Jump to content

வீடியோ கேம்களைக் குறிவைக்கும் போர்னோகிராபி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சிறப்புக் கட்டுரை: வீடியோ கேம்களைக் குறிவைக்கும் போர்னோகிராபி!

36.jpg

ஜஸ்டின் லெஹ்மில்லர்

போர்ன் எனப்படும் ஆபாசம் குறித்த இணையத்தேடலில் போர்ட்நைட் என்ற புகழ்பெற்ற வீடியோகேம் ஆனது 15ஆவது இடத்தைப் பிடித்ததாகத் தெரிவித்துள்ளது போர்ன்ஹப் தளம். வீடியோ கேமில் வரும் பாத்திரங்களும் இதர கலையம்சங்களும் ஏன் அசாதாரண செக்ஸ் விரும்பிகளின் தேடலோடு ஒன்றிணைகிறது. இது பற்றிய தனது கடந்த கால ஆய்வுகளை ஒப்பிட்டு விளக்குகிறார் ஆய்வாளர் ஜஸ்டின் லெஹ்மில்லர்.

2018ஆம் ஆண்டில் புகழ்பெற்ற போர்ன் தேடல்கள் குறித்து போர்ன்ஹப் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இதில் 15ஆவது இடத்தைப் பிடித்தது போர்ட்நைட் என்ற வார்த்தை. வீடியோ கேம்ஸ் பிரியர்களைப் பொறுத்தவரை இது வார்த்தையல்ல; வாழ்க்கை. 2017ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து இப்போது வரை, இந்த விளையாட்டு 125 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் விளையாடப்பட்டு வருகிறது. மூன்றாவது நபர் சார்ந்த துப்பாக்கி விளையாட்டு இது.

அது சரி, வீடியோ கேமில் புகழ்பெற்ற போர்ட்நைட் குறித்து ஆபாசப் பிரியர்கள் தேடல் கொள்ள வேண்டிய அவசியமென்ன? இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. புகழ்பெற்ற வீடியோ கேம்களைத் தழுவி ஆபாசக் குவியல்கள் உருவாக்கப்படுவது காலம்காலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு வீடியோ கேம் கலாசாரம் வேகமாகப் பரவும்போது, அது சார்ந்த போர்னோ தேடலும் தவிர்க்க முடியாததாகிறது. 2016இல் போகிமான் கோ பிரபலமானபோது அது சார்ந்த போர்னோ விஷயங்கள் வைரலாக பரவின. இதற்கு முன்னர் டாம்ப் ரைடர், லெஜண்ட் ஆஃப் ஜெல்டா போன்ற புகழ்பெற்ற வீடியோ கேம் பாத்திரங்களும் கூட இதற்குத் தப்பவில்லை.

வீடியோ கேம்களை அடிப்படையாகக் கொண்ட போர்ன் விஷயங்கள் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறுகின்றன? இதனை அறிவதற்கு முன்னதாக, இம்மாதிரியான போர்னோக்கள் எப்படிப்பட்டதாக உள்ளன என்று பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும். அதனால், எனது ஆய்வுக் காரணங்களுக்காக மட்டுமே போர்ட்நைட் போர்னோவைப் பார்க்கும் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டேன். நான் பார்த்தவரை, இவற்றில் பெரும்பாலானவை ஆண் – பெண் ஈர்ப்பு சார்ந்ததாகவே இருந்தன. ஆனால், அவற்றில் இரண்டு வேறுபட்ட வகைகள் இருந்தன.

