Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

2018 ஆம் ஆண்டில் புறப்­பட்ட விமானம் 2017 ஆம் ஆண்டில் தரை­யி­றங்­கி­யது.!

எதைத் திரும்பப் பெற்­றாலும் போன உயி­ரையும் கடந்து போன நேரத்­தையும் ஒரு­போதும் மீளப்­பெற முடி­யாது என்று கூறு­வார்கள்.

 ஆனால் 2018  ஆம் ஆண்டில் நியூ­ஸி­லாந்தின் ஆக்­லான்­டி­லி­ருந்து  புறப்­பட்ட விமா­ன­மொன்று 2017  ஆம் ஆண்டு ஹொன­லுலு விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கி புதுமை படைத்­துள்­ளது.

மேற்­படி ஹவா­யியன் எயார்லைன்ஸ் விமா­ன­மான எச்.ஏ.எல்.  புது வருட தினத்­திற்கு முதல் நாளான  ஞாயிற்­றுக்­கி­ழமை பின்­னி­ரவு 11.55  மணிக்கு புறப்­ப­டு­வ­தாக  ஆரம்­பத்தில் நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் மேற்­படி  விமா­னத்தின் பயணம் சுமார் 10  நிமி­டத்தால் தாம­த­மா­னதால் அந்த விமானம்   புது வருடம் பிறந்து 5  நிமிடம்  கழித்து ஆக்­லான்­டி­லி­ருந்து பய­ணத்தை ஆரம்­பித்து  ஹொன­லுலு  விமான நிலை­யத்தை வந்­த­டைந்­துள்­ளது. 

ஆக்­லான்­டிற்கும் ஹொன­லு­லு­விற்கு இடையில் 23  மணி நேர  இடை­வெளி நில­வு­கின்­றது. இதன் பிர­காரம்  அந்த விமானம் 2017  ஆம் ஆண்டு  டிசம்பர் 31  ஆம் திகதி காலை 10.16  மணிக்கு ஹொனலுலுவில் தரையிறங்கியுள்ளது.

http://www.virakesari.lk/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

`மன அமைதி’ என்கிற மகா மந்திரம் வசப்பட்டால் எதிலும் வெற்றியே! #MotivationStory

 
 

வெற்றி கதை

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல அமெரிக்க ராக் பாடகி அலானிஸ் மோரிஸ்ஸெட் (Alanis Morissette) ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்தார். பேச்சுவாக்கில் அவர் சொன்ன ஒரு வாசகம் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. “கெஞ்சிக் கேக்குறேன்... அஞ்சே அஞ்சு நிமிஷம் எனக்கு மன அமைதி வேணும்’’ என்பது அந்த வாசகம். உலகமறிந்த ராக்  பாடகி... செல்வத்துக்கோ புகழுக்கோ குறைவில்லை... ஆனால், எந்த அளவுக்கு அவர் மன வேதனை அடைந்திருந்தால், மன அமைதி வேண்டும் என்று கேட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து மந்திரம் வசப்பட்டால் போதும்... எதிலும், எங்கும் வெற்றியே! ஆனால், எல்லோருக்கும் எளிதாக அது வாய்ப்பதில்லை. பரபரப்பான மனம்கொண்ட ஒருவரைவிட, மன அமைதியுள்ளவர் சிறப்பாகச் சிந்திப்பார். தினமும் கொஞ்ச நேரத்தை, மனதை அமைதிப்படுத்தச் செலவழித்துப் பாருங்கள்... உங்களால் எவ்வளவு அற்புதமாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள். இதை எளிமையாகச் சுட்டிக்காட்டும் கதை இது.

 

நம் ஊரில் வயற்காட்டுக்கு நடுவே பெரும்பாலும் சோளக்கொல்லை பொம்மைதான் இருக்கும். அரிதாக, சில இடங்களில் கீற்றுக்கொட்டகை போட்டிருப்பார்கள். அதுவும் கரும்புப்பாகு காய்ச்ச, கிணற்று மோட்டாரைப் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட நிலத்தின் சொந்தக்காரருக்கான பிரத்யேக வசதிக்காக அது போடப்பட்டிருக்கும். ஆனால், அமெரிக்க விவசாயிகள் அப்படி அல்ல. தங்கள் வேளாண் நிலங்களுக்கு நடுவே ஒரு சிறிய கட்டடத்தையே கட்டிவைத்திருப்பார்கள். அதை, ஒரு பெரிய தகர கூரை ஷெட் என்று சொல்லலாம். அதில் கால்நடைகளையும் தானியங்களையும் பாதுகாத்து வைப்பார்கள். அதற்குப் பெயர் `பார்ன்’ (Barn). அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது இந்தக் கதை.

அலானிஸ்  மோரிஸ்ஸெட்

(courtesy- wikimedia)

அவர் ஒரு விவசாயி. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு வாட்ச் கட்டியிருந்தார். அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல... சென்டிமென்ட். பல நல்ல தருணங்கள், விஷயங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம்தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.  ஒருநாள் பண்ணை வேலையெல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் கவனித்தார்... அவர் கையில் கட்டியிருந்த வாட்ச்சைக் காணவில்லை. உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் (Barn) போய்த் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார்.

அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவருக்கு உடனே ஒரு யோசனை வந்தது. “டேய்... பசங்களா!” என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடிவந்தார்கள். ”இந்தக் கிடங்குக்குள்ள என் வாட்ச் காணாமப் போயிடுச்சு. கண்டுபிடிச்சுக் குடுக்குறவங்களுக்கு அருமையான பரிசு ஒண்ணு தருவேன்” என்றார். மாணவர்கள் துள்ளிக்குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள்.

அத்தனைபேரும் உள்ளே இருந்த வைக்கோற்போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு விடாமல் தேடியும் வாட்ச் கிடைக்கவில்லை. சோர்ந்துபோனவர்களாக வெளியே திரும்பிவந்தார்கள். விவசாயியிடம், “மன்னிச்சுக்கங்க ஐயா, எங்களால கண்டுபிடிக்க முடியலை’’ என்றான் அவர்களில் ஒருவன். அவருக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில், தயங்கித் தயங்கி ஒரு சிறுவன் அவரருகே வந்தான்.

“ஐயா, எனக்கு மட்டும் இன்னொரு சான்ஸ் தர்றீங்களா? நான் அந்த வாட்ச் கிடைக்குதானு முயற்சி செஞ்சு பார்க்குறேன்’’ என்றான்.

அவர், அவ்வளவு நேரம் அந்தச் சிறுவர்கள் சிரத்தையோடு வாட்ச்சைத் தேடியதைப் பார்த்திருந்தார். இன்னொரு சான்ஸ் கேட்கிறான் இந்தச் சிறுவன். கொடுத்தால் என்ன குறைந்துவிடப் போகிறது? “சரி...” என்றார்.

வாட்ச்

சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக்கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்தான். அவன் கையில் காணாமல் போயிருந்த அவரின் வாட்ச் இருந்தது. அவருக்கு ஆச்சர்யமும் சந்தோஷமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது.

“தம்பி... நீ மட்டும் எப்படி சரியா வாட்ச்சைக் கண்டுபிடிச்சே?’’ என்று கேட்டார்.

“ஐயா... நான் உள்ளே போய் ஒண்ணுமே செய்யலை. கிடங்குக்கு நடுவுல கண்ணை மூடி உட்கார்ந்துக்கிட்டேன். அஞ்சு நிமிஷம் அப்படியே காத்திருந்தேன். அந்த அமைதியில கடிகாரத்தோட  `டிக்...டிக்... டிக்...’ சத்தம் கேட்டுச்சு. சத்தம் வந்த திசைக்குப் போனேன். கண்டுபிடிச்சேன். எடுத்துட்டு வந்துட்டேன்.’’

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

``அந்நிய மண்தான் ஆனால், மண் அந்நியமல்ல!” - நியூஸிலாந்து விவசாயிகளைக் காப்பாற்றிய சீனத் தம்பதி

 
 

“இது Love at First Sight அல்ல...”

“ஹா...ஹா...”

 

“இந்த டீ தான் எங்களை ஒன்று சேர்த்தது. அதனால், இதை Love of First Cup” என்று சொல்லலாம். 

"ஹா...ஹா... அந்த முதல் சந்திப்பு இன்னிக்கும் மறக்க முடியாது. அது 1953ல். "அந்தச் சூடான டீயிலிருந்து பறக்கும் ஆவியின் ஊடே கைகளை நுழைத்து, அந்தப் பாட்டியின் சுருக்கமான கைகளை அத்தனை அன்போடு பிடிக்கிறார் ஜோ. மிஸ்டர் ஜோ காக் (Joe Gock). 

குக்கர் விசில் சத்தம் கேட்க...

போதும் உங்க ரொமான்ஸ்... வேலை இருக்கு விடுங்க என்னை” என்று சொன்னபடி ஜோவின் கைகளைத் தள்ளிவிட்டு, சமையலறை நோக்கி நடக்கிறார் ஃபே (Fay). மிஸஸ்.ஃபே காக் (Fay Gock).

நியூசிலாந்து மண் வளம் காத்த சீனத் தம்பதி

இருவரின் தோல் சுருக்கங்களே சொல்லிவிடும், அவர்கள்  80 வயதைக் கடந்தவர்கள் என்பதை. தன் கண்ணாடியைச் சரிசெய்தபடியே எழுந்து, தன் மனைவிக்கு உதவிடக் கிளம்புகிறார் ஜோ.

“இங்க வேலை முடிஞ்சது. நீங்க தோட்டத்துக்குப் போங்க. நான் டிராக்டர் எடுத்துட்டு வர்றேன்." என்று ஃபே சொல்லி, சரியாக 15 நிமிடங்களில், அந்தச் சிவப்பு நிற டிராக்டரை ஸ்டார்ட் செய்து, தோட்டத்தை நோக்கிக் கிளம்பினார் ஃபே.

