Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
உழைப்பவனுக்கு நாம் அளிக்கும் கௌரவம்?

image_2f190612ad.jpgநன்றாக உழைப்பவனுக்கு தேகம் மட்டும் வலுவடையாது;

அவனது எண்ணங்கள், செய்கருமங்கள் என அனைத்துமே அவனது ஆளுமையை மெருகேற்றும்.

நான் எதனையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன்.

 பிறரை நம்பிக்கையேந்துபவன் அல்லன்.

எவருக்கும் அடிபணியாத சுதந்திர வாசி.

என்னையும் என் குடும்பத்தையும் என்னைச் சார்ந்தவர்களையும் ஆதரிக்கும் மனத்திண்மையுண்டு.

எனது பலம் என்னாலே உருவானது.

நம்பிக்கை சுயமரியாதை எனக்கு நிரம்பவே உண்டு.

உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவனின் தீர்க்கமான உரை இது.

ஆனால், உழைக்காமல் சுரண்டி வாழும் ஒருவன் என்னதான் வாய்ப்பந்தல் போட்டாலும் சமூகம் அவனை எள்ளி நகையாடும்.

உழைப்பவனுக்கு நாம் அளிக்கும் கௌரவம், அவன் செயலுக்கும் சுயத்துக்குமான அன்பளிப்புத்தான். 

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது (ஜனவரி 7, 1841)

 

ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841 ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் அமெரிக்க மிஷன் மூலம் வெளியிடப்பட்டது. இப்பத்திரிகை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு இருமொழிப்பத்திரிகையாகவே வெளிவந்தது.

 
யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது (ஜனவரி 7, 1841)
 
ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் அமெரிக்க மிஷன் மூலம் வெளியிடப்பட்டது. இப்பத்திரிகை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒருமுறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது.

இந்த பத்திரிகையில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச் செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும், புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதன் முதல் ஆசிரியர்களாக ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர். இதில் எழுதப்பட்ட ஆசிரியத் தலையங்கங்கள் பலவும் ஹென்றி மார்ட்டினாலேயே எழுதப்பட்டதாக தெரிகிறது. பஞ்சதந்திர கதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இப்பத்திரிகையில் வெளியிட்டார்.

இதற்கு முன்னர் இலங்கையில் தொடங்கப்பட்ட பத்திரிகைகள் அனைத்துக்கும் ஆங்கிலேயரே ஆசிரியர்களாக இருந்து வந்தனர். இதனால் இலங்கையரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை என்ற பெயரும் உதயதாரகைக்கே உரியது. கரோல் விசுவநாத பிள்ளை, ஆணல்ட் சதாசிவம் பிள்ளை ஆகியோரும் உதயதாரகையில் ஆசிரியராக பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com

 

 

ஸ்பெயின் விமானம் விழுந்து நொறுங்கியதில் 104 பேர் பலியாயினர் (ஜன.7, 1972)

1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்து சென்ற ஸ்பானிய விமானம் ஒன்று திடீர் கோளாறால் கீழே விபந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 104 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 
 
ஸ்பெயின் விமானம் விழுந்து நொறுங்கியதில் 104 பேர் பலியாயினர் (ஜன.7, 1972)
 
1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்து சென்ற ஸ்பானிய விமானம் ஒன்று திடீர் கோளாறால் கீழே விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 104 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இதேநாளில் நடந்த பிற நிகழ்வுகள்-

• 1558 - காலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்ஸ் கைப்பற்றியது.
• 1608 - வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.
• 1610 - கலிலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் நான்கு இயற்கை செய்மதிகளைக் கண்டறிந்தார்.
• 1782 - அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
• 1789 - ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
• 1894 - வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
• 1927 - அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.
• 1942 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் பட்டான் குடா மீதான தாக்குதல் ஆரம்பமானது.
• 1953 - அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா நைட்ரஜன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்தார்.
• 1959 - பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
• 1968 - நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
• 1990 - பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
• 2006 - திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.
  • தொடங்கியவர்

2017-ன் சிறந்த சொல்!

 

 
shutterstock329796578

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த சொல்லாக முன்னணி ஆங்கில அகராதிகளால் ஒரு சொல் கடந்த சுமார் 10 ஆண்டுகளாகத் தெரிவுசெய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2016-ன் சிறந்த சொற்களாக முறையே ‘போஸ்ட்-ட்ரூத்’ (ஆக்ஸ்போர்டு அகராதி), ‘பிரெக்ஸிட்’ (காலின்ஸ் அகராதி), சர்ரியல் (மெரியம் வெப்ஸ்டர் அகராதி) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ‘போஸ்ட்-ட்ரூத்’ எனும் வார்த்தைக்கு இணையாக, தமிழில் ‘உண்மை கடந்த’ எனும் வார்த்தையை ‘தி இந்து’ நாளிதழ் கடந்த ஆண்டு உருவாக்கியது. 2013-ன் சிறந்த சொல்லாக ‘செல்ஃபி’ ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

2017-ன் சிறந்த சொற்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை: ‘யூத்க்வேக்’ (youthquake) - ஆக்ஸ்போர்டு அகராதி, ‘ஃபேக் நியூஸ்’ (fake news) -காலின்ஸ் அகராதி, ‘ஃபெமினிசம்’ (feminism) -மெரியம் வெப்ஸ்டர் அகராதி. இந்தச் சொற்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களையும் அந்த அகராதிகள் விவாதிக்கின்றன.

 

ஆக்ஸ்போர்டு அகராதி

2004 முதல் அந்தந்த ஆண்டின் சிறந்த சொல்லாக, பண்பாட்டு முக்கியத்துவம் பெறும் வகையில் அமைகின்ற, ஒரு சொல்லைத் தெரிவுசெய்கிறது ஆக்ஸ்போர்டு அகராதி. 2017-ல் பண்பாடு, மனநிலை, முன்முடிபு போன்றவற்றை எதிரொலிக்கும் விதமாக ஆக்ஸ்போர்டு அகராதி கருதிய சொல் ‘யூத்க்வேக்’ என்பதாகும். இந்தச் சொல்லின் பெயர்ச்சொல் ‘இளைஞர்களின் நடவடிக்கைகளாலோ தாக்கத்தாலோ வெளிப்படுகின்ற ஒரு குறிப்பிடத்தக்க பண்பாட்டு, அரசியல் அல்லது சமூக மாற்றம்’ என்ற பொருளைக் கொண்டு அமைகின்றது. 2016-ல் தெரிவுசெய்யப்பட்ட சொல்லுடன் ஒப்புநோக்கும்போது 2017-ன் தெரிவுசெய்யப்பட்ட ‘யூத்க்வேக்’ என்ற சொல் ஐந்து மடங்கு அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது.

பிரிட்டனில் ஜூன் 2017-ல் தேர்தல் உச்சகட்டத்தில் இருந்தபோது ‘யூத்க்வேக்’ சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வாக்களித்ததன் காரணமாக தொழிலாளர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. இளைஞர்களின் அந்த எழுச்சியான ‘யூத்க்வேக்’கே இதற்குக் காரணம் என்பதை உணர்த்தியது. 2017 செப்டம்பரில் ரஷ்ய அரசியல்வாதியான நிகிடா இசாவ் தொலைக்காட்சியில் டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்வதாக மிரட்டியபோது, இச்சொல்லின் பயன்பாடு சூடுபிடித்தது.

 

செப்டம்பர் 2017-ல் இச்சொல் இரண்டாவது முறையாக அதிகபட்சமாகப் பயன்படுத்தப்பட்டதை நியூசிலாந்தில் உணர முடிந்தது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் அரசியலில் ஆர்வம் காட்டினர். அதனை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டனர்.

‘யூத்க்வேக்’ சொல் இதற்கு முன்னரே பயன்பாட்டில் உள்ளது. உலகம் முழுவதும் பிரிட்டிஷ் இளைஞர்கள் பேஷனையும் இசையையும் மாற்றிக்கொண்டு வருவதைக் குறிக்கும் வகையில் 1960-களில் ‘வோக்’ இதழின் ஆசிரியர் டயானா ப்ரீலேண்ட் இந்தச் சொல்லை முதன்முதலாக உருவாக்கினார். 1965-ல் போருக்கான பிந்தைய மாற்றத்தின்போது ‘வோக்’ ஆசிரியர் அவ்வாண்டை ‘யூத்க்வேக்’ என்று குறிப்பிட்டு, ஜனவரி மாதம் வெளியான தலையங்கத்தில், “அதிகம் கனவு காண்பவர்கள். அதிகம் செயல்பாட்டாளர்கள். இதோ இங்கே. இப்போதே. யூத்க்வேக் 1965” என்று எழுதியிருந்தார்.

2017-ல் பல சொற்கள் விவாதிக்கப்பட்டாலும் ஒன்பது சொற்களே இறுதிச்சுற்றில் இடம்பெற்றதாகவும், இறுதியில், அவற்றில் ‘யூத்க்வேக்’ என்ற சொல் இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகத் தெரிவுசெய்யப்பட்டதாகவும், ஆக்ஸ்போர்டு அகராதியினர் தெரிவித்துள்ளனர். பொதுவாக, இவ்வாறாகப் புதிய சொல் தெரிவுசெய்யப்படும்போது, பின்னர் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்படும். ஆனால் ‘யூத்க்வேக்’ என்ற சொல் முன்னரே அந்த அகராதியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

காலின்ஸ் அகராதி

2017-ன் பிரபலமான சொல்லாக ‘ஃபேக் நியூஸ்’ என்பதை காலின்ஸ் அகராதி தெரிவுசெய்துள்ளது. 2017-ல் இந்தச் சொல்லின் பயன்பாடு 365% அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இச்சொல் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. செய்திகளைத் தருவதுபோலவே பொய்யான தகவல்களைத் தருவது ‘ஃபேக் நியூஸ்’ என்பதாகும். அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள காலின்ஸ் அகராதியில் ‘ ஃபேக் நியூஸ்’ என்ற சொல்லும், அதற்கான விளக்கமும் இடம்பெறும் என்று காலின்ஸ் அகராதியினர் தெரிவித் துள்ளனர்.

 

மெரியம் வெப்ஸ்டர் அகராதி

2003 முதல் மெரியம் வெப்ஸ்டர் அகராதி ஆண்டின் சிறந்த சொல்லாக ஒரு சொல்லைத் தெரிவுசெய்கிறது. இந்த ஆண்டு ‘ஃபெமினிசம்’ (Feminism) என்ற சொல்லைத் தெரிவுசெய்துள்ளது. 2017-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் இது. பல நிகழ்வுகள் இத்துடன் தொடர்புடையனவாக உள்ளன. பலர் இச்சொல்லை அதிகம் விரும்புகின்றனர். ஜனவரி 2017-ல் வாஷிங்டனில் நடைபெற்ற மகளிர் அணிவகுப்பு செய்திகளைத் தொடர்ந்து இச்சொல் பிரபலமானது. இதுதொடர்பான அணிவகுப்புகள் அமெரிக்காவிலும் அணிவகுப்புகள் உலகளவிலும் நடத்தப்பட்டபோது இச்சொல் பிரபலமானது. ஏற்பட்டாளர்களும், கலந்துகொண்டோரும் பெண்ணியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததைப் பற்றியும், பெண்ணியம் என்பதானது அந்த அணிவகுப்பில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் தொடர் விவாதங்கள் நடைபெற்றன. ‘மீ டூ (#MeToo movement)’ என்ற இயக்கம் விறுவிறுப்பாகக் காணப்படும் இந்த ஆண்டின் சிறந்த சொல்லாக ‘ஃபெமினிசம்’ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அகராதியும் தத்தம் நிலைப்படி ஒரு சொல்லைப் புதிய சொல்லாகத் தேர்ந்தெடுத்து, அதற்கான காரணங்களை முன்வைக்கின்றன. அரசியல், சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளின் அடிப்படையிலும், பயன்பாட்டு நிலையிலும் இவ்வாறாக சொற்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் ‘யூத்க்வேக்’ மற்றும் ‘ஃபேக் நியூஸ்’ அந்தந்த இடத்தைச் சார்ந்துள்ள நிலையிலும் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையிலும் அமைகின்றன. ஆனால் ‘ஃபெமினிசம்’ என்பது பொதுவில் அமைந்துள்ளதைக் காண முடிகிறது. ‘டைம்’ இதழ் தன் முகப்பட்டையில் இந்த ஆண்டு சிறந்த நபராக ‘மீ டூ’ இயக்கம் இடம்பெற்று சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த மூன்று அகராதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சொற்களில் ஃபெமினிசம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்று கொள்ளலாம்.

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் செப்டம்பர் 2017 பதிப்பில் தமிழ்ச் சொற்களான அப்பா, அண்ணா உள்ளிட்ட சொற்களுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளின் 70 சொற்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வகராதியில் சேர்க்கப்பட்டுள்ள இந்த 70 சொற்களும் இந்திய வரலாற்றினை மட்டுமின்றி, இந்தியாவில் ஆங்கில மொழியில் பல வகையான பண்பாட்டு, மொழியியல் தாக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன என்றும், அவை இந்தியாவில் ஆங்கில மொழியை வடிவமைக்கவும் மாற்றவும் உதவுகின்றன என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

அந்தந்த ஆண்டின் சிறந்த தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க கல்வி நிலையங்களோ, தமிழ் ஊடகமோ ஒரு முயற்சியினை மேற்கொண்டால், அந்த ஆண்டில் தமிழ்நாட்டின் சமூக, அரசியல், பண்பாட்டு நிலையில் அந்தச் சொல் மூலமாக ஏற்படுத்திய தாக்கத்தினை அறியவும், ஒரு சுய மதிப்பீடு செய்துகொள்ளவும் உதவியாக அமையும்!

- பா. ஜம்புலிங்கம்,

முனைவர், உதவிப் பதிவாளர் (ஓய்வு),

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கோப்ப்பால், கன்னடத்து பைங்கிளி... காலத்தின் நாயகி சரோஜா தேவி #HBDSarojaDevi

 
 

இன்றைய 20 வயதில் இருக்கும் தலைமுறைகூட இந்த சீனியர் நடிகையை மறக்கவில்லை என்பதற்கு, 'கோப்ப்பால்' என்கிற விளி ஒன்றே உதாரணம். வயது 75 ஆகிவிட்டாலும் இன்னமும் அதே கிளிக் கொஞ்சும் தமிழ்; அதே அபிநயங்கள்... யாரென்று கண்டுபிடித்துவிட்டீர்களா? யெஸ், கன்னடத்துப் பைங்கிளி 'சரோஜாதேவி'. அவருக்கு இன்று (7-1-18) பிறந்த நாள். இவரைப் பற்றி கொஞ்சும்... ஸாரி, கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? 

தேவி

 

1960-களில் தமிழ்த் திரையுலகமே கொண்டாடிய சரோஜாதேவி பிறந்தபோது என்ன நடந்தது தெரியுமா? 

பெங்களூருவைச் சேர்ந்த பைரப்பா - ருத்தரம்மா தம்பதிக்கு நான்காவது மகளாகப் பிறந்தவர், சரோஜாதேவி. ஏற்கெனவே மூன்று பெண் பிள்ளைகள் இருக்க, நான்காவதாக பையன் பிறப்பான் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். பிறந்தது, நம்ம அபிநய சரஸ்வதி. 

