Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பாலஸ்தீனத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை விவாதங்களுக்கு அனுமதி அளித்த நாள் - ஜன.12- 1976

 
அ-அ+

பாலஸ்தீன விடுதலை இயக்கத்த்திற்கு ஐ.நா. பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐ.நா. பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.

 
பாலஸ்தீனத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை விவாதங்களுக்கு அனுமதி அளித்த நாள் - ஜன.12- 1976
 
பாலஸ்தீன விடுதலை இயக்கத்த்திற்கு ஐ.நா. பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐ.நா. பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1853 - தாய்பிங் ராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.
 
* 1875 - சீனாவின் மன்னானாக குவாங்-சூ முடி சூடினான்.
 
* 1908 - முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
 
* 1915 - அமெரிக்கக் காங்கிரஸ் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
 
* 1918 - பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.
 
* 1940 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியது.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.
 
* 1964 - சான்சிபாரின் புரட்சிவாதிகள் சன்சிபார் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.

* 1967 - எம்.ஜி.ஆர். கொலை முயற்சி: நடிகர் எம். ஆர். ராதாவால் எம்.ஜி. ராமச்சந்திரன் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
 
* 1970 - நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
 
* 1976 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஐ.நா. பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐ.நா. பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.
 
* 1992 - மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
 
* 2004 - உலகின் மிகப்பெரும் பாயணிகள் கப்பலான ஆர்.எம்.எஸ். குயீன் மேரி 2 தனது பயணத்தை ஆரம்பித்தது.
 
* 2005 - புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.

* 2006 - சவுதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.
 
* 2006 - 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாப்பரசர் இரண்டாம் ஜான்பாலை சுட்டுக் காயப்படுத்திய மெஹ்மேட் அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
 
* 2007 - மாக்னாட் வாள்வெள்ளி சுற்றுப்பாதை வீச்சுக்குக் கிட்டவாக வந்து 40 ஆண்டுகளில் தெரிந்த மிகவும் பிரகாசமான வால்வெள்ளியானது.

http://www.maalaimalar.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வெற்றியை எப்போது நீங்கள் நழுவவிடுகிறீர்கள் தெரியுமா? - உண்மை உணர்த்தும் கதை! #MotivationStory

 
 

கதை

`ங்களுக்கான வாய்ப்பு வரும்போது, நீங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம்’ என்கிறார் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli). நமக்குக்குக் கிடைத்திருப்பது நல்ல வாய்ப்பு என்பதைப் புரிந்துகொள்ளாமல் நழுவவிடுபவர்கள், வெற்றியையே நழுவவிடுகிறார்கள். வரலாறு படைத்தவர்கள் எல்லோருமே சரியாக வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டவர்களே! `நமக்கு அதிர்ஷ்டம் வரவில்லை’ என்று சோர்ந்துபோய் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லோருமே தங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் என்று புரிந்துகொள்ளலாம். இதை அழுத்தம் திருத்தமாக விளக்கும் கதை இது!

 

பொங்கல் வந்துவிட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாகிவிட்டன. நம்மூரில் ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவது வீரம். பல மேற்கத்திய நாடுகளில் காளையை ஒரு பெரிய மைதானத்தில் அங்குமிங்கும் ஓடவைத்து, அதற்குக் கோபமூட்டி, அலைக்கழித்து, ஈட்டியால் குத்திக் கொல்வது (Bullfighting) ஒரு வகை விளையாட்டு. ஸ்பெயின், போர்ச்சுக்கல், தான்சேனியா, ஃபிரான்ஸ்... எனப் பல நாடுகளில் இன்றும் `புல்ஃபைட்டிங்’ நடைபெறுகிறது. நம் ஊரில் மட்டுமல்ல, நல்ல ஆஜானுபாகுவான காளையிடம் மோதுவது வீரம் என்கிற கருத்து பரவலாகவே இருக்கிறது. காளையை அடக்குகிற ஆண்மகனுக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் தந்தைகள் உலகமெங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை உணர்த்தும் ஃபிரெஞ்சு நாட்டுப்புறக் கதை இது.

ஃபிரான்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் இருந்தான். அதே கிராமத்தில் வசிக்கும் ஓர் இளம் பெண் மேல் அவனுக்குக் காதல். அவளுக்கும் அவன் மேல் இஷ்டம்தான். ஆனால், தந்தை இதற்கு சம்மதிக்க வேண்டுமே என்கிற பயம் அந்தப் பெண்ணுக்கு இருந்தது. ஒருநாள் அவனை அழைத்துத் தெளிவாகச் சொல்லிவிட்டாள்... ``எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்தான். ஆனா, என் அப்பா சம்மதிக்காம பண்ணிக்க மாட்டேன்...’’

இளைஞன், அந்தப் பெண்ணின் தந்தையை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டான். ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரைச் சந்திக்கக் கிளம்பினான். அவரு ஒரு விவசாயி. அவருக்கு அவனை நன்றாகத் தெரியும். அவன், தன் மகளைச் சுற்றிச் சுற்றி வருவதை அவரும் அறிவார். அவன் வந்ததும், ``வா தம்பி... என்ன விஷயம்?’’ என்று கேட்டார்.

ஃபுல்பைட்டிங்

``ஐயா... நான் உங்க மகளை ரொம்ப நேசிக்கிறேன். அவளை எனக்குக் கல்யாணம் செஞ்சு தருவீங்களா?’’ என்று கேட்டான் இளைஞன்.

ஒரு கணம் யோசித்தார். `பையனும் நல்லவன்தான். ஆனால், காலம் முழுக்கத் தன் மகளைவைத்துக் காப்பாற்ற வேண்டுமே!’ - இந்த யோசனையும் வந்தது. ``தம்பி... நீ என் மகளைக் கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிக்கிறேன். ஆனா, ஒரு கண்டிஷன்...’’

``சொல்லுங்க... எதுவாயிருந்தாலும் செய்யறேன்.’’

``அப்போ சரி. என்கூட வயலுக்கு வா. வயலுக்கு நடுவுல மாட்டுக்கொட்டகை இருக்கு. அதுல இருந்து ஒண்ணொண்ணா மூணு மாடுகளை அவிழ்த்துவிடுவேன். நீ மாட்டோட வாலைப் பிடிக்கணும். ஏதாவது ஒரே ஒரு மாட்டோட வாலை நீ பிடிச்சுட்டாக்கூட என் மகளை உனக்குக் கல்யாணம் பண்ணித் தந்துடுறேன்.’’

இளைஞன் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டான். அவருடன் வயற்காட்டுக்குப் போனான். மாட்டுக்கொட்டகைக்கு முன்னால் தயாராக மாட்டின் வாலைப் பிடிக்கக் காத்திருந்தான். கதவு திறந்தது. `ஒரு மாடு வரும்... அதன் வாலைப் பிடிக்கணும்’ என்று காத்திருந்தவன், அதிர்ந்துபோனான். வெளியே வந்தது, மிக பிரமாண்டமான வடிவில், மிரட்டுகிற மாதிரியான தோற்றத்திலிருந்தது. அவன் பயந்துபோய் விலகி நின்றான்.

`நமக்கு இன்னும் ரெண்டு வாய்ப்பு இருக்கு... பார்த்துக்குவோம்’ என்று நினைத்துக்கொண்டான். `மாட்டை நேருக்கு நேரா எதிர்கொண்டால் அதன் வாலைப் பிடிக்க முடியாது’ என்று அவனுக்குத் தோன்றியது. அதனால், கொட்டகையின் பக்கவாட்டில் நின்றுகொண்டான்.

``என்ன ரெடியா?’’ விவசாயி குரல் கொடுத்தார்.

``ரெடி’’ என்றான் இளைஞன்.

கதவு திறந்தது. இரண்டாவதாக வந்தது, முதல் மாட்டைவிட மிகப் பெரியது. அந்த உருவத்தைப் பார்த்தே மிரண்டுபோன இளைஞன் அதன் வாலையும் பிடிக்காமல் தவறவிட்டுவிட்டான். இனி அவனுக்கு இருந்தது கடைசி வாய்ப்பு.

``என்னப்பா, கதவைத் திறக்கட்டுமா?’’ விவசாயியின் குரல் கொட்டகைக்குள்ளிருந்து கேட்டது.

மாட்டின் வால்

``திறக்கலாம்.’’

இப்போது இளைஞன் முழுக்கத் தயாராகிவிட்டான். `இந்த மாட்டின் வாலைப் பிடித்தே ஆக வேண்டும். வேறு வழியில்லை.’ கதவு திறந்தது. வெளியே வந்தது ரொம்ப நோஞ்சானான மாடு. அதைப் பார்த்ததும் இவனுக்கு தைரியம் அதிகமாகிவிட்டது. சரியாக அது ஓடி வரும் நேரத்தைக் கணித்துக்கொண்டு அதன் வால் பகுதி இருக்கும் இடத்தை நோக்கிப் பாய்ந்தான். அப்போதுதான் தெரிந்தது, அந்த மாட்டுக்கு வாலே இல்லை என்பது!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

விவேகானந்தர் பிறந்தநாள் இன்று...பொன்மொழிகளை ஏற்று வாழ்வோம்!

 
vivekamjpg

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று. இந்த நாளில்... அவரின் கருத்துகளை உள்வாங்கி, பின்பற்றுவோம். சுவாமி விவேகானந்தரைப் போற்றுவோம்!

* இந்த உலகில் பிறந்த நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையெனில், உங்களுக்கும் மரங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமலே போய்விடும்!

* அடக்கப்படாமல் உள்ள மனமும் அற வழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும் அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுக்காப்பைத் தந்திடும். உலக பந்தங்களில் இருந்து விடுதலை அளிக்கும்!

* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை, ஞானம் உதிக்கும். அந்த உண்மையும் ஞானமும்தான் நம்பிக்கை!

* கபடம் இல்லாத நாத்திகன், வஞ்சகனை விடச் சிறந்தவன்!

* எவர் ஒருவருடைய நெஞ்சம், ஏழை மக்களுக்காக, அவர்களின் துயரத்தில் அழுமோ, அவரை நான் மகாத்மா என்பேன்!

* காமம், பொன்னாசை ஆகியவற்றால் ஆளப்படுகிற அற்பர்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை!

* அன்பு நெறியில் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறையே மதம் எனப்படும்!

* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய முடியாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். உண்மையும் சத்தியமுமே அந்தப் பலத்தைக் கொடுக்கும்!

* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேடுகளை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருகிறது. நம் உண்மை இயல்பை, நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதால்தான் நமக்குள் அச்சமே ஏற்படுகிறது.

* கோழைகளே பாவ காரியங்களைச் செய்கிறார்கள். தைரியம் கொண்டவர்கள், பாவம் செய்யமாட்டார்கள்.

* முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக் கொண்டால், முதலாளியாகும் தகுதியானது பிறகு தானாகவே வந்துவிடும்!

* அன்பு உடையவனே வாழ்பவன். சுயநலம் உடையவனோ செத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் அர்த்தம்!

* எந்த வேலையாக இருந்தாலும் அதை தன் விருப்பத்துக்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி!

* தன்னை அடக்கிக் கொள்ளப் பழகிக் கொண்டவன், வேறு எதற்குள்ளேயும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் வாழத் தகுதியானவன்!

* பலமே வாழ்வு! பலவீனமே மரணம்!

* உறுதியானவனாக இரு. அதற்கும் மேலாக, தூய்மையானவனாகவும் முழு அளவில் சிரத்தை கொண்டவனாகவும் இரு. வெற்றி தேடிவரும்!

http://tamil.thehindu.com

 

 

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் (ஜன.12- 1863)

 
அ-அ+

சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893-ம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின்

 
 
 
 
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் (ஜன.12- 1863)
 
சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893-ம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில்  தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.

கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 ஜனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள், தனது 39-ம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பிள்ளைகளின் கல்விக்காக மலையைத் தகர்த்த ஆதிவாசி!

 

 

பிள்ளைகளின் கல்விக்குத் தடையாக இருந்த மலையைக் குடைந்து எட்டு கிலோ மீற்றர் பாதையை உருவாக்கியிருக்கிறார் ஆதிவாசித் தந்தை!

2_Nayak.JPG

ஒடிஷாவின் பின்தங்கிய மாவட்டமான புல்பானியின் தொலைதூரக் கிராமம் கும்சாஹி. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால், கிராம மக்கள் அனைவரும் இங்கிருந்து வெளியேறிவிட்டனர், ஜலந்தர் நாயக் (44) என்ற ஆதிவாசியைத் தவிர!

படிப்பறிவே இல்லாத நாயக் தனது மூன்று மகன்களையும் கற்பிக்க வேண்டும் என விரும்பினார். எனினும் அதற்குத் தடையாக இருந்தது ஒரு குன்று! அந்தக் குன்றைச் சுற்றி பாடசாலைக்குச் செல்வதற்கு பல மணி நேரம் ஆகும் என்பதால் அவரது பிள்ளைகள் பாடசாலை செல்ல மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த நாயக், இரண்டு வருடங்களுக்கு முன் சுத்தியல், இரும்பு உளி மற்றும் மண்வெட்டியுடன் களமிறங்கினார்.

நாளொன்றுக்கு எட்டு மணிநேரம் வீதம் இரண்டு வருடம் விடாமுயற்சியாகப் போராடிய நாயக், அண்மையில் தனது கிராமத்துக்கும் பிரதான வீதிக்கும் இடையிலான எட்டு கிலோ மீற்றர் தூரத்தை இணைத்தார்.

இந்தச் செய்தியை பத்திரிகை மூலம் அறிந்த புல்பானி மாவட்ட ஆளுனர், நாயக்கை அழைத்துப் பாராட்டியதுடன், இரண்டு வருடங்கள் அவரது அயராத உழைப்புக்கு சம்பளம் ஒன்றை அரசு சார்பாகப் பெற்றுத் தரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

ஆரோக்கியமான நகங்களையும் கேசத்தையும் பெறுவது எப்படி? உங்கள் முடி ஆரோக்கியமாக இருக்க பல வகையான ஊட்டச்சத்துகள் தேவை.

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: அஜந்தா குகை ஓவியங்கள்

 

shutterstock84269365
shutterstock570580348
shutterstock84269365
shutterstock570580348

இந்தியாவில் இருக்கும் குகை ஓவியங்களில் அஜந்தா மிகவும் புகழ்பெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் இருக்கிறது அஜந்தா கிராமம். இங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் அழகான சிற்பக் குகைகள் இருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மக்களின் வாழ்க்கை முறை. கலை, கட்டிடக்கலை போன்றவை உன்னத நிலையில் இருந்ததை இந்த ஓவியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

   
shutterstock696146623
 

புத்தர் தன்னுடைய உருவத்தை ஓவியங்களாகவோ, சிற்பங்களாகவோ உருவாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவருக்குப் பின் வந்த சீடர்கள் புத்தமதக் கொள்கைகளை வெளி உலகத்துக்குச் சொல்லவும், பரப்பவும் விரும்பினர். அதனால் புத்தரின் உருவத்தை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் வடித்தனர். இயற்கையான குகைகள் மட்டுமல்லாமல் செயற்கையான குகைகளையும் உருவாக்கினர். மழைக் காலங்களில் தங்குவதற்கு மடாலயங்களையும், வழிபடுவதற்கு வழிபாட்டு ஸ்தலங்களையும் அமைத்தனர்.

அஜந்தா குகைகள் வகோரா நதியின் பள்ளத்தாக்கில் சயாத்ரி குன்றின் மேல் அமைந்துள்ளன. அமைதியான அழகான சூழல் கொண்ட இந்த இடத்தில் 30 குகைகள் உருவாக்கப்பட்டன. இவை குதிரையின் குளம்பு போன்ற வடிவத்தில் அமைந்துள்ளன. இந்தக் குகைகள் இரு காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ளன. கி.மு. 2-ம் நூற்றாண்டில் சாதவாகன மன்னர்கள் 9, 10, 12, 15 எண்களுடைய குகைகளை அமைத்திருக்கிறார்கள். கி.பி. 5-ம் நூற்றாண்டில் ஹரிசேனா மன்னர் 20 குகைகளை அமைத்துள்ளார். அஜந்தா குகைகள் கி.பி. 7-ம் நூற்றாண்டுவரை பலரும் தங்கும் இடமாக இருந்துள்ளது. கி.பி 7-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீனப் பயணி யுவான்சுவாங் அஜந்தா குகைகளைப் பார்வையிட்டிருக்கிறார். பிறகு அஜந்தா குகைகளின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. மரங்களும் புதர்களும் அடர்த்தியாக வளர்ந்து குகைகளை முற்றிலுமாக மறைத்துவிட்டன. அதனால் குகை பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

1819-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜான் ஸ்மித் வேட்டையாடச் சென்றபோது இந்தக் குகைகளைக் கண்டுபிடித்தார். மீண்டும் அஜந்தாவின் பெருமை வெளி உலகுத்துக்குத் தெரிய ஆரம்பித்தது.

மிகப் பெரிய தூண்களுடன் கூடிய மண்டபங்கள், புத்தரின் சிலைகள், ஓவியங்கள் என ஒவ்வொரு பகுதியும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அஜந்தா ஓவியங்களில் அடர்ந்த ஆரஞ்சு, நீலம், பச்சை போன்ற நிறங்கள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட பாணியில் ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். முதலில் உளியால் பாறைகளைச் செதுக்கி, அதன்மீது களிமண், சுண்ணாம்பு, வைக்கோல் துகள், சாணம் ஆகியவற்றால் தயாரித்த கலவையைப் பூசியுள்ளனர். ஈரமாக இருக்கும்போதே இயற்கையான நிறமிகளை வைத்து ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். திறமையான தொழில்நுட்பம் தெரிந்தவர்களால் மட்டுமே இவற்றை உருவாக்கியிருக்க முடியும். 1500 ஆண்டுகள் கடந்தும் இந்த ஓவியங்கள் நிலைத்து இருப்பதற்குக் காரணம் அந்த கலைஞர்களின் நுட்பமே!

