Jump to content

கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க புதிய செயலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 MAR, 2024 | 04:01 PM
image

கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து,  கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நிலைபேறான கடல் மற்றும் கரையோர வலயத்தை உறுதி செய்யும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் சமுத்திரம்  மற்றும் கரையோரத்தின் தூய்மையைப் பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க,  அந்த செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு இந்த புதிய செயலி உதவும் எனவும் குறிப்பிட்டார்.

கரையோரத் தூய்மைத் திட்டங்கள் மற்றும் கரையோரத் தூய்மையைப் பேணுதல் தொடர்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மற்றும்  விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க,  கடலோர பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இது நல்ல பங்களிப்பாக அமையும் என்றார். 

ஆறுகள் மற்றும் கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் மற்றும் கழிவு நீர் நீண்ட வெளியேற்ற குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுவதாலும் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் பிற கடல் நடவடிக்கைகள் மூலம் கடற்கரை மற்றும் கடல் வளங்கள் கடுமையாக மாசுபடுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியது.  

பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீட்டுடன் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு   வருவதாகக் குறிப்பிட்டதுடன், இந்த தொலைபேசி செயலியை இப்பணியின் சரியான ஒருங்கிணைப்புக்கு பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த  உள்ளிட்ட அரச அதிகாரிகள், கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்புப் பிரிவின் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற  நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/178881

