Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாசகர் திருவிழா 2016: கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

Featured Replies

book_2866325f.jpg

 

பெண் விடுதலை இன்று

ஆசிரியர்: க.வி.இலக்கியா

விலை: ரூ.60

விடியல் பதிப்பகம்

பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளியப் பொருளாதார சமூகக் கட்டமைப்புச் சூழலில், இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட அடிமை நிலையே பெண் விடுதலை என்று நம்பப்படுகிறது என்று பேசும் நூல் இது.

*****

எங்கள் ஐயா - பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள்

பதிப்பாசிரியர்கள்: பெ.முத்துசாமி, ஆ.சின்னதுரை, ரெ.மகிந்திரன்,

ப.குமரேசன், விலையடக்கப் பதிப்பு ரூ. 250 காலச்சுவடு பதிப்பகம்

எழுத்தாளர் பெருமாள்முருகனிடம் பயின்ற மாணவர்கள் அவரைப் பற்றி எழுதிய அனுபவங்கள், மதிப்பீடுகளின் தொகுப்பு. ஆசிரியர் மாணவர் இடையிலான ஆரோக்கியமான உறவு அரிதாகிவரும் சூழலில் மிக முக்கியமான பதிவு. ஒரு ஆசிரியரால் மாணவர்களின் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான ஆவணமாகவும் விளங்குகிறது.

*****

அதிகாரமும் தமிழ்ப் புலமையும் - தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்

ஆசிரியர்: ந.கோவிந்தராஜன்

விலை: ரூ. 280 க்ரியா பதிப்பகம்

தமிழ் இலக்கியப் படைப்புகள் மீது ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு ஈர்ப்பு உண்டானது. கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்தவர். நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி எனும் அதிகாரி. ‘இந்து இலக்கிய மாதிரிகள்’ என்ற நூலை எழுதிய கிண்டர்ஸ்லிதான் காலனிய தமிழ்ப் புலமை வரலாற்றின் தொடக்கப்புள்ளி. இந்நூல், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புகள் பற்றிய விரிவான ஆவணம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-1-%E0%AE%95%E0%AE%B5%E

பரிந்துரை 2 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

book_2867545g.jpg

ஏழு நதிகளின் நாடு

சஞ்சீவ் சன்யால்

தமிழில்: சிவ.முருகேசன்

விலை: ரூ.315

சந்தியா பதிப்பகம்

இந்திய இதிகாசங்கள், நில அமைப்பு, வணிகக் கப்பல்களின் தோற்றம், பயணங்கள் தொடங்கி, ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள் வரையிலான பல்வேறு விஷயங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு இந்நூல். இந்தியாவைப் பற்றிய கருத்தாடல்களின் உண்மைத் தன்மை பற்றியும் இந்நூல் பேசுகிறது.

***

கடவுள் உருவான கதை

டாக்டர் அஜய் கன்ஸால்

தமிழில்: கி.ரமேஷ்

விலை: ரூ. 170

பாரதி புத்தகாலயம்

மனித இன வரலாறு பற்றிய ஆராய்ச்சி, கடவுள், மதங்களின் உருவாக்கம் பற்றிய வரலாற்று உண்மைகளை இணைக்கும் வகையில், மருத்துவரும், உடற்கூறு இயல் நிபுணருமான பேராசிரியர் அஜய் கன்சால் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம். மனித இனம் எதிர்கொண்ட சவால்கள், அதில் பெற்ற வெற்றிகள் ஆகியவற்றை இந்நூல் பட்டியலிடுகிறது.

***

அருந்ததியர்களாகிய நாங்கள்..