பின்னாளில் இதைப் பற்றி சொல்லும்போது, ''நானும் பெண்ணாகப் பிறந்துவிட்டதால் என் தாத்தாவுக்கு பயங்கர கோபம். 'யாருக்கு வேண்டும் இந்தச் சனியன்?' என்று முணுமுணுப்பாராம். நான் தவழ்கிற வயதில் இருந்தபோது எனக்கு முடக்குவாதம் வந்துவிட்டதாம். என் அம்மா எனக்காக விரதம் இருந்த சமயத்திலும், 'இது செத்தா சாகட்டுமே' என்பாராம் தாத்தா. ஆனால், நான் வளர்ந்து பெரியவளானபோது என்னை அதிகமாக ஆசீர்வதித்தவர் என் தாத்தா'' என்று குறிப்பிட்டுள்ளார் சரோஜாதேவி. 

கேர்ள்

முறைப்படி பரதம் தெரியாவிட்டாலும், முகபாவனைகளிலும் அங்க அசைவுகளிலும் பரத முத்திரைகளை ஜஸ்ட் லைக் தட் காட்டக்கூடியவர் சரோஜாதேவி. பள்ளியில் படித்தபோது, இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இந்திப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த கன்னட திரையுலக ஜாம்பவான் ஹொன்னப்ப பாகவதர், சரோஜாவின் குரலில் அசந்துபோனார். தன்னுடைய படத்தில் பின்னணிப் பாடுவதற்கு அழைத்துள்ளார். மகிழ்வுடன் பாடல் ஒத்திகைக்காகச் சென்றவரின் தோற்றப் பொலிவைப் பார்த்தார்கள். நடிகை சரோஜாதேவி ஆனார். 

இந்தக் கன்னடத்து பைங்கிளியை, கேமரா வழியாகப் பார்த்த அன்றைய நடிகர்கள், 'ஒரு பக்கம் பார்த்தால் பத்மினி; மறுபக்கம் பார்த்தால் வைஜெயந்தி மாலா' என்று கொண்டாடினர். அப்பேர்ப்பட்ட அழகுகொண்டவர், தன் கெரியரின் ஆரம்பத்தில், 'தங்கமலை ரகசியம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். சிம்ரன் நடித்த 'ஜோடி' படத்தில் த்ரிஷா தலைகாட்டியதுபோல, 'பார்த்திபன் கனவு' என்ற படத்தில் கதாநாயகி வைஜெயந்தி மாலாவுக்குத் தோழியாகத் தலைகாட்டியிருக்கிறார் சரோஜாதேவி. 

'நாடோடி மன்னன்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியை நடிக்கவைக்கும் பேச்சு எழுந்ததும், 'சிறு வேடங்களில் நடனமாடும் பெண், எம்.ஜி.ஆருக்கு ஜோடியா?' என்று பல எதிர்ப்புகள் தோன்றியிருக்கின்றன. சரோஜாதேவிக்கு மேக்கப் மற்றும் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்தது. யோசித்தபடி உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆரிடம் பக்கத்தில் இருந்த சிலர், 'அந்தப் பெண் காலை தாங்கித் தாங்கி நடக்கிறாள். கதாநாயகி வேடத்துக்குச் சரிப்பட்டு வருமா?' என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு எம்.ஜி.ஆர், 'அந்த நடையும் அழகாகத்தான் இருக்கிறது' என்று குறை சொன்னவர்களின் வாயை அடைத்திருக்கிறார். இதன்பிறகு எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார் இந்த அபிநய சரஸ்வதி.

எம்.ஜி.

ஜெமினி கணேசனுடன் 'கல்யாண பரிசு' படத்தில் நடிக்கும்போது, சரோஜாதேவிக்கு சுத்தமாகத் தமிழ் தெரியாது. ஒரு ரூபாயை, 'வரு ரூபா' என்று உச்சரித்து, பல டேக் வாங்கி டைரக்டர் ஶ்ரீதரை டென்ஷனாக்கி இருக்கிறார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, ஜெமினி கணேசனே வசனங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். இதனால், தான் பேசவேண்டிய வசனங்களை மறந்துவிடுவாராம் ஜெமினி.

பரதநாட்டியம் தெரியாது; நாடகத்தில் நடித்த அனுபவம் கிடையாது; கவர்ச்சி காட்டவே மாட்டார் என வெள்ளித்திரையில் ஜொலிப்பதற்கு தேவையான பல விஷயங்கள் சரோஜாதேவியிடம் இல்லாதபோதும், தன் உழைப்பாலும் நளினத்தாலும் மட்டுமே ஜெயித்தவர் இந்தக் கன்னடத்து பைங்கிளி. 

 

ஹேப்பி பர்த்டே கன்னடத்து பைங்கிளி!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்...: பிபிசி தமிழ் நேயர்களின் உற்சாக புகைப்படங்கள் #

ஷிமோகாவில் ஹோலி கொண்டாட்டம் - சுஜாதா கமலா

ஷிமோகாவில் ஹோலி கொண்டாட்டம் - சுஜாதா ஆச்சிமுத்து

மைலாப்பூர் திருவிழாவில் 'இசை' சிறுவர்கள் - மாணிக்கவாசகம், சென்னை

மைலாப்பூர் திருவிழாவில் 'இசை' சிறுவர்கள் - மாணிக்கவாசகம், சென்னை

கோவை தடாகத்தில் பாரம்பரிய நடனமாடும் பெண்கள் - முகமது இர்ஷாத், கோவை

கோவை தடாகத்தில் பாரம்பரிய நடனமாடும் பெண்கள் - முகமது இர்ஷாத், கோவை

தீபாவளி கொண்டாட்டம் - அரவிந்த் ரெங்கராஜ்

தீபாவளி கொண்டாட்டம் - அரவிந்த் ரெங்கராஜ், திருச்சி

சின்னாளப்பட்டி டிரம்ஸ் குழுவினருடன் சியர் கேர்ள்ஸ் - நத்தம்.எஸ்.முத்துராமலிங்கம்

சின்னாளப்பட்டி டிரம்ஸ் குழுவினருடன் சியர் கேர்ள்ஸ் - நத்தம்.எஸ்.முத்துராமலிங்கம்

ஆத்தூரில் திருவிழா கொண்டாட்டம் - பா. இராம் குமார், திண்டுக்கல்

ஆத்தூரில் திருவிழா கொண்டாட்டம் - பா. இராம் குமார், திண்டுக்கல்

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் - செல்வ விநாயகம், தஞ்சாவூர்

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் - செல்வ விநாயகம், தஞ்சாவூர்

 

விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான் - கே. வினோத் குமார், திருவொற்றியூர்

விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான் - கே. வினோத் குமார், திருவொற்றியூர்

 

மழலைகளின் ஓர் மகிழ்ச்சியான தருணம் - முத்துவேல், பர்கூர்

மழலைகளின் ஓர் மகிழ்ச்சியான தருணம் - முத்துவேல், பர்கூர்

அமெரிக்காவிலுள்ள பராசக்தி கோவிலில் பக்தர்கள் கொண்டாட்டம் - நித்யா அஷோக், அமெரிக்கா

அமெரிக்காவிலுள்ள பராசக்தி கோவிலில் பக்தர்கள் கொண்டாட்டம் - நித்யா அஷோக், அமெரிக்கா

 

வீரபாண்டிய கட்டபொம்மன் - அருண் பாபு, கரூர்

வீரபாண்டிய கட்டபொம்மன் - அருண் பாபு, கரூர்

உய்யக்கொண்டான் வாய்க்காலில் சிறுவர்கள் உற்சாகம் - எடிசன் எடின், திருச்சி

உய்யக்கொண்டான் வாய்க்காலில் சிறுவர்கள் உற்சாகம் - எடிசன் எடின், திருச்சி

வட சென்னையில் திருவிழா கொண்டாட்டம் - இக்வான் அமீர், எண்ணூர்

வட சென்னையில் திருவிழாக் கொண்டாட்டம் - இக்வான் அமீர், எண்ணூர்

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்
 

தந்தமின்றி பிறக்கும் ஆப்பிரிக்க யானைகள்... மனிதனுடன் போராட இயற்கை கொடுத்த புதிய ஆயுதம்! #AnimalTrafficking -

 

போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தலுக்கு அடுத்து உலகளவில் அதிகம் கடத்தப்படும் சட்ட விரோத பொருள்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது யானை தந்தமாகும். கடத்தல்காரர்களைப் பொறுத்தவரை யானை தந்தம் என்கிற பெயரே ஒரு போதைப் பொருள்தான். இதற்காக ஆண்டிற்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் யானைகள் கொல்லப்படுகின்றன. உலகம் முழுவதும் வன உயிரினங்கள் தொடர்பான சட்ட விரோதமான கடத்தல் வர்த்தகம்19 பில்லியன் டாலர் அளவுக்கு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஆப்பிரிக்க நாட்டிலிருந்து மரச்சாமான்கள் எனக் குறிப்பிடப்பட்ட கன்டெய்னர் ஒன்று 2014 ஏப்ரல் 30-ம் தேதி துபாயில் உள்ள ஜெபெல் அலி துறைமுகத்திற்கு கப்பலில் வந்தது. அந்த கன்டெய்னரில் இருந்த பெட்டிகளை சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். பெட்டிகளின் உள்ளே ஆப்பிரிக்க நாட்டின் அரியவகை யானை தந்தங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 259 தந்தங்களைக் கைப்பற்றினர்.  

 

elephant

கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி மலேசியாவிலிருந்து ஹாங்காங் துறைமுகத்திற்கு வந்த கப்பலில் ஒரு கன்டெய்னரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சுமார் 7.2 டன் எடையுள்ள யானை தந்தங்கள் அதில் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இந்த யானை தந்தங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 60 கோடி ரூபாயாகும். "உலகிலேயே ஒரே இடத்தில் இத்தனை தந்தங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது இங்குதான். இதற்கு முன்னர் 2002ம் ஆண்டு, சிங்கப்பூரில் 7.1 டன் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. யானை தந்தங்களை அனுப்பியது யார், யாருக்கு அனுப்பப்பட்டது என்கிற எந்த விவரங்களும் அதில் இல்லை.

2016-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மலேசியாவிலிருந்து சீனாவுக்கு பொருள்களை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலை வியட்நாமில் உள்ள ஹய்போங் துறைமுக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கடல் சிப்பிகள் என எழுதி ஒட்டப்பட்டிருந்த ஒரு கன்டெய்னரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் திறந்து பார்த்தனர். உள்ளே யானை தந்தங்கள் மலை போல் குவிந்து கிடப்பதை பார்த்த அதிகாரிகள் அந்த கன்டெய்னரை பறிமுதல் செய்த சீனாவுக்குக் கடத்தவிருந்த சுமார் 2 ஆயிரம் கிலோ (2 டன்) தந்தங்களையும் கைப்பற்றினர். 2009-ம் ஆண்டு இதே துறைமுகத்தில் தான்சானியா நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 7 டன் யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பித்தக்கது. சிங்கப்பூர், தான்சானியா, மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து கென்யாவிற்கு ‌கடத்தி வரப்பட்ட 40 ஆயிரம் தந்தங்களை கென்யா அரசு பறிமுதல் செய்தது. 2011 ஜூலை 21-ம் தேதி சுமார் 5 டன் எடையுடைய இந்தத் தந்தங்களை ஒரே இடத்தில் அடுக்கி வைத்து, தந்தக் குவியலுக்குக் கென்யா அதிபர் மிவாய் கிபாகி தீ வைத்துக் கொளுத்தினார்.

யானை தந்தங்கள்

Photo Credit: Reuters

உயிரோடு இருக்கிற யானையைக் கொல்வது நமக்கு வேண்டுமானால் துணிவில்லாமல் இருக்கலாம், ஆனால் கடத்தல்காரர்களுக்கு அவை ஜஸ்ட் லைக் தட் சம்பவங்கள்தாம். ஒரு ஜீப்பில் இரண்டு துப்பாக்கிகளோடு வலம் வரும் கும்பலின் இரத்தம் சதை என எல்லாவற்றிலும் தந்தம் என்கிற சொல் வெறியேற்றி இருக்கும். சிக்குகிற எல்லாவற்றையும் கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளுகிறார்கள். இணையதளத்தில் இருக்கிற தந்தம் வெட்டப்படுகிற காட்சிகள் கடத்தல்காரர்கள் எவ்வளவு மூர்க்கத்தனம் கொண்டவர்கள் என்பதை காட்டுகிறது. யானை தந்தங்கள் கடத்தலின் முக்கிய நாடாக மலேசியா இருந்து வருகிறது. பினாங்கு, கிள்ளான், பாசிர் கூடாங் துறைமுகங்கள் உலகம் முழுக்க யானைத் தந்தங்கள் அனுப்பப்படுவதற்கான மிக முக்கியமான வழிகளாக இருக்கின்றன. ஜனவரி 2003-லிருந்து மே 2014 வரை 63,419 கிலோ தந்தங்கள் 66 முறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் மலேசியாவில் மட்டும் 19 முறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆசிய, ஆப்பிரிக்க யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதற்கு மலேசியத் துறைமுகங்கள் முக்கியக் கேந்திரங்களாக திகழ்ந்து வருகின்றன என்ற அதிர்ச்சித் தகவலை ‘டிராபிக்(TRAFFIC) எனப்படும் தென்கிழக்காசிய வன விலங்குகள் சட்டவிரோத வர்த்தக கண்காணிப்புக் குழு தெரிவித்தது. யானைத் தந்தங்களை வாங்குவதும் விற்பதும், பரிமாற்றம் செய்து கொள்வதும் மலேசியாவில்தான் அதிகமாக நடைபெறுவதாகவும் அந்தக் குழு தெரிவித்தது. மலேசியாவில் பறிமுதல் செய்யப்பட்ட யானைத்தந்தங்கள் முறையாக அழிக்கப்படுவதில்லை. கடந்த காலங்களில் பறிமுதல் செய்யட்ட யானைத்தந்தங்கள் காணாமல் போயும் உள்ளன. இது தொடர்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அமைப்புக்கள் கேள்வி எழுப்பிய பொழுது மலேசிய தரப்பால் சரியான பதில்களைக் கொடுக்க முடியவில்லை

வருடந்தோறும் பெருகி வரும் யானைத் தந்தக் கடத்தல் வேலைகள் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படுத்தப்படுகின்றன. சட்ட விரோத யானைத்தந்த கடத்தல்களை முறியடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த அமைப்புக்கள் கடும் சவால்களாக இருந்து வருகின்றன. ஆசியாவில் யானைத் தந்தத்திற்கான கறுப்புச் சந்தையை முடிவுக்குக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் கணிசமான அளவில் பலனைக் கொடுத்துள்ளன என்பதற்கு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வரும் யானை தந்த பறிமுதல்களே தக்க சான்று.

