Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கண்டம் விட்டுக் கண்டம் வந்த பெண்கள் சேலை கட்டி கொண்டாடிய பொங்கல்

தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வெளிநாட்டினர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பெண்கள் தமிழர் பாரம்பரிய முறையில் வேட்டி சேலை அணிந்து பொங்கல் கொண்டாடினர்.அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 32 வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் கடந்த 28 ஆம் தேதி சென்னை வந்தனர்.

தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வெளிநாட்டினர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதனைத் தொடர்ந்து, பல்வேறு குழுக்களாக அவர்களில் ஆட்டோக்களில் பயணம் மேற்கொண்டனர். சென்னையை தொடர்ந்து புதுச்சேரி சென்ற அவர்கள் தொடர்ச்சியாக தஞ்சாவூர், மதுரை வழியாக இன்று தூத்துக்குடிக்கு சென்னறனர்.தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு சென்ற அவர்கள் அங்கிருந்து தூத்துக்குடி சாயர்புரத்தில் உள்ள தனியார் தோட்டத்துக்கு தங்களது ஆட்டோக்கள் மூலம் சென்றடைந்தனர். 

இவர்களுக்கு  தமிழர் பாரம்பரியப்படி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனையடுத்து, வேட்டி சேலை அணிந்து வந்த வெளிநாட்டை சேர்ந்த குழுக்களுக்கு தனித்தனியாக பொங்கல் பானைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக அவர்கள் பொங்கல் வைத்தனர். தாங்கள் செய்த பொங்கலை பூக்களால் அலங்கரித்துப் பார்வைக்கு வைத்தனர். சுவையான பொங்கல் செய்த வெளிநாட்டு குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

http://www.bbc.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒரே நாளில் 16 தடவை புத்தாண்டு கொண்டாடிய விண்வெளி வீரர்கள்!

 

ஒரே நாளில் 16 தடவை புத்தாண்டு கொண்டாடிய விண்வெளி வீரர்கள்!

விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விண் வெளி வீரர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு ரசியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த 6 வீரர்கள் 2 வாரங்களுக்கு முன்பு விண்வெளிக்கு சென்றனர். கடந்த 2 வார விண்வெளி பயணத்திற்கு பின்பு இவர்களது உடலில் ஏற்படும் மாற்றங் களை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி அவர்கள் விண் வெளியில் உடற்பயிற்சி செய்வார்கள். இதன்மூலம் விண் வெளியில் எப்படி எல்லாம் உடல் மாற்றம் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியும்.

மேலும் இந்த 6 விண்வெளி வீரர்களும் கடந்த வருடத்தின் இறுதி நாளில் (2017 டிசெம்பர் 31) இருந்து ஜனவரி 01 வரை பூமியை முன்னும் பின்னுமாக 90 நிமிடத்துக்கு ஒருமுறை சுற்றியுள்ளனர்.

இதன் காரணமாக இவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் ஏற்பட்டுள்ளது. எனவே கணக்குபடி அவர்களுக்கு 16 தடவைகள் புத்தாண்டு பிறந்துள்ளது. உலகிலேயே இதுபோன்ற சாதனையை இது வரை நிகழ்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

விவசாயம் செய்யும் ரோபோக்கள்

விவசாயம் உள்ளிட்ட மனிதர்கள் செய்யும் வேலைகளை இனி ரோபோக்கள் செய்ய உள்ளன. விவசாயத்தில் ரோபோக்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன?

  • தொடங்கியவர்
செல்லப் பிள்ளையாய் வளரும் வௌ்ளை அணில்
 

image_3f67f8b4f1.jpgஅரநாயக்க- செலவ பில்லேவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வௌ்ளை நிற அணில் குட்டியொன்று செல்லப்பிள்ளையாய் வளர்க்கப்பட்டு வருகின்றது.

 “ இந்த அணிலுக்கு “சுது” என்றே தாம் பெயர் வைத்துள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு அருகில் அணில் குட்டி விழுந்து கிடந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

 “ தமது வீட்டில் பூனை, நாய் இல்லாத காரணத்தில் வீட்டுக் கூரை மற்றும் வீட்டுக்குள்ளும் நிறைய அணில் கூடுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கீழே விழுந்த அணில் குட்டியைத் தேடி அதன் தாய் அணில் வரும் என்று காத்திருந்தோம் பல நாட்களாக அதன் தாய் வராததால் இந்த அணில் குட்டி எங்கள் செல்லப் பிராணியாக வளர்க்கிறோம். இது உணவு உண்பதில்லை என்றும் பால் மட்டுமே குடிப்பதாகவும் வீட்டு உரிமையாளர் குறிப்பிடுகின்றார்.

 

image_84f2a2c148.jpgimage_239fdb8194.jpgimage_8ed745e93e.jpg

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்
உறவுகளை மறக்கும் காலம் இது
 

image_8dc1975b33.jpgஉயிர்கள் வாழும் இல்லம் வீடு. இங்கு மனிதர்கள் மட்டும் வாழ்வதில்லை.

கிராமங்களில் ஆடு, மாடு, கோழி, பட்சிகள், பிராணிகள் என எத்தனையோ வீட்டைச் சுற்றியும் அருகே அமைந்த வீட்டு முற்றத்து மரம் செடிகளில் மிக மகிழ்ச்சியாகச் சப்தமிட்டபடி தங்கள் இருப்புகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும்.

வீடுகளில் முதியவர்கள் தங்களுக்கு மட்டும் உணவு தேடுவதில்லை. காக்கை, குருவி, ஈ, எறும்புகளுக்கும் உணவுகளை வழங்கி வருவதை நீங்கள் கண்டிருக்கலாம். பசு, ஆடு, கோழி எனப் பலவற்றுக்கும் புல், குழை, அரிசி, தானியம் என்பவற்றை அன்புடன் கொடுப்பதே மிக அழகான காட்சிதான். ஆனால், இவைகளை நாம் கிராமங்களில்த்தான் காணமுடியும்.

இல்லங்களில் எந்த நிகழ்வுக்கும் பிராணிகளைக் கவனிக்காமல் விடமாட்டார்கள். ஏழைகள் கூட, இந்த விடயத்தில் விலைவாசி குறித்துக் கவலைப்படுவதேயில்லை.

ஆனால், நகரில் ஒருவர் வீட்டுக்குச் சொல்லாமல் அறிவிப்பு இன்றிப் போக முடியாது; அநேகர் வீட்டுக்குள் இருப்பதுமில்லை. பலதரப்பட்ட கருமங்கள் அவர்களுக்குண்டு. உறவுகளை மறக்கும் காலம் இது.

  • தொடங்கியவர்

அன்பின் விலை 2 டாலர் 50 சென்ட் - நெகிழவைக்கும் சிறுவனின் கதை! #FeelGoodStory 

 
 

தன்னம்பிக்கை கதை

`ரக்கம்தான் ஞானம்’ என்று சொல்லியிருக்கிறார் ஆங்கிலக் கவிஞர் பிலிப் ஜேம்ஸ் பெய்லி (Philip James Bailey). மிகச் சாதாரணமான இந்த இரண்டெழுத்து வாசகத்தின் பொருள் மிக ஆழமானது. `போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தர், இந்த உலகின் மீது, மனிதர்கள் மீது இரக்கப்படத்தான் கற்றுக்கொண்டாரா?’ என்று கேட்டால், அப்படியும் வைத்துக்கொள்ளலாம். நாடு, மொழி, இனம், மதம் எல்லாவற்றையும் கடந்து மற்றவரை நேசிப்பது ஞானம்தானே! தன்னைப்போல் பிறரை நினைக்கிற மனோபாவம் அறிவையெல்லாம் மிஞ்சிய ஞானமே! இதுதான் அன்பு செலுத்துவதற்கு அடிப்படை. தனக்கு ஏற்பட்ட இழப்பின் வலியை உணர்ந்த ஒருவரால்தான், அதே இக்கட்டு இன்னொருவருக்கு ஏற்படும்போது அதன் தீவிரத்தை அறிய முடியும். அந்தச் சமயத்தில் பாதிக்கப்பட்டவருக்குக் கைகொடுப்பவர் கிட்டத்தட்ட கடவுள்தான். இந்த அனுபவ உண்மையைத்தான் இந்தக் கதை எடுத்துச் சொல்கிறது... 

 

நாய்குட்டிகள்

அமெரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய நகரம் அது. பரபரப்பாக வியாபாரம் நடந்துகொண்டிருக்கும் கடைவீதி... ஒருநாள் அங்கிருக்கும் கடையொன்றின் கதவில் ஒரு போர்டு தொங்கியது. அதில் இப்படி எழுதியிருந்தது...  `இங்கு நாய்க்குட்டிகள் விலைக்குக் கிடைக்கும்...’ 

செல்லப்பிராணிகளை வளர்க்க ஆசைப்படாத குழந்தைகள் உண்டா? அந்த போர்டை மாட்டிய கொஞ்ச நேரத்திலேயே அந்தப் பக்கமாக வந்த சிறுவன் ஒருவன் அதைப் பார்த்துவிட்டான். கடைக்குள் நுழைந்தான். கடைக்காரர் சிறுவனை சிரித்து வரவேற்றார். 

``நாய்க்குட்டிகள் விலைக்குக் கிடைக்கும்கிற போர்டைப் பார்த்தேன். என்ன விலையிருக்கும்னு நான் தெரிஞ்சுக்கலாமா?’’ 

``என்ன 30-லருந்து 50 டாலர் வரைக்கும் இருக்கும். அது நீ வாங்குற நாய்க்குட்டியைப் பொறுத்தது தம்பி...’’ என்றார் கடைக்காரர். 

சிறுவன் தன் பாக்கெட்டுக்குள் கையைவிட்டான். அதிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்தான். என்கிட்ட 2 டாலர் 50 சென்ட் இருக்கு. நான் அந்த நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?’’ 

``நிச்சயமா’’ என்ற கடைக்காரர், கடையின் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார். சில நிமிடங்களில் ஒரு பெண் முன்னால் வர, அவருக்குப் பின்னால் ஐந்து நாய்க்குட்டிகள் நடந்துவந்தன. அத்தனையும் கொள்ளை அழகு. புஸுபுஸுவென்ற முடியுடன், அழகான காதுகள், மிரளும் குட்டிக் கண்கள், சின்னதாக வால்... எனத் தூக்கிக் கொஞ்ச வேண்டும் போலத் தோன்றும் தோற்றம். அந்த நாய்க்குட்டிகளில் கடைசியாக வந்தது மிக நிதானமாக, மெதுவாக, நொண்டுவது மாதிரி காலை வைத்துக்கொண்டு நடந்துவந்தது. 

அந்தக் குட்டிப் பையன், கடைசியாக வந்த நாய்க்குட்டியை நோக்கித் தன் விரலை நீட்டினான். ``அந்த நாய்க்குட்டிக்கு என்ன ஆச்சு?’’ என்று கேட்டான். 