ம.மதிவண்ணன்

விலை: ரூ.30

கருப்புப் பிரதிகள்

சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிப்புகளுக்கு உள்ளாகும் அருந்ததிய மக்களின் இருப்பைப் பற்றிப் பேசும் நூல் இது. சமூக நீதி என்கிற பிரதிநிதித்துவ ஜனநாயகக் கருத்தாக்கங்களின் அரசியல்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அருந்ததிய மக்களின் உரிமைக் குரல்களை, உள்ஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் குழுவின் முன் ஒரு சாட்சியமாக இந்நூல் முன்வைக்கிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-2-

சென்ற நூற்றாண்டின் இலக்கியம்: சாரு நிவேதிதா பேட்டி

படம்: பிரபு காளிதாஸ்
படம்: பிரபு காளிதாஸ்

மூத்த படைப்பாளிகளின் படைப்புகள், தவறவிடக் கூடாத புத்தகங்களை இளைய வாசகர் களுக்குப் பரிந்துரைக்குமாறு எழுத்தாளர் சாரு நிவேதாவிடம் கேட்டோம்.

இன்றைய தினம் பெரும்பான்மையான இளைஞர்களிடம் தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருந்துவருவதை நீங்கள் கவனிக்கலாம். தமிழை ஒழுங்காக நான்கு பக்கம் எழுதக்கூடிய இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலை நாடுகளில் இந்த அவலம் இல்லை. ஐரோப்பாவில் ஒவ்வொரு இளைஞருக்கும் நான்கு மொழிகள் தெரிந்திருக்கின்றன.

ஒரு ஃப்ரெஞ்சு மாணவரை எடுத்துக்கொண்டால் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில்கூட அவர்கள் படித்து முடிக்கும் வரையிலும் - ஆய்வுப் படிப்பிலும்கூட - ஃப்ரெஞ்ச் மொழித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். ஒரு ஐரோப்பிய மருத்துவ மாணவன் தன் தாய் மொழியோடுகூட லத்தீன் மொழியும் கற்கிறான். மருத்துவச் சொற்களில் பெரும்பாலானவை லத்தீன் மொழியை மூலமாகக் கொண்டவை.

இப்படி, தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்தச் சமூகமே உயர்வுறும். தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார, அரசியல் வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம், தமிழைக் கைவிட்டுவிட்டோம். உங்களுக்குத் தெரியுமா, இங்கே உள்ள 99% தனியார் கல்லூரிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள். என்னால் பெயர்கூடச் சொல்ல முடியும். தமிழ்ப் பேராசிரியர்கள்கூட இங்கே திக்கித் திக்கி ஆங்கிலத்திலேயே பேச வேண்டியிருப்பதன் அவலத்தை வேறு எந்த மண்ணிலும் காண முடியாது. நல்லவேளை, தமிழை ஆங்கிலத்தில் கற்பியுங்கள் என்று உத்தரவு போடவில்லை என்று பகடி செய்தான் என் நண்பராக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்!

இந்த நிலையில், ஒரு மொழியை எப்படி நாம் தக்க வைத்துக்கொள்வது? சிலர் தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்ற (நல்ல) நோக்கத்தில் தவறான வழியில் செல்வதையும் பார்க்கிறேன். குளம்பியகம், ஆகத்து (ஆகஸ்ட் மாதமாம்!) என்றெல்லாம் தமிழைச் சுத்தப்படுத்துகிறார்கள். இந்த மடி ஆச்சாரமெல்லாம் தமிழைக் காப்பாற்றாது. ஆங்கிலத்தில் உள்ள பெரும்பாலான சொற்கள் பிற மொழிகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவைதான்.

ஆக, ஒரு மொழி நிலைத்து நிற்பதற்காக நாம் செய்யக்கூடியது, அம்மொழியில் உள்ள இலக்கியத்தைக் கற்பது மட்டுமே. மேலும், அது ஒன்றும் மொழியைக் காப்பாற்றுவதற்காக நாம் செய்ய வேண்டிய கடமை அல்ல. பட்சிகளுக்கு உணவிடுவது பட்சிகளுக்காக மட்டும் அல்ல என்பதுபோல. பட்சிகளுக்கு உணவிட்டால் பூமி வாழும்; பூமி குளிரும். பூமியின் மரணத்தை இன்னும் பல கோடி ஆண்டுகள் தள்ளிப் போடுவதற்கு விருட்சம் வேண்டும்; வனம் வேண்டும்; மழை வேண்டும்; இந்தப் புவிச் சமநிலையைக் காப்பாற்றுவது பட்சிகள். அதேபோல் நாமும் நம் வாழ்வும் மேன்மையுற, அறம் தழைக்க நாம் செய்ய வேண்டிய அடிப்படையான காரியம், இலக்கியத்தை வாசித்தல். அதற்கு நான் பரிந்துரைக்கக் கூடிய பத்துப் புத்தகங்கள்:

1. சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகம்.