நியூசிலாந்து மண் வளம் காத்த சீனத் தம்பதி

சீனாவில் பிறந்தவர்கள் இந்த காக்(Gock) தம்பதி. 1940-களில் சீனா-ஜப்பானிய போரால் பாதிக்கப்பட்டு, நியூஸிலாந்துக்கு அகதியாக வந்தவர்கள். 1953ல் முதன்முறையாக இருவரும் சந்தித்தார்கள்.முதல் பார்வையில்...அல்ல... முதல் டீயில் காதல் வயப்படுகிறார்கள். கல்யாணம் செய்து கொள்கிறார்கள். 

நியூசிலாந்து மண் வளம் காத்த சீன தம்பதி

நியூஸிலாந்தின் வடக்கிலிருக்கும் 'மாங்கிரி' (Mangere) எனும் பகுதியில்தான் இவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். நியூஸிலாந்து அவர்களுக்குப் புதிய நாடு. இவர்கள் அந்த மண்ணில் அகதிகள். முதலில், எல்லாம் அந்நியமாக இருந்தது அவர்களுக்கு. ஆனால், அந்த மண் அவர்களுக்கு அந்நியமாக இல்லை. முதலில் அந்த மண்ணைப் புரிந்துகொண்டு, அதில் விவசாயம் செய்யத் தொடங்கினார்கள். 10  ஏக்கருக்கும் குறைவான நிலம்தான் அப்போது அவர்களிடம் இருந்தது.

அந்தப் பகுதியில் அதிகம் விளைந்தது, 'குமாரா' (Kumara) எனும் இனிப்புக்கிழங்கு வகை. அதையேதான் இவர்களும் பயிரிட்டார்கள். முதல் வருடம் நல்ல அறுவடை. ஆனால், 1950-களின் இறுதியில் ஏதோ ஒரு வகையான நோய் தாக்க, நியூஸிலாந்து முழுக்க குமாரா கிழங்குகள் அழுகி, அழிந்துபோகத் தொடங்கின. பல விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இனி, அதை விளைவிக்கவே முடியாத அளவுக்கு அழிவு மிகப் பெரிய அளவில் இருந்தது. ஆனால், ஜோ நம்பிக்கையை இழந்துவிடவில்லை.

நியூசிலாந்து மண் வளம் காத்த சீனத் தம்பதி

நோய் பரவத் தொடங்கிய காலகட்டத்திலேயே சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ஆராய்ச்சிகள் என்பதைவிட முயற்சி என்றே அதைச் சொல்லலாம். நோய் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் வகையில், 'ஓவாய்ரகா ரெட்' (Owairaka Red) எனும் ஒருவித எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடித்தார்கள். அதை முதலில் தங்கள் நிலத்தில் பரிசோதித்துப் பார்த்தார்கள். இந்தத் தோட்டத்தின் ‘குமாரா கிழங்குகள்' காப்பாற்றப்பட்டன. செய்தி, நாடு முழுக்கப் பரவியது.

பல நிறுவனங்கள், ‘எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் தருகிறோம்’ என்று அந்த நோய் எதிர்ப்பு மருந்தை வாங்க முன்வந்தார்கள். ஆனால், ஜோவும்,ஃபேவும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. 

“இந்தக் கண்டுபிடிப்பு, இந்த நாட்டு விவசாயிகளுக்கானது. இதற்கு எங்களுக்கு ஒரு பைசாவும் வேண்டாம்" என்று சொல்லி, அதை இலவசமாகக் கொடுத்தார்கள். இனி கிழங்குகளைப் பயிரிடவே முடியாது என்ற நிலையில், பெரும் நஷ்டத்தில் சிக்கிக்கிடந்த விவசாயிகளுக்கு இது புத்துயிர் அளித்தது. காக் தம்பதிக்குப் பெரும் புகழ் வந்துசேர்ந்தது. பெரும் பணமும் கொடுக்க பலர் முன்வந்தார்கள். ஆனால், அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், தங்கள் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்தார்கள். இதோ, சில ஏக்கர்களில் ஆரம்பித்த அவர்களின் விவசாய வாழ்க்கை, இன்று பல நூறு ஏக்கர்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது.

நியூசிலாந்து மண் வளம் காத்த சீனத் தம்பதி

இத்தனை ஆண்டுகால விவசாய வாழ்க்கையில், இவர்கள் பல புதுமைகளைக் கண்டுபிடித்துள்ளனர். விதைகளற்ற தர்பூசணி பழத்தை நியூஸிலாந்தில் அறிமுகப்படுத்தினார்கள். காய்கறி, பழங்களைப் பதப்படுத்த பல தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் வழக்கத்தை உலகிலேயே இவர்கள்தாம் முதலில் அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.  

இவர்களின் பிள்ளைகளும், பேரன், பேத்திகளும் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தாலும், இவர்கள் மட்டும் அந்தப் பகுதியைவிட்டு நகராமல் அங்கேயே வாழ்கிறார்கள். இவர்களுக்கு, நியூஸிலாந்து மட்டுமல்லாமல் உலகின் மிக முக்கிய விவசாய விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும், இவர்களின் விவசாய சாதனையைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல், இவர்களின் அன்பையும் தீராக் காதலையும் கண்டு வியக்கிறார்கள். 

நியூசிலாந்து மண் வளம் காத்த சீனத் தம்பதி

நிலத்தில் வேலையைத் தொடங்கியிருக்கும் ஜோவின் அருகே வந்து, அந்தச் சிவப்பு நிற டிராக்டரை நிறுத்துகிறார் ஃபே. கீழே இறங்கி வருபவரிடம்...

"இந்த வயசிலயும் டிராக்டர் ஓட்டி அசத்துற டார்லிங்... சான்ஸே இல்லை" என்று சொல்லி, செல்லமாக முத்தமிடுகிறார் ஜோ. அதை மகிழ்ச்சியோடு அனுபவித்துச் சிரித்தபடியே...

 

“செம்ம அடி வாங்கப் போறீங்க... இந்தக் காய்கள் எல்லாம் இன்னும் ரெண்டு நாள் மண்ணில் இருக்கணும். ஏன் அவசரப்பட்டு வெளிய எடுத்தீங்க...” என்று அங்கு கூடையில் பறிக்கப்பட்டிருந்த காய்களைப் பார்த்து திட்டியபடியே அதை நோக்கி நகர, தன் கண்ணாடிக்குள் இருந்த கண்களைச் சுருக்கியபடியே அவர் பின்னால் நடக்கிறார் ஜோ.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

புத்தாண்டில் அறிவியல் உலகம் நிகழ்த்தவிருக்கும் புதிய சாதனைப் பயணங்கள்

இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டின் முதல் நாளான இன்று, அறிவியல் உலகில் நாம் அறிய வேண்டிய மிகப்பெரிய நிகழ்வுகள் உள்ளன. பிபிசியின் சர்வதேச அறிவியல் நிருபர் ரெபேக்கா மோரீலின் கணிக்கும் அந்த நிகழ்வுகளை இப்போது காணலாம்.

  • தொடங்கியவர்

ஜிப்பான் குரங்கு, கோமாளி தவளை, யோதா வௌவால்... 2017-ல் 'அறிமுகமான' உயிரினங்கள்!

 
 

2017-ம் ஆண்டு நிறைய உயிரினங்கள் அறிவியலாளர்களால் 'புதிய உயிரினங்களாக' அறிவிக்கப்பட்டன. இவையனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டவை. நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னரே இவை புதிய உயிரினங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றில் சில முக்கியமான உயிரினங்களையும் அவற்றின் கதைகளையும் காண்போம்.

தபானுலி உராங்குட்டான்:

 

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் புதிய உராங்குட்டான் இனம் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 1997-ல் உயிரியல் வல்லுநர்கள் குழு, வித்தியாசமான உராங்குட்டான் குரங்குகளை அங்கே கண்டறிந்தனர். இதுவரை கண்டறியப்படாத குரங்கு வகையாக அவை இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர். பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வில் அவை, ஏற்கெனவே உள்ள, போர்னிய மற்றும் சுமத்ரா வகை உராங்குட்டான்கள் அல்ல என்பது தெரியவந்தது. அவை புதிய வகை குரங்குகள் என்பது உறுதிசெய்யப்பட்டது. அந்தக் குரங்குகளுக்கு, 'தபானுலி” எனப் பெயர் சூட்டியுள்ளனர். இது உலகில் மீதமுள்ள எட்டாவது வகை உராங்குட்டானாகும்.  இவ்வகை குரங்குகள் தற்போது 800 மட்டுமே இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

உராங்குட்டான்

Photo Credit: Maxime Aliaga.

கோமாளித் தவளை:

அமேசான் பகுதியில் கோமாளித் தவளைகள் அதிகமாக இருக்கின்றன. அவற்றின் உடல் நிறம் பிரகாசமான வண்ணத்தில் இருப்பதால் அப்படியான பெயரைப் பெறுகின்றன. சமீபத்தில் பொலிவியா மற்றும் பெருவின் அமேசானிய மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கோமாளித் தவளைகள் பிற இனங்களைச் சேர்ந்தவையாகக் கருதப்பட்டன, ஆனால், ஆராய்ச்சியாளர்கள் அவற்றை டி.என்.ஏ பகுப்பாய்வு செய்ததன் பலனாய் புதிய தவளை வகையைக் கண்டறிந்தனர். இந்தத் தவளைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

கோமாளி தவளை

Photo Credit: Santiago R. Ron.

கடார் குழிபறிக்கும் தவளை:

இந்தத் தவளை இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருப்பதாகக் கருதப்பட்டது. உலகிலேயே குழிபறித்து நிலத்துக்கு அடியில் வாழும் ஒரே தவளை இனம் இது மட்டுமே என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் இவ்வகை தவளைகளை ஆராய்ச்சிகளுக்காக தேடிவந்தனர். இந்தத் தவளையானது மண்ணுக்குள்ளேயே இருப்பதால் நிலப்பகுதிக்கு அடிக்கடி வருவதில்லை. அதனால், இந்தத் தவளைகுறித்த தகவல்கள் கண்டறியப்படாமல் இருந்தது. 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து தவளை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, டெல்லி ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வுசெய்து கண்டறிந்தனர். கேரளாவின் வளச்சல் காட்டுப் பகுதியில் இந்தத் தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளக் காடுகளில் வாழும் கடார் இன மக்களின் பெயரை இந்தத் தவளைக்குச் சூட்டியிருக்கிறார்கள்.