சிறுவனின் நாய்குட்டி

``அந்த நாய்க்குட்டிக்கு இடுப்புல இருக்குற ஒரு மூட்டு பிறக்கும்போதே இல்லை. ஒரு டாக்டர் செக் பண்ணிட்டு சொன்னதுக்கு அப்புறம்தான் எங்களுக்கு அது தெரிஞ்சுது. அதனாலதான் இப்படித் தாங்கித் தாங்கி நடக்குது. எப்பவுமே இதால வேகமாக மற்ற நாய்க்குட்டிங்க மாதிரி நடக்க முடியாது.’’ 

சிறுவனின் முகம் ஒருகணம் வருத்தத்தில் சுருங்கியது. ``எனக்கு இந்த நாய்க்குட்டி விலைக்கு வேணும்...’’ 

``இல்லை தம்பி. இதை விலைக்கு விக்கிறதா இல்லை. உனக்கு வேணும்னா எடுத்துட்டுப்போ. பணம் எதுவும் தர வேணாம்.’’ 

சிறுவன் முகம் இதைக் கேட்டு வாடிப்போனது. ``இதை நீங்க இலவசமா எனக்குத் தர வேணாம். மத்த நாய்க்குட்டிங்களைவிட இதுவும் எதுலயும் குறைஞ்சதில்லை. நாய்க்குட்டிகளுக்குப் பொதுவா என்ன விலை வைப்பீங்களோ, அதே மாதிரி இதுக்கும் ஒரு தொகையைச் சொல்லுங்க. இப்போ என்கிட்ட இருக்குற 2 டாலர் 50 சென்ட் பணத்தைக் குடுத்துடுறேன். அப்புறம் மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா மீதப் பணத்தையும் குடுத்துடுறேன்.’’ 

``இந்த நாய்க்குட்டியை விலை குடுத்து நீ வாங்க வேணாம் தம்பி. மத்த குட்டிகளை மாதிரி, இந்தக் குட்டியால ஓட முடியாது, குதிக்க முடியாது, உன்னோட விளையாட முடியாது.’’ 

சிறுவன் `ஒரு நிமிடம்’ என்று கடைக்காரரிடம் சைகை காட்டினான். பிறகு குனிந்து, தன் பேன்ட்டின் இடதுகால் பகுதியை மேலே சுருட்டிவிட்டான். முழங்காலுக்குக் கீழே கால் இருக்கவேண்டிய இடத்தில் ஓர் இரும்புப் பிடிமானம் பொருத்தப்பட்டிருந்தது. ``பார்த்தீங்கல்ல என் காலை... என்னாலயும் ஓட முடியாது, குதிக்க முடியாது. அதனாலதான் இந்தக் குட்டியோட நிலைமையைப் புரிஞ்சுக்கிட்ட ஒரு ஆளு இதுக்கு வேணும்னு எனக்குத் தோணுது. இப்பவாவது விலைக்குக் கொடுப்பீங்களா?’’ 

மறு வார்த்தை பேசாமல், கடைக்காரர் அந்தச் சிறுவனிடம் இருந்து 2 டாலர் 50 சென்ட் பணத்தை வாங்கிக்கொண்டார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜெர்மனியில் நாசிக் கட்சி அமைக்கப்பட்ட நாள்: 5-1-1918

 

ஜெர்மன் தொழிலாளர்களின் அமைதிக்கான சுதந்திரக் குழு (நாசிக் கட்சி) முதன் முதலாக 1918-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி அமைக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1854 - சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் பலியானார்கள். * 1896 - வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்ற

 
ஜெர்மனியில் நாசிக் கட்சி அமைக்கப்பட்ட நாள்: 5-1-1918
 
ஜெர்மன் தொழிலாளர்களின் அமைதிக்கான சுதந்திரக் குழு (நாசிக் கட்சி) முதன் முதலாக 1918-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி அமைக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1854 - சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் பலியானார்கள்.
 
* 1896 - வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.
 
* 1900 - ஐரிஷ் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.
 
* 1905 - யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.
 
* 1918 - ஜெர்மன் தொழிலாளர்களின் அமைதிக்கான சுதந்திரக் குழு (நாசிக் கட்சி) அமைக்கப்பட்டது.
 
* 1933 - கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.

* 1940 - பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.
 
* 1945 - போலந்தின் புதிய சோவியத் சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
 
* 1967 - இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
 
* 1972 - விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
 
* 1974 - பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1975 - தாஸ்மானியாவில் டாஸ்மான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

* 1976 - கம்போடியா ஜனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.
 
* 1984 - ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தை உருவாக்கத் தொடங்கினார்.
 
* 1997 - ரஷ்யப் படைகள் செச்சினியாவில் இருந்து வெளியேறின.
 
* 2000 - இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
 
* 2005 - ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங்கோள் (dwarf planet) ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
 
* 2007 - கொழும்பிலிருந்து 36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
 
 

 

 

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகின் முதல் ஒரு நாள் போட்டி: 5-1-1971

1971-ம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாக தடைப்பட்டது. போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கபட்டப்போது கூடியிருந்த பார்வையாளருக்காக 40 ஓவர்கள் (8 பந்துகள்) கொண்ட ஒரு நாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 1971-ம் ஆண்டு

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகின் முதல் ஒரு நாள் போட்டி: 5-1-1971
 
1971-ம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாக தடைப்பட்டது.

போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கபட்டப்போது கூடியிருந்த பார்வையாளருக்காக 40 ஓவர்கள் (8 பந்துகள்) கொண்ட ஒரு நாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன.

இதன்படி முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 1971-ம் ஆண்டு ஜனவரி-5ந்தேதி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் ஆஸ்திரேலியா 5 விகெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரே நாளில் விளையாட்டு முடிந்து விடுவதாலும், போட்டி அதிரடியாக அமைந்ததாலும் ரசிகர்களிடையே ஒருநாள் போட்டி பிரபலமானது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

2018-ன் பிஸி நடிகை சாயிஷா. பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம், ஆர்யாவுடன் `கஜினிகாந்த்’, விஜய் சேதுபதியுடன் `ஜூங்கா’ என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். டான்ஸில் பிரபுதேவாவுக்கே டஃப் ஃபைட் கொடுப்பதால் சாயிஷாவுக்காகவே ஸ்பெஷல் பாடல்கள் உருவாக்கப்படுகின்றனவாம். போடு தகிடதகிட...

p38a_1514706910.jpg

14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக செஸ் ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் ஆகியிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த். சவுதி அரேபியாவில் நடந்த இறுதிப்போட்டியில் பெட்டோசோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி முடிசூடியிருக்கிறார். இந்தத் தொடரின் தொடக்கத்திலேயே பழைய எதிரி மேக்னஸ் கார்ல்ஸனை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது! வந்துட்டேன்னு சொல்லு!

p38b_1514706932.jpg

யக்குநர் தனுஷ் இஸ் பேக். `ப.பாண்டி’ வெற்றிக்குப் பிறகு அடுத்த படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடிக்கவிருக்கிறார் தனுஷ். ஆனால், தயாரிப்பு மட்டும் வேறு கம்பெனி. இது சுதந்திரப்போராட்டக் காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட படமாக இருக்குமாம். அடிச்சு ஆடுங்க!

விதவிதமான போட்டோஷூட்டுகளால் அலறவிடுகிறார் அமலாபால். `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, `சின்ட்ரெல்லா’  என 2018-க்கு இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் இருக்க, புதிய படங்களில் நடிக்க அமலா தீவிர வேட்டையில் இருக்கிறார். ‘`எனக்கு நல்ல கேரக்டர் கொடுங்க. சம்பளம் பிரச்னையில்லை’’ என்பது அமலாபாலின் வாக்குறுதி! ச்சோ ச்வீட்!

``யாருமே என் குட்மார்னிங் மெசேஜுக்குப் பதில் போடுவதில்லை’’ என பிரதமர் மோடியே புலம்பியிருக்கிறார். சமீபத்தில் நடந்த உள்கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, `` `நமோ ஆப்’ வழியே தினமும் எம்.பி-க்கள் அனைவருக்கும் குட்மார்னிங் மெசேஜ் அனுப்புகிறேன். ஆனால் ஐந்தாறு பேர் தவிர யாருமே ரிப்ளை போடுவதில்லை’’ என ஃபீல் ஆகியிருக்கிறார். இதையடுத்து எம்.பி-க்கள் இப்போது தினமும் தவறாமல் குட்மார்னிங் போடத்தொடங்கியிருக்கிறார்கள்! குட் மார்னிங்ஜி

p38c_1514706956.jpg

லையாள சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷன் படம் ‘மாயாநதி.’ மதுரையில் தொடங்கி மங்களூருவில் முடியும் படம். மிக யதார்த்தமான ஒரு காதல். அதைவிட யதார்த்தமான போலீஸ் சேஸிங் என, கதை ரொமான்ஸுக்கும் த்ரில்லருக்கும் நடுவே பயணிக்கிறது. இளவரசு, ஹரீஷ் உத்தமன் எனத் தமிழ் நடிகர்கள் நடித்திருக்கும் இப்படத்தின் ஹீரோ-ஹீரோயின் டொவினோ தாமஸ்- ஐஸ்வர்யா லட்சுமி. ‘சமீபத்தில் நான் ரசித்த யதார்த்தமான காதல் சினிமா மாயாநதி!’ என சீனியர் இயக்குநர் பிரியதர்ஷன் கருத்து சொல்ல, உற்சாகத்தில் இருக்கிறார் படத்தின் இயக்குநர் ஆஷிக் அபு! டொவினோதான் மாரி 2-வில் தனுஷுக்கு வில்லன்.  ரீமேக் பண்ணுவாங்களே!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கடும் சூறாவளி, வறட்சி போன்ற பேரிடர்களை இந்த ஆண்டும் உலகம் சந்திக்குமா? சர்வதேச வானிலை பற்றி பிபிசி அலசல்

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: அழகிய சாஞ்சி

 

3CHSUJSANCHI7
3CHSUJSANCHI
3CHSUJSANCHI7
3CHSUJSANCHI

சாஞ்சி என்றதும் புத்தரின் நினைவுச் சின்னங்கள் இருக்கும் அழகிய சாஞ்சி ஸ்தூபிதான் நினைவுக்கு வரும். மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து 46 கி.மீ. தூரத்தில் இருக்கிறது சாஞ்சி நகரம். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் பெரும் பகுதி மெளரிய அரசர்களால் ஆளப்பட்டுவந்தது. மௌரிய வம்சத்தின் தலைசிறந்த அரசரான அசோகர், கலிங்கப் போருக்குப் பின் புத்த மதத்தைத் தழுவினார்.

   

புத்தரின் தத்துவங்களைப் பாதுகாக்கவும் உலகம் முழுவதும் பரப்புவதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றில் ஒன்றுதான் சாஞ்சி ஸ்தூபி. மிகப் பழமையான கல்லில் அமைக்கப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது.

அசோகரின் மனைவி தேவி, சாஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள ஊரைச் சேர்ந்தவர். குன்றுகளின் மேலுள்ள அழகான இந்த நகரத்தில் ஸ்தூபி கட்ட முடிவு செய்தார். அவரின் மேற்பார்வையில் முதல் ஸ்தூபி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது.

