Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்க் 2007: மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Featured Replies

சார்க் 2007: இராஜபக்சாவின் வருகையும் தமிழகத்தின் கடமையும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்இ (தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழு முன்னாள் உறுப்பினர்)

மறவன்புலவு க. சச்சிதானந்தன் பற்றி

தெற்காசியக் கூட்டமைப்பின் 14ஆவது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்பிரல் 3இ 4 நாள்களில்இ புதுதில்லியில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெற்காசியாவின் ஒவ்வொரு நாட்டுத் தலைவரையும் நேரடியாகச் சென்று அழைப்பைக் கொடுத்து வருகிறார்.

புதிதாக இணைந்துள்ள ஆப்கானிஸ்தானுடன்இ இந்தியாஇ இலங்கைஇ நேபாளம்இ பாகிஸ்தான்இ பூடான்இ மாலைதீவு ஆகியன இந்தக் கூட்டமைப்பில் உள்ள ஏழு நாடுகள்.

ஆண்டுக்கு ஒருமுறை உச்சி மாநாடு நடக்கவேண்டுமென்பது மரபு. ஆனாலும் இதுவரை 13 மாநாடுகளே நடந்துள்ளன.

1985இல் முதலாவது உச்சி மாநாடு வங்காள தேசத் தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. அடுத்த 10 ஆண்டுகளில் 8 உச்சி மாநாடுகளே நடைபெற்றன. அதற்கடுத்த 10 ஆண்டுகளில் 5 உச்சி மாநாடுகளே நடைபெற்றன. 22ஆவது ஆண்டில் 14ஆவது உச்சி மாநாடு நடைபெறப்போகிறது.

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில்இ அரண்மனைக்கு எதிரே உள்ள தெற்காசியக் கூட்டமைப்புத் தலைமையகத்துள்ளே போவோருக்கு உற்சாகமற்ற அலுவலகமாகவே அது காட்சி தரும். சுறுசுறுப்பான கண்ணோட்டமே இல்லாத அலுவலர்கள்இ வெற்று மேசைகள்இ விடுப்பில் பலர் என அந்த அலுவலகம் செயற்படாமைக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றுஇ தொய்வுகளும் தள்ளிப் போடல்களும் நிறைந்த உச்சி மாநாடுகள்தாம்.

முதலாவது 7 8 திசம்பர் 1985 தாக்கா

இரண்டாவது 16- 17 நவம்பர் 1986 பங்களூர்

மூன்றாவது 2- 3 -4 நவம்பர் 1987 காத்மண்டு

நான்காவது 29- 30- 31 திசம்பர் 1988 இசுலாமபாத்

ஐந்தாவது 21- 22- 23 நவம்பர் 1990 மாலே

ஆறாவது 21 திசம்பர் 1991 கொ ழும்பு

ஏழாவது 10- 11 ஏப்ரல் 1993 தாக்கா

எட்டாவது 2- 3-4 மே 1995 புதுதில்லி

ஓன்பதாவது 12- 13- 14 மே 1997 மாலே

பத்தாவது 29- 30-31 சூலை 1998 கொ ழும்பு

பதினோராவது 4- 5-6 சனவரி 2002 காத்மண்டு

பன்னிரண்டாவது 2-3-4-5-6 சனவரி 2004 இசுலாமபாத்

பதின்மூன்றாவது 12- 13 நவம்பர் 2005 தாக்கா

தெற்காசிய நாடுகளுக்குள்ளே உள்ள இரு தரப்புச் சிக்கல்களேஇ ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய தெற்காசிய உச்சி மாநாடுஇ பலமுறை ஒத்திவைப்பதற்குக் காரணமாயின.

நாட்டின் தலைவர் உச்சிமாநாட்டில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பது விதியும் மரபும். குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் தரத்திலுள்ள தலைவர் கலந்துகொள்ள வேண்டும் என்பேத விதி. அல்லவெனில் அமைச்சர்களின் மற்றும் அதிகாரிகள் மாநாடாகிவிடுமே!

