Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு கூறும் புலிகளின் உயிரிழப்புத் தொகை குடாநாட்டு மக்கள் தொகையின் 2 மடங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசு கூறும் புலிகளின் உயிரிழப்புத் தொகை குடாநாட்டு மக்கள் தொகையின் 2 மடங்கு: "சண்டே ரைம்ஸ்"

கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கங்களினால் கூறப்பட்டு வரும் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மொத்த மக்களும் இரு தடவைகளுக்கு மேல் உயிரிழந்திருக்க வேண்டும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

போரில் "உண்மை தான்" முதலில் மரணத்தை தழுவுவது உண்டு. கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கங்களினால் கூறப்பட்டு வந்த எண்ணிக்கையை கணக்கிட்டால் யாழ். குடாநாட்டில் உள்ள மொத்த மக்களும் இரு தடவைகளுக்கு மேல் உயிரிழந்திருக்க வேண்டும். அங்கு யாரும் தற்போது உயிருடன் இருக்க முடியாது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தகவல்களின் பரிமாற்றங்கள் மிகவும் அதிகம். படையினர் களத்தில் மோதல்களில் ஈடுபடும் போதும் தகவல் திணைக்களமே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கான தகவல்களை வழங்குவதுண்டு.முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் தகவல் திணைக்களம் படையினருடன் இணைந்தே செயற்பட்டிருந்தது.

தற்போது இந்த நிலைமை முற்றிலும் மாறுபட்டது. அதாவது முழு விடயங்களையும் படையினரே கையாண்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் அனைத்துலக பிரச்சார உத்திகளை அவர்கள் மிகவும் நேர்த்தியாக கையாண்டு வருகின்றனர். பல வருடங்களாக அவர்கள் அதனை திறமையாக செயற்படுத்தி வருகின்றனர்.

களமுனைகள் தொடர்பான இறுவட்டுக்கள், வர்ணப் படங்கள், புத்தகங்கள் போன்றவற்றை உலக நாடுகளில் உள்ள பல தலைநகரங்களில் அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர். மோதல்கள் தொடர்பான தகவல்களை ஒளிப்படங்களுடன் செய்மதி தெலைக்காட்சிகள் மூலம் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த நாடுகளில் அரசின் இராஜதந்திர மையங்கள் உள்ள போதும் அவர்களால் இந்தப் பிரச்சாரங்களை முறியடிக்க முடிவதில்லை.

இதனிடையே இந்த வாரம் மீண்டும் ஒரு பரப்புரை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வான் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போதும் அவர் கொல்லப்பட்டதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற வான் தாக்குதலில் அவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மருத்துவ சிகிச்சைக்காக அவர் இந்தியா அல்லது துபாய்க்கு பயணமாக உள்ளதாகவும் வேறு ஒரு தகவல் தெரிவித்தது. ஒரு சமயத்தில் ஆசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் உள்ள புலனாய்வு அதிகாரிகளை அந்த நகரங்களில் உள்ள மருத்துவமனைகளை கண்காணிக்கும் படியும் கோரப்பட்டிருந்தது.

எனினும் இந்த வாரம் கூறப்பட்டிருந்த கதைகளில் சில தகவல்களும் இணைக்கப்பட்டிருந்தன. அது பெரும் ஆரவாரங்களை தெற்கில் ஏற்படுத்தியிருந்தது. சில பகுதிகளில் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. சில வீடுகளில் பால் சோறும் பரிமாறப்பட்டது. படையினரின் இளமட்ட அதிகாரிகள் மதுச்சாலைகளில் கூடி பாடல்களையும் பாடி மகிழ்ந்திருந்தனர்.

வெளிநாடுகளில் உள்ள சிங்கள மக்கள் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து தகவல்களை தெரிவித்தவாறு இருந்தனர். தலைவர் பிரபாகரன் அனுமதிக்கப்பட்ட அம்பகாமம் பகுதியில் உள்ள எக்ஸ்ரே தளத்தின் மருத்துவமனைக்கு இந்தியாவில் இருந்து மூன்று மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டிருந்ததாகவும் ஒரு தகவல் தெரிவித்திருந்தது.

கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதாகவும், விடுதலைப் புலிகள் தமது தொலைத்தொடர்புகள் அனைத்தையும் மூடியதாகவும் கொழும்பில் தகவல்கள் பரவின. புதன்கிழமை தமிழ்நெட் இணையத்தளமும் செய்திகளை பதிவேற்றம் செய்யவில்லை. இதுவும் சந்தேகங்களை வலுப்படுத்தியிருந்தது.

ஆனால் அரசின் பிரச்சாரம் பொய்யானது என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருந்தார். வான் படையினர் பொதுமக்களின் குடியிருப்புக்களையே தாக்கியதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை பொறுப்பாளரும், தற்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளருமான பா.நடேசன் "வான்படையினர் காடுகளில் தாக்குதலை மேற்கொண்டு காட்டு விலங்குகளையே கொன்றனர்" எனவும் எத்தனை மான்கள் உயிரிழந்தன என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம் எனவும் தெரிவித்திருந்தார்.