மௌரிய வம்சத்துக்குப் பின் வந்த குஷானர்களும் அவர்களுக்குப் பின்வந்த அரசர்களும் மேலும் பல ஸ்தூபிகளைக் கட்டினர். முதல் ஸ்தூபிக்கு மெருகூட்டப்பட்டது. ஸ்தூபியைச் சுற்றி மரவேலியும் நான்கு பக்கங்களில் தோரண நுழை வாயில்களும் அமைத்தனர். அதற்குப் பின் வந்த குப்த வம்சம் புத்த மடாலயங்களையும் விகாரங்களையும் கட்டி, சாஞ்சியை மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றினர். புத்தரின் சிலைகளும் மற்ற சிற்பங்களும் வடிக்கப்பட்டன. கி.பி.7-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டுவரை சாஞ்சி மிகவும் உன்னத நிலையிலிருந்தது. புத்த மதத்தின் தாயகமாகப் பார்க்கப்பட்டது.

3CHSUJSANCHI1
 

13-ம் நூற்றாண்டுக்குப் பிறகு சாஞ்சியின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்தது. கி.பி.1818-ல் ஜெனரல் டெய்லர் என்ற ஆங்கிலேயர் பாதி புதைந்திருந்த சாஞ்சியைக் கண்டுபிடித்தார். 1912-ல் தொல்லியல் துறையின் பொது இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் சாஞ்சியை முழுவதுமாகப் புதுப்பித்தார்.

சாஞ்சியில் நிறைய ஸ்தூபிகள் இருந்தாலும் மூன்று ஸ்தூபிகள் மிகவும் பிரபலமானவை. அசோகரால் கட்டப்பட்ட முதல் ஸ்தூபி பிரம்மாண்டமானது. 215 அடி உயரமுள்ள குன்றின மேல் அரைக்கோள வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்தூபியின் நான்கு திசைகளிலும் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிலைகளுடன் கூடிய தோரண வாயில்கள் உள்ளன. தெற்குத் தோரண வாயிலில் புத்தரின் பிறப்பு, அவர் வாழ்க்கையில் நடந்த அதிசயங்கள் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதன் அருகே ஒரே கல்லினால் ஆன 42 அடி உயர அசோகத் தூண் நிறுவப்பட்டு இருக்கிறது. உச்சியில் நான்கு திசைகளை நோக்கி நான்கு சிங்கங்கள் இருந்தன. காலப்போக்கில் தூண் உடைந்து விட்டது. உடைந்த பாகங்கள் அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கிழக்குத் தோரண வாயிலில் இளவரசர் சித்தார்த்தன் அரண்மனை வாழ்வைத் துறந்து செல்லும் காட்சியும் தாயார் மாயா கர்ப்பமுற்றிருந்தபோது கண்ட கனவு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்குத் தோரண வாயிலில் புத்தரின் ஏழு அவதாரங்களும் காணப்படுகின்றன. சாரநாத் மான் தோட்டத்தில் புத்தர் பேசிய முதல் பிரசங்கக் காட்சியும் உள்ளது.

3CHSUJSANCHI5
 

இரண்டாவது ஸ்தூபி கி.பி.150-ல் கட்டப்பட்டது. 3அடி விட்டத்தில் 22.5அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்தூபியைச் சுற்றி சிறு கைப்பிடிகள் கொண்ட சுவர் போன்ற அமைப்பு உள்ளது. அதில் பெண் தெய்வங்கள், புராணங்களில் காணப்படும் இறக்கைகளுடன் கூடிய சிங்கம், குதிரைத் தலை, மீன் தலையுடன் கூடிய மனித உருவங்களைக் காண முடிகிறது.

மூன்றாவது ஸ்தூபியைச் சுங்க வம்சத்தினர் கட்டினர். புத்தருடைய சீடர்களின் நினைவுச் சின்னங்கள் இந்த ஸ்தூபியில் உள்ளன. இந்தியாவில் காண வேண்டிய முக்கியமான இடங்களில் சாஞ்சியும் ஒன்று.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று! #OnThisDay

கிரிக்கெட்: முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 1971 ஆம் ஆண்டு இதே நாளில்தான் நடந்தது

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

twitter.com/azam_twitz நமக்குக் கொடுக்கும் ஐம்பது ரூபாயைக் கூட ஐம்பதாயிரம் ரூபாய்போல் 1_1514888779.jpgமுகபாவனை செய்து கொடுக்கும் திறமை அப்பாவிற்கு மட்டுமே உள்ளது.

twitter.com/madurai_jinna காய்ச்சல் அடிக்கும்போது எந்தச் சுவையுமே தெரியாட்டியும், மாத்திரை போடும்போது மட்டும் கரெக்டா கசக்குறது என்ன டிசைனோ?

twitter.com/taraoffcl தலீவர் குசும்புக்காரர்... கைய தாங்கிப் பிடிப்பதே தாமரைதான் எனச் சொல்லாமல் சொல்றாரு!

twitter.com/twittornewton ரஜினியின் பலம் : யாராவது “கொள்கை என்ன?”ன்னு கேட்டா, “கொள்கையா ஹா ஹா ஹா ஹா”ன்னு சிரிச்சாலே போதும். ஸ்டைலா ஆன்சர் பண்றாருல்லன்னுட்டுப் போயிடுவாங்க.

twitter.com/manithan_yes ஒரு நல்லவன், வஞ்சிக்கப்படும் பொழுது, விமர்சகனாகிறான்.  ஒரு வல்லவன், வஞ்சிக்கப்படும் பொழுது, நடிகனாகிறான்.

p104a_1514880141.jpg

twitter.com/Thaadikkaran மொபைல் மாத்திட்டேன், நம்பர் மிஸ் ஆயிருச்சு, அதான் கூப்பிட முடியல என்பதே உறவுகளை மறந்தவர்கள் சொல்லும் முதன்மைப் பொய்!

twitter.com/HAJAMYDEENNKS ரஜினி ஆக்டிவ் மோடு. கமல் சைலன்ட் மோடு. மக்கள் சுவிட்ச் ஆப் !

twitter.com/Chaintweter

நல்ல ஸ்கூல்ல ஃபிளார்னு உச்சரிக்க சொல்லித்தருவாங்க, சுமாரான ஸ்கூல்ல ஃபிளவர்னு சொல்லித்தருவாங்க...  கார்பரேட் போனபிறகு ஃப்ளாஆஆஆஆஆர்னு சொல்லுவோம்!

twitter.com/urs_venbaa

மத்தியானம் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போன கடைசித்தலைமுறை நாமதான்.

p104b_1514880160.jpg

twitter.com/mekalapugazh

சொந்தக்காரங்க கல்யாண ஆல்பம் நம்ம கையில வந்ததும் நாமிருக்கும் ஃபோட்டோவைக் கண்டுபிடிக்கும் வரைதான் ஒவ்வொரு படமாக. அதற்குப் பிறகு வேகமான ஓட்டம்தான்.

twitter.com/manipmp

மீட்டிங்கில் ஒரு முறை தலையாட்டி விட்டால் பிறகு நம்மைப் பார்த்தே பேசுவது என்ன வியாதியோ!

p104c_1514880226.jpg

twitter.com/skpkaruna

ரஜினி ரசிகர்களின் உற்சாகப் பேட்டிகள் செம சுவாரஸ்யம்!

அதுலே ஒருத்தர் சொல்றாரு! அப்போ தலைவர் கட்சி ஆரம்பிச்சிருந்தா நான் மட்டும்தான் ஓட்டு போட்டிருப்பேன்! இப்போ ஆரம்பிக்கிறதாலே என் பேரன், பேத்தியெல்லாம் ஓட்டு போடுவாங்கன்னு...

p104d_1514880247.jpg

p104e_1514880260.jpg

twitter.com/yugarajesh2

வீட்டுல பாதி நேரம் சம்சாரம் சீரியல் பார்க்குது, மீதி நேரம் பையன் கார்ட்டூன் பார்க்கிறான், நாம கொஞ்ச நேரம் செல்லைப் பார்த்திட்டிருந்தால் ‘எப்பப் பாரு செல்லையே நோண்டிகிட்டுன்னு’ விளம்பர இடைவேளையில் வந்து சம்சாரம் திட்டிட்டு போகுது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: சந்தைக்கு போணும், ஆத்தா வையும் காசு குடு!

 

 
11
10
12
   
 
2
8
9
index
7

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எண்ணூறு மீட்டர் உயர மலையில் வாழ ஆபத்தான ஏணிப் பயணம் - சீனாவில் வறுமையை ஒழிக்க அதிபரின் திட்டங்கள் உதவுமா?

 

வெறும் மூன்று ஆண்டுகளில் தீவிர வறுமை நிலையில் இருந்து நாற்பத்தி மூன்று மில்லியன் மக்களை மீட்போம் எனக் கூறி, சீன அரசு சுயமாக ஓர் அசாதாரண இலக்கை நிர்ணயித்துள்ளது.

  • தொடங்கியவர்
‘கொழுத்த செல்வம் தேட முனைகின்றனர்’
 

image_f3bf58fee3.jpgஆசைகளைத் துறக்கும் மார்க்கத்தை நோக்கிப் பயணிப்பவர்களே ஆன்மீகவாதிகள்.

ஆனால், ஆசைகளை வளர்த்துக்கொண்டு போனால் ஆன்மீகத்தின் நோக்கம் என்ன? அதன் மேன்மையை உணராமல் போதனைகள் செய்வது வேடிக்கைதான்.

ஆன்மாவை வெறும் பொருட்கள்போல, பேசி மக்களைக் குழப்புவார்கள். உள்ளத்தை வெளுக்க வழி தேடாமல், கொழுத்த செல்வம் தேட முனைகின்றனர்.

ஆன்மீக மௌன நிலைக்குள் எம்மை, நாம் உணர்த்த வழிசமைக்கின்றது. தெளிவை உள்ளத்தில் முளைவிட, இதயமும் ஆன்மாவும் ஒரே வழியில் பயணித்துச் சங்கமிக்க வேண்டும்.

இது மனித உறவு சார்ந்ததல்ல; லௌகிய வாழ்வுக்கு அப்பாற்பட்டது.

இந்தத் திவ்விய நிலைக்கான தேடல், பற்பல பிறவிகள் கடந்த மிக நீண்ட பயணத்தின்பின் பெறும் பக்திப் பரவச ஏகாந்த நிலையுமாகும்.

இந்த அதிஉன்னத தேடலுக்கான கால நீட்சி ஆன்மாவை மெருகேற்றித் தூய்மையுடன் இறை அரசாட்சிக்குள் தன்னையும் இணைத்துக் கொள்கின்றது.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 06
 

1721: பிரிட்டனில் 'சௌத் ஸீ' குமிழ் மோசடி குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.

1838: சாமுவேல் மோர்ஸ் இலத்திரனியல் டெலிகிராவ் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டார்.

1929: அன்னை திரேஸா இந்தியாவில் வறிய மக்களுக்கான தனது சேவையை ஆரம்பிப்பதற்கு கொல்கொத்தாவை சென்றடைந்தார்.

1931: தோமஸ் அல்வா எடிஸன் தனது கடைசி காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.

