Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தோடும் விடுதலை வேட்கையோடும் களம்பல கண்ட தளபதி பரிதி என்ற பரிமாணம்!

AdminNovember 8, 2021

paruthi_annaதளபதி பரிதி என்ற பரிமாணம்.

நடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983 ஆம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் பாசறைப் பிரிவில் பயிற்சியை பெற்றுக் கொண்ட வீரத்தளபதிக்கு தலைமைப்பீடம் சூட்டிய பெயர் றீகன். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் பானு, லெப் கேணல் குமரப்பா, ரஞ்சன் லாலா மற்றும் வாசு போன்றோருடன் இணைந்து போரியல் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் தமிழீழம் திரும்பினார் தளபதி கேணல் பரிதி.

களம்பல கண்ட நாயகன். தமிழீழம் திரும்பிய தளபதி கேணல் பரிதி மன்னார், யாழ்ப்பாணம், வன்னி என்று தமிழீழத்தின் முக்கியமான போர்முனைகளிலெல்லாம் வீரத்தோடும் விடுதலை வேட்கையோடும் களம்பல கண்டார். இவரது போரிடும் ஆற்றல் இவரை குறுகிய காலத்துக்குள்ளேயே மத்தியநிலை தளபதியாக உயர்த்தியது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் களம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து 2003 ஆம் ஆண்டு முதல் பரிதி என்ற பெயருடன் பிரான்ஸ் நாட்டுக்கான அரசியல் மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து, புலம்பெயர் களத்திலும் ஒரு தளபதியாக, முழுநேர தேசியச் செயற்பாட்டாளனாக தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காகப் பணியாற்றிய தளபதி கேணல் பரிதி அவர்கள், தனது இறுதி மூச்சு வரை அந்த இலட்சியத்துக்காகவே போராடி, அந்த இலட்சியப் பணியில் ஈடுபட்டிருந்த போதே சிங்கள புலனாய்வாளர்களின் ஒட்டுக்குழுவால் கோழைத்தனமாகவும், கோரத்தனமான முறையிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலின் பின்னணி என்ன? 2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் போரட்டத்தினதும் தமிழ் மக்களினும் கவசங்களாக விளங்கிய ஆயதங்களை மௌனமாக்குவதற்கான சிங்கள அரசின் சூழ்சித் திட்டம் 2000 ஆம் ஆண்டிலேயே தீட்டப்பட்டிருந்தது. அது யாதெனில், தமிழர்களுடைய சுதந்திர தாகத்தை அழிக்க வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் படுகொலைசெய்யக் கூடிய தளபதிகளை படுகொலை செய்வது, ஏனைய முக்கிய உறுப்பினர்களின் நடமாட்டங்களை முடக்குவது. அதன் அடிப்படையிலேயே, சிறீலங்கா படைத்துறையில் ஆழ ஊடுருவும் படையணி உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் விமானப் படைத்தளபதியாகவும் விளங்கிய கேணல் சங்கர் அவர்களை படுகொலை செய்ததுடன் 2001 ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமான ஆழ ஊடுருவும் படையணியின் நரபலி வேட்டை, 2008 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை தளபதிகளில் முதன்மையானவரான கேணல் சாள்ஸ் அவர்களை மன்னார் மாவட்டத்தில் இலக்குவைத்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பின் உச்சக் கட்டம் தாண்டவமாடியதோடு முடிவுக்கு வந்தது. முள்ளிவாய்க்காலோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றுப்பெற்றுப் போகும் என எண்ணிய சிங்களத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி பெரும் பூதாகாரமான ஆபத்தாக உருவெடுத்தது.

parithi-7

இதன்பின்னணியில் யார், யார் உள்ளார்கள் என்று உளவுப் பணியை முடக்கி விட்ட சிங்களத்துக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் தளபதி பரிதி என்பது தெரியவந்தது. ஆதலால், புலம்பெயர் தேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆழ ஊடுருவும் படையணிக்கு இணையான படுகொலை படலத்தின் முதல் இலக்காக தளபதி பரிதியை இலக்கு வைப்பதனூடாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை அழிக்கலாம் அல்லது முடக்கலாம் என்று கணக்குப் போட்டது சிங்கள தேசம். தளபதி பரிதி இலக்கு வைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? படுகொலைசெய்யப்பட்ட தளபதி கேணல் பரிதி, முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்பட்ட பின்னரும் ஓர்மத்தோடும் விடுதலை வேட்கையோடும் வெளிப்படையாக இயங்கிய மூத்த தளபதி. உயிர் அச்சுறுத்தல்கள் எத்தனை வந்தபோதும், எதற்கும் அடிபணியாது, அனைத்தையும் எதிர்த்து நின்று விடுதலைக்காக மூழுமூச்சுடன் பணியாற்றினார். அமைதியான சுபாவமுடைய தளபதி பரிதி அவர்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பெரும் பெறுமதியும், அதிக கனதியும் இருந்தது. ஆதலால், இளையோர் தொடக்கம் முதியோர் வரை பரிதி அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்தது மட்டுமன்றி, வீரத்தளபதிக்கு பின்னால் அணிதிரண்டனர். இது, சிங்கள தேசத்துக்கும், அவர்களின் கைக்கூலிகளுக்கும் அச்சத்தை உண்டுபண்ணியது. ஏனெனில், தளபதி பரிதி அவர்களின் அர்ப்பணிப்பும், தலைமைத்துவமும் தமிழீழ விடுதலையை அடைவதற்கான படிக்கற்களை விரைவுபடுத்தின. ஆகவே, தளபதி பரிதி அவர்களை படுகொலை செய்வதனூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பேரிழப்பையும் பெருவெற்றிடத்தையும் உருவாக்குவதே சிங்கள அரச பயங்கரவாதத்தின் திட்டம். அத்துடன், புலம்பெயர் தமிழர் தேசத்துக்கு எதிரான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் உளவியல் போரில் இது முக்கியமானதொரு நடவடிக்கை.paruthi-454rrr copy