இது அரசின் பிரச்சார உத்தி என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவனும் தெரிவித்திருந்தார். கிளிநொச்சியில் கடைகள், பாடசாலைகள் மூடப்பட்டதற்கான காரணம் வேறு. வான் தாக்குதல்களே காரணம்.

புதன்கிழமை காலை கட்டுநாயக்கா வான் படைத்தளத்தில் இருந்து 6 தாக்குதல் வானூர்திகள் புறப்பட்டன. அவற்றில் 3 மிக்-27 ரக வானூர்திகள் ST-4B ரக ஏவு குண்டுகளையும், கிபீர் வானூர்திகள் 1,000 கிலோ குண்டு ஒன்றை அதன் அடிப்பகுதியிலும், இரு 250 கிலோ குண்டுகளை இறக்கையிலும் சுமந்து சென்றன. அன்று நடைபெற்ற தாக்குதலானது அதிக வானூர்திகள் பங்கெடுத்த தாக்குதலாகும். அதன் பின்னர் நாளாந்தம் வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனிடையே தலைநகரான கொழும்பு மற்றும் ஆழமான தென்னிலங்கையின் பாதுகாப்புக்கள் தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினர் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். மொனறாகல பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்தே அவை மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த செவ்வாய்கிழமை கெரில்லாக்கள் கித்துள்கோட்டப் பகுதியில் காவல்துறை உப பரிசோதகர் ஒருவரையும், 2 காவல்துறை உறுப்பினர்களையும் சுட்டுகொன்றிருந்தனர். அது தனமல்வில மற்றும் குடுஓயா பகுதிகளுக்கான வீதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. ஆனால் காவல்துறையினர் விடுதலைப் புலிகளின் குறிபார்த்து சுடும் தாக்குதல் மூலமே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏனெனில் அங்கு மோதல்கள் நடைபெற்றதாக தெரியவில்லை.

மறுநாள் காலை புதன்கிழமை தாக்கப்பட்ட காவல் நிலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் இராணுவ கொமோண்டோக்களும், காவல்துறையினரும் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர். அதன் போது காவல்துறையினரின் மோப்ப நாயான பிறவுண் ராஜா ஏதோ ஒன்றை முகர்ந்து விட்டு நிலத்தில் படுத்துக்கொண்டது. பின்னர் தேடுதல் நடத்திய படையினர் நாயை பின்தொடர்ந்து சென்ற போது அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 கொமோண்டோக்கள் காயமடைந்தனர். அதன் பின்பு 4 மணி நேரத்தின் பின்னர் தேடுதல்கள் கைவிடப்பட்டன.

ஏனெனில் விடுதலைப் புலிகளின் துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து பிறவுண் ராஜா தலைதெறிக்க தப்பி ஒடிவிட்டது. 3 மணி நேரத்தின் பின்னரே அது திரும்பி வந்திருந்தது. தற்போது அந்தப் பகுதிகளில் இராணுவம், காவல்துறை, ஊர்காவல் படையினர் என 4,000 பேர் தேடுதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் இருந்து பாதுகாப்புக் கடமைகளில் இணைந்த 400 பேருக்கு சொட் கண் ரக துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அந்தப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் வரவுகள் மிகவும் குறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில கிராமங்களில் உள்ள மக்கள் இரவுகளை கோவில்களில் தான் கழிக்கின்றனர். ஏனையோர் பயிர்ச்செய்கை நிலங்களுக்கும் செல்வதில்லை.

இந்த வாரத்தின் முற்பகுதியில் ஒக்கம்பிட்டியாவில் உள்ள சில இல்லங்களுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்தார். அவர் அங்கு நடைபெற்ற மரணச்சடங்கில் பங்குபற்ற விரும்பிய போதும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதுகாப்புப் பிரிவினர் அவரை அனுமதிக்கவில்லை.

அப்போது சில மக்கள் மகிந்த ராஜபக்சவிடம் "இந்த போர் எப்போது முடியும்" என கேள்வியை எழுப்பியிருந்தனர். இந்தக் கேள்வியானது. தற்போதைய தாக்குதல்களின் விளைவுகளை பிரதிபலித்து நிற்கின்றது.

கொழும்பில் தற்போது மேலதிக படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் விழாவை முன்னிட்டே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.puthinam.com/full.php?2b1Xofe0d...d437XS2b037Qm3e

ஒருவேளை அவை வந்து சமைக்கிறதிற்கு பாவிக்கிற "புளி" விற்ற கணக்கை சொல்லிட்டினமோ தெரியவில்லை நடா அங்கிள்... :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"முயல் பிடிக்கிற டோக்கை வேசில தெரியும்" :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.