1950: சீன மக்கள் குடியரசை பிரிட்டன் அங்கீகரித்தது. அதற்கு பதிலடியாக சீனக் குடியரசு (தாய்வான்) பிரிட்டனுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டித்தது.

1953: முதலாவது ஆசிய சோசலிஷ மாநாடு பர்மாவின் தலைநகர் ரங்கூனில் நடைபெற்றது.

1994: அமெரிக்க ஸ்கேட்டிங் வீராங்கனை நான்ஸி கேரிங்கன், தனது போட்டியாளரினால் ஏவப்பட்ட குழுவினால் முழங்காலில் அடித்து காயப்படுத்தப்பட்டார்.

2007: இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.

2007: இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

 

உலகின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த சுவாரயஸ்மான தகவல்கள் குறித்த சிறப்பு தொகுப்பு

  • தொடங்கியவர்

மாற்றம் நிகழ்த்த வாருங்கள்!

 

 

ர்வதேச அளவில் பெண் தலைவர்கள் அதிகாரமிக்க பொறுப்பில் காணப்பட்டாலும், மிகக்குறைவான அளவிலேயே அவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஐ.நா-வில் அங்கம்வகிக்கும் 193 உறுப்பு நாடுகளில், 10 சதவிகித நாடுகளே பெண்களைத் தலைவர்களாகக்கொண்டிருக்கின்றன. உலக அளவில் மாநிலங்களையும் உள்ளடக்கி, இப்போது அதிகாரத்தில் உள்ள பெண்கள் எனக் கணக்கில்கொண்டால், 70 பேர்தான் இருக்கிறார்கள்.

2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் 146 நாடுகளில் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு செய்த ஆய்வின்படி, 56 நாடுகளில் மட்டுமே பெண்கள் அதிகாரப்பதவிகளில் இருக்கிறார்கள். அதைவிட, அவர்கள் எத்தனை காலம் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதும் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று.

தென்னாப்பிரிக்காவில் ஒரு பெண் அதிபர், 14 மணி நேரம் மட்டுமே பதவியில் இருந்தார். ஈக்வடார், மடகாஸ்கர் போன்ற நாடுகளில் இரண்டு நாள்கள் மட்டுமே பெண்கள் தலைவர்களாக இருந்துள்ளனர். கனடாவின் கிம் கேம்ப் பெல், நான்கு மாதங்களே பிரதமர் பதவி வகித்துள்ளார். அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருப்பது, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.

62p7_1514354945.jpg

13 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கிறார். இன்று உலகளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் முதலிடம் வகிக்கிறார். இவர் 12 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கிறார். லைபீரியாவின் எலன் ஜான்சன் சர்லீஃப், 11 ஆண்டுகளாக அதிபராக உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐந்தில் மூன்று நாடுகள் மட்டுமே பெண் தலைவர்களைக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றுள்ள பிரிட்டனின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண் தெரசா மே. மார்கரெட் தாட்சர் 1979 முதல் 1990 வரை பிரிட்டன் பிரதமராக இருந்தார். இவருக்குப் பிறகு தெரசா மே-தான் பிரிட்டனின் பெண் பிரதமர் ஆகியுள்ளார்.

மியான்மரில் ஆங்சான் சூசி இப்போது அதிபராக இல்லை என்றாலும், அவர்தான் இன்றும் அரசின் முதன்மை ஆலோசகர்; அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். 20 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர். மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தவர். அத்தகைய ஆங்சான் சூசியின் கொள்கைகள்,  அரசியல் மதிப்பீடுமீது   இப்போது மிகப்பெரிய கறை படிந்துள்ளது. மியான்மரில் கடந்த சில மாதங்களாகப் புத்த பிட்சுகளுக்கும் இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்கள் குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஆயுதத் தாக்குதலில் அப்பாவி இஸ்லாமியர்கள் - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை - கொல்லப்பட்டனர். உயிருக்குப் பயந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு  இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், புத்த பிட்சுக்களுக்கு ஆதரவாக அந்நாட்டு ராணுவமே இஸ்லாமியர்மீது வன்முறையை ஏவிய நிலையில், `ஆங்சான் சூசி அதைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, ரோஹிங்கியாக்களுக்கு மனிதாபிமானத்தோடு இடம்கொடுத்தார். ஆனால், அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற ஆங்சான் சூசியின் மௌனம், பலருக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு வழங்கிய கௌரவ டாக்டர் பட்டத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றது. `நோபல் பரிசை இனிமேலும் வைத்திருக்கும் தகுதி, ஆங்சான் சூசிக்கு இல்லை’ என்றார்கள் சிலர். இதுபோன்ற இக்கட்டான தருணங்களில், பெண்கள் தங்களிடம் உள்ள அதிகாரத்தை யாருக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் மிக முக்கியம்.

62p2_1513747272.jpg

வங்கதேசத்தைப் பொறுத்தவரை, இப்போது பிரதமராக உள்ள ஷேக் ஹசீனா, இதற்குமுன் கலிதா ஜியா என்று இரண்டு பெண் பிரதமர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். 1991-ம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் மாறிமாறி ஆட்சியில் இருப்பதை `Battle Of The Begums’ என்று வங்கதேசத்தினர் குறிப்பிடுகிறார்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஷேக் ஹசீனாவும் அடக்கம். இவர் உலகப் பெண் தலைவர்கள் கூட்டமைப்பிலும் உறுப்பினர். உலகளவில் உள்ள பெண் அதிபர்கள், பிரதமர்கள் குறித்து ஷேக் ஹசீனா ஒரு புத்தகமே எழுதியுள்ளார். ரோஹிங்கியா விவகாரத்தை மென்மையாகக் கையாண்டதோடு, அகதிகளாக வந்த இஸ்லாமியரைத் தடுக்காமல் வெளியுறவுக் கொள்கைமூலம் அவர்களைத் திரும்ப அனுப்புவது குறித்த ஏற்பாடுகளை முன்னெடுத்துப் பக்குவமாக இந்தப் பிரச்னையை அணுகினார்.அதேநேரத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு மியான்மர் அரசுக்குக் கடுமையான கண்டனத்தையும் ஷேக் ஹசீனா பதிவுசெய்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன்முறையாக ஹிலரி கிளின்டன் போட்டியிட்டார். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனின் மனைவியாக, பிறகு அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக உலக அரசியலில் இவரின் செயல்பாடுகள் பல ஆண்டுகள் தொடர்ந்தன. அதிபராகவும் இவர் வெள்ளை மாளிகையில் புதிய சரித்திரம் படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அவருடைய பிரபலம், கடந்தகால அரசியல் அதிகாரச் செல்வாக்கு இதற்குப் பக்கபலமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டது. இந்தக் கணிப்பும் பொய்த்துப்போகவில்லை. `அதிக செல்வாக்குள்ள தலைவர்’ என்று 30 லட்சம் பேர் ஹிலரியைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். ஆனால், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அமெரிக்க மக்கள் ட்ரம்ப்பை அதிபராக்கினார்கள். ஹிலரி மூலம் புதிய வரலாறு அமெரிக்காவில் எழுதப்படப்போகிறது என்று எதிர்பார்த்தால்... ஜனநாயகம், மனித உரிமை, பாலினச் சமத்துவம், வல்லரசு என்ற பெரும் பிம்பம்கொண்ட அமெரிக்காவில்கூட ஒரு பெண் அதிபராக முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். ஹிலரியின் தேர்தல் பிரசாரத்தில் தொலைநோக்குப் பார்வையில், அமெரிக்காவில் தேவையான மாற்றங்கள் குறித்த கொள்கை இருந்தது. சரிசமமான வரி விதிப்பு, அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்டல், பெண்களைப் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து காத்தல் என நீண்ட பட்டியலை முன்வைத்தார். ஆனால், ஹிலரியின் வாக்குறுதியை நம்ப, அமெரிக்கர்கள் தயாராக இல்லை. இங்கே `ஹிலரி’ எனக் குறிப்பிடுவது ஹிலரியின் தனிநபர் மீதான நம்பிக்கையை அல்ல; ஒட்டுமொத்தப் பெண்களின் ஆளுமை குறித்த அமெரிக்கர்களின் மதிப்பீடுதான் அது.

62p2_1513747285.jpg

ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் சமீபத்தில்தான் நான்காவது முறையாக சான்சிலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்ததாலோ என்னவோ, சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் அதீத ஆர்வம்காட்டுகிறார். சமீபத்தில் இவர் தலைமையில் ஜி-20 மாநாடு ஹேம்பர்க்கில் நடைபெற்றது. அதில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்டுள்ள பாரிஸ் ஒப்பந்தமே பிரதானம். உலக நாடுகள் அனைத்தையும் பாரிஸில் இயற்றப்பட்ட ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளவைத்து சூழலைப் பாதுகாப்பதுதான் இப்போது ஏஞ்சலா முன் உள்ள பெரும் சவால். இதில் பாதிக்கடல் தாண்டிவிட்டார். இந்த ஒப்பந்தம் நிறைவேறும்போது உலக வரலாற்றில் ஏஞ்சலா அசைக்க முடியாத நபராக அடுத்த தலைமுறையினருக்கும் இருப்பார். இந்த ஒப்பந்தத்துக்கு, முன்னர் இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பச்சைக்கொடி காட்ட, இப்போதைய அதிபர் ட்ரம்ப்போ கறுப்புக் கொடி காட்டி, பல திருத்தங்களைக் கேட்டார். ஆனால், அவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்பதால், ஹேம்பர்க் ஜி-20 மாநாட்டில் ஏஞ்சலா மெர்கல் மறுத்துவிட்டார். `அமெரிக்கா இதை ஆதரிக்கவில்லை என்றால், வருங்காலத் தலைமுறைக்கு பெரும் தவறு விளைவிக்கிறது’ எனக் குறிப்பிட்டார். ஜெர்மனியின் 20 சதவிகித மக்கள்தொகை, இடம்பெயர்ந்தவர்களை உள்ளடக்கியது. பெரும்பாலும் இஸ்லாமியர் இருக்கிறார்கள். இந்த நிலையில் தொடர்ந்து அகதிகள் வருகையை ஏஞ்சலா மெர்கல் ஊக்குவிப்பதை ட்ரம்ப் தொடங்கி ஏஞ்சலாவின் எதிர்க்கட்சியான கன்சர் வேட்டிவ் கட்சியினர் வரை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

குழந்தைகள் உரிமை மற்றும் தொடக்கக் கல்வியை உறுதிப்படுத்தியது, பாலின சமத்துவத்துக்கான முக்கியத்துவம் ஆகியவை ஏஞ்சலாவின் குறிப்பிடத்தக்க பணிகள். சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்குத் திருமணச் சட்டம் கொண்டுவந்தது வரை ஏஞ்சலாவின் சாதனைப் பட்டியல் நீள்கிறது. `பெரும் நிறுவனங்களில் உயர் பதவிகளுக்குப் பெண்களுக்கு 30 சதவிதம் இட ஒதுக்கீடு வழங்கியது, ஏஞ்சலா மெர்கலை ஜெர்மனியின் உழைக்கும் பெண்களிடம் ஏஞ்சலாகவே மாற்றியது. புதிய ஜெர்மனியை உருவாக்கியவர்களில் ஏஞ்சலாவுக்கு முதலிடம்’ என ஜெர்மனியர்கள் புகழ்வதுதான் ஏஞ்சலாவின் அரசியல் அதிகாரத்துக்குக் கிடைத்த வெற்றி.

