Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதி விபத்தை தடுப்பதற்கு பொலிஸாரின் நடவடிக்கை என்ன?

Featured Replies

15131.jpg

வட பகுதியில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களால் உயிரிழப்புக்களும் அங்க வீனங்களும் படுகாயங்களும் ஏற்பட்ட வண்ண முள்ளன.

நாளுக்கு நாள் இந்த விபத்துக்கள் அதி கரித்துக் கொண்டே இருக்கிறது.

வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வந்தால்தான் உண்டு என்னும் அளவில் விபத்துக்கள் மலிந்து விட்டன.

இவ்வாறு நாளாந்தம் விபத்துக்கள் அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்களால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் படும் துன்பம் சொல்லூந்தரமன்று.

அண்மையில் இளம்தாய் ஒருவர் விபத்தில் உயிரிழந்துவிட்டார். ஆறு மற்றும் எட்டு வயதுகளில் இரண்டு பிள்ளைகள்.

தாயை இழந்த அந்தப் பிள்ளைகளின் பரிதவிப்பு பார்ப்பவர்களை அழவைக்கிறது.

இப்போது அந்தப் பிள்ளைகள் வீட்டில் உள்ள அறைகளில் தங்கள் அம்மா ஒளிந்திருப்பதாக நினைத்து அங்கு தாயைத் தேடுகின்றார்களாம்.

இந்தத் தகவலை அறிந்த போது இதயம் வெடித்து விடும் போல் இருந்தது.

இறைவா! ஏன்தான் இப்படி என்று நினைந்து மனம் நோவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

இது ஒருபுறம் இருக்க, விபத்தில் கையை காலை உடைத்துவிட்டு ஆறு மாதம் ஒரு வருடம் என்று படுத்த படுக்கையாக இருக்கும் பரிதாபம் இந்த உலகையே வெறுக்க வைக்கும்.

குடும்ப வருமானத்தை இழந்து, துன்பத்தோடு வாழ்கின்ற சூழ்நிலை தனி மனிதர்களில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் கூறியாரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

இவ்வாறாக நாளாந்தம் நடக்கும் விபத்துக்களால் நேரடிப் பாதிப்புக்கள் என்பதற்கு அப்பால்,
வைத்தியசாலைகளில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்தல், சத்திர சிகிச்சை, மருந்துப் பாவனைகள் என எல்லாமும் சேர்ந்து ஏனைய நோயாளர்களுக்கான சிகிச்சைகளையும் பராமரிப்புக்களையும் பாதிக்கவே செய்யும்.

ஆகையால் விபத்துக்களைத் தடுப்பதற்காகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதைச் செய்வதில் இலஞ்சம் என்ற விடயம் மிகப்பெரும் தடையாக இருக்கின்றது.

ஏ9 வீதியில் மரங்களுக்குள் மறைந்து நின்று அதிவேகம் உள்ளிட்ட விடயங்களைக் கவனிக்கும் போக்குவரத்துப் பொலிஸார் மரத்தின் மறைப்பை, பிறர்க்குத் தெரியாமல் இலஞ்சம் பெறுவதற்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற உண்மையை எவரும் நிராகரித்துவிட முடியாது.

எனவே பொலிஸார் மத்தியில் இலஞ்சம் என்பது எப்போது அறவே இல்லாமல் போகிறதோ அப்போதுதான் விபத்துக்கள் கணிசமாகக் குறைவடையும்.

எதுவாயினும் நாளாந்தம் அதிகரித்து வரும் விபத்துக்களைச் சடுதியாகக் குறைப்பதற்கான உடனடி ஏற்பாடு, முக்கிய சந்திகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும் போக்குவரத்துப் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபடுவதாகும்.

இந்தப் பணியை காலையிலும் மாலையிலும் செய்தால் கூட ஓரளவுக்கு விபத்தை கட்டுப்படுத்தலாம்.
 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=15131&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.