எந்த ஒரு நாடாவதுஇ எந்த ஒரு உச்சி மாநாட்டுக்காவதுஇ தன் உயர் தலைவரை அனுப்ப மறுத்தால் அந்த மாநாடே குலைந்து விடும்இ ஒத்திவைக்கப்படும். ஒருமுறையல்ல பலமுறை இத்தகைய ஒத்திவைப்புகள் நடந்ததால்தான்இ 22 ஆண்டுகளில் 14ஆவது மாநாடு நடைபெறப் போகிறது.

முதலாவது எடுத்துக்காட்டு:

2005 பெப்ருவரி 6இ 7இல் தாக்காவில் உச்சி மாநாடு நடைபெறுவதாக இருந்தது. 2004 திசம்பரின் ஆழிப்பேரலைத் துயரங்கள் இலங்கைஇ இந்தியாஇ மாலைதீவு ஆகிய நாடுகளில் நீடித்த நிலையிலும் உச்சி மாநாட்டைக் குழப்பவேண்டாம் எனத் தலைவர்கள் தீர்மானித்தனர்.

நேபாளத்தில் நேரடி மன்னராட்சி 2005 பெப்ருவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் பிரதமர் தாக்கா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளார் என இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரண் கடைசி நேரத்தில் அறிவித்தார். இந்தியாவின் அயலகங்களில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களளைக் கருத்தில் கொண்ட பிரதமர் மாநாட்டிற்குப் போகமுடியவில்லை எனச் சியாம் சரண் கூறியதும் தெற்காசியக் கூட்டமைப்பே குலுங்கியது. நேபாள மன்னருடன் அருகருகே அமர்ந்தால் நேபாள மக்கள் மனமுடைந்து போவார்கள் எனச் சூசகமாகச் சியாம் சரண் தெரிவித்தார். அது மட்டுமல்லஇ வங்காள தேசத்தில் இந்தியாவுடன் நெருங்கிய உறவு கொண்ட அவாமி லீக்கின் தலைவர்களுள் ஒருவரானஇ முன்னாள் நிதி அமைச்சர் சாம்சுல் கிபிரியா சனவரிக் கடைசியில் கொல்லப்பட்டார். எனவே தாக்காவில் பாதுகாப்பு முறையாக இல்லை என்பதைத் தில்லிஇ அலுவலக முறைப்படி தாக்காவுக்கு அறிவித்தது. இதனால் இந்தியப் பிரதமர் மாநாட்டுக்குப் போக மறுத்தார். மாநாடு திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

இந்தியப் பிரதமர் உச்சி மாநாட்டுக்குப் போகாதமைக்குஇ அவரது அரசுக்குத் துணைநின்ற கூட்டணிக் கட்சிகளே காரணம். போகக் கூடாதென்ற முடிவைப் பிரதமர் எடுக்குமுன் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்க்கட்சியினரையும் கலந்தாலோசித்தார். இடதுசாரிக் கட்சிகள் இதில் கடும் நிலையை எடுத்திருந்தன். நேபாள மக்களுக்குத் துரோகம் செய்யாதீர்கள் என இடதுசாரிகள் பிரதமரிடம் நேரடியாகக் கூறினர். பிரதமரும் அதற்கு மதிப்புக் கொடுத்தார். திடீரென மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர்இ 2005 நவமபர் 12இ 13இல் நடந்தேறியது.