62p4_1513747301.jpg

பிரிட்டன் பிரதமராக தெரசா மே,  2016-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற அமெரிக்காவுக்குள் நுழைய, முஸ்லிம் நாடுகள் சிலவற்றுக்குத் தடை விதித்ததை தெரசா மே கடுமையாகக் கண்டித்தார். `இது அகதிகளின் உரிமை மற்றும் பெண்களின் பாதுகாப்பை மீறிய கட்டுப்பாடு’ என விமர்சித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் `பிரெக்ஸிட்’ எனும் பெரும் சவாலை முன்னிறுத்திதான் இவரது தேர்வே நடைபெற்றது. இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து பிரெக்ஸிட் விவகாரம் பெரும் தலைவலியாக அமைந்தது. இது தொடர்பாக, பல கூட்டங்களை, கருத்தரங்கங்களை, பல ஒப்பந்தங்களை, முக்கிய முடிவுகளை எடுக்கும் இடங்களுக்கு தெரசா மே தள்ளப்பட்டார். பிரெக்ஸிட்  விவகாரத்தில் தெரசா மே தலைக்கு மேல் கத்தி எப்போதும் இருக்கிறது. இப்போது `பிரெக்ஸிட்'க்குப் பிறகு - அதாவது, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின், பிரிட்டனின் பொருளாதாரம், வளர்ச்சி மேம்பாடு தொடர்பான விஷயங்களை முடிவுசெய்வதிலும் அவர் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அதிகாரத்தில் உள்ள பெண்கள், ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டாமல் இல்லை. பிரேசிலின் அதிபர் டில்மா ரூசெல்ஃப் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி 2016-ம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகுவது அதுவே முதன்முறை. தென்கொரியாவின் அதிபராக பார்க் கியூன் ஹே, 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார். பார்க்கின் தந்தை பார்க் சங்க் ஹேவும் தென்கொரியாவின் அதிபராகப் பலமுறை இருந்தவர். இந்த அடிப்படையில் பார்க் கியூன் ஹேவை `கட்டளையிடுபவரின் மகள்’ எனக் குறிப்பிட்டனர். இந்நிலையில், 2017-ம் ஆண்டு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பார்க் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

62p5_1513747242.jpg

உலகளவில் 37 வயதுள்ள இளம் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். நியூசிலாந்துக்குப் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். `உழைப்பாளர் உரிமைகள், பாலினச் சமத் துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப் பேன்’ என நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

`ஆசியாவில்தான் பெண்கள் முதன் முதலில் அதிகாரத்துக்கு வந்தார்கள்’ என்று பெருமை பொங்க சொல்லலாம். இலங்கை அதிபராக மாவோ பண்டார நாயகே, சந்திரிகா குமாரதுங்க, இந்தியாவில் பிரதமராக இந்திரா காந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல், பாகிஸ்தான் பிரதமராக பெனாசிர் பூட்டோ ஆகியோர் உயர் பதவிகளை அலங்கரித்தார்கள். உறுதியான முடிவுகள் எடுக்கும் இரும்புப் பெண்மணியாக அறியப்பட்டார் இந்திரா; ராணுவ ஆட்சியை மாற்றி, மக்களாட்சியை பாகிஸ்தானில் மலரச் செய்தார் பெனாசிர். இருவரும் அரசியல் படுகொலைகளால் இறந்தது சோகம்.

லைபீரியாவின் அதிபர் எலன் ஜான்சன் சர்லீஃப்பை, `நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்’ என்றும் அவர்தான் தனக்கு முன்னுதாரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். `எதிர்காலம் என்பது நம்பிக்கையையும் சத்தியத்தையையும் உள்ளடக்கியது’ என்கிறார் எலன் ஜான்சன். ஏஞ்சலா மெர்கல் தன் வெற்றிக்குக் காரணமாக எப்போதும் சொல்வது, `என்னை நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டதில்லை’ என்பதுதான். இவையே, இந்தப் பெண்கள் மட்டுமல்ல... இனி உலகில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தப்போகும் பெண்களும் கொண்டிருக்க வேண்டிய அரசியலும் அதிகாரமும்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கங்குலி, தோனி, கோலியெல்லாம் கொண்டாடலாம்... ஆனா, விதை கபில் தேவ் போட்டது! #WhyKapilIsLegend #NeverMiss

 
 

கபில் தேவ் என்ற வார்த்தையை எவரேனும் தப்பித்தவறி உச்சரித்து விட்டால், அங்கிருந்து கபில் குறித்த நினைவுகள் மலரத் தொடங்கிவிடும் என்பதற்கு சென்ற வார, ட்விட்டர் ட்ரெண்டிங் ஒரு உதாரணம்... ஏனெனில், அந்தப் பெயரின்  வசீகரம் அப்படி!

கபில் தேவ்

 

கபில் தேவ், என்றதும் பழங்கதை என்று நினைத்துவிடாதீர்கள். இன்று, புதுமை, இளமை, வேகம் என ஓடிக்கொண்டிருக்கும் T-20 என்ற வடிவத்தை முதன்முதலில் இந்தியாவில், இந்தியன் கிரிக்கெட் லீக் என ஆரம்பித்து வைத்தது கபில் தேவ்தான். இன்று எல்லா உறுப்பையும் யார் யாரோ தானம் செய்கிறார்கள். ஆனால், விதை, ஹித்தேந்திரன் என்ற இளைஞனின் இதய தானமே. அதுபோலத்தான், இன்று இந்திய கிர்க்கெட் என்பது ஒரு சாம்ராஜ்யம் போல் பரந்து விரவி இருக்கிறது எனில் அதன் முதல் சக்கரவர்த்தி, கபில் தேவ் எனும் சாமன்யன் சமரன்.

கபில் தேவ் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தன் வயதை மறந்து தன்னை இளைஞனாய் பாவித்துக்கொண்டு கண்கள் விரிய, “அப்பிடியே பேக்ல ஓடிப்போய் பிடிச்சாரு பாரு, க்க்க்ளாஸ், ரிச்சட்ஸ் செத்துட்டார்” என மருகும் பெருசுகளை நீங்கள் இப்போதும் கடக்க நேரிடும். கபில் என்றால் அப்படி ஓர் வசீகரம். ஏன்?

70-கள் வாக்கில் இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்! பந்தின் சைனிங் போவதற்காக ‘சும்மா’ நாலு ஓவர் தரையில் போடுவது’ கணக்குதான் அது. அதாவது சுழல் சிங்கங்கள் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு காத்திருக்கும் வைபவம் மட்டுமே வேகப்பந்து வீச்சு என்பது.

மதன்லாலாவது திப்பிடி திப்பிடி எனத் தலை தெறிக்க ஓடிவந்து ஆஃப் ஸ்பின் போடுவார். மொஹிந்தர் அமர்நாத் எல்லாம் ஓடிவருகிறாரா, நடந்து வருகிறாரா என பேட்ஸ்மேன் மண்டைகாய்ந்து நிற்பார். அவர்தான் அப்படி என்றால் அவர் எறிந்த பந்து இந்தப் பக்கம் வருவதற்குள் ஒரு டீ சொல்லி சாப்பிட்டுவிடலாம் ரேஞ்சு. இதில் கொடுமை என்னவென்றால், மற்ற நாடுகள் கேலி செய்யுமே என்ற எண்ணத்தில் விக்கெட் கீப்பரும் அவ்வளவு தள்ளி நிற்பார் பாருங்கள். பந்து நாலைந்து முறை பிட்ச்சாகி கீப்பரை அடையும். பந்தைப் பொறுத்தவரை அது ஒரு ‘நீண்ட நெடும் பயணம்’ வகை.

கபில் தேவ்

இந்தியக் கிரிக்கெட்டின் ஆரம்பம் முதலே சுழல்பந்துதான் ஆதிக்கம். ஸ்ரீனிவாச வெங்கட்ராகவன் என்பவரின் கை மணிக்கட்டின் மூட்டே மொத்தமாய்ச் சுழலும் என்பார்கள். அதை உபயோகித்து சுழற்றோ சுழற்று என்று சுழலவிட்டுவிடுவார். பிஷன்சிங் பேடி ஸ்லோ மீடியம் என மெதுவான, மிக மெதுவான அடைமொழிகளைப் போட்டுக்கொண்ட பவுலர். இப்படியான ஒரு பிசுபிசுத்த வேகப்பந்து வீச்சுக் கட்டத்தில்தான் காலம் ஒரு பெயரை உச்சரித்தது, கபில்தேவ், என. அதன் பிறகு கபில்தேவின் காலகட்டம் என்றானது.

கர்சன் காவ்ரியும் கபில்தேவும் இரட்டைக்குழல் துப்பாக்கித் தோட்டாக்கள் போல் குனிந்து சீறத் தொடங்கியபோது உலகம் இந்தியப் பந்துவீச்சை நிமிர்ந்து பார்க்கத் தொடங்கியது. எழுபதுகளின் இறுதியில் அணியில் நுழைந்தவர், 80 களில் இந்தியர்களின் இதயத்தில் நுழைந்தார். ஆரம்பத்தில் சொன்னதுபோல் இன்றைய எல்லாவற்றின் முதன்முதல்களும் கபில்தேவ் சாத்தியப்படுத்தி போட்டுக்கொடுத்த பாதை. கருவேலம் முட்களை முறித்துக் குடைந்து பாதை செய்து கொடுத்துவிட்டுப் போன ஆதிகாலத்தின் அசல் நாயகன் கபில்தேவ். அந்தப் பாதையை கங்குலி அகலப்படுத்தினார் என்றால் தோனி விரிவுபடுத்தினார் என்றாகலாம்.

ஆனால், ஒரு சாமன்யன், பேசவே கூச்சப்படும், திறமையைத் தவிர காலணா கையில் இல்லாத, பின்தங்கிய கிராமத்து இளைஞன், திறமையும் முயற்சியும் இருந்தால் இந்திய அணியில் இடம்பெறலாம், அதற்கு தலைமையும் ஏற்கலாம், உலகமே வாயைப் பிளந்து அண்ணாந்து பார்த்த உலகக் கோப்பையையே தன் நாட்டுக்காக வாங்கித்தரலாம் என்ற நிகழ்வுகளுக்கு முன் முதல் உதாரணம் கபில்தேவ்.

