Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது - கனடிய தேசிய தமிழர் அவை

Published By: RAJEEBAN

02 JUL, 2025 | 11:02 AM

image

செம்மணி மனித புதைகுழியில்  எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம்; அங்கீகரிக்கவேண்டும் பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதிக்கான வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது என கனடிய தேசிய தமிழர் அவை தெரிவித்துள்ளது

அறிக்கையொன்றில் கனடிய தேசிய தமிழர் அவை மேலும் தெரிவித்துள்ளது.

ஜூன் 25 2025 அன்று ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம்மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் தனது செயற்பாடுகளின் ஒரு பகுதியாக  அவர் தமிழ் மக்கள் காணாமல் போனதுடன் தொடர்புடைய செம்மணி மனித புதைகுழிக்கு விஜயம் மேற்கொண்டார்.

இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் வாக்குமூலத்தின் பின்னர் இந்த மனித புதைகுழி முதலில் 1998 இல் உறுதிப்படுத்தப்பட்டது.1996இல் இவர் கிருஷாந்தி குமாரசுவாமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தார் என்பது நிருபிக்கப்பட்டது.

இந்த விசாரணையின் போது ராஜபக்ச செம்மணியில் காணாமல்போன 300 முதல் 400 வரையிலான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு;ளதாக தெரிவித்தார்.

இவரது வாக்குமூலமும்  சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கையும் ( சர்வதேச மன்னிப்புச்சபை தனது முன்னைய அறிக்கைகளில் பெருமளவானவர்கள் காணாமல்போனது,இரகசிய  புதைப்புகள் குறித்து நம்பகதன்மைமிக்க  ஆதாரங்களை முன்வைத்திருந்தது.)

இது தொடர்பில் ராஜபக்ச மிகவும் திட்டவட்டமான தகவல்களை வெளியிட்டிருந்தார், அவர் கடத்தல்,சித்திரவதை கொலைகளில் உயர் அதிகாரிகளிற்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.

514422597_1125769606254562_4575220276644

வதைமுகாம்கள் காணப்பட்ட பகுதிகள்,பாதிக்க்பபட்டவர்கள்,ஆகியவை குறித்த தகவல்களை வழங்கியதுடன் உடல்கள் புதைக்கப்பட்ட சில இடங்களையும் காண்பித்திருந்தார்.

கடும் பாதுகாப்பின் மத்தியில் திறந்த நீதிமன்றத்திற்கு அவர் தனது வாக்குமூலத்தினை வழங்கினார்,இலங்கை அரசாங்;கம் அதுவரை தெரிவித்து வந்ததை அவர் நேரடியாக சவாலிற்கு உட்படுத்தியதுடன் இலங்கையில் திட்டமிடப்பட்ட தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் காணப்படுவதை வெளிப்படுத்தினார்.

பலவருட  மௌத்திற்கு பின்னர் இந்த வருடம் பெப்ரவரி மாதம் மீண்டும் செம்மணி கவனத்i ஈர்த்தது.அரியாலை சித்துபாத்தி மயானத்தில் தகனமேடையை அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் மனித எச்சங்களை கண்டுபிடித்தனர்.ஜூன் 8ம் திகதியளவில் இந்த பகுதி மனித புதைகுழி காணப்படும் பகுதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் இடம்பெற்ற அகழ்வின் போது மூன்று குழந்தைகளினது உடல்கள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஜூன் 29ம் திகதி இடம்பெற்ற அகழ்வின் போது சிறுபிள்ளையொன்றின் எலும்புக்கூடுகளும் நீலநிற புத்தகபையும் மீட்கப்பட்டது,அந்த பையில் தமிழ் ஆங்கில எழுத்துக்கள் காணப்பட்டன.

சிறுவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும்,புத்தகபைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டமையும்,இந்த பகுதியில் சிறுவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர் என நீண்டகாலமாக தெரிவிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சர்வதேச கண்காணிப்புடனான தடயவியல் சோதனை குறித்து வலியுறுத்தி வந்துள்ளனர்.இலங்கை அரசாங்கத்தின் ஆதாரங்களை மறைக்கும் நீதியை குழப்பும் வரலாற்றையும் அவர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

செம்மணியில் இதுவரை 33 மனிதஎச்சங்கள்  மீட்கப்பட்டுள்ளன,மேலும் செய்மதி படங்கள் இந்த பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன,இவற்றை எதிர்காலத்தில் அகழ்வதற்கான திட்டங்கள் உள்ளன.

 ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது விஜயத்தின் போது  முழுமையான விசாரணைகளை கோரினார்.சர்வதேச நிபுணர்கள் தடயவியல் நிபுணர்களின் வலுவான விசாரணைகள் மூலமேஉண்மையை வெளிக்கொணர்ந்து காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு முடிவை காணமுடியும்   என அவர் தெரிவித்திருந்தார்.

செம்மணி மனித புதைகுழி தோண்டப்படுவது தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கையின் தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என்பதற்கான தெளிவான சான்றாகும்.

தமிழ் இனப்படுகொலைகள் ஆரம்பித்தது முதல் வடக்குகிழக்கில் பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மனித புதைகுழிகளிற்கு காரணமானவர்களை பாதுகாப்பதற்காக இலங்கையின்   ஆட்சியாளர்கள் மனித புதைகுழிகளிற்கு பின்னால் உள்ள உண்மையை மறைக்க முயன்றுள்ளனர்.

பொறுப்புக்கூறல் இன்மை தொடர்வது இலங்கையில் தொடர்ந்து நீடிக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றது.

https://www.virakesari.lk/article/218996

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.