புதிய உயிரினங்கள்

Photo Credit: SD Biju.

ஹூலோக் ஜிப்பான் குரங்கு

ஏப் இனத்தைச் சேர்ந்த ஜிப்பான் என்பது ஒரு வகை குரங்கு. தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய ஜிப்பான் வடகிழக்கு சீனாவுக்கும் வடக்கு மியான்மருக்கும் இடையிலான எல்லைகளை அகற்றும் காளியாகோங் மலைகளின் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜிப்பான்கள் தரையிலிருந்து மேலெழும்பி சுமார் 3 மீட்டர் உயரம் தாவிக்குதிக்கும் திறன் பெற்றவை.

ஜிப்பான்

Photo Credit: Fan Pengfei.

யோதா வவ்வால்:

பப்புவா நியூ கினியாவின் மழைக்காடுகளில் புதிய வௌவால் இனமொன்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்டார் வார் திரைப்படத்தில் வருகிற யோதாவைப் போன்று உருவ அமைப்பில் இருப்பதால் புதிய வௌவாலை "யோதா பேட்" என்று குறிப்பிடுகிறார்கள். அமெரிக்காவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவில் கௌரவ ஆராய்ச்சி மாணவரான நான்சி இர்வின் ஹமாமாஸ் குழாய்-மூடிய வௌவால்” என்ற பெயரை தேர்வு செய்தார், "ஹமாமாஸ்" என்கிற சொல்லுக்கு அந்த நாட்டில் மகிழ்ச்சி என்று பொருள்.

யோதா பேட் வவ்வால்

Photo Credit: Dr. Deb Wright.

பறக்கும் அணில்:

வட அமெரிக்காவில் மூன்றாவது பறக்கும் அணில் இனத்தை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். ஹம்போல்ட்டின் பறக்கும் அணில்  பெயரிடப்பட்டுள்ளது. கொலம்பியா  பசிபிக் கடலோரப் பகுதியிலிருந்து தெற்கு கலிஃபோர்னியாவின் மலைகள் வரை இவ்வகை அணில்கள் காணப்படுகின்றன. இவை ரகசிய இனங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் அணில்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நயன்தாரா கடிதம், ஆரத்யா குறும்பு, ஜாலி சமந்தா, விருஷ்கா செல்ஃபி...பிரபலங்களின் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்! #VikatanPhotoStory #NewYearEve 

 
 

புத்தாண்டு

புத்தாண்டு பிறந்துவிட்டது. குடும்பத்துடன் லூட்டி, நண்பர்களுடன் பார்ட்டி என ஒவ்வொரு வகையில் புத்தாண்டைக் கொண்டாடியிருப்பீர்கள். நாம் திரையில் ரசிக்கும் பிரபலங்களில் சிலர் புத்தாண்டுக் கொண்டாட்டம் எப்படி இருந்தது? அதுபற்றிய தொகுப்பு இதோ... 

 

புத்தாண்டு
 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு 2017-ம் ஆண்டு சிறப்பாக அமைந்தது. 'டோரா', 'அறம்', 'வேலைக்காரன்' எனக் கெத்து காட்டினார். அந்த மகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, இந்தப் புத்தாண்டில் 'அறம்' திரைப்படம்போல சமூக அக்கறைகொண்ட திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாக, தன் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் நயன். 

ஆண்ட்ரியா

 

 நடிகை ஆண்ட்ரியா புத்தாண்டு கொண்டாட, ஸ்காட்லாண்ட் மற்றும் லண்டன் சென்றிருக்கிறார். லண்டனின் டவர் பிரிட்ஜ் உள்பட பல இடங்களை ரசித்து புத்தாண்டை வரவேற்றுள்ளார். 

அமிதாப்

PC: instagram.com/amitabhbachchanhttp://instagram.com/amitabhbachchan

'பாலிவுட் லெஜண்ட்' அமிதாப் பச்சன், தன் பேத்தி ஆரத்யாவுடன் புத்தாண்டை அட்டகாசமாகக் கொண்டாடியதை, ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் குட்டி ஐஸ்வர்யா ராய், தன் தாத்தா தலையில் குட்டி கிரீடத்தை வைத்து குறும்பு செய்ய, அதனை ரசித்து செல்ஃபி எடுத்திருக்கிறார் அமிதாப்ஜி. 

சமந்தா

PC: instagram.com/samantharuthprabhuoffl

தன் காதல் கணவர் நாக சைந்தன்யாவை கரம் பிடித்த நடிகை சமந்தா, அவருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, 'இதுதான் நான் வாழ்க்கையில் செய்த மிகச் சரியான விஷயம்' என உருகியிருக்கிறார். 

அனுஷ்கா

PC: twitter.com/imVkohli

கடந்த ஆண்டு இந்தியாவே கொண்டாடிய பிரபல ஜோடி, விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா. தென்னப்பிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்றிருக்கும் விராட் கோலி, அனுஷ்காவுடன் கேப்டவுனில் எடுத்துக்கொண்ட செல்ஃபியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அலியா
PC:instagram.com/aliaabhatt

பாலிவுட் நடிகை அலியா பட், புத்தாண்டு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பே தன் தோழிகளுடன் இந்தோனேஷியாவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டார். அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

ஷில்பா

PC: instagram.com/theshilpashetty

எல்லாரும் பார்ட்டி, பயணம் என்றிருக்க, நடிகை ஷில்பா ஷெட்டி துபாயில் யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

சச்சின்
 

 

இதற்கெல்லாம் ஹைலைட்டாக அமைந்தது, சச்சின் டெண்டுல்கரின் புத்தாண்டுக் கொண்டாட்டம். தன் நண்பர்களுக்காக பார்பிக்யூ சிக்கன் சமைக்கும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். அது, ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரல்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த அரிய பொருட்கள்

 
இந்தியாவின் வரலாற்றை கூறும் ஒற்றை கண்காட்சிஇந்தியாவின் கடந்த இருபது லட்ச வருட வரலாற்றை விளக்கும் பல்வேறு அரிய பொருட்கள் நிறைந்த கண்காட்சி மும்பையில் நடைபெற்று வருகிறது.

"இந்தியா மற்றும் உலகம்: வரலாற்றை விளக்கும் ஒன்பது கதைகள்" என்ற பெயரில் நடைபெற்ற இக்கண்காட்சியானது மொத்தம் ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதில் சிற்பங்கள் மற்றும் மட்பாண்டங்கள் முதல் ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் வரை 228 தொல்பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

இது மும்பையின் மிகப்பெரிய அருங்காட்சியமான சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயத்தில் (CSMVS) நவம்பர் 11-ஆம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சி 2018 பிப்ரவரி 18 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்றும், அதன் பிறகு தலைநகர் டெல்லிக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கண்காட்சியின் மூலம் "இந்தியாவிற்கும் உலகின் மற்ற பகுதிகளுக்கும் இடையே உள்ள தொடர்புகள் மற்றும் ஒப்பீடுகளை ஆராய்வதே" இந்த அமைப்பின் நோக்கமென்று சி.எஸ்.எம்.வி.எஸ் இயக்குனர் சபியாசச்சி முகர்ஜி குறிப்பிடுகிறார்.

இந்திய துணைக்கண்ட வரலாற்றின் முக்கிய தருணங்களைக் விளக்கும் இந்த சேகரிப்பில், இந்தியாவின் அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் இருந்து 100க்கும் அதிகமான கலைப்பொருட்கள் உள்ளன.

இந்தியாவின் வரலாற்றை கூறும் ஒற்றை கண்காட்சி

 

"பலூசிஸ்தான் பாட்" (கி.மு.3500 - கி.மு.2800) டெரக்கோட்டாவினால் செய்யப்பட்டதாகும். தற்போதைய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மெஹர்கர் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மற்ற மட்பாண்டங்களை போலவே, இது பண்டையக் கலாச்சாரங்களில் பொதுவாகக் காணப்பட்ட பாலிச்சிரோமி என்ற நுட்பத்தை பயன்படுத்தி பல நிறங்களில் வரையப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் வரலாற்றை கூறும் ஒற்றை கண்காட்சிபடத்தின் காப்புரிமைHARYANA STATE ARCHAEOLOGY AND MUSEUMS

பண்டைய சிந்து நதி நாகரிகத்தை சேர்ந்த காளையின் தங்கம் பூசப்பட்ட கொம்பான (கி.மு.1800) இது, வட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல பகுதிகளில் பரவலாக காணப்பட்டது.

இந்தியாவின் வரலாற்றை கூறும் ஒற்றை கண்காட்சிபடத்தின் காப்புரிமைCSMVS

பசல்ட் ராக் (கி.மு. 250) என்ற இந்த கல்வெட்டு, பண்டைய இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றாக இருந்த அசோகர் பேரரசின் பிரகடனங்களை கொண்டுள்ளது. மேற்காணும் கல்வெட்டானது மும்பைக்கு அருகிலுள்ள சப்பாரா துறைமுக பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இந்தியாவின் வரலாற்றை கூறும் ஒற்றை கண்காட்சிபடத்தின் காப்புரிமைNATIONAL MUSEUM, NEW DELHI

சிவப்பு மணற்கற்களால் செய்யப்பட்ட இந்த சிற்பம் (கி.மு.150) குஷன் மன்னர்களில் ஒருவர் என்று நம்பப்படுகிறது. முதல் நூற்றாண்டில் வட இந்தியாவின் பெரும்பகுதி மற்றும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளை குஷன்கள் ஆட்சி செய்தனர்.

இந்தியாவின் வரலாற்றை கூறும் ஒற்றை கண்காட்சிபடத்தின் காப்புரிமைBIHAR MUSEUM, PATNA

இந்த மணற்கல் சிலை (கி.பி.200 - கி.பி100) பழைமையான இந்திய மதமான சமண மதத்தில் ஆரம்பக்காலத்தில் அறியப்பட்ட தீர்த்தாங்ராவின் (ஆசிரியர்) வடிவம் என்று கருதப்படுகிறது.