கபில் தேவ்

கபில்தேவிற்கு முன்னர், அணியில் ஒருவர் பேட்ஸ்மேன் என்றால் அவர் பேட்ஸ்மேன்தான். அதாவது அந்த சார்வாள், அவரைக் கடந்து போகும் பந்தைப் பிடிக்கமாட்டார். கொஞ்ச தூரம் ஓடிச் சென்று பவுண்ட்ரி லைனுக்கு முன்னர் ஸ்டைலாக நின்று, பார்வையாளார்களிடம் இருந்து பந்தை வாங்கிக்கொண்டு போவார்கள். ஏனெனில், பேட்ஸ்மேன்கள் எதற்கு ஃபீல்டிங் செய்ய வேண்டும் எனும் எண்ணம்தான். போலவே, பவுலர்கள் அல்லது அப்படியாக சொல்லப்பட்டவர்கள், பவுலிங் முடிந்ததும் வீட்டிற்குப் போய்விடுவார்களோ என்ற நிலை. மணிந்தர் சிங் வரை, ஏதேனும் ஆட்டத்தில் வேறு வழி இல்லாமல் பேட்டிங்கிற்கு இறங்கும் நிலை வந்தால், ஏதோ உலகின் ஆகப்பெரிய பாவத்தை செய்யச் சொன்னதுபோன்ற முகபாவத்தில், பந்தை பார்த்து ஓடுவதும், குனிவதும் அழுவதும் என, நாங்கள் பந்துவீச்சாளர்கள் எங்களிடம் ஏன் மட்டையைத் தருகிறீர்கள் ரீதியில் நடப்பார்கள்.

இதை மாற்றியதும் கபில்தேவ்தான். ஆம். கபில்தேவ்தான் இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட ஆல் ரவுண்டர். கவாஸ்கர், வடேகர், குண்டப்பா விஸ்வநாத், கோபால் போஸ் என பேட்டிங் என்றாலே சூத்திரம் சார்ந்த ஒன்று, இப்படி வந்தால் அப்படித் தொடவேண்டும் என்ற ரீதியில் புத்தக அடிப்படையில் இருந்ததை போர்வீரனைப் போல் மாற்றிக்காட்டினார். “இருப்பா, கபில் வந்து ரெண்டு காட்டு காட்டுவான்” என ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள். தடவும் ஆட்கள் எப்போது அவுட் ஆவார்கள் என இந்திய ரசிகர்களே விரும்ப ஆரம்பித்தார்கள்.

கபில் தேவ்

கபில் தேவை சமரன் வீரன் எனத் தொடர்ந்து குறிப்பிடக் காரணம் இருக்கிறது. ஜிம்பாபேவுடனான போட்டியில் அவர் அடித்த 175 ரன்கள் என்பது ஏன் சாதாரணமானது அல்ல எனில், மறுமுனையில் பந்தைப் பார்த்தாலே பயந்து ஓடும் மட்டைவீரர்களை வைத்துக்கொண்டு, ஆனாலும், அசராமல் களத்தில் முன் நின்று சண்டையிடும் படைத்தலைவன் போல் அன்று நின்றதே. கபில்தேவ் அடித்த ஒரே சதம் அதுதான். ஆனால் ஒரு கேப்டன், சதம் எப்படி எப்போது அடிக்க வேண்டும் என்பதன் ஒரு சோறு பதம், அந்த ஒரு சதம்.

இந்த போர்க்குணம்தான் உலகக் கோப்பையும் முதன்முதலில் நமக்குப் பெற்றுத் தந்தது. 183 ரன்களில் ஆல் அவுட் என்றதும் மேற்கிந்திய வீரர்கள் மதியமே பார்ட்டி மூடுக்குப் போய்விட்டார்களாம். இடைவேளையில் கபில்தேவ் வீரர்களிடம் பேசியது, வெறுத்துப் போய் ஊர் திரும்ப நினைத்த வீர்ரகள் முன்னர் பாபர் நிகழ்த்திய உரை போன்று இருந்திருக்கக் கூடும் என்பார்கள். பேசியதைப் போலவே, களத்திலும் செய்து காட்டினார். விவியன் ரிச்சட்ஸ் எனும் ராட்சசன் அடித்த பந்தை பின்னோக்கி ஓடிப் போய் பிடித்த கபில்தேவ் உண்மையில் கையில் பிடித்தது உலகக் கோப்பையைத்தான். ஆம், அந்தக் கேட்சை கபில் பிடித்தது மட்டுமே கோப்பைக்கான முதன்மைக் காரணம் என்பதை கிரிக்கெட் அறிந்தோர் அறிவர்.

கபில் தேவ்

கிரிக்கெட் என்பதே பேட்ஸ்மேன்களின் கேம் என்றோர் கூற்று உண்டு. அதை உடைத்த பெருமையும் கபில்தேவையே சாரும்.
இடது கையை ஒரு கத்தி போல் மார்பில் வைத்து காற்றைக் கிழித்துக்கொண்டு ஓடும் கம்பீரம், ஸ்டெம்பின் உயரத்திற்கு தாவி பந்தை ரிலீஸ் செய்யும் நேர்த்தி. விக்கெட் எடுத்ததும் அலட்டாமல் வலது கையை உதறிச் சிரிக்கும் பாங்கு என கபில்தேவை மெள்ள ஆராதிக்கத் தொடங்கினர் ரசிகர்கள்.

இன்று ஆயிரம் கோடி லட்சம் கோடி என விளம்பரங்களில் கொழிக்கிறார்கள் வீரர்கள். இதற்கும் ஆரம்பப் புள்ளி கபில்தேவின் “பாவோலிவ் கா ஜவாப் நஹி” எனும் கபிலின் கொச்சையான ஹிந்திக் குரல்தான். இன்று எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றை போகிற போக்கில் எவரேனும் முறியடிக்கிறார்கள். ஆனால், உலகமே உற்றுப் பார்த்து கொண்டாடிய தருணம் எனில் அது கபில்தேவ் ரிச்சர்ட் ஹாட்லியின் 434 என்ற சாதனையை முறியடித்த நொடிகள்தான். கபில்தேவ் எனும் ஆளுமையின் அடர்த்தி அப்படி.

இந்திய அணிக்குள் இருந்த அத்தனை அரசியலையும் தன் சாந்தமான அணுகுமுறையால் கையாண்டு, முன்னேறினார் கபில்தேவ்.
டெட்லி காம்பினேசன் எனச் சொல்லப்படும் நிதானம், மூர்க்கம் இரண்டும் சரிவிகித்ததில் அமையப் பெற்றவர் கபில். தன்னலமற்ற, அணியின் வெற்றி என்பதை மட்டுமே இலக்காக இறுதிவரை கொண்டவர் என்பதே கபில்தேவின் சிறப்பு.

கபில் தேவ்

இந்தியப் பந்துவீச்சாளர்களாலும் பந்தை ஷார்ப்பாக ஸ்விங் செய்ய முடியும் என்று நிகழ்த்திக் காட்டியவர். எதிரணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை முதல் ஓரிரு ஓவர்களிலேயே உடைத்துவிடுபவர். கபில்தேவ் எல் பி டபுள்யூ க்ளைம் செய்தார் எனில் 99% அம்பயர் கையைத் தூக்கிவிடுவார். அவ்வளவு துல்லியம். இலக்கு நோக்கி எய்வதில் வல்லவர். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தன்னை மதிக்காக வாரியம், பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் என அனைத்தையும் புன்சிரிப்போடு எதிர்கொண்டு வாகை சூடியவர்.

பவுலிங்கின் அத்தனை சூட்சுமங்களையும் அறிந்தவர் என்றாலும் மனோஜ் பிராபகரின் ஒரு பந்தைப் பார்த்துவிட்டு உடனே அவரிடம் ஓடிச்சென்று, ‘அந்தப் பந்தை எப்படிப் போட்ட’ என ஆர்வமாய்க் கேட்டு, பழகிக் கொண்டவர். ‘மனோஜிடம் இருந்துதான் பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய கற்றுக்கொண்டேன்’  என அதைப் பதியவும் செய்தார். தன் அந்திமக் காலத்தில், தன் மீது எழுந்த அநியாயக் குற்றச் சாட்டை சுமந்து அதுகுறித்து விளக்கும்போது அவர் சிந்திய கண்ணீர், இந்திய விளையாட்டுத் துறையின் பெரும் சாபம்.

 

கபில் போன்ற வெகுளியான வெள்ளந்தி மனிதனின் வெற்றி என்பது எளிய மனிதர்களின் வெற்றி என்றே வரலாற்றில் இடம்பெறும்.
போலவே, கபில் தேவ் எனும் பெயருக்குக் கம்பீரம் என்றும் பொருள் கொள்ளப்படும்.

 

Bild könnte enthalten: 13 Personen, Personen, die lachen, Menschenmasse, Hochzeit und Innenbereich

 

Happy Birthday to one of the greatest players ever to grace the game, former Indian Cricket Team captain and leader for them in their successful 1983 ICC Cricket World Cup campaign, Kapil Dev!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

4 வயதில் கின்னஸ் சாதனை

 

 

நூலொன்றை எழுதி உலகில் இளம் எழுத்தாளராக கின்னஸ் சாதனை படைத்துள்ள சிறுவனான தனுவக்க சேரசிங்க நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தார்.

26753912_10208795437757997_1833387632_n.

தனது பெற்றோருடன் சீஷெல்ஸில் வசித்துவரும் இந்த சிறுவன்  '' Junk Food''  என்ற ஆங்கில நுலை எழுதும் போது அவருக்கு வயது நான்கு வருடங்களும் 356 நாட்களும் ஆகும் இந்நூலை அவர் 3 நாள் காலப்பகுதியில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவனின் திறமையை பாராட்டிய ஜனாதிபதிபரிசொன்றை வழங்கியதுடன் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக தனது ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.

26648150_10208795437717996_1856884337_n.

சீஷெல்ஸிலுள்ள இலங்கைத் தூதுவர் டிக்கிரி ஹேரத்குணதிலக மற்றும் சிறுவனின் பெற்றோர்களான துஷித்த சேரசிங்க மற்றும் அப்சரா சேரசிங்க ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

உலகில் மிகவும் குளிரான பிரதேசம் ரஷ்யாவில் உள்ளதாம்

 

உலகில் மிகவும் குளிரான பிரதேசம் ரஷ்யாவில் உள்ளதாம்


உலகில் மிகவும் குளிரான பிரதேசம் ரஷ்யாவில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ரஷ்யா நாட்டில் உள்ள ஒய்மயகோன் பிரதேசமே உலகிலே மிகவும் குளிர் கூடிய பிரதேசமாக காணப்படுகிறது.இப்பிரதேசத்தில் தினமும் குளிர் -71.2 டிகிரி ஜீலை மாதங்களிலே கோடை காலமாக காணப்படுகின்றது. ஆனால் கோடை காலங்களிலும் குளிர் -30 டிகிரியில் காணப்படுகின்றதாக கூறப்பட்டுள்ளது.