தந்தத்தினால் செய்யப்பட கலைப்பொருட்கள்

Photo Credit: AP

ஆப்பிரிக்காவில் ஆண் யானைகளுக்குத் தந்தங்கள் பெரிதாக இருக்கும் என்பதால், கடந்த காலங்களில் அவையே அதிகம் வேட்டையாடப்பட்டன. இதனால், ஆண் - பெண் யானைகளுக்கான பாலின விகிதம் குறைந்தது. மேலும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் ஆப்பிரிக்காவில் சமீபகாலங்களில் பிறக்கும் யானைக் குட்டிகள் 6% வரை தந்தங்கள் இல்லாமல் பிறப்பதாகச் சொல்லப்படுகிறது. இது, யானைகளுக்கு எதிராக மனிதர்கள் நடத்திய தாக்குதலின் விளைவாக இயற்கையாக விளைந்த ஒரு "பரிணாம வளர்ச்சி" என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதாவது, மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பிக்க யானைகள் தந்தங்கள் இல்லாமல் பிறக்கின்றன. ஆப்பிரிக்க யானை இனம், இன்னும் 15 ஆண்டுகளில் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பன்னாட்டு விலங்குகள் நல அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன. இவற்றில், ஆப்பிரிக்க யானைகள் மிகவும் பலம் பொருந்தியவை. அகன்ற காதுகள், மிக நீளமான தும்பிகைகளுடன் இவை தோற்றமளிக்கும்.தற்போது அதன் தந்தங்களே அந்த யானை இனத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

யானை தந்தம் என்பதை தாண்டி இன்னோர் அதிர்ச்சியூட்டும் ஒரு முக்கிய விஷயம், யானைகளின் தோல் உரித்தெடுக்கப்படுகிறது என்ற செய்திதான். தந்தங்களுக்காக வேட்டையாடிய காலம் போய், அதன் தோலுக்காக அவை அதிகம் வேட்டையாடப்படுகின்றன. குறிப்பாக, மியான்மர் நாட்டில் இது அதிகளவில் நடந்து வருகிறது.  மியான்மரில், கடந்த பத்து மாதங்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடப்பட்டு, தோலுரிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களாகவே "யானைத் தோல்" கள்ளச் சந்தைகளில் புழங்கி வந்தாலும், அது மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. ஆனால், மிகச் சமீபமாக அதன் தேவை அதிகமாகியிருக்கிறது. இதற்கான முழுமையான காரணம் தெரியாவிட்டாலும் கூட, சில காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யானைகளின் தோல், மனிதர்களின் தோல் நோய்களுக்கான சிறந்த மருந்தாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. யானையில் தோலைக் காயவைத்து, ஒரு மண் சட்டியில் போட்டு எரிக்க வேண்டும். பின்னர், அந்தச் சாம்பலை தேங்காய் எண்ணெயோடு சேர்த்து கலக்கி,  தடவினால் தோல் நோய்களுக்குச் சிறந்த மருந்தாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இதை முகத்திற்குத் தடவினால், முகம் பொலிவாகவும், புத்துணர்ச்சியாகவும், தூய்மையாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

மியான்மரின் ரங்கூன் மற்றும் மாண்டலே நகரங்களிலிருந்து தொடங்கும் இந்தக் கடத்தல் பயணம் லஷியோ, மியூஸ் வழியாக சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளை சென்றடையும். இந்த நாடுகளைச் சென்றடைய மொத்தம் 4 பார்டர்களை இந்தக் கடத்தல்காரர்கள் ஏமாற்றி கடக்க வேண்டும். யானைத் தோல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஒரு ஒருங்கிணைந்த கடத்தல் குழுவாகச் செயல்படுகிறார்கள். இந்தக் கும்பலை கட்டுக்குள் கொண்டுவர உலகளவில் பல நாடுகளும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல முயற்சிகளை எடுத்து வந்தாலும் கூட, இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

உலகச் சந்தையில் யானைத் தந்தத்திற்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்குக்கூட தந்தங்கள் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல மதிப்பு உண்டு. ஆகவே யானைகள் இவற்றுக்காகவும், பாரம்பர்ய மருத்துவப் பொருள்களுக்காகவும் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுகின்றன. எல்லா விலங்குகளின் அழிவுக்கும் காரணமாய் இருக்கிற சீனா அரசு யானை அழிவுக்கும் காரணமாகவே இருக்கிறது. ஆனால் இப்போது யானைகள் அழிவில் அக்கறை கொண்ட சீன அரசு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 தேதி தந்தங்கள் விற்பனை செய்வதை அதிகாரபூர்வமாக தடை செய்திருக்கிறது.

அழிக்கப்படும் யானை தந்தங்கள்

Photo Credit: AP

1986-ஆம் வருடம் தந்தங்கள் மற்றும் தந்தங்களிலான பொருள்களை வியாபாரம் செய்வதை இந்திய அரசு தடைசெய்தது. இந்திய வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக வெற்றியடைய தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதைகள் ஆகியவற்றை அமைக்கவேண்டியது கட்டாயமாகிறது. சில இருப்புப்பாதைகள் காடுகள் வழியாகவும் அமைக்கப்படுகின்றன. அப்பாதைகள் யானைகளின் வழித்தடங்களின் ஊடாகச் செல்வதால், அந்தப் பாதைகளைத் தாண்டிப்போகும்போது யானைகள் ரயில்களில் அடிபட்டுப் பரிதாபமாக மரணமடைகின்றன. 1987 முதல் 2010 வரை இந்தியாவில் மொத்தம் 150 யானைகள் ரயில்களில் அடிபட்டு இறந்துபோயுள்ளன. இதில் 2000 முதல் 2010 வரை 100 யானைகள் இறந்துபோயுள்ளன. யானை தந்தங்களின் கடத்தல் குறித்த சம்பவங்களில் இந்தியாவோ அதில் தமிழகமோ விதி விலக்கல்ல. ஒரு வாரத்திற்க்கு தந்தம் கடத்தல் குறித்த மூன்று செய்திகளாவது எங்கிருந்தாவது வந்துகொண்டே இருக்கின்றன. யானை என்கிற ஒரு பெயருக்குப் பின்னால் இருக்கிற அரசியலும் அதற்காக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் பல அத்தியாயங்களைக் கடக்கும். தந்தங்களுக்காகக் கொல்லப்பட்ட யானைகளை போல கொல்லப்பட்ட மனிதர்களும் அநேகம். அவர்கள் குறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படம்

07CHLRDSARENA

ABU DHABI, UNITED ARAB EMIRATES - DECEMBER 30: Serena Williams of United States smiles during her Ladies Final match against Jelena Ostapenko of Latvia on day three of the Mubadala World Tennis Championship at International Tennis Centre Zayed Sports City on December 30, 2017 in Abu Dhabi, United Arab Emirates. (Photo by Tom Dulat/Getty Images)   -  Getty Images

டந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரம், மகிழ்ச்சி, பெருமிதம், போராட்டம் என உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

கேரள அரசு கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ ஆசிரியர்கள், மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முடிவுசெய்திருந்தது. இதைக் கண்டித்து கேரளாவில் முதுகலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற மாணவிகள் நடனம் மூலமாக எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

       
07CHLRDDRDANCE

Kozhikode, Kerala, 30/12/2017;Medical students staging a flash mob as part of their ongoing strike against rising the pension age of doctors, in Kozhikode on Saturday. by K_Ragesh   -  THE HINDU

 

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை நொங் ரோஸ். திருநங்கையான இவர் இன்னும் சில நாட்களில் பாரிஸ் நகரில் நடைபெறவிருக்கும் சர்வதேசப் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இதன் மூலம் சர்வதேசக் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை எனும் பெருமையைப் பெறுகிறார்.

07CHLRDNONGROSE
 

பாகிஸ்தானில் முதன்முதலாக மகளிர் ராணுவக் கல்லூரி இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. கைபர் பகுதியில் உள்ள மர்டன் என்ற இடத்தில் செயல்பட்டுவரும் இந்தக் கல்லூரியில் 70 மாணவிகள் பயிற்சிபெற்று வருகிறார்கள்.

07CHLRDPAKCADET
 

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த வேதாங்கி குல்கர்னி, சைக்கிள் மூலம் உலகைச் சுற்றிவரத் திட்டமிட்டுள்ளார். வரும் ஜூன் மாதம் இந்தச் சாதனைப் பயணத்தைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, மும்பையில் இருந்து புதுடெல்லி வரையிலான 1,400 கி.மீ. தூரத்தை சைக்கிள் மூலம் கடந்து இவர் சாதனை படைத்திருக்கிறார்.

07CHLRDVEDANGIKULKARNI
 

குழந்தை பிறப்புக்குப் பிறகு செரினா வில்லியம்ஸ் அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சி டென்னிஸ் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்றார். இந்தப் போட்டியில் தோல்வியடைந்தபோதும் குழந்தை பிறப்புக்குப் பிறகு டென்னிஸ் போட்டியில் பங்கேற்றது அற்புதமான உணர்வு என செரினா குறிப்பிட்டார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

2008 : லசந்த விக்­கி­ர­ம­துங்க கொல்­லப்­பட்டார்

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 08

 

1297 : மொனாக்கோ சுதந்­திரம் பெற்­றது.

1782 : திரு­கோ­ண­மலை கோட்­டையை பிரித்­தா­னியர் கைப்­பற்­றினர்.

Lasantha-wickramatunga-240x400.jpg1815 : அண்ட்ரூ ஜக்ஸன் தலை­மையில் ஐக்­கிய அமெ­ரிக்கப் படைகள் லூசி­யா­னாவின் நியூ ஓர்­லியன்சில் பிரித்­தா­னி­யரைத்
தோற்­க­டித்­தது.

1838 : அல்­பிரட் வையில், புள்­ளி­க­ளையும் கோடு­க­ளையும் கொண்ட தொலைத்­தந்­தியை அறி­மு­கப்
­ப­டுத்­தினார்.

1867 : அமெ­ரிக்­காவின் வோஷிங்டன் டிசி நகரில் கறுப்­பின அமெ­ரிக்­கர்கள் முதல் தட­வை­யாக வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

1889 : ஹெர்மன் ஹொல்­லெரிக் மின்­னாற்­றலில் இயங்கும் பட்­டி­ய­லிடும் கரு­விக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

1912 : ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்சி ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1916 : முதலாம் உலகப் போரில் கூட்டுப் படைகள் துருக்­கியின் லிப்­போ­லியில் இருந்து வெளி­யே­றின.

1926 : அப்துல் அசீஸ் இபன் சவுத் ஹெஜாஸ் நாட்டின் மன்­ன­ராக முடி­சூ­டினார்.

1940 : இரண்டாம் உலகப் போரில் பிரித்­தா­னியா உணவுப் பங்­கீட்டை அறிமு­கப்­ப­டுத்­தி­யது.

1959 : பிடெல் காஸ்ட்­ரோவின் கியூபாப் புரட்சி முடி­வுக்கு வந்­தது.

1962 : நெதர்­லாந்தில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 93 பேர் கொல்­லப்­பட்­டனர்.

Untitled-3.jpg1963 : லிய­னார்டோ டா வின்­ஸியின் மோன­லிஸா ஓவியம் அமெ­ரிக்­காவில் முதல் தட­வை­யாக காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.

1964 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி லிண்டன் ஜோன்ஸன், அமெ­ரிக்­கா வில் வறு­மைக்கு எதி­ரான யுத்­தத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தினார்.

1971 : பங்­க­ளாதேஷ் சுதந்­திரப் பிர­க­ட­னத்­தை­ய­டுத்து கைது செய்­யப்­பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் விடு­த­லை­யானார்.

1973 : சோவியத் விண்­க­ல­மான லூனா 21 விண்­ணுக்கு ஏவப்­பட்­டது.

1994 : ரஷ்­யா வின் விண்­வெளி வீரர் வலேரி பல்­யாக்கொவ், மிர் விண்­வெளி நிலை­யத்­துக்கு சோயூஸ் விண்­கப்­பலில் பய­ண­மானார். இவர் மொத்­த­மாக 437 நாட்கள் விண்ணில் தங்­கி­யி­ருந்து சாதனை படைத்தார்.

1995 : சந்­தி­ரிகா குமா­ர­துங்க தலை­மை­யி­லான இலங்கை அர­சாங்­கத்­துக்கும், தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடை­யி­லான போர் நிறுத்தம் ஆரம்­ப­மா­கி­யது.

1996 : ஆபி­ரிக்க நாடான ஸயரில் அண்­டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 350 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2003 : துருக்­கியில் இடம்­பெற்ற விமான விபத்தில் 70 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2008 : ஜா-எ­லையில் இடம்­பெற்ற கிளைமோர் தாக்­கு­தலில் அமைச்சர் டி.எம்.தச­நா­யக்க உட்­பட மூவர் கொல்­லப்­பட்­டனர்.

2009 : பிர­பல ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கி­ர­ம­துங்க, கொழும்பில் வைத்து கொல்­லப்­பட்டார்.

2010 : ஆபி­ரிக்கக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டியில் பங்­கு­பற்­றச்­சென்ற டோகோ அணியின் வாகனம் மீது அங்கோலாவில் ஆயுதபாணிகள் மேற்கொண்ட தாக்குதலில் உதவிப் பயிற்றுநர், ஊடகவியலாளர், சாரதி ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

2015 : இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்வி யுற்று மைத்திரிபால சிறிசேன வென்றார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

உலகிலேயே கைகளில்லாத ஒரே சமையல் கலைஞர்! - நம்பிக்கைக் கதை #MotivationStory

 
 

கதை

ல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கைதான் நம் இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்றுகூட நடக்காது’ என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஹெலன் கெல்லர். இந்த நம்பிக்கை அவருக்கு இருந்ததால்தான் பார்வையில்லாமல், காதுகேட்காத நிலையிலிருந்த அவரால் படித்துப் பட்டம் பெற முடிந்தது; பல சாதனைகளைப் புரிந்து, சரித்திரத்தில் நீங்காத இடத்தைப் பிடிக்க முடிந்தது. `எப்படிப்பட்டச் சூழலிலும் நான் வாழ வேண்டும்; வாழ்வேன்’ என்று நினைப்பதேகூட நேர்மறைச் சிந்தனை, நம்பிக்கைதான். இந்த உறுதியான எண்ணம் எப்பேர்ப்பட்ட இன்னல்கள், பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் துணிவைத் தரும். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையால் ஒரு பேராபத்திலிருந்து உயிர்பிழைத்து, சாதனைபுரிந்த ஒரு பெண்ணின் நிஜக் கதை இது.

 

செப்டம்பர் 25, 2000-ம் ஆண்டு. மாரிசெல் அபாடன் (Maricel Apatan) என்ற அந்த 11 வயது பெண் பிலிப்பைன்ஸில் இருக்கும் ஸாம்போவாங்கா (Zamboanga) என்ற நகரத்தைச் சேர்ந்தவர். அன்றைக்கு அவரும் அவருடைய மாமாவும் தண்ணீர் எடுத்துவருவதற்காகக் கிளம்பிப் போனார்கள். வழியில் நான்கு பேர் அவர்களை வழிமறித்தார்கள். அவர்களின் கைகளில் நீளமான கத்திகளிருந்தன. அவர்களில் ஒருவன், மாரிசெல்லின் மாமாவை மண்டியிட்டுக் கீழே அமரச் சொன்னான். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், அவர் கழுத்தில் வெட்டு விழுந்தது. இவ்வளவு நேரம் தன்னோடு பேசிக்கொண்டு வந்த மாமா ஒரு கணத்துக்குள் இறந்துபோனதை நம்ப முடியாமல் பார்த்தார் மாரிசெல்.