இது பீகாரின் தலைநகரான பாட்னாவில் கண்டெடுக்கப்பட்டது.

இந்தியாவின் வரலாற்றை கூறும் ஒற்றை கண்காட்சிபடத்தின் காப்புரிமைCSMVS, MUMBAI

இந்த வெண்கல புத்தர் (கி.பி.900 - கி.பி.1000) சிலையானது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒரு துறைமுக நகரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இந்தியாவின் வரலாற்றை கூறும் ஒற்றை கண்காட்சிபடத்தின் காப்புரிமைNATIONAL MUSEUM, NEW DELHI

முகலாய பேரரசர் ஜஹாங்கிரின் இந்த உருவப்படத்தில் அவர் (கி.பி.1620) மேரியின் சிறிய உருவத்தை வைத்திருப்பதை போன்றுள்ளது. முகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய உத்தரப் பிரதேசத்தில் இது கண்டெடுக்கப்பட்டது.

இந்தியாவின் வரலாற்றை கூறும் ஒற்றை கண்காட்சிபடத்தின் காப்புரிமைTHE BRITISH MUSEUM

முகலாய பேரரசர் ஜஹாங்கிர் காணப்படும் (கி.பி.1656 - கி.பி.1661) இந்த வரைபடம் டச்சு கலைஞரான ரம்ப்ராண்ட்டால் வரைபட்டதாகும். முகலாயர்களின் மிகச் சிறிய வரைபடங்களில் அடிக்கடி கருப்பொருளாக இருக்கும் நீதிமன்றம் சார்ந்த சூழலை கண்டு அவர் கவர்ந்தெழுக்கப்பட்டார்.

இந்தியாவின் வரலாற்றை கூறும் ஒற்றை கண்காட்சிபடத்தின் காப்புரிமைMANI BHAVAN GANDHI SANGRAHALAYA, MUMBAI

மர சக்கரம் அல்லது சுழலும் சக்கரம் (கி.பி.1915 - கி.பி.1948) என்று அறியப்படும் இது பிரிட்டனுடனான இந்தியாவின் சுதந்திர போராட்டத்தினுடைய உள்நாட்டு எதிர்ப்பின் ஒரு சக்தி வாய்ந்த சின்னமாக மாறியது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

 

கால்களுடன் வளரும் காலணிகள்!

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது வளரும் குழந்தைகளுக்கு காலணிகள் வாங்குவது செலவுமிக்கது என்பது தெரியும். தற்போது ஒரு தொண்டு நிறுவனம் உலகின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு உதவ ஒரு வழி கண்டுபிடித்துள்ளது. இந்த வளரும் காலணிகள் உண்மையாகவே வேலை செய்கின்றனவா என்பதைக் காண பிபிசி உலகச் சேவையின் நிருபர் ஹேக்ஸ் கென்யாவிற்குச் சென்றார்.

  • தொடங்கியவர்

பேசும் படம்:

 
31CHLRDMUSLIM

டந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரம், மகிழ்ச்சி, பெருமிதம், போராட்டம் என உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

மெரிக்க விமான சேவையில் விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவருகிறார் 81 வயது பீட் நாஷ். உலக அளவில் இவர்தான் மிகவும் முதுமையான விமானப் பணிப்பெண்ணாகக் கருதப்படுகிறார்.

 

31CHLRDBETTENASH

American Airlines longest serving flight attendant, Bette Nash (R), 81 years old, checks the passengers' seats for forgotten items before disembarking from her daily return flight to Boston at Ronald Reagan Washington Airport in Arlington, Virginia on December 19, 2017. American Airlines Flight 2160 from Boston has just arrived in Washington, D.C., and Bette Nash, 81, helps the passengers disembark. After six decades crossing the skies as a flight attendant, Nash still has impeccable style, incredible energy and a constant smile. In the United States, pilots must retired at 65 but there is no such restriction on commercial flight attendants, of which Bette Nash is probably the world's most senior. / AFP PHOTO / Eric BARADAT

 

ந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், உளவுப் பணியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு அவரைக் கைது செய்தது. சர்வதேச நீதிமன்றத்தின் தலையீட்டால் அவரது மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு ஜாதவின் தயார் அவந்தி, மனைவி சேத்தன்குல் ஆகியோர் சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்று ஜாதவைச் சந்தித்துவிட்டுத் திரும்பினர்.

 

31CHLRDJADHAV

Former Indian navy officer Kulbhushan Sudhir Jadhav's mother, Avanti, and wife, Chetankul, leave after meeting with him at the Ministry of Foreign Affairs in Islamabad, Pakistan December 25, 2017. REUTERS/Faisal Mahmood

 

முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட்ட மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படாமலேயே இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை இஸ்லாமியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

 

31CHLRDMUSLIM
 

லேசிய நாட்டில் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இளம்பெண்களின் பங்கேற்புடன் நடைபெற்றுவருகின்றன.

 

31CHLRDOBESITY

Women taking part in a nutrition program exercise in Kota Bharu, Malaysia, Nov. 6, 2017. Food companies are forging deep financial partnerships with nutrition scientists, policymakers and academic societies in developing countries like Malaysia, where sales of processed foods are exploding and nearly half of all adults are now overweight or obese. (Rahman Roslan/The New York Times)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
நீடித்த சந்தோசம்
 

image_2a96e4862f.jpgசந்தோசத்தை அடைவதற்கான வழிகளில், தங்களுக்கு மட்டும் அனுகூலமான வழியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எல்லோருக்குமான நல்ல காரியங்களை முடிந்தவரை செய்ய முற்படுவதே நீடித்த சந்தோசமாகும்.  

உங்களைப் பிறர் கௌரவப்படுத்தும் போது, அதை மன மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் நீங்கள், எத்தனை நபர்களை அன்புடன் கௌரவப்படுத்திய வண்ணம் இருக்கின்றீர்கள். அல்லது ஏதாவது குறிப்பிட்ட உதவிகளைத் தன்னலமற்ற நிலையில் செய்துள்ளீர்களா என உங்களை நீங்களே கேட்பீர்களாக.

நன்றிமறப்பது மனச்சாட்சியை நெஞ்சத்தின் பதிவிலிருந்து அறுப்பதுபோலாகும். பிறர் செய்யும் நற்காரியங்களின் திறமைகளைக் கண்டுகொள்ளாதவர்கள் சமூகத்திலிருந்து    பயன் பெறவேண்டும் என எண்ணுவது வெட்கப்பட வேண்டியதாகும். 

தங்களது காரியங்கள் இனிதே நிறைவேற்றப்பட்டதுமே அந்தப் பணிக்காக உதவி நல்கியவர்களை நினைவு கூருவதற்கு பலர் மறந்தும் போகின்றார்கள். உடன் செய்ய வேண்டிய நல்ல கருமங்களை, குறிப்பு எடுத்து உடன் நிறைவேற்றுக. மாந்தரை மதிப்பதுவே மானிடரின் பெரும் கடன்.

  • தொடங்கியவர்

2004 : எகிப்திய விமான விபத்தில் 148 பேர் பலி

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 03

 

1431 : பிரெஞ்சு வீராங்­க­னை­யான 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்­யப்­பட்டு பியேர் கவுச்சோன் ஆய­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

1496 : இத்­தா­லிய அறிஞர் லியானார்டோ டா வின்சி, தனது பறக்கும் இயந்­திரம் ஒன்றை சோத­னை­யிட்டார். எனினும், அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

1833 : ஆர்­ஜென்­டீ­னா­வுக்கு அரு­கி­லுள்ள போக்­லாந்து தீவு­களை பிரித்­தா­னியா கைப்­பற்­றி­யது.

varalau-03-01-2017-Flash-Airlines-604.jp1888 : 91 செ.மீ முறிவுத் தொலை­நோக்கி முதன்­மு­றை­யாக கலி­போர்­னி­யாவில் உப­யோ­கிக்­கப்­பட்­டது. இதுவே அந்­நே­ரத்தில் உலகின் மிகப் பெரும் தொலை­நோக்கி ஆகும்.

1921 : ஆர்­மே­னி­யா­வுடன் சமா­தான உடன்­பாட்­டுக்கு துருக்கி ஒப்­புக்­கொண்­டது.

1925 : இத்­தா­லியின் ஆட்சி அதி­காரம் முழு­வதும் தன்­னிடம் உள்­ள­தாக முசோ­லினி அறி­வித்தார்.

1932 : இந்­தி­யாவில் மகாத்மா காந்தி மற்றும் வல்­லபாய் பட்டேல் ஆகி­யோரை பிரித்­தா­னியர் கைது செய்­தனர்.

1947 : அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற அமர்வு முதற்­த­ட­வை­யாக தொலைக்­காட்­சியில் காண்­பிக்­கப்­பட்­டது.

1956 : ஈபிள் கோபு­ரத்தில் ஏற்­பட்ட தீயினால் கோபு­ரத்தின் மேற்­ப­குதி சேத­ம­டைந்­தது.

 

1957 : முத­லா­வது மின்­க­டி­கா­ரத்தை ஹமில்ட்டன் வோட்ச் கம்­பனி அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

1958 : மேற்­கிந்­தியத் தீவு­களின் கூட்­ட­மைப்பு அமைக்­கப்­பட்­டது.

1959 : அலாஸ்கா, ஐக்­கிய அமெ­ரிக்­காவின் 49ஆவது மாநி­ல­மா­னது.

1961 : கியூ­பா­ வு­ட­னான ராஜ­தந்­திர உற­வு­களை அமெ­ரிக்க அரசு முறித்­துக் ­கொண்­டது.

1961 : பின்­லாந்தில் இடம்­பெற்ற விமான விபத்தில் 25 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1966 : இந்­தியப் பிர­தமர் லால் பகதூர் சாஸ்­தி­ரிக்கும் பாகிஸ்தான் ஜனா­தி­பதி அயூப்­கா­னுக்கும் இடையில் பேச்­சு­வார்த்­தைகள் அப்­போ­தைய சோவியத் யூனி­யனின் ஒரு குடி­ய­ர­சாக இருந்த உஸ்­பெ­கிஸ்­தானின் தாஷ்கெண்ட் நகரில் ஆரம்­ப­மா­யின.