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதற்கான வேலையில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது.
    • "தேயாதே வெண்ணிலவே"     முன்னொரு காலத்தில், மலைகளுக்கு மத்தியில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான கிராமத்தில், அல்லி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். இந்த கிராமம் அதன் வளமான நாட்டுப்புறக் கதைகளுக்கும், தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த வசீகரிக்கும் புராண கதைகளுக்கும் பெயர் பெற்றது. அத்தகைய ஒரு புராணக்கதை ஒன்று "தேயாதே வெண்ணிலவே" என்பதைப் பற்றிப் பேசியது, இது சந்திரன் அதன் வழக்கமான குறைந்து வரும் கட்டத்தை எதிர்க்கும் ஒரு மாயாஜால நிகழ்வாகும்.   அல்லி, ஆர்வமுள்ள, சாகச மற்றும் அழகான இளம் பெண்ணாகும், குழந்தை பருவத்தில் இருந்தே தன் தாயிடமும் மற்றும் மூத்தவர்களிடமும் இருந்து இந்த வசீகரிக்கும் கதையைக் கேட்டு வளர்ந்தாள். தேயாத வெண்ணிலவை ஒரு முறையாவது தான் பார்க்க வேண்டும் என்று அவள் கனவு கண்டாள். பலர் அதை கற்பனையான கட்டுக்கதை என்று கருதினாலும். மற்றவர்களின் சந்தேகத்திற்கு ஆளாகாமல், புராணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்கும் தேடலை அவள் தொடங்கினாள்.   அல்லி கிராமப் பெரியவர்களைக் கலந்தாலோசித்தார், அவர்கள் 'சந்திரன் மறையாதே' என்று பேசும் பண்டைய நூல்களின் குறிப்புகளை அவளுடன் பகிர்ந்து கொண்டனர். என்றாலும் சந்திரன் மறைய மறுப்பது வரவிருக்கும் அழிவின் அறிகுறி என்று நூல்கள் சுட்டிக்காட்டின. எனவே பேரழிவு நிகழ்வுகள் குறித்து அவர்கள் எச்சரித்ததுடன் அப்படியான ஒரு நிகழ்வு என்றும் நடக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.   எது எப்படியாகினும் அல்லி தனது உறுதியால் உந்தப்பட்டு, தனது ஆராய்ச்சியில் ஆழ்ந்தார். வானியல் நிகழ்வுகளைப் பற்றி தனது கிராமத்தில் உள்ள நூலகத்தில் பண்டைய நூல்களில், புராணங்களில் எழுதிய பல பழைய குறிப்புகளைக் கண்டுபிடித்தார். அந்த குறிப்பில் சந்திரனின் முழுமையை பாதுகாக்கும் மற்றும் தேயும் வெண்ணிலாவை தடுக்கும் திறன் கொண்ட, இன்று மறந்துபோன சடங்கு பற்றிய ரகசிய குறிப்புகள் இருந்தன. அது அவளுக்கு உத்வேகம் கொடுத்தது. நீண்ட நேரம் வாசித்த களைப்பில் அவள் நூலக மேசையிலேயே கண்ணயர்ந்து விட்டாள்.   அல்லி, புராண கதையில் கூறிய அந்த மர்ம இடத்தை நோக்கி, எவருக்கும் சொல்லாமல் தன்னந் தனிய தனது சவாலான பயணத்தைத் தொடங்கினாள், எவராலும் உள்போகாத, ஆராயப்படாத காடுகள் மற்றும் பயங்கர மலைகளுக்குள் நுழைந்தாள், புராண நூல்களில், வாசித்து அறிந்த, ரகசிய துப்புகளால் அவள் வழிநடத்தப்பட்டாள். அவளுடைய பாதையில், அவளின் தைரியத்தையும் உறுதியையும் சோதிக்கும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டாள். அவள் பயங்கரமான பள்ளத்தாக்குகளை கடந்தாள், புராண கதைகளில் காணப்படும் பல அதிசய உயிரினங்களை எதிர்கொண்டாள், அத்துடன் சக்திவாய்ந்த புயல்களை, மின்னல்களை எதிர்கொண்டாள், என்றாலும் எதற்கும் சற்றும் சளையாது தன் பயணத்தை தொடர்ந்தாள்.   பல வாரங்கள் இடைவிடாத நடைகளின் பின், அல்லி ஒரு கம்பீரமான மலை உச்சியில் ஒரு ஒதுக்குப்புற தோப்புக்கு வந்தடைந்தாள். பழங்கால கல் தூண்களால் சூழப்பட்டு, சந்திரனின் வெள்ளி ஒளியில் அவள் முற்றாக நனைந்தாள். சற்று தேடுதலின் பின், புராணக் குறிப்பில் கூறப்பட்ட சடங்கு செய்ய வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்தாள். புராண கதையில் கூறப்பட்ட அறிவுரைகளின் படி புனிதமான பொருட்களை ஏற்பாடு செய்தாள் மற்றும் கடந்த தலைமுறையிலிருந்து வழி வழி வந்த மந்திரங்களை உச்சரித்தாள்.   அல்லி சடங்கை முடித்தவுடன், அவள் பூசை செய்த அமைதியான அழகான தோப்பை சூழ்ந்து, அதன் இயற்கையான சுழற்சியை மீறி, சந்திரன் தனது தேய்தலை இடைநிறுத்தி, அவளுக்கு மேலே பிரகாசமாக பிரகாசித்தது.. அல்லியின் முயற்சிகளை அறியாத கிராமம், தங்களின் வீடுகளின் மேலே தேயாத வெண்ணிலாவின் ஒளிர்வைப் பார்த்து பிரமித்தார்கள்!   அடுத்தடுத்த நாட்களில், கிராமவாசிகள் நிலவின் மறையாத, தேயாத பிரகாசத்தைக் கண்டு வியந்தனர், என்றாலும் வரவிருக்கும் பேரழிவிலிருந்து தங்கள் உலகம் காப்பாற்றப் பட வேண்டும் என்று பெரும் பூசைகள் செய்யத்தொடங்கினர். அதன் முழக்கம் அல்லியின் காதிலும் பல நூறு மைல்கள் தாண்டி கேட்டது. அவள் திடுக்கிட்டு கண் விழித்தாள். தான் இன்னும் தனது கிராமத்து நூலகத்தில், புராணக் கதைகளின் நடுவில் இருப்பதைக் கண்டு மிக மிக வெட்கப்பட்டு தலை குனிந்தபடி தள்ளாடி தள்ளாடி வீட்டை நோக்கி புறப்பட்டாள், தனது முடியாத தேடுதலை நோக்கி, "தேயாத வெண்ணிலா"வாக!!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • முரளிதரனுக்கு வாழ்த்துக்கள். இதற்கான பயிற்சிகள் எடுத்தாரோ?
    • நல்லதொரு விளக்கம். கையோட கம்மாரிஸ்.அடுத்த தெர்தல் வந்துவிட்டது. இதுவரை தமிழர் கத்தாத கத்துக்களா? நீங்களும் கத்துங்க கத்துங்க.யார் தடுத்தது?
    • அட ஞான சூனியமே, குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோது எத்தனை தமிழ் கட்சிகள் அல்லது எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் அவரை எதிர்த்து, சிங்கள வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தீர்கள்? எத்தனை பேர் குமார் பொன்னம்பலத்திற்கு தமிழர்கள் வாக்குப் போடக் கூடாது என்று தமிழர்களிடம் தீயாகப் பிரச்சாரம் செய்தீர்கள்? அப்படி எவருமே குமாருக்கு எதிராகவும், சிங்களத்தின் சந்திரிக்காவையோ வேறு எவரையும் ஆதரித்தும் பிரச்சாரம் செய்யவில்லை. அவர் வெற்றிபெறவேண்டும் என்பதில் கொழும்புத் தமிழர்களுக்கு விருப்பம் இருந்தது, ஆனால் வடக்குக் கிழக்கில் அவரை அதிகம் அறியாததால் வாக்குகள் விழவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கெதிராக எத்தனை தமிழ் அரசியல்க் கட்சிகள், தமிழ் அரசியல்ப் பிரமுகர்கள், அரசியல் விற்பனர்கள், தனிமனிதர்கள், குழுக்கள், இணையத் தளங்கள், பத்திரிக்கைகள் என்று போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தீர்கள்? சுத்து மாத்து மட்டுமே எத்தனை தேர்தல் மேடைகள், கூட்டங்கள், பிரச்சாரப் பேரணிகள் என்பவற்றில் கலந்துகொண்டு "பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதே எனது ஒற்றை நோக்கம்" என்று சூளுரைத்து வந்தது? இவ்வளவு எதிர்ப்பிற்கும், அவதூறுப் பிரச்சாரத்திற்கு மத்தியிலும் பொதுவேட்பாளர் 1.67 வீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்றால், நீங்கள் அனைவரும் அவருக்கெதிராகப் பிரச்சாரம் செய்யாது விட்டிருந்தாலே அன்று குமார் பெற்றதைக் காட்டிலும் அதிகம் பெற்றிருப்பார். ஆனால் அவரை எங்கே விட்டீர்கள்? பேரம் பேசுகிறோம் பேரம் பேசுகிறோம் என்று தோற்கிற குதிரையில் கட்டிவிட்டு வென்ற குதிரையிடம் போய்க் காசு கேட்கிறீர்களே? 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.