முதல் குகை இன்றுவரை மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மிகப் பெரிய புத்தர் உருவம் இங்கே செதுக்கப்பட்டுள்ளது. நேராகப் பார்க்கும்போது புன்னகையுடனும் பக்கவாட்டில் சோகமாகவும் தெரியும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது!

shutterstock259103522
 
shutterstock268775375

இரண்டாவது குகை மடாலயமாகப் பயன்பட்டிருக்கிறது. இங்குள்ள சுவரில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. 6-வது குகை இரண்டு அடுக்காக அமைக்கப்பட்டுள்ளது. கி.மு. 2-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட 9-வது குகையைத்தான் ஜான் ஸ்மித் கண்டுபிடித்தார். 10-வது குகை மிகவும் பழமையானது. சாரநாத்தில் புத்தரின் முதல் பிரசங்கம், ஜாதகக் கதைகள் போன்றவை இங்கு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

16-வது குகை ஓவியங்களுடன் கூடிய மிக அழகான குகையாகக் கருதப்படுகிறது. 17-வது குகையில் சுவற்றில் மட்டுமல்லாமல் மேற் கூரையிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 26-வது குகையில் படுத்திருக்கும் நிலையில் புத்தரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது, அதன்கீழ், அவருடைய சீடர்கள் கவலையாகவும், தேவதைகள் மலர்ந்த முகத்துடன் புத்தரை வானுலகுக்கு வரவேற்பது போலவும் செதுக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த சுவாரயஸ்மான தகவல்கள் குறித்த சிறப்பு தொகுப்பு

  • தொடங்கியவர்

``நிறைய வாசிங்க... கொஞ்சம் யோசிங்க... ஸ்ட்ரெஸ் தானா போயிடும்!” - பட்டிமன்றம் ராஜா #LetsRelieveStress

 
 

ட்டிமன்றம் ராஜா வங்கி அதிகாரி; பட்டி மன்ற நடுவர்; பேச்சாளர். எளிய வாழ்வியல் உதாரணங்களாலும், சம்பவங்களாலும் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்கவைப்பவர். பேச்சாளராக பட்டிமன்றங்களில் இவரது அணி, பெரும்பாலும் தோல்வியைத் தழுவும். ஆனாலும் இவரது வாதத் திறமைதான் அந்த ஒட்டுமொத்த பட்டிமன்றத்தையே சுவாரஸ்யமானதாக மாற்றியிருக்கும். ராஜா ஸ்ட்ரெஸ் பற்றியும் அதிலிருந்து தான் விடுபட மேற்கொள்ளும் விதம் பற்றியும் விவரிக்கிறார் இங்கே... 

பட்டிமன்றம் ராஜா

 

“மனஅழுத்தம் அல்லது ஸ்ட்ரெஸ் என்பது இன்றைக்கு எல்லோராலும் உணரப்படுகிற, பேசப்படுகிற விஷயமாக இருக்கு. 'நான்  இன்னிக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் அவுட்டாக இருக்கேன். ஒரு மாதிரி மூட் அவுட் ஆகிடுச்சு. தலைவலி வந்துடுச்சு'னு எல்லாருமே பேசுறாங்க. 

எல்லாருமேன்னா..., வயதானவங்க, ஏதோ ஒரு வேலைக்குப்போறவங்கனு இல்லை... சின்னப் பசங்க வரைக்கும் இந்தப் பிரச்னை காலையிலேயே ஆரம்பிச்சிடுது. `ஸ்கூலுக்குப் போகணும்னாலே ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கு’, `அந்த கெமிஸ்ட்ரி வாத்தியாரைப் பார்த்தாலே பயமா இருக்கு.’ - இப்படி கல்லூரி மாணவர்கள்ல இருந்து பள்ளிக்கூடக் குழந்தைங்க வரைக்கும் பேசுறாங்க.

நான், சாதாரணமான ஒரு கிராமத்துல வளர்ந்தவன். வெறும் மெழுகுவத்தியும் அரிக்கேன் விளக்கும்தான் படிக்கிறதுக்கான வெளிச்சத்தை எனக்குத் தந்தது. பொழுதுபோக்கு சாதனம்னு எதுவும் கிடையாது.

பட்டிமன்றம் ராஜா

எப்போ ஸ்கூலைவிட்டு வர்றோமோ, அப்போல்லாம் எங்களுக்கு விளையாட்டுதான். ஓய்வு நேரம்ங்கிறது விளையாடுறதுக்காக அர்ப்பணிக்கப்பட்ட காலம் அது. எப்பல்லாம் ஸ்கூலைவிட்டு வர்றோமோ, காலேஜைவிட்டு வர்றோமோ, அப்பல்லாம் பக்கத்துல இருக்கிற கிரவுண்டுல கபடி விளையாடுறது, தென்னை மட்டையைவெச்சு கிரிக்கெட் விளையாடுறதுனு இருப்போம். 

வெளி உலகம் என்பது, எங்களுக்கு எல்லா வகையான ரிலீஃபையும் கொடுத்துச்சு. நண்பர்களுடன் போடுற சண்டைகூட ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அங்கே தெருவுல எங்கேயோ ஒரு கார், லாரினு ஒரு வாகனம் போகும். அதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்போம். 

எங்கேயோ வானத்துல ஒரு புள்ளி மாதிரி விமானம் போகும். அதைத் துரத்திக்கிட்டே ஓடுவோம். மாலை நேரத்துல சீக்கிரமே வந்துவிடுகிற சந்திரனைப் பார்க்கறது இல்லைன்னா சூரியன் மறைகிற காட்சிகளைப் பார்க்குறது, கூடு நோக்கி பறந்து வரும் வண்ணமயமான பறவைகளைப் பார்க்குறது... இதெல்லாம் எங்களுக்குச் சாதாரண நிகழ்வுகள். 

இன்னிக்கு விடிவானத்தைப் பார்க்கிற பிள்ளைகளே இல்லாத உலகம். அப்போல்லாம் நாங்க விவசாயம் முடியுற அறுவடைக் காலங்களில் வயல்வெளிக்குப் போய், அவங்களோட நிப்போம். வைக்கோலை அள்ளிப்போட்டு விளையாடுவோம். 

பட்டிமன்றம் ராஜா

இதெல்லாத்தையுமே பயங்கர இன்வால்வ்மென்ட்டோட செய்வோம். அதனால ஸ்ட்ரெஸ்ங்கிற வார்த்தையை நாங்க கேட்டதே இல்லை. அது எப்படி இருக்கும்னு பார்த்ததில்ல, உணர்ந்ததில்லை. ஆனா, இன்னைக்கு ரெண்டரை வயசுகூட ஆகாத குழந்தையிடம் தங்களுடைய கனவுகளை விதைக்கிறார்கள் பெற்றோர். ஒரு சின்ன உலகத்துல தங்களைத் திணித்துக்கொள்ளவெச்சது இந்த வாழ்க்கைமுறைதான்.
அப்புறம் இந்த மொபைல் இருக்கே... இது இல்லாத காலத்துல நாம இன்னும் கொஞ்சம் ஃப்ரீயாக இருந்திருப்போம்னு நினைக்கிறேன்.

எல்லாரும் யோசிச்சுப் பார்க்கணும். இது கைக்கு வந்தவுடனேயே உலகத்தில் நாடுகளுக்கு இடையே, நகரங்களுக்கு இடையே இருக்கும் தூரங்கள் குறைஞ்சிருக்கு. ஆனா, நமக்குள் இருக்கும் ஸ்ட்ரெஸ் அதிகமாகியிருக்கு. எந்த நேரமும் முகத்தை 'உம்'முனுவெச்சிக்கிட்டு, மனத்தை இறுக்கமா வெச்சிருக்கிறவங்க கூட இருந்தாலே நமக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகிடும்.

நம்ம வீடுகள்லயே ஒருத்தருக்கொருத்தர் உரையாடுவது குறைஞ்சு போயிடுச்சு. வீட்டுக்குள்ளேயே இருக்கும் குடும்ப உறவுகளிடம் கலகலப்பு குறைஞ்சதுதான் நமக்கு ஸ்ட்ரெஸ் வந்ததுக்கு  முதல் காரணம்.  வாய்விட்டுச் சிரிச்சா ஸ்ட்ரெஸ் போயிடும். இல்லை, அடுத்தவங்களைச் சிரிக்கவெச்சா போயிடும். மத்தவங்களை சிரிக்கவெக்கிறது மகிழ்ச்சியான விஷயம். 

ஸ்ட்ரெஸ் எதனால வருது? எல்லாத்துக்கும் அநாவசியமா ஆசைப்படுறதுனால வரும். எல்லாத்துக்கும் அநாவசியமாக் கோபப்படுறதுனால வரும்.  `நாம ஒரு சமூகத்துல கூட்டா வாழுறோம், எல்லாரையும் அனுசரிச்சுப் போவோம்’கிற இங்கிதம் தெரியாத மனிதர்களால் வரும்.

பட்டிமன்றம் ராஜா

பசங்களை அடிக்கிறது, அந்தக் காலத்துல எல்லா இடங்களிலும் வாடிக்கை. அடி வாங்காம அப்போ யாருமே வளர்ந்திருக்க முடியாது. அப்பா அடிப்பார். வாத்தியார் அடிப்பார். அம்மா கண்டிப்பாங்க. ஏன், கல்லூரிகளில்கூட லெக்சரர் அடிக்கலைன்னாலும், கோபத்துல கையை ஓங்குவார். ஒரு கண்டிப்பான சமூகத்துல நாங்க வளர்ந்து வந்ததால,  எங்களுக்குத் தோல்விகளும் அவமானங்களும் ரொம்ப பெரிசாகத் தெரியலை. 

'என்னடா, இன்னிக்கு அப்பாதானே அடிச்சார், வாத்தியார்தானே திட்டினாரு, அம்மாதானே தப்பாப் பேசினாங்க... பேசிட்டுப் போகட்டும்'னு விட்டுடுவோம். ஆனா, இன்னிக்கு குழந்தைங்களுக்கு வாத்தியார் சொல்ற ஒரு வார்த்தை... அம்மா சொல்ற ஒரு மறுப்பு... ஒரு பொருளைக் கேட்டு அது `கிடையாது’னு அப்பா சொல்லிட்டா... ஏதோ வாழ்க்கையில் மிகப் பெரிய சோகம் நடந்த மாதிரி பையன் ஃபீல் பண்ண ஆரம்பிச்சிடுறான். 