உலகில் மிகவும் குளிரான பிரதேசம் ரஷ்யாவில் உள்ளதாம்

இந்தப் பிரதேசத்தை பொறுத்த வரை டிசம்பர் மாதம் 3 மணித்தியாளங்கள் மட்டுமே ஒருநாளின் பகல் பொழுதாக காணப்படுகின்றது. ஆனால் கோடை காலங்களில் 21 மணித்தியாளங்கள் ஒருநாளின் பகல் பொழுதாக காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 500 ற்கு உட்பட்ட மக்கள் வசிப்பதாகவும். மக்களில் யாராவது இறந்தால் குழி தோண்டுவதற்கே 3 நாட்கள் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பிரதேச மக்களின் தொழிலாக மீன்பிடி மற்றும் மிருக வேட்டை என்பன காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

உலகில் மிகவும் குளிரான பிரதேசம் ரஷ்யாவில் உள்ளதாம்

உலகில் மிகவும் குளிரான பிரதேசம் ரஷ்யாவில் உள்ளதாம்

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

2018 புத்தாண்டு தினத்தில் உலகில் 386000 குழந்தைகள் பிறப்பு

 

2018 புத்தாண்டு தினத்தில் உலகில் 386000 குழந்தைகள் பிறப்பு


2018 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் 2018 ஆம் ஆண்டின் தொடக்க நாளான ஜனவரி முதலாம் திகதி உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 3 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக குழந்தைகள் நல அமைப்பான யுனிசெவ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலே கூடிய தொகையான குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் யுனிசெவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 69 ஆயிரத்து 70 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இதையடுத்து சீனாவில் 44 ஆயிரத்து 760 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், மேலும் நையீரியாவில் 20 ஆயிரத்து 210 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெவ் நிறுவகம் தெரிவித்துள்ளது. இதில் கூடுதலான குழந்தைகள் பின்தங்கிய கிராமங்கள் உள்ள நாடுகளிலே பிறந்துள்ளாதாகவும் யுனிசெவ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை யாவும் 2018 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி மட்டும் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

ரிதங்களின் `காதலன்’, மொழிகளை இணைக்கும் ‘இசைஞன்’ - லவ் யூ ரஹ்மான் ! #HBDRahman

 
 

இசை என்பது காற்று ஊடகத்தில் பயணிக்கும் உணர்வுள்ள ஓர் ஓசை. அதன் சுபாவம் குரலாக இருக்கலாம் கருவிகளாக இருக்கலாம், சாதாரண சப்தங்களாகவும் கூட இருக்கலாம். ரஹ்மானின் பிரம்மாண்ட ஒலிக்கோர்ப்பில் வந்த "வீரபாண்டி கோட்டையிலே" பாடலும் அதே இசையின் துளி தான், அதே படத்தின் கருவிகளே இல்லாமல் இசைத்த "ராசாத்தி"யும் அதே இசையின் மற்றொரு துளிதான்.

Rahman

 

இசைக்கு மொழியுமில்லை, தேசமுமில்லை என்பது பரவலாக்கப்பட்ட ஒரு கூற்று. ஆனால், இது எந்த அளவில் நிதர்சனம் என்பது பல திசைகளின் கேள்விகளுக்கு உட்பட்ட ஒன்று. ஏனென்றால், இசை என்பது வெறும் இசைக்கருவிகள் எழுப்பும் ஓசை என்றல்லாமல், அது மொழியைத் தூக்கி சுமக்கும் ஊடகமாகத்தான் நம் வாழ்வியலில் அமைந்திருக்கிறது. இசை மொழியோடும் கலாசாரத்தோடும், பாடப்படும் நிலத்தோடும், அனைத்து நிலையிலும் தொடர்புகொண்டிருக்கிறது. தொன்றுதொட்டு நமக்கு பழக்கப்படுத்தப்பட்ட இசை யாவுமே மொழி சார்ந்ததுதான். இன்னும் சொல்லப்போனால் நமக்கு இசையென்றால் அது சினிமா இசை. அதே சினிமாவைப் பொறுத்தவரையில் இசையென்றால் அது பாடல்கள். பின்னணி இசை எல்லாம் ராஜாவின் காலத்துக்குப் பிறகுதான் தனித்து பேசப்பட்டது. அதுவரை இசையமைப்பாளர் என்றால் பாடலின் வரிகளின் பயணத்துக்கு ட்யூன் எனப்படும் ஒரு பாதையை செயல்படுத்தி உருவம் கொடுக்கும் ஒரு படைப்பாளி. 

ரஹ்மானை பொறுத்தவரை மொழிகள் கடந்த இசையை அவர் வழங்கி வந்தாலும் ரஹ்மானின் இசையென்றால் அவை பாடல்களாகத்தான் அறியப்படுகின்றன. பின்னணி இசைகூட ஏதோ ஒரு வரியின் சாயலில் இருந்தால்தான் தேவையான காட்சியமைப்புகளில் சரியாக எடுபடுகிறது. ஆரம்ப காலங்களில் ரஹ்மான் கொடுத்த ஒலியை தமிழ்நாட்டின் இசையாக யாரும் பார்க்கவில்லை. ஏன் இந்திய இசையாகக் கூட இல்லாமல் மேற்கத்திய இசையாகவும், கம்ப்யூட்டர் தயாரிக்கும் இசையாகவும் வேறொரு தளத்தில் தள்ளிவைத்து பார்க்கப்பட்டது. அது அந்த காலகட்டத்து இசையின் பரிணாம வளர்ச்சி. ரஹ்மானும் கூட இந்தக் கூற்றை மெய்யாக்கும் விதத்தில் மேற்கத்திய பாணியில் பல பாடல்களை மேற்கத்திய இசையுக்தியில் இசையமைத்து வந்தார். 

இந்திய மொழிகளில் தமிழும் இந்தியும் தான் ரஹ்மானுக்கு அதிக பாடல்கள் தந்தவை. ரஹ்மான் நேரடியாக தமிழ் படங்களுக்கு இசையமைத்து அவை வேறுமொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படும்போது, அதே ட்யூனுக்கு எந்த மொழியில் மொழி மற்றம் செய்யப்படுகிறதோ, அதே மொழியில் வரிகள் கோக்கப்படும். வேறுமொழியிலிருந்து தமிழ் மொழிக்கு ரஹ்மான் இசை வந்தாலும் இதே கதைதான்.  இசை ரசிகனுக்கு இரண்டு வெவ்வேறு மொழியில் இருக்கும் மொழியழகை விட அந்த இசை உள்ளூர ஏற்படுத்தும் கிளர்ச்சியைப்பொறுத்தே ரசனையும் விருப்பமும் அமைகிறது. ஆனால், பாடல்களை விரும்பி கேட்பவனுக்கு அவன் முன்னே இரண்டு கோடுகள் இருக்கின்றன. ஒன்று மொழி, இரண்டாவது இசை. பல இடங்களில் மொழி நமக்கு சாதகமாக அமைந்தாலும் சில இடங்களில் இசையின் உணர்வும் குரலும் மேலோங்கி விடுகிறது. 

Rahman

ஒரே இசை, வெவ்வேறு மொழி:

ரஹ்மான் ஆரம்பகால பாடல்கள் பெரும்பாலும் தமிழ்ப்பாடல்களாக அறியப்பட்டு பின்னர் இந்திமொழிக்குச் சென்றவை. அதனால் அவையனைத்தும் தமிழ்ப்பாடல்கள்தான். இன்னொருபுறமிருந்து பார்க்கும்பொழுது இந்தியிலிருந்து தமிழுக்கு வந்தாலும் அதன் மூலம் இந்திப்பாடல்தான்.

'ரோஜா' தொடங்கி 'ஓகே கண்மணி' வரை உதாரணமாக அனைத்து மணிரத்னம் படங்களையுமே தமிழிலிருந்து இந்தி சென்ற தமிழ்பாடல்களாக எடுத்துக்கொள்ளலாம். என்னைப்பொறுத்தவரையில் இசையை மொழியா என்று கேட்டால், மொழியை சிதைக்காத இசையின் பக்கம் நான் நிற்பேன். ரோஜாவாக இருக்கட்டும் பம்பாயாக இருக்கட்டும், எல்லாமே, முதல் விருப்பமாக தமிழ்பாடல்கள்தான் இருக்கின்றன. ரோஜா, பம்பாய் போன்றவை தமிழிலிருந்து இந்தி சென்றதால் அந்த எண்ணம் வந்திருக்கலாம் என்று நினைத்தாலும் இந்தியிலிருந்து தமிழ் வந்த தில்சே (உயிரே), குரு போன்ற திரைப்படங்களும் தமிழ்ப்பாடல்களையே உயர்த்தி நிற்கவைக்கிறது. அது நிச்சயம் மொழி செய்யும் செயல்தான். "தில்சே" படத்தின் "சத்ரங்கி ரே" பாடலின் பாடல் பதிவு சயமத்தில் இந்தி பாடலாசிரியர் குலசார் மணிரத்னத்திடம் முதலில் வைரமுத்து எழுதி முடிக்கட்டும் அதை வைத்து பின்னர் நான் எழுதிக்கொள்கிறேன் என்று கேட்டிருக்கிறார்.

"என்னுயிரே" பாடலை வைரமுத்து எழுதி பதிவுசெய்த பின்னர் தான் குல்சாரின் "சத்ரங்கி ரே" பதிவுசெய்யப்பட்டது.  ஆனால், இப்படி மொழி ஓங்கி நிற்பது அனைத்து இடத்திலும் நிகழ்ந்துவிடுவதில்லை. முன்பே சொன்னது போல மொழியழகா, இசைகொடுக்கும் உணர்வா என்ற கேள்வியில் சில நேரங்களில் பாடல் கொடுக்கும் உணர்வில் மொழி சற்று பின்னுக்குத்தள்ளப்படுகிறது. அப்படியும் சில பாடல்கள் இருக்கின்றன. 

அதில் ஒன்றாக "தாள்" படத்தில் "தாள் சே தாள் மிளா" பாடலைச் சொல்லலாம். இதில் தமிழ் கொடுக்கும் உணர்வைவிட இந்தியில் ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும். அதே போல "ஸ்வதேஷ்" படத்தில் "யூன்ஹி சலா’’ (https://www.youtube.com/watch?v=LuTy9KGKNbA)" பாடல் தமிழின் "உன்னைக்கேளாய்" விட சற்று அதிகம் ஈர்த்திருந்தது. அதற்கு முக்கியகாரணம் ஒரே அலைவரிசை கொண்ட உதித் நாராயண், கைலாஷ் கேர் குரல்கள். அதனூடே இருவருக்கும் சளைக்காத வேறொரு நிறத்தில் ஹரிஹரனின் குரல். தமிழில் TL மஹாராஜனும் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். அடுத்து, 'ராவணன்' படத்தின் "காட்டுச்சிறுக்கி" பாடல். இதில் கேட்கும் இனிமையை இந்தியின் "ராஞ்சா ராஞ்சா (https://www.youtube.com/watch?v=Z3NK1mGS7ck)" ஒரு புள்ளியளவு அதிகம் தரும். ரேகா பரத்வாஜின் குரல் அதன் இசை.

தமிழில் அஜித் நடித்த "வரலாறு", "காட்பாதர்" என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாகியிருந்தது. தமிழின் "இன்னிசை அளபெடையே" பாடல் கன்னடத்தில் "சரிகம சங்கமவே https://www.youtube.com/watch?v=yj2SbBa-xI4 என்று ஸ்வேதா மோகனின் குரலில் வந்திருந்தது. தமிழ் பதிப்பு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருந்தாலும் இந்த பாடலின் இனிமை குறையாதிருக்கும்.