இதனூடாக, புலம்பெயர் தேசங்களில் வாழும் ஏனைய செய்ற்பாட்டாளர்களுக்கு அச்சத்தையும் அழுத்தத்தையும் உண்டுபண்ணுவதானூடாக அவர்களினுடைய செயற்பாடுகளை முடக்குவது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முக்கிய நிகழ்சி நிரலில் ஒன்று. அத்துடன், தமிழர் தரப்புகளுக்கிடையில் பிளவுகளை மேலும் தீவிரப்படுத்துவதனூடாகத் தொடரும் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மேலும் நெருக்கடிக்குட் தள்ளுவதும் முக்கிய நிகழச்சி நிரலிலுள்ள விடயம். அத்தகைய விடயங்கள் அனைத்தையும், தளபதி பரிதி அவர்களைப் படுகொலை செய்வதனூடாக முன்னெடுக்கலாம் என்ற அடிப்டையிலேயே, தளபதி பரிதியை எல்லை கடந்த சிங்கள அரச பயங்கரவாதம் முதலாவது இரையாக்;கியது. இதிலிருந்தே, தளபதி கேணல் பரிதி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பு தெட்டதெளிவாகிறது. தளபதி பரிதிக்காக தமிழ்மக்கள் செய்ய வேண்டியது என்ன? தளபதி கேணல் பரிதி அவர்களின் இழப்பென்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய போராட்ட வழிமுறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இவரது இழப்பால், தமிழர் தேசம் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளது. ஆனால், தமிழீழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி தன்னுயிரை அர்ப்பணித்த தளபதி கேணல் பரிதியின் வீரச்சாவுக்கு கண்ணீர் சிந்துவதும் கவலையடைவதும் மட்டும் போதாது. இத்தருணத்தில், தளபதி கேணல் பரிதி எந்த உயரிய இலட்சியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து, அதற்காகவே தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்தாரோ, அந்த இலட்சியப் பயணம் இலக்கினை அடையும் வரை தளராமல் போராடுவதே ஒவ்வொரு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களதும், உணர்வாளர்களதும், மற்றும் தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களினதும் வராலற்றுப் பொறுப்பும் தார்மீகக் கடமையுமாகும். இதன் ஊடாகவே, சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடிப்பதோடு, சுதந்திர தமிழீழம் என்ற உயரிய இலக்கை அடையலாம். தளபதி கேணல் பரிதி அவர்களின் வீரச்சாவு என்பது, அடுத்த கட்ட போராட்டத்தின் திருப்புமுனை சக்தியாக உருவாக்கம்பெற்றுள்ள புலம்பெயர் களத்தில் தமிழர்கள் எழுச்சி கொள்ள வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது. இன்றே போராட புறப்படு தமிழா! இல்லை நாளையென்பது நமக்கில்லை.

இ.மதியழகன் –
 

 

http://www.errimalai.com/?p=8696

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் உணர்வடைந்த கேணல் பரிதி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

AdminNovember 8, 2021

பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 9 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று (08.11.2021) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பந்தன் கல்லறையில் பகல் 11.00 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு அரசின் கொரோனா சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கேணல் பரிதி அவர்களின் கல்லறைமீது தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்புச்செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச் சுடரினை கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைக்க கல்லறைக்கான மலர் மாலையினை கேணல் பரிதியில் துணைவியார் அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் வணக்கம் செய்தனர். 

தொடர்ந்து நினைவுரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு பாலசுந்தரம் அவர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்களும் ஆற்றியிருந்ததுடன் 

லாக்கூர்நோவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றுசெல் அவர்கள் கேணல் பரிதி அவர்களின் நினைவாக உணர்வோடு பிரெஞ்சுமொழியில் தகவல்களைப் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் கல்லறைவணக்க நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப் பிரிவு)

  • IMG-943c6ecb7c5db6e4b6091ab431dcce1d-V.j
  • IMG-0786c23e266ad4a4e1e300eadd487090-V.j
  • IMG-9fb0949d0031f70d5197cf231a469962-V.j
  • IMG-3d1141069335a33f0b0ab53f5a097db7-V.j
  • IMG-8754398d5442ffc956498052f93540a9-V.j
  • IMG-351cd86030317502dc2ec1081e518f36-V.j
  • IMG-9b45b93a21808e455580e3e66abcbed5-V.j
  • IMG-7d7d694a50971f3bbecb8679601a1919-V.j

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள் . . .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.