Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிசேனவிற்கு ஆதரவு கொடுத்ததற்கு தமிழருக்கு எவ்விதமான வெகுமதியும் இல்லை - திரெவர் கிரான்ட் -Video in

Featured Replies

அரச பதவியிலிருப்பதால் கிடைக்கும் சலுகைகளானது பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் அவர்கள் பிரதிநிதிப்படுத்தும் சாதாரண குடிமக்களுக்கும் இடையில் ஒரு வசதியான பிரிவினை ஏற்படுத்துவதை அதிகம் காணலாம்.

 

இலங்கையிலோ குறிப்பாக தமிழரை பாராளுமன்றத்தில் பிரதிதிப்படுத்தும் கட்சிக்கு அது மக்களிடமிருந்து ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக தோன்றுகிறது.

 

அதுவும் புதியதொரு ஜனாதிபதி நாட்டினை ஆட்சி செய்யும் இவ்வேளையில் இந்த இடைவெளியை அதிகமாக்கும் வண்ணம் தமிழர் மீதான ஒடுக்குமுறையினை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய முதன்மையான கடமையை விட்டு விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஒரு கூட்டு வஞ்சனையளரினை போன்று செயற்படுகிறது.

அதிகார துஸ்பிரயோகம், ஊழல், வஞ்சகத்தன்மை என்பன இலங்கை அரசியலில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற சூழ்நிலையில் தமிழ் அரசியல்வாதிகளும் அதன் சலுகைகளின் கவர்ச்சிக்கு பலியான சந்தர்ப்பங்கள் பல தசாப்தங்களாக நடந்து வந்துள்ளது. குறிப்பாக பாராளுமன்றத்தில் கிடைக்கும் சொகுசான ஆசனமும் தாராளமான சம்பளமும் இதர செலவுகளுக்கான சலுகைகளும் தமிழ் உரிமைகளுக்காக போராடும் குணத்தை சிங்கள பேரினவாதிகளின் பெரும் அதிகாரத்தின் முன்னிலையில் சற்று மென்மையாக்கி மழுங்கடிப்பதாக அமைந்து விடுகின்றன என்பதனை வரலாற்று ரீதியாக அவதானிக்க கூடியதாயுள்ளது.

ஒரு சில தைரியமிக்கவர்கள் இந்த பொது நீதிக்கு பாற்பட்டு தமது கொள்கைகளிலிருந்து வழுவாது செயற்படுகின்றனர். போராட்டத்திற்கு வலுவும் நேர்மைத்தன்மையையும் அளிப்பதற்காகக் கஜன் பொன்னம்பலம் 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற குழுவிலிருந்து விலகி தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். தனக்கான சுய வரையறைகளுடன் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கட்சியோடு இருகின்றார். தனது சளைக்காத எதுக்கும் பணியாத உரிமைக்காண குரல் கொடுப்பினால் மிகவும் பிரபலமாகியுள்ளதனால் பல்வேறு தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் அரசாங்க படைகளின் அச்சுறுத்தல்களுக்கும் அவர் ஆளாகியுள்ளார். தற்சமயம் கட்சியில் உள்ளோர் அவர் மீது கூறியுள்ள கண்டனங்களுக்கு மற்றும் தலைமையின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பாய் நடந்து கொண்டது என்பதனாளான தணிக்கை என்பவற்றுக்கு பதில் கூறவேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிப்பதென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை முடிவு எடுத்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து முதன்மை வேட்பாளர் இருவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று அவர் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். மற்றும் பலரை போலவே அவரும் இது தமிழர் வாழ்விற்கு எந்த நன்மையையும் அளிக்க போவதில்லை ஏனெனில் தமிழ் இனப்படுகொலைக்கான அடிப்படை காரணியான இராணுவ ஆக்கிரமிப்புக்கு இந்த இருவரினாலும் தீர்வு ஏற்படப்போவதில்லை என்ற எண்ணத்தினை கொண்டிருந்தார்.

ஆமாம், ராஜபக்சேவின் அமைச்சரவையில் 10 வருடங்கள் கடமையாற்றிய சிறிசேன அதிலும் குறிப்பாக 2009 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 70 000 அப்பாவி தமிழர்கள் திட்டமிட்டு இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பொழுது பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்ததோடு வெளிப்படையாகவே தமிழர் தாயகப்பகுதியில் பெருமளவிலாகக் காணப்படும் இராணுவம் அங்கு தொடர்ந்து இருக்கும் என்றும் ராஜபக்சவினை போன்றே ஐ.நா விசாரணையாளர்களினை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறி இருந்தார்.

