Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முசோலினி பெற்ற பிள்ளை சோனியா காந்தியா? – பெங்களூரில் ஈழ விடுதலை ஆதரவு மாநாட்டில் வைகோ கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முசோலினி பெற்ற பிள்ளை சோனியா காந்தியா? – பெங்களூரில் ஈழ விடுதலை ஆதரவு மாநாட்டில் வைகோ கேள்வி

http://www.meenakam.com

[படங்கள்] அக்டோபர் 18 ம் நாள் பெங்களூர் கருநாடகத்தமிழ் மக்கள் இயக்கத்தின் ஸ்ரீராமபுரம் கிளை சார்பில் ஈழ விடுதலை ஆதரவு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டிற்கு இயக்கத்தின் தலைவர் தோழர் சி.இராசன் தலைமை தாங்கினார். ஈழ விடுதலை உணர்வை மக்களிடத்தில் ஊக்குவிக்கும் வகையில் தோழர் மாரி அவர்களின் தலைமயில் கலை நிகழ்ச்சிகளும், சமர்ப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், புலவர்களின் பாட்டரங்கமும் நடைபெற்றது.

இம்மாநாட்டில் பேராசிரியர் ருக்மணி அம்மையார் இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் அவல நிலை குறித்தும், பெண்கள், குழந்தைகள் படும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதணைகள் குறித்தும் விளக்கினார். தோழர் சி.இராசன் அவர்கள் இந்தத்தருணத்தில் உலகத்தமிழர்கள் ஒன்றுபட்டு ஈழ விடுதலையை வென்றெடுக்க வேண்டியதின் அவசியத்தை முன் வைத்தார். மேலும் அவர் பேசும்போது தமிழர்களின் வரலாற்றிலேயே இது ஒரு பொன்னான காலம். தலைவர் பிரபாகரன் அவர்கள் உலகத்தமிழர்களையெல்லாம் ஒருங்கிணைத்துள்ளார்கள். தலைவர் பிரபாகரன் அவர்களை பின்பற்றி நாம் இந்த ஈழவிடுதலைப் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இம்மாநாட்டின் சிறப்பம்சமாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் திரு.வைகோ அவர்கள் எழுச்சியுரையற்றினார். ஈழ விடுதலைக்காக பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ள திரு.வைகோ அவர்கள் பெங்களூரில் ஈழ விடுதலை ஆதரவாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்களையும், அதற்கான கருநாடகத்தமிழ் மக்கள் இயக்கத்தின் முயற்சிகளையும் வெகுவாக பாராட்டினார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பம் முதலே இந்திய அரசு அதிகாரிகளும், இந்தியத்தலைவர்களும் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களைப் பட்டியலிட்டார். இந்தியத்தலைவர்கள் மட்டுமல்லாது தமிழகத்தலைவர்களின் நம்பிக்கைத்துரோகங்களையும் வண்மையாகக்கண்டித்தார். குறிப்பாக மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியின் தமிழர் எதிர்ப்பு நடவடிக்கையால் ஈழத்தமிழர்கள் மட்டுமில்லாமல் தமிழக மீனவர்களும் சந்தித்துவரும் துன்பங்களைப்பற்றி கூறினார்.

சிங்களர்கள் தமிழர்கள் மீது கையாண்ட அடக்குமுறை, ஆட்கடத்தல், வீடுகள் சூறையாடப்பட்டது, குழந்தைகள், பெண்கள், குறிப்பாக கர்ப்பிணிகள் சிங்கள வெறியர்களிடம் பட்ட கொடுமைகளை விவரிக்கும் போது அவரது நா தழுதழுத்தது. 16 வயது தமிழ்ப்பெண்ணின் கற்பு சிங்கள வெறியர்களால் சூறையாடப்பட்டது. அதை மறைக்கும் விதத்தில் அவர்கள் செய்த ஒரு செய்கையை பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அந்த அறிக்கையை தமிழில் சொல்லவே நா கூசும் சித்திரவதைகளை ஆங்கிலத்தில் இவ்வாறு கூறினார். ‘A GRANADE WAS EXPLODED IN HER VAGINA’

