Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிப்ரவரி 4 பந்த் வெற்றியா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

bandhsd9.jpg

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்த பந்த்தைத் தொடர்ந்து... பிப்ரவரி 4-ந்தேதியின் காலைப்பொழுது பரபரப்பாகவே விடிந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்க... பல வீடுகளில் கருப்புக் கொடிகள் பறந்தன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட... ஓடிய ஒரு சில அரசுப் பேருந்துகளும் அங்கங்கே நடத்தப்பட்ட மறியலால் பிற்பகலில் நிறுத்தப்பட்டு விட்டன.

பொம்மிடி ரயில் நிலைய வளாகத்தில் காலை 11 மணிக்கு பெட்ரோல் டின்னுடன் தீக்குளிக்க வந்த சிறுத்தைகள் இயக்கத் தைச் சேர்ந்த முருகனை, மடக்கிப் பிடித்து காக்கிகள் கைது செய்ய... பலத்த பரபரப்பு பற்றிக் கொண்டது. பந்த்துக்கு மத்தியில் கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ஒரு கும்பல் 4 கேஸ்களில் இருந்த மதுபான பாட்டில்களை சாலையில் தூக்கிப் போட்டு உடைத்தது.

சேலம் மாவட்டத்திலும் பெரும்பாலான கடைகள் அடைக் கப்பட்டிருந்தன. மேட்டூரில் தபால் நிலையத்தை ஒரு கும்பல் கொளுத்த முயற்சிக்க... அதன் கதவு மட்டும் எரிந்து போனது. கொளத் தூர் பகுதிகளில் இரவோடு இர வாக சாலை ஓரங்களில் இருந்த மரங்களை வெட்டிப் போட்டு சாலைகளை சிறை வைத்திருந்தது ஒரு கும்பல். அதேபோல் ஒரு கும் பல் அமைச்சர் வீரபாண்டியாருக் குச் சொந்தமான வி.எஸ்.ஏ. வணிக வளாகத்தைத் தாக்கி... அங்கிருந்த கடைகளை இழுத்து மூடியது.

கோவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்க... திருப்பூரில் தமிழர்கள் வேலை பார்க்கும் பெரும்பாலான பனியன் கம்பெனிகள் இழுத்து மூடப்பட்டிருந்தன. உடுமலைப்பேட்டை அருகே உள்ள திரு மூர்த்திமலை அகதிகள் முகாமைச் சேர்ந்த 300 குடும்பத்தினர்... குழந்தைகளுடன் சுட்டெரிக்கும் வெய்யிலில் உண்ணாவிரதம் இருந்ததோடு... தீக்குளித்து இறந்த முத்துக் குமாரின் படத்தை மட்டும் நிழலில் வைத் திருந்தனர். நாகை நீதிமன்றத்தின் முன் 700-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ராஜபக்சே கொடும்பாவியையும் இலங்கை தேசியக்கொடியையும் எரித்தனர்.

குடந்தை அருகே உள்ள சோழபுரத்தில் யூனியன் வைஸ் சேர்மனான வெண்மணி, தலைமையில் கூடிய சிறுத்தைகள் குறவன்- குறத்தி டான்சோடு ராஜபக்சே கொடும்பாவி யை அங்குள்ள இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரிக்கப் போவதாக அறிவிக்க... பகீரான காக்கிகள் அவர்கள் ஊர்வலம் தொடங்கும் முன்பே கைது செய்தனர்.

bandh2do7.jpg

வேலூர், திருப்பத்தூர் பகுதிகளில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டி ருக்க... அன்று அதிகாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரனின் அலுவலகத்தின் மீது சோடாபாட்டில் வீசி கண்ணாடியை உடைக்க... ஆவேசமாகக் கிளம்பி வந்த ஞானசேகரன், "இது சிறுத்தைகள் இயக்க இளம் முதல்வனின் வேலையாகத்தான் இருக்கும். கைது செய்யுங்கள் அவரை' என மறியலில் உட்கார... இளம் முதல்வனை தேடிப் பிடித்து கைது செய்தார்கள் காக்கிகள். போராட்ட பலத்தைப் பார்த்த ஆரணி தி.மு.க. எம்.எல்.ஏ. சிவானந்தம் தனது 2 மினி பஸ்களையும் நிறுத்தச் சொல்லிவிட்டார்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் பந்த் பலமாக இருந்தது. ஜெ.வின் ஆண்டிப்பட்டியில் கடைகள் முழுதாகத் திறக்கப்பட்டிருக்க... சி.பி.ஐ. தோழர்கள் திரண்டனர். ""உணர்வு இல்லையா உங்களுக்கு... கடைகளை மூடுங்கள்'' என்று கோஷ மிட்டபடி அவர்கள் ஊர்வலம் கிளம்ப... அவர்களை வழிமறித்த காக்கிகள் கைது செய்தனர்.