36a.jpg

யதார்த்த வாழ்க்கையில் உள்ள மக்கள் வீடியோ கேம் ஆடும்போதோ அல்லது ஆடி முடித்த பின்போ செக்ஸ் உறவு கொள்வது ஒரு வகை. சில வீடியோக்களில் மக்கள் விளையாட்டை ஆடும்போதே செக்ஸ் கொள்வது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இன்னொரு வகையில், ஒரு அழகான பெண் வீடியோ கேம் இணைப்பைத் துண்டித்தபிறகும் கூட தனது வெப்கேம் உயிர்ப்புடன் இருப்பதை அறியாமல் மற்ற ஆட்டக்காரர்களின் பார்வைப்பொருளாக மாறிவிடுவார். அவரது ஆடை அவிழ்ப்பையோ அல்லது உறவு கொள்ளுதலையோ மற்றவர்கள் பார்த்து ரசிப்பர். இந்த வகையில், போர்ட்நைட் எனும் வீடியோ கேமில் உள்ள அவதாரங்கள் அனைத்தும் மற்ற அனிமேஷன் பாத்திரங்களுடன் உறவில் ஈடுபடும்.

முதல் வகையின் தாக்கம் எப்படிப்பட்டது என்று சொல்வது எளிது; ஏனென்றால், அது போர்ட்நைட் குறித்தது அல்ல. இது பாரம்பரியமான போர்ன் வடிவம் தான். குறிப்பிட்ட வீடியோ கேமை பயன்படுத்தி செக்ஸுக்கு வசதியான சூழலை இது உருவாக்குக்கிறது. கிட்டத்தட்ட, காமரச முன்விளையாட்டுக்கான களத்தை போர்ட்நைட் ஏற்படுத்தித் தருகிறது. போகிமான் கோ போர்ன் வடிவம் கூட இது போன்றது தான்.

இம்மாதிரியான போர்ன்களின் பிரபல்யம் பற்றி அறிவியல்பூர்வமாக ஆராய வேண்டியுள்ளது. ‘நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்’ என்ற எனது புத்தகத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த 4,000 பேர்களிடம் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, செக்ஸ் குறித்த பெருங்கற்பனை பற்றிய கேள்விக்குப் பதிலளித்தவர்களில் 37 சதவிகிதம் பேர் செக்ஸ் கொள்வதற்கு முன்னதாக வீடியோ கேம் விளையாட வேண்டுமென்பதையே விருப்பமாகக் கொண்டிருந்தனர். வெளிப்படையாகச் சொல்வதென்றால், வீடியோ கேமை செக்ஸ் கொள்வதற்கான ஒரு பொருளாக, காரணியாகப் பயன்படுத்துவது பல ஆண்களுக்குப் பிடித்தமானதாக உள்ளது. இதன் மூலமாகச் சிற்சில விஷயங்களில் திருப்பம் ஏற்படுவதாகக் கருதுகின்றனர். பல்வேறு பணிகளை ஒரேநேரத்தில் செய்வதென்பது சில மனிதர்களைச் சூடேற்றுவதாக அமைகிறது.

36b.jpg

அனிமேஷன் போர்ன் என்பது சற்று வித்தியாசமானது. இதில் சில நேரங்களில் மனிதர் அல்லாத படைப்புகள் அல்லது சூழலைச் சார்ந்து செக்ஸ் நடைபெறும். இதனை இயல்பு வாழ்க்கையில் பிரதிபலிக்க முடியாது. பொதுவாகவே அனிமேஷன் செய்யப்பட்ட ஆபாசத்துக்குப் பிரபல்யம் அதிகம் என்பதால், இது போன்ற வீடியோக்களின் வெற்றிக்கும் பின்னும் அது போன்ற காரணங்களே உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் போர்ன்ஹப், ஹெண்டாய், கார்ட்டூன் மற்றும் அனிம் போன்ற வார்த்தைகள் முறையே நெட்டிசன்களின் தேடலில் 2வது, 18வது மற்றும் 22வது இடங்களைப் பிடித்துள்ளன.

