Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்ள்ஸ்டன் படுகொலைகள் எமக்கு புரியவைக்கும் இனவாதத்தின் அடிப்படைகள் சாந்திசச்சிதானந்தம்

Featured Replies

கடந்த ஜுன் மாதம் 17ந்திகதி அமெரிக்காவை ஒரு கலக்குகலக்கிய சம்பவம் தென் கரோலைனா மாநிலத்தில் சார்ள்ஸ்டன் என்னும் ஊரில் நிகழ்ந்தது. ஒருகிறிஸ்தவ ஆலயத்தில் விவிலிய நூல் வகுப்பில் கலந்து கொண்டிருந்த ஒன்பது கறுப்பினத்தவர்களை 21 வயதான வெள்ளை இளைஞன் துப்பாக்கியால் கொன்று குவித்தான்.

பகிடி என்னவென்றால் அவன் தானும் இந்தவிவிலிய நூல் வகுப்பில் ஒருமணி நேரமாகக் கலந்து கொண்டிருந்தவன். திடீரென்று எழுந்துநீஙங்கள் கறுப்பினத்தவர்கள் எங்கள் நாட்டையே ஆக்கிரமிக்கப் பார்க்கிறீர்கள், எஎங்கள் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறீகள் எனவே உயிர்வாழத் தகுதி அற்றவர்கள் என பெரிய உரையர்ற்றி விட்டுத்தான் தூப்பாக்கியைத் தூக்கி இருக்கின்றான். அங்குவகுப் பெடுத்துக் கொண்டிருந்த பாதிரியும் எட்டுப் பேரும் உயிரிழந்தனர். இந்தக் குற்றச் சம்பவம் அமெரிக்காவின் வெள்ளையின கறுப்பின உறவுகளைத் திரும்ப கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது.


1960களில்கூட கறுப்பினத்தவர்கள் ஒன்றாக வெள்ளையினத்தவர்களுடன் பேருந்தில் பயணம் செய்ய முடியாது எனசட்டங்கள் கொண்டிருந்த நாடு அமெரிக்கா. மார்டின் லூதர்கிங், மல்கொம் எக்ஸ் போன்ற போராளிகள் முன்னெடுத்த போராட்டங்களின் பயனாகவே இவை மாற்றப்பட்டன. சட்டங்கள் மாற்றப்பட்டன, கறுப்பினத்தவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு.

போன்ற துறைகளில் சாதகமான கொள்கைத் திட்டங்கள்(affirmative action)  கொண்டுவரப்பட்டன. அமெரிக்காவிலுள்ள பல்கலைக் கழகங்களில் கறுப்பினத்தவர்களுக்கு விசேட சலுகைகள் உண்டு. அவை யெல்லாவற்றைச் செய்தும் இன்னும் அங்குள்ள வெள்ளையின மக்களின் மனப்பாங்கில் மாற்றம் வரவில்லையே. இன்னமும் தென் கரோலைனா போன்ற தெற்கு மாநிலங்களில் உள்ளசட்ட சபை கட்டிடங்களில் முன்பு கறுப்பினத்தவர்களை அடிமைகளாக வைத்திருந்த ஆட்சிகளின் கொடிததான் பறக்க விடப்பட்டிருக்கின்றது! அக் கொடியை மாற்றி அமெரிக்கக் கொடி பறக்க விடுவதற்கு அவர்களது சட்டசபையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையாம். அதனைப் பெற முடியயா தென்பதனாலேயே இக்கொடியை மாற்றாமல் வைத்திருக்கின்றார்கள் என்கின்றனர்.

அங்கு கறுப்பினத்தவர்களுக் கெதிரான காவல் துறையின் வன்முறையானது பிரசித்தம் பெற்றது. கறுப்பினத்தவர்களை நோக்கியே அதிகளவு துப்பாக்கிப் பிரயோகங்கள் தயங்காமல் மேற் கொள்ளப்படுகின்றன என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சமீபத்தில், வெள்ளையினத்தவர் பிரதானமாக வசிக்கும் அயலில் ஒருகுடும்பம் தனது களியாட்ட விழா ஒன்றிற்கு அனேகமாக கறுப்பினத்தவர்களையே அழைத்ததனால் அயலவர்கள் காவல் துறைக்கு அறிவித்துவிட்டார்களாம். அவர்கள் வந்ததும் வராததுமாக அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளைப் பிடித்து புற்தரையில் உருட்டிக் கட்டிப் போட்டு ஒரேரகளைதான்.

ஓபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒரு முறையல்ல இரு முறை தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் இந்த நிலையென்றால் யோசிக்க வேவண்டியது தான். இங்கும், ஸ்ரீமாவோ முதல் பிரதமர், சந்திரிகா முதல் ஜனாதிபதி பெண்களுக்கு என்னகுறை யெனன்பார். தனியொரு மனிதரால் சமூக சீர்திருத்தத்தினைக் கொண்டுவர முடியாது என்பதற்கு அமெரிக்கா ஒருநல்ல எடுத்துக்காட்டாகும்.