வாத்தியார், 'உனக்கு அறிவிருக்கா?'னு கேட்டா, 'தற்கொலை செய்துகொள்ளப் போறேன்'னு சீட்டு எழுதிவெச்சிட்டு தற்கொலை பண்ணிக்கிறான். இன்றையப் பிள்ளைகளுக்கு சின்ன வயசுலேயே தோல்விகளையும் அவமானங்களையும் எதிர்கொள்ளக் கற்றுத்தரத் தவறிவிட்டோம். எந்தப் பிள்ளைகள் இவற்றையெல்லாம் தாங்கி வளர்கிறார்களோ, அவர்களாலதான் பல மனிதர்களுக்கு அறிமுகமானவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் ஓரளவுக்காவது வர முடியுது. 

ஒரு சின்னத் தோல்வியோ, அவமானமோ வாழ்க்கையின் முடிவு அல்ல. அது ஒரு நீண்ட பயணம். தோல்விகள், அவமானங்கள் இதெல்லாம் இருக்கத்தான்யா செய்யும். இதோடு நாம எப்போ வாழ கற்றுக்கொள்கிறோமோ அப்போதான், அவர்கள் மேலே மேலே போக முடியும்.


இன்னிக்கு உள்ள பிள்ளைகளுக்கு ஸ்ட்ரெஸுக்கான இன்னொரு முக்கிய காரணம், அதிகப்படியான சோம்பேறித்தனம். 
வீட்டுல எல்லா வசதியும் இருக்கு. இரவு தூங்குறதுக்கு நள்ளிரவு 12 மணி ஆகுது. நாங்கல்லாம் அந்தக் காலத்துல ராத்திரி வந்துட்டாலே, ஆறரை, ஏழு மணிக்கெல்லாம் ஜைனத் துறவிகள் மாதிரி சாப்பிட ஆரம்பிச்சிடுவோம்.  

இரவு எட்டு மணி எங்களுக்கு நடுச்சாமம் மாதிரி. அப்போ ரேடியோ, டி.வி-யெல்லாம் கிடையாது. இரவு நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தோம். அதனால காலையில ஸ்ட்ரெஸ் இருக்காது. சீக்கிரம் தூங்கி, காலையில் 6 மணிக்கு எழுந்திரிக்கிறவங்க ஸ்ட்ரெஸ்ஸைக் கன்ட்ரோல்லவெச்சிருப்பாங்க.

தன் மனசுக்கு எது பிடிக்குதோ... அது ஓர் ஓவியம் வரையறதா இருக்கலாம், பாட்டுப் பாடுறதாக இருக்கலாம். அதுக்குக் கொஞ்ச நேரத்தை, வாரத்தில் ஒரு முறையாவது செலவிட்டால், நல்ல ரிலீஃப் கிடைக்கும். 

வாழ்க்கை ரொம்ப இனிமையானது. ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு தருகிற வரம். இந்த நாளை இனிமையானதாக ஆக்குவோம்.  நன்மை செய்கிறவர்களாகச் சுற்றித் திரிவோம். இறைவனை கொஞ்ச நேரம் தியானிப்போம். 
நமக்கு அன்பானவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவிட்டால், நிச்சயமாக ஸ்ட்ரெஸ் நம்மை பாதிக்காது.

இளைஞர்களே! நீங்களே இப்படி ஸ்ட்ரெஸ்ஃபுல்லாக இருந்தால் எப்படி? எதிர்கால இந்தியா என்னவாகும்? நண்பர்களுடன் சந்தோஷமாகப் பழகுங்கள். நிறைய வாசிங்க. கொஞ்சம் யோசிங்க. ஸ்டெரெஸ்ங்கிறது தானாகவே போயிடும்'' எனக் கூறினார்.

  • தொடங்கியவர்

மொபைல் போனைக் கண்டுபிடிக்க கைதட்டினால் போதும்... அசத்தும் ஆப்ஸ்!

 
 

அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருள்களில் ஒன்றாகவே மாறிவிட்டன ஸ்மார்ட்போன்கள். அப்படி காலை முதல் இரவு வரை ஸ்மார்ட்போன்கள் நம் கைகளில்தாம் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. நம்மில் பலருக்கு அன்றைய நாள் தொடங்குவதே மொபைலின் முகத்தில் விழித்த பிறகுதான். அப்படி எல்லா நேரமும் கையேடு இருக்கும் மொபைலை காணவில்லை என்றால் சற்று பதறித்தான் போவர்கள். இரவு பயன்படுத்தும்போது எங்கேயாவது வைத்து விட்டு காலையில் முதல் வேலையாக அதைத்தான் தேடி அலைவார்கள்.

செயலிகள்

 

ஒரு சிலரோ ரூமில் நுழைந்தவுடன் ஏதாவது ஒரு இடத்தில மொபைலை வைத்துவிடுவார்கள், சில நிமிடங்கள் கழித்துதான் அவர்கள் கையில் மொபைல் இல்லாதது ஞாபகம் வரும். அதன் பிறகு மொபைல் வைத்த இடத்தை கண்டுபிடிக்க ரூமையே புரட்டிப்போடுவார்கள். ஒரு சிலர் ஒரு மொபைலை கண்டுபிடிக்க மற்றொரு மொபைலை தேடி எடுத்து போன் செய்வார்கள். இது போன்ற மறதிக்காரர்களுக்கு உதவுவதற்காகவே சில செயலிகள் இருக்கின்றன. இவற்றை இன்ஸ்டால் செய்து கொள்வதன் மூலமாக ஒரு விசில் அடித்தாலோ, அல்லது கை தட்டினாலே போதும். மொபைலை கண்டுபிடித்துவிட முடியும். இதை எப்பொழுதுமே பயன்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்றுதான் என்றாலும் மொபைலை மறந்து வைத்து விட்டு டென்சனாகும் நபர்களுக்கு இது நிச்சயமாக உதவக்கூடும். போன்ற அது போன்ற செயலிகளில் சில...

Whistle to Find

Whistle to Find ஆப்

5.9MB அளவே இருக்கும் இதனை இன்ஸ்டால் செய்வதற்கு அதிக இடம் தேவைப்படாது. இதில் இருக்கும் செட்டிங்குகளும் பயன்படுத்த எளிதாகவே இருக்கும். மொபைலை கண்டுபிடிக்க மூன்று விதமான வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒலி, ஃபிளாஷ் மற்றும் வைப்ரேட் போன்றவைதாம் அவை. இவற்றில் ஒன்றை மட்டுமோ அல்லது மூன்றையும் சேர்த்தோ பயன்படுத்தலாம். மேலும் ஒரு வாரத்தில் எத்தனை நாள்கள் எவ்வளவு மணி நேரம் இந்த வசதி செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை செட் செய்து கொள்ளலாம். தேவைப்படும் ரிங்டோன்களையும் இதில் செட் செய்து கொள்ளமுடியும். 

செயலியை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.frimustechnologies.whistletofind

Whistle Phone Finder PRO

Whistle Phone Finder PRO

3.6MB அளவே இருக்கிறது இந்த ஆப். இதை பயன்படுத்துவதும் எளிதான ஒன்றுதான். இதிலும் ஒலி, ஃபிளாஷ் மற்றும் வைப்ரேட் போன்ற ஆப்ஷன்கள் இருக்கின்றன. மொபைலில் அதிக இடமும் தேவைப்படாது. விசில் எவ்வளவு சத்தமாக ஒலித்தால் இந்தச் செயலி செயல்பட வேண்டும் என்பதை செட் செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்தச் செயலியில் இருக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க வசதி இது ஆண்ட்ராய்டு வேர் சாதனத்திலும் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

ஆப்பை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.usefullapps.whistlephonefinder&hl=en

Clap To Find My Phone

Clap To Find My Phone

விசில் அடிக்கத் தெரியாதா? கவலையே வேண்டாம் உங்களுக்காகத்தான் இந்தச் செயலி. இதைப் பயன்படுத்த கைதட்டினால் போதுமானது. மொபைலை கண்டுபிடித்துவிடலாம். வேறு பல வசதிகளும் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. லாக் ஸ்க்ரீன் போது மட்டும் செயல்பாட்டில் இருக்குமாறு வைத்துக்கொள்ளலாம். மொபைலை ஒரு தடவை ஆஃப் செய்து விட்டு மீண்டும் ஆன் செய்யும் பொழுது தானாகவே இந்தச் செயலி செயல்படுமாறும் வைத்துக்கொள்ளலாம். அதற்கான வசதியும் இதில் இருக்கிறது. இந்தச் செயலியின் அளவு 3.4MB.

 

ஆப்பை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.redteam.claptofind&hl=en

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம்: 13-1-1949

ராகேஷ் ஷர்மா விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி பிறந்தார். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 138-வது மனிதராவார். இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார். இந்தியா சார்பில் விண்வெளியில் பறந்த முதல் வீரர் இவராவார்.

 
 
விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம்: 13-1-1949
 
ராகேஷ் ஷர்மா விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி பிறந்தார். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 138-வது மனிதராவார். இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார். இந்தியா சார்பில் விண்வெளியில் பறந்த முதல் வீரர் இவராவார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1840 - லோங் தீவில் லெக்சிங்டன் என்ற நீராவிக்கப்பல் மூழ்கியதில் 139 பேர் கொல்லப்பட்டனர். 1847 - கலிபோர்னியாவில் மெக்சிக்கோ- அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 1908 - பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் கொல்லப்பட்டனர். 1915 - இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.

1930 - மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது. 1938 - இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது. 1939 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.

