Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னதான் நினைக்கிறார் ஜோன் ஹோம்ஸ்-வெள்ளிநாதம்.

Featured Replies

கடந்த 02-08-07 அன்று அம்பாறை மாவட்டத்தின் காடுகளை அண்டிய கிராமங்களையும் காட்டுப் பகுதிகளையும் இலக்குவைத்து சுமார் 450 வரையான சிறப்பு அதிரடிப்படையினர் பின்புல எறிகணை ஆதரவுடன் களமிறங்கினர்.

ஒரு அதிரடிப்படையினன் மட்டும் காயமடைந்த நிலையில் அந்த நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி முடிவுற்றது. புலிகளின் தரப்பில் ஆறுபேர் இறந்திருப்பதாக அரச தரப்பு கூறினாலும், அங்கே புலிகளுக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை.

அதன்பின்னர் கடந்த ஏழாம் திகதி மீண்டும் ஒரு பாரிய படை நடவடிக்கை அதே இடத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

அதிலே கஞ்சிகுடிச்சாறு, வக்குமுட்டியா, செங்காமம் ஆகிய முனைகளில் இருந்து சிறப்பு அதிரடிப்படையினரும் மாந்தோட்டத்திலிருந்து சிறிலங்கா தரைப்படையினருமாக கிட்டத்தட்ட 700 வரையான துருப்புக்கள் அங்கு வந்துள்ளனர்.

7 ஆம் திகதி முழுவதும் பலத்த எறிகணை வீச்சு நடத்தியபின் எட்டாம் திகதி படையினர் சிறிதளவு முன்னேறியிருப்பதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கிலே முழு வெற்றியைப் பெற்றுவிட்டோம் என்று கொடியேற்றிக் கொண்டிடாடிய பின்னர் பெருமளவிலான இந்த நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

அதேநேரம் திருமலையிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தகவல் தந்துள்ளது.

அந்தத் தகவல்களைப் புறந்தள்ளி, கிழக்கில் அபிவிருத்திக்கான சூழல் நிலவுகின்றது என்ற அரசின் பரப்புரையை நிறுவுமாப்போல் அங்கே அபிவிருத்தி செய்வதற்கு ஐ.நா. உதவி வழங்கும் என அறிவித்திருக்கிறார், இப்போது இலங்கையில் தங்கியுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உப செயலர் ஜோன் ஹோம்ஸ்.

கிழக்கு மாகாணம் படையினரின் முற்று முழுதான கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் கண்கணங் கட்டிக்கொண்டு நிற்பது ஒன்றும் புதிய செய்தியல்ல. கிழக்கு மாகணத்தை அபிவிருத்திக்குத்தக்க நிலையில் தாங்கள் வைத்திருப்பதாகக் காட்டி பன்னாட்டு நிதியைக் கறப்பதே அதன் முக்கிய நோக்கம்.

அவ்வாறு பெறப்படும் நிதியை அரசாங்கத்தை அண்டி வாழுவோர் எப்படி உறிஞ்சிக்கொள்வர் என்பதைச் சிங்கள ஊடகங்களே தாராளமாகப் பிட்டு வைத்திருக்கின்றன. ஆனால் அத்தோடு கதை முடிந்துவிடவில்லை.

பாதிப்புக்குள்ளான தமிழ்மக்களைக் காட்டிப் பெறப்படும் நிதி அதே மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் பிடுங்கிக் கொள்வதற்காக எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தை கொழும்பு ஏற்கனவே தீட்டி வைத்திருக்கிறது.

திருமலையின் கிழக்குப் பகுதியில் மத உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடிய புராதன ஆய்வுகள் அறிவிக்கப்படுகின்றன. முழுச் சிங்கள ஆதிக்கத்தில் நிகழப்போகும் அந்;த ஆய்வுளின் விளைவுகள் என்னவென்பதை கடந்த அரை நூற்றாண்டு கால இலங்கை வரலாற்றை அறிந்தோருக்கு விளக்கவேண்டியிராது. கரையோர மீன்பிடிக் கிராமங்களை உள்ளடக்கிய அப்பகுதியில் பண்பாட்டு அபிவிருத்தி என்ற சாயலில் சிங்களம் விதைக்கப்படலாம்.

பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பிடுங்கப்பட்ட இடங்களில் படைக்கட்டுமானங்கள் அமைக்கப்படுகின்றன. கிழக்கின் ஒவ்வொரு மூலையிலும் படைச்செறிவை அதிகரித்து இனப்பரம்பற் கோலத்தை மாற்றியமைக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள் விழத்தக்கதான முன்னேற்பாட்டுடனேயே கிழக்கின் அபிவிருத்தித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

குடும்பிமலைப் பகுதியில் முறுத்தானை என்னுமிடத்தில் படைமுகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வயல் வெளிகள் மற்றும் மேய்ச்சல் தரைகளின் மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த முகாமின் ஆதரவில் வெலிக்கந்தைச் சிங்கள விவசாயிகளும் விலங்கு வளர்ப்போரும் அனுகூலம் பெறுவர். அங்கே அபிவிருத்தியின் சாரம் அவர்களையே சேரும்.