இரண்டாவது எடுத்துக்காட்டு:

1999 நவம்பர் 26இ 27இ 28இல் காத்மண்டுவில் நடைபெறவிருந்த 11ஆவது மாநாடு திட்டமிட்டபடி நடைபெறவேயில்லை. வாஜ்பாய் அப்போது இந்தியப் பிரதமராக இருந்தார். 1998 மே மாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் அணுகுண்டுகளை வெடித்துப் பரிசோதித்திருந்தன. 1999 மே தொடக்கம் சூலை வரை கார்கில் போர் நடைபெற்று முடிந்திருந்தது. இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் மோசமான சூழ்நிலையை எட்டியிருந்தன. இதற்கு மகுடம் வைத்தாற்போலஇ நவாப் ஷெரீபிடமிருந்து 1999 அக்டோபர் 12இல் முஷராப் ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்தார். இராணுவ ஆட்சி பாகிஸ்தானில் வந்ததால் உலகமே அதிர்ந்திருந்த வேளை.

பாகிஸ்தானில் நடந்த இராணுவப் புரட்சியை வரவேற்காத இந்தியாஇ உச்சி மாநாட்டைக் குலைக்க முயன்றது. தானே நேரடியாக ஈடுபடாமல்இ அயலவர்களாகிய வங்காள தேசத்தையும் பூடானையும் இந்தியா உசுப்பிப் பார்த்தது. இதை எதிர்த்து இலங்கை அதிபர் சந்திரிகா உறுமினார். அதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் முஷராபை வரவேற்றவர் சந்திரிகா. இராணுவப் புரட்சி உள்நாட்டு விவகாரம் அதற்காக உச்சிமாநாட்டைப் பின்போடமுடியாதென்றார் சந்திரிகா. அவர் அப்பொழுது தெற்காசியக் கூட்டமைப்பின் சுழற்சி முறைத் தலைவர்.

பாகிஸ்தானும் மிரட்டியது. ஆனால் இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை. அந்த உச்சி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறவேயில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 2002இல் அந்த உச்சி மாநாடு காத்மண்டுவில் நடைபெற்றது.

மூன்றாவது எடுத்துக்காட்டு:

1991இல் கொழும்பில் நவம்பரில் ஆறாவது உச்சி மாநாடு நடைபெறவிருந்தது. பிரேமதாசா அப்பொழுது இலங்கையின் குடியரசுத் தலைவர். அவருக்கு இந்தியாவின் மீது உறைப்பான கோபங்கள். 1987இல் இராஜீவின் கொழும்பு வருகையைப் புறக்கணித்துப் பிரதமரான பிரேமதாசா தாய்லாந்து சென்றுவிட்டார். 1990களில் வி. பி. சிங் அரசு பிரேமதாசருடன் கடுமையாக நடந்து கொண்டது. 1991 அக்டோபரில் நரசிம்மராவ் பிரதமாராக இருந்தார். பிரேமதாசாவுக்குப் பாடம் புகட்ட நரசிம்மராவ் எண்ணினார்இ பூடானை உசுப்பிவிட்டார். பூடான் மன்னர் உச்சி மாநாட்டுக்குத் தாம் வரவில்லை என அறிவித்தார். 1991 நவம்பர் உச்சி மாநாடு குழம்பியதுஇ பின்னர் திசம்பரில் கொழும்பில் நடைபெற்றது.

நான்காவது எடுத்துக்காட்டு:

1990களில் மாலைதீவில் நடைபெற இருந்த ஐந்தாவது உச்சி மாநாட்டைப் பின்போடுவதற்குப் பிரேமதாசா காரணராக இருந்தார். இலங்கையில் இந்தியத் தலையீட்டை (1987-1990) ஒப்புக் கொள்ளாத அவர்இ இந்தியப் பிரதமருடன் அருகருகே உட்கார மறுத்தார். மாலை தீவு அதிபர் கயூம் கொழும்புக்குச் சென்று பிரேமதாசாவுடன் பேசிஇ ஒத்திப்போட்ட மாநாட்டை மீண்டும் நடத்தி முடித்தார்.