 

 

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் எரிந்த 20 ஆயிரம் கி.மீட்டர் காடுகள்: 13-1-1939

 

ஆஸ்திரேலியாவில் 1939-ம் ஆண்டும் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்பட்டது. இதில் 20 ஆயிரம் கி.மீட்டர் காடுகள் தீக்கிரையானது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1942 - ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார். 1953 - யூகொஸ்லாவியாவின் தலைவராக மார்ஷல் ஜோசிப் டீட்டோ தேர்வு செய்யப்பட்டார். 1964 - கல்கத்தாவில் இந்து- முஸ்லிம்

 
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் எரிந்த 20 ஆயிரம் கி.மீட்டர் காடுகள்:  13-1-1939
 
ஆஸ்திரேலியாவில் 1939-ம் ஆண்டும் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்பட்டது. இதில் 20 ஆயிரம் கி.மீட்டர் காடுகள் தீக்கிரையானது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1942 - ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார். 1953 - யூகொஸ்லாவியாவின் தலைவராக மார்ஷல் ஜோசிப் டீட்டோ தேர்வு செய்யப்பட்டார். 1964 - கல்கத்தாவில் இந்து- முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1972 - கானாவில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது. 1982 - வாஷிங்டன், டிசியில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் கொல்லப்பட்டனர். 1985 - எதியோப்பியாவில் பயணிகள் ரெயில் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் கொல்லப்பட்டனர்.

1991 - சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர். 1992 - இரண்டாம் உலகப் போரின்போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது. 2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர். 2006 சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இந்திய அழகிப் போட்டியில் கலக்கிய அரசியல்வாதி யார் தெரியுமா?

 
 

பிரதமர் மோடி, இள வயதில் டீ விற்றதாகச் சொல்வர். பிரதமர் முதல் லேட்டஸ்டாக அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் வரை பலரும் எளிய பின்னணி கொண்டவர்களே. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கொல்கத்தாவில் டெபுடி அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் சாதாரண கிளார்க்காக வாழ்க்கையைத் தொடங்கியவர். பேராசிரியராகப் பகுதி நேரப் பத்திரிகையாளராகவும்கூட பணிபுரிந்த அவர், அரசியலில் புகுந்து காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவரானார். நிதியமைச்சராகப் பதவி வகித்த அவர்,  2012-ம் ஆண்டு நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தார். தற்போதையக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கான்பூரில் சட்டம் பயின்றவர். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி மூன்றாவது முயற்சியில் தேர்வுபெற்றவர்தான். குடியரசு முன்னாள் தலைவர் ஹமீத் அன்சாரி, இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரிந்தவர். 

sonia_20174.jpg

 

காங்கிரஸ் தலைவராக 19 ஆண்டுகாலம் பதவி வகித்த சோனியா காந்தி, கேம்ப்ரிட்ஜ்  பல்கலைக்கழகத்தில் ரெஸ்ட்டாரன்ட் ஒன்றில் வெயிட்ரஸாகப் பணிபுரிந்தவர். இத்தாலியின் விஸின்சியா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ரெஸ்ட்டாரான்டில்தான் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு, 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனார்.

இந்திய அரசியல்வாதிகளில் ராகுல் காந்தி பணக்காரக் குடும்பத்தின் பின்னணியைக் கொண்டிருந்தாலும் அவரும் எளிமையாகவே வாழ்க்கையைத் தொடங்கியவரே... லண்டனில் உள்ள மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனமான மானிட்டர் குழுமத்தில் சில காலம் பணிபுரிந்தார். பிறகு, மும்பையில் பேக்கப் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, சமீபத்தில்தான் அந்தக் கட்சியின் தலைவராக உயர்ந்துள்ளார். 

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் சட்டம் பயின்ற பிறகு, கலிங்கா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். மம்தா மிகச்சிறந்த கவிஞரும்கூட. ஓவியமும் வரைவார். மம்தா 15 வயதிலிருந்தே அரசியலில் ஈடுபட்டவர் என்பது கூடுதல் தகவல். மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, இந்திய அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவர். 1998-ம் ஆண்டு இந்திய அழகிப் போட்டியில் பங்கேற்ற அவர், இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தார். பிறகு, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். தொலைக்காட்சிப் பிரபலமாக அரசியலுக்குள் நுழைந்து, தற்போது டெக்ஸ்டைல் துறை அமைச்சராக உயர்ந்திருக்கிறார். 

irani__22516.jpg

அதிரடிக்கு பெயர்போன மாயாவதி, ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். இவருக்கு ஐ.ஏ.எஸ் ஆவதுதான் இலக்கு. 1977-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம், இவரின் வீட்டுக்கு விசிட் செய்தார். மாயாவதியின் திறமை, கல்வியறிவு கன்சிராமைக் கவர, மாயாவதி அரசியலுக்குள் நுழைந்தார். தற்போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக உள்ள மாயாவதி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சமஸ்கிருதம் மற்றும் அரசியலில் பட்டம் பெற்றவர். சட்டம் பயின்று 1973-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பயிற்சி பெற்றார். 2014-ம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சரானார். லாலுவும் மிக எளிமையாகவே அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்தான். பீகார் கால்நடை மருத்துவக் கல்லூரியில் அலுவலக ஊழியராகப் பணியைத் தொடங்கியவர். பிற்காலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவராகி, பீகார்  மாநில முதலமைச்சராக 1990 முதல் 97-ம் ஆண்டு வரை பதவிவகித்தார். 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை  ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார் லாலு.

இந்திய அரசியல்வாதி மாயாவதி

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர், 1975-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள The Fletcher School of Law and Diplomacy பல்கலையில் சட்டம் பயின்றார். 1978-ம் ஆண்டு, ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் பணியைத் தொடங்கினார். சிங்கப்பூரிலும் ஐ.நா-வில் பணிபுரிந்துள்ளார். பால்தாக்கரே கார்ட்டூனிஸ்ட். அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஊழியர். அமித்ஷா பங்குசந்தை புரோக்கர். மன்மோகன்சிங்  பேராசிரியராகப் பணிபுரிந்தவர். நிதிஷ்குமார் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, பீகார் மின்வாரியத்தில் பணி புரிந்தவர். 

photo courtesy: MID-DAY

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய ஆமைகளைப் பாதித்த பருவநிலை மாற்றம்...99.8% ஆமைகள் பெண்ணாக மாறிய அதிர்ச்சி!

 
 

தன் பிஞ்சுக் கால்கள் முதன் முதலாகக் கடல் மணலில் பட்டவுடன், தண்ணீரோ என்றுதான் நினைத்தன. நீந்துவது போல பாவித்து தட்டுத் தடுமாறி பத்தடி தூரத்தில் இருக்கும் கடல் நீரைத் தொட்டன. வேகமாகக் கடலில் இறங்கி, பின் சிறிது நேரத்தில் கண்களிலிருந்து மறைந்து போயின. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப்பின் (The Great Barrier Reef) வெளிப்புற விளிம்பில் இருக்கும் சிறிய தீவுகளில் ஒன்று ரைன் தீவு (Raine Island). அதன் கடற்கரையில் நிகழ்ந்ததுதான் இந்தப் புதிதாகப் பிறந்த கடல் ஆமைகளின் முதல் நடை. சோகம் என்னவென்றால், பிறந்த ஆமைகளில் 99.8% பெண் ஆமைகள். ஒரே ஒரு பாலினம் மட்டும் இருந்தால், எப்படி இனப்பெருக்கம் நிகழும்? இனமே அழிந்து விடாதா? சரி, இப்படி நிகழ யார் காரணம்? வேறு யார்? நாம்தான்!

பச்சை கடல் ஆமை

 

Photo Courtesy: State of Queensland

பெண் ஆமைகள் அதிகம் பிறக்கக் காரணம்

கரன்ட் பயாலஜி (Current Biology) என்னும் பத்திரிகை பச்சைக் கடல் ஆமைகள் குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் ரைன் தீவில் இவ்வாறு 99.8% பெண் ஆமைகளாகப் பிறந்தது ஏன் என்று அலசியுள்ளனர். இதில் முக்கியக் காரணமாக முன் வைக்கப்பட்ட ஒன்று புவி வெப்பமயமாதல். கொதித்துக் கொண்டிருக்கும் வடக்கு ஆஸ்திரேலியாவில் இந்த நிலைமை என்றால் சற்றே வெப்பம் குறைந்த ஆஸ்திரேலியாவின் தெற்கு திசை நோக்கி (அன்டார்டிகா நோக்கி) சென்றால், அங்கே புதிதாப்க பிறந்த ஆமைகளில் பெண் ஆமைகளின் சதவிகிதம் 65%. மீதி 35% மட்டுமே ஆண் கடல் ஆமைகள். தட்பவெப்ப மாற்றத்திற்கும் பச்சை கடல் ஆமைகள் ஒரே பாலினத்தில் பிறப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பும்முன், இந்தப் பச்சைக் கடல் ஆமை இனம் குறித்துப் பார்த்து விடுவோம்.

இதன் பாலினத்தை எது தீர்மானிக்கிறது?

Green Sea Turtles என்று அழைக்கப்படும் பச்சைக் கடல் ஆமைகள் Chelonia mydas என்ற இனத்தைச் சார்ந்தவை. முட்டை வைத்துக் குஞ்சுபொரிக்கும் வழக்கமுடைய இந்த ஆமைகளின் பாலினத்தை, பாலூட்டிகளைப் போல அதன் மரபணு தீர்மானிப்பதில்லை. மாறாக, அந்த முட்டை இருக்கும் சீதோஷ்ண நிலையே அதைத் தீர்மானிக்கிறது. சுடுமணலில் வைக்கப்பட்ட பச்சை கடல் ஆமையின் முட்டை, பெண் ஆமையைப் பிறக்கவைக்கிறது என்றால், சற்றே குளிர்ந்த மணல் ஆண் ஆமையைக் கொடுக்கிறது. அப்படியென்றால் இங்கே மரபணு என்பது பாலினத்தை தீர்மானிப்பதே இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா என்றால் அதுவும் இல்லை. மரபணு என்பது பாலினத் தேர்வில் நேரடியாகத் தலையிடாமல், வேறு விதமாகக் காய் நகர்த்துகிறது.

