Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் தலைமையிலான நிகழ்வுகள் யாழில் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் தலைமையிலான நிகழ்வுகள் யாழில் ஆரம்பம்!

PM-jaffna-2-720x450.jpg

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு இணைப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது.

இந்த நிகழ்வு யாழ். முற்றவெளியில் தற்போது இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர,  அமைச்சர் தயாகமகே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், மதகுருமார்கள், சமுர்த்தி பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு  பிரதமர் இணைப்புச் சான்றிதழ்களை வழங்கி வைக்கவுள்ளார்.

PM-jaffna-1.jpg

PM-jaffna-3.jpg

யாழில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்வில் கடும் சோதனை!

யாழ்ப்பாணத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு இணைப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு யாழ். முற்றவெளியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.

இதன்காரணமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற மக்கள் யாழ். முற்றவெளிக்கு வெளியில்  தீவிர சோதனைகளின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பொதிகள் கை பைகள் போன்றவை கொண்டுசெல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழிற்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ரணில், இன்று காலை, முதல் நிகழ்வாக வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளை உத்தியோகபூர்வமாக உரிமையாளர்களிடம் கையளித்தார்.

இதனையடுத்து சமுர்த்தி பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டே இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதமரின் யாழ். விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கடும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_1479.jpeg

 

 

http://athavannews.com/யாழில்-பிரதமர்-பங்கேற்கு/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.