Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாகன புகை பரிசோதனை!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகன புகை பரிசோதனை இன்று (05) முன்னெடுக்கப்பட்டது.

சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸார் இணைந்து இன்று குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, A9 வீதியால் பயணித்த முச்சக்கர வண்டிகள், பேருந்துகள், பாரஊர்திகள் என அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/303182

Edited by ஏராளன்
தலையங்கத்தில் மாற்றம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை

Published By: DIGITAL DESK 3   05 JUN, 2024 | 03:27 PM

image
 

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னார் பெரிய பாலம் மற்றும் தள்ளாடி இடை நடுவில் காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று புதன்கிழமை (5) காலை கண்டல் தாவரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலகம் இணைந்து மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன்  சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு  மரம் நடுகையை  ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வுக்கான 300 கண்டல் தாவரங்களை  டினோஸா கண்டல் தாவரப் பள்ளி  (Dinosha Mangrove Nursery) வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பிரதீப், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கனகரெத்தினம் திலீபன், மன்னார் மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ சுற்றுச்சூழல் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்டச் செயலகம்   மற்றும்  பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-06-05_at_9.16.14_AM_

WhatsApp_Image_2024-06-05_at_9.16.14_AM.

WhatsApp_Image_2024-06-05_at_9.16.13_AM.

WhatsApp_Image_2024-06-05_at_9.16.13_AM_

WhatsApp_Image_2024-06-05_at_9.16.13_AM_

https://www.virakesari.lk/article/185377

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள்!

05 JUN, 2024 | 07:16 PM
image
 

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் அமைச்சினால் பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான சுற்றாடல் தின நிகழ்வு இன்று புதன்கிழமை (05) மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் கலந்துகொண்டார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஈச்சந்தீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில்  சுற்றாடல் சார் கண்காட்சி இதன்போது நடைபெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் டி.தர்மதாச தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் பயனுறுதி மிக்க நில பயன்பாட்டின் ஊடாக 'நலம் மிகுந்த நாடு' எனும் கருப்பொருளுக்கு அமைவான கண்காட்சியை மாவட்ட அரசாங்க அதிபர் திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து பாடல், கலை கலாசார நிகழ்வுகளும் சுற்றாடல் சார்பான உரைகளும் இதன்போது நிகழ்த்தப்பட்டன.

இன்றைய நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்யானந்தி, மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

pho_envir__6___1_.jpeg

pho_envir__11_.jpeg

pho_envir__10_.jpeg

pho_envir__5_.jpeg

 

pho_envir__5_.jpeg

https://www.virakesari.lk/article/185403

  • ஏராளன் changed the title to உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நடை பவனி!

07 JUN, 2024 | 05:28 PM
image

“நில மறுசீரமைப்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்ட  இவ்வருடத்துக்கான தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை எதன் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னத்தின் வழிகாட்டுதலில் சுற்றாடல் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், “பிளாஸ்டிக்  கழிவு முகாமைத்துவம்" எனும் கருப்பொருளின்கீழ் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அலுவலக உத்தியோகத்தர்களினால் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகளை தாங்கிய வண்ணம் இந்த நடைபவனி  களுவாஞ்சிகுடி பேருந்து நிலையம் ஊடாக பொதுச்சந்தைப் பகுதிக்கு சென்றடைந்து, துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு  விநியோகிக்கப்பட்டன.

இதன்போது, 200 இற்கும் மேற்பட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், உதவி பிரதேச செயலாளர்  சத்யகௌரி தரணிதரன் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

pho_envir__9_.jpeg

pho_envir__8_.jpeg

pho_envir__2_.jpeg

pho_envir__1_.jpeg

https://www.virakesari.lk/article/185550

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.