ரைன் தீவு

Photo Courtesy: State of Queensland

50 சதவிகிதம் ஆண் ஆமைகள், 50 சதவிகிதம் பெண் ஆமைகள் பிறக்க வேண்டும். அந்த நிலை ஏற்பட ஒரு சீதோஷ்ண நிலை தேவைப்படும் அல்லவா? அதை ‘மையம்’ என்று இங்கே வைத்துக்கொண்டால், அந்த மையத்தின் தட்பவெப்பம் என்ன என்பதை இந்த ஆமைகளின் மரபணுதான் தீர்மானிக்கும். தனிப்பட்ட குழுக்களின் மரபணுவைப் பொறுத்து இந்த ‘மையம்’ மாறுபடுகிறது. எனவே, இங்கேதான் மரபணு என்பதே உள்ளே வருகிறது. தட்பவெப்பம் இந்த மையத்திற்கு மேலே சென்றால் அதிக அளவில் பெண் ஆமைகள், கீழே சென்றால், அதிக அளவில் ஆண் ஆமைகள். இதுதான் இயற்கையின் ரகசியக் கோட்பாடு. தற்போது வடக்கு ஆஸ்திரேலியாவில் தட்பவெப்பம் விண்ணை முட்டி இருப்பதால், புதிதாகப் பிறக்கும் பச்சைக் கடல் ஆமைகளில் பெரும்பாலானவை பெண்ணாகவே பிறக்கின்றன. அதுவும் இந்த ரைன் தீவில் 1990 களுக்குப் பிறகு தட்பவெப்பம் என்பது இறங்கவேயில்லை. அப்படியிருக்க அங்கே குழுவிற்கு ஓர் ஆண் ஆமை பிறப்பதே பெரிய அதிசயம்.

ஆண், பெண் வேறுபாடு எப்படிக் கண்டறிகிறார்கள்?

மற்ற மிருகங்களைப் போல அதன் உடல் அமைப்பை வைத்து எல்லாம் எதுவும் கூறிவிட முடியாது. மரபணு சோதனை நடத்தினால் கூட தெரிந்துவிடாது. ஏனென்றால், இங்கேதான் மரபணு அதைத் தீர்மானிப்பதில்லையே? ஒருவேளை அறுவை சிகிச்சை செய்வது போல அறுத்துப் பார்த்தால் தெரியலாம். ஆனால், அது மிகவும் கொடூரமான செயல். எனவே, ஆய்வாளர்கள் அதற்கு வேறோர் அறிவியல் ரீதியான முறையைக் கையாள்கிறார்கள். உடலில் இரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் நிறமற்ற திரவத்துக்குப் பெயர் 'பிளாஸ்மா' (Plasma). இந்த பிளாஸ்மாவை பிறந்த ஆமைகளிலிருந்து எடுத்துப் பரிசோதனை செய்கிறார்கள். இதில் ஆண் மற்றும் பெண்ணிற்கு என்று சில ஹார்மோன் வேறுபாடுகள் உண்டு. இதை வைத்துத்தான் ஆண் ஆமை, பெண் ஆமை என்று பிரிக்கிறார்கள்.

ஆமைகள்

பச்சைக் கடல் ஆமைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

“இப்படி பெண் ஆமைகள் அதிகம் பிறந்தால் இந்தப் பச்சை கடல் ஆமைகளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்ற அச்சம் அனைவருக்கும் எழாமல் இல்லை. ஏற்கெனவே இருக்கும் ஆண் பச்சைக் கடல் ஆமைகள் ஒருபுறம் என்றால், இனப்பெருக்கக் காலத்தில் பெண் ஆமைகள் தெற்கு திசை நோக்கி நகரலாம். அங்கே ஆண் ஆமைகள் அதிகம் என்பதால் பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது” என்கிறார்கள் இந்த ஆய்வை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்.

 

இருந்தாலும், இந்தப் பச்சை கடல் ஆமைகளின் எதிர்காலம் கருதி, அதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலையை உருவாக்கிக் கொடுப்பதுதான் உயர்ந்த இனம் என்று பிதற்றிக்கொள்ளும் நம் மனித இனத்தின் கடமை!

  • தொடங்கியவர்

மகளின் முதலாவது பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்டு தோனி குதூகலம்!

 

 
dhoni,_ziva

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஸீவா, ரசிகர்களின் தேவதையாகத் திகழ்கிறார்.

அவர் செய்யும் ஒவ்வொரு குறும்புச் செயல்களையும் அவரது தாயார் சாக்ஷி மற்றும் தந்தை தோனி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஸீவாவுக்கென இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் அவருடைய குறும்புகள் அடங்கிய புகைப்படங்கள், விடியோக்கள் என அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸீவா பாடிய மலையாளப் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ziva_annual_day.jpg

இந்நிலையில், ஸீவா படிக்கும் பள்ளியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. மகளின் முதலாவது பள்ளி ஆண்டு விழாவை அடுத்து தந்தை தோனி, நேரில் சென்று அங்குள்ள அனைத்து குழந்தைகளுடனும் உற்சாகக் குரல் எழுப்பி அவர்களுடன் குதூகலித்தார்.

 

தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் தோனிக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைப்பதால் அதை இவ்வாறு பயன்படுத்தி வருகிறார். 

அடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் 11-ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

பேசும் படம்: மண் வாசனை

03

ஒளிப்படங்கள்: ச.சுபாஷ், ஒளிப்படக் கலைஞர், காஞ்சிபுரம்.

ஆரம்பம்: ஒளிப்படங்கள் எடுப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். இதற்காக முறையாக ஒளிப்படம் எடுக்கும் கலையைக் கற்றேன். என் அம்மா வட்டிக்கு கடன் வாங்கி, கேமரா வாங்கிக் கொடுத்தார். திருமணங்களுக்கு ஒளிப்படம் எடுப்பது மட்டுமல்ல; என் மனதுக்குப் பிடித்த காட்சிகளைப் படம் பிடிப்பது எனது விருப்பங்களில் ஒன்று.

       

கேமரா: NIKON D 90, 300S, CONAN 5D MARK 3

ஆர்வம்: பறவைகள், உயிரினங்கள், இயற்கைக் காட்சிகள், தெருவோர ஒளிப்படங்கள் எடுப்பது.

oli%20oviyam%205

கைகளில் கலைவண்ணம் காட்டும் மட்பாண்ட தொழிலாளி.

 
oli%20oviyam%206

உறியடி உற்சவம்

oli%20oviyam%204

அந்தி சாயும் நேரத்தில் வீடு திரும்பும் விவசாயி.

 
oli%20oviyam%202

சேற்றில் கால் வைத்து, நாம் சோற்றில் கை வைக்க உதவும் விவசாயிகள்.

 
08
IMG2711%20copy
 
oli%20oviyam%201

நாள் முழுவதும் நிலத்தை உழுதுவிட்டு, ஓய்வெடுக்கத் திரும்பும் காளைகள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

அலையாத்திக் காடுகளின் நடுவே ஒரு படகு சவாரி... பிச்சாவரத்தில் ஒரு நாள்!

 
 

நீண்ட நீர்வழிப்பாதை, எழில்கொஞ்சும் பசுமை நிற மரங்கள் என இயற்கையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சொர்க்கபுரியாகக் காட்சி தருகிறது பிச்சாவரம். சிதம்பரத்தில் 17 கி.மீ தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. கடலூர் மற்றும் சிதம்பரத்திலிருந்து இங்கு வருவதற்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பார்க்க ரம்மியமாக இருப்பது மட்டுமல்ல; கயாகிங், படகு சவாரி போன்ற கூடுதல் சிறப்பம்சங்களும் இங்கே இருக்கின்றன. 

பிச்சாவரம்

 

"எமனின் பினாமி சுனாமி; அலையாத்திக் காடுகள் இருக்க தாக்குமோ இனி சுனாமி... பாதுகாப்பீர் அலையாத்திவனம் காடுகளை! " - பிச்சாவரத்திலிருந்த ஒரு வரவேற்புப் பலகையில் இடம்பெற்றிருந்த வாசகம் இது. அதில் இருப்பதுபோலவே அலையாத்திக் காடுகளின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறைக்கு உணர்த்த பிச்சாவரத்தை விடவும் சிறந்த இடம் எதுவுமில்லை எனலாம். இந்தியாவிலேயே கொல்கத்தாவிற்கு அடுத்து சுந்தரவனக் காடுகள் சுற்றுலா தலமாக இருப்பது இங்குதான் என்கிறது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம். முதலில் படகு சவாரி செய்யும் இடத்துக்குச் சென்றோம். படகு சேவைக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பது குறித்து அங்கிருந்த பலகையில் எழுதப்பட்டிருந்தது. இரண்டு பேர் கொண்ட துடுப்பு படகிற்கு 189 ரூபாயும், நான்கு பேர் கொண்ட துடுப்பு படகிற்கு 283 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. 8 பேர் கொண்ட துடுப்பு படகிற்கு 2000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் சிலர் ஏறவும், அவர்களுடன் இணைந்து நாங்களும் படகு சவாரியைத் தொடங்கினோம். படகோட்டியாக வந்திருந்தவரிடம் நம்மை அறிமுகம் செய்துகொண்டு உரையாடலை ஆரம்பித்தோம். 