சார்ள்ஸ்டன் துப்பாக்கிச் சம்பவத்தைப் புரிந்தடிலன் ரூப் என்கின்ற அந்த இளைஞன் தனது குற்றச் செயலுக்கு வருந்தவே இல்லை. அவன் கைது செய்யப்படட்ட பின்னர்ப சிக்குது எனப்பொலிஸாருக்குச் சொல்ல அவர்கள் அவர்கள் மக்டொனல்ட் சாப்பாட்டை விருந்தாகப் படைத்திருக்கின்றனர். அவனை விசாரித்த நீதிபதி, இறந்தவர்களின் குடும்பங்கள் மட்டுமல்ல, இந்த இளைஞனின் குடும்பமும் அனுதாபத்துக்குரியது என்றிருக்கின்றார். இதனைப் பற்றிதென் கரோலைனாவின் சட்ட சபை உறுப்பினர்கள் சிலரது கூற்றுக்கள் இன்னமும் சுவாரசியமானவை. அவன் துப்பாக்கியைத் தூக்கும்போது மற்றவர்கள் அதனைத் தடுக்காத படியினாலேதான் இந்தக் குற்றம் நடந்திருக்கின்றது எனபழியை இறந்தவர்கள் மீது சுமத்தினார். இங்கும் பெண்களின் நிலையை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்கமுடியாது. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானபெண்கள் தாம் அரைகுறை ஆடை அணிந்தபடியினால்தான் இதனை தம் மீது வரவழைத்தனர் என்பது போல்தான் இதுவும். அந்த கிறிஸ்ததவ ஆலயத்தின் பாதிரி துப்பாக்கி கலாசாரத்தினை எதிர்ப்பவர், அங்குள்ளவர்கள் அன்று துப்பாக்கி கொண்டு சென்றிருந்தால் இது நேர்ந்திருக்காது என்றிருக்கின்றார் இன்னொரு அரசியல்வாதி. எந்தச் சுவரில் முட்ட என்பது போல வருகின்றதல்லவா? இஸ்லாமியப் பயங்கரவாதம் என நீட்டி முமுழக்கும் அரசியல் தலைவர்கள் வெள்ளையினத்தவரின் வன்முறைபற்றிப் பேசுவதில்லை.

கடந்தவருடம் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் அமெரிக்காவில் மேற் கொள்ளப்பட்ட குற்றச் செயல்களைவிடவும் வெள்ளையின வெறுப்புக் குற்றங்கள் இரு மடங்காக இருந்தனவாம். டீலனின் குற்றத்தையும் அங்குள்ளஊடகங்கள் வெறுப்புக் குற்றம் (hate crime) என்றுதான் விபரிக்கின்றனவே தவிரபயங்கரவாதம் என்று குறிப்பிடவில்லை. இஸ்லாமியர்களுக்கும் எங்கள் விடுதலைப் புலிகளுக்கும் மட்டும்தான் அந்த classification போலும்.எங்கள் சாதிக் கட்டமைப்பும் இதேமாதிரித்தான். . ஏன்னதான் கல்வித் துறையில் மாற்றம் வந்தாலும் சட்டங்களில் மாற்றங்களை; கொண்டு வந்தாலும் இரத்தத்தோடு கலந்த விழுமியமாக இது இருப்பது போலத்தான் இனவாதமும் தொழிற்படுகின்றது. மக்களின் மனங்களில் எவ்வாறு இந்த மாற்றத்தைக் கொண்டு வருவது எனநினைத்தால் ஆயாசம்ததான் பொங்கும்.


இதில் இன்னுமொரு முக்கிய விடயத்தையும் அவதானித்தேயாக வேண்டும். 'எங்களுடைய பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறீகள்' எனடிலன் சுமத்திய குற்றச் சாட்டே அது. ஒரு இனத்தின் பெண்களின் வேறினத்தவர்கள் ஆக்கிரமிப்பது அவ்வினத்தின் கௌரவத்திற்கும் இருப்பிற்கும் பெரும் இழுக்காக எல்லா சமூகங்களிலும் நோக்கப்படுகின்றது. பெண்கள் உடைமைகளாக அல்ல வா பார்க்கப்படுகின்றனர்? அவர்களை கைப்பற்றினால்  ஒரு இனத்தையே கைப்பற்றியது போலாகும். இது ஆதிகாலகுடிகள் வாழ்க்கையிலிருந்து எமதுமரபணுக் கலங்களிலிருந்து வந்த குணமாகும். எனவே வேற்றினம் ஒன்றிற்கு எதிராகக் குற்றச்சாட்டினை சுமத்துவதற்கு இந்தபாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுத்தான் தான் மனிதர்களின்; உணர்ச்சிகளைத் தூண்டும் பொருத்தமான குற்றச் சாட்டாகஎங்கும் இருக்கின்றது. எங்கள் நாட்டிலும் நோலிமிட் கடையை பௌத்த தீவிரவாதிகள் தாகக்கியபோது அவர்கள் சொன்ன சாட்டுக்கள் என்ன? ஒருசிங்கள இனப் பிள்ளையை முஸ்லிம்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி விட்டார்கள், உடை மாற்றுகின்ற அறைகளில் புகைப்படக் கருவி பூட்டி அப் பெண்களை வக்கிரமாக ரசிக்கிறார்கள், என்பதல்லவா? இதனைஎங்கள் முன்னாள் ஜனாதிபதியும் ஒரு வெளிநாட்டு ஊடகத்திற்குதான் கொடுத்தபேட்டியில் நியாயப்படுத்தினார். இன அரசியலுக்குள்ளும் பின்னிப் பிணைந்து பால்நிலை அரசியலும் கலந்திருக்கின்றது.