நம்முடைய பழைய வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதுதான் இன்றைய வாழ்வை மேலும் செழுமைப்படுத்திக்கொள்வதற்கு இருக்கும் எளிய வழி. பதிப்பாளர்: வெளி ரங்கராஜன்.

2. ந.சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம்.

என்னை காந்தியவாதியாக மாற்றிய நாவல். இதன் சில பக்கங்களை நம் குழந்தைகளுக்கு வாசித்துக் காண்பித்தால் போதும்; சமுதாயம் இப்போது இருப்பதுபோல் இருக்காது. நற்றிணை பதிப்பகம்.

3. தி.ஜானகிராமனின் செம்பருத்தி. காலச்சுவடு பதிப்பகம்.

4. லா.ச.ரா.வின் சிறுகதைகள்.

இந்த இரண்டு நூல்களும் தமிழைச் சங்கீதம்போல் மாற்றிக் காட்டியவை. டிஸ்கவரி புக் பேலஸ்.

5. எஸ்.சம்பத்தின் இடைவெளி.

உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று இது இப்போது இணையத்தில் மட்டுமே கிடைக்கிறது. விருட்சம் வெளியீடாக வந்திருப்பது திருத்தப்படாத பதிப்பு.

6. எம்.வி.வெங்கட்ராமின் காதுகள்.

இடைவெளிக்குச் சொன்னதையே இதற்கும் சொல்லலாம். காலச்சுவடு பதிப்பகம்.

7. ஆ.மாதவனின் கடைத்தெருக் கதைகள்.

நற்றிணைப் பதிப்பகம்.

8. அசோகமித்திரனின் இன்ஸ்பெக்டர் செண்பகராமன்.

குறுநாவல் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம்.

9. தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள்.

தமிழில் தஞ்சை ப்ரகாஷுக்கு இணையாக தஞ்சை இஸ்லாமிய வாழ்க்கையை யாரும் எழுதவில்லை. டிஸ்கவரி புக் பேலஸ்.

10. ந.முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள்.

க்ரியா பதிப்பகம். முக்கியமான சிறுகதையாளரான ந.முத்துசாமியின் பழைய கதைகளும் புதிய கதைகளும் கலந்த முக்கியமான புத்தகம்.

ஒரு ஐரோப்பிய மருத்துவ மாணவன் தன் தாய் மொழியோடுகூட லத்தீன் மொழியும் கற்கிறான். மருத்துவச் சொற்களில் பெரும்பாலானவை லத்தீன் மொழியை மூலமாகக் கொண்டவை. இப்படி, தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்த சமூகமே உயர்வுறும்!

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

நாவல்களின் காலம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சமகாலத்தின் முக்கியமான நாவல்கள் எவை? இன்றைய நாவல்களின் போக்கு எப்படி இருக்கிறது? ‘உபபாண்டவம்’, ‘நெடுங்குருதி’, ‘யாமம்’, ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களை எழுதியவரும் குறிப்பிடத்தகுந்த விமர்சகருமான எஸ்.ராமகிருஷ்ணனிடம் இது குறித்துக் கேட்டோம்.

நம் காலம் நாவல் களின் காலம். உலகெங்கு ம் நாவல்கள் விற்பனையில் மிகப் பெரிய சாதனை படைத்துவருகின்றன. ஹாரிபாட்டர் நாவல் 107 மில்லியன் விற்றிருக்கிறது. லார்டு ஆஃப் தி ரிங்ஸ் நாவல் 150 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. உலகில் எந்தக் கவிதைத் தொகுப்பும், கட்டுரைத் தொகுப்பும் இவ்வளவு விற்றதில்லை. தமிழிலும் நாவலுக்கெனத் தனி வாசக வட்டம் எப்போதும் இருந்துவருகிறது. நாவல் விற்பனையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