பிச்சாவரம் படகு சவாரி

"கிட்டத்தட்ட 30 வருஷமா இங்கதான் படகோட்டிட்டு இருக்கேன். இதோட பரப்பளவு 1350 ஹெக்டர். இந்தச் சதுப்பு நிலக்காட்டை சுற்றி 50-க்கும் மேற்பட்ட தீவுகளும் 100 மேற்பட்ட கால்வாய்களை ஓடைகளும் இருக்கின்றன. இங்கு மொத்தம் 18 வகையான மரங்கள் இருக்கு. நரி, நீர் நாய் எல்லாம் இங்க இருக்கு. ஆனால் நம்ம பாக்குறது கஷ்டம். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பறவைகள் வெளிநாடுகளிலிருந்து இங்கு வருகின்றன." என்றார். 

இங்குள்ள கருத்தியல் காட்சிக் கூடத்தில் மாங்குரோவ் மரங்கள் குறித்து, இங்கு வரும் எண்ணற்ற பறவைகள் குறித்த செய்திகள் வைக்கப்பட்டுள்ளன. சிறிது தூரம் பயணித்த பிறகு படகை நிறுத்தியவர் ஒரு மரத்தைக் காட்டி இதுதான் ரைஸ்சோபோரா rhizopora எனக் கூறினார். இதில் மூன்று வகை உண்டு ரைஸ்சோபோரா அப்பிக்குலடா (rhizopora apiculata), ரைஸ்ஒபோரா முக்கிரனட்டா (rhizopora mucranata) ரைஸ்சோபோரா  லமார்க்கி (rhizopora lamarckii). இதைத் தவிர இங்கு அவிசினியா என்ற மரமும் இருக்கு எனக் கூறியவர் அதில் இங்கு இரண்டு வகை இருக்கு எனச் சொல்லி அதன் வகைகளையும் பட்டியலிட்டார். அவை, அவிசினியா மரீனா மற்றும் அவிசினியா அவிசினாலிஸ் ஆகியவை. "சுவாசிக்கும் வேர்கள் இந்த மரத்திற்கு இருக்கு. எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தக் காட்டை தத்தெடுத்து வளர்க்கிறார்." என்றும் பகிர்ந்துகொண்டார். பயணமும், உரையாடலும் ஒரே அலையாகத் தொடர்ந்தது.

படகு சவாரி

"துடுப்புப்படகு மொத்தம் 40 படகு இங்கு இருக்கிறது. மோட்டார் படகு இரண்டு மூன்று இருக்கு. எங்களுக்கு ஒரு கி.மீ தூரத்துக்கு ஒரு  தடவை படகு ஓட்றதுத்துக்கு 65 ரூபாய் கிடைக்கும் அது இரண்டு பேராக இருந்தாலும் சரி; நாலு பேராக இருந்தாலும் சரி.அது போக மீதி எல்லாம் அரசாங்கத்துக்குத்தான். இங்க உள்ள பிரச்னைனு பாத்தா படகுதான் கம்மியா இருக்கு. இங்க படகு ஒட்டுறவங்களுக்கு சலுகைகள் ஏதும் தரதில்லை. எங்களுக்கு என எந்த ஒரு காப்பீட்டு திட்டமும் தரவில்லை" எனத் தெரிவித்தார்.

பிச்சாவரம் படகு இல்லம்

"சமீப காலத்தில துப்பறிவாளன் படம் இங்க எடுத்தாங்க. பிச்சாவரத்துக்கு சென்னை, கேரளாவிலிருந்து அதிகமான மக்கள் வருவாங்க. அப்புறம் வெளிநாட்டவர்கள், வட இந்தியர்களும் இங்க வருவாங்க. விடுமுறை தினங்கள்ல சாதாரண நாள்களை விட அதிகமாக்க கூட்டம் வரும். குறிப்பிட்டுச் சொல்ல முடியாது இவ்ளோதான் வருமானம் கிடைக்கும்னு. அது மக்கள் வருகையைப் பொறுத்து மாறும். நகர வாழ்க்கைல இருந்து விடுபட நினைக்கும் நகர வாசிகளுக்கு இது ஒரு நல்ல இடமாக அமையும். படகில் பயணிக்கும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு கவசம் அளிக்கப்படுகிறது.

Pichavaram

 

சுற்றுலா பயணிகள் இங்குள்ள சுரபுன்னை மரங்களுக்கு இடையில் பயணம் செய்வதன் மூலம் பசுமைச்சூழலை குதூகலத்தோடு அனுபவிக்கலாம் என்பதோடு, மன அமைதியையும் தேடிக்கொள்ளலாம். இது அவர்கள் மனதுக்கும் அமைதியை அளிக்கிறது. படகு ஓட்டும் எங்களுக்கும் சுற்றுலா பயணிகளுடன் பேசி மகிழ்வதால் எங்களது வாழ்க்கை பிரச்னையை மறக்கடிக்கச் செய்கிறது. இந்தத் தொழிலில் இருக்கும் ஒரே மகிழ்ச்சி இதுதான். எனவேதான் வருமானம் குறைவு என்றாலும் இந்தத் தொழிலை விட்டு செல்வதற்கு மனமில்லை." என சிரித்தார் அந்த மனிதர். நம் பிச்சாவரத்தைப் பயணத்தை இனிமையாக்கிய அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றோம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ஜெஃப் பெஸோஸ்: ஏழ்மையில் இருந்து உலக பணக்காரர் ஆனது எப்படி?

ஏழ்மையில் இருந்து உலக பணக்காரராக உயர்ந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் பற்றிய காணொளி.

  • தொடங்கியவர்

Bildergebnis für thai pongal

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

 

  • தொடங்கியவர்
‘உலகை வென்ற மனிதன்’
 

image_a5adb6c26d.jpgதேவையற்ற ஆசைகளைத் துறக்கச் செய்வதே உன்னதமான ஆன்மீகம். ஆன்மாவின் வலுவை ஆன்மீக ஈர்ப்பு வரவேற்கின்றது. 

ஆனால், முறையற்ற ஆசைகளை நிறைவேற்ற ஆன்மீகத்தை ஒரு கருவியாகக் கருதினாலே அது ஆபத்தாக முடியும். 

நியாயமான முறையில் எவரும் பொருளீட்டலாம். ஆனால் அறிவு, கல்வியில் உயர்நிலையில் உள்ளவர்களில் சிலர் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் விடயத்தில் மனம்போனபடி, வாழ்வை மேற்கொண்டு, தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்வது அபத்தம். பிறர் துன்பங்களைத் துடைப்பவனே ஆன்மீகவாதி. 

 சேமித்தல் என்பது தூயநோக்கத்துடன் ஆற்றும் பணிகள்தான். வாழப்பிறந்த மனிதன், வாழ்க்கைப் பயணத்தில் வரும் இடையூறுகளுக்காகத் தனது பிறவியின் நோக்கத்தை நோகடிக்கவியலாது.  

வாழும் நல்மார்க்கத்தைத் தௌந்தவனே உலகை வென்ற மனிதன்.  

 

  • தொடங்கியவர்

ஜமெய்க்கா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி: (ஜனவரி 14, 1907)

 
அ-அ+

ஜமெய்க்காவில் 1907ம் ஆண்டு ஜனவரி 14ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் சில நிகழ்வுகள்:- 1539 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.

 
ஜமெய்க்கா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி: (ஜனவரி 14, 1907)
 
ஜமெய்க்காவில் 1907ம் ஆண்டு ஜனவரி 14ந்தேதி ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மேலும் சில நிகழ்வுகள்:-

1539 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.

1690 - கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.

1761 - இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

1932 - தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

அழகான பொங்கல் பாடல்
நன்றி முரளிகிருஷ்னன் மற்றும் குழுவினர் ( மலேசியா)

  • தொடங்கியவர்

பிபிசி தமிழ் நேயர்களின் புகைப்படங்கள் - இவை பேசும் உணர்வுகள்!

பிபிசி தமிழின் ஆறாம் வார புகைப்பட போட்டிக்கு உணர்வுகள் என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

அது ஒரு மகிழ்ச்சியான உலகம் - திலீப் குமார்

நாங்க ஒரு தடவை குளிச்சா!

நீரின்றி அமையாது மகிழ்ச்சி - பாஸ்கரன்

நீரின்றி அமையாது மகிழ்ச்சி - பாஸ்கரன்

குழந்தையின் அழுகை - பார்த்திபன் முத்தையா

உன் அழுகையும் அழகே! - பார்த்திபன் முத்தையா

உயிர் கேட்கும் வயிறு - ரோகினி

உணர்வுகள் கோடி, வயிறு ஒன்றுதான்... - ரோகிணி

மணமகளின் மகிழ்ச்சியும் வெட்கமும் - ஃபிராங்க்ளின் பால் ஜூனோ

அழகான ஏவுகணை! - ஃபிராங்க்ளின் பால் ஜூனோ

பரவசம் தரும் இசை

 

மயங்கியது இசையா, இமையா...

