்த 101 873  (48 சதவீதம்)

மைத்திரி : 110 362 (52 சதவீதம்)

 

அடுத்ததாக அநுராதபுர மாவட்ட விபரங்களை  பார்ப்போம்...

       

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.