1974 : யாழ்ப்­பா­ணத்தில் நான்­கா­வது உலகத் தமி­ழா­ராய்ச்சி மாநாடு ஆரம்­ப­மா­னது.

1977 : அப்பிள் கணினி நிறு­வனம் கூட்­டுத்­தா­ப­ன­மாக்­கப்­பட்­டது.

1990 : பனா­மாவின் முன்னாள் ஜனா­தி­பதி மனுவேல் நொரி­யேகா அமெ­ரிக்கப் படை­க­ளிடம் சர­ண­டைந்தார்.

1993 : ஆயு­தக்­கு­றைப்பு தொடர்­பான ஒப்­பந்­தத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் எச்.டபிள்­யூ. புஷ், ரஷ்ய ஜனா­தி­பதி பொரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெ­ழுத்­திட்­டனர்.

1994 : ரஷ்­யாவின் இர்­கூத்ஸ்க்கில் இருந்து புறப்­பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்­ததில் 125 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1995 : இலங்கை அரசு, விடு­தலைப் புலி­க­ளுக்கு இடை­யி­லான பேச்­சு­வார்த்­தை­களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.

2004 : எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததால் அதில் பயணம் செய்த 148 பேரும் உயிரிழந்தனர்.

2015 : நைஜீ­ரி­யாவின் பாகா நகரில் போகோ ஹராம் தீவி­ர­வா­திகள் நடத்­திய தாக்­குல்­களில் சுமார் 2000 பேர் இறந்­தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

பிறருக்கு உதவுதல் என்பது குணமல்ல... வரம்! - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
 

தன்னம்பிக்கை கதை

`ம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க நடிகை வர்ஜினியா வில்லியம்ஸ். பிறருக்காக இரக்கப்படும் சுபாவம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறரின் கனவுகளை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்துவிட முடியும் என்பது இயற்கை விதி. ஏதோ ஒரு வழியில் அதற்கான உதவி நமக்குக் கிடைத்தே தீரும். நம்மால் பிறருக்கு புது வாழ்க்கை அமையலாம், செல்வம் சேரலாம், தைரியம் தரலாம், புது நம்பிக்கையளிக்கலாம். இவையெல்லாம் இரக்கத்தின் மூலமாகத்தான் சாத்தியமாகும். பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்வது சிலரின் குணமாகவேகூட இருக்கும் அப்படிப்பட்ட, வணக்கத்துக்குரிய மனிதர்கள் நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதரை அடையாளம் காட்டும் கதை இது. 

 
 

மருத்துவமனையில் முதியவர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவமனையின் பிரத்யேக வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு வந்திருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்றுநோய். இன்னும் ஓரிரு நாள்கள்கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்களே பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்துக்கொள்ளும் நர்ஸ் வந்தார். 

``சார்... உங்களைப் பார்க்க உங்க மகன் வந்திருக்கார்.’’ 

கிழவர் கண்ணைத் திறந்து பார்த்தார். வலி நிவாரணி மாத்திரைகள், மயக்க மருந்துகள் அதிக அளவில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்ததால், கண்களையே மெதுவாகத்தான் அவரால் திறக்க முடிந்தது. நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார். அவருக்கு எதிரே 20 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான். சீருடை அணிந்திருந்தான். அவன் அணிந்திருந்த சீருடை `யூத் மரைன்’ (Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது. படுக்கையில் இருந்த முதியவர், நர்ஸிடம் தன் மகன் `யூத் மரைன்’ புரோக்ராமில் இருக்கிறான் என்று சொல்லியிருந்தார். அதனால்தான், நர்ஸ் அவனைச் சரியாகக் கண்டுபிடித்து அவர் முன்னே நிறுத்தியிருந்தாள்.  

இளைஞன் படுக்கைக்கு அருகே போய் நின்றான். அவர், தன் கைகளால் அவன் கைகளைப் பிடிக்கத் துழாவினார். அதைப் பார்த்ததும் இளைஞன் தன் கையை அவர் கைக்கு அருகே நீட்டினான். நடுங்கும் தன் கரங்களால் முதியவர் பாசத்தோடும் வாஞ்சையோடும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டார். பிறகு கண்களை மூடிக்கொண்டாள். நர்ஸ், ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து, முதியவரின் படுக்கைக்கு அருகே போட்டாள். இளைஞன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். அன்று இரவு முழுக்க அவர், அவனுடையக் கைகளைப் பிடித்தபடியே இருந்தார். 

அவ்வப்போது அந்த நர்ஸ், அவர் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக உள்ளே வருவார். இளைஞன், முதியவரின் கைகளைப் பற்றியபடி இருப்பான். ஒருமுறை பொறுக்க முடியாமல் நர்ஸ் சொன்னார்... ``தம்பி... நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் வெளியே போய் ரெஸ்ட் எடுங்களேன். எவ்வளவு நேரம்தான் இப்படியே உட்கார்ந்திருப்பீங்க?’’ 

``வேண்டாம். பரவாயில்லை’’ என்று சொல்லிவிட்டான் அந்த இளைஞன். நர்ஸின் வற்புறுத்தலால் ஒரே ஒரு கப் காபி மட்டும் கேட்டு வாங்கிப் பருகினான். அடுத்த நாள் அதிகாலையில் நர்ஸ் வந்தபோது அந்த இளைஞன் சில நல்ல வார்த்தைகளை, முதியவரின் காதில் சொல்வதைக் கண்டாள். ஆனாலும் அவர் கண் திறக்கவில்லை. அவர் கைகள் மட்டும், இளைஞனின் கையை இறுகப் பற்றியிருந்தது. 

முதியவர்

விடிந்தது. கிழவர் இறந்துபோயிருந்தார். இளைஞன், அவருடைய தளர்ந்த கையைத் தன் கையிலிருந்து வெகு ஜாக்கிரதையாக விடுவித்து, மெள்ள படுக்கையில் வைத்தான். வெளியே வந்தான். நர்ஸிடம் விஷயத்தைச் சொன்னான். 

``ரொம்ப சாரி தம்பி... உங்க அப்பாவின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...’’ என்றார் அந்த நர்ஸ். 

``நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவர் என் அப்பா இல்லை. இதுக்கு முன்னாடி நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை.’’ 

``அவர் உங்க அப்பா இல்லைன்னா, நான் அவர்கிட்ட உங்களைக் கூட்டிட்டு வந்தப்போவே சொல்லியிருக்கலாமே... ஏன் சொல்லலை?’’ 

``நீங்க அவர்கிட்ட என்னைக் கொண்டு வந்து நிறுத்தினப்பவே தப்பா என்னைக் கூட்டிட்டு வந்துட்டீங்கனு தெரிஞ்சுடுச்சு. நீங்க ரொம்ப அவசரத்துல இருந்தீங்க. அதோட அந்தப் பெரியவரைப் பார்த்ததும், அவர் தன் மகனுக்காக ஏங்குறார்ங்கிறதும், அவன் இப்போ இல்லைன்னும் புரிஞ்சுது. அதோட அவர் என் கையைப் பிடிச்சதும், அவரால நான்தான் அவரோட மகனா, இல்லையான்னு சொல்ல முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருக்கார்னு புரிஞ்சுது. அவரோட அந்தக் கடைசி நிமிஷத்துல அவருக்கு எந்த அளவுக்கு அவரோட மகனின் அருகாமை தேவைப்படுதுனு புரிஞ்சுது. அதான் அப்படியே உட்கார்ந்துட்டேன்.’’ 

நர்ஸ் பதில் பேச முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க, அந்த இளைஞன் மெள்ள நடந்து வெளியே போனான். 

*** 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நண்பர்களுக்கு தானே சமைத்து விருந்தளித்த சச்சின்! (வீடியோ)

நண்பர்களுக்கு தானே சமைத்து விருந்தளித்த சச்சின்! (வீடியோ)

 

 

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் புத்தாண்டு வாழ்த்துகளோடு வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். சச்சின் சமைப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். புத்தாண்டில் தனது நண்பர்களுக்கு தனது கைகளால் சமைத்து விருந்தளித்தார்.

அந்த வீடியோவில், சச்சின் பார்பெக்யூவில் இறைச்சியை சமைக்கிறார். அதில் இருந்து வரும் புகையால் கண்ணீர் வருவதையும் பொருட்படுத்தாமல் சச்சின் சமைத்து தனது நண்பர்களுக்கு கொடுத்தார். வீடியோவுடன், ´அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டில் எனது நண்பர்களுக்கு சமைத்து கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் உணவை விரும்பி உண்டனர். இந்த ஆண்டு இனிமையாக அமைய வாழ்த்துக்கள். நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்´ என செய்தியையும் சச்சின் தெரிவித்துள்ளார்.

சச்சின் வெளியிட்ட இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சச்சின் சென்ற ஆண்டு ராஜ்ய சபாவில் உரையாற்ற முடியாததால், தனது உரையை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/

  • தொடங்கியவர்

ஆல்ப்ஸ் மலைச்சிகரத்தில் உள்ள சில பனிச் சறுக்கு விடுதி ஒன்று செயற்கையாக பனிச் சறுக்கலை ஏற்படுத்த ஒரு எளிய வழியை உருவாக்கியுள்ளது.

  • தொடங்கியவர்

2018 முதன்முதலில் பிறக்கும் நாடு எது? புத்தாண்டு சுவாரஸ்யங்கள்!

 

`ஹேப்பி நியூ இயர்... இளமை இதோ இதோ...!' எனத் தமிழ்நாட்டில் உற்சாகமாகத் தொடங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் போல உலகமெங்கும் நடக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் கலர்ஃபுல்லானவைதான். 2018-ம் ஆண்டு முதன்முதலில் பிறக்கும் நாடு, அதிகம் எடுத்துக்கொள்ளப்படும் நியூ இயர் ரெசல்யூஷன் என சுவாரஸ்யமான பல தகவல்களைப் பார்க்கலாம்.  

