Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் கரங்களால் கைத்துப்பாக்கி பரிசாக பெற்றவர் -லெப் கேணல் கருணா..!

spacer.png

லெப் கேணல் கருணா
நாகேந்திரம் நாகசுதாகர்.
வீரச்சாவு. 15.04.2009

சம்பவம்..புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது.


இரண்டாம் கட்ட ஈழப் போரின் இலங்கை இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கெதிராக போராடினால்த் தான் தீர்வு என புறப்பட்டவர்களுள் ஒருவனாக கருணாவும் விடுதலைப் புலிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட கருணா மேலதிக பயிற்சிகள் மற்றும் வகுப்புகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்குச் செல்கிறான். அங்கு மாவீரரான லெப்.கேணல் நரேஸ் அவர்களின் தலைமையில் பயிற்சிகளில் மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய கருணா குறிப்பாக நீச்சலில் முன்னிலை வகித்தான்.


இவனது நீச்சல் உள்ள ஆர்வம் மற்றும் குறிப்பிட்டளவு தூரத்தை மிகவும் வேகமாக நீந்திக் கடந்ததை அவதானித்த சிறப்புத் தளபதி சூசை அவர்கள் இவனது சொந்த இடம் மயிலிட்டி என்பதால் இவனை காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் கடல் மற்றும் தரை வேவுக்காகச் அனுப்புகிறார். அங்கு சிறப்பாகச் செயற்பட்டு அனைவரினதும் பாராட்டைப் பெற்று வேவில் தனக்கான முத்திரையைப் பதிக்கிறான். குறிப்பாக முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி விரச்சாவடைந்த தாக்குதலில் கருணாவின் வேவுப்பங்கும் அளப்பரியது.


அதனைத் தொடர்ந்து கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவிற்குள் உள்வாங்கப்பட்ட கருணா அங்கு கடற்புலிகளின் தளபதி கங்கைஅமரன் அவர்களிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றான். தொடர்ச்சியாக நீரடிநீச்சல் பிரிவில் இருந்த கருணா அங்கும் பயிற்சியில் இவன்காட்டிய ஆர்வத்தாலும் ஏனைய செயற்பாட்டில் இவனுக்கிருந்த ஈடுபாட்டாலும் வெளிநாடொன்றிலிருந்து ஆழ்கடல் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு வந்த வெளிநாட்டு பயிற்சியாளர்களால் வழங்கப்பட்ட பயிற்சியிலும் பங்குபற்றி தனக்கிருந்த திறமையை வெளிக்காட்டினான். அப்பயிற்சியில் இவனது செயற்பாட்டை நன்கு அவதானித்த அப்பயிற்சிப் பொறுப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளருமாக செயற்பட்ட சங்கரண்ணா இவனைப்பற்றி தலைவர் அவர்களிடமும் தெரியப்படுத்தினார். அதற்கமைவாக நீரடி நீச்சல் சம்பந்தமாக மேலதிக பயிற்சிக்காக வெளிநாடொன்றுக்கு சென்று அங்கு பயிற்சிகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பனான். இங்கு வந்து சிறிது காலத்தில் நீரடிநீச்சல் பிரிவுக்கு பொறுப்பாளனாக தான் வெளிநாட்டில் கற்றவைகளை சகபோராளிகளுக்கு சொல்லிக்கொடுத்து பலபோராளிகளை உருவாக்கினான்.
அதன் பின் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கிற பணியினை மேற்கொள்வதற்கான மன்னாருக்குச் சென்று ஒரு பகுதிக்கான பொறுப்பாளனாகச் சென்று ரோலரில் வரும் பொருட்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பாதுகாத்து சிறிய படகுகள் மூலம் இலுப்பைக்கடவைக்கு அனுப்பிவைத்தான்.
 

இவைகள் எழுதுவதற்க்கு இலகுவானதாக இருந்தாலும் இவர்கள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல. இப்படியாக செய்து கொண்டிருக்கையில் மாவீரரான லெப்.கேணல் கோகுலன் அவர்கள் வேறு பணிக்காக சென்றதால் கருணா மறுபடியும் நீரடிநீச்சல் பிரிவுப் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகிறான். அத்தோடு புதிய போராளிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி ஆசிரியராகவும் செவ்வனவே செயற்பட்டான். கருணாவின் செயற்பாட்டை அவதானித்த தலைவர் அவர்கள் கருணாவிற்க்கு கைத்துப்பாக்கியை தனது கரங்களால் வழங்கி மதிப்பளித்தார்.