தமிழ் நாவல் உலகம் இன்று பெரும் விருட்சமாக வளர்ந்தோங்கி நிற்கிறது. ஆரம்ப காலத் தமிழ் நாவல்களில் கதாசிரியரே கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவார். அனுபவங்கள் மட்டுமே கதையாக உருமாறின. புனைவின் சாத்தியங்கள் அறியப்படவேயில்லை. நவீனத்துவத்தின் வருகையால் நாவல்களில் ஆசிரியரின் குரல் மறைந்துபோனது, அனுபவங்களை மட்டும் விவரிக்காமல் அவற்றுக்குக் காரணமாக உள்ள அரசியல் சமூக பொருளாதார உளவியல் காரணங்களை நாவல் ஆராயத் துவங்கியது.

இரண்டாயிரத்துக்குப் பிறகே தமிழ் நாவல்கள் பாலின்பம் குறித்த திறந்த உரையாடல்கள், அடையாளச் சிக்கல், நகர்மயமாதலின் பிரச்சினைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் அக உலகம் எனப் புதிய திசை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது. இன்றைய நாவல் என்பது ஒரு சிம்பொனிபோல பல்வேறு இசைக் கருவிகளின் ஒன்று சேர்ந்த கூட்டு வடிவம் என்பார் மிலன் குந்தேரா. அது தமிழ் நாவலுக்கும் பொருந்தக்கூடியதே.

மறைக்கப்பட்ட வரலாறு, புதிய வாசிப்புக்குள்ளான தொன்மம், இதிகாசம் பற்றிய புனைவெழுத்து, இனவரவியல் கூறுகள் கொண்ட நாவல் என இன்றைய நாவலின் இயங்குதளங்கள் விரிவுகொள்கின்றன.

புத்தாயிரத்துக்குப் பிறகான சிறந்த நாவல்கள்

1. சயந்தனின் ‘ஆறாவடு’ (தமிழினி பதிப்பகம்)ஈழத் தமிழர்களின் துயர்மிகு வாழ்வினைச் சித்தரிக்கும் சிறந்த நாவல்.

2. முருகவேளின் ‘மிளிர்கல்’ (பொன்னுலகம் பதிப்பகம்) கண்ணகியைத் தேடும் பயணத்தின் ஊடாக ரத்தினக்கல் தேடும் வணிக சூதின் கதையைச் சொல்லும் புதிய நாவல்.

3. நக்கீரனின் ‘காடோடி’ (அடையாளம் பதிப்பகம்) சூழலியல் அக்கறையுடன் எழுதப்பட்ட புதுவகை நாவல்.

4. லட்சுமி சரவணக்குமாரின் ‘உப்பு நாய்கள்’ (உயிர்எழுத்து பதிப்பகம்) விளம்புநிலை மக்களின் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவுசெய்த நாவல்.

5. ஜாகிர்ராஜாவின் ‘மீன்காரத் தெரு’ (மருதா பதிப்பகம்) இஸ்லாமியர்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசும் நாவல்.

6. சுகுமாரனின் ‘வெலிங்டன்’ (காலச்சுவடு பதிப்பகம்) ஊட்டியின் வரலாற்றுடன் பால்ய நினைவுகளை ஒன்று கலந்து விவரிக்கும் சிறந்த நாவல்.

7. இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’ (கிழக்கு பதிப்பகம்) தலைமுறைகளின் கதையைக் கூறும் மாய யதார்த்தவாத நாவல்

8. தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ (உயிர்மை பதிப்பகம்) திராவிட இயக்க அரசியலை மையமாகக் கொண்ட நாவல்.

9. யூமாவாசுகியின் ‘ரத்த உறவு’ (தமிழினி பதிப்பகம்) குடியால் அழிந்த குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல்.

10. பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ (தமிழினி பதிப்பகம்) காதலின் துயரைக் கவித்துவமாகப் பதிவுசெய்த நாவல்.