புத்தாண்டு கொண்டாட்டம்

  • தொடங்கியவர்

சல்வார் கமீஸ் உங்களுக்குப் பிடித்த உடையா? அப்படியெனில் இந்த 9 விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

 

 
31685-green-bollywood-salwar-kameez-shop-online

சல்வார்-கமீஸ் என்பது, சல்வார், கமீஸ் ஆகிய இரண்டு பகுதிகளை உடைய ஒரு உடை. இது இந்தியப் பெண்களுக்கு மிகவும் பாந்தமான உடை எனலாம். இதனைத் தைப்பதும், உடுத்திக் கொள்வதும் மிக எளிது என்று தோன்றினாலும், சல்வார் கமீஸை பொருத்தமாக அணிவதற்கு சில விஷயங்கலை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மாடர்ன் ஸ்டைலிஷ் லுக் வேண்டுமெனில் உங்களுக்கு ஏற்ற மிகச் சரியான சல்வாரை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவை,

1. உடலுக்குப் பொருத்தமான அளவு 

446f8baa2bf5fa47e1312e967581274f--party-

சல்வார் கமீஸ் உடையின் வடிவமைப்பில் உள்ள சிறப்பு எதுவென்றால், அது அணிவதற்கு வசதியான ஒரு உடை. அணிந்து கொள்ளும் போது செளகரியமாக இருக்கும். இந்த உடையை டைட் ஃபிட்டிங் மற்றும் லூஸ் ஃபிட்டிங் என்ற இரண்டு வகையில் தைத்துக் கொள்ளலாம். உங்கள் உடல் வாகுக்கு எது பொருத்தமாக உள்ளதோ அப்படி அணிய வேண்டும்.

5f905a5c725b6b188991469c243992881.jpg

பொதுவாக சல்வார் கமீஸை கொஞ்சம் லூசாக, அதே சமயம் உடலுக்கு ஏற்ற வகையில் தைக்க வேண்டும். குர்தா மிகவும் இறுக்கமாக இருந்தால் அது சல்வாரின் அழகைக் கெடுத்துவிடும்.

IMG4268_final_large.jpg

நீங்கள் வழக்கமாக துணி தைக்க கொடுக்கும் கடையில் சல்வாரைத் தைத்துக் கொள்வது முக்கியம். காரணம் உங்களுக்குத் தேவையான மாற்றங்களையும் உள்ளடக்கி தைப்பார்கள்.

2. துணி வகை 

1608.jpg

லினன், காட்டன் போன்ற துணி ரகங்கள் உங்களை பருமனாகக் காட்டக் கூடும். ஜார்ஜெட், ஷிஃபான், க்ரேப் போன்ற துணி வகைகளில் சல்வார் கமீஸ் தைத்துப் போட்டுக் கொள்ளும் போது உடலுக்கு கச்சிதமாக இருக்கும். உடலை உறுத்தாத துணி ரகங்களைத் தேர்ந்தெடுத்து அதன் பின் கமீஸ் தைத்துக் கொள்வது நல்லது.

3. அதிகப்படியான மேட்சிங் வேண்டாம்

33641.jpg

மேட்சாக அணிகிறேன் என்று ஒரே நிறத்தில் தலை முதல் கால் வரை எல்லாவற்றையும் ஒரே கலரில் அணியக் கூடாது. உதாரணத்துக்கு கமீஸின் கலர் சிவப்பு என்று வைத்துக் கொண்டால், சிவப்பு துப்பட்டா, சிவப்பு வளையல்கள், சிவப்பு பொட்டு மற்றும் சிவப்பு காதணிகள் என்று ஒரே சிவப்பு மயமாகக் காட்சியளிக்க வேண்டாம். மேட்சிங் பார்ப்பவர்களின் கண்களை உறுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது.

 

 

9c8bbfeee442a0e58ec15925efe8fc1a.jpg

உடையின் டிசைனுக்கு ஏற்றவாறு வெவ்வேறு நிறத்தில் அணிகலன்களின் நிறம் பளிச்சென்று இருந்தால் பார்க்க பாந்தமாக இருக்கும்.

4. நீளமான குர்தாவுக்கு பாடியாலா அணியலாமா?

2acabc0bbbc7eb4a2e766ad13c85851f.jpg

நிச்சயம் அணியக் கூடாது. நீளமான குர்த்தா பாட்டியாலாவுக்கு ஒத்து வராது. பாட்டியாலா சல்வாரின் அழகே அதிலுள்ள அழகான விரிவுகள் தான். நீளமான குர்தாவை அணிந்தால் பாட்டியாவிலுள்ள ஃப்ரில்ஸ் மறைந்துவிடும். பாடியாலா சல்வாரை அணியும் போது முட்டளவு அல்லது அதற்கு ஒரு இன்ச் கீழே உள்ள குர்தா அணிவது பொருத்தமாக இருக்கும். 

5. லைனிங் அவசியம்

maxresdefault1.jpg

சில ஆடைகளுக்கு லைனிங் கட்டாயம் தேவைப்படும். காரணம் அந்தத் துணி வகை மெல்லியதாக இருக்கும். குர்தாவின் அளவுக்கு ஏற்றபடி லைனிங் தைக்க வேண்டும். தவிர சிலர் லைனிங் தைக்காமல் அந்தந்த உடைக்கேற்ற நிறத்தில் நீளமான ஸ்லிப்பை அணிவார்கள். அது சரிதான், ஆனால் குர்தாவை விட ஸ்லிப் நீளமாக இருக்கக் கூடாது. அதற்கு லைனிங் வைத்த சல்வாரே பரவாயில்லை.

6. ஆடைக்கு ஏற்ற அணிகலன்கள்

nisha_lawn_prints_collection_2011_11.jpg

ஆடைக்கு ஏற்ற பொருத்தமான அணிகலன்களை அணிவது அழகுக்கு அழகு சேர்க்கும் என்பது உண்மைதான். ஆனால் அது சற்று அதிகமாகிவிட்டால் அலங்கோலமாகிவிடும். மிதமான தேவையான அணிகலன்களை அணிவது தான் சல்வார் கமீஸ் போன்ற உடைகளுக்கு சிறப்பான தோற்றத்தை ஏற்படுத்தும்.

neck.jpg

சல்வாரில் எம்ப்ராய்ட்ரி வேலைப்பாடுகள் இருந்தால் எளிமையான அணிகலன்கள் அணிந்தால் போதுமானது. கழுத்துப் பகுதியில் உள்ள டிசைன் தெரியவேண்டும் என்று நினைத்தால் நெக்லஸ் அணியாமல் இருப்பது நல்லது. 

7. துப்பட்டா தேவையா

 

 

unique-deep-purple-green-salwar-kameez-8

சில சல்வார் கமீஸுக்கு துப்பட்டா அணிவது தேவையிருக்காது. காரணம் அதன் கழுத்துப் பகுதிகளின் டிசைன் மற்றும் வேலைப்பாடுகள் துப்பட்டா அணிந்தால் மறைந்துவிடும்.

fab.jpg

ஆனால் துப்பட்டா அணிந்தே ஆக வேண்டும் என்ற சூழலில் மெல்லிய ஷிபான் வகை துப்பட்டாக்களை அணிந்து கொள்ளலாம். அது டிசைன்களை மேலும் எடுப்பாகக் காண்பிக்கும்.

8. துப்பட்டாவின் நீளம்

துப்பட்டாவின் நீளம் பொதுவாக 2.5 மீட்டர் கட்டாயம் இருக்க வேண்டும். சிலர் துப்பட்டாவுக்கு பதில் ஸ்டோல் அல்லது ஸ்கார்ஃப் பயன்படுத்துவார்கள். அவை சல்வாரின் அழகைக் கெடுப்பதுடன் மிகவும் குட்டையாக இருக்கும். குட்டைத் துப்பட்டா அணிந்தால் அது சல்வாரின் அழகை கெடுத்துவிடும்.

thupatta1.jpg

சல்வார் அணியும் போது நீளமான துப்பாட்டாவை போட்டுக் கொள்ளும் போதுதான் அது அந்த உடையின் அமைப்பை அழகாக்கும். துப்பட்டா கட்டாயம் உங்கள் முட்டு அளவாவது இருப்பது அவசியம். ஒரே பக்கமாக துப்பட்டாவை அணிந்தாலும் சரி மடித்து இரு தோளிலும் போட்டுக் கொண்டாலும் சரி, நீளமான துப்பட்டாக்களே சல்வார் கமீஸுக்கு பொருத்தமானது.

9.காலணியும் முக்கியம்

Patiala-Salwar-Kameez-2014-Designs-For-P

சல்வார் கமீஸ் அணியும் போது அதற்கேற்ற வகையில் செருப்பு அணிவதுதான் உடையலங்காரத்தை நிறைவு செய்யும் செயல்.

Some-Other-Tips.jpg

நீளமான சல்வார் போட்டால், அதற்கேற்ற வகையில் குதிகால் உயரமுள்ள காலணியை அணியலாம். முட்டளவு சல்வார் கமீஸ் அணிந்தால், உடைக்கேற்ற டிசைனர் ஜுட்டிஸ் செருப்புக்கள் நன்றாக இருக்கும்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

 

அமெரிக்காவில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் நிறுவப்பட்ட நாள் இன்று

1977-இல் இதே நாளில்தான், ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை அதிகாரபூர்வமாக அரசிடம் பதிவு செய்தனர். தற்போது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 90,000 கோடி அமெரிக்க டாலர்.

  • தொடங்கியவர்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போர் அடிக்குதா... இந்த இணையதளங்களுக்கு ஒரு விசிட் அடிக்கலாமே!

 
 

ன்னதான் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பெரும்பாலோனோரின் நேரத்தை ஆக்கிரமித்து இருந்தாலும் அதையும் தாண்டி நாம் பல நேரங்களில் வெறுமையாக உணருவது உண்டு. சில சமயங்களில் என்ன செய்வதென்றே தெரியாத அளவுக்கு வெட்டியாக இருப்போம். இந்த முகநூல், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இவையெல்லாம் இல்லாமல் எப்படி வெட்டியாக நேரத்தைக் கழிப்பது என்று யோசித்துக் கொண்டிருப்பவரா நீங்கள்? எனில், இப்போது சொல்லப்போகும் இணையங்கள் எல்லாம் உங்களுக்குதான்.