இக் காலப்பகுதியில் சில சிறப்புத் தளபதியின் பாதுகாப்புப்பிரிவிலும் நின்றான். அத்தோடு மட்டுமல்லாமல் கடற்தாக்குதலனியின் ஒத்திகைப் பயிற்சிகளில் தானும் தன்னோடு உள்ள சகபோராளிகளையும் பங்குபற்றி அப்படையணிகளுடனும் இணைந்து செயற்பட்டதோடு அப்படையணியுடன் இணைந்து விநியோக மற்றும் கடற்சமர்களிலும் ஈடுபட்டான். அதன் ஒரு கட்டமாக கிழக்குமாகாண விநியோகமும் இப்படையணிக்கு சிறப்புத் தளபதியால் வழங்கப்பட்டதோடு சிறிய சண்டைப் படகுத் தொகுதியும் வழங்கப்படுகிறது. கருணா தலைமையிலான இவ் அணி கடலில் ஒருதாக்குதல் நடாத்த தேடித்திரிந்த பொழுது தான் மன்னாா் பேசாலையில் கடற்படையின் படகுத் தொகுதி ரோந்தில் செல்வது தெரியவர அதற்கான வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரு வலிந்த தாக்குதல் அக் கடற்படையினருக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது. இவ்வெற்றிகரத் தாக்குதலில் பத்தொன்பது சிறிலங்காக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் பகலிலே இடம்பெற்றதுடன் இப் படையணியினரின் முதலாவது தாக்குதலுமாகும். இத் தாக்குதலின் வெவற்றிக்காக தலைவர் அவர்களால் கருணாவிற்க்கு ஒரு டபிள்கப் வாகனம்பரிசாக வழங்கப்பட்டது. இத் தாக்குதல் கடலில் நீண்ட அனுபவம் கொண்ட மாவீரரான லெப் கேணல் எழிற்கண்ணன் அவர்களின் பங்கும் முக்கியமானது. 

அதன் பின்னர் லெப் கேணல் டேவிற் படையணிப் பொறுப்பாளனாக மன்னார் கொக்குப்படையானுக்குச் சென்றான். அங்கு தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற பணியான கப்பலிலிருந்து ரோலர் மூலம் வரும் பொருட்களை பாதுகாத்து பின்னர் பாதுகாப்பாக மன்னார் சுட்டபிட்டிக்கு அனுப்புவதாகும். இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில் கொக்குப்படையானும் அதனை அண்டிய பகுதிகளும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. இருந்தாலும் எவ்வித இழப்புகளுமின்றி சாதுர்யமாக செயற்பட்டு படைக்காவலரன்களைத் தாக்கியழித்து அம்முற்றுகையிலிருந்து அணிகளுடன் வெளியேறினான்.

அதன் பின்னர் பழையபடி சண்டைப்படகுகளின் தொகுதிக் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு விநியோகப்பாதுகாப்பு மற்றும் வலிந்த தாக்குதலிலும் தனக்கான முத்திரையைப் பதிக்கிறான். அதனைத் தொடர்ந்து நாகர்கோவில் களமுனைக் தளபதியாக நியமிக்கப்பட்டு செவ்வனவே பணியாற்றிக்கொண்டிருந்தவேளையில் மணலாற்று கட்டளைப் பணியத்தின் கடற்கரையோரம் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டபோது இவன் தனது அணியினருடன் அங்கு சென்றான். அங்கு காவலரன்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது இராணுவத்தின் குறிசூட்டுத் தாக்குதலில் மயிரிழையில் தபபினான். தொடர்ந்தும் களமுனையில் நின்றாலும் தென் தமிழீழத்திற்கான விநியோக நடவடிக்கையிலும் பங்குபற்றத் தவறவில்லை. இப்படியாக பல்வேறு துறைகளில் பல் வேறுபட்ட இடங்களில் பெரும் இக்கட்டான இராணுவப் பிரதேசங்களில் நின்றவன். பெரும் சவாலான வேலை என்றாலும் அதைச் செய்துமுடிக்கிற ஆர்வம் தலைமையில் வைத்த பற்று எந்தப் புறச்சூழலிலும் இயக்கக் கட்டுப்பாட்டை மீறாத பண்பு மாவீரர்களை நேசித்த விதம் போராளிகளைக் கையாள்கிற விதம், கட்டளைகளுக்கேற்ப செயற்படுகிற வேகம், சக போராளிகளுடன் பழகுகிற விதம் .

இப்படியானவன் திருகோணமலைக்கு விநியோக நடவடிக்குச் சென்று சேர்க்க வேண்டியவைகளைச் சேர்த்துவிட்டு வரும்போது சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலில் 15.04.2009 அன்று வீரச்சாவடைகிறான்.
-.சு.குணா

 

https://www.thaarakam.com/news/241ebedd-12eb-4f74-b3c5-1261c41429ff

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.