 

http://tamil.thehindu.com/opinion/columns/நாவல்களின்-காலம்/article8653450.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

பரிந்துரை 3 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

book_2869051g.jpg

book1_2869052g.jpg

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

வெண்டி டோனிகர்

தமிழில் : க. பூரணச்சந்திரன்

விலை ரூ : 750 எதிர் வெளியீடு

தொடர்புக்கு: 98650 05084

இந்து மரபின் இயல்பைப் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் எழுதப்பட்ட விரிவான நூல் இது. சிறந்த பகுப்பாய்வு கொண்ட இந்நூல் மூவாயிரம் ஆண்டுகளாகப் பரந்துகிடக்கும் தலங்கள், சடங்குத் தருணங்கள், நேசத்திற்குரிய நூல்கள் ஆகியவற்றினூடே பயணம் செய்யும் அனுபவத்தைத் தருகிறது. அமர்த்யா சென், டேவிட் ஷூல்மன் போன்ற அறிஞர்களின் பாராட்டைப் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

********

பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தமிழில்: பூ.கொ.சரவணன்

பிரக்ஞை வெளியீடு

தொடர்புக்கு: 99400 44042

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிந்தனை யாளரான எம்.எஸ்.எஸ். பாண்டியனால் 1990-ல் ‘தி இமேஜ் டிராப்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்நூல். நடிகர், அரசியல் தலைவர் என்று இயங்கிய எம்.ஜி.ஆர். எனும் பிம்பத்தை கறாரான விமர்சனப் பார்வையுடன் இந்நூல் அணுகுகிறது. தமிழ்த் திரையுலகுக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் இடையிலான உறுதியான தொடர்பு இதில் பதிவாகியிருக்கிறது.

********

நந்தனின் பிள்ளைகள்: பறையர் வரலாறு 1850-1956

ராஜ் சேகர் பாசு தமிழில் அ. குமரேசன்

விலை ரூ.500, கிழக்கு வெளியீடு

தொடர்புக்கு: 044-42009601

பறையர்கள் என்பவர்கள் யார் என்னும் ஆதாரக் கேள்வியுடன் தொடங்கும் இந்த ஆய்வுநூல் 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான பறையர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கை முறையை ஆதாரபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறது. பிரிட்டிஷ் காலனியாதிக் கத்துக்கு முன்பும் பின்பும் அம்மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் விரிவாகப் பதிவாகியிருக்கின்றன.

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-3-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8648901.ece

பரிந்துரை 4 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

books_2870756f.jpg
 

அந்தோனியோ கிராம்சி- தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்

தமிழில்: வான்முகிலன்

விலை: ரூ.600

அலைகள் பதிப்பகம் - 9444431344

இத்தாலியின் மார்க்ஸிய அறிஞர் அந்தோனியோ கிராம்சி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் எழுதிய குறிப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இந்நூல். கல்வி, அரசியல், தத்துவம், குடிமைச் சமூகம் போன்றவற்றைப் பற்றிய கிராம்சியின் விரிவான விவாதங்கள் அடங்கிய நூல் இது.

*******

அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்

வெ.வெங்கடாசலம்

விலை: ரூ.120

புலம் பதிப்பகம் 9840603499

ஒடுக்கப்பட்டோர் வாழ்வியலை வரலாற்றுப் பின்புலத்துடன் மீட்டெடுத்த முதல் சிந்தனையாளர் அயோத்திதாசர். அவரது வரலாற்றையும் சிந்தனையையும் விரிவான தரவுகளோடும் காலப் பின்னணியுடனும் ஆராயும் நூல் இது. பல்வேறு தளங்களிலும் இயங்கிய அவரது சிந்தனைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகியிருக்கிறது.

*******

நலம் காக்க வாங்க பழகலாம்..