திருச்சி நகரில் பந்த் பெரிதாக நடக்கவில்லை. எனினும் கிராமப்பகுதிகளில் பரவலாக கடையடைப்பு இருந்தது. பவானிசாகர் அகதிகள் முகாமில் உள்ள மூவாயிரம் பேரும்... முகாம் வாசலில் குழந்தை குட்டிகளுடன் உண்ணாவிரதம் உட்கார்ந்தனர். தகவல் அறிந்து ஓடி வந்த கியூ பிராஞ்ச் போலீஸ், மிரட்டியும் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார்கள். குருவாரெட்டியூரில் உள்ள கிராம மக்கள் அனைவரும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றக் கோரி மௌன ஊர்வலம் நடத்தினர். யாரும் வேலைகளுக்குப் போகவில்லை.

ஈரோட்டில் பஸ் டிரைவர்கள் பஸ்களை ஓட்ட மறுத்தனர். உடனே அங்கு ஆஜரான டி.எஸ்.பி. தனபால் "வண்டியை ஓட்டித்தான் ஆகணும். வண்டில ஏறுங்க' என டிரைவர்களை பஸ்ஸில் ஏற்றிவிட... உடன் வந்த காக்கிகள் ""சேலம்... தாராபுரம்...'' என பயணிகளைக் கூவி கூவி அழைத்தனர்.

நம்பியூரில் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன் என்பவர்... அங்குள்ள 100 அடி உயர செல்போன் டவரில் ஏறி, ""ஈழத்தமிழர்களுக்காக நான் உயிரை அர்ப்பணிக்கப் போகிறேன்'' என்றார். அரக்கப் பரக்க ஓடிவந்த காக்கிகள் கெஞ்சிக் கூத்தாடியும் முருகன் இறங்க மறுக்க... காக்கிகள் சிறுத்தைகள் இயக்க மா.செ. சேதுபதிக்கு தகவல் கொடுத்து வரச்சொன்னார்கள். முருகனின் செல்போனில் திருமாவே தொடர்புகொண்டு டவரில் இருந்து இறங்க வைத்தார்.

bandh1yy9.jpg

தாராபுரம் கடைவீதியில் மண்ணெண்ணெயில் நனைந்த கோலத்தில் ""ஈழத்தமிழர் வாழ்க'' என கோஷமிட்டபடியே நடந்த ரஜினிசுகுமார் என்பவர்.. நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் "போலீஸ்காரங்களா... வாங்க நாம ஈழத்தமிழர்களுக் காக தீக்குளிக்கலாம்' என்றபடி தீப்பெட்டியை எடுக்க... அரணடுபோன காக்கிகள், அவர்மீது பாய்ந்து தீப்பெட்டியைப் பிடுங்கி அவரை தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டி கைது செய்தனர்.

மதுரையில் துணைமேயர் மன்னன் உள்ளிட்ட உ.பி.க்கள் நேரிலும் செல்போனிலும் வியாபாரி களைப் பிடித்து ""கடையைத் திறக்காட்டி எப்பவும் நிரந்தரமா மூடவேண்டியதுதான்'' என "அன்பாக'ச் சொல்லியே 65% கடைகளை திறக்க வைத்தனர். இதற்கிடையே அழகிரியின் மனைவிக்கு சொந்தமான "காந்தி சில்க்'ஸை பந்த் சாக்கில் இலைத்தரப்பும் மறுமலர்ச்சித் தரப்பும் தாக்கப்போவதாக தகவல் வர... அன்று முழுவதும் காந்தி சில்க்ஸ் பூட்டியே கிடந்தது. மாவட்ட நீதிமன்றத்திற்குள் இருக்கும் போஸ்ட் ஆபீசுக்கு சங்கரநாராயணன் தலைமையில் படையெடுத்த வழக்கறிஞர்கள், ""நாங்க போராடும்போது மத்திய அரசு அலுவலகம் திறந்திருந்தா என்ன அர்த்தம், மூடுங்க'' என்றனர். உள்ளே இருந்தவர்களோ... "முடியாது' என்று மறுக்க... ""அப்ப உங்களை உள்ளேயே சிறைவைக்க வேண்டியதுதான்'' என்றபடி ஊழியர்களை உள்ளே வைத்து வெளியே பூட்டைப் போட்டனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரளவே கடையடைப்பு காணப்பட்டது. சங்கரன்கோயில் அகதி கள் முகாமில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் இருக்க... அவர்களது குழந்தைகளின் பிஞ்சுக்கரங்களில் தீக்குளித்த முத்துக்குமாரின் பட அட்டைகள் பளீரிட்டன.