20p2_19102.jpg

 மிகச்சமீபத்தில் மொழியை விட இசையுணர்வு அதிகம் கிளர்ந்தெழுந்த பாடல் "காற்று வெளியிடை"யின் "வான் வருவான்". இதே பாடல் தெலுங்கு மொழியில் "செலியா" படத்தில் "மெய்மருப்பா மெருப்பா" (https://www.youtube.com/watch?v=IDgoamTeJOg) பாடலாக வந்திருந்தது. இரண்டிலுமே ஷாஷாவின் குரல் தான். ஆனால், தமிழை விட தெலுங்கில் அந்த பாடல் சொல்லவரும் இனிமையும் அமைதியும் முழுமையாகக்கிடைக்கும். தெலுங்குமொழி எப்பொழுதுமே இசைக்கான மொழி.

இப்படி சில சில எடுத்துக்காட்டை மட்டுமே சொல்லியிருந்தாலும் ரஹ்மானின் பாடல்களை பொறுத்தவரையில் தமிழ்ப்பாடல்களாக - வேற்றுமொழிப்பாடல்களா என்று வந்தால் தமிழ்மொழிக்காக முதல் விருப்பம் தமிழ்ப்பாடல்கள்தான். அப்படி மொழிமாற்றம் செய்யப்பட்ட பெரும்பாலான பாடல்களை வைரமுத்துவும் வாலியும் தான் எழுதியிருக்கிறார்கள்.

ராவணனின் தமிழ்பாடல்களை வைரமுத்துவும், ஹிந்தி பாடல்களை குல்சாரும் எழுதியிருந்தார்கள். இந்திப்பாடல்கள் சிறப்பாய் வந்திருக்கிறதா இல்லை தமிழில் சிறப்பாக வந்திருக்கிறதா என்ற ஒரு விவாதம் ஏற்பட்டு படக்குழு தமிழ்ப்பதிப்புதான் சிறந்தது என்று முடிவுசெய்திருக்கிறார்கள். இதை அறிந்துகொண்ட வைரமுத்து "இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். காரணம் தமிழ் மொழியின் அழகு. குல்சார் என்னைவிட பெருங்கவிஞர், ஆனால், இந்தியைவிட தமிழ் சிறந்த மொழி. அதனால்தான் தமிழ்ப்பதிப்பு சிறப்பாய் வந்திருக்கிறது" என்று கூறினார். "உசுரே போகுதே" பாடலில் வைரமுத்து கட்டமைத்திருக்கும் உணர்வையும் "பெஹனேதே முஜே"வின் வரிகளையும் ஒப்பீட்டுச்செய்து பார்த்தால் இதை நுட்பமாக விளங்கிக்கொள்ளலாம்.

"ஸ்வதேஷ்" படத்தின் "ஏ ஜோ தேஷ் ஹை தேரா" பாடல் ரஹ்மானின் குரலில் அத்தனை இயல்பாய் இருந்தாலும் அது வாலியின் வரியில் "எந்தன் தேசத்தின் குரல்" என்று வரும்போது அதன் அழகு வேறுவிதமாய் இருக்கிறது. "சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!" என்று ரஹ்மான குரலில் அதைக் கேட்கும்பொழுது அது மொழிமாற்றம் செய்யப்படாத பாடலாகவே எண்ணிக்கொள்ளத் தோன்றும். வாலியின் மொழி அங்கு உயர்ந்து நிற்கிறது.

என்னதான் மொழி வெவ்வேறாக இருந்தாலும் இசை அங்கும் இங்கும் எங்கும் ரஹ்மானின் உருவில் இருக்கிறது. 

 

அந்த இசையின் உருவத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

https://cinema.vikatan.com

 

Bild könnte enthalten: 1 Person, Text

  • தொடங்கியவர்

பிரமிள்... கவிதை உலகின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை நிரப்பிச் சென்ற நட்சத்திரக் காதலன்! நினைவுதினப் பகிர்வு

 
 

காலஞ்சென்ற தமிழ்க்கவி பிரமிள் எழுதிய புகழ்பெற்ற கவிதை.பிரமிள்

Chennai: 

`சிறகிலிருந்து பிரிந்த 

 

இறகு ஒன்று

காற்றின் 

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை 

எழுதிச் செல்கிறது!'

- பிரமிள்

`காவியம்' என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பிரமிளின் இந்தக் கவிதை, இன்றும் பித்தம் குறையாமல் நிற்கிறது. பிரமிள், கவிதை உலகின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை நிரப்பிச் சென்ற நட்சத்திரக் காதலன். இன்றுடன் பிரமிள் மறைந்து 21 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்க் கவிதை உலகில் அகமனம் சார்ந்து இயங்கிய கவிஞர்களில் மிக முக்கியமானவர் பிரமிள். தன் ஆழ்மனச் சிறகுகளை, அகண்டு கிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் ஊடாக அவிழ்த்துவிட்டவர். தன் மனம் நுகர்ந்த இந்தப் பேரண்டத்தின் சாரத்தை தன் கவிதைகளில் பதியவைத்தவர். படைப்பாளி, தன் படைப்பின் வழியேதான் இந்தக் கானகத்தில் உள்ள உயிர்களோடு உரையாடுவான்.

பிரமிள் நமக்காக விட்டுச்சென்ற சில கவிதைகளில், பல்லியைப் பற்றிய கவிதை மிகப் பிரபலம். 

பல்லி

`இறக்கத் துடிக்கும் வாலா?

உயிரோடு மீண்ட உடலா?'

பிரமிள், இலங்கையில் உள்ள திரிகோணமலைப் பகுதியில் பிறந்தவர். 1939-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி பிறந்த இவரின் இயற்பெயர் தருமு.சிவராமு. பல்வேறு புனைபெயர்களில் கவிதை, விமர்சனம் எழுதிவந்தார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நடத்திவந்த `எழுத்து' பத்திரிகையில் தன் 20-வது வயதிலேயே எழுதத் தொடங்கினார். சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன் உள்ளிட்டோரால் பாராட்டு பெற்றவர்.

``பிரமிளினுடைய `கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்' என்ற கட்டுரை மிகவும் கவனத்துக்குரிய ஒரு படைப்பு. ஆங்கிலத் தூதரகத்துக்குச் சென்று ஆங்கில நூல்கள் வாசிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தவர். ரெங்கநாதன் தெருவில் மா.அரங்கநாதன் நடத்திவந்த `முன்றில்' புத்தகக் கடைக்கு தினமும் மாலையில் செல்வார். அப்போது அங்கு கூடும் இளம் எழுத்தாளர்கள் அனைவருடனும் இலக்கியக் கூட்டம் நடைபெறும்'' என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியிருந்தார். தமிழ்க் கவிதை உலகின் முன்னோடியாக அடையாளப்படுத்தப்படும் பிரமிள், நல்ல ஓவியரும்கூட. தன் மனச்சித்திரங்களுக்குக் கவிதை வடிவம் கொடுத்த பிரமிள், மனதின் நுட்பமான எண்ணங்களுக்குத் தன் கோடுகளின் மூலம் உயிர்கொடுத்தவர். இவரது ஓவியங்கள் அட்டைப்படங்களாக வெளிவந்துள்ளன. ஓவியத்தைத் தாண்டி களிமண் சிற்பங்கள் செய்வதிலும் ஆர்வம்கொண்டவர். கலை சார்ந்த வாழ்விலேயே மூழ்கிக்கிடந்த பிரமிள், கவிதை, சிறுகதை, நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது `நட்க்ஷத்திரா' நாடகம் அந்தக் காலகட்டத்தில் மிகப் பிரபலம்.

பிரமிள்

வண்ணத்துப்பூச்சியும் கடலும்

`சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன் குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப்பூச்சி.

வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.'

அகவயம் சார்ந்த படிமக் கவிதைகள் பலவற்றை எழுதிய பிரமிள், 'படிமக் கவிஞர்', `ஆன்மி கவிஞர்' என அழைக்கப்பட்டார்.

`கருகித்தான் விறகு

தீயாகும்

அதிராத தந்தி
இசைக்குமா?

ஆனாலும்
அதிர்கிற தந்தியில்
தூசி குந்தாது.

கொசு 
நெருப்பில் மொய்க்காது'

 

இந்தக் கவிதை, சோர்ந்து கிடக்கிற மனித மனத்தின் சரடுகளில் தன்னம்பிக்கை முடிச்சுபோடும்விதமாக உணரப்படுகிறது. `நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடி' என அழைக்கப்படும் பிரமிள், இலங்கையில் பிறந்திருந்தாலும் தனது படைப்புகள் முழுவதையும் தமிழகத்திலிருந்துதான் வழங்கினார். தமிழகத்தின் இன்றைய முக்கியப் படைப்பாளிகள் பலரும் பிரமிள் மீதான தங்கள் அன்பையும், பிரமிளின் படைப்புகள் தங்களுக்குள் ஏற்படுத்திய உந்துசக்தியைக் குறித்தும் தெரிவித்துள்ளனர். ஒரு படைப்பாளி, தன் படைப்பின் வழியே அடுத்த தலைமுறையினரை உருவாக்கிச் செல்வது காலத்தின் தேவை. அதைச் செவ்வனே செய்த பிரமிளை நினைவுகூருவோம். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

போட்டோ செய்திகள்

புத்துணர்வு !
1 / 12
74335_ARL_2721.JPG
புத்துணர்வு முகாமிற்கு வந்த கோவில் யானைக்கு உணவு அளிக்கப்பட்டது.
 
2 / 12
74324_ARL_2757.JPG
நட்பே நட்பே ...: முகாமிற்கு வந்த   சங்கரன்கோவில் கோமதி மற்றும்  மலை கோட்டை லட்சுமியும் நீண்ட நாள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தது.
 
3 / 12
74325_ARL_2702.JPG
முகாமிற்கு வந்த யானை பாகன்கள் யானையுடன் செல்பி எடுத்தனர்.
 
4 / 12
74320_ARL_2876.JPG
மண்ணை வாரி இறைத்துக் கொள்ளும் புத்துனர்விற்கு வந்த   கும்பகோணம் கோவில் யானை பூமா.
 
5 / 12
74326_ARL_2670.JPG
புத்துணர்வு முகாமிற்கு வந்த கோவில் யானைகளுக்கு அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., க்கள் பழங்கள் கொடுத்தனர்.
 
6 / 12
74269_ARL_2488.JPG
யானைகளை மகிழ்விக்க கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இங்குபல பகுதி யானைகளின் உற்சாக காட்சிகள்.
 
7 / 12
74271_ARL_2411.JPG
போட்டோ செய்திகள் : புத்துணர்வு !
 
8 / 12
74263_ARL_2238.JPG
போட்டோ செய்திகள் : புத்துணர்வு !
 
9 / 12
74266_ARL_2511.JPG
போட்டோ செய்திகள் : புத்துணர்வு !
 
10 / 12
74264_ARL_2322.JPG
போட்டோ செய்திகள் : புத்துணர்வு !
 
11 / 12
74261_ARL_2318.JPG
போட்டோ செய்திகள் : புத்துணர்வு !
 
12 / 12
ELARGE_20180104134229728720.jpeg
யானைகளை மகிழ்விக்க கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இங்குபல பகுதி யானைகளின் உற்சாக காட்சிகள். மலைக்கோட்டை லட்சுமி ஸ்ரீரங்கம் ஆண்டாள் திருவானைக்காவல் அகிலா ஒன்றிணைந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.