பலாலி விமானதளம் புதுப்பிக்கும்போதே தாம் இந்திய அரசைக் கண்டித்ததையும், தமிழகத் தமிழர்களின் எந்த எதிர்ப்பையும் பற்றிக் கவலைப்படாமல் ரேடார், அதை இயக்க வல்லுனர்கள், துப்பாக்கிகள், பீரங்கிகள், அனைத்தயும் சிங்களவனுக்கு அளித்து அவற்றையெல்லாம் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தியதன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டது. இது மட்டுமல்லாது இந்திய அதிகாரிகளின் நெரடி ஆலோசனை, ஐனாவில் இலங்கைக்கு ஆதரவாகத் தீர்மானம், ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் ரகசிய கண்கானிப்பு, செயற்கைகோள் புகைப்படங்கள் என்று தன்னால் எவ்வளவு முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்து நம் தமிழினத்தின் அழிவிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து இந்தக் கொடுமைப் பார்க்க மனம் சகியாமல் தீக்குளித்து இறந்த நம் தோழர்களைக் கண்டு கொதித்தெழுந்த உணர்வுத்தீயை சூழ்ச்சியால் அடக்கினார் கருணானிதி. னாஜிப்படைகள் செய்யாத கொடுமைகளை தமிழர்களுக்கு எதிராக இந்திய, இலங்கை அரசுகள் செய்துள்ளன.

இது ஒன்றும் இன்று நேற்றல்ல திலீபன், புலேந்திரன், குமரப்பா, கிட்டு உயிர்த்தியாகத்திலும் இந்திய அரசின் பங்கு இன்றியமையாதது. இவ்வளவு தூரம் தமிழர்களுக்கு கொடுமை இழைத்த சோனியா காந்தியை ‘முசோலினி பெற்ற பிள்ளை’ என்று கூறினார்.

ஐனா, ஐரோப்பிய யூனியன், அம்னெஸ்டி மற்றும் உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் இலங்கையில் ‘இனப்படுகொலை’ நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளன இந்தியாவைத்தவிர.

அதே சமயம், இந்திரா காந்தி அம்மையார், திரு. வாஜ்பாய், திரு.ஜார்ஜ் பெர்ணாடஸ் ஆகியோர் தமிழர்களின் பால் கொண்டிருந்த அக்கறையாலும், இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தொலைனொக்கு பார்வையொடும் சிங்கள அரசின் தமிழர்களின் மீதான அடக்குமுறையை குறித்த ணெரங்களில் கண்டித்ததையும், சிங்களனுக்கு ஆயுதம் வழங்க மறுத்ததையும் சுட்டிக்காட்டினார்.

உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் இது வரை செய்திராத அளவு மிக கட்டுக்கோப்பான பாதுகாப்பான சுதந்திரமான ஒரு அரசாங்கத்தை தம்பி பிரபாகரன் அமைத்தார். முப்படைகளும் கொண்ட ஒரே விடுதலை இயக்கமாக சிங்களவனுக்கு எதிரான போரை நடத்தி வந்தார். அவர் இன்னும் உயிரோடுதானிருக்கிரார். forensic scientist திரு.சந்திரசேகரன் அவர்கள் கூட இதை உறுதி செய்திருக்கிறார் என்று தெரிவித்தார். எனவே நம் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னைவிட முனைப்பாக செயல்பட்டு ஈழப்போரட்டத்தை நடத்தி நம் தாகமான ‘தமிழீழத்தை’ வென்றெடுக்க கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து கருநாடகத்தமிழ் மக்கள் இயக்கத்தின் தோழர் திரு.அன்பன் மற்றும் தோழர் திரு. நாதன் ஆகியோர் மானாட்டில் கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

1. முள்வேலி முகாம்களுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீண்டும் அவர்களுடைய வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும்

2. தமிழ் இனத்தை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே, இராணுவ அமைச்சக செயலாளர் கோத்தபய ராஜபக்சே,

இராணுவத்தளபதி பொன்சேகோ ஆகியோர் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.

3. போர் குற்றங்களுக்காக இலங்கை அரசுக்கு ஐனா மற்றும் உலக ணாடுகள் அனைத்தும் பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும்

4. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

5. இனவெறி சிங்களக் கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்கள் நிரந்தரமாக காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்..

vaiko18102009000.jpg

vaiko18102009003.jpg

http://www.meenagam.org/?p=13731

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.