இரு தரப்பு உறவுகளை அரசியலாக்கத் தெற்காசியக் கூட்டமைப்பு உச்சி மாநாடுகள் தொடர்ந்து பயன்பெறும் நிலையில்இ 2007 ஏப்பிரலில் இராஜபக்சே தில்லி வரவிருக்கிறார். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இராஜபக்சா தில்லிக்கு வருவது பிடிக்கவேயில்லை. தில்லி செல்லும் வழியில் தமிழகம் வந்தால் போராட்டங்கள் வெடிக்கும் என்பைதக் கடந்த முறை அவர் தமிழகம் வர முயன்றபோது நடந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டின. தமிழகம் வரத் திட்டமிட்டிருந்த இராஜபக்சாஇ குருவாயூரிலிருந்து நேரே கொழும்பு சென்றுவிட்டார்.

அன்றைய சூழலில் செஞ்சோலை மீதான குண்டுவீச்சு நிகழ்ச்சிகள் தமிழக மக்களின் உணர்வுகளைப் பூதாகாரமாகத் தூண்டிவிட்டிருந்தன.

1987 இராஜீவ் - ஜெயவர்த்தனா உடன்படிக்கையை முறித்துஇ ஒன்றிணைந்த தமிழர் தாயகத்தை வடக்கு மாகாணமென்றும் கிழக்கு மாகாணமென்றும் பிரித்துஇ இந்தியாவின் முகத்தில் கரி பூசிய இராஜபக்ச அரசுஇ 2002 பெப்ருவரி 22இன் இரணில் - பிரபாகரன் புரிந்துணர்வு உடன்பாட்டையும் போர் நிறுத்த உடன்பாட்டையும் மீறிஇ யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஏ9இ நெடுஞ்சாலை மூதூர் செல்லும் ஏ15 நெநடுஞ்சாலை ஆகியவற்றை மூடிஇ ஏறத்தாழ 7 இலட்சம் தமிழரைப் பட்டினியிலும் நோயிலும் வாடவிட்டுஇ சம்பூர்இ மாவிலாறுஇ வாகரை ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி ஐரோப்பிய நாடுகளின் முகத்திலும் கரி பூசி உள்ளது.

1952 நேரு - கொத்தலாவெலை ஒப்பந்தம்இ 1958 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம்இ 1964 சிறீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம்இ 1965 டட்லி - செல்வநாயகம் ஒப்பந்தம்இ 1987 இராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் யாவுமே கொழும்பு அரசுகளால் ஒரு தலைப்பட்சமாகக் கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள்.

அனைத்துலக நாடுகளின் அநுசரணையுடனான ஒப்பந்தங்களையோஇ தமிழர் - சிங்கள ஒப்பந்தங்களையோ கிழித்தெறியச் சிங்கள அரசுக்கு வெட்கம் இருப்பதில்லை.

இத்தனைக்கும் போலி இடது சாரிகளான 23 பிரிவுகளாலமைந்த இலங்கை இடதுசாரிக் கட்சிகள்இ இராஜபக்சா அரசுக்கு முண்டு கொடுத்து வருகின்றன. மார்க்சியக் கோட்பாடுகள்இ லெலினினியத் தத்துவங்கள் யாவையுமே வசதியான போர்வைகளாக்கிஇ சிங்கள - புத்த இனவெறியை முன்னெடுத்துச் செல்லஇ பேரினவாதக் கொள்கைகளுக்கு ஆதரவு தரஇ பொதுவுடைமையாளராகக் காட்டிக் கொள்ளும் இந்த 23 பிரிவினரும் தம்முள்ளே போட்டி போடுவதுதான் இலங்கை இடதுசாரி இயக்கத்தின் மெய்நிலை.

இடதுசாரிகளுள் மக்களிடம் அதிகமாக ஆதரவைப் பெற்றவர்கள்இ மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யினர். இவர்கள் ஒற்றையாட்சி இலங்கைக்குள் தமிழர் அடிமைகளாக இருக்கவேண்டும் எனபோர். மகிந்த இராஜபக்சாவின் மகிந்த சிந்தனை என்ற தேர்தல் அறிக்கையின் கருவூலர்கள். 1987இல் இந்தியத் தலையீட்டை எதிர்த்தவர்கள்இ 2002இன் நோர்வேத் தலையீட்டையும் எதிர்ப்பவர்கள். சிங்கள புத்த இன வெறியர்களான இவர்களுக்கு பொதுவுடைமைக் கொள்கைகள் போலிப் போர்வைகளே.