மருத்துவர் கு.சிவராமன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,- 044 - 26251968

விலை: ரூ. 275

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தைப் பேசும் நூல். இன்றைய நவீன யுகத்தில் மக்களின் நலவாழ்வுக்குத் துணைபுரியும் அம்சங்கள் அடங்கியது சித்த மருத்துவம் என்று இந்நூல் பேசுகிறது. அறிவியலின் ஆய்வுக் கண்களுக்குப் புலப்படாத, ஆனால் முழுப் பயனளிக்கும் மருத்துவ முறையாக சித்த மருத்துவத்தை முன்னிறுத்துகிறது.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-4-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8653499.ece

பரிந்துரை 5 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

books_2872185f.jpg
 

சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு 
ராமச்சந்திர குஹா 
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன் 
ரூ : 250/- 
எதிர் வெளியீடு: 9865005084

சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் அடிப்படையில், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா எழுதிய நூலின் தமிழாக்கம் இது. சுற்றுச்சூழல் பாதிப்பு, அரசுத் திட்டங்களால் தமது நிலங்களை இழக்கும் பழங்குடியினர், விவசாயிகளின் நிலை என்று பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார் குஹா.

 

ஏ.கே.செட்டியார் படைப்புகள் 
அறியப்படாத அரிய கட்டுரைகளின் முழுத் தொகுதி 
பதிப்பாசிரியர்: கடற்கரய் மத்தவிலாச அங்கதம் 
சந்தியா பதிப்பகம் - தொடர்புக்கு: 044-24896979 
விலை: ரூ.900

ஏ.கே.செட்டியாரின் படைப்புகள் முழுவதுமாகத் தொகுக்கப்பட்டு இரு தொகுதிகளாக வெளியாகியிருக்கின்றன. அவர் எழுதி இதுவரை நூல் வடிவம் பெறாத 30 கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

 

உலக மக்கள் வரலாறு 
ஹரிஸ் ஹார்மன் 
தமிழில்: மு.வசந்தகுமார், நிழல்வண்ணன் 
விலை: ரூ.1,100 
விடியல் பதிப்பகம் - தொடர்புக்கு: 9789457941

உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கை முறை தொடங்கி, மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், இனக் குழுக்கள், பொருளாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றிய கருத்துகள் அடங்கிய நூல். சமகால நிகழ்வுகளுடனான ஒப்பீட்டுடன் பழைய வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது.

 

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம்
மா.பா.குருசாமி 
விலை: ரூ. 300 
சர்வோதய இலக்கியப் பண்ணை: 0452- 2341746

காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் என்று கருதப்படும் ஜே.சி.குமரப்பாவின் சிந்தனைகள் அடங்கிய நூல் இது. ஜே.சி.குமரப்பாவின் வாழ்க்கை வரலாறு, பரவல்முறை உற்பத்தி, விநியோகம், குடிசைத் தொழிகள் பற்றிய அவரது பார்வை என்று பல விஷயங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன.

 

http://tamil.thehindu.com/general/literature/பரிந்துரை-5-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8658848.ece

பரிந்துரை 6 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

books_2873382f.jpg
 

கதை மழை 
பிரபஞ்சன் 
நற்றிணை பதிப்பகம் - 9486177208 
விலை: ரூ.80

உலகச் சிறுகதைகளுடன் ஒப்பிடும் வகையில் தமிழ்ச் சிறுகதைகள் இருக்கின்றன என்று குறிப்பிடும் பிரபஞ்சன், தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகளும் பேசியிருப்பதன் அடிப்படையில் இரண்டையும் இணைத்து எழுதிய பதிவுகளின் தொகுப்பு இது.

 

இஸ்லாம்: ஒரு பார்வை 
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது 
விலை: ரூ.120 
கிழக்குப் பதிப்பகம் 
தொடர்புக்கு : 044 - 42009603

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு என்ன? இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மதமா? பெண்களுக்கு எத்தகைய சுதந்திரத்தை அளிக் கிறது? மாற்று மதங்களை எப்படி அணுகுகிறது? போன்ற கேள்விகளை முன்வைத்து இஸ்லாத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல்.