மாரிசெல் அபாடன்

அவர்களும் அந்நியர்கள் அல்ல. அவர் வீட்டுப் பக்கத்தில் வசிப்பவர்கள். சிறிய முன்விரோதம்... அவ்வளவுதான். நிலைமை மோசமாக இருந்ததால், ஓடித் தப்பிக்கப் பார்த்தார் மாரிசெல். அவர்கள் விரட்டிப்பிடித்தார்கள். ``ஐயோ... என்னை விட்டுடுங்க. நான் என்ன தப்பு செஞ்சேன்... கொஞ்சம் இரக்கம் காட்டுங்களேன்...’’ இதைக் கேட்டாலும் அவர்கள் அந்தப் பெண்ணை விடுவதற்குத் தயாராக இல்லை. அவர்களில் ஒருவன் மாரிசெல்லின் கழுத்தில் வெட்டினான். கீழே விழுந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழக்க ஆரம்பித்தார். ஆனால், உள்ளுக்குள் ஒரு குரல் அழுத்தமாக ஒலித்துக்கொண்டே இருந்தது... `நான் சாகக் கூடாது... நான் சாகக் கூடாது...’

லேசாக நினைவு வந்தபோது, அவரைச் சுற்றி அந்த நான்கு பேரின் கால்களும் தெரிந்தன. மாரிசெல் இறந்ததைப்போல பேச்சு மூச்சில்லாமல் அப்படியே கிடந்தார். சிறிது நேரம் கழித்து அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும், வீட்டை நோக்கி ஓடினார். `கடவுளே... நான் எப்படியாவது பிழைச்சிடணும்... பிழைச்சுப்பேன்’ எனத் திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லியபடி ஓடினார். சிறிது தூரத்துக்கு மேல் ஓட முடியவில்லை. அப்போதுதான் தன் கரங்களை கவனித்தார். அவரின் மணிக்கட்டுக்குக் கீழே இரு கைப் பகுதிகளும் வெட்டுப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தன. மயக்கம் வருவதுபோல் இருந்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு `நான் உயிர் பிழைச்சிடுவேன்’ என்கிற நம்பிக்கையோடு விடாமல் ஓடினார்.

தன்னம்பிக்கை பெண்

வீட்டை நெருங்கியதும் ``அம்மா... அம்மா...’’ என்று கதறியபடி ஓடி வந்த மகளை, வீட்டுக்குள்ளிருந்து அவரின் அம்மா வந்து தாவி அணைத்துக்கொண்டார். அவர் நிலைமையைப் பார்த்து வீறிட்டார்... கதறினார். வீட்டுக்குள்ளிருந்து ஒரு போர்வையை எடுத்துவந்து, மகளின் உடலைச் சுற்றிப் போர்த்தினார். மார்செல்லை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினார். அதிலும் ஒரு பிரச்னையிருந்தது. அவர்களின் வீட்டிலிருந்து நெடுஞ்சாலைக்குப் போக 12 கிலோமீட்டர் நடக்க வேண்டும். அதற்கே நான்கு மணி நேரம் ஆகிவிடும். ``கண்ணு... உனக்கு ஒண்ணும் இல்லைப்பா... பிழைச்சுக்குவே’’ என்றார் மாரிசெல்லின் தாய்.

``ஆமாம்மா... பிழைச்சுக்குவேன்... எனக்குத் தெரியும்’’ நம்பிக்கையோடு அரை மயக்கத்தில் சொன்னார் மாரிசெல்.

சிலரின் உதவியுடன் அவர்கள் எப்படியோ மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். மணிக்கட்டுக்குக் கீழே வெட்டுப்பட்டுத் தொங்கும் இரு கைகள், கழுத்தில் காயம். மாரிசெல் பிழைப்பார் என்ற நம்பிக்கை மருத்துவர்களுக்கே இல்லை. ஆனாலும், ஆபரேஷன் நடந்தது. ஐந்து மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாரிசெல் காப்பாற்றப்பட்டார். கழுத்தைச் சுற்றி மட்டும் அவருக்கு 25 தையல்கள் போடப்பட்டன. கஷ்டப்பட்டு மாரிசெல்லைக் காப்பாற்றிவிட்டாலும், அவரின் கைகளைக் காப்பாற்ற முடியவில்லை. மணிக்கட்டுக்குக் கீழே மொன்னைப் பகுதிகளாக அவை மாறியிருந்தன.

சாலையில் மாரிசெல்

மாரிசெல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நாளுக்கு அடுத்த நாள் அவருக்குப் பிறந்தநாள். 12-வது வயது நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால், அவர்களின் சோகம் விடாமல் துரத்தியது. அம்மாவும் அவரும் திரும்பியபோது, வீடு முழுவதுமாக ரௌடிகளால் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தது. அம்மா கலங்கிப்போனார். மருத்துவமனை பில்லைக் கட்டக்கூட கையில் பணமில்லை. பெரும் தொகை தேவைப்பட்டது. ஆனாலும் மாரிசெல் `இந்த நிலையும் மாறும்’ என நம்பினார். அந்த நம்பிக்கை, கடவுளுக்குக் கேட்டது. கடவுள் சில தேவதைகளை அனுப்பிவைத்தார்.

மாரிசெல்லின் தூரத்து உறவினர் ஒருவர் ஆர்ச் பிஷப்பாக இருந்தார். அவர், மருத்துவமனைச் செலவுகளை ஏற்றுக்கொண்டார். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தவும் உதவினார். அவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

உணவு

அதிசயம் என்னவென்றால், அந்தச் சம்பவத்தின்போது கீழே விழுந்துவிடாமல் மாரிசெல் ஓடிக்கொண்டே இருந்ததுதான் அவரைக் காப்பாற்றியது. விரல்களில்லாத தன் மணிக்கட்டைப் பயன்படுத்தியே தன் வேலைகள் எல்லாவற்றையும் செய்யப் பழகிக்கொண்டார். எழுதக் கற்றுக்கொண்டார், கம்ப்யூட்டர் பழகினார், ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் ஒரு பட்டம்கூட வாங்கிவிட்டார். ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட்ஸ் படிப்பில் அவர் பெற்றது தங்க மெடல்!

ஹோட்டலில் மாரிசெல்

இன்றைக்கு மாரிசெல் ஒரு சமையற்கலை நிபுணர் (Chef). உலகிலேயே கைகள் இல்லாத சமையல் கலைஞர் இவராகத்தான் இருக்கும். தன் மணிக்கட்டுகளையும் பிற உடல் பகுதிகளையும் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு வெட்டுகிறார், வெள்ளரிக்காய் நறுக்கிறார். கேக்கை டெகரேட் செய்கிறார். அவர் பணிபுரியும் ஹோட்டலுக்கு வருபவர்களுக்கு விதவிதமாகச் சமைத்துப் போடுகிறார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பழங்கால எகிப்தின் சாமானிய மக்களின் வரலாறு

  • தொடங்கியவர்

"வாழ்க்கை கடினம்தான்; ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!" - ஸ்டீபன் ஹாக்கிங் #HBDStephenHawking

 
 

மேல் வரிசையில் பற்கள் கிடையாது. கீழிருக்கும் சில பற்கள் மேல் உதட்டை அழுத்தி வெளி வந்து நிற்கும். தலை வலது பக்கம் சாய்ந்திருக்கும். நெற்றியை அதிகம் மறைக்காத மயிர். கேமராவும், சென்சாரும் பொருத்தப்பட்ட கண்ணாடி. கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட வீல் சேர். மிகக் குறைவான எடை கொண்ட பொட்டலமாய், சுருண்டு உட்கார்ந்திருக்கும் அந்த உருவம். கன்னத்தின் சில தசைகள் தவிர உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்து போய்விட்டன. எந்தவொரு மனிதனும் வாழவே முடியாத சூழல்... ஆனால், அளப்பறிய சாதனைகளோடு சரித்திரம் படைத்து வரும் ஓர் அதி அற்புதன்... இவ்வளவு வலிகளையும் கடந்து அவர் சிரிப்பார். எலும்போடு ஒட்டியிருக்கும் அவரின் கன்னத் தசைகள் சிறிய அசைவைக் கொடுக்கும். அது அத்தனை அழகாய் இருக்கும்... உலக அண்டவியல் ஆராய்ச்சியின் அறிவு - அழகன் ஸ்டீபன் ஹாக்கிங்...

ஸ்டீபன் ஹாக்கிங்

 

அது இரண்டாம் உலகப் போர் சமயம். மருத்துவம் படிக்கும் பிராங்கும், தத்துவம் படிக்கும் இசோபெல்லும் காதல் வயப்படுகிறார்கள். கல்யாணம் செய்து கொள்கிறார்கள். எங்கும் போர். பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகளின் சத்தங்களுக்கு மத்தியில், அந்தக் குழந்தையின் அழுகுரல் அத்தனை இன்பமானதாய் அவர்களுக்கு இருக்கிறது. கருவறைக் கடந்து பூமியில் கால் வைத்த அந்தக் குழந்தை எதிர்காலத்தில் அண்டம் கடக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்ற எண்ணம் துளியளவும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அது 1942 ஆம் ஆண்டு, ஜனவரி 8 ஆம் தேதி. கலீலியோ பிறந்து சரியாக முந்நூறு ஆண்டுகள் ஆன சமயம். 

ஸ்டீபன் ஹாக்கிங் வளரத் தொடங்குகிறார்.  பள்ளியில் ஒரு சராசரி மாணவன்தான். ஆனால், ஏன்? எப்படி?, என்ற கேள்விகள் எதைப் பார்த்தாலும், எப்பொழுதும் அவனுள் எழுந்துகொண்டேயிருந்தது. அதற்கான விடைகளைத் தொடர்ந்து தேடத் தொடங்குகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உலகம் எப்படித் தோன்றியது என்ற பெரும் கேள்வி அவனுள் கனன்று கொண்டே இருந்தது. 
1960 களில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் ALS எனப்படும் "Amyotrophic Lateral Sclerosis" என்ற குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டார். கொஞ்சம், கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளைத் தானே உருவாக்கி அதை ஈடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்ட நிலையில், "ஈக்வலைஸர்" என்ற கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் உதவியோடு... இன்று கன்னத் தசைகளின் அசைவுகள் மூலம், கம்ப்யூட்டர் குரலில் பேசி வருகிறார். 

ஸ்டீபன் ஹாக்கிங்

இது இவரின் அறிமுகங்கள். இவரின் அடையாளங்கள் அண்டவியல் ஆராய்ச்சிகள்தாம். டைம் மெஷின் (Time Machine), பிளாக் ஹோல் (Black Hole), ஏலியன் (Alien), பிக்பேங் தியரி (Bigbang Theory) என அண்ட அறிவியலின் பல மைல்கல் ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இமேஜினரி டைம் (Imaginary Time) என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இவர் எழுதிய "எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்" ( A Brief Histroy of Time) என்ற புத்தகம் தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. தி யூனிவர்ஸ் இன் அ நட் ஷெல் (The Universe in a nut shell), மை ப்ரீஃப் ஹிஸ்டரி (My Brief History) உட்பட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். ஹாலிவுட்டின் பல படங்கள் இவரின் கோட்பாடுகளைத் தழுவித்தான் எடுக்கப்படுகின்றன. 

கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்த தோழி ஜேன் வைல்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 30 வருடங்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், தன்னை கவனித்துக் கொண்ட செவிலியர் எலைனுடன் காதல் கொண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டு பத்தாண்டுகள் அவரோடு வாழ்ந்தார். உடல் இச்சைகள் கடந்த அழகான காதலாக அந்தக் காதல் இருந்தது.
அதிதீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவர். பாலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து இஸ்ரேலில் பங்கேற்க வேண்டிய மிக முக்கிய அறிவியல் கூட்டத்தைப் புறக்கணித்தார். வியட்நாம் மீதான போர், இராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு என தன் வீல்சேரில் பயணித்தபடியே எளிய மனிதர்களின் குரலுக்காக, குரலே இல்லாத நிலையிலும் குரல் கொடுத்தார். 
ஏலியன், வேற்று கிரகம், என 75 வயதாகியும் தொடர்ந்து இயங்கி வரும் ஸ்டீபன், மனித சமுதாயத்திற்கு மிக முக்கிய எச்சரிக்கை மணியை அடிக்கிறார்... 

ஸ்டீபன் ஹாக்கிங்

 

" நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். இந்த பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் இது... மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது... நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன்... அதன் மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன் " என உறுதிப் பட கூறும் ஸ்டீபன் ஹாங்கிஸிற்கு இந்தத் தருணத்தில் நாம் சொல்லக் கூடியது ஒன்றாகத்தான் இருக்க முடியும்... பிறந்தநாள் வாழ்த்துகள் அழகனே !!! 

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

குட்பை லெக்கிங்ஸ்... வெல்கம்பேக் டு டைட்ஸ்... 2018 -ன் ஃபேஷன் கணிப்பு!

 
 

புது வருடம் பிறக்கும்போது கூடவே பல புது விஷயங்களும் பிறக்கும். அதில் எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சது ஆடைகளின் அணிவகுப்பு. கலம்காரி, சாலிட், பிங்க் போன்றவை சென்ற ஆண்டின் ஃபேஷன் எலிமென்ட். இந்த ஆண்டு பல சுவாரஸ்யமான, அனைவருக்கும் ஏற்கெனவே பரிட்சயமான பல எலிமென்ட்ஸ் ட்ரெண்ட் ஆகவுள்ளது. 2018 -ன் ஃபேஷன் எலிமென்ட்ஸ் லிஸ்ட் இதோ.

Trend 2018

 


நிறம் :
சென்ற வருடம் பேஸ்டல் ஷேட்ஸ் மற்றும் பிங்க் நிறங்கள் ட்ரெண்டாக இருந்தது. இந்த வருடத்தின் நிறமாக 'வைலட்' எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் ஆடை முதல் காலணி வரை வைலட் நிறம் அதிகம் காணலாம். ஊதா, பேஸ்டல், லாவண்டர் போன்ற வைலட் ஷேட்ஸ், கேஷுவல் ஆடைகள் முதல் அலுவலகத்துக்கு உடுத்திச் செல்லும் ஃபார்மல் உடைகள் வரை அனைத்திலும் அதிகம் கிடைக்கும்.