தமிழர்களைக் கொன்று குவித்த இரத்தக் கறையுடன் இராஜபக்சா:

அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீருடன் ஏதிலிகளாக 20இ000 ஈழத் தமிழர்கள் கடந்த சில மாதங்களில் இந்தியக் கரைகளில் ஒதுங்கியுள்ளார்கள்இ தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் கொழும்பில் விடுதிகளிலும் வீடுகளிலும் தகர டப்பாவுள் அடைத்த மீன்களைப் போல் அடங்கிஇ அடுக்குகளாக வாழ்கின்ற வசதியுள்ள தமிழர் சிலருள்ளும் பலர் கடத்தப் படுகிறார்கள் கொடுஞ்சிறைக்குள் அடைக்கப் படுகிறார்கள்இ கண்டபடி சுடப்படுகிறார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுடப்படுகிறார்கள்.

யாழ்ப்பாணக் குடாநாடு திறந்தவெளிச் சிறைச்சாலையாகிஇ உணவுஇ மருந்துஇ கட்டுமானப் பொருள்இ மின்சாரம்இ எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு இடையே ஆறரை இலட்சம் மக்களைத் தாங்கி அல்லலுறுகிறது.

வவுனியாவிலும் திருகோணமலை - மூதூர் - வாகரையிலும் இரண்டு இலட்சம் தமிழர் நிர்க்கதியாய்த் தவிக்கிறார்கள். கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைக் கடத்தியவர்கள் இருமாத காலமாக விடுவிக்கவேயில்லை. அம்பாறை மாவட்டத்தில் தமிழர் எவரும் அச்சமின்றி உலவவே முடியாத கொடூரச் சூழ்நிலை.

இஸ்ரேல் வழங்கிய கிபீர் விமானங்களும் பாகிஸ்தான் வங்கிவரும் பல்குழல் பீரங்கிகளும்இ நாளும் பொழுதும் தமிழ்க் குழந்தைகளையும் பெண்களையும் அப்பாவித் தமிழரையும் குண்டுமாரி பொழிந்து கொன்று குவிக்கின்றன. ஈழத்தில் இரத்த ஆறு பாய்கிறது.

இலங்கைத் தீவு முழுவதற்குமான ஆட்சித் தலைவர் என்பதை விடஇ ஈழத் தமிழரைக் கொன்று குவிக்கும் ஆட்சித் தலைவர் என இராஜபக்சாவை அழைக்கலாம். அத்தகைய தலைவர் ஏப்பிரலில் வருகிறார்இ தெற்காசியக் கூட்டமைப்புத் தலைவர்களுடன் கை குலுக்குகிறார்.

பிரேமதாசாவுக்குப் பாடம் புகட்ட 1991இல் ஆறாவது உச்சி மாநாட்டை ஒத்தி வைத்தவர் பிரதமர் நரசிம்மராவ். முஷராபுக்குப் பாடம் புகட்ட 1999இல் பதினோராவது மாநாட்டை ஒத்தி வைத்தவர் பிரதமர் வாஜ்பாய். நேபாள மன்னருக்குப் பாடம் புகட்ட 2005இல் பதின்மூன்றாவது மாநாட்டை ஒத்திவைத்தவர் பிரதமர் மன்மோகன்சிங். அண்டை நாடுகளை வழிக்குக் கொண்டுவரத் தெற்காசியக் கூட்டமைப்பின் உச்சிமாநாடுகளைப் பயன்படுத்துவதில் முன்னோடி நிகழ்வுகள் பல உண்டு.

இரத்தக் கறைக

நன்றி : தமிழ்சிபி.கொம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.