 

சாதியை அழித்தொழித்தல் 
பி.ஆர்.அம்பேத்கர் 
தமிழில்: பிரேமா ரேவதி 
காலச்சுவடு பதிப்பகம் - 9677778863 
விலை: ரூ. 295

அம்பேத்கர் எழுதிய ‘அன்னிஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்’ எனும் புகழ்பெற்ற கட்டுரையின் தமிழ் வடிவம். இதற்கு அருந்ததி ராய் எழுதிய மிக நீண்ட முன்னுரையும் தமிழ்வடிவம் பெற்றிருக்கிறது. இவற்றுடன், நவயானா பதிப்பகத்தின் ஆசிரியர் ஆனந்த் வரலாற்றுத் தரவுகளுடன் எழுதிய குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-6-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8662946.ece

பரிந்துரை 7 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

book_2874520f.jpg
 

இடக்கை

எஸ்.ராமகிருஷ்ணன்

உயிர்மை பதிப்பகம் (044-24993448)

விலை: ரூ. 375

பேரரசர்களின் வீழ்ச்சிகளுக்கு ஊடே எளிய மனிதர்களுக்கு நேரும் பேரவலத்தைப் பதிவுசெய்திருக்கும் நாவல். அடித்தட்டு மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது. சாமர் எனும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாயகனின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பதிவுசெய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

*********

நறுமணம் சிறுகதைத் தொகுப்பு

இமையம்

க்ரியா பதிப்பகம் (9789870307)

விலை: ரூ. 195

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய தொழில்நுட்பங்கள் உறவுகளையும் மதிப்பீடுகளையும் தகர்க்கும் விதம் பற்றியும், இதில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும் சொல்லும் கதைகள் இவை.

*********

அறிவியலில் பெண்கள்

ஒரு சமூக - வரலாற்றுப் பார்வை

கு.வி.கிருஷ்ணமூர்த்தி

அடையாளம் பதிப்பகம் (9443768004)

விலை: ரூ. 280

உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட பெண் அறிவியல் அறிஞர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது இந்நூல். வீடுகளிலும் நிறுவனங்களிலும் உள்ள பல்வேறு பணிச் சுமைகளை அவர்கள் கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-7-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8665705.ece

பரிந்துரை 8 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

bo_2875720g.jpg

bo1_2875719g.jpg

அகிம்சையை நோக்கி புனித யாத்திரை

வினோபா பாவே

சர்வோதய இலக்கியப் பண்ணை (9894642007)

விலை: ரூ.100

காந்தியம் என்பது சாத்தியமான நடைமுறையே என்பதை நிரூபித்துக் காட்டியவரும் ‘பூமிதான இயக்க’த்தின் தந்தையுமான ஆசார்ய வினோபா பாவேவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல்.

*************

எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல்

எஸ்.வி.ராஜதுரை

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,( 044- 26251968)

விலை: ரூ.300

மார்க்ஸியக் கண்ணோட்டத்துடனும் அம்பேத்கர், பெரியார் பார்வையின் வழியாகவும் தனது கருத்துகளை முன்வைக்கும் எஸ்.வி.ராஜதுரை எழுதிய நூல். சிந்தனைக் களஞ்சியமாக இருக்கும் நூல்கள் அழிக்கப்பட்ட நிகழ்வுகள், கருத்துரிமை மறுக்கப்படும் சூழலை விவரிக்கிறது.

*************

தேர்தலின் அரசியல்

அ.வெண்ணிலா

அகநி வெளியீடு (9842637637)

விலை: ரூ.80

கொள்கைகளைப் பின்னுக்குத் தள்ளி, வெறும் ஓட்டு அரசியலாக மாறிப்போன தற்கால அரசியலைச் சமூக விமர்சனப் பின்னணியில் அணுகியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. சமகால அரசியலின் போக்கைப் பற்றித் தீவிரமாக அலசும் நூல் இது.

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-8-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8671413.ece

  • தொடங்கியவர்

பரிந்துரை 9 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

book1_2876864g.jpg

மக்கள் தெய்வங்கள்

பேராசிரியர் கோ.பழனி

புலம் பதிப்பகம் (98406 03499)

விலை: ரூ.140

வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்தால், அதை எதிர்ப்பது, அவர்களைக் கொலை செய்வது என்று வெறித்தனம் காட்டியச் சமூகத்தில், அப்படிக் கொல்லப்பட்டவர்களைத் தெய்வங்களாக்கி வழிபடும் விநோதமும் நடந்திருக்கிறது. இந்தப் போக்குகளைப் பற்றிப் பேசுகிறது இந்நூல்.