வைலட் ஃபேஷன்


அனிமல் ப்ரின்ட்ஸ் :
உங்கள் அலமாரி முழுக்க விலங்குகளின் தோல் மற்றும் தத்ரூபமான வண்ணங்களில் பிரின்ட் பேட்டர்ன் உள்ள ஆடைகள் நிரம்பி வழியப்போகுது. வரிக்குதிரை, சிறுத்தை, புலி, ஒட்டகச்சிவிங்கி முதலிய விலங்குகளின் தோல் அமைப்பைப் போல ஆடைகளில் பிரின்ட் செய்யப்படுவதே அனிமல் ப்ரின்ட்ஸ். மூன்று வருடம் முன்பு ட்ரெண்டில் இருந்த இந்த வகையான ப்ரின்ட்ஸ் மீண்டும் இந்த வருடம் ஃபேஷனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிமல் ப்ரிண்ட்ஸ்


பூக்களின் தேசம் :
2017, 'சாலிட்' அல்லது 'பிளைன்', பேட்டர்ன்களுக்குச் சொந்தமானது. 2018 பூக்களின் ராஜ்ஜியம். எத்னிக் முதல் வெஸ்டர்ன் உடைகள் வரை அனைத்திலும் பூக்கள் அச்சிடப்பட்டிருக்கும். எம்ப்ராய்டரி முதல் பிரின்ட் வரை, ஒற்றைப் பூ முதல் பூங்கொத்து வரை ஆடைகளில் பதிக்கப்படும் பூக்கள் அனைத்துமே பெண்களுக்கு தனி அழகு. ஆண்களின் ஆடைகளிலும் இவ்வகையான பிரின்ட் பேட்டர்னைக் காணலாம். மொத்தத்தில் இந்த வருடம் ஃபேஷனில் பூக்கள் மற்றும் விலங்குகளின் தாக்கம் அதிகம் இருக்கலாம். 

Floral Prints


பீக்கபூ சைடு ஸ்லிட்ஸ் (Peekaboo Side Slits) :
குர்த்தா, கமீஸ் போன்ற ஆடைகளின் இரு பக்கத்திலும் நீண்ட குறுகிய பிளவு இருக்கும். அதுதான் ஸ்லிட். பீக்கபூ சைடு ஸ்லிட் என்றால் வழக்கத்தைவிட மிக அதிகமாக பிளவு நீண்டிருக்கும். அதிலும் இருபக்கம் இல்லாமல் ஒரு பக்கத்தில் மட்டுமே இந்த பீக்கபூ ஸ்லிட் இருக்கும். இதுவே இந்த ஆண்டின் ட்ரெண்ட் என வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். இது எத்னிக் உடைகளைவிட வெஸ்டர்ன் உடைகளில்தான் அதிகம் காணப்படும். சென்ற ஆண்டு சென்டர் ஸ்லிட் ஃபேஷன். இந்த ஆண்டு பீக்கபூ சைட் ஸ்லிட் ட்ரெண்ட்.

Peekaboo Side Slits


லெக்கிங்ஸ் அவுட் டைட்ஸ் இன் :
கடந்த சில வருடங்களாகவே லெக்கிங்ஸின் ஆக்கிரமிப்பு பெண்களிடையே அதிகம். குழந்தைகள் முதல் வயது வரம்பின்றி அனைவரின் அலமாரியிலும் லெக்கிங்ஸ் இல்லாமல் இல்லை. ஆனால், இந்த வருடம் Active Wear-களில் ஒன்றான டைட்ஸ், லெக்கிங்ஸை வீழ்த்த உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு டைட்ஸ் அனைவரின் ஃபேவரைட். வெவ்வேறு வண்ணங்களிலும், பேட்டர்ன்களிலும் வரும் இது 2018 -ன் ஹாட் ரீஎன்ட்ரி.

Printed Tights


பேரே ஹேட் (Beret Hat):
தொப்பிகளுக்கும் ஃபேஷனில் மிகப் பெரிய இடமுண்டு. உடைகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்குறோமோ அதே அளவு உடைகளை மெருகேற்றும் இணை ஆபரணங்களுக்கும் கொடுப்போம். அதில் மிக முக்கியமான ஒன்று தொப்பி. ட்ரேட் மார்க் பதிக்கும் இணை ஆபரணம் தொப்பிதான். அதிலும் இந்த ஆண்டு பேரே ஹேட் தான் ட்ரெண்ட். ஆண், பெண் என அனைவருக்கும் கண்டிப்பா இந்த பேரே தொப்பி பிடிக்கும்.

Beret Hat


ஸ்டேட்மென்ட் ஜுவல்லரி :  
'போல்ட் அண்ட் பியூட்டிஃபுல்' என்பதற்கு ஏற்றதுபோல ஸ்டேட்மென்ட் ஜுவல்லரி இந்த ஆண்டின் ட்ரெண்ட். அணிகலன்களில், ஸ்டேட்மென்ட் ஜுவல்லரி என்பது மிகப் பெரிதாகவும், எடை குறைவாகவும், ஆன்ட்டிக் போன்ற வின்டேஜ் மாடலாகவும் இருக்கும். எந்த உடை உடுத்தியிருந்தாலும் ஒரே ஒரு ஸ்டேட்மென்ட் நெக்லஸ் போதும். கண்டிப்பா அந்த அவுட்ஃபிட் முழுமை அடைந்திருக்கும். காதணி, நெக்லஸ், சுட்டி, மூக்குத்தி உள்ளிட்டவைகளும் ஸ்டேட்மென்ட் ஜுவல்லரியில் அடங்கும்.

Statement Jewellery

 

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உதயநிதி - ப்ரியதர்ஷன் கூட்டணியில் உருவாகியுள்ள `நிமிர்' படத்தின் ட்ரெய்லர்!

 

இயக்குநர் ப்ரியதர்ஷன் - உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகியுள்ள நிமிர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Nimir_18537.jpg

 

இந்தப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக நிமிர் படம் உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள நிமிர் படத்தை ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். உதயநிதியுடன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், இயக்குநர் மகேந்திரன், சமுத்திரக்கனி, எம். எஸ்.பாஸ்கர், கருணாகரன், கஞ்சா கருப்பு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள நிமிர் படம், தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. சமுத்திரக்கனி வசனங்கள் எழுத, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற நிமிர் படம் ஜனவரி 26-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மோகன்லாலும் ப்ரியதர்ஷனும் மலையாளத் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்பதனால், இப்படத்தின் தலைப்பை நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 
  • தொடங்கியவர்

விர்ச்சிவல் ரியாலிட்டியில் ஐ.பி.எல்... டி.வி மூலம் மைதானத்துக்கே செல்லலாம்! #IPL

 
 

#IPL

#IPL முதல் சீசன் நடைபெற்றது 2007. ஸ்மார்ட்போன்களே பெரிதாக பிரபலமடையாத காலம் அது. அன்று தொடங்கிய இந்த கிரிக்கெட் லீக் இத்தனை வருடங்களில் டிஜிட்டல் முன்னேற்றங்களில் பல புதுமைகளைக் கண்டுள்ளது. இதில் முக்கியமானது ஆன்லைன் ஸ்ட்ரீமிங். இது மக்களை எங்கிருந்தும் மேட்ச் பார்க்க உதவியது. கடந்த சீசன்களில் தொலைக்காட்சி ஒளிபரப்பு சோனியிடமும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமம் ஹாட்ஸ்டாரிடமும் இருந்தது. ஆனால், சமீபத்தில் ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமம் முழுவதையும் தன்வசப்படுத்தியது ஸ்டார் இந்தியா நிறுவனம். இதன்மூலம் இந்த சீசன் ஒளிபரப்புகுறித்த விஷயங்களில் முழுஅதிகாரமும் இப்போது ஸ்டார் இந்தியா கையில். இந்நிலையில், மேலும் ஒரு புதிய முயற்சியாக விர்ச்சுவல் ரியாலிட்டி ஒளிபரப்பை இந்த சீசனில் கொண்டுவர மிகவும் மும்முரமாக ஸ்டார் இந்தியா இறங்கியிருக்கிறது.

ஐ.பி.எல் தனது 11-வது சீசனில் அடியெடுத்து வைக்கும் நிலையில் இதைப்போன்று புதிய தொழில்நுட்பங்களை பார்வையாளர்களுக்குக் கொண்டுசெல்வதின் மூலம் உலகின் பிரபலமான விளையாட்டு லீக்குகளில் ஒன்றான ஐ.பி.எல் தொடருக்கு இது மேலும் பெருமைசேர்க்கும் என்றே கூறலாம். எல்லாம் நினைத்தபடி நடந்து இந்த சீசனில் விர்ச்சுவல் ரியாலிட்டி சாத்தியமானால் கிரிக்கெட் வரலாற்றில் இது முக்கியமான விஷயமாகும். 

இதை தனது நீண்டநாள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் பார்ட்னரான ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து செய்யப்போகிறது ஸ்டார் இந்தியா நிறுவனம். இதை உறுதிப்படுத்தும் வகையில் ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் நுகர்வோர் மற்றும் வருவாய்த்துறைத் தலைவராக இருக்கும் பிரபு சிங், ஐ.பி.எல் 2018ல் தங்கள் செய்யவிருக்கும் புதுமைகளைப் பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதே நிகழ்ச்சியில் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி பிளான் பற்றி அவரிடம் கேள்விகள் கேட்டபோது “ஆம்… அதற்கான வேலை நடக்கிறது” என அவர் கூறியிருக்கிறார். 2018-ம் வருடத்தை மாற்றப்போகும் 10 மீடியா மாற்றங்கள் பற்றி டெல்லியில் நடந்த சி.ஐ.ஐ பிக் பிக்சர் சம்மிட்டிலும் இது குறிப்பிடப்பட்டது. ஆனால், விர்ச்சுவல் ரியாலிட்டி பற்றிய முழுமையான விவரங்கள் தர ஹாட்ஸ்டார் மறுத்துவிட்டது. ”எல்லாவற்றையும் பொறுத்திருந்துப் பாருங்கள் இன்னும் நாள்கள் பல இருக்கின்றன” என்றும் கூறியுள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி மட்டுமின்றி இன்னும் சில மாற்றங்களையும் இந்த சீசன் ஒளிபரப்பில் எதிர்பார்க்கலாமாம். இம்முறை ஸ்ட்ரீமிங்கின்போது ஸ்கோர் பார்க்கும் முறையும் பலவகைகளில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

#IPL

விர்ச்சுவல் ரியாலிட்டியைப் பொறுத்தவரை, அந்த வீடியோக்களைத் தயாரிப்பது எந்த அளவு கடினமோ அதைவிட இந்தத் தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பது மிகக்கடினம். இதற்காக சிறப்புப் போட்டிகளின் மூலம் பார்வையாளர்களுக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களைக் கொண்டுசேர்க்கும் வழிகளை யோசித்துக்கொண்டு இருக்கிறதாம் ஹாட்ஸ்டார். எல்லாம் நல்லபடியாய் நடந்தால் வீட்டில் இருந்தபடியே ஸ்டேடியத்தில் மேட்ச் பார்க்கும் உணர்வை இதன்மூலம் மக்கள் பெறமுடியும். சொல்லமுடியாது கிரவுண்ட்க்கு உள்ளே பிளேயர்களின் நடுவே கூட நம்மை கூட்டிச் செல்ல வாய்ப்புகள் உண்டு.

எல்லாம் சாத்தியப்படுமா என்று தெளிவான அறிவிப்புகள் இன்னும் வரவில்லை, ஹாட்ஸ்டார் சொல்வதுபோல் என்னென்ன ஆச்சர்யங்கள் இந்த ஐ.பி.எல்லில் காத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

 

இந்த ஆண்டுதான் கனடா, நார்வே போன்ற நாடுகள் VR தொழில்நுட்பத்தைத் தொலைக்காட்சிக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. முதல் VR ஷோ நார்வே நாட்டில் ஒளிப்பரப்பட்டது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

 

உலகம்கானப்ரியா

 

96p1_1514041527.jpg

முசூன் அல்மெல்லெஹான் (Muzoon Almellehaan)

19 வயதான இந்த இளம்பெண், யூனிசெஃப்பின் `இளைய நல்லுறவுத் தூதர்’.  சிரியா அகதியான இவர், மலாலாவின் செயல்களால் ஈர்க்கப்பட்டு, சிரியாவில் பெண் கல்விக்கான விழிப்பு உணர்வுச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். 2013-ம் ஆண்டு, உள்நாட்டுப் போர் காரணமாகச் சிரியாவைவிட்டு வெளியேற நேர்ந்தது. 2015-ம் ஆண்டு, ஐந்து வருட விசா பெற்று இங்கிலாந்தில் குடியேறினார். மீண்டும் தன் சொந்த நாடான சிரியாவுக்குச் செல்லும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இவரது லட்சியம், சிறந்த பத்திரிகையாளர் ஆவதே. வாவ் பெண்!


96p2_1514041539.jpg

பெக்கி விட்சன் (Peggy Whitson)

665 நாள்களை விண்வெளியில் கழித்தவர். 57 வயதான இவரே அதிக நாள்கள் விண்வெளியில் இருந்த ஒரே பெண்.  உயிரியல், உயிரித் தொழில்நுட்பம், மருத்துவம், புவி அறிவியல் ஆராய்ச்சிகளில் பெரும் பங்களித்துள்ளார். முதல் பெண் தலைமை விண்வெளி வீரரும் இவரே. இரும்பு மனுஷி!


96p3_1514041552.jpg

ஏஞ்சலா மெர்கல் (Angela Merkel)

ஜெர்மனியின் முதன்மைத் தலைவரான இவர், தடைகள் பல கடந்து மீண்டும் இந்த ஆண்டு ஜெர்மனியின் `சான்சலர் (Chancellor) ஆகியுள்ளார். ஐரோப்பிய யூனியனில் அரசின் தலைமைப் பொறுப்பில் நீண்டகாலம் இருக்கும் ஒரே பெண்மணி இவர்தான். சல்யூட் மெர்கல்!


96p4_1514041564.jpg

ஷெரில் சாண்ட்பெர்க் (Sheril Sandberg)

ஃபேஸ்புக்கின் வருவாய் அதிகரிப்பில் முதன்மை இயக்குநர் ஷெரில் சாண்ட்பெர்க்கின் பங்கு வியக்கத்தக்கது. `லீன் இன்’ எனும் லாபம் இல்லா அமைப்பை நிறுவி, பெண்கள் முன்னேற்றத்துக்கான உதவிகள் செய்துவருகிறார். தன்னம்பிக்கை மனுஷி!


96p5_1514041576.jpg

பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins)

பலரது மனதைக் கொள்ளை யடித்த `வொண்டர் வுமன்’ கதாபாத்திரத்தை உருவாக்கியவர். அமெரிக்காவின் முதல் `சூப்பர் ஹீரோ பெண் இயக்குநர்’ என்ற பெருமைக்குரியவர். `மான்ஸ்டர்’, `தோர்’ உள்பட பல படங்களில்  இவரது உழைப்பு, பெருமை சேர்த்தது. பவர்ஃபுல் லேடி!


96p6_1514041588.jpg

ஆஷ்லி கிரஹாம் (Ashley Graham)

உலகின் முதல் `ப்ளஸ் சைஸ்’ மாடல். பல போராட்டங்களுக்குப் பிறகு, `அமெரிக்காவின் அடுத்த டாப் மாடல்’ எனும் ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜாக உள்ளார். தன்னைப்போல் உடலமைப்பைக்கொண்டு சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஊக்கமளித்துவருகிறார். உள்ளம் கவர் அழகி!


96p7_1514041601.jpg

சிம்மமாண்டா கோசி அடிச்சி (Chimamanda Ngozi Adichie)

இளம் நைஜீரிய எழுத்தாளர். புதுமையான படைப்புகளுக்காக `மேக் ஆர்தர் ஜீனியஸ் கிராண்ட்’ விருது வென்றவர். ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த எழுத்தாளர் என்று போற்றப்படுகிற இவர், பெண்ணியத் துக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். தடம் பதிக்கும் போராளி!