தி.மு.க. எம்.எல்.ஏ. புஷ்பராஜ், விழுப்புரம் பஸ் ஸ்டாண்டிற்கு தன் ஆதரவாளர்களுடன் வந்து ""பயப்படாம பஸ்ஸை எடுங்க'' என டிரைவர்களை கேட்டுக்கொண்டதோடு, கடைகளையும் திறக்கச் சொல்லி நகர்வலம் வந்துகொண்டிருந்தார். எனினும் பரவலாக முழு கடையடைப்பு இருந்தது.

பெரம்பலூர், அரியலூர், ஜெயங் கொண்டம் பகுதிகள் 99 சத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ""பள்ளிகளுக்குக் கூட மாணவர்கள் வரலை. இது மக்கள் நடத்தும் போராட்டம்'' என்கிறார் செம்மங்கூர் இளைஞர் சுரேஷ்.

கடலூர் பாரதி சாலையில் கணேஷ் மெடிக்கல் மட்டும் திறந்திருப்பதைப் பார்த்த ஒரு கும்பல்... அதைத் தாக்க ஆரம்பிக்க... அலறியடித்து மூடினார்கள் அதிலிருந்த ஊழியர்கள். அதேபோல் திறந்திருந்த பெட்ரோல் பங்க் ஒன்றையும் தாக்கினர். கடலூர், தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்களும் கடலுக்குப் போகாமல் வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.

காங்கிரஸ் அரசாளும் பாண்டிச்சேரி அரசு ஓட்டும் 50 பஸ்களும் நிறுத்தப்பட, தனியார் பேருந்துகளும் ஓடவில்லை. காரணம் அதிகாலையில் அரியாங்குப்பத்தில் 2 பஸ்கள் தாக்கப்பட்டதால் அலர்ட் ஆகிவிட்டார்கள்.

ராமநாதபுரம் நகரில் பாதி கடைகள் திறந்திருக்க, சிவகங்கையிலோ முழுமையாக கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. பாம்பன் பஸ்நிலையம் அருகே மதுவிலக்கு பிரச்சாரம் பண்ணிவரும் மது எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த 12 பேர் தொடர் உண்ணாவிரதம் என்று அறிவித்து உட்கார்ந்தனர். பாம்பன் எஸ்.ஐ.பாண்டி, அவர்களைத் தாக்கி ஸ்டேஷனுக்கு கொண்டு போனார்.

தஞ்சை மாவட்ட பாப்பாநாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளியின் தாளாளரான காமராஜ், உணர்வாளர்கள் 10 பேரோடு நடுரோட்டில் மறியலில் உட்கார்ந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் வழக்கறி ஞர்கள் சங்க செயலாளர் கினி இமானுவேல் தலைமையில் அணிதிரண்ட வழக்கறிஞர்கள் ""ஈழத் தமிழர் வாழ்க' என்ற கோஷத்தோடு இலங்கையின் தேசியக்கொடியை எரித்தனர். அருகிலிருந்த மார்வாடிக்கடை ஒன்றும் தாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 23 வழக்கறிஞர்கள் நான்பெயிலபிள் செக்ஷனில் கைது செய்யப்பட...

"எப்படி நான்பெயிலபிளில் அரெஸ்ட் செய்யலாம்?' என ஜே.சி.ராமசுப்ரமணியனிடம் வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டார்கள் மற்ற வக்கீல்கள். தள்ளுமுள்ளுவில் கிண்டி ஏ.சி.நடராஜ் தாக்கப்பட்டார். உடனே லத்திசார்ஜில் காக்கி கள் இறங்க... ""அடிக்காதீங்க'' என அலறினர் வழக்கறிஞர்கள்.

இதற்கிடையே கைதான 23 பேரையும் பெயிலில் விடும்படி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் அடிஷனல் மாஜிஸ்திரேட் சரோஜினி தேவியிடம் மனு கொடுக்க... இதன்பின் இரவு 12 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பந்த்தின்போது நாகை, திருவாரூரில் 95% கடைகளும் கோவை திருப்பூரில் 90% கடைகளும் கடலூர், விழுப்புரம், வேலூர், தேனி, போடியில் 80% கடைகளும், மதுரையில் 60% கடைகளும், குமரியில் 50% கடைகளும், தூத்துக்குடி, நெல்லை மாவட் டங்களில் 35% கடைகளும் அடைக்கப்பட்டிருக்க... தமிழகம் முழுக்க ஏறத்தாழ 80 பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளன.

அரசியலைத் தாண்டி தமிழக மக்கள் பிப்ரவரி 4-ஐ ஈழத்துக்கு ஆதரவான நாளாகவே பாவித்து கடையடைப்பை பரவலாக நடத்தியிருப்பதை உணர முடிகிறது.

-நமது நிருபர்கள்

நன்றி நக்கீரன் வார இதழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.