******

மனித உடலின் கதை

(பரிணாமம், ஆரோக்கியம், நோய்)

டேனியல் இ. லிபர்மேன்

தமிழில்: ப்ரவாஹன்

பாரதி புத்தகாலயம் (044 - 24332424)

விலை: ரூ. 470

ஆரோக்கியம், நோய் என்ற வாழ்க்கையின் இன்றியமையாத மிகவும் முக்கியமான இரண்டு அங்கங்களின் பரிணாமம் ஒரு உடலின் கதையாக இந்நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மானுடவியல், உயிரியல், மரபு வழிப் பண்பியல் என்று பல்வேறு தளங்களின் வழியே மனித உடல் தொடர்பான விஷயங்கள் அலசப்பட்டிருக்கின்றன.

*******

அழகிய மரம் - 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி

தரம்பால் (தமிழில் பி.ஆர். மகாதேவன்)

தமிழினி வெளியீடு(9344290920)

விலை: ரூ. 450

18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கல்வி எப்படி இருந்தது என்பதை காந்தியவாதியான தரம்பால் பிரிட்டிஷ் ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்து எழுதியிருக்கும் நூல். சாதிப் பாகுபாடுகள் கல்வி கற்கத் தடையாக இருக்கவில்லை எனவும் தரம்பால் நிறுவுகிறார். ஐரோப்பாவுடனான ஒப்பீடும் இந்த நூலில் உள்ளது.

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-9-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8676202.ece?ref=relatedNews

1_2879846f.jpg
 

தொல்லியல் நோக்கில் குறுமன்ஸ் பழங்குடி

விலை: ரூ.150

முனைவர் தி.சுப்பிரமணியன் அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம் வெளியீடு.

அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்

விலை: ரூ.120

எம்.வெங்கடாசலம்

புலம் பதிப்பகம்

பாணர் - இனவரைவியல்

விலை: ரூ.220

பக்தவத்சல பாரதி

அடையாளம் பதிப்பகம்

அளவீடற்ற மனம்

ரூ.225

ஜே.கிருஷ்ணமூர்த்தி

தமிழில்: எஸ்.ராஜேஸ்வரி

நர்மதா பதிப்பகம்

மரியாதைக்குரிய ஐ.டி. நண்பனுக்கு..

விலை: ரூ. 50

கதிரவன்

சிற்றுளி பதிப்பகம்

 

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-10-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8685691.ece?ref=relatedNews

நான் என்ன வாங்கப்போகிறேன்?

இடமிருந்து வலம்: ப்ரேமா ரேவதி, சரவணன் சந்திரன், சமுத்திரக்கனி, ஜென்ராம்.
இடமிருந்து வலம்: ப்ரேமா ரேவதி, சரவணன் சந்திரன், சமுத்திரக்கனி, ஜென்ராம்.

ப்ரேமா ரேவதி - செயல்பாட்டாளர்

எல்வின் கண்ட பழங்குடி மக்கள்

மீள்பார்வை - பக்தவச்ல பாரதி

கருத்தாயுதம்

பாலகோபால் தமிழில் - க.மாதவ்

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - கவின்மலர்

சரவணன் சந்திரன் - எழுத்தாளர்

சிமோனிலா சிரஸ்த்ரா

மாதவன் ஸ்ரீரங்கம்

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

ம.ராஜேந்திரன்

ஆரஞ்சு மிட்டாய்

கார்த்திக் புகழேந்தி

சமுத்திரக்கனி - இயக்குநர், நடிகர்

ஏழாவது ஊழி

ஐங்கரநேசன்

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

சாம்ராஜ்

கதா காலம்

வேகாந்தன்

ஜென்ராம் - ஊடகவியலாளர்

உருவாகும் உள்ளம்

- வி.எஸ்.ராமச்சந்திரன் தமிழில்: ஆயிஷா இரா.நடராசன்

பா.செயப்பிரகாசம் சிறுகதைகள்

தியூப்ளே வீதி

இரா.முருகன்

 

http://tamil.thehindu.com/opinion/blogs/நான்-என்ன-வாங்கப்போகிறேன்/article8680480.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.