லண்டன் பாலத்தின் நீளத்தையும் விஞ்சிவிடுமா இந்த பந்தத்தின் உணர்வு - நிரோஷா

லண்டன் பாலத்தின் நீளத்தையும் விஞ்சிவிடுமா இந்த பந்தத்தின் உணர்வு - நிரோஷா

பேசும் படம் - ராம்குமார்

பேசும் சித்திரங்கள் - ராம்குமார்

 

கிளியால் கிலி - செல்வ விநாயகம்

கிளி - கிலி - செல்வ விநாயகம்

ஆனந்தக் குளியலாடுவோம் - சதீஷ்குமார்

ஆனந்தக் குளியல் - சதீஷ்குமார்

தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியம் - தமிழ் பரிவேல்

தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியம் - தமிழ் பரிவேல்

உலகை இயக்கும் காதல் - ஷான் விசாகன்

அலைகள் ஓய்வதில்லை! - ஷான் விசாகன்

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தந்தைக்கு உபதேசம் செய்த 6 வயது சிறுமியும் மதுவை நிறுத்திய தந்தையும்…

girl.jpg?resize=320%2C377

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தரணி என்ற 6 வயது சிறுமி தன் தந்தையின் மதுப்பழக்கத்தை நிறுத்தச் செய்து வீட்டுக்காக ஒரு கழிப்பறையைக் கட்ட வைத்துள்ளார். இதனையடுத்து கழிப்பறை வேண்டும் என்ற சிறுமியின் தாயார் கனவு சிறுமி மூலம் பூர்த்தியாகியுள்ளது.

அம்பாத்துறை பஞ்சாயத்தை குரும்பாப்பட்டியைச் சேர்ந்த ஆர்.கார்த்திகா தன் மகளால் நிறைவேறிய கனவு குறித்துக் கூறியபோது, “என் மகள் தரணியினால் எங்கள் குடும்பம் மகிழ்ச்சிக்குத் திரும்பியுள்ளது” என்றார்.

6 வயது மகள் தரணி, திறந்தவெளியில் மலம் கழிப்பது தன் தாயாரின் கவுரவத்துக்கு இழுக்கு, இது அவருக்கு கடும் சங்கடத்தை அளிக்கிறது என்று தன் தந்தையை நச்சரித்து கழிப்பறை கட்டவைத்துள்ளார். “என் கணவருக்கு வேறு வழியே இல்லை, கடைசியில் குழந்தை கூறுவதற்கு சம்மதம் தெரிவித்தார்” என்றார்.

தந்தை தினமும் குடித்து விட்டு தாயுடன் சண்டையிடுவதைப் பார்த்து வேதனை அடைந்த சிறுமி, ‘இப்படியே செஞ்சுக்கிட்டிருந்தேனா நானும், அம்மாவும் தாத்தா பாட்டி வீட்டுக்குப் போயிடுவோம், நீ தனியாக கஷ்டப்பட வேண்டியதுதான்’ என்று தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனால் வேதனையடைந்த தந்தை ராஜபாண்டி மதுப்பழக்கத்திலிருந்து விடுபட்டு, பொறுப்பாக  கேரளாவுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். “5 வருடங்களாக மதுப்பழக்கத்தை விட்டுவிடுமாறு    நான் அவரை    கெஞ்சினேன், அவர் கேட்கவில்லை, நான் சாதிக்காததை என் மகள் சாதித்துள்ளார்” என்றார் தாயார் கார்த்திகா.

தன் ஆசிரியர் சுகாதாரம் பற்றி தனக்குக் கற்றுத் தந்ததாலும், திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று பள்ளி ஆசிரியர் கூறியதாலுமே தனக்கு உத்வேகம் பிறந்தது என்றும் இதனால் தன் தந்தையை நச்சரித்து கழிப்பறையை கட்ட வைத்ததாகவும் சிறுமி தரணி கூறியுள்ளார்.

http://globaltamilnews.net

  • தொடங்கியவர்

’பொங்கலோ பொங்கலோ!’ - சிங்கப்பூர் பிரதமரின் அசத்தல் வாழ்த்து

 
 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

பொங்கல்
 

 

லீ சியன் லூங்  ’பொங்கலோ பொங்கல்!’ என்று வாழ்த்துத் தெரிவித்து  இன்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். தமிழரின் திருநாளான பொங்கல், சிங்கப்பூரில் விமர்சையாக கொண்டாடப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

 

 

Bild könnte enthalten: Nacht und im Freien

பொங்கலோ பொங்கல்! Happy Pongal to all who celebrate it!

Pongal is a traditional Tamil harvest festival that marks the beginning of the auspicious month of Thai. It is typically celebrated over four days with families gathering to make Pongal (sweet boiled rice) together.

The recent cold and wet weather has not dimmed the dazzling Pongal light-up in Serangoon Road. If you are looking to find out more about Pongal, or for activities to do, you can find out more at the Indian Heritage Centre. – LHL

சிங்கப்பூரில் உள்ள இந்திய பண்பாட்டு மையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கல்வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த லீ சியன் லூங் ’சிங்கப்பூரில் நிலவும் கடும் குளிரும், பனிமூட்டமும் ஒளிரும் பொங்கல் பண்டிகையின் பிரகாசத்தை சற்றும் குறைக்கவில்லை’ என்று குறிப்பிட்டுருந்தார். லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படத்தைத் தோண்டி எடுத்து தற்போது பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உறையவைக்கும் பனிச்சிற்பங்கள்

 

 
13CHLRDSNOW%20NEW%2011

நம்முடைய ஊரில் கடற்கரை மணலில் ஏராளமான சிற்பங்கள் வடிப்பது போல் சீன மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பனிக்காலத்தின்போது, பனிக்கட்டிகளால் பிரம்மாண்டச் சிற்பங்களை வடித்து உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு சீனாவில் வடகிழக்குப் பகுதியான செங்குவா நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான நகரமான ஹெயிலோஜியாங் (Heilongjiang ) பகுதியில் இந்த ஆண்டுக்கான சர்வதேசப் பனிச்சிற்பக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

               
12jkrnew2
 

சீனாவில் முதன்முறையாக 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பனிச்சிற்பக் கண்காட்சி தற்போது 35-வது ஆண்டில் அடி எடுத்துவைக்கிறது. ‘பனி பூக்கும் பூங்கா’ என இந்த ஆண்டின் பனிச்சிற்பக் கண்காட்சிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

12jkrnew3jpg
 

 

நதியே ஆதாரம்

பனிக்காலம் தொடங்கியவுடனே செங்குவா நதி முழுவதும் பனியால் உறைந்துவிடுகிறது. டிசம்பர் மாதத்தில் முழுவதுமாக உறைந்துள்ள இந்த நதியின் பனிக்கட்டிகளை வெட்டி எடுத்துப் பனிச்சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு வெட்டி எடுக்கப்பட்ட 1,80,000 கன மீட்டர் பனிப்பாறைகளில் இருந்து இந்தக் கண்காட்சியில் உள்ள இரண்டாயிரம் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

12jkrnew4
 

பல ஆண்டுகளாக இந்தப் பனிச்சிற்பங்களை வடிவமைக்கும் பணியில் பெரும்பாலும் ஹெயிலோஜியாங் பகுதி மக்களே ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “இந்தப் பனிச்சிற்பங்கள் இவ்வாறு தெளிவாக இருப்பதற்கு முக்கியக் காரணம் செங்குவா நதிதான். அந்த நதியில் இயற்கையாக உள்ள தெளிவான தோற்றம் பனிச்சிற்பங்களிலும் பிரதிபலிக்கிறது” என்கிறார் பல ஆண்டுகளாகப் பனிச்சிற்பங்களை வடிவமைத்துவரும் சிற்பக்கலைஞர் கா கைலீனு (Gao Kailin).

12jkrnew5
 

 

ஆறு லட்சம் ஏக்கர்!

சுமார் ஆறு லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்தப் பனிச்சிற்பக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. சுமார் பத்தாயிரம் வடிவமைப்பாளர்களைக் கொண்டு இங்குள்ள சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெப்பநிலை மைனஸ் 35 டிகிரிக்கும் கீழ் உள்ளது. இந்தக் கண்காட்சியில் பனிச்சறுக்கு விளையாட்டுகள், மாஸ்கோ செஞ்சதுக்கம், பெங்ஜிங்யின் டெம்பிள் ஆப் ஹெவன் கோவில், மரகதப் புத்தகக் கோயில், மாஸ்கோவின் செயிண்ட் பசில் கதீட்ரல் சர்ச் ஆகியவற்றின் முக்கியமான கட்டிடங்களின் மாதிரி வடிவங்கள் இந்தப் பனிச்சிற்பக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

12jkrnew6
 

கண்காட்சியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் எல்.இ.டி விளக்குகளால் ஒளிபெற்று இரவு நேரத்தில் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.

 

ஒருகோடி சுற்றுலாப் பயணிகள்

கடந்த ஆண்டு நடைபெற்ற பனிச்சிற்பக் கண்காட்சியில் சுமார் 1 கோடியே 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கண்காட்சிக்கு வந்துள்ளனர். அதேபோல் சுமார் நாற்பது கோடி டாலர் வருமானம் இந்தக் கண்காட்சி மூலமாகக் கிடைத்துள்ளது என சீனா சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12jkrnew7
 

இந்த ஆண்டு இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் நடைபெறும் மற்ற பனிச்சிற்பக் கண்காட்சிகளைவிட சீனாவின் ஹெயிலோஜியாங் பகுதியில் நடைபெறும் கண்காட்சி மிகப் பெரியதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. இந்தக் கண்காட்சி அடுத்த மாதம் 28-ம் தேதிவரை நடைபெறுகிறது.

12jkrnew8
13CCHLRDSNOW%20NEW%207
13CHLRDSNOW%204
13CHLRDSNOW%20NEW%201
13CHLRDSNOW%20NEW%2010
13chlrdsnow%20new%2012
13CHLRDSNOW%20NEW5
13CHLRDSNOW%20NEW%209
13CHLRDSNOW%20NEW%208
13CHLRDSNOW%20NEW%207
 
13CHLRDSNOW%20NEW%206
13CHLRDSNOW%20NEW%204
13CHLRDSNOW%20NEW%202
12jkrnew1jpg

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.