96p8_1514041613.jpg

இவான்கா ட்ரம்ப் (Ivanka Trump)

மாடல், எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், தொழிலதிபர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்ட இவான்கா, அமெரிக்கா வின் முதல் குடிமகள். 14-வது வயதில் மாடலிங் துறைக்கு வந் தவர். தன் தந்தைக்கு முதன்மை ஆலோசகரும் இவரே. அண்மையில் இந்தியா வந்த இனியவர்!


96p9_1514041626.jpg

மியூஷியா ப்ராடா (Miuccia Prada)

உலகப்புகழ் ஹேண்ட்பேக் பிராண்டான `ப்ராடா’ நிறுவனத்தின் துணைத்தலைமை நிர்வாகி. 2.8 பில்லியன் டாலர் வருமானத் தைப் பார்க்கிறது இந்த நிறுவனம். இதில் இவருக்கு 28 சதவிகிதப் பங்கு. `மியூ மியூ’ எனும் ஃபேஷன் பிராண்டும் இவருடையதே. பிசினஸ் பியூட்டி!


96p10_1514041641.jpg

பியான்சி (Beyonce)

அமெரிக்க கவர்ச்சிக்கன்னி. பாடகர், பாடலாசிரியர், நாட்டியக் கலைஞர் என அனைத்திலும் சிறந்து விளங்கும் இவர், ஒரு பெண்ணியவாதியும்கூட. `100 Days of Kindness’ பிரசாரம் மூலம், திருநங்கைகளுக்கு ஆதரவு திரட்டிவருகிறார். சேவையிலும் கொள்ளை கொள்ளும் அழகி!

https://www.vikatan.com

 

  • தொடங்கியவர்

2015 : ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் பத­வி­யேற்­றனர்

வரலாற்றில் இன்று…

ஜனவரி- 09

 

475 : பைசண்டைன் பேர­ரசன் சீனோ, தனது தலை­ந­க­ரான கொன்ஸ்­டண்­டீ­ன் நகரை விட்டுக் கட்­டா­ய­மாக வெளி­யேற்­றப்­பட்டான்.

1431 : பிரெஞ்சு வீரப் பெண்­ணான ஜோன் ஒவ் ஆர்க் மீதான முன் விசா­ர­ணைகள் ஆங்­கி­லே­யர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட நீதி­மன்­றத்தில் ஆரம்­ப­மா­னது.

President-and-PM.jpg1707 : ஸ்கொட்­லாந்து மற்றும் இங்­கி­லாந்து பேர­ர­சு­களை இணைக்க இங்­கி­லாந்து நாடா­ளு­மன்றம் ஒப்­புதல் அளித்­தது.

1760 : பராய் காட் சமரில் மராட்­டி­யர்­களை ஆப்­கா­னி­யர்கள் தோற்­க­டித்­தனர்.

1768 : பிலிப் ஆஸ்ட்லி என்­பவர் முதன் முத­லாக நவீன சர்க்கஸ் காட்­சியை லண்­டனில் நடத்­தினார்.

1793 : ஜோன் பியர் பிளன்சர் வெப்ப வாயு பலூனில் பறந்த முதல் அமெ­ரிக்­க­ரானார்.

1799 : பிரித்­தா­னியப் பிர­தமர் வில்­லியம் பிட் நெப்­போ­லி­ய­னுக்­கெ­தி­ரான போருக்கு நிதி சேர்ப்­ப­தற்­காக வரு­மான வரியை அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

1816 : ஹம்­பிறி டேவி சுரங்கத் தொழி­லா­ளர்­க­ளுக்­காக வடி­வ­மைக்­கப்­பட்ட டேவி விளக்கை வெற்­றி­க­ர­மாகப் பரி­சோ­தனை செய்தார்.

1857 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவில் 7.9 றிச்டர் நில­ந­டுக்கம் ஏற்­பட்­டது.

1858 : டெக்சாஸ் குடி­ய­ரசின் கடைசி ஜனா­தி­பதி அன்சன் ஜோன்ஸ் தற்­கொலை செய்து கொண்டார்.

1861 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்­கிய அமெ­ரிக்­காவில் இருந்து இரண்­டா­வது மாநி­ல­மாக மிசி­சிப்பி பிரிந்­தது.

1878 : இத்­தா­லியின் மன்­ன­னாக முதலாம் உம்­பேர்ட்டோ முடி சூடினார்.

1905 : ரஷ்யத் தொழி­லாளர்கள் சென் பீட்­டர்ஸ்­பேர்க்கில் குளிர்­கால அரண்­ம­னையை முற்­று­கை­யிட்­டனர். சார் மன்­னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்­றனர் (ஜூலியன் நாட்­காட்­டியின் படி). இந்­நி­கழ்வே 1905 ரஷ்யப் புரட்சி ஆரம்­ப­மா­வ­தற்கு வழி­கோ­லி­யது.

1921 : புனித ஜோர்ஜ் கோட்­டையில் சென்னை சட்­ட­மன்­றத்தின் முத­லா­வது கூட்டம் நடை­பெற்­றது.

Steve-Jobes-1.jpg1951 : ஐநாவின் தலை­மை­யகம் நியூ யோர்க் நகரில் அதி­கா­ர­பூர்­வ­மாகத் திறக்­கப்­பட்­டது.

1964 : பனாமா கால்­வாயில் பனா­மாவின் தேசி­யக்­கொ­டியை இளை­ஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெ­ரிக்கப் படை­க­ளுக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடையில் சமர் மூண்­டது. 21 பொது­மக்­களும் 4 படை­யி­னரும் கொல்­லப்­பட்­டனர்.

1972 : ஹொங்­கொங்கில் குயின் எலி­சபெத் கப்பல் தீக்­கி­ரை­யா­னது.

1974 : யாழ்ப்­பா­ணத்தில் நான்­கா­வது உலகத் தமி­ழா­ராய்ச்சி மாநாடு முடி­வ­டைந்­தது.

1990 : நாசாவின் கொலம்­பியா விண்­ணோடம் ஏவப்­பட்­டது.

1991 : லித்­து­வே­னி­யாவின் சுதந்­திரக் கோரிக்­கையை நசுக்­கு­வ­தற்­காக சோவியத் ஒன்­றியம் வில்­னியூஸ் நகரை முற்­று­கை­யிட்­டது.

2001 : சீனாவின் ஷென்சூ 2 விண்­கலம் ஏவப்­பட்­டது.

2005 : சூடான் அர­சுக்கும் சூடான் மக்கள் விடு­தலை இயக்­கத்­துக்கும் இடையில் அமைதி ஒப்­பந்தம் கென்­யாவில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

2007 : அப்பிள் நிறு­வ­னத்தின் முத­லா­வது ஐபோனை அந்­நி­று­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஸ்டீவ் ஜொப்ஸ் வெளி­யிட்டார்.

2011 : ஈரானில் இடம்­பெற்ற விமான விபத்தில் 77 பேர் உயிரிழந்தனர்.

2013 : அமெரிக்காவின் நியூயோர்க்கில் படகொன்று விபத்துக்குள்ளானதால் 85 பேர் காயமடைந்தனர்.

2015 : இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள 6 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் பதவியேற்றனர்.

 

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

`மத்தவங்களுக்குத்தானே பிரச்னை... நமக்கென்ன?’ - மனோபாவம் சரியா? நீதிக்கதை #MotivationStory

 
 

கதை

`மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்பது சேவை செய்வது, பரிவு காட்டுவது, மற்றவர்களுக்கு உதவுவது’ என்கிறார் ஜெர்மானிய தத்துவவியலாளர், எழுத்தாளர், மருத்துவர் ஆல்பர்ட் ஸ்க்விட்ஸர் (Albert Schweitzer). ஆனால், உண்மை வேறாக இருக்கிறது. ஒருவருக்கு ஒரு பிரச்னை. அது நம்மை பாதிக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நாம், `நமக்குப் பிரச்னை இல்லை’ என்று கொஞ்சம் நிம்மதியடைவோம். இது உளவியல். அவருக்கு ஆலோசனை சொல்வோம். முடிந்தால் உதவுவோம். பக்கத்து வீட்டில் பற்றிய தீ நம் வீட்டுக்கும் பரவும் என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் நினைப்பதோ, உணர்வதோ இல்லை. அடுத்தவரின் பிரச்னை நம்மையும் பாதிக்கத்தான் செய்யும். அதை வெகு எளிமையாக உணர்த்தும் நாட்டுப்புறக் கதை இது. இன்றைய வாட்ஸ்அப், ட்விட்டர் காலத்தில்கூடப் பொருந்தக்கூடிய பல நீதிக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள் உலகெங்கும் விரவிக்கிடக்கின்றன. இங்கிலாந்தில் காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் இந்த நாட்டுப்புறக் கதை அந்த உண்மையை எளிமையாக உணர்த்துகிறது. 

 

எலி - கதை

அது ஓர் எலி. அந்த விவசாயியின் வீட்டில் ரொம்ப காலமாக வசித்துவருகிறது. அன்றைக்கு இரவு விவசாயியும் அவர் மனைவியும் கடைத்தெருவுக்குப் போய்விட்டு வந்திருந்தார்கள். பையைத் திறந்து ஒன்றை எடுத்தார்கள். `அது என்ன உணவு’ என்று நாக்கைச் சப்புக்கொட்டியபடி எலி, சுவரில் இருந்த ஓர் ஓட்டையின் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தது. அவர்கள் பையிலிருந்து எடுத்த பொருளைப் பார்த்ததும் அரண்டுபோனது. அது ஓர் எலிப்பொறி. தன்னைக் கொல்வதற்கு அவர்கள் திட்டம்போட்டிருக்கிறார்கள் என்பது எலிக்குப் புரிந்துவிட்டது.

உடனே பண்ணைக்குள் ஓடியது எலி. ``ஏய்... இந்த வீட்டுக்கு ஒரு எலிப்பொறி வந்திருக்கு’’ என்று சத்தமாகச் சொன்னது. இதை பண்ணையிலிருந்த ஒரு கோழி கேட்டது. ``மிஸ்டர் எலி! அது உனக்குத்தான் கல்லறை. அதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை’’ என்றது.

எலி ஓடியது. பண்ணையிலிருந்த வெள்ளைப் பன்றியிடம் போய் நின்றது. ``இந்த வீட்டுக்கு ஒரு எலிப்பொறி வந்திருக்கு’’ என்றது. பன்றி பரிவோடு சொன்னது... ``நல்லது. உனக்காக நான் பிரார்த்தனை செய்றேன். அதைத் தவிர என்னால வேற ஒண்ணும் செய்ய முடியாது.’’

எலி மீண்டும் பண்ணையின் வேறொரு திசையில் ஓடியது. அங்கிருந்த பண்ணை மாட்டிடம் ``நம்ம வீட்டுக்கு ஒரு எலிப்பொறி வந்திருக்கு’’ என்று சொன்னது. ``அப்பிடியா? ரொம்ப நல்லது. உனக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன். அந்த எலிப்பொறியால என் மூக்கைக்கூட ஒண்ணும் செய்ய முடியாது’’ என்று சொல்லிச் சிரித்தது.

எலி சோகத்தோடு தன் இருப்பிடம் திரும்பியது. இந்தப் பிரச்னை தனக்கு மட்டும்தானா? மற்றவர்களுக்கு அதைப் பற்றி அக்கறையே இல்லையா? கவலை எலியை வாட்டியது. அன்று இரவு அந்த எலிப்பொறியிலிருந்து எழுந்த சத்தம் அந்த மொத்தப் பண்ணை வீட்டையும் அதிரவைத்தது. விவசாயியின் மனைவி எலிப்பொறியில் மாட்டியிருக்கும் எலியைப் பார்ப்பதற்காக ஓடினாள். இருட்டில் அவளுக்குத் தெரியவில்லை... எலிப்பொறியில் மாட்டியிருந்தது ஒரு பாம்பின் வால் என்பது. அவள் எலிப்பொறியின் அருகில் போனதும், பாம்பு அவளைக் கொத்திவிட்டது. ஓடிவந்த விவசாயி, பாம்பை அடித்துப்போட்டுவிட்டு, மனைவியைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். 

பாம்பு - கதை

சிகிச்சை முடிந்து மறுநாள் விவசாயியின் மனைவி வீடு திரும்பினாள், ஆனால், அவளுக்குக் கடுமையான காய்ச்சலிருந்தது. அடுத்த நாள் நலம் விசாரிக்க வந்தார்கள் ஊர்க்காரர்கள். அவர்களில் ஒருவர் சொன்னார்... ``கோழியடிச்சு, சூப்வெச்சுக் குடுப்பா... ஜூரம் ஓடிப் போயிரும்.’’ விவசாயி தன் பண்ணையில் வளர்த்துவந்த அந்தக் கோழியைப் பிடித்து, அடித்து, சூப் செய்து மனைவிக்குக் கொடுத்தார். ஆனாலும் அவர் மனைவிக்கு காய்ச்சல் குறையவில்லை.

விவசாயியின் வீட்டுக்கு நலம் விசாரிக்க வருபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே போனது. ஒருநாள் விருந்தினர்களுக்கு சமைப்பதற்காக, பண்ணையில் இருந்த பன்றியைப் பிடித்து, அதை அடித்து விருந்தாக்கினார் விவசாயி.

அந்த துரதிர்ஷ்டம்பிடித்த விவசாயியின் மனைவி பிழைக்கவில்லை. இறந்து போனாள். இறுதிச் சடங்குக்கு ஊரே திரண்டு வந்தது. வந்தவர்களுக்கு விருந்துவைக்க வேண்டுமே... விவசாயி, பண்ணையிலிருந்த மாட்டை அடித்து, சமைத்து விருந்து படைத்தார். அந்த விருந்தில் ஊரே சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அதை அந்த எலி சுவர் ஓட்டையிலிருந்து வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது.

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

களத்தில் இறங்கி தேசியகீதம் பாடிய ட்ரம்ப்! - தவறாக வாயசைத்து மாட்டிக்கொண்ட பரிதாபம்  

 
 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அட்லாண்டாவில் நடைபெற்ற கல்லூரி கால்பந்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.  

ட்ரம்ப்
 

 

அலபாமா மற்றும் ஜார்ஜியா அணிகளுக்கிடையே கால்பந்துப் போட்டி நடந்தது. அட்லாண்டாவில் ட்ரம்ப்புக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. ஆனாலும், கல்லூரி வாசலில் ஒரு குழுவினர் ட்ரம்ப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

trump

Credits - AP
 

ஸ்டேடியத்துக்குள் நுழைந்ததும், அனைவருக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக  ஃபீல்டில் இறங்கி, காவலர்களுக்கு இடையில் நின்று கொண்டார். பின்னர் தேசியகீதம் ஒலிக்கும்போது, தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு பாடத் தொடங்கினார். அந்தக் காட்சியை வீடியோ எடுத்து, அங்கிருந்த ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

ட்ரம்ப்
 

சிலர் ட்ரம்ப்பின் தேசப்பற்றை புகழ்ந்தாலும், பலர் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். காரணம், தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருக்கும்போது சற்றும் ’சிங்க்’ ஆகாமல் ட்ரம்ப் வாய் அசைத்துக்கொண்டிருந்ததுதான். ‘வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார்’ என்று ட்ரம்ப்பை அமெரிக்க மக்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு முன், ட்ரம்ப் ட்வீட் தட்டியதுதான் இதில் ஹைலைட்!