Touch pianist :

 

நீங்கள் இசைப்பிரியரா ? எனில் நீங்களே உங்களுக்குப் பிடித்தமான உங்களின் சொந்த இசையை இந்த இணையதளத்தின் மூலம் உருவாக்கி, நீங்களும் ஒரு பியானிஸ்ட் ஆகலாம். இதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வெறும் key board key யை அழுத்துவது மட்டுமே !

Touch Pianist இணையதளம்

Solve the riddle :

பெயரிலேயே புரிந்திருக்கும். சின்ன வயதில் விளையாடிய விடுகதை விளையாட்டின் technical வடிவம்தான் இது. மொத்தம் 81 நிலைகள் இருக்கும். அடுத்த நிலைக்குச் செல்லச்செல்ல விடுகதை கொஞ்சம் கடினமாக இருக்கும் பாஸ். ஆனால், நல்ல பொழுதுபோக்காக இருக்கும்.

Funny or die :

மேலே சொன்னவை எல்லாம் வேணாம்; சிரிச்சு ரிலாக்ஸா இருக்குற மாறி ஏதாவது வேண்டும் என்று யோசித்தால், funny or die என்ற இணையதளம் பக்கம் போய் பாருங்க. புதுப்புது காமெடி போட்டோக்களும், வீடியோக்களும், GIFகளும் இங்கு களைகட்டும். கொஞ்சம் சிரிங்க பாஸ் !  

Is it normal ?

எல்லோருக்குள்ளும் நிறைய கேள்விகள் இருக்கும். நிறைய கேள்விகளுக்கான உங்களின் தனிப்பட்ட கருத்துகளும் இருக்கும். அதையெல்லாம் சொன்னா யாரும் கேட்க மாட்டார்கள் என்று இனியும் யோசிக்க வேண்டாம். இங்கு யார் வேண்டுமானாலும், என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். ஏன் உங்களின் பதில்களையும் பதிவு செய்யலாம். இது எதுவுமே வேண்டாம் என்றால் அங்கே என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்த்தும் பொழுதைக் கழிக்கலாம்.

Oddee  :

நீங்கள் வெட்டியாக செலவிட விரும்பும் நேரத்தையும், உங்களைச் சுற்றி நடக்கும் வித்தியாசமான தகவல்களை உங்கள் போனிலே தருவதன் மூலம் பயனுள்ளதாக மாற்றுகிறது இந்த இணையதளம். இதில் பயனுள்ள தகவல்கள் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கலாம்; மிக பயங்கரமானதாகவும் இருக்கலாம்; சில சமயங்களில் மொக்கையான ஒன்றாகக்கூட இருக்கலாம்.

The faces of facebook :

The faces of faces இணையதளம்

நம்மில் பலருக்கு முகநூலில் மற்றவரின் profile photo பார்ப்பதுதான் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கும். அதற்குதான் இந்த சிம்பிள் the faces of facebook.  அதாவது கிட்டத்தட்ட 1.2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் முகநூல் கணக்கு வைத்து இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் profile photoவையும்  இங்கு ஒரே இடத்திலே பார்த்துவிடலாம்

This is sand :                                                                                                 

Sand art பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதை உங்களின் திரையிலே பண்ண முடியும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா ? இதோ அதற்கான வழிமுறைகள் :

முதலில் உங்களுக்குப் பிடித்த டிசைன் ஒன்றை வரைந்துகொள்ளுங்கள்

பின்பு c என்னும் பட்டனை அழுத்தி உங்களுக்கு பிடித்த நிறத்தை உங்கள் டிசைனுக்கு கொடுங்கள்

கடைசியாக மணலால் நிரப்ப வேண்டும் என்று விரும்பும் இடத்தை கிளிக் செய்தால் போதும் நீங்களும் sand artist தான் !

this is sand

college humor :

 

என்ன தான் கல்லூரிப் பருவத்தை விட்டு வெளியே வந்து இருந்தாலும் சிலருக்கு அந்த கல்லூரி நினைவுகள் மனதை விட்டு அகலாது. இந்த இணையதளம் தரும் வீடியோக்களும், போட்டோக்களும் உங்களுக்கு உங்கள் கல்லூரி நாளை நினைவு படுத்துவதோடு சிரிப்புக்கும் உத்தரவாதம் தருகிறது.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

மனிதர்களுக்கு உதவுமா இந்த நாய்க்கு அளிக்கப்பட்ட அதிநவீன சிகிச்சை

இக்காணொளியில் உள்ள நாயின் காலானது கார் விபத்து ஒன்றில் முறிந்துவிட்டது. எனவே, இது மீண்டும் நடக்கவே இயலாது என்று கருதப்பட்ட சூழ்நிலையில், புதியதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஒன்று இதன் முறிந்த எலும்புகளை மீண்டும் முழுமையாக ஒட்டுவதற்கு உதவியது.

  • தொடங்கியவர்
நீடித்த சந்தோசம்
 

image_2a96e4862f.jpgசந்தோசத்தை அடைவதற்கான வழிகளில், தங்களுக்கு மட்டும் அனுகூலமான வழியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எல்லோருக்குமான நல்ல காரியங்களை முடிந்தவரை செய்ய முற்படுவதே நீடித்த சந்தோசமாகும்.  

உங்களைப் பிறர் கௌரவப்படுத்தும் போது, அதை மன மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் நீங்கள், எத்தனை நபர்களை அன்புடன் கௌரவப்படுத்திய வண்ணம் இருக்கின்றீர்கள். அல்லது ஏதாவது குறிப்பிட்ட உதவிகளைத் தன்னலமற்ற நிலையில் செய்துள்ளீர்களா என உங்களை நீங்களே கேட்பீர்களாக.

நன்றிமறப்பது மனச்சாட்சியை நெஞ்சத்தின் பதிவிலிருந்து அறுப்பதுபோலாகும். பிறர் செய்யும் நற்காரியங்களின் திறமைகளைக் கண்டுகொள்ளாதவர்கள் சமூகத்திலிருந்து    பயன் பெறவேண்டும் என எண்ணுவது வெட்கப்பட வேண்டியதாகும். 

தங்களது காரியங்கள் இனிதே நிறைவேற்றப்பட்டதுமே அந்தப் பணிக்காக உதவி நல்கியவர்களை நினைவு கூருவதற்கு பலர் மறந்தும் போகின்றார்கள். உடன் செய்ய வேண்டிய நல்ல கருமங்களை, குறிப்பு எடுத்து உடன் நிறைவேற்றுக. மாந்தரை மதிப்பதுவே மானிடரின் பெரும் கடன்.

  • தொடங்கியவர்

1889 : சப்­ர­க­முவ மாகாணம் ஸ்தாபிக்­கப்­பட்­டது

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 04

 

கிமு 46: டைட்டஸ் லபீனஸ், ருஸ்­பீனா என்ற நகரில் இடம்­பெற்ற சமரில் ஜூலியஸ் சீசரைத் தோற்
­க­டித்தார்.

1493 : கொலம்பஸ், தான் கண்­டு­பி­டித்த புதிய உலகை (அமெ­ரிக்கக் கண்டம்) விட்டுப் புறப்­பட்டார்.

Whitehall.jpg1642 : இங்­கி­லாந்து மன்னன் முதலாம் சார்ள்ஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கைது செய்ய தனது படை­வீ­ரர்­களை அனுப்­பினார்.

1698 : லண்­டனில் அரச குடும்­பத்தின் வாசஸ்­த­ல­மாக விளங்­கிய வைட்ஹோல் மாளிகை பெரும் ­ப­குதி தீயினால் அழிந்­தது.

1717 : நெதர்­லாந்து, இங்­கி­லாந்து, பிரான்ஸ் ஆகி­யன கூட்டு ஒப்­பந்தம் ஏற்­ப­டுத்­தின.

1762 : ஸ்பெயி­னுக்கு எதி­ராக இங்­கி­லாந்து போர் பிர­க­டனம் செய்­தது.

1847 : சாமுவேல் கோல்ட் தனது முத­லா­வது சுழல் துப்­பாக்­கியை அமெ­ரிக்க அர­சுக்கு விற்றார்.

1889 : இலங்­கையில் சப்­ர­க­முவ மாகாணம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1912 : பிரித்­தா­னியக் கால­னித்­துவ நாடு­களில் சாரணர் இயக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

Burj_Khalifa-varalaru.jpg1948 : பர்மா ஐக்­கிய இராச்­சி­யத்­தி­லி­ருந்து சுதந்­திரம் பெற்­றது.

1951 : சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்­பற்­றின.

1958 : 14 வய­தான பொபி ஃபிஷர், ஐக்­கிய அமெ­ரிக்­காவின் சது­ரங்க சம்­பியன் போட்­டியில் வெற்றி பெற்றார்.

1958 : சோவியத் ஒன்­றி­யத்­தினால் விண்­வெ­ளிக்கு அனுப்­பப்­பட்ட உலகின் முத­லா­வது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்­தது.

1959 : லூனா 1 சந்­தி­ர­னுக்கு மிக அண்­மையில் சென்ற முதல் விண்­கலம் ஆகி­யது.

1990 : பாகிஸ்­தானில் சிந்து மாகா­ணத்தில் பய­ணிகள் ரயில் ஒன்றும் சரக்கு ரயில் ஒன்றும் மோதி­யதில் 300 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1998 : அல்­ஜீ­ரி­யாவில் மூன்று வெவ்வேறு நிகழ்­வு­களில் 170 பொது­மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

2004 : நாசாவின் ஸ்பிரிட் கலம் செவ்வாய் கிர­கத்தில் தரை­யி­றங்­கி­யது.

2007 : அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தின் முதல் பெண் சபா­நா­ய­க­ராக நான்சி பெலொசி தெரி­வானார்.