சிறிசேனவின் வேட்பாளர் தளத்தின் மிகப் பிரதான விடயமாக அமைந்தது மீண்டும் சட்டவாட்சிக்கு திரும்பி அதன் மூலம் ராஜபக்சேவின் அரசாங்கம் செய்த மாபெரும் ஊழல்களினை விசாரிப்பது என்ற அந்த சத்தியமாகும். பாரியளவிலான ஒடுக்குமுறையை எதிர்கொள்வதோடு எதேச்சதிகாரமாக நடந்துகொள்ளும் இராணுவத்தினரின் கைகளில் தம் நிலத்தை இழந்து, வீடுகளை இழந்து, அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் வடக்கு மற்றும் கிழக்கினை சேர்ந்த தமிழ் மக்களுக்கு இதனால் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.

சிறிசேனவிற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர் இன்னொரு சிங்கள இனவாதியை ஆட்சிக்கு கொண்டுவருவரே ஒழிய முந்தி அனுபவித்த அதே நிலைமையை தான் அனுபவிப்பர், வேறு எதுவும் கிடைக்கப் போவதில்லை. இதனால் தான் அனந்தி சசிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வாக்காளர்களுக்கு கொடுத்த வழிக்காட்டலை வெளிப்படையாக எதிர்த்ததோடு அது சனநாயாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவல்ல கூட்டமைப்பின் தலைவர்களால் ஏனையோர் மீது திணிக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார்.

சசிதரன் மீது குற்றஞ்சாட்டி வழக்கு தொடுப்பதை விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரிய கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சியினது தலைமை தனது ஆற்றல் முழுவதையும் சிறிசேனவிற்கு வாக்களிக்குமாறு அவர்கள் அறிவித்ததால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்க இருக்கின்றது என்று விளக்குவதில் காட்ட வேண்டும். அரசியல் ஆய்வளார்கள், ஏன் தோற்றுபோன ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே கூட தமிழர் வாக்குகள் தான் நெருக்கடியான நிலையில் சிறிசேனவுக்கு கைக் கொடுத்தன என்று கூறுவதனால் இதை சொல்லவேண்டிய கடப்பாடு கூட்டமைப்புக்கு உள்ளது.

ஆனால் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரிதாக எதுவும் தெரிவிக்க முடியாது ஏனெனில் சிறிசேன தான் பாதை மாறுவதற்கான விருப்பம் இல்லை என்பதை தெளிவாகவே காட்டியுள்ளார். அதனால் தமிழ் வாக்குகள் மூலம் தான் புதிய ஜனாதிபதி வென்றார் என்று கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் தேர்தல் முடிந்தபின் அவருக்கு விடுத்துள்ள மென்னறிவுறுத்தல் வெறும் அறிவுறுத்தலாகவே அமையும்.

உண்மையில் ஆரம்ப கருத்துக்கள் தமிழர் தாம் ஏமாற்றப்பட்டதாகவே கருதுவதாக தெரிகிறது ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற தலைவர் இரா. சம்பந்தன், இறுதி யுத்தத்தில் 70 000 தமிழர் படுகொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பாக இருந்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அங்கம் வகிக்கும் தேசிய நிறைவேற்று சபையில் அவருடன் சேர்ந்து அங்கம் வகிக்கின்றார்.

சம்பந்தன் தமிழருக்காகப் போராடுவதற்காகவே தான் அதில் அங்கம் வகிப்பதாகக் கூறக்கூடும். இப்படி தமிழர் தரப்பு அரசு விடயங்களில் அங்கம் வகிப்பதால் எவ்விதமான நன்மைகளும் ஏற்பட்டதில்லை என்பது வரலாற்றின் மூலம் நாம் அறிந்திருப்பதால் இது வெற்றுக் கருத்தாகவே இருக்கும். இதில் அவரது ஈடுபாடு சிங்கள பேரினவாதிகள் தம்முடைய போலி சமாதனம் மற்றும் ஒற்றுமை என்னும் கோஷத்தை வெளி உலகத்துக்கு பரப்பவே உதவி செய்யும்.

தம்முடைய ஆதரவினை புதிய ஜனாதிபதியினை தேர்ந்தெடுப்பதற்கு கொடுத்தமையினால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஏமாற்றுத்தனதிற்குப் துணை போயுள்ளனர். இதனை காரணம் காட்டி அவருக்கு பின்னணி ஆதரவு கொடுத்த அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்கள் தமிழர் விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக காட்டுவார்கள். இதன் மூலம் தமிழர் இனப்படுகொலையில் ராஜபக்சே அரசாங்கத்தில் அங்கம் வகித்து முக்கிய பங்காளியாக இருந்த சிறிசேனவிற்கு அப்படுகொலையை தொடர்ந்தும் முன்னெடுக்க தேவையான காலமும் வெளியும் கிடைக்கும்.

தமிழாக்கம்: ஆனந்தன்
காணொலி: அரண் மயில்வாகனம்

 

http://www.pathivu.com/news/37419/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.