 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

'இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை!' துருவக்கரடிகளின் துயரம் சொல்லும் புகைப்படம்

 
 

காலநிலை மாற்றத்தையும் துருவக்கரடிகளின் கடைசி காலத்தையும் இதைத் தவிர வேறு எந்த முறையிலும் சொல்லிவிட முடியாது. உடல் மாறி, உருவம் மாறி, இடம் மாறி, வாழ்க்கை மாறி என எல்லாமே மாறிப்போய் கடைசியில் மறைந்தே போகிற கரடிகள் பற்றிய புகைப்படங்கள் மனதை உலுக்குகின்றன.

பால் நிக்கலன் சீ லீகஸி என்னும் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான பால் நிக்கலன் 2014-ம் ஆண்டு நார்வே நாட்டிலுள்ள ஸ்வால்பார்ட் கடற்கரை ஓரத்தில் இறந்த நிலையில் கிடந்த இரண்டு போலார் கரடிகளின்  உடல்களை புகைப்படம் எடுக்கிறார். அந்த புகைப்படங்களையும் கரடிகள் குறித்த தகவல்களையும் துருவக்கரடிகள்குறித்து ஆராய்ச்சி செய்கிறவர்களிடம் கொடுக்கிறார். “கரடிகள் உணவில்லாமல் பட்டினியால் இறந்திருக்கலாம்” என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

 

துருவக்கரடி

Photo Credit: Sealegacy / Caters News

ஆர்டிக் பனிப் பிரதேசங்களில் துருவக் கரடிகளுக்கு என்னதான் நடக்கிறது என்பதை அறிய வேண்டுமென்பதை முடிவு செய்கிறவர் தன்னுடைய சீ லீகஸி அமைப்பினரோடு சேர்ந்து துருவக்கரடிகள்குறித்த ஆவணப்படம் எடுக்க முடிவு செய்கிறார். பல இடங்களுக்குப் பயணித்து துருவக்கரடிகள்குறித்த காட்சிகளைப் பதிவு செய்கிறார். கடந்த வருடம் சர்வதேச துருவக்கரடிகள் தினத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறந்துபோன ஒரு துருவக்கரடியின் புகைப்படத்தைப் பதிவிட்டு “இந்த நாளில் நீங்கள் துருவக்கரடியின் அழகான புகைப்படத்தை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், உண்மையில் துருவக்கரடிகள் அப்படியான சூழ்நிலையில் இல்லை. மாறி வரும் காலநிலை மாற்றத்தால் கரடிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றன. காலநிலை மாற்றத்திற்கான காரணிகளை உடனே கண்டறிய வேண்டும்" எனப் பதிவிடுகிறார்.

ஆவணப்படுத்துவதின் ஒரு பகுதியாக  2017 டிசம்பர் 5-ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பால் நிக்கலன் துருவக்கரடிகுறித்த ஒரு காணொளியை வெளியிடுகிறார். ``பஃபின்  தீவில் இந்த துருவக்கரடியை படமெடுக்கும்பொழுது கனத்த இதயத்தோடு எடுக்க நேர்ந்தது. எலும்பும் தோலுமாக இருக்கிற இந்த துருவக்கரடி வயதானது இல்லை. கைவிடப்பட்ட இனுயிட் முகாமில்  உணவு தேடி அலைந்து கொண்டிருக்கிறது. அடுத்த சில நாள்களில் இது இறந்து விடும். இன்னும் 100 ஆண்டுகளில் துருவக்கரடிகள் முற்றிலும் அழிந்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் உலகத்திலுள்ள 25000 துருவக்கரடிகளும் இந்தக் கரடியைப் போலவே இறக்கும் என பால் நிக்கலன் பதிவிட்டிருக்கிறார். காலநிலை மாற்றத்தின் விளைவை உலகுக்கு இதைவிட வேறு எந்த வகையிலும் உணர்த்திவிட முடியாது. இயற்கையின் அழிவில் இது ஒரு தொடக்கம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

Polar bears

Photo Credit: Ashley Cooper / Global Warming Images

2015-ம் வருடம் ஆகஸ்ட் 20 அன்று கெர்ஸ்டின் லங்கன் பெர்கர் ஒரு ஜெர்மன் புகைப்படக்காரர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் துருவக்கரடிகள்குறித்த ஒரு  புகைப்படத்தை வெளியிட்டார்.  நார்வேயின் வடக்கே உள்ள ஆர்டிக் பெருங்கடலில் உள்ள ஸ்வால்பார்ட் என்ற தீவுப் பகுதியில் எழுந்து நடக்க முடியாமல் இருக்கிற உடல் மெலிந்த ஒரு துருவக்கரடி பற்றிய புகைப்படம் அது. "கரடி இன்னும் சில நாள்களுக்கு மேல் உயிர் பிழைக்காது என்று என்னோடு பயணித்த எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தது" கடல் பனிக்கட்டி உருகுதல் மற்றும் உணவு குறைவு ஆகியவற்றின் விளைவாக கரடிகளுக்கு இப்படியான, பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளின் சாத்தியக்கூறுகளையும் அவர் தெரிவித்திருந்தார்.

துருவக்கரடி

Photo Credit: Kerstin Langenberger / Facebook

பருவநிலை மாற்றம் வேகமாக நிகழ்வதால், வன விலங்குகள் தங்கள் இயற்கை வாழிடங்களை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்படுகிறது. இது  துருவப்பகுதிகளில் வாழும் பனிக்கரடிகளுக்கும் பொருந்தும். துருவப்பகுதிகளில் மனிதக் குடியேற்றம் அதிகரித்திருப்பதாலும், பனி உருகுவதாலும் பனிக் கரடிகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வருவதும், தாக்குவதும் அதிகரித்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கனடா, கிரீன்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுகளில் கடந்த இரு நுாற்றாண்டுகளில் நிகழ்ந்த பனிக்கரடி தாக்குதல்களின் எண்ணிக்கையை விஞ்ஞானிகள் ஒப்பிட்டனர். இதில், சராசரியாக, 10 ஆண்டுகளுக்கு எட்டு அல்லது ஒன்பது பனிக் கரடித் தாக்குதல்கள் நிகழ்ந்துவந்தன. ஆனால், கடந்த 2010 முதல் 2014க்குள் மட்டும், 15 தாக்குதல்கள் நிகழந்துள்ளன. எனவே, 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பருவநிலை மாற்றம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பனி உருகி கடல்மட்டம் உயர்வதால் துருவக்கரடிகளுக்கு முக்கிய உணவான சீல்கள்  கிடைப்பதில்லை. சீல்கள் கோடையில் வேகமாக வளர்ந்து போதுமான கலோரிகளைக் கொண்டிருக்கும். பனி உருகும்போது, சீல்களின் எண்ணிக்கை குறைகிறது.  

Polar bears

Photo Credit: Jenny E.Ross

சீல்களின்  எண்ணிக்கை குறைந்தால் என்ன நிகழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக 2011-ம் ஆண்டு ஜென்னி ரோஸ் என்னும் புகைப்படக்காரர் அதிர்ச்சி தரும் சில படங்களைக் வெளியிட்டார். அதில் துருவக்கரடி இன்னொரு துருவக்கரடியைக் கொன்று உணவாக உட்கொள்ளும் காட்சி பதிவாகி இருந்தது. இதற்கு முன்பாக வரலாற்றிலும் சரி; இயற்கையிலும் சரி இப்படி ஒரு மோசமான நிகழ்வு நிகழ்ந்ததே இல்லை என்கிறார் ஜென்னி ரோஸ்.  இயற்கை மோசமான ஒரு பாதைக்கு செல்கிறதாக அப்போது ஆய்வாளர்கள் கூறினார்கள். பனிக்கரடிக்கு இந்தப் பரிதாப நிலை ஏன் வந்தது எனும் கேள்வி ஒவ்வொருவருக்குள்ளும் எழும்.  இதற்கான பதில் எளிதானது. ஆனால், வேதனைக்குரியது!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

எவரெஸ்ட் மலையேறிய டாக்டரை, ‘ஒரு நிமிஷம் தலைசுத்த’ வைத்த வினோத நோய்!

 
 

ந்த நபர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி தனியாக தட்டுத் தடுமாறி முன்னேறிக் கொண்டிருந்தார். உற்சாகமாக ஆரம்பித்த பயணம்தான். ஆனால், தற்பொழுது அவரின் மனநிலை அதற்கு நேர் எதிர். உடலெங்கும் நடுக்கம். அணிந்திருந்த உடைகளைத் தாண்டி அவரின் எலும்புகளைக் குளிர் சீண்டிக் கொண்டிருந்தது. பற்கள் ஒன்றோடு ஒன்று இவரின் அனுமதியின்றி மோதிக்கொண்டன. எப்படியோ கடல்மட்டத்தில் இருந்து 8.2 கிலோமீட்டர் உயரத்துக்கு வந்திருந்தார். என்னதான் போராடினாலும் இனி அவ்வளவுதான் என்ற எண்ணமே அவருக்கு மேலோங்கியது. இதற்கும், அது பகல் வேலைதான். ஆனால், அவரிடம் தன்னம்பிக்கை என்பது கொஞ்சம் கூட இல்லை. பேசாமல் இங்கேயே நின்றுவிட்டு, கீழே தகவல் கொடுத்து யாரையேனும் உதவிக்கு அழைக்கலாம் என்று முடிவெல்லாம் எடுத்துவிட்டார்.

ட்ரெக்கிங் மனிதர்களின் மனநோய்

 

சட்டென ஜிம்மி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு நபர் வர, இருவரும் பேசிக்கொண்டே முன்னேறினர். மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட ஜிம்மி சோர்ந்துபோன இவரையும் உற்சாகப்படுத்த, இவருக்கும் தன்னம்பிக்கை துளிர்விட்டது. போராடி மலையேறிவிட்டார். அந்தப் பகல் முழுவதும் அவருடனே ஜிம்மி இருந்தார். ஆனால், அதன்பின் அவரை எங்கேயும் காண முடியவில்லை. அவர் எந்த ஊர், எங்கே போனார், எந்தக் கேள்விக்கும் பதிலில்லை! நிஜமாகவே 'ஒரு நிமிஷம் தலைசுத்திடுச்சு' மொமன்ட் அது.

2008-ம் ஆண்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது. அந்த மலையேறியவரின் பெயர் டாக்டர் ஜெர்மி வின்ட்சர். மயக்கவியல் (anesthetist) மருத்துவரான இவர் ஒரு மலைப்பிரியரும் கூட. எவரெஸ்ட் சிகரத்தை இவர் ஏற முயற்சிக்கும்போது, இவருக்கு நேர்ந்த இந்த வித்தியாசமான அனுபவம், அதைச் சுற்றி பின்னர் இவரின் குழுவே நடத்திய ஆராய்ச்சிகள், நமக்கு ஒரு விபரீத பிரச்னையை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றும் இதைச் சுற்றி தொடரும் ஆராய்ச்சிகள் மனித மூளை குறித்து பல அதிசயங்களை நமக்குப் புலப்படுத்தும் என்று இவர்கள் நம்புகிறார்கள். சரி, இங்கே என்ன பிரச்னை? ஜிம்மி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபர் உண்மையில்லை. அவர் முழுக்க முழுக்க டாக்டர் ஜெர்மி அவர்களின் கற்பனைக் கதாப்பாத்திரம். அவரை உற்சாகப்படுத்த, காப்பாற்ற, அவர் மூளையே உருவாக்கிக்கொண்ட கற்பனை நண்பன். இனியும் தெளிவாக சொல்லவேண்டுமானால், அந்த ஜிம்மியும் நம் ஜெர்மி தான்.

டாக்டர் ஜெர்மி வின்ட்சர்

Photo Courtesy: xtreme-everest.co.uk

உயரமான இடங்களில், மலைகளில் ஏறுபவர்களுக்கு உடல் ரீதியாகச் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பான விஷயம்தான். Acute Mountain Sickness (AMS) அல்லது Altitude Sickness என்று அழைக்கப்படும் இந்த நோய், குறைந்தபட்சமாகக் கடுமையான தலைவலி, தலைச்சுற்றல் எனவும், அதிகபட்சமாக மூளையில் வாதம் என்னும் அளவுக்கு ஆபத்தான பிரச்னைகளை வரவழைக்கும். இதன் மிக முக்கியக் காரணம், உயிர்காற்றான ஆக்சிஜன் இல்லாமல் நம் நுரையீரல் தவிப்பதே. அதுவரை, சமவெளிகளில் மட்டுமே இருந்து பழகிவிட்ட உடல், சட்டென மலைப்பிரதேசம் என்றதும் தன்னை அதற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ள மறுக்கிறது. அது மட்டுமின்றி, மலை ஏறுவது என்பது கடினமான உடற்பயிற்சி (ஆக்சிஜன் அதிகம் தேவை) என்பதால் ஒத்துழைக்க மறுக்கிறது. இதை எப்படித் தடுக்கலாம், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றெல்லாம் இப்போது பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள். டாக்டர் ஜெர்மி அவர்களுக்கு நிகழ்ந்த அந்த வித்தியாசமான சம்பவத்தைக்கூட பலரும் இந்த Acute Mountain Sickness (AMS) உடன்தான் சேர்த்திருந்தனர்.

தற்போது, இதுகுறித்து டாக்டர் ஜெர்மி அவர் குழுவுடன் செய்துள்ள ஆராய்ச்சியின் முடிவுகள் நமக்கு இந்த ஜிம்மி சம்பவத்தை வேறு ஒரு புது பிரச்னையாக முன்னிறுத்துகின்றன. “Isolated high-altitude psychosis” என்று பெயரிடப்பட்டிருக்கும் இது ஒரு தனி நோயாக, Altitude Sickness-லிருந்து விலகி நிற்கிறது. இந்த முடிவுக்கு வர, டாக்டர் ஜெர்மி அவர்களின் குழு, கிட்டத்தட்ட 10 வருடக் காலம் ஆராய்ச்சி நடத்தியிருக்கிறது. ஜெர்மி அவர்களுக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவம் போலவே வேறு எங்கெல்லாம் நடந்திருக்கிறது என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.