பல்வேறு காரணிகளை மையமாகக் கொண்டு அனிமேஷன் செய்யப்பட்ட போர்ன்களின் தாக்கமானது அமைகிறது. அதில் முதன்மையானது புதுமை. புதிய செயல்பாடுகள், புதிய மனிதர்கள், புதுவித நிலைகள் என்று செக்ஸுவலாக இதுவரை நீங்கள் பார்க்காதவற்றை இது விவரிக்கும். செக்ஸைப் பொறுத்தவரை புதுமை எப்போதும் மனிதர்களை தீவிரத் தூண்டுதலுக்கு ஆளாக்கும் என்பதை எத்தனையோ உளவியல் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு வாரத்தின் ஏழு நாட்களும் ஒரே போர்ன் வீடியோவைப் பார்க்கும்போது, ஒவ்வொரு முறையும் ஒருவரது செக்ஸ் ஆசையானது குறையும். ஆனால், புதிதாக ஏதேனும் ஒன்றைப் பார்க்கும்போது அவருக்குள் சிங்கம் கர்ஜிக்கும்.

அதனாலேயே போர்ட்நைட் போன்ற வீடியோகேம்கள் வரும்போது, அதனை அடிப்படையாகக் கொண்டு வெளியாகும் போர்ன் விஷயங்கள் புதுமைத் தேவையை நிறைவு செய்வதாக அமைகின்றன. அது மட்டுமல்ல, இம்மாதிரியான வீடியோ கேம்களில் வரும் பாத்திரங்கள் அனைத்துமே அசாத்திய புஜபலம், மிகப்பெரிய மார்பகங்கள் போன்ற அவயங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதுவே தாக்கத்தின் அளவைப் பார்ப்பவர் மனதில் மேலும் அதிகமாக்கும்.

உண்மையான உலகத்தில் மேற்கொள்ள இயலாத, அபாயகரமான விஷயங்களை, அனிமேஷன் செய்யப்பட்ட போர்ன் உலகத்தில் வேறொருவர் மூலமாக உங்களால் அனுபவிக்க முடியும். இதில் காட்டப்படும் சில இயற்கைக்கு மாறாக உறவுகொள்ளும் அம்சங்களை வேறெங்கும் காண முடியாது. உங்களுக்கென்று வித்தியாசமான சுவை கொள்ளும் உணர்விருந்தால், அதற்கு இது அருமையான வாய்ப்புதான். தொடர்ச்சியாகப் பலவிதமான போர்ட்நைட் போர்ன் வீடியோக்களை தொகுத்தபோது, அவற்றில் மூர்க்கமான செக்ஸ், அடிதடி, வெவ்வேறு இனங்களுக்கு இடையிலான உறவு நிரம்பியிருந்தது தெரிய வந்தது.

இது யதார்த்த உலகிலிருந்து நழுவி வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்கிறது. அந்த பாத்திரங்களைப் போல கற்பனை செய்துகொள்வது மூலமாக, உங்களை நீங்களே சாந்தப்படுத்தவும் சந்தோஷப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது.

போர்ட்நைட் அல்லது வேறெந்த வீடியோகேம் சார்ந்த போர்னோகிராபி ஆகட்டும்; அவை அனைத்தும் வீடியோகேம் விளையாடுபவர்களில் இருந்தே அதிகப் பார்வையாளர்களைக் கொண்டுள்ளன. உங்கள் மனதில் இது போன்ற விளையாட்டுகள் நிறைந்திருந்தால், அவை சார்ந்த போர்ன் விஷயங்களைப் பார்க்கும்போது அந்த எண்ணமே நிரம்பியிருக்கும்.

செக்ஸ் தேவைகள், ஆசைகளை எதிர்கொள்ளும்போது, மனிதர்கள் அனைவருமே தேடலுடனும் நெகிழ்வுடனும் மாறியிருப்பர். போர்ட்நைட் போர்ன் அல்லது வீடியோகேம்கள் சார்ந்த போர்னோ விஷயங்கள் இதனை மிக விரிவாக விளக்கும் வகையில் இருக்கின்றன.

நன்றி: மென்ஸ்ஹெல்த்

எழுத்தாளர் குறிப்பு: ஜஸ்டின் லெஹ்மில்லர் பிஹெச்டி, கின்ஸே கல்வி நிறுவனத்தில் ஆய்வாளர். செக்ஸ் மற்றும் மனநலம் குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அது குறித்த புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

 

https://minnambalam.com/k/2019/02/10/36

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.