அம்பாறையின் அறுகம்பையில் பாரிய வெள்ளை நிறச் சலாகையொன்று அந்தரத்தில் சுற்றிக்கொண்டிருப்பதாக அங்குள்ள மீனவர்கள் கூறுகின்றனர். தென்னிலங்கைக் கடலைக் கண்காணிப்பதற்கான பாரிய ராடர் ஒன்றை அங்கே அமைத்துள்ள படையினர், கடலிலே மீன்பிடிப்போரை இயந்திரப் படகுகளில் சென்று அடிக்கடி சோதனையிட்டு வருகின்றனர். அப்பகுதியில் ஒரு கடல் விமானமும் ஹோவர்கிராப்ட் என்னும் ஈரூடக வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன.

அவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மீனவரைத் துணிவிழக்கச் செய்வதோடு, பெரும்பாலும் எல்லைகள் வேலிகள் இல்லாக் கடற்கரைகளில் சிங்களவர்கள் சுலமாகக் குடியமரவும் வழிவகுக்கும்.

அதேவேளை அரச மற்றும் படைத்துறை ஊடகங்களில் தமிழர் எவரும் அறிந்திராத சிங்களப் பெயர்களில் தமிழ்க் கிராமங்கள் குறிப்பிடப்படுகின்றன. கிரானில் நவனிகல என்ற ஊர் இருப்பது அங்குள்ள மூத்த குடிமக்களுக்குப் படையினர் சொல்லித்தான் தெரியும்.

இந்நிலையில் தான் புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்குப் பகுதிகளின் அபிவிருத்திக்கு ஐ.நா. உதவி வழங்கும் என ஐ.நா. வின் மனித உரிமைகளுக்கான உபசெயலர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நிகழும் படைத்துறைச் சம்பவங்கள் அவருக்கு மூடி மறைக்கப்பட்டதால், அங்கே அபிவிருத்திக்கான சூழல் நிகழுவதாக அவர் நம்பிவிட்டார் என்று எடுத்துக்கொண்டாலும் கூட, சிறிலங்கா படையினர் கீழ்த்தரமாக உத்திகளைக் கையாள அனுமதிக்கப்பட்டுள்ளர்கள் என்ற நியூயோர் மனித உரிமைக் கண்காணிப்பக அறிக்கையை அவர் படிக்கவேயில்லையா என்ற கேள்வி எழுந்து நிற்கிறது.

ஒரு வருடமாகிவிட்ட மூதூர் தொண்டு நிறுவனக் கொலையை அண்மைய வரலாற்றில் தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக நடந்த மிக மோசமான கொலை என அவரே வருணித்திருகிறார், அவர் இலங்கையில் தங்கியிருக்கும்போதே அகதிகளுக்கான பன்னாட்டுத் தொண்டு நிறுவனமொன்றின் பணியாளர் மொகட் சாகிர் மொகமட் றிஸ்வி என்பவர் திருமலையில் கடத்தப்பட்டு இந்தப் பத்தி எழுதப்படும்பவரை விடுவிக்கப்படவில்லை.

தவிர, கிழக்கு மீதான அரசின் படைநடவடிக்கையின் உள்நோக்கங்கள் தென்னிலங்கையிலேயே வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. இந்த அனைத்துப் பின்னணிகளிலும் நோக்கும்போது, கிழக்கின் அபிவிருத்தி என்பது, சிங்கள இனவாதிகளைத் திருப்திப்படுத்தித் தென்னிலங்கையில் தன் உறுதி நிலையைப் பேணுவதற்கான அரசாங்கத்தின் மோசடித் திட்டம் என்பதை விளங்கிக் கொள்வதில் சிரமமிருக்காது.

தவிர, மனித உரிமைக் கண்காணிப்புக் குழு சிறிலங்காவிற்குத் தேவையில்லை என்று முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது கொழும்பு. இது இனிமேலும் அரங்கேறப்போகும் மனித உரிமை அவலங்களுக்குக் கட்டியம் சொல்கின்றது என்பதைக் கண்டுபிடிக்க நிபுணர்குழு தேவையில்லை.

இப்போதுள்ள கொழும்பு நிருவாகத்தின் கிழக்கு அபிவிருத்தித் திட்டம் என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் இனப்பரம்பற் கோலத்தை மாற்றும் ஒரு மறைமுக ஏற்பாடே. தமிழர் தரப்பு நிலைப்பாட்டைக் கேட்டறிந்துகொள்ளாமல் அரச அதிகாரிகளை மட்டும் சந்தித்துவிட்டு, மக்களின் அச்ச நிலையையோ, சந்தேகங்களையோ, அனுபவ எதிர்வுகூறல்களையோ செவிமடுக்காது அவசரப்பட்டுவிட்டார் ஜோன் ஹோம்ஸ் என்றே எண்ணத் தோன்றுகிறது.

நூற்றுக்கணக்கான துருப்புக்கள் பங்குபற்றும் படை நடவடிக்கையை அரசியல் கபட நோக்கம் கருதி அடக்கி வாசிக்கும் அரசாங்கம், அக்சன் பியம் தொண்டுப் பணியாளர் கொலையில் நேர்மையாக நடந்துகொள்ளும் என அவர் எதிர்பார்ப்பாராக இருந்தால், மனித உரிமை பற்றிய அவரின் கோரிக்கைகளுக்குக் கொழும்பு செவி கொடுக்கும் எனவும் அவர் எண்ணுவாரானால், உள்ளுர் மொழி வழக்கில், அன்னார் வெள்ளி பார்த்துவிட்டார் என்றே சொல்ல வேண்டியிருக்கும்.

-ஈழநாதம், வெள்ளிநாதத்திற்காக தாயகத்திலிருந்து சேனாதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.