கறுப்பினத்தவர்களுக்கெதிரான இனவாதம் ஏதோ வெள்ளையினத்தவர்கள் மத்தியில்தான் இருக்கின்றது எனநீங்கள் நினைத்தால் அதனை விடதவறான அனுமானம் வேறிருக்க முடியாது. கறுப்பிற்கு எதிரானபயங்கர இனவாதிகளாக நாம் ஆசியர்களும் இருக்கின்றோம். 'கறுப்பெண்டாலும் நல்லவடிவு' என்போம். திருமணப் பேச்சுக்கள் என்றால் பெண் எப்பொழுதும் மெல்லிசாவெள்ளையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு ஃபேர்அன்ட் லவ்லி உபயோகிக்காத ஒரு பெண்ணைக் காட்டுங்கள் பார்ப்போம்.

எங்கள் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் வெள்ளையினத்தவர்களைத் திருமணம் புரிவதை ஒருவாறு ஏற்றுக் கொண்டாலும் கறுப்பினத்தவர்களைத் திருமணம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் இன்னமும் அவர்களைக் காப்பிலி என அழைக்கும் வழக்கம் நம்மவர்கள் மத்தியில் உண்டு.எப்படி இதனைமாற்றுவது? இந்த இனவாதம் இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டதல்லவா? மொகெஞ்சதாரோ ஹறப்பா நாகரிகத்தினை கைப்பற்ற தம்மை ஆரியர் எனக் கூறிக் கொண்டு மத்திய ஆசியாவின் நாடோடிக் குழுக்கள் வந்த போது தமது வெள்ளை நிறத்தைக் கூட அடிமைப்படுத்தும் ஆயுதமாகத்தான் உபயோகித்தனர்.

அங்கு வாழ்ந்த மக்கள் திராவிட வம்சத்தைச் சேர்ந்த கறுப்பு மண்ணிறத்தவர்களாக இருந்தனர். ஆரியர் அந்த சமூகத்தைத் தொழில் ரீதியாகப் பாகுபடுத்தும் சாதிக் கட்டமைப்பினைக் கொண்டு வந்தபோது அதற்குவர்ணம் என்றுதான் பெயர் சூட்டினர். சாதிப் பாகுபாட்டின் முதல் கட்டம் தோல் நிறத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது என இதிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.

இராமாயணத்தில் தென்னிந்தியாவில் வாழ்ந்தவர்களைக் குரங்குகள் எனவால்மீகி உருவகப் படுத்தியதும் இதனாலேயே. மனிதர்கள் மனத்திலுள்ள இவ்வகையானது வேஷங்கள் பலவும்தான் ஒருஏற்றத் தாழ்வுள்ள ஒடுக்கு முறைக் கட்டமைப்பினை அவர்கள் ஏற்றுக் கொள்ளவைக்கின்றன. இவற்றை மாற்றாதுநாம் சமூகத்தில் சமத்துவம்,சகோதரத்துவம் போன்ற விழுமியங்களை ஒரு பொழுதும் செயற்படுத்த முடியாதாகும்.


நியூயோர்க்கில் வசிக்கும் எனது நண்பியொருத்தி பாடசாலைகளில் விசேடவகுப்புக்கள் நடத்தும் ஒருதன்னார்வத் தொண்டரமைப்பில் இருக்கிறாள். விளையாட்டுக்கள் நூல் பொம்மைகள் கைவேiலைகள் போன்ற செயற்பாடுகள் மூலம் இனவாத்தினை இளம் பிள்ளைகளுக்கு புட்டுக் காட்டுவதுதான் இவர்களது பணி. புலபாடசாலைகள் தங்கள் இடங்களில் வகுப்பெடுக்கச் சொல்லி இவர்களுக்கு அழைப்பு விடுத்தவண்ணம் இருக்கின்றனவாம். நாமும் எமதுபாடசாலைக் கல்வியில் சாதிக் கட்டமைப்புமற்றும் இனவாதம் பற்றிய உரையாடல்களை ஏற்படுத்துதல் மிக முக்கியமாகும். எந்தப் பிரச்சினையானாலும் அது இருக்கின்றது, இது பிரச்சினைதான் எனநாம் பகிரங்கமாக ஒத்துக்கொள்ள ஆரம்பிக்கும்போதே அது

அரைவாசி இல்லா தொழிக்கப்படுகின்றது. எங்கள் கல்விமான்கள் இவ்வாறான புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்குத் தயாராக உள்ளனரா?


அடிஎன்னடிஉலகம் இதில் எத்தனைகலகம்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121391/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.