ட்ரேக்கர்களை தாக்கும் வினோத மனநோய்

ஜெர்மன் மலை வரலாற்றில் மட்டும் இதைப் போல 83 சம்பவங்கள் கிடைத்துள்ளன. குரல்கள் கேட்பது, சம்பந்தமே இல்லாத மனிதர்கள் திடீரென உதவிக்கு வருவது, தாக்க வருவது, என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை என்றாலும், திகிலுக்குப் பஞ்சமில்லை. Altitude Sickness என்பது முழுக்க முழுக்க உடலைப் பாதிக்கும் விஷயம் மட்டுமே. ஆனால், இதுவோ, மனதை மட்டுமே பாதிக்கிறது, கண்ணாமூச்சி ஆடவைக்கிறது. இந்த வகை சம்பவங்களுக்கு ஆளானவர்களின் மருத்துவக் கோப்புகளை எடுத்துக்கொண்டால், அவர்கள் அனைவருமே ஆரோக்கியமானவர்கள். இதைத் தவிர அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த ஜெர்மன் வரலாற்றைப் போல பல தரவுகளை ஆராய்ந்ததில் இந்த “Isolated high-altitude psychosis” என்ற நோய் சராசரியாக கடல்மட்டத்திலிருந்து 22,965 அடி (7,000 மீட்டர்) உயரத்தில் நிகழ்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால், தனக்கு தற்போது நிகழ்ந்துகொண்டிருப்பது நிஜமல்ல, ஒரு மனநோய், இது நம் மனதின் கற்பனை மட்டுமே என்பது அவர்களுக்கு அப்போது புரியவே புரியாது. இயல்பாகவே, யாரிடமும் சரியாக பழகாதவர்கள், அதிகம் பேசாதவர்கள் மலையேறினால், இந்த மனநோய் அவர்களைத் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறது டாக்டர் ஜெர்மி அவர்களின் குழு. மலையிலிருந்து கீழே இறங்கியவுடன் இந்த நோய் இருந்த தடம் தெரியாமல் மறைந்து விடுகிறது என்றாலும், மேலே இருக்கும்போது கொஞ்சம் கவனம் கலைந்தால்கூட, உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது.

தனிமையான பயணம்

“மலையேறுபவர்கள் இதுபோன்ற ஆபத்துகளைக் குறித்து அறிந்து வைப்பது அவசியம். இதைத் தடுப்பது எப்படி என்று அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தனியாக செல்லாமல் இருப்பது ஒரு சிறந்த முடிவு என்றாலும், செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், பாடல்கள் கேட்பது, தேவையான அளவுக்கு ஓய்வுகள் எடுப்பது மிகவும் அவசியம்” என்கிறது ஜெர்மியின் குழு.

 

இவர்கள் ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வரும் மார்ச் மாதம் முதல், நேபாள மருத்துவர்களுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த வகை மலைப்பிரதேசங்கள் மிகவும் பரிச்சயம் என்பதால் அவர்களின் உதவி நிச்சயம் கைகொடுக்கும். இதுமட்டுமின்றி, இமய மலை ஏறும் பலரிடம் பேசி, ஒரு கணக்கெடுப்பு எடுத்து தரவுகள் சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ‘பாகமதி’ ட்ரெய்லர்!

 
 

தேவசேனாவாக வந்து உலக சினிமா ரசிகர்களின் மனதைக் கட்டிப்போட்ட நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளிவரப் போகும் திரைப்படம் 'பாகமதி'. ஜி.அசோக் எடுத்திருக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது. அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன் ஜெயராம், உன்னி முகுந்தன் மற்றும் 'பாபநாசம்' படத்தில் கமலுடன் நடித்த ஆஷா சரத் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். 

பாகமதி

 

அனுஷ்காவின் 'பாகமதி' படத்தை வெகுவாக எதிர்பார்த்துவருகின்றனர் அனுஷ்காவின் ரசிகர்கள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வைரலான நிலையில் தற்போது ட்ரெய்லரை வெளியிட்டு இருக்கிறது 'பாகமதி' படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன்'. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் மிரட்டும் வகையில் உள்ளது. தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

 

 

 

 

  • தொடங்கியவர்

ஹெலிகாப்டரை மீட்ட பிரம்மாண்ட அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர்

ஜப்பானில் உள்ள ஓகினோவா கடற்கரையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதையடுத்து அதனை மீட்கும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

  • தொடங்கியவர்

3 பெண்கள்... 70 நாள்கள்... 24 நாடுகள்... - கோவை டு லண்டன் த்ரில் ட்ரிப்!

 

 

 

‘`சாகசத்தின் ருசியை அறிஞ்சவங்க அதை ஒருபோதும் விட மாட்டாங்க’’ என்று உற்சாகத்துடன் தொடங்குகிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம். இவருடன் கோவையைச் சேர்ந்த மீனாட்சி மற்றும் மும்பையைச் சேர்ந்த ப்ரியா இணைந்த கூட்டணி, பெண்கள் முன்னேற்றத்தை முன்னிறுத்தி 24 நாடுகளுக்குக் காரிலேயே பயணித்து அசத்தியிருக்கிறார்கள். நீண்ட பயணம் தந்த களைப்பால் ஓய்வெடுக்க புதுச்சேரி அருகிலுள்ள ஆரோவில் சர்வதேச நகரத்துக்கு வந்திருந்த மூகாம்பிகா, ‘கோவை டு லண்டன்’ சாகசப் பயணத்தில் தங்களின் சிறகாக மாறியிருந்த ‘டாடா ஹெக்ஸா’ காரைக் குழந்தையைக் கொஞ்சுவதுபோலத் துடைத்துக்கொண்டிருந்தார். நாம் சென்றதும், `பேசிக்கொண்டே போகலாமா?' என்று கேட்டது... ‘ஹெக்ஸா’விடம். 72 நாள்களில் 26 ஆயிரம் கிலோமீட்டரைத் தார்ச் சாலைகளில் கடந்த அந்தக் கார் நம்மைச் சுமந்துகொண்டு ஆரோவில் செம்மண் பாதைகளில் தவழ்ந்தது.

‘`பி.இ முடித்துவிட்டு வேலை, பிசினஸ் என்றிருந்தேன். 18 வயதில் நான் பைக் ஓட்டப் பழக ஆரம்பிக்கும்போதே, அம்மா எனக்கு காரும் வாங்கிக்கொடுத்துவிட்டார். ராஜஸ்தான், ஹிமாச்சல் தொடங்கி இந்தியாவின் 70 சதவிகிதப் பகுதிகளைக் காரிலேயே சுற்றிப்பார்த்து விட்டேன். எங்கள் பகுதியில் இருக்கிற குழந்தைகளை அவ்வப்போது ட்ரக்கிங் அழைத்துப்போவது, பழங்குடியின மக்களைப் பற்றி அவர்களுக்குப் புரியவைப்பது போன்ற பணிகள் என் இன்னொரு பக்கம்’’ என்று சரளமாகப் பேச ஆரம்பித்தார் மூகாம்பிகா.

76p1_1513853566.jpg

‘`கோவை டு லண்டன் ட்ரிப் எப்படி?’’

`‘இந்தோ-பிரெஞ்ச் சாலை திறந்தபோது 15 ஆண்களுடன் ஒரேயொரு பெண்ணாகத் தாய்லாந்து சென்றுவந்தவர் மீனாட்சி. அவர்தான், இந்தியா சுதந்திரம் வாங்கிய 70-வது ஆண்டை முன்னிட்டு கோவை டு லண்டன் 70 நாள் ரோடு ட்ரிப் ப்ளான் பற்றி முகநூலில் எழுதி என்னை `டேக்’ செய்திருந்தார். அந்த நிமிடமே போக முடிவு செய்துவிட்டேன். என் எட்டு வயது மகள் சர்வதாராவும் பச்சைக்கொடி காட்டிவிட்டாள்!”

‘`பாஸ்போர்ட், விசா நடைமுறைகள்?”

‘`பாஸ்போர்ட் ஏற்கெனவே இருந்தாலும், விசாவுக்கும் இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறவும் மிகவும் சிரமப்பட்டேன். சீனா, கிர்கிஸ்தான், மியான்மர் போன்ற நாடுகளில் எல்லாம் காருக்கான விசாவை வழங்க மட்டுமே ஒன்றரை மாதம் ஆகியது. பண மதிப்பிழப்புத் திட்டம், தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான அரசியல் சூழல் போன்றவை பெரும் சவாலாக அமைந்தன.’’

76p2_1513853629.jpg

‘`உணவு, மொழிப் பிரச்னைகள்?”

‘`சீனாவில் ஒரு ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது வெட்டுக்கிளி, ஈசல், கரப்பான் பூச்சியையெல்லாம் பெரிய பெரிய தட்டுகளில் குவித்துவைத்திருந்தார்கள். அதில் நாம் எதைச் சொல்கிறோமோ அதை உடனே ஃப்ரை செய்து தருவதாகச் சொன்னார்கள். நாங்கள் வட்ட வட்டமாக வெட்டிவைக்கப்பட்டிருந்த மீனைக் காட்டி னோம். பிறகுதான் தெரிந்தது அது பாம்பு என்று. அதோடு நாங்கள் சீனாவில் இருந்த 18 நாள்களும் ரெடிமேடு உணவுகளைத்தான் சாப்பிட்டோம். எனவே, நன்றாக இளைத்திருந் தோம். இந்தியாவைவிட்டு வெளியேறிய பின் ஆங்கிலம் கைகொடுக்கவில்லை. பர்மாவில் பர்மீஸ், தாய்லாந்தில் தாய்தான் பேசுகிறார்கள். கடைசி நாள் லண்டனில்தான் எங்களுக்கு ஆங்கிலம் பயன்பட்டது. கைடு, சைகை மொழி எனச் சமாளித்தோம்!”

‘`இந்தியாவைப் பற்றி மற்ற நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்?’’

‘`அனைத்து நாட்டு மக்களுமே இந்தியா மீது காதல்கொண்டுள்ளனர். பாபரும் தாஜ்மஹாலைக் கட்டிய தலைமை மேஸ்திரியும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், அம்மக்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கிறார்கள். கஜகிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் என்பதுபோல இந்தியாவை இந்துஸ்தான், இந்துமா என்றுதான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பழைய சோவியத் ரஷ்யா மக்கள் அனைவரும் ராஜ்கபூரின் அதிதீவிர ரசிகர்கள். விசா இல்லாமல் ரஷ்யாவுக்குள் அனுமதிக்கப்பட்ட ஒரேயொருவர் ராஜ்கபூர் மட்டும்தான். இன்றும் இந்தியா என்றால் அவர்கள் ராஜ்கபூர், ஹேமமாலினி போன்றவர்களோடுதான் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்களுக்கு நான் எடுத்துச்சென்ற ஸ்டிக்கர் பொட்டுகளை வைத்துவிட்டபோது அவ்வளவு சந்தோஷம் அவர்கள் முகத்தில். அந்தளவுக்கு அவர்கள் நம் கலாசாரத்தை விரும்புகிறார்கள்.’’

76p3_1513853608.jpg

‘`பயணச் சவால்கள்..?”

‘`ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழையும்போது வயிற்றில் புளியைக் கரைக்கும். அனைத்து நாடுகளிலும் இமிக்ரேஷனில் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொள்வார்கள். தாய்லாந்தில், ‘விசா ஓகே. ஆனால், காருக்கான தற்காலிக அனுமதிச் சான்றிதழ் இல்லை. அதனால் காரை அனுமதிக்க முடியாது’ என்று அங்கிருந்த அதிகாரிகள் சொல்ல, கால்களுக்குக் கீழிருந்த தரை நழுவுவதுபோலிருந்தது எங்களுக்கு. ‘ப்ளீஸ் சார், கம்மிங் ஃப்ரம் இண்டியா, த்ரீ கேர்ள்ஸ், இந்தியா டு லண்டன், ரோடு ட்ரிப்’ என்று கெஞ்சி காரிலிருந்த ரூட் மேப்பையெல்லாம் காட்டினோம். ஆனால், அவர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் நண்பர் ஒருவரின் மூலமாகத் தாய்லாந்து முன்னாள் பிரதமரின் உதவியுடன் தாய்லாந்து மற்றும் லாவோஸைக் கடந்து சீனாவுக்குள் சென்றோம்.

சீனச் சாலைகள் சூப்பரோ சூப்பர். எட்டு கிலோ மீட்டர்வரை மலை களைக் குடைந்து சுரங்கச் சாலைகளை உருவாக்கி, அதனுள்ளேயே கொண்டை ஊசி வளைவுகள் என அசத்தி யிருந்தார்கள். அந்நாட்டின் கோபி பாலைவனத்தைக் கடக்கும்போது காரையே கவிழ்த்துவிடும் அளவுக்கு வீசிய காற்று... திகில்!

ஆசியாவின் ஸ்விட்சர்லாந்து என்று கிர்கிஸ்தானைச் சொல்லலாம். வைப்பர்கள்கூடச் செயல்படாத அதன் கடுமையான பனிப்பொழிவில் 200 கிலோமீட்டர் தொலைவுவரை 20 கிலோமீட்டர் வேகத்திலேயே டிரைவ் செய்தது சவாலான அனுபவம். ஸ்டீரியங்கை அழுத்திப் பிடித்ததால் அன்று இரவு கைகளையும் தோள்களையும் அசைக்கமுடியாத அளவுக்கு வலி. இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு முன்னரே அனைத்து நாடுகளிலிருக்கும் நம் தூதரகங்களுக்கும் ரோட்டரி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருந்ததால் பெரும்பாலான நாடுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்திருந்தார்கள்.

76p4_1513853587.jpg

கிர்கிஸ்தானிலிருந்து வெளியேறி உஸ்பெகிஸ் தானுக்குள் போகும்போது சிக்கல் ஏற்பட, அதிகாரிகளிடம் மீண்டும் ‘கம்மிங் ஃப்ரம் இண்டியா, த்ரீ கேர்ள்ஸ், இந்தியா டு லண்டன், ரோடு ட்ரிப், ப்ளீஸ் ஹெல்ப்’ பாடலை ஆரம்பித்துவிட்டோம். அப்போது  திடீரென அந்த அதிகாரிகள் அனைவரும் அலறிக்கொண்டே கூடாரத்தைவிட்டு வெளியேறிவிட்டார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு ‘எர்த்க்வேக்... எர்த்க்வேக்’ என்று அவர்கள் கத்தியபோதுதான் நிலநடுக்கம் என்று புரிந்துகொண்டு நாங்கள் வெளியே ஓடிவந்தோம். மறுநாள், நாங்கள் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்டில் இரவு ஒரு மணிக்கு ஏதோ வித்தியாசமாக உணர்ந்ததால் ஜன்னலைத் திறந்தோம். பார்த்தால், நிலநடுக்கத்தை உணர்ந்து ஊரே நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தது. அந்த நாட்டிலிருந்த இரண்டு நாள்களில் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

பீதியோடு அங்கிருந்து வெளியேறும்போது மீண்டும் சோதனை. காரில் காலுக்குக் கீழே போடுவதற்காகத் தினசரி செய்தித்தாள்களை அந்த நாட்டில் ஒரு கட்டு வாங்கி வைத்திருந்தோம். அதில் அந்நாட்டுத் தலைவரின் புகைப்படம் இருந்ததால் கடிந்துகொண்டார் ஓர் அதிகாரி. அப்புறம் அவருக்கு இந்தியன் ஸ்வீட் என்று சொல்லி, கடலை மிட்டாயைக் கொடுத்தோம். லண்டன் சென்று சேரும்வரை அனைத்து நாட்டு அதிகாரிகளுக்கும் அதைத்தான் கொடுத்தோம்” என்று சொல்லிச் சிரிக்கிறார்.

‘`அடுத்த பயணம்..?’’

``விரைவில்... புற்றுநோய் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகக் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை செல்லத் திட்டம்...”

ஹேப்பி ரோட்ஸ்... ஹேப்பி கேர்ள்ஸ்!

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.