Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

Dec 31, 2025 - 01:30 PM

உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப் பட்டியலின் படி, அவர் உலகின் முதல் நிலை இடத்தைப் பெற்றுள்ளார். 

மிகச் சிறு வயதிலேயே உலகத் தரவரிசையில் உச்சத்தைத் தொட்டுள்ள தாவி சமரவீர, இலங்கைக்கு சர்வதேச அளவில் பெரும் புகழைத் தேடித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmjtq7vgx03c4o29njm0t4hqo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மேசைப்பந்தாட்ட தரவரிசை: முதலிடத்தைப் பிடித்தார் இலங்கையின் இளம் நட்சத்திரம் டாவி

Published By: Vishnu

31 Dec, 2025 | 06:56 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடைசியாக டிசம்பர் மாதம் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட மேசைப்பந்தாட்ட வீரர்களுக்கான உத்தியோகபூர்வ தரவரிசையில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் கல்கிஸ்ஸை சென். தோமஸ் மாணவன் டாவி சமரவீர முதலாம் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை மேசைப்பந்தாட்ட வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் இந்த மைல்கல் சாதனையை டாவி சமரவிக்ரம படைத்துள்ளார்.

எந்தவொரு வயது பிரிவிலும், எந்தவொரு பாலினத்திலும் உலக தரவரிசையில் இலங்கை வீரர் ஒருவர் உயரிய இடத்தை எட்டிப் பிடித்துள்ளது இதுவே முதல் தடவையாகும்.

இத்தாலியின் பெல்லா இத்தாலியா EFA விலேஜ் ஸ்போர்ட்ஸ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் லிஞ்ஞானோ 2025 போட்டியில் (WTT Youth Contender Lignano 2025) சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததன் மூலம் டாவி சமரவிக்ரம தரவரசையில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த வெற்றியுடன் டாவி சமரவிக்ரம 200 தரவரிசை புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் டாவி சமரவிக்ரம 3ஆம் இடத்தில் இருந்தார்.

அப்போது, 'நான் அடுத்து வருடம் உலக தரவரிiசியல் முதலிடத்தைப் பிடிப்பேன்' என டாவி சமரவிக்ரம நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

அவர் 11 வயதுக்குட்பட்ட பிரிவுக்கான உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவாறு புத்தாண்டை ஆரம்பிக்கவுள்ளார்.

இப்போது 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்து சென். தொமஸ் கல்லூரிக்கும் இலங்கைக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

சென் தோமஸ் கல்லூரியில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வருடத்தின் மிகச் சிறந்த விளையாட்டு சாதனையாளர் என்ற விருதை டாவி சமரவிக்ரம வென்றெடுத்தார். இப் பாடசாலையின் வரலாற்றில் மிக இள வயதில் இந்த விருதை வென்றெடுத்த முதலாவது வீரர் டாவி சமரவிக்ரம ஆவார்.

https://www.virakesari.lk/article/234886

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு செம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற தாவி சமரவீர நாடு திரும்பினார்

Jan 26, 2026 - 10:00 AM

இரு செம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற தாவி சமரவீர நாடு திரும்பினார்

11 வயதுக்குட்பட்ட உலக தரவரிசை மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, இன்று (26) அதிகாலை நாடு திரும்பினார். 

அவர் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் விமான சேவையின் OV-437 என்ற இலக்க விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 

தாவி சமரவீர ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பஹ்ரைனில் நடைபெற்ற தொடரில் வெற்றி பெற்று, அதில் தங்கப் பதக்கத்தை வென்றார். 

அதேபோல், கட்டார் நாட்டின் டொஹா நகரில் ஜனவரி 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கனிஷ்ட மேசைப்பந்து தொடரின் 11 வயதுக்குட்பட்ட பிரிவிலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். 

இன்னும் 10 வயதேயான தாவி சமரவீர, கொழும்பு கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியில் தரம் 06 இல் கல்வி கற்கும் ஒரு மாணவராவார். 

தாவி சமரவீரவின் பயிற்சியாளராக அவரது தந்தையான ஹசித சமரவீர செயற்படுகிறார். 

அவர் 11 வயதுக்குட்பட்ட மேசைப்பந்து வீரர்களுக்கான உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளமை விசேட அம்சமாகும்.

https://adaderanatamil.lk/news/cmkuo5r0u04eio29nynshv1mn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு உலக சம்பியன் பட்டங்களுடன் தாயகத்திற்கு பெருமை சேர்த்த டாவி சமரவீர நாடு திரும்பினார்

26 Jan, 2026 | 04:27 PM

image

(நெவில் அன்தனி)

உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரி சிறுவன் டாவி சமரவீர இந்த வருடத்தை இரண்டு உலக சம்பியன் பட்டங்களுடன்  ஆரம்பித்து இலங்கைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.

பாஹ்ரெய்ன், மனாமாவிலும் கத்தார், தோஹாவிலும் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப்களிலேயே அவர்  உலக சம்பியன் பட்டங்களை சுவீகரித்தார்.

மனாமா இசா பின் ராஷித் விளையாட்டுத் தொகுதி அரங்கில் ஜனவரி 14 முதல் 18 வரை நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாஹ்ரெய்ன் தேசத்தைச் செர்ந்த யூசுப் அல்பன்னாவை 11 - 6, 9 - 11, 11 - 7, 11 - 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் டாவி சமரவீர வெற்றிகொண்டு இந்த வருடத்திற்கான தனது முதலாவது உலக சம்பியன் படத்தை சுவீகரித்தார்.

இதனைத் தொடர்ந்து தோஹா, லுசெய்ல் விளையாட்டுத் தொகுதி அரங்கில் ஜனவரி 19 முதல் 25 வரை  நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சவூதி அரேபிய வீரர் ரெயான் அல்மஞ்சூமியை எதிர்த்தாடிய டாவி சமரவீசர 11 - 9, 11 - 7, 11 - 9 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் வெற்றிபெற்று இரண்டாவது   உலக சம்பியன் படத்தை  வென்றெடுத்தார்.

பத்து வயதான டாவி சமரவீர, கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரியின் 6ஆம் வகுப்பு மாணவராவார்.

டாவியும் அவரது தந்தையும் பயிற்றுநருமான ஹசித்த சமரவீரவும் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தனர்.

அவர்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள், டாவி சமரவீரவின் தாயார், சகோதரர், இலங்கை மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தயா சமரவீர ஆகியோர் உட்பட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர்.

IMG-20260126-WA0048.jpg

IMG-20260126-WA0050.jpg

https://www.virakesari.lk/article/237060

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.