2010 : ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நிர்மாணிக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீபா உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

ஒரு நல்ல மருத்துவருக்கு அடிப்படை எது? நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory 

 
 

தன்னம்பிக்கை கதை

டல் அமைதியாக இருக்கும்போது யார் வேண்டுமானாலும் சுக்கானைப் பிடிக்கலாம்’ - இப்படிச் சொன்னவர், பப்ளிலியுஸ் சைரஸ் (Publilius Syrus)... கி.மு.85-43 இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அறிஞர், எழுத்தாளர். அமைதி என்பது கடலில் கப்பலைச் செலுத்துவதற்கு மட்டுமல்ல, சீரான வாழ்க்கைக்கும் அவசியம். எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையோடு இருக்கவேண்டிய, அமைதி காக்கவேண்டியதன் அவசியத்தை திருவள்ளுவர் `பொறையுடைமை’ அதிகாரத்தில் அழுத்தமாக விவரிக்கிறார். அமைதியிழத்தல், பிறருக்கல்ல, நமக்கே பல நேரங்களில் தர்மசங்கடங்களை ஏற்படுத்திவிடும்... எதிராளியை துச்சமாக நினைக்கவைக்கும், ஆத்திரப்படவைக்கும், கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளைச் சிதறச் செய்துவிடும். அந்த நிகழ்வைத் திரும்ப நினைத்துப் பார்க்கும்போது நம்மையே வெட்கப்படச் செய்யும். எந்த வேலையும் எளிதானதல்ல. ஒவ்வொன்றும் அதனதன் தன்மைக்கேற்பக் கடினமானவையே! அவற்றில் மருத்துவப் பணிக்கு முக்கியமான இடம் உண்டு. பரபரப்பான பணி... ஆனால், பதற்றம் கூடாது. இதுதான் ஒரு நல்ல மருத்துவருக்கு அடிப்படை. மிக இக்கட்டான சூழ்நிலையில் அமைதியை இழந்த ஒரு மனிதர், அமைதி காத்த ஒரு மருத்துவர் கதை அதற்கு நல்ல உதாரணம்! 

 
 

டெதஸ்கோப்

அது லண்டனில் பெயர் பெற்ற ஒரு மருத்துவமனை. அந்த டாக்டர் மருத்துவமனை பார்க்கிங் பகுதியில் தன் காரை நிறுத்திவிட்டு அவசரமாக இறங்கித் தன் அறைக்குப் போனார். ஒரு சிறுவனின் நிலை மிக மோசமாக இருக்கிறது, அவர் உடனே வந்து ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அவருக்குத் தகவல் வந்திருந்தது. அறைக்குப் போனவர், தன் உடைகளை மாற்றிக்கொண்டார். நேராக ஆபரேஷன் தியேட்டருக்குப் போனார். தியேட்டர் வாசலில், உள்ளே ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் தந்தை பரபரப்போடு காத்துக்கொண்டிருந்தார். அவர் டாக்டரைப் பார்த்ததும், அருகே விரைந்து வந்தார். “என்ன டாக்டர் இவ்வளவு லேட்டா வர்றீங்க? என் பையன் எவ்வளவு பெரிய ஆபத்தான நிலைமையில இருக்கான்னு உங்களுக்குத் தெரியாது? உங்களுக்குக் கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?’’ என்று படபடவென்று பொரிந்து தள்ளினார். 

டாக்டர் லேசாக புன்முறுவலை வரவழைத்தபடி, “என்னை மன்னிச்சிக்கங்க. நான் வெளியில இருந்தேன். தகவல் கிடைச்சதும், என்னால முடிஞ்ச அளவுக்கு வேகமாக வந்தேன். அமைதியா இருங்க. என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பா உங்க மகனுக்கு சிகிச்சை கொடுக்குறேன்.’’ 

“என்னது... அமைதியா இருக்கணுமா? உங்க மகன் இதே மாதிரி ஆபரேஷன் தியேட்டர்ல இருந்தா, நீங்க அமைதியா இருப்பீங்களா? உங்க மகன் செத்துப்போயிட்டானு வைங்க. என்ன செய்வீங்க?’’ 

மருத்துவர்கள்

டாக்டர் மறுபடியும் மென்மையாகச் சிரித்தார். “இதுக்கு என்கிட்ட பதில் இல்லை. ஆனா, பைபிள்ள இருக்குற ஒரு வசனம் நினைவுக்கு வருது. ‘மண்ணிலிருந்து வந்தேன், மண்ணுக்கே திரும்புவேன். இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக!’ அது மாதிரி, டாக்டர்களால யாரோட ஆயுளையும் அதிகரிக்க முடியாது. போங்க.. உங்க மகனுக்காக நல்லா பிரார்த்தனை பண்ணுங்க. நல்லதே நடக்கும்.’’ 

“நாம சம்பந்தப்படாத இடத்துல அட்வைஸ் பண்றது ரொம்ப ஈஸி.” முணுமுணுத்தார் அந்தச் சிறுவனின் தந்தை. அதைக் கண்டுகொள்ளாமல் டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தார். 

சில மணி நேரங்கள் ஆகின. வெளியே சிறுவனின் தந்தை பொறுமையில்லாமல், தவிப்போடு என்ன நடக்குமோ என்று காத்திருந்தார். டாக்டர் வெளியே வந்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. “ஆண்டவர் அருளால உங்க மகன் பிழைச்சுக்கிட்டான். கடவுளுக்கு நன்றி சொல்லுங்க” என்றார். பிறகு, அந்தச் சிறுவனின் தந்தை சொல்லும் பதிலைக்கூடக் கேட்க நேரம் இல்லாததுபோல, மருத்துவமனை காரிடாரில் வேகமாக நடக்க ஆரம்பித்தார். கூடவே ஒன்றும் சொன்னார்... “உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்துச்சுன்னா, என் நர்ஸ்கிட்ட கேளுங்க.’’ 

‘இந்த டாக்டருக்கு என்ன ஒரு திமிர்? ஒரு நிமிஷம் நின்னு பதில் சொல்லிட்டுப் போனாத்தான் என்னவாம்?’ என்று நினைத்தார் சிறுவனின் தந்தை. பின்னாலேயே வந்த நர்ஸ் சொன்னார்... “டாக்டர் பதிலே சொல்லாமப் போறாரேனு பார்க்குறீங்களா? அது ஒண்ணுமில்லை. நேத்து நடந்த ஒரு ஆக்ஸிடென்ட்ல அவர் மகன் இறந்துட்டான். இன்னிக்கி உங்க மகனுக்கு ஆபரேஷன் பண்ணணும்னு நாங்க கூப்பிட்டப்போகூட, அவரு கல்லறையில, அவர் மகனை அடக்கம் செய்யற காரியத்துல இருந்தார்...” 

அதற்கு மேல் நர்ஸ் சொன்ன எதுவும் அவர் காதில் விழவில்லை. அப்படியே நாற்காலியில் சரிந்து அமர்ந்துவிட்டார். அவருக்கு டாக்டர் சொன்ன பைபிள் வசனம் நினைவுக்கு வந்தது. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

குமார் சங்ககாரவுக்கு சிறப்பு விருந்து: உணவின் பெறுமதி 38 இலட்சம்!

 

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+38+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவுக்கு வழங்கப்பட்ட விருந்துபசாரம் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.

இதில் குமார் சங்ககாரவுக்கு வழங்கப்பட்ட உணவின் விலை 38 இலட்சம் ரூபாய் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

நுவரெலியாவில் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றிலேயே குமார் சங்ககாரவுக்கு அண்மையில் சிறப்பு விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் குமார் சங்ககாரவின் மனைவியும் கலந்து கொண்டிருந்தார்.

180106_1.jpg
 

இதன்போது அந்த நட்சத்திர உணவகத்தில் மாஸ்டர் ஷெஃப் விராஜ் ஜயரட்னவினால் தயாரிக்கப்பட்ட 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான இனிப்பு உணவு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

180106_11.jpg

 

180106_12.jpg

தாமரைக் கோபுரம் ஒன்றுடன் அமைக்கப்பட்ட குறித்த இனிப்பு வகையை, நால்வர் பல்லக்கில் வைத்து சுமந்து வந்துள்ளனர்.

உணவகத்தின் வளாகத்தில் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் குமார் சங்ககாரவுக்கும், அவரது மனைவிக்கும் 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான உணவு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

 

https://newuthayan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அனுஷ்காவுடன் கோலி எடுத்த கேப் டவுன் செல்ஃபி... இது இன்டர்நெட் வைரல்!

 
 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் - பாலிவுட் நட்சத்திரம் அனுஷ்கா ஷர்மாவும் திருமணம்செய்துகொண்டதுதான், தற்போது இந்திய அளவில் பேசு பொருள். அவர்கள் இருவரும் என்ன செய்தாலும் அது வைரலாக மாறிவருகிறது. திருமண போட்டோ வைரல், விராட்கோலி மும்பைக்குக் குடிபெயர்ந்தது வைரல், இருவரும் ஷாப்பிங் செய்தது வைரல், தற்போது கேப் டவுனில் இருவரும் சேர்ந்த எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரல். 

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா

 

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி, இத்தாலியில் உள்ள சொகுசு விடுதியில் நடந்தது. இதற்காகவே, இலங்கைத் தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார் கோலி. இதையடுத்து, 21-ம் தேதி டெல்லியிலும், 26-ம் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தற்போது, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, கோலி தலைமையிலான இந்திய அணி. இந்தப் பயணத்தில், கோலியுடன் அனுஷ்காவும் உடன் சென்றுள்ளார். இந்நிலையில்தான், கேப் டவுனில் ஒரு செல்ஃபி எடுத்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் கோலி. புகைப்படத்துடன், `கேப் டவுன் எப்போதுமே மிக அழகான ஓர் இடம். அது இப்போது இன்னும் அழகாக மாறியுள்ளது' என்று பதிவிட்டுள்ளார். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் பிறந்தநாள் இன்று

சர் ஐசக் நியூட்டன் இயற்பியல் மட்டுமல்லாது கணிதம், வானியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கியவர். தனது இறுதிக்